Monday, October 23, 2006

வெடி வச்ச விஜயகாந்த்

கஷ்டப்பட்டு எம்ஜியார் வளர்த்த கட்சியை கூடிய சீக்கிரம் ஜெயலலிதா இழக்கபோகிறார். சும்மா கிடந்த சங்கை ஊதிகெடுத்தானாம் ஆண்டி கதையாய், அவர் விஜயகாந்தை குடிகாரன் என்று கூறி இருப்பது, ஒரு சின்ன சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.. இது மேலும் அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் ஒரு சறுக்கலே தவிர, முன்னேற்றம் அல்ல..

யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மதுரை இடைத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக ஓட்டுக்கள் வாங்கி இருப்பது, அதிமுகவில் கண்டுகொள்ளப்படாமல், ஒதுக்கப்பட்டு கிடக்கும் எம்ஜியார் விஷுவாசிகள் ஜெயலலிதாவின் ஆணவ போக்கை கண்டு மனம் வெதும்பி விஜயகாந்தை தலைவராக ஏற்று கொள்ள ஆரம்பித்து இருக்கின்றனர் என்று காட்டு கிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு அறிக்கையை ஜெயலலிதா விட்டிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. இத்தனை காலம் அவர் அரசியலில் ஒன்றும் பெரிதாக கற்றுக் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. எம்ஜியார் இருந்திருந்தால் இதை போன்ற சம்பவம் நடந்திருந்தால் கண்டுகொள்ளாமல் விட்டுருப்பார். இப்படி சீண்ட சீண்ட தான் எதிராளி பலமாகிறான் என்பது கூட இத்தனை ஆண்டு காலம் இருந்த ஜெயலலிதாவுக்கு தெரியவில்லை.. இது விஜயகாந்திற்க்கு மேலும் வலுசேர்க்கும் என்பது உண்மை தான்


இது போலவே ஜெயலலிதா நடந்து கொண்டால், சீக்கிரம் அதிமுக கூடாரம் காலியாக போகிறது.. ஆனாலும் உள்ளாச்சி தேர்தல்களை வைத்து மட்டுமே ஒரு கட்சியை எடை போட்டு விட முடியாது.. பத்திரிக்கைகளும் ரொம்ப ஒவராகத் தான் விஜயகாந்தை முன்னிறுத்தி செய்திகளை போடுவதாகவே நான் நினைக்கிறேன்..

இந்த பக்கமும் கலைஞர் கூடுமானவரை நல்ல ஆட்சி தருகிறாரோ இல்லியோ தருவது போல் வெளியில் காட்டிக்கொள்கிறார். மேலும் அவர் ஆட்சி மீதும் மக்களுக்கு பெரிதாக சொல்லிகொள்ளும்படியாக ஒரு குறையும் இல்லை. விஜயகாந்த் திமுகவை எதிர்க்க எதிர்க்க, அது மறைமுகமாக அதிமுகவினரை சஞ்சலப்படுத்தி, அவரின் பக்கம் சாய்க்கிறது. பெரும்பாலான அதிமுகவினருக்கு திமுகவை எதிர்த்தல் தான் பிடிக்கும்.. அப்படியே அவர்கள் பழக்கப் பட்டுவிட்டனர். இப்போது விஜயகாந்தும் அதே வேலையை செய்வதால் அதிமுகவினரை இழுப்பது ரொம்பச் சுலபமாகிவிட்டது.

ஆனாலும் விஜயகாந்தும் கற்றுக்கொள்ள வெண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. கடந்த சட்டசபை தேர்தலில் நெய்வேலியில் குடித்துவிட்டு விஜயகாந்த் பிரச்சரம் செய்ததாக ஒரு செய்தி படித்த ஞாபகம் உண்டும்.. ஜெயலலிதா தன்னுடைய போக்கை மாற்றி கொள்ளாவிட்டல், அதிமுக அவரின் கண்ணேதிரிலேயே காணாமல் போகும் என்பது மட்டும் நிச்சயம்..

31 பின்னூட்டங்கள்:

said...

அட முதல் comment..

said...

ராமன் ஆண்டால் என்ன - ராவணன் ஆண்டால் என்ன? (இப்ப எல்லாரும் ராவணர்கள் தான், அது வேர விஷயம்).
இப்ப எல்லாருக்கும் ஒருத்தர ஒருத்தர் தாக்கிக்கரத்துக்கும், அடுத்தவங்க ஆட்சிய குறை சொல்றதுக்கும் தான் நேரம் இருக்கு. மக்கள பத்தி யார் யோசிக்கராங்க? கலைஞர், ஜே, Gabdun யாரையும் எனக்கு பிடிக்கல கார்த்திக். பேசாம நீங்க CM ஆயிடுங்க. நான் துணை CM ஆயிடரேன்.

said...

