Tuesday, October 31, 2006

லகலக லாப்டாப்

ஆசை ஆசையா இருந்த ஒரு விஷயம் நேற்று நிறைவேறியது. காலேஜ்ல படிக்கிறப்போ அறிமுகமான விஷயம்.. ஏதாவது ஒரு கம்பெனில இருந்து வர்றவங்க சூட்கேஸ் மாதிரி கொண்டு வந்து, விரிச்சு வச்சு சில பல பிரசென்டேஷன் கொடுப்பாங்க.. அப்போ வெல்லாம் அந்த மாதிரி வர்ற லேப்டாப்பை ரசிக்கிறதே ஒரு பெரிய வேலையா இருந்து.. இப்படி இதுக்குள்ள எல்லாத்தையும் அடக்குனாங்கன்னு வியந்ததுண்டு.. இப்போ இங்கே அமெரிக்கா வந்த பிறகு எல்லோருக்கும் அது அவசியமானதால வாங்க வேன்டியதாயிடுச்சு..

நேற்று தான் வந்தது.. புத்தம் புது பொண்ணு மாதிரி பளபளான்னு.. எப்படியும் ரெண்டு வருஷம் கழிச்சு "டேய்..உன்னோட லாப்டாப் ரொம்ப பழசுப்பா.. கான்ஃபிகரேஷன் எல்லாம் ரொம்ப பழசுன்னு எல்லாம் சொல்ல போறாங்கனாலும் வாங்குறப்பவே உருப்படியா ஹை-என்ட் ல வாங்கிடலாம்னு முடிவு பண்ணி ஆர்டர் பண்ணினேன். உனக்கு லாப்டாப் வந்து சேர எப்படியும் ஒரு 15 நாள் ஆகும்னு சொன்னதால அப்படியே ஆர்டர் பண்ணினதையே மறந்துட்டேன்..

இந்த வார இறுதிக்கு, SMOKY MOUNTAINS (in Tenesse state) அப்படின்னு ஒரு இடத்துக்கு போயிருந்தோம். நம்ம ஊர் ஊட்டி கொடைக்கானல் மாதிரி இங்கே ஒரு மலை பகுதி. அதுவும் இப்போ, எங்களை அழிக்க வரும் குளிர்காலமே போ போ என்று எல்லா இலைகளும் சிவப்பு, மஞ்சள் நிறத்தை காட்டி நிற்பதை பார்ப்பதே கொள்ளை அழகு. சூரிய வெளிச்சமெல்லாம் பட்டுத் தெரிப்பதில் அந்த காடே பற்றி எரிவது போல தெரியும். அதுவும் காற்று வேற சிலு சிலுன்னு..இல்ல இல்ல..குளுகுளுன்னு அடிக்க எந்த இடத்திலும் ஜெர்கின் இல்லாம நிற்க முடிவதில்லை..

ரெண்டு நாள் நல்லா ஆட்டம் போட்டுட்டு திரும்பி வந்து ஜிமெயில் பாத்தா தம்பி..உன் லாப்டாப் டெலிவர் பண்ணியாச்சுன்னு மெயில்.. ஓடிப்போய் பாத்தா பிரவுன் கலர் பெட்டிக்குள் அழகா தூங்கிகிட்டு இருந்தது. நான் வாங்கியிருப்பது HP Pavillion dv6000t.. இது தான் இப்போ டாப்-1 அப்படின்னு நிறைய பேர் சொல்லி இருந்ததால..வாங்கியாச்சு.. ரொம்ப நாள் ஆசை.. நாம எப்போ இப்படி வாங்குவோம்..இதோ இப்போ என் மடில தான் அது உக்கார்ந்து இருக்கு.. (அதனால தான் அதை பொண்ணுன்னு சொன்னியான்னு குசும்பா கேள்வி எல்லாம் கேக்கப்படாது மக்களே).. சந்தனமும் குங்குமமும் வைத்து, சாமிகிட்ட ஆசியும் வாங்கி அம்சமா இருக்கு லப்டாப்.. அது என்னமோ தெரில..இது மாதிரி ஒரு பொருளை வாங்கினா அந்த சந்தனமும் குங்குமமும் வைக்கலைன்னா மனசுக்கு ஒரு திருப்தியே இருக்கமாட்டேங்குது.. நல்ல வளைவுகள்.. நிறைய விஷயங்கள்.. வெப்-கேம், மைக்ரோ போன், 2.0 GஃZ பிராசசர்ன்னு, பக்காவா இருக்கு லாப்டாப்..கிட்டதட்ட ஆயிரத்து நானூறு டாலர் ஆனது.. அப்பா..அம்மா கிட்ட சொன்னேன்..அவங்களுக்கும் ஒரு சந்தோசம்.. வாழ்க்கைல ஒவ்வொரு சின்ன விஷயமும் இந்த மாதிரி நடக்குறப்போ, ஒரு பெரிய விஷயத்தை சாதித்த திருப்தி இருக்கு மனசுக்குள்ள..

