Tuesday, January 02, 2007

சூடமாய் கரையும் நினைவுகள்

எழுதாத பேப்பரை கையில் வைத்து கொண்டு என்ன எழுதலாம், எப்படி எழுதலாம், எப்படி எழுதினால் சுவையா இருக்கும் என்று பலவாறான யோசனைகள். இப்படி எத்தனை கேள்விகள் உள்ளத்தில் இருந்தாலும் எத்தனை பக்கங்கள் எழுதலாம் என்பதில் மட்டும் ஒரு சின்ன எல்லையை ஆண்டவன் கொடுத்திருக்கிறான். அத்தனை பக்கங்களில் அவனே முதலில் எழுதுகிறான். நாம் நடந்ததை எழுதுகிறோம். அவன் நடக்க போவதை எழுதுகிறான். உலகில் அத்தனை பேருக்குமாய் அவன் எழுதுகிறான். நாம் நமக்கே எழுத சிரமப்படுகிறோம். இப்படித்தான் வருடத்தின் முதல் நாட்கள் நாள்காட்டியில் கிழிக்கப்படுகின்றன.

நடந்தது எல்லாம் இப்போது நினைக்கையில் மங்கலான கனவுகளாய் தெரிகிறது. நடக்கபோவது எல்லாம் இழுக்க இழுக்க நீளும் ரப்பராய் நீண்ட கனவுகளாய் இருக்கிறது. முன்னாலும் பின்னாலும் கனவுகளை சுமக்கும் மனிதன்,வாழ்க்கை எல்லாம் கனவுகளை போலவே போகிறது, முன்னால் நகரும் போது பின்னால் ஓடி கரைகின்ற புகைவண்டி புகைகளாய்.

ஓசோன் மண்டலம் ஒரு பக்கம் கிழிந்து போய் மழைக்காலங்களில் வெய்யிலையும் வெய்யில் காலங்களில் குளிரையும் மாற்றித் தந்து தட்ப வெட்பத்தில் கால்பந்து விளையாடுகிறது. ஒரு பக்கம் அதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் காடுகள் கான்கிரீட் சுவர்களாகிறது. இப்படியே காடுகள் இடிக்கப்பட்டால் இன்னும் ஒரு நூறு ஆண்டுகளில் இந்த கான்கிரீட் கட்டடங்களை கண்டு மழைபெய்யுமா இந்த வானம்? ஓசோ சொன்னதை போல இயற்கையை நாம் மதித்தால் அது நம்மை அரவணைக்கும். முடிந்தவரை உங்கள் வாழ்நாளில் ஒரு ஆயிரம் மரங்களையாவது நடுங்கள். இல்லையென்றால் எந்த மரத்தையும் அறுக்கும் அருகதை நமக்கு கிடையாதென்றெண்ணி சும்மா இருங்கள்.

புதியதாய் பிறக்கும் ஒரு வருடம் நமக்கு ஒரு வயதை மட்டுமா தருகிறது. புதிதாய் போடப்பட்ட ஒரு சாலையிலே போகின்ற வண்டிகள் தரும் தடங்களை போல எத்தனை எத்தனை படிப்புகளை சொல்லித் தருகிறது. அடுத்தவரின் தவறுகளை இங்கே பட்டியலிட்டுகொண்டே தனதை பூஜை அறையின் அடியிலே சமாதியாக்குகின்றனர். பதவிகளை ஏற்கும் போதும் கொள்ளப்படும் பிரமாணங்களை போல வாழும் ஒவ்வொருவரும் ஒன்றை மனதில் இருத்தி கொள்ள வேண்டும். அது புதிய ஒன்றை கண்டுபிடிக்க இல்லையென்றாலும் பழையதை அழிக்காமல் இருத்தல் பெரியது.

