Monday, October 02, 2006

ஏப்ரல் ஃபூல் காதல்

எனக்கு இன்னும் பளிச்சுன்னு ஞாபகம் இருக்கு அந்த முகம். நான் ஏறுன பஸ்ல தான் அந்த தேவதை தினமும் வருவா.. நான் மொத ஸ்டாப்லயே ஏறிடுவேன்.. உக்கார்றதுக்கு சீட் ஏதும் இருந்தாக் கூட நான் நின்னுகிட்டுத் தான் போவேன்.. அப்போ நான் பத்தாவது படிச்சுகிட்டு இருந்த நேரம்.. வீட்ல 'தம்பி நானூறுக்கு மேல எப்படியாவது வாங்குன்னு' எல்லோரும் சொல்லிகிட்டு இருந்த நேரம்.. அப்படி பக்கம் பக்கமா படிச்சுகிட்டு இருந்தாலும் இப்படி பக்கத்துல நிக்கிற சொக்க தேவதையை பாக்கம இருக்கிறதில்ல.. நான் மட்டும் தான் அந்த பொண்ணை அந்த பஸ்லயே பாத்துகிட்டு இருப்பதா ஒரு பிரமை.. அவ எப்பவுமே பஸ்ல ஏறினவுடனே உள்பக்கம் வந்து ரொம்ப பாதுகாப்பா நிப்பா.. அது எங்க ஊர் பஸ்ஸுங்கிறதால நான் படில எல்லாம் நிக்க முடியாது.. நிக்கிற மாதிரி தெரிஞ்சாலே போதும்..எங்கப்பா கிட்ட திரியை கொளுத்தி போட்டுடுவாங்க நம்ம சனங்க.. 'ஏ..யப்பு.. உன் புள்ள.. படிக்க போவுதா.. இல்ல பஸ்ல கிளீனர் வேல பாக்குத..படிலயே கிடக்குறான்'னு.. போற போக்குல வீட்ல ஒரு வத்தி வச்சுடுவாங்க.. அதனால நானும் எப்பவும் நடுல தான் நிப்பேன்.. அவளும் எனக்கு நேர் அந்த பக்கம் லேடிஸ் சைடுல தான் நிப்பா.. ரொம்ப நாளா இந்தப் பக்கம் திரும்பவே மாட்டா.. நானும் என்ன என்னவோ பண்ணி பாத்தேன்..ம்ஹிம்..ஒண்ணும் முடில..

என்னனன்மோ சொல்றேன்..அவ எப்படி இருப்பான்னு சொல்லவே இல்ல..ஓகே.. ஒரு வரில சொன்னா சின்னத்தம்பி படத்துல வர்ற குஷ்பூ மாதிரி இருப்பா.. நடு வகிடு.. ரெட்டை சடை.. அந்த சடை மடக்கி தலையோட சேர்த்து கருப்பு கலர் ரிப்பன்.. அவ ஸ்கூல் யுனிபார்ம் பாவாடை சட்டைல இருப்பா.. அவளும் பத்தாவது தான் படிக்கிறாங்கிறதை அவ யாரோ பஸ்ல கேட்ட கேள்விக்கு பதில் சொன்னப்போ தெரிஞ்சது.. அழகா நடு நெத்தில ஒரு ஸ்டிக்கர் பொட்டு..அதுக்கு மேல சந்தனத்துல ஒரு சின்ன கோடு.. அதுக்கும் மேல ஒரு திருநீரு தீற்றல்.. எங்கம்மா பாத்தா மஹாலட்ச்மின்னு கையெடுத்து கும்புடுற லட்சணம்.. தலைல வலது பக்க சடைல ரோஜாவோ, இல்லை மல்லிகை சரமோ வச்சிருப்பா.. காலத்துக்கு ஏத்த மாதிரி வேற பூக்களும் அவள் தலைல வைக்கப்பட்டு ஜென்ம புண்ணியம் அடஞ்சிருக்கும்.. கழுத்துல சின்னதா ஒரு வெள்ளை கலர் பாசி தொங்கும்..காதுல குடையை திருப்பி போட்ட மாதிரி ரெண்டு தொங்கட்டான் தொங்கி கிட்டு, அவ இந்த பக்கமும் அந்த பக்கமும் தலையாட்ட அதுவும் கூட சேர்ந்து ஊஞ்சலாடும்.. அவ மொகத்த பாக்குறப்போ எல்லாம், மூக்குதி போட்டா இன்னும் அழகாய் இருப்பான்னு நினச்சுக்குவேன்.. அவகிட்ட பேசுறப்போ சொல்லலாம்னு விட்டுடுவேன்..

