Tuesday, October 03, 2006

கலர் டிவியா நல்ல நூலகமா..

ஒவ்வொரு முறையும் பட்ஜெட் போடுறப்போ ஏதாவது விஷேசம் இருக்கான்னு பார்ப்பேன்..ம்ஹும்.. ஓண்ணும் இருக்கிறது இல்ல.. எப்பவும் ஒரே மாதிரி தான்.. அதுவும் ஜெயலலிதா அரசியலுக்கு வந்த பிறகு, இல்லைனா எம்ஜியாரோட மறைவுக்குப் பிறகு, சட்டசபை என்னிக்கும் ஒழுங்கா நடந்ததில்லை.. இவன் ஆண்டா எதிர்கட்ச்சியாய் இருக்கிற அவன் வெளிநடப்பு, அவன் ஆண்டா எதிர்கட்ச்சியாய் இருக்கிற இவன் வெளிநடப்பு.. இப்படி சினிமாவுல மட்டும் இல்லை. அங்கேயும் அரச்ச மாவேதான் அரைக்கிறாங்க.

அதுலயாவது புதுசா ஏதாவது பண்றாங்களா.. இந்த பட்ஜெட்ல தாங்கள் ஆட்சிக்கு வர காரணமா இருந்த அரிசியையும் கலர் டிவி பத்தியும் ஒரே நியுஸ்.. எத்தனை புத்தகங்கள் எழுதி இருக்கிறார், இப்போதைய முதல்வர்.. டிவியை விட இப்போதைக்கு நூலகங்கள் தான் அதிகம் தேவைன்னு நினைத்து அதற்கு ஏதும் பண்றாரன்னு தெரில.. பண்ணலாம்.. அது டிவி மாதிரி கவர்ச்சியான திட்டத்தினால் வெளியில் தெரியாமல் போகலாம். யார் கண்டா?

ஆனா, ஒரு ஊராட்சிக்கு ஒரு நூலகமாவது வேண்டும்னு ஒரு சட்டம் இருக்குன்னு நினைக்கிறேன். அப்படி எல்லா ஊராட்சியிலும் இருக்கா?.. அப்படியே இருந்தாலும் படிக்க புத்தகங்களும், உட்கார போதுமான இருக்கைகளும் உண்டா?.. தெரில.. நாம தான் இதை நினைச்சு பாக்கணும்.. ஏன்னா அரசுக்கு வேறு வேலைகள் நிறைய இருக்கலாம்..

என்னோட ஊரும் பஞ்சாயத்து தலைநகர் தான்.. ரொம்ப நாள் கழிச்சு, நான் அப்போ ஏழாவது படிச்சிட்டு இருந்தேன்னு நினைக்கிறேன்.. ஒரு நூலகம் வந்தது, ஐநூறு புத்தகங்களோட..எல்லாம் கதைப் புத்தகங்கள்.. அறிவை வளர்க்கும் எந்த புத்தகமும் இல்லை. சரி இன்னும் கொஞ்ச நாள் போனா வரலாம்னு நினைச்சேன்.. ஒரு எட்டு மாசத்துல அந்த நூலகத்தையே காணோம்.. அப்படி இருந்த காலங்களிலும் கூட, என்னை போன்ற பையன்கள் கதை புத்தகங்களை வாங்கி படிப்போம்.. அவ்வளவு தான்.. அதனால் அறிவு ஏதும் விசாலமானதாய் தெரில.. என் பள்ளிகூடத்தில் கூட இருந்த ஞாபகம் இல்லை..

இப்படி எல்லாம் இருந்தா எப்படி பிள்ளைகள் அறிவு வளரும் ஏற்கனவே டிவி சினிமான்னு ஒவ்வொரு பையனும் அது பின்னாடி கிடக்குறான்.. எந்த ஊர்லயுமே நூலகம் இல்லைனு சொல்ல மாட்டேன்.. கவியரசு வைரமுத்து தனது 'இது வரை நான்'ங்கிற புத்தகத்துல, அவர் எப்படி எல்லாம் நூலக்கத்தை பயன்படுத்தினார்னு சொல்லி இருப்பார்.. அதனால் அவரோட பால்ய பருவதிலேயே அவ்வளவு சிறப்பா நூலகங்கள் இருந்திருக்கு. ஓரு வேளை அதன் பிறகு அதை ஒழுங்கா பராமரிக்கலயோன்னு தோணுது..

