Wednesday, October 25, 2006

தீபாவளி பட தர வரிசை

இந்த தீபாவளி, மெயிலில் என் எல்லா நண்பர்களின் வாழ்த்தை பெற்று, பின்னூட்டத்துல உங்க எல்லோருடைய வாழ்த்தும் பெற்று, போன்ல என் மாப்ள பரணி வாழ்த்த (இந்த போட்டோ எடுத்தது தான்), ப்ரியா போஸ்ட்ல ஸ்வீட்ஸ கண்ணுல சாப்பிட்டு, ஊருக்கு போன் பண்றப்போ வெடிச்சத்தம் கேட்டு நல்ல படியா முடிஞ்சது..

ஊர்ல இருந்திருந்தா மொத ஷோவே தல படத்தை பாத்து, ஒரு பதிவையும் போட்டு இருக்கலாம். ஆனா அந்த பாக்கியம் கொடுத்து வைக்கல.. தல, கட்-அவுட் வச்சு பாலபிஷேகம் எதுவும் செய்ய வேண்டாம்..உங்க தெருவை சுத்தமாக்கி வச்சுக்கோங்க அப்படின்னு சொன்னாலும், மதுரை திருச்சி ரசிகர்கள் பாலபிஷேகத்தையும் தாண்டி 'ஜின்'னபிஷேகமும், பான்பராக் பாக்கெட்டை வச்சு ஆரத்தியும் எடுத்து இருக்காங்க.. இதெல்லாம் இருக்கட்டும் படம் ஹிட்டான்னு கேக்குறீங்க..
சொல்றேன் சொல்றேன்.. பொறுமை..

ரஜினிக்கு அடுத்து கிங் ஆஃப் ஓபனிங்னு பேர் வாங்குன தல, வரலாறு படத்தோட மூலமா இன்னொரு வரலாறையும் படைச்சிருக்கார். முதல் இரண்டு நாட்களில் படம் 110% கலெக்க்ஷனாம்.. அஜித்தோட ரசிகர்கள் தியேட்டரோட தரையில் உக்கார்ந்தும், நின்றும் பாத்ததுல படம் பயங்கர வசூலாம்..படம் ஹிட்டுன்னு ஏற்கனவே வினியோகஸ்தர்களும் தியேட்டர் ஓனர்களும் சொல்லியாச்சு. இந்த வார கலக்க்ஷன் நிலவரத்தை இங்கே பாருங்கோ

வரலாறை பாத்துட்டு வர்ற ஒவ்வொருத்தரும் படத்துல அஜித்தோட நடிப்பை பாராட்டோ பாராட்டுன்னு பாராட்டுறாங்கோ.. அதுவும் அந்த ஃப்ளாஷ்பேக் காட்சில வர்ற அஜித்தோட நடிப்பு அவ்ளோ சூப்பராம். ரொம்ப நாள் கழிச்சு தலைக்கு சூப்பரா ஓடற படமா வரலாறு இருக்குமாம்.

தீபாவளி படங்களின் தர வரிசையை பற்றி சிட்டுக்குருவி என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்.

6. தர்மபுரி - விஜயகாந்த் கட்சியோட கொள்கை பரப்பு செயலாளரா டைரக்டர் பேரரசு சீக்கிரம் ஆகிவிடுவார் போல.. படம் அப்படி ஒரு பிரச்சாரப் படமாம்.. படம் முழுக்க அரசியல் நெடி தூக்கலா இருக்குதாம். விஜயகாந்த் ரசிகர்களுக்கும், கட்சியினருக்கும் வேண்டுமானால் படம் நல்லா இருக்கலாம்..

தர்மபுரி - சோதனைபுரி

5. தலைமகன் - சரத்தோட நூறாவது படம். ரேடான் தயாரிப்புல வந்திருக்க இந்தப் படம், நிறைய குறைபாடுகளால் வசூல்ல முதல் மகனாகுறது ரொம்பக் கஷ்டமாம்.

தலைமகன் - சொதப்பல்மகன்

4. வட்டாரம் - கதையிலும் காட்சியிலும் புதுமை ஏதும் இல்லாததால, ஆர்யாவோட இந்த மசாலா படம் தீபாவளி பட வரிசைல நாலாவது இடத்தைத் தான் பிடிக்க முடிஞ்சது. பாடல்களும் எதிர்பார்த்த மாதிரி இல்லாதது படத்துக்கு மிகப் பெரிய பின்னடைவு. இதயத்திருடன் படத்தை போல எதுவும் சரணுக்கு ஒரு தோல்வி படமா இல்லையாங்குறது மத்த படங்களோட ஓட்டதை பொறுத்தே இருக்குமாம்.