நானா எவ்வளவோ கஷ்டப் பட்டேன்..அவள திரும்ப வைக்க..ஆன அவளா ஒரு நாள் திரும்பி என்னை பாத்தா.. நான் ஏறின பஸ்லயே என் அத்தை ஒருத்தவங்க வேற ஊருக்கு போறதுக்காக வந்தாங்க.. நான் தான் அவங்களுக்கு சீட் போட்டு கொடுத்தேன்.. என்னையும் கூட உக்காரச் சொன்னாங்க..நான் இல்லத்தன்னு சொல்லி வேற ஒருத்தவங்களை உக்கார வச்சேன்.. என் ஆளு ஏறின பஸ் ஸ்டாப்புக்கு பிறகு, என் அத்தைக்கு பக்கத்துல உக்கார்ந்து இருந்தவங்க இறங்குறதுக்காக எழ, எனக்கு அப்போதான் வினையே ஆரம்பிச்சது.. யாரோ இன்னொருத்தவங்க அந்த சீட்ல உக்காரப் போக..என் அத்தையோ என்னை கூப்பிட்டாங்க.. 'ஏய்..மருமவனே..எனக்காக எம்புட்டு கஷ்டப்பட்டு சீட்ட போட்டு கொடுத்த..வந்து உக்காருப்பா'ன்னு கூப்பிட்டாங்க.. அதுவும் எப்படி பஸ்ஸே திரும்பி பாக்குற அளவுக்கு சவுண்டா.. எனக்கோ ஒரு மாதிரி ஆகிடுச்சு.. யாரை இப்படி கூப்பிடுறாங்கன்னு எல்லோரும் திரும்பி பாத்தாங்க..அவளும் தான்.. எனக்கோ என்ன பண்றதுன்னே தெரில.. 'ஏய்..தம்பி..அந்தம்மா தான் கூப்பிடுதுல்ல போய் உக்காருப்பா..அத்தை கூட உக்காரவே இப்படி சங்கட்டப்படுறியே.. அப்புறம் எங்கிட்டு பொண்ணோட உக்கார்ற'துன்னு இன்னொரு பெருசு சவுண்டு விட.. இனி வேற வழி இல்லைன்னு நான் அப்படியே மெல்ல நகர்ந்து என் அத்தைக்கு பக்கத்துல போய் உக்கார்ந்தேன். அதுக்கப்புறம் இறங்குற வரை அவ என்னை பாத்து சிரிச்சுகிட்டே இருந்தா.. அதப் பாத்து, நான் உள்ளுக்குள்ள உருகிக்கிட்டு இருந்தேன்..மெல்ல என் அத்தை பக்கமும் பாத்து சிரிச்சேன்.. கலக்கிபுட்ட அத்தைன்னு..

அதுக்கப்புறம், அவ பஸ்ல ஏறினவுடனே, நான் எப்பவும் நிக்கிற எடத்துல பார்ப்பா.. சின்னத சிரிப்பா..இப்படியே ஒரு ரெண்டு மாசம் போயிகிட்டு இருந்தது.. இப்ப அவ என்னை பாத்து சிரிக்கிறப்போ நானும் சிரிக்க ஆரம்பித்து இருந்தேன்.. ஓரு நாள் அப்படி ஏறி, எப்பவும் அவ நிக்குற இடத்துல வந்து நின்னா.. அன்னிக்குத் தான் கடைசி பரீட்சை.. அதோடு அவளைப் பாக்கணும்ன அவ ஊருக்குத் தான் போகணும்னு நினச்சு நான் சோகமா இருந்தேன்.. பரீச்சை நேரங்குறதால பஸ்லயும் ரொம்பக் கூட்டம் இல்ல.. அவ என் பக்கம் திரும்பி, அழகா மடித்திருந்த ஒரு பேப்பரை கொடுத்த.. எனக்கு திக்திக்குன்னு இருந்தது..என்னோட தம்பி உங்க ஸ்கூல்ல தான் செவன்த் C செக்க்ஷன்ல படிக்கிறான். அவனுக்கு உடம்பு சரியில்ல.. இந்த லீவ் லெட்டரை கொடுத்திடுறீங்களான்னு கேட்டா.. நானும் சரின்னுட்டு அந்த கிளாஸ்ல போய் கொடுத்தேன்.. இங்க சுரேஷ்னு யாரும் இல்லன்னு அந்தப் பசங்க சொன்னாங்க..என்னடா அப்படின்னு நினச்சுகிட்டு..சரி லீவ் லெட்டர்ல போட்டு இருக்குமேன்னு அதை பிரிச்சுப் பாத்தா..பெரிய பெரிய எழுத்துல ஏப்பிரல் ஃபூல்னு எழுதி இருக்கு.. வேற ஒண்ணுமே இல்ல.. எனக்கு சரியான கோபம் ஒரு பக்கம்.. சிரிப்பு ஒரு பக்கம்.. ஏன் இப்படி செஞ்சான்னு குழப்பம் வேற..