Enna Maams...cine field-ku varuveenga paartha...nee pakka arasiyalvaadhi ayiduveenga pola iruku...bayangara araaichiyila erangiteenga...enga vote ungalukudhan :))


priya sonna madhiri neenga CM ayidunga...adhan best..ivanga kedakaraanga....dubakoors :))

said...

நானும் பிரியா சொல்றது தான் சொல்றேன்...சீக்கிரம் ஆட்சிய பிடிக்க ஏற்பாடு பன்னுங்க...எத்தனை நாளைக்கு தான் இந்த கம்யூட்டர் பொட்டிய தட்டிட்டு இருக்கறது...சீக்கிரம் நானும் மினிஸ்டர் ஆகி நிறைய சம்பாதிக்க வேண்டாமா :-)

said...

ரெண்டு பெரிய கட்சிக்கு நடுவில தே.மு.தி.க சத்தம் பெருசா கேக்குதுன்றதே பெரிய விஷயம்தான்.

காங்கிரசானாலும்..
ம.தி.மு.க ன்னாலும்
பா.ம.க ன்னாலும்
எந்த டப்பா கட்சியா இருந்தாலும் கூட்டணி இல்லாம தனியா நின்னாங்கன்னா பொழப்பு சிரிப்பா சிரிச்சுருக்கும்

இந்த ஒரு விஷயத்தில நம்ம கொசுறு கட்சி தலைவருங்க தெளிவா இருக்காங்க, கூட்டணி ஒன்றே வழின்னு!

இந்த ஒரு விஷயத்தில விஜயகாந்த பாராட்டலாம்!

Anonymous said...

நடுநிலையான அலசல்.. Good Post..

said...

Hi

First time here. Quickly glanced thru your archives, liked the Deepavali Malar. Matradhai, medhuvaaga padikkireyn.

Reg. VK, I think he is still getting only the Anti-votes. Will have to see what he does (and survives) till next elections.

IMHO, Amma is unlikely to lose much of ADMK support as by just waiting for the next election, they can remain the alternative, which is still a doubtful factor with VK

Cheers
SLN

Anonymous said...

OUR AMMA IS greate Leader!,

pls. dont criticize her!
She lives in our Heart.
SHE IS A PURE LADY.
SHE IS A GODDES OF POWER.

SHE IS MS CLEAN>
SHE NEVER DOES ANY SMALL MISTAKE.
BUT. TAMIL VOTERS 2 Time elected her as CM. That is BIG MISTAKE.

said...

research ellaam pattaya kelapudhu....good..keep going

said...

//அட முதல் comment//

ப்ரியா.. இதுக்காகவே கூடிய சீக்கிரம் உங்களுக்கு துணை முதல்வர் பதவி

said...

//இப்ப எல்லாரும் ராவணர்கள் தான்//

எல்லோரும் ஒத்துகொள்ளவேண்டிய உண்மை ப்ரியா

//கலைஞர், ஜே, Gabdun யாரையும் எனக்கு பிடிக்கல கார்த்திக். பேசாம நீங்க CM ஆயிடுங்க. நான் துணை CM ஆயிடரேன். //

இப்படியொரு உண்மையான உழைப்பாளி இருக்கப்போ நமக்கென்ன கவலை ப்ரியா.. 2011ல கோட்டையில நம்ம கொடி பறக்கும் ப்ரியா

said...

//nee pakka arasiyalvaadhi ayiduveenga pola iruku...bayangara araaichiyila erangiteenga...enga vote ungalukudhan //

Nee irukappO enakku enna Maapla kavalai.. thuninju iranguvEnla..

ippOthaikku Namma kOsham, 2011la namma kodi kOttaiyila paRakkum Maapla

said...

//நானும் பிரியா சொல்றது தான் சொல்றேன்...சீக்கிரம் ஆட்சிய பிடிக்க ஏற்பாடு பன்னுங்க...எத்தனை நாளைக்கு தான் இந்த கம்யூட்டர் பொட்டிய தட்டிட்டு இருக்கறது...சீக்கிரம் நானும் மினிஸ்டர் ஆகி நிறைய சம்பாதிக்க வேண்டாமா //

உங்க ஆதரவுக்கு நன்றி நாட்டாமை.. உங்க ஊர்காரவங்க ஓட்டு நம்ம கட்சிக்குத் தான்.. சீக்கிரம் நாம வெள்ளை வேட்டி சகிதமா ஆளுநரோட போட்டோ எடுத்துக்குவோம்..

said...