டிவி கொடுக்குறது தப்போ சரியோ அது பத்தி எனக்கு கவலை இல்லை.. இந்த மாதிரி அறிவை வளர்க்கும் நூலகங்கள் எப்போ நம்ம நாட்டுக்கு வர்றது.. எப்போ நம்ம பிள்ளைகள் சின்ன வயசுலயே அறிவை வளர்க்கிறது..

ஏன் நான் எப்படி எல்லாம் வேதனைப்படுறேன்.. எங்க ஊர்ல சின்ன வயசுல ஒரு நூலகம் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமோ..தெரில.. ஆன எப்போ வளர்ந்து வர்ற வேகத்துல நிச்சயமா கிராமத்துல இருக்க பசங்க ரொம்ப பின்னாடி இருக்காங்க.. இன்னும் எத்தனையோ பசங்களுக்கு இன்டர்நெட்னா என்னன்னு கூட தெரியாது.. அவங்களுக்கு தெரிஞ்சன்தெல்லம், காலைல எந்திரிச்சா, னம்ம காட்டுல கத்திரிக்காய் பொறுக்குனோமா, பள்ளிகூடத்துல போய் உக்கார்ந்தோமா அவ்வளவு தான்.. எங்க ஊர் வாத்தியார்கள் கூட இன்னமும் அவங்க படிச்சதை தான் சொல்லி தர்றாங்க.. அப்புறம் எப்படிய்யா நாடு வளர்றது.. அட போங்கப்பா.

22 பின்னூட்டங்கள்:

Anonymous said...

me phashtu....:))

correctnga neenga sonnadhu...ovoru oorleyum noolagam venum...

enga oor kitteyum oru noolagam irundhudhu...govt.odadhu aanaa adhula serarthukku oru vaaram nammala naaiyaa alaiya viduvaanunga...attha konduvaa ittha konduvaanu...adhukkula nammakku padikkara aarvame poidum...

kandippa namma educationla reforms venumnga...i can c there's almost nil practical emphasis... :((

said...

ஏற்கனவே படிக்கிற பழக்கம் குறைந்து கொண்டு வருகின்றது. இதில் இந்த இடியட் பெட்டியும் கொடுத்து இன்னும் குட்டிச் சுவர் ஆக்கிட்டு இருக்கானுங்க.

நம் அரசியலின் தரம் மிகவும் கிழே போய் கொண்டு இருக்கு.

said...

appada 4th!

said...

ada ninga vera, ninga solradu naata munnetram, nadakradu enavo arasiyal.. rendukum niraya vidyasam undu :)

said...

Very true...eda sollitarutho illayo..oru arasu makkaluku padikaratha solli tharanum.....athuku vaaipu yerpaduthi tharanum....appadi illanma color tv tharen..karuvaadu tharenu...ivanga vote vaangarathu matthum parkaraanga....

//இன்னமும் அவங்க படிச்சதை தான் சொல்லி தர்றாங்க.. அப்புறம் எப்படிய்யா நாடு வளர்றது// -- konjam kustam than :(

said...

amaa golmaal, neraiya vishayanGkalai maaththanum.. innum athu 80's range laye irukku

said...

வாங்க சிவா.. ரொம்ப நாள ஆளையே காணல..

ஆமா சிவா.. நீங்க சொல்ற மாதிரி மக்களை கெடுக்குறாங்க..

ஏதாவது சீக்கிரம் அரசு செய்யனும்..இல்லைனா ரொம்பக் கஷ்டம்

said...

//நாங்களே ஒரு நூலகம் நடத்தி வருகிறோம் //

கேக்கவே ரொம்ப சந்தோசம் வேதா. நீங்க சொல்ற மாதிரி படிக்கிற பழக்கத்தை சின்ன வயசுல இருந்து வளர்த்தா தான் எதிர்காலத்துல புள்ளைங்கள் நல்லா வளரும்

said...

amaa porkodi.. aana ithai ellam paakkurappO rombak kashtamaa irukku..

said...