அடுத்து ரெண்டு நாள் அவங்க ஊர்ல தான் ஒரே சுத்து.. பேரும் தெரியாது.. ஒண்ணும் தெரியாது..தேடிதேடிப் பாத்தேன்.. கண்டுபிடிக்க முடியல.. அப்புறம் லீவுக்கு என் சித்தி வீட்டுக்கு போயிட்டேன்.. மறுபடியும் ஸ்கூல் ஆரம்பிச்சது.. அவளை காணவே இல்லை..யார் கிட்டயும் கேட்கவும் தயக்கம்.. அப்படியே வாழ்க்கை போயிடுச்சு..

தோ இன்னமும் கூட அந்த ஏப்பிரல் ஃபூல் பேப்பர் என்கிட்ட இருக்கு.. ஓரு வேலை இனிமேல் என்னை பாக்க முடியாம ஏமாந்து போகப்போறீங்கன்னு சொல்லி அதை கொடுத்தாளோ என்னவோ..தெரில… ஏப்பிரல் ஃபூல்னு யாராவது சொன்னா எனக்கு அவ ஞாபகம் தான் வரும்..மனச எதுவோ போட்டு பிசையற மாதிரி ஒரு ஏமாற்றம் இருக்கும்.. எனக்கு இன்னும் பளிச்சுன்னு ஞாபகம் இருக்கு அந்த முகம்.. நான் ஏறுன பஸ்ல தான் அந்த தேவதை தினமும் வருவா..

(எவ்வளவு நாள் தான் சொந்த கதை எழுதுறதுன்னு யோசிச்சு யோசிச்சு, எழுதின கற்பனை கதை இது)

37 பின்னூட்டங்கள்:

said...

சொந்தக்கதையை ஏன் கற்பனைன்னு சொல்றீங்க?:D, அது சரி, இமயமலைக்குப் போகப் போறேன்னு யாரோ வந்து என் வலைப்பக்கத்திலே கமெண்ட் கொடுத்தாங்களே? அவங்க எழுதினதா இது? ஹி ஹி ஹி ஹி, இமயமலைக்குப் போங்க, கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா மனைவியோட. உங்க வீட்டுக்கு வேணாத் தகவல் கொடுக்கிறேன், உங்களுக்காக.

said...

2 நாளா வேலை ஜாஸ்தி, இன்னிக்குத் தான் உங்க சங்கிலிப் பதிவைப் பார்த்தேன். கூடிய சீக்கிரம் போடறேன்.

said...

kalakal!

said...

ROTFL :)nice narration.
//எங்கம்மா பாத்தா மஹாலட்ச்மின்னு கையெடுத்து கும்புடுற லட்சணம்//
asku busku! but unakku thaan poojai, paravayillaya?

*ahem* ellam sari, kadaisila ethuku oru bulti? naanga thupuvoom!nu bayamaa? :D

Anonymous said...

ahha annachi...kalaasiteenga ponga...aaamaa kadasila edhukku oru poi??? aanaalum semma range description... :))

said...

சொந்தக் கதையின்னு சொல்லி சோகக்கதை உட்டுடுடீக்களே கார்த்தி ஞாயமா?

said...

Nambittom. Idhu kadhayalla nijam appidinnu ennikkaavadhu sollurappo paathukkirom..

said...

ஓ..நன்றி வேதா.. சுத்தமான அக்மார்க் கதை அது.. னமக்கு அப்படி ஏதும் அனுபவம் கிடைக்கல :-))

said...