என் முதல் பதிவு புதிய லாப்டாபிலிருந்து :-))

27 பின்னூட்டங்கள்:

said...

hai... nan than firstaa!!
anna very happy for u on the purchase of your first laptop. I felt the same when I bought one for my father last year. I got him a DELL - Lattitude one.

said...

Congrats Karthik! Bathirama vachikonga :)

//இது மாதிரி ஒரு பொருளை வாங்கினா அந்த சந்தனமும் குங்குமமும் வைக்கலைன்னா மனசுக்கு ஒரு திருப்தியே இருக்கமாட்டேங்குது.. //
correct..

said...

unga monday thodar enna achu?

said...

just miss !!!
pudu laptop-la irundu first post pottadukku vaalthukkal..

vaalkaye inda maathiri chinna chinna vishayathula kedaikire sandosathula thaanga irukku :)
(aha, enna thathuvam!!!)

-Arun

said...

congrats....even i am also interested in buying a laptop...was just going through...I see lenovo to be the top including the customer service....

btw, did u get any discount for hp laptop which you bought....

said...

forgot to ask one main question..whats the cost of the laptop...

said...

congrats!KM.cinna cinna asaigalildhan vazhakiayin asthivaramae irukku.ini madiya vittu avala neengalum irakka poradhilla,avalum iranga poradhilla.Jollydhan.--SKM

said...

புது லாப்டாப்பிற்கு வாழ்த்துக்கள். உங்களுக்கும்தான் :) பாத்து, ரொம்ப நேரம் மடியிலே வெச்சிக்காதீங்க. பின் விளைவுகள் ஏடாகூடம் என்று எங்கேயோ படித்திருக்கிறேன்.

அப்புறம், அந்த Smoky Mountain photos ஏதாவது போடறது

Cheers
SLN

said...

கணினி இப்ப மடிணி ஆயிடுச்சா:) ஆமா லேப்டாப்பிற்கு தமிழ்ல நான் வச்ச பேர் எப்படி இருக்கு?:)


//இது மாதிரி ஒரு பொருளை வாங்கினா அந்த சந்தனமும் குங்குமமும் வைக்கலைன்னா மனசுக்கு ஒரு திருப்தியே இருக்கமாட்டேங்குது//
நாம என்ன தான் முன்னேறினாலும் சில அடிப்படை நம்பிக்கைகள் மாறாது தான்:) அதில் தவறும் இல்லை:)

Anonymous said...

Hi man I have been reading your blogs since long time. Thanx for updating latest news...

George

said...

//nan than firstaa!!
anna very happy for u on the purchase of your first laptop. I felt the same when I bought one for my father last year. I got him a DELL - Lattitude one//

first vanthathukku inthiya vantha piraku puliyotharai pottalam anuppi vaikkiren sister

said...

//Congrats Karthik! Bathirama vachikonga //

Thanks priya..Sure

said...

//unga monday thodar enna achu? //

sorry priyaa..konjam late ayiduchchu..ellam puthu laptap installation vakaiyaraa thaan

said...

//just miss !!!
pudu laptop-la irundu first post pottadukku vaalthukkal..//

Thanks Arun

//vaalkaye inda maathiri chinna chinna vishayathula kedaikire sandosathula thaanga irukku :)
(aha, enna thathuvam!!!)//

varuthu ellaam thaana varuthu..thathuvanGkal

said...

//congrats....even i am also interested in buying a laptop...//

Thanks Leo.. Vaangunga Leo

//btw, did u get any discount for hp laptop which you bought.... //

HP Pavillion dv6000t

said...

//forgot to ask one main question..whats the cost of the laptop... //

$1374 Leo

said...

//congrats!KM.//
Thanks SKM

//cinna cinna asaigalildhan vazhakiayin asthivaramae irukku.ini madiya vittu avala neengalum irakka poradhilla,avalum iranga poradhilla.Jollydhan.--//

LoLunga SKM ungalukku

said...

//புது லாப்டாப்பிற்கு வாழ்த்துக்கள். உங்களுக்கும்தான் :) பாத்து, ரொம்ப நேரம் மடியிலே வெச்சிக்காதீங்க. பின் விளைவுகள் ஏடாகூடம் என்று எங்கேயோ படித்திருக்கிறேன்.//

Thanks SLN..amaanGka konjam ushaaraththaan irukkanum

//அப்புறம், அந்த Smoky Mountain photos ஏதாவது போடறது//
sure..aduththa postla poduren

said...