யாருமே இல்லாத ஒரு நாளிலே உக்கார்ந்து யோசித்தால் இப்படித்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நினைவுகள் தூளியில் ஆடுது. சில சமயம் நமக்கு முன்னால் நடக்கும் சில விதி மீறல்கள், படி தாண்டல்கள் நமக்கு இதயத்தின் அதிகபட்ச துடிப்புகள் கணக்கிட உதவுகிறது. அன்னியன் விக்ரமாய் தலைவிரித்து கற்பனையில் குதிரையோடு பறக்கிறது.

நமக்கு நாமே கோடுகளை இட்டு, உற்றோர் உறவினர் என்று இல்லாமல் எல்லோரும், உலகில் வாழும் ஒற்றை ஜாதி மலரிலிருந்து அதை பிறக்க வைக்கும் சூரிய பிரபு வரை சுகத்தோடு இருக்க, ஆசை கோபம் களவு தெரிந்தவன் பேசத் தெரிந்த மிருகம் என்று ஆண்டவனின் ஆறு கட்டளையின் ஒன்றாய் இல்லாமல், பல வண்ண அரிதரங்கள் பூசி நாலு பேரை அழ வைப்பதை போல, க்ளுகென முகிழ்க்கும் உதட்டு மலரின் புன்னகை கொண்டு நெஞ்சமெலாம் வாழ்த்தி, புறாக்களில் மட்டுமல்ல இதயங்களிலும் அமைதியை, இமயம் தொட்டு விடும் ஆகாச எண்ணங்களுக்கு இந்த வருடத்தில் புது வண்ணம் பூசுவோம்.

போகும் வழியெல்லாம் காற்று உங்களுக்கு வாசனை தந்து தடையென நிற்பவை எல்லாம் தடமில்லாமல் போகிட, போகியில் தீயிட, பரமபத ஏணிகளில் ஏறி, பாம்புகளில் தப்பித்து, வாழ்க்கை தாயத்தில் வாகை மலரது சூடி, எனக்கு அறுபது அடுத்தோற்கு நாப்பது என எல்லாம் ஒதுக்கி, வாழ்வில் மகிழ்ச்சி, மனத்தில் எழுச்சி எண்ணி என்றும் சிறப்பாய் வாழ இந்த ஆண்டு வேண்டும் என வேண்டியது எல்லாம் கிடைத்து உங்களை வாழ வைக்க வேண்டுகிறேன்

58 பின்னூட்டங்கள்:

said...

சொல்வதற்கு வார்த்தையேதும் இல்லை நண்பரே அருமையிலும் அருமையான எண்ணங்கள்:) இந்த எண்ணங்களை இங்கே விதைத்து எங்கள் மனங்களில் விருட்சமாய் வளர்த்து விட்டீர்கள்.

said...

போன பதிவிற்கு நான் எழுதிய பின்னூட்டம் காணவில்லையே? இல்லை ஒருவேளை உங்களுக்கு வரவே இல்லையா?:)

C.M.HANIFF said...

Romba nalla pathivu, arumaiya eshuti irukeenga ;)

said...

ரெம்ப நன்னா எழுதிருக்கேடா குயந்த... அருமை... எல்லாரும் அமைதியா.. அடுத்தவருக்கு தொந்தரவு தராம முடிஞ்ச அளவு உதவிகள் செஞ்சு சந்தோசமா இருக்க இந்தவருசம் ஒரு புதுவரவு....

மனசு...

Anonymous said...

first a?

Anonymous said...

romba yosichu ennanamo nalla visayangal solli irukeenga! irunga innoru murai padikiren

Anonymous said...

//அவன் நடக்க போவதை எழுதுகிறான். உலகில் அத்தனை பேருக்குமாய் அவன் எழுதுகிறான். நாம் நமக்கே எழுத சிரமப்படுகிறோம். இப்படித்தான் வருடத்தின் முதல் நாட்கள் நாள்காட்டியில் கிழிக்கப்படுகின்றன//

nalla soneenga! sila peru ithu theriyaama romba aduraanga ;)

said...