//இமயமலைக்குப் போங்க, கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா மனைவியோட//

நானும் அப்படித்தான் நினைச்சுகிட்டு இருந்தேன், கீதா மேடம்.. ஆமா நான் சாமியாரப் போவேன்னு நினச்சீங்களா..எனா.. அஸ்க்கு புஸ்க்கு

said...

சீக்கிரம் சங்கிலிப் பதிவை போடுங்க கீதா மேடம்..

said...

Thanks sister...

said...

//unakku thaan poojai//

அம்பி..எனக்கு பூசை கிடைக்குறதுல அவ்வளவு சந்தோசமா..

said...

//naanga thupuvoom!nu bayamaa//

ஏ..யப்பு அம்பி.. உண்மையிலே தான்ல

said...

//aaamaa kadasila edhukku oru poi???//

unmai thaan golmaal..athu en kathai ellaikirathu unmai thaan.. nambukappaa

// aanaalum semma range description... //

Thanks Golmaal..

said...

என்ன பண்றது திராசா சார்.. சும்மா கற்பனை குதிரையை தட்டி விட்டதுல..வந்த கதை அது

said...

sasi..chathiyama en karpanai

said...

kathai nalla pochu...kadaisila andhar balti adichiteengaley...sari andha ponnu kitta naanga poi ketkava mudiyum...

inga paarunga naataami ku reason therium

said...

கற்பனைனு என்னாலயும் நம்ப முடியல..ஆனா, கதை ரொம்ப நல்லா எழிதி இருக்கிங்க..

said...

Mams....chumma thane solreenga karpanai kadhai-nu..ezhudi irukaratha paartha appadi theriyalaye....kaadalagi kasindu urugi ezudhi irukeenga...

avangala kadu pudikarathula edachum help venuna sollunga...eppadiyachum kandu pudichi serthuduvom :)

said...

Summa sollakkooodaathu thala.. kalakkeeteenga. Sontha kathaiyae karpanai kathainu kathai utteteengalae.

said...

good pa vaanga namaa vattarathukku! appadi inimeladhavadhu yaaravadhu sondha anubavamannu ketta naan ungalaanda redirect pannnidaraen! Kadhai sooper

//என் அத்தை பக்கமும் பாத்து சிரிச்சேன்.. கலக்கிபுட்ட அத்தைன்னு..

ha ha! idhaidhaan naan rasichaen! :)

said...

shyam..
Naattaamaiyin karanam purinjathu..amaa eththanai panchaayaththai mudichchu vachirukeenGka

said...

பிரியா.. உண்மயிலே கதை தான்.. இப்படி எல்லாம் நடக்காதான்னு சின்ன வயசுல ஆசை இருந்தது என்னவோ உண்மை தான்

said...

Mapla, saththiyama athu kathai thaan pa.. NambunGappaa

said...

//Sontha kathaiyae karpanai kathainu kathai utteteengalae//

kuppu..athu kathai thaan pa.. eththanai perukkuth thaan intha santhekam varrathu.. pechame en chontha kathaithaan poyyE solli irukkalam pOla..

said...

IA, Neengaluma.. ithu kathai thaan..kathai thaan..kathai thaan

said...

nerla pakrapo anda papera kaminga enna?

said...

athu kathainga porkodi..enkitta paper ethum illa.. enga naan oruy kathai ezhutha poy chontha kathaiyaannu ellorum varuththu edukkureenga

said...

Karthi, sorry.. I missed you.. You have a wonderful way of presentation.. you have SO MUCH stuff.. Give me some time.. I will read completely and come back.. In between I read few of them.. கலகலக்கல்..

This April fool one is very nice.. I enjoyed from start to the end.
I will come back later.

said...

நன்றி கடல்கணேசன்.. உங்க வார்த்தைகள் உற்சாகமூட்டுது..

said...

நல்லா கதை விட்டிருகிறீங்க, அருமை !

said...

நன்றிங்க திவ்யா!!!

said...

அண்ணாத்தே சூப்பர் பல்பு!

said...

ஏதோ அனுபவப்பாட்டாமாதிரி சூப்பரா எழுதிட்டு இப்படி பல்ட்டி அடிச்சிட்டீங்களே..!!

said...

சும்மா..கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டுமேன்னு தான் தம்பி

said...

ஹிஹிஹி.. நன்றிங்க அரசி..

Anonymous said...

நம்பிட்டோம்யா நம்பிட்டோம்