//கணினி இப்ப மடிணி ஆயிடுச்சா:) ஆமா லேப்டாப்பிற்கு தமிழ்ல நான் வச்ச பேர் எப்படி இருக்கு?:)

//

kalakureenGka vEthaa

said...

//Hi man I have been reading your blogs since long time. Thanx for updating latest news...//

Thanks George

said...

புது மடிக்கணினிக்கும் உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள். சரி, smokey mountains போனீங்கன்னு சொல்றீங்க, அங்கே பக்கத்திலே Ruby Falls-ம் பக்கத்திலே அந்த ரெயில் பிரயாணமும் செஞ்சீங்களா? ஹிஹிஹி, ஏற்கெனவே கைப்புள்ள பதிவிலே வந்து புகை விட்டுட்டுப் போனதிலே என்னோட கணினியே தீசல் வாசம் வருது. அதான் ஒரு தன்னடக்கத்தோட இந்த இரண்டு இடம் மட்டும் கேட்டேன். (நான் பார்த்ததே இந்த 2 இடம் தான் கிறதை யார் கிட்டேயும் சொல்ல மாட்டேனே! :D) அப்புறம் Nashville போய்ப் பிள்ளையாரைப் பார்த்து நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லிட்டு வாங்க. ஞாயிற்றுக் கிழமைலே போனா சாப்பாடு நல்லா இருக்கும். சீச்சீ,நான் அதெல்லாம் அல்பம் எல்லாம் ஒண்ணும் இல்லை. சும்மா, நாம் பெற்ற இன்பம் நம் தொண்டருக்கும் கிடைக்கட்டும்னு தான். :D

said...

Pudhiya varavaana Laptopkkukku ennoda saarbavum oru hello solidunga :D

said...

//புது மடிக்கணினிக்கும் உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள். சரி, smokey mountains போனீங்கன்னு சொல்றீங்க, அங்கே பக்கத்திலே Ruby Falls-ம் பக்கத்திலே அந்த ரெயில் பிரயாணமும் செஞ்சீங்களா? ஹிஹிஹி, ஏற்கெனவே கைப்புள்ள பதிவிலே வந்து புகை விட்டுட்டுப் போனதிலே என்னோட கணினியே தீசல் வாசம் வருது. அதான் ஒரு தன்னடக்கத்தோட இந்த இரண்டு இடம் மட்டும் கேட்டேன். (நான் பார்த்ததே இந்த 2 இடம் தான் கிறதை யார் கிட்டேயும் சொல்ல மாட்டேனே! :D) அப்புறம் Nashville போய்ப் பிள்ளையாரைப் பார்த்து நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லிட்டு வாங்க. ஞாயிற்றுக் கிழமைலே போனா சாப்பாடு நல்லா இருக்கும். சீச்சீ,நான் அதெல்லாம் அல்பம் எல்லாம் ஒண்ணும் இல்லை. சும்மா, நாம் பெற்ற இன்பம் நம் தொண்டருக்கும் கிடைக்கட்டும்னு தான்.//

Wov..madam..ellaa idaththaiyum puttu puttu vaikireengale..

ruby falls, nashville vum time illaathathaala miss panniyaachchu madam. enave pakkathula thaane irukku. innoru thadavai trip adikkanum.. appo nichchayam intha pakuthiyellaam kavar panniduren

said...

//Pudhiya varavaana Laptopkkukku ennoda saarbavum oru hello solidunga //

unga hellovai solliyaachchu G3..Thanks

Anonymous said...

Congrats Karthik,

dv6000t - the top 1 model in Mainstream Notebooks

Source: http://laptopmag.com/Tools/Guide/Notebooks/index.htm

But 15.4 inch wide screen கொஞ்சம் பெரிசா இருக்குமே

நல்லா ஈசியா தூக்க முடியுதா? anyhow we are gonna use at home only.

Enjoy with your new Laptop

Thala padatha download panni paakavendiyathuthaanae

said...

Congrats ponga.. Suma dhool kalapunga...

said...

http://www.shopping.hp.com/webapp/shopping/series_can.do?catLevel=2&landing=notebooks&storeName=computer_store&a1=Usage&v1=Entertainment%20Notebooks

the cost of the HP dv6000t laptop is Us $580. Please go to the above link which says the same.

If you have customized your laptop, then I think your laptop should cost US $1384.