//காங்கிரசானாலும்..
ம.தி.மு.க ன்னாலும்
பா.ம.க ன்னாலும்
எந்த டப்பா கட்சியா இருந்தாலும் கூட்டணி இல்லாம தனியா நின்னாங்கன்னா பொழப்பு சிரிப்பா சிரிச்சுருக்கும்//

சரியாச் சொன்னீங்க தம்பி..எல்லாம் வேற வழி இல்லாம கூட்டணி முதுகுல சவாரி செய்றவங்க.. விஜயகாந்த் வந்தும் ஒண்ணும் பண்ணப் போறதில்ல.. அது நல்லா தெரிஞ்ச விஷயம்...

said...

//காங்கிரசானாலும்..
ம.தி.மு.க ன்னாலும்
பா.ம.க ன்னாலும்
எந்த டப்பா கட்சியா இருந்தாலும் கூட்டணி இல்லாம தனியா நின்னாங்கன்னா பொழப்பு சிரிப்பா சிரிச்சுருக்கும்//

சரியாச் சொன்னீங்க தம்பி..எல்லாம் வேற வழி இல்லாம கூட்டணி முதுகுல சவாரி செய்றவங்க.. விஜயகாந்த் வந்தும் ஒண்ணும் பண்ணப் போறதில்ல.. அது நல்லா தெரிஞ்ச விஷயம்...

said...

//நடுநிலையான அலசல்.. Good Post//

Thank Anon

said...

//Reg. VK, I think he is still getting only the Anti-votes. Will have to see what he does (and survives) till next elections.//

Good point SLN.. Thanks for dropping here first time

said...

//SHE IS MS CLEAN>
SHE NEVER DOES ANY SMALL MISTAKE.
BUT. TAMIL VOTERS 2 Time elected her as CM. That is BIG MISTAKE. //

Anon, enna thaan solla varreenGka..

said...

//research ellaam pattaya kelapudhu....good..keep going //

Thanks Bala..

said...

//இப்படி சீண்ட சீண்ட தான் எதிராளி பலமாகிறான்//
correct, well said! i'm expecting atleast some good thing from cabtain. let me see.
otherwise, we will start a party.

//பேசாம நீங்க CM ஆயிடுங்க. நான் துணை CM ஆயிடரேன்.//
@priya, அதானே பார்த்தேன்! ஒரு பழமொழி நினைவுக்கு வருது. சொல்ல வேண்டாம்!னு பார்க்கிறேன்.

said...

enakku thunai mudhalvar seyalalar ellam yar analum kavali illa :) adan minsara thurai irukke, unga ellar chairkum connection kudutha, ellarum ticket eduka poringa.. apram enna, mudhalvar thunai mudhalvar seyalalar ellam naam than :))

said...

/இப்படி சீண்ட சீண்ட தான் எதிராளி பலமாகிறான் என்பது கூட இத்தனை ஆண்டு காலம் இருந்த ஜெயலலிதாவுக்கு தெரியவில்லை../

கைகொடுங்கள் கார்த்திக். ஏதேது, பிரதமரோட போய் போட்டோ மட்டும் தான் எடுத்துட்டு வந்தீங்கன்னு நினைச்சேன்.. தமிழ்நாட்டு அரசியலைப் பத்தி அவருக்கே அறிவுரை சொல்லிட்டு வந்திருப்பீங்க போல..

தரமான செய்தி விமர்சனம். கீப் இட் அப்..

(ஹிஹி..அடுத்த தடவை பிரதமரோட போட்டோ புடிச்சுக்க நம்மளையும் கூட்டீட்டுப் போறீகளா?)

said...

//correct, well said! i'm expecting atleast some good thing from cabtain. let me see.
otherwise, we will start a party//

I am confident in onething ambi. Eventhough captain is good, the local level people will not be. Most of the people who joined his party in last 6 month are having some illegal record. So we cannot expect that. And still vijayakanth also self-center by having wife and brother-in-law always with him ..and the kalyana mandapam matter showed that he is also a normal politician.

So vera vazhi illai..we will start one party soon

//@priya, அதானே பார்த்தேன்! ஒரு பழமொழி நினைவுக்கு வருது. சொல்ல வேண்டாம்!னு பார்க்கிறேன்//

athu ennannu sollunga ambi

said...