வட்டாரம் - சின்னது

3. வல்லவன் - சிம்புவின் டைரக்க்ஷனில், மூன்று கதாநாயகிகளுடன் வந்திருக்கும் இந்தப் படம், இளைஞகர்களை கவருகின்ற எல்லா அம்சைத்தயும் கொண்டுள்ளது. ஆனால் இரட்டை அர்த்த வசனங்களும் காட்சிகளும் தாய்குலங்களை தியேட்டருக்கும் கொண்டு வருமா என்பது சந்தேகமே. சிம்பு டைரக்க்ஷனில் கற்றுக்கொள்ளவேண்டியது இன்னும் நிறைய இருக்கு. திரைக்கதையில் படம் பார்ப்பவர்களை ரொம்பவே சோதிக்கிறார். ஆனால் பாடல் காட்சிகள் எடுத்த விதத்தில் சிம்புவை பாராட்டியே ஆக வேண்டும்

வல்லவன் - திணறுவான்

2. ஈ - யாரும் சமீபத்தில் தொடாத கதையை, நல்ல திரைக்கதையின் மூலம் மிக அழகாக சொல்லி இருக்கிறார் திரைக்கதைக்காக தேசிய விருது வாங்கிய SP ஜனநாதன். கொடுத்த வேடத்தில் நன்றாக நடித்துள்ள ஜீவா, வேற யாராலும் இப்படி நடிக்க முடியுமா என்ற சந்தேகத்தையும் சில அருமையான உணர்சிகளால் உணர்த்தி இருக்கிறார். புரிந்து கொள்ள கொஞ்சம் கஷ்டமான கதை என்பதால் B மற்றும் C ஏரியாக்களில் படம் ஓடுமா என்பது சந்தேகமே. அப்படி ஓடினால் இது தான் தீபாவளி படங்களின் முதல்வனாக இருக்கும்.

ஈ - கழுகு

1. வரலாறு - பினீக்ஸ் பறவையாய் அஜித் மீண்டு வன்திருக்க படம். ஒவ்வொரு கேரக்டருக்கும் இடையே நல்லதொரு வித்தியாசத்தை காண்பித்து பார்ப்பவர்களை அசத்துற படம். படத்தில் மைனஸ் என சில விஷயங்கள் இருந்தாலும் கே எஸ் ரவிகுமாரோட சென்டிமெண்ட் காட்சிக்காக தாய்குலங்களையும் கவரும். அதுவும் அஜித் பரதநாட்டிய கலைஞரா வர்ற சீன்ல தியேட்டருல விசில் பறக்குது. எதிர்த்து நிக்க எந்த படமும் தீபாவளி ரேஸ்ல இல்லாததால இந்த தீபாவளி தல தீபாவளி தான்

வரலாறு - காட்டாறு

இந்த வாரம் எந்தெந்த படம் எந்தெந்த இடத்துல இருக்குன்னு பாத்தோம்.. ஈ படம் B மற்றும் C ஏரியாக்களில் ஓடினால் முதல் இடத்தில வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அடுத்த வார தமிழ் பட தர வரிசை பதிவில் உங்களையெல்லாம் சந்திக்கும் வரை.. வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் சிட்டுக்குருவி.
(சிட்டுக்குருவியோட ஜோடி கொஞ்சம் பிஸியா இருக்கிறதால நீங்க அதுக்கு சொன்ன எந்த பேரையும் அது இன்னும் செலெக்ட் செய்யல, நண்பர்களே)

Thanks : Behindwoods

28 பின்னூட்டங்கள்:

said...

ok, nattamai style la first comment, nexttu post reading..

said...

Hi Meendum SLN here,

Very interesting report. Padam paarthu panneengalaa illa reviews paarthu panreengala? Anyway, informative

Ajith deserves a hit (at least on sympathy factor) but his fans are certainly overdoing it. I am (not fully) surprised they are this fanatic even after such a string of duds from him.
Cheers
SLN

said...