//ivanga vote vaangarathu matthum parkaraanga//

correct bharani.. therthal appothaan niraiya yosikkiraanga.. athuvum ellam kavarchi thittangal.. Nattai munnEththa yethum illa

said...

porkodi, 4th placeukku ellam sundal puliotharai tharamudiyaathu

said...

//இந்த பட்ஜெட்ல தாங்கள் ஆட்சிக்கு வர காரணமா இருந்த அரிசியையும் கலர் டிவி பத்தியும் ஒரே நியுஸ்.. எத்தனை புத்தகங்கள் எழுதி இருக்கிறார், இப்போதைய முதல்வர்.. //

என்னங்க நீங்க ஏதாவது யோசிச்சு தான் பேசறீங்களா...தமிழகம் சுடுகாடு ஆனாலும் பரவால்ல நான் பதவிக்கு வரனும்னு நல்ல எண்ணம் கொண்டவர் நம்ம முதல்வர்...அவர் கிட்ட போய் நூலகம் அது இதுனு தேவை இல்லாதது எல்லாம் பேசிட்டு... :-)

said...

//amaa eththanai panchaayaththai mudichchu vachirukeenGka
//

நல்லா கேட்டீங்களே ஒரு கேள்வி...நான் எல்லாம் நம்ம தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர பின்பற்றுபவன்...பஞ்சாயத்த முடிச்சா நாட்டாமைக்கு வேலை இல்லாம் போய்டும்...அதுனால பிரச்சனை இருக்கர வரைக்கும் நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லிட்டே இருக்கலாம்ல :-)

said...

இன்னமும் நீங்க எதிர்பார்ப்போட பட்ஜட் பாக்கறிங்களா? ரொம்ம்ம்ம்ப optimist ஆ இருப்பிங்க போல இருக்கே!

ஆமா, நூலகம் ஆரம்பிச்சா மக்கள் ஓட்டு போடுவாங்களா?

கிராமத்து குழந்தைகளுக்கும், நகரத்து குழந்தைகளுக்கும் exposure level ல பயங்கர வித்தியாசம் இருக்கறது ரொம்ப கொடுமை. அத குறைக்க வேற வழி எல்லாம் பண்ண மாட்டாங்க. வேணா, reservation ணு அதையும் அரசியல் பண்ணுவாங்க.

said...

பாருங்க நம்ம நாட்டாமைக்கே எவ்ளோ பதவி ஆசை..

said...

//தமிழகம் சுடுகாடு ஆனாலும் பரவால்ல நான் பதவிக்கு வரனும்னு நல்ல எண்ணம் கொண்டவர் நம்ம முதல்வர்//

ஷ்யாம், இதை நீங்க எந்த ஆட்சிக்கும் சொல்லலாம். ரொம்ப பொருத்தமான வார்த்தைகள்

//பஞ்சாயத்த முடிச்சா நாட்டாமைக்கு வேலை இல்லாம் போய்டும்//
உண்மை உண்மை உண்மை ஷ்யாம்

said...

//இன்னமும் நீங்க எதிர்பார்ப்போட பட்ஜட் பாக்கறிங்களா? ரொம்ம்ம்ம்ப optimist ஆ இருப்பிங்க போல இருக்கே//

enna panrathu priya..nammaala athai thaan cheyya mudiyum

//வேணா, reservation ணு அதையும் அரசியல் பண்ணுவாங்க//
unmayanaa vaarththaikal priyaa

said...

//பாருங்க நம்ம நாட்டாமைக்கே எவ்ளோ பதவி ஆசை.. //

எங்க ஊர்ல நாட்டாமையா இருந்தவர் தான் இப்போ ஊர் பிரசிடன்டா இருக்கார் பிரியா..

யார் கண்டா ஷ்யாமும் ஒரு நாள் வெள்ளாய் வேட்டி சட்டை போடலாம் பிரியா..

said...

sariya soneenga karthi! naadu munneranumna arivu kandippa valaranum, edhedhukko sangam vekkaraanga, ovvoru oorlayum nulagam vechu paramikkardhukku oru sangam vecha nalla irukkum :)

said...

ayyo IA.. appadi sangam vappaanga..antha sangaththai vachchu noolakm vaippanglaannu therila

said...

Good Thinking.I sometimes feel you should have chosen Politics to IT.
Better late than never!
-Sis

said...

Oh..Thanks Sis