//மூன்றாம் அணியை இருகை நீட்டி வரவேற்க தயாராக இருக்கும் மக்கள் தேமுதிக பக்கம் சாய போவது நிச்சயம். இதை சரியாக பயன்படுத்திக் கொள்வதில் தான் விஜய்காந்தின் திறமை வெளிப்படப்போகிறது//
அந்தத் திறமை விஜயகாந்த்கிட்ட இருக்கான்னு போகப் போகத் தான் தெரியும் வேதா.. ஆனா என்னைப் பொறுத்தவரை நடிகர் மற்றும் துணிச்சலா கட்சியை ஆரம்பித்து தனித்து நின்றதை தவிர கேப்டனிடன் சொல்லிகொள்ளும்படியாக ஒன்றும் இல்லை.. ஆனால் எதிர்காலத்தில் கற்றுக்கொண்டால் நல்ல வாய்ப்பு நாடாள..

said...

//கட்சியின் பொது செயலாளர் நான் ஒருத்தி இங்க இருக்கேன் என்னை கலந்தாலோசிக்காம நீங்க எப்படி துணை முதலமைச்சர் பதவியை தூக்கி கொடுக்கலாம்(ஒரு பெட்டி கூட கைமாறல:))
யோவ் முதல்ல கட்சிக்கு பேர் வையுங்கப்பா//

வேதா.. அது தான் உங்க தம்பிக்கு ஒரு வாரியமும், தமிழ் நாடு முழுவதும் ரோடு போடுற கான்ராக்டும் தர்றோம்னு பேசியிருக்கே.. அப்புறம் கட்சிக்கு பேர், நீங்க ஏன் வைக்க கூடாது, கொ.ப.செ

said...

//enakku thunai mudhalvar seyalalar ellam yar analum kavali illa :) adan minsara thurai irukke, unga ellar chairkum connection kudutha, ellarum ticket eduka poringa.. apram enna, mudhalvar thunai mudhalvar seyalalar ellam naam than//

அம்மணி இப்படி எல்லாம் பண்ணின முதல்வராக முடியாது, ஜெயில்ல கலி தான்..

எப்பா.. ப்ரியாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்குறதுக்கு இவ்ளோ எதிர்ப்பா..என்ன ப்ரியா இது..

பொற்கொடி, சீக்கிரம் உனக்கு அந்த துறையும் பறிச்சிட்டு, துறை இல்லா அமைச்சராக்குறேன்.. என் தலைவி கீதா மேடம் சொன்னது சரி தான் போல..

said...

//கைகொடுங்கள் கார்த்திக். ஏதேது, பிரதமரோட போய் போட்டோ மட்டும் தான் எடுத்துட்டு வந்தீங்கன்னு நினைச்சேன்.. தமிழ்நாட்டு அரசியலைப் பத்தி அவருக்கே அறிவுரை சொல்லிட்டு வந்திருப்பீங்க போல..

தரமான செய்தி விமர்சனம். கீப் இட் அப்..

(ஹிஹி..அடுத்த தடவை பிரதமரோட போட்டோ புடிச்சுக்க நம்மளையும் கூட்டீட்டுப் போறீகளா?)
//


நன்றி..கணேசன்.. பிரதமரை பாக்க போறப்போ நீங்க இல்லாமலா.. ஏன்னா உங்களை தான் தமிழ்நாட்டோட கவர்னராக்கனும்னு பிரதமர்கிட்ட பரிந்துரை செய்யப் போறோம்ல

said...

Very good analysis behind the reason for the growth in popularity of Vijayakanth and JJ's stupid comments. As somebody already said, you took the neutral stand and spoke of the ground reality behind Vijayakanth's exaggerated coverage by the media.

said...

// ப்ரியாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்குறதுக்கு இவ்ளோ எதிர்ப்பா..என்ன ப்ரியா இது..//

என்ன எதிர்ப்பு வந்தாலும் நாட்டு மக்கள் நலனுக்காக தாங்குவேன்..

said...

//Very good analysis behind the reason for the growth in popularity of Vijayakanth and JJ's stupid comments. As somebody already said, you took the neutral stand and spoke of the ground reality behind Vijayakanth's exaggerated coverage by the media.

//

Thanks Filbert

said...

//என்ன எதிர்ப்பு வந்தாலும் நாட்டு மக்கள் நலனுக்காக தாங்குவேன்//

ithu spirit priya:-))