Maams...even i heard that Varalaru is breaking opening day records...thala kalakuraru :))

Meendum Ajith mela varuvadharku nalla vaaipu...appadiye Aazhvarum, Greedamum odidichina...thala meendum top :))

said...

Next film i am lookig fwd is "E"...read that first half seems to good and second is dragging...letz see...

Top ten style-la asathi irukeenga :))

said...

சரி, வரலாறுக்கு தான் சிட்டுக்குருவி list ல 1st place னு படிக்கறதுக்கு முன்னாடியே தெரியும். அத proof ஓட போட்டு அசத்திட்டீங்க.

'ஈ' பாக்க ஆர்வமா இருக்கேன். ஜீவா young generation ல ஒரு நல்ல நடிகர்.

தர்மபுரி, தலைமகன்லாம் எதிர்பார்த்த மாதிரி flop ஆனதுல சந்தோஷம்..

//வல்லவன் - திணறுவான்//
LOL.. நல்லா வேணும் சிம்புக்கு.

//ஆனால் இரட்டை அர்த்த வசனங்களும் காட்சிகளும் தைகுலங்களை தியேட்டருக்கும் கொண்டு வருமா என்பது சன்தேகமே. //
u mean தாய்குலம்???
கண்டிப்பா கொண்டு வராது. ஆனா college பசங்க போதும் இந்த மாதிரி படங்கள ஓட வைக்கறதுக்கு..

Anonymous said...

appa...enga ajith kathai appadiyae paduthudumonu ninacihen...
vanthutarilaa...

said...

super reviews... Sun TVla TopTen paatha maathiriye irukku...

thala rasigargalukku kondaatam thaan... :)

darmapuri padathula ellam vera enna edirpaarka mudiyum...

said...

priya, first comment pOttu asaththureenga..

eppadi pakkaava timely drop akureenga ingke.. are you using any feeder? :-))

said...

//Very interesting report. Padam paarthu panneengalaa illa reviews paarthu panreengala//

Welcome you again SLN..

Its purely based on lot of reviews I heard and read :-))

said...

//Maams...even i heard that Varalaru is breaking opening day records...thala kalakuraru//

Mapla, inimel mazhaikalam, veyilkalam maathiri, ennikume thalakaalam thaan

//Meendum Ajith mela varuvadharku nalla vaaipu...appadiye Aazhvarum, Greedamum odidichina...thala meendum top//

Sure Mapla.. I hope those movies will also do better at box office

said...

//Next film i am lookig fwd is "E"...read that first half seems to good and second is dragging...letz see...//

Mapla, E nalla irukku.. AnA kiramaththu jananGkalukku " sila kamal" padam maathiri puriyaama poyidumaannu therila

//Top ten style-la asathi irukeenga//

O..thanks Mapla

said...

//'ஈ' பாக்க ஆர்வமா இருக்கேன். ஜீவா young generation ல ஒரு நல்ல நடிகர்//

சரியாச் சொன்னீங்க ப்ரியா..

//ஆனா college பசங்க போதும் இந்த மாதிரி படங்கள ஓட வைக்கறதுக்கு.//

எல்லா படமும் காலேஜ் பசங்க விரும்புறது இல்ல ப்ரியா.. அதவிட இடைவேளைக்குப் பிறகு படம் ரொம்ப சொதப்பல்னு நண்பர்கள் சொன்னாங்க ப்ரியா

said...

//appa...enga ajith kathai appadiyae paduthudumonu ninacihen...
vanthutarilaa... //

Yes dreamzz ini thala raajjiyam thaan :-))

said...

//super reviews... Sun TVla TopTen paatha maathiriye irukku...//

Thanks Arun..

//thala rasigargalukku kondaatam thaan... :)//

Real thala diwali intha varusham Arun

//darmapuri padathula ellam vera enna edirpaarka mudiyum...//

LOL :-))

said...

aaaga mothathula oru padamum theradhu pola irukkae, aana adukkellam naanga bayappada maattom, eppadiyirundhaalum naanga paarpom:)

said...

//eppadiyirundhaalum naanga paarpom//

intha intha spirit thaan thamiz chinimaavai vaazhavaikkuthu IA

said...

I think your ranking was more or less fine.. Except, I feel Vattaram would rank above Vallavan. (you should consider the budgets also when you rank). I've seen both the movies in question above. Vattaram certainly is much above Vallavan in maturity levels and sanity levels...
P.S.: The song "loosu payyan" was very apt for the movie. Loosu payyan and loosu ponnungalum serndhu nadicha loosu padam..

said...