கார்த்திகேயன்,
உங்கள் கனவுகள் நனவுகளாக வேண்டும்.
உங்கள் நல்ல எண்ணங்கள் உயிர் பெற வேண்டும்.
நீங்களும் அன்றாட,அலுவலக,தனி வாழ்க்கையிலும் வெற்றி பெறவேண்டும்.
நினைவுகளுக்கு நன்றி.

Anonymous said...

//இல்லையென்றால் எந்த மரத்தையும் அறுக்கும் அருகதை நமக்கு கிடையாதென்றெண்ணி சும்மா இருங்கள்.//

100% accepted!

Anonymous said...

//நமக்கு நாமே கோடுகளை இட்டு, உற்றோர் உறவினர் என்று இல்லாமல் எல்லோரும், உலகில் வாழும் ஒற்றை ஜாதி மலரிலிருந்து அதை பிறக்க வைக்கும் சூரிய பிரபு வரை சுகத்தோடு இருக்க, ஆசை கோபம் களவு தெரிந்தவன் பேசத் தெரிந்த மிருகம் என்று ஆண்டவனின் ஆறு கட்டளையின் ஒன்றாய் இல்லாமல்//

chance a illama solli irukeenga... yaaravadhu thirundhuvaangala? kashtam thaan... nalla eludhi irukeenga karthi.. super..!

said...

//சொல்வதற்கு வார்த்தையேதும் இல்லை நண்பரே அருமையிலும் அருமையான எண்ணங்கள்:) இந்த எண்ணங்களை இங்கே விதைத்து எங்கள் மனங்களில் விருட்சமாய் வளர்த்து விட்டீர்கள்.//

நன்றிங்க கொ.ப.செ..

புது வருடம் இனியதாய் இருக்க வாழ்த்துக்கள் வேதா.. களப்பணி எல்லாம் எப்படி இருந்தது

said...

//போன பதிவிற்கு நான் எழுதிய பின்னூட்டம் காணவில்லையே? இல்லை ஒருவேளை உங்களுக்கு வரவே இல்லையா//

வந்ததுங்க வேதா.. இப்போது தான் அதை அக்செப்ட் செய்தேன் :-)

said...

//Romba nalla pathivu, arumaiya eshuti irukeenga//

Thanks haniff

said...

//ரெம்ப நன்னா எழுதிருக்கேடா குயந்த... அருமை... எல்லாரும் அமைதியா.. அடுத்தவருக்கு தொந்தரவு தராம முடிஞ்ச அளவு உதவிகள் செஞ்சு சந்தோசமா இருக்க இந்தவருசம் ஒரு புதுவரவு....//

நன்றிங்க மனசு..

தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

said...

/romba yosichu ennanamo nalla visayangal solli irukeenga! irunga innoru murai padikiren //

thanks dreamzz.. :-)

said...

//sila peru ithu theriyaama romba aduraanga //

correct dreamzz..

said...

//நீங்களும் அன்றாட,அலுவலக,தனி வாழ்க்கையிலும் வெற்றி பெறவேண்டும்.
நினைவுகளுக்கு நன்றி. //

நன்றிங்க வல்லிசிம்ஹன்..

உங்கள் வாழ்வில் இந்த வருடம் பல வெற்றிகளை தர வாழ்த்துக்கள்

said...

//chance a illama solli irukeenga... yaaravadhu thirundhuvaangala? kashtam thaan... nalla eludhi irukeenga karthi.. super..!//


Thanks Thanks dreamzz.. இத்தனை பின்னூட்டங்கள் இட்டதற்கு நன்றிங்க ட்ரீம்ஸ்

Anonymous said...

ஆம் கார்த்தி

நல்ல சிந்தனை.எல்லோரிடமும் இதே சிந்தனை பரவ வேண்டுகிறேன்

நாம் நாமாய் இருப்போம்..

said...

சும்மா எல்லாரையும் போல நானும் திருப்பி எழுத விரும்பலை. சுருக்கமாச் சொன்னா பண்பட்ட எழுத்து. மிக உயர்ந்த எண்ணங்களை உங்களுள் விதைத்து அறுவடை செய்து, நல்ல விதைகளால் எல்லார் மனத்திலும் நடவு செய்கிறீர்கள். ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.

said...

நல்ல பதிவு கார்த்திக். நடந்தா நல்லாத்தான் இருக்கும்.

Anonymous said...

Nalla sinthanai Karthik... neenga sollurathu yellam correct :)

Anonymous said...

நல்ல ஒரு தொகுபு ..

I feel its because we are keeping one leg in the past and other leg future not enjoying the present.

i may say don;t forget the past, know ur roots and stands, enjoy the present and plan the future.

ஒரு நிறைவான பதிவு

said...

என்ன தலைவரே, புது வருஷம் எப்படி போகுது?
கவிதை மாதிரி ஒரு போஸ்ட் எழுதி இருக்கிங்க. அருமையான எண்ணங்கள்.
மத்த போஸ்டெல்லாம் அப்புறம் படிக்கறேன். ok?

Anonymous said...

karthik
as usual kalakkals.

//தட்ப வெட்பத்தில் கால்பந்து விளையாடுகிறது. ஒரு பக்கம் அதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் காடுகள் கான்கிரீட் சுவர்களாகிறது//
super lines.

i hope all your dreams come true . pudhiyadhoru ulagaik kaana enakkum aasayaa dhaan irukkiradhu..paarpom 2007 enna maardhalgalendru..

mothathil romba nalla ezudhi irukeenga..

said...

தத்துவப் பதிவா இருக்கா.. புரிஞ்சிக்க கொஞ்ச நேரம் எடுத்துச்சு (ஹிஹி)

//முடிந்தவரை உங்கள் வாழ்நாளில் ஒரு ஆயிரம் மரங்களையாவது நடுங்கள்.//

நம்மால் இது முடியாதபோது இங்கே தான் recycling மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

Anonymous said...

ada...pinnottam number ellam oru matter e இல்ல!

said...

பதிவு சூப்பர். அதில் எனக்கு பிடித்த விஷயங்கள் இதோ:

1- நாம் நமக்கே எழுத சிரமப்படுகிறோம். இப்படித்தான் வருடத்தின் முதல் நாட்கள் நாள்காட்டியில் கிழிக்கப்படுகின்றன. --> உண்மைதான். ஒவ்வொன்றையும் எழுத எத்தனை எத்தனை தடைகள்.

2- நடக்கபோவது எல்லாம் இழுக்க இழுக்க நீளும் ரப்பராய் நீண்ட கனவுகளாய் இருக்கிறது.--> உங்கள் கனவுகளின் கைவண்ணம் இந்த வருடம் மெலும் அதிகமாக எதிர்ப்பார்க்கிறேன்.

3- ஓசோன் மண்டலம் ஒரு பக்கம் கிழிந்து போய் மழைக்காலங்களில் வெய்யிலையும் வெய்யில் காலங்களில் குளிரையும் மாற்றித் தந்து தட்ப வெட்பத்தில் கால்பந்து விளையாடுகிறது. --> என்ன ஒரு வரி. ஆஹா! ஆஹா!

4- இப்படியே காடுகள் இடிக்கப்பட்டால் இன்னும் ஒரு நூறு ஆண்டுகளில் இந்த கான்கிரீட் கட்டடங்களை கண்டு மழைபெய்யுமா இந்த வானம்? --> ஆராய்சி செய்யலாம்.. வாங்க கார்த்திக். ;-)

5- முடிந்தவரை உங்கள் வாழ்நாளில் ஒரு ஆயிரம் மரங்களையாவது நடுங்கள். இல்லையென்றால் எந்த மரத்தையும் அறுக்கும் அருகதை நமக்கு கிடையாதென்றெண்ணி சும்மா இருங்கள். --> நல்ல ஒரு ஐடியா. ஆனால் நடுவதுக்குதான் இடம் இல்லை. இதை அமல்படுத்த சொல்லவேண்டும்.

6- அன்னியன் விக்ரமாய் தலைவிரித்து கற்பனையில் குதிரையோடு பறக்கிறது. --> இன்னொரு அற்புத வரி கார்த்திக்.

நான் இங்கே ஆறே வரிகளை குறீப்பிட்டிருந்தாலும், நீங்கள் எழுதிய ஒவ்வொன்றும் முத்துக்களே! இன்னும் நிறைய விஷயங்களை இதே போல் அழகாக எழுத என் வாழ்த்துக்கள் கார்த்திக். :-)

said...

களப்பணி எல்லாம் கலக்கலா இருந்தது:) எல்லை தாண்டிப் போய் கேரளத்துலயும் நம்ம கட்சி கொடியை நாட்டிட்டோம்ல:)முல்லை பெரியார் அணை ப்ரச்னை பத்தி தலைவரின் பரிந்துரையை கூட அங்க எடுத்து சொல்லிட்டு வந்தாச்சு, பார்த்து செய்றேன்னு சொல்லியிருக்காங்க:)

said...

Maams....enna idhu ippadi oru sentiment padhivu.....bayangara sentiya poyidichi...

said...

//நாம் நடந்ததை எழுதுகிறோம். அவன் நடக்க போவதை எழுதுகிறான்.//....super lines...


//எந்த மரத்தையும் அறுக்கும் அருகதை நமக்கு கிடையாதென்றெண்ணி சும்மா இருங்கள்.//...rite-o rite....idhu ellarukum puriyanum

said...

//புறாக்களில் மட்டுமல்ல இதயங்களிலும் அமைதியை///....idhu nadanthaale podhume....

//பரமபத ஏணிகளில் ஏறி, பாம்புகளில் தப்பித்து, வாழ்க்கை தாயத்தில் வாகை மலரது சூடி//....supervaazhthu maams...

said...

Ungalukum indha aandu ellam valagalayum koduka ennuduya vaazthukal....niraya santosangalayum, niraya vetrigalayu ungaluku alli vazhanga andha aandavanai vendikolgiren...

said...

//நல்ல சிந்தனை.எல்லோரிடமும் இதே சிந்தனை பரவ வேண்டுகிறேன்

நாம் நாமாய் இருப்போம்.. //

சரியாச் சொன்ன மணி.. மக்கள் சந்தோசமே எல்லோருக்கும் சந்தோசமே

said...

//மிக உயர்ந்த எண்ணங்களை உங்களுள் விதைத்து அறுவடை செய்து, நல்ல விதைகளால் எல்லார் மனத்திலும் நடவு செய்கிறீர்கள்.//

எல்லாம் உங்களை போல பெரியவங்க கிட்ட கத்துகிட்டது தான் மேடம்

said...

//நல்ல பதிவு கார்த்திக். நடந்தா நல்லாத்தான் இருக்கும்.//

நன்றி அருண்

said...

//Nalla sinthanai Karthik... neenga sollurathu yellam correct //

Thanks KK

said...

//ஒரு நிறைவான பதிவு//

ஆமாங்க அடியா.. நீங்க சொல்றது சரி.. ஒரு காலை கடந்த காலத்திலும் இன்னொரு காலை எதிர்காலத்திலும் வைத்து இன்றைய பொழுதை மறக்கிறோம்

said...

//என்ன தலைவரே, புது வருஷம் எப்படி போகுது?
கவிதை மாதிரி ஒரு போஸ்ட் எழுதி இருக்கிங்க. அருமையான எண்ணங்கள்.
மத்த போஸ்டெல்லாம் அப்புறம் படிக்கறேன். ok?

//

நல்லா போகுதுங்க அமைச்சரே.. உங்கள் சுற்றுலாவும் களப்பணியும் ஓய்வும் எப்படி இருந்ததுங்க பிரியா..

said...

//mothathil romba nalla ezudhi irukeenga..
//

Thanks kittu mama

said...

//தத்துவப் பதிவா இருக்கா.. புரிஞ்சிக்க கொஞ்