எப்படித்தான் அங்கே இருந்துட்டு இங்கேயே ஞாபகமா இருக்கீங்களோ? எல்லா சினிமா டிவிடியும் அங்கே கிடைக்குமே? வாங்கிப் பார்த்தாச்சா?

said...

I saw 'Varallaru' on very first day/show in my native.usually the movies which i see on very first day would be a major flop or very average.so first i decided to watch 'Vallavan' but as it was not released on that day in my place,we went to Ajit movie.
As you rated,this is really a very good movie for Ajit fans.he really acted very well.maining in that dancer role,he lived in that role.overall I felt a satisfaction after comingout from the theater

said...

//I think your ranking was more or less fine.. Except, I feel Vattaram would rank above Vallavan. (you should consider the budgets also when you rank). I've seen both the movies in question above. Vattaram certainly is much above Vallavan in maturity levels and sanity levels...//
This is very new news for me bart. I will see how vattaram is doing and change the positions in next week..Thanks for dropping here
//P.S.: The song "loosu payyan" was very apt for the movie. Loosu payyan and loosu ponnungalum serndhu nadicha loosu padam.. //
LOL :-))

said...

//எப்படித்தான் அங்கே இருந்துட்டு இங்கேயே ஞாபகமா இருக்கீங்களோ? எல்லா சினிமா டிவிடியும் அங்கே கிடைக்குமே? வாங்கிப் பார்த்தாச்சா? //

மேடம், உண்மையில் நான் எந்த படத்தையும் பாக்கல.. எல்லாம் சொல்றதை வைத்து போட்ட தர வரிசை இது..

said...

//As you rated,this is really a very good movie for Ajit fans.he really acted very well.maining in that dancer role,he lived in that role.overall I felt a satisfaction after comingout from the theater //

Happy to know this mohan.. Ajith fans are enjoying the film like anything..

SamPal said...

Dear Friend,
I have seen this couple of days agao in "behindwoods.com"! You have only translated it!

said...

//I have seen this couple of days agao in "behindwoods.com"! You have only translated it//

My Dear Friend, I have mentioned that already. And also, I am in US.. So its difficult to see all the movie before writing this post.. And also many people are there, who can't see those sites..

said...

//வரலாறு - காட்டாறு//

அப்படின்னா அந்த பக்கம் யாரும் போகமாட்டாங்கனு சொல்றீங்களா...
:-)

said...

//அப்படின்னா அந்த பக்கம் யாரும் போகமாட்டாங்கனு சொல்றீங்களா...
//

LOL shyaam

C.M.HANIFF said...

nice comments :)

said...

//முதல் இரண்டு நாட்களில் படம் 110% கலெக்க்ஷனாம்.. //

எத வச்சு சொன்னாங்க???
தல, நானும் இந்த கொடுமையை பார்த்தேன். ஆஹா, ஓஹோ ன்னு எல்லாம் இல்லை. அதுவும் தொத்தாபுரம் சீனெல்லாம் இம்சை...

//The Diwali results are out and Ajit’s Varalaaru is the winner. The film had a 100 per cent opening during the weekend in five Chennai screens. //

5 சென்னை தியேட்டரை வைச்சி மொத்த தமிழ்நாட்டு நிலவரத்த சொல்லறாங்க... sampling அப்படின்னு எடுத்துட்டா கூட இது random sampling கூட கிடையாது.

அப்புறம், நீங்க குடுத்த லின்க்ல இன்னமும் வேட்டையாடு விளையாடு பிளாக்பஸ்டர்ன்னு போட்டு இருக்காங்க. வரலாறு ஹிட்னு தான் போட்டிருக்கு... அப்புறம் எப்படி அது வரலாறு படைக்கும்???

//எல்லா படமும் காலேஜ் பசங்க விரும்புறது இல்ல ப்ரியா.. அதவிட இடைவேளைக்குப் பிறகு படம் ரொம்ப சொதப்பல்னு நண்பர்கள் சொன்னாங்க ப்ரியா //

தல, படம் பார்க்காமலே 2 வது இடம் குடுத்துட்டீங்க??? வந்ததுலையே அதுதான் நல்ல படம்...

பதிவு மேல பதிவு போட்டு கலக்குறீங்க, Keep up the tempo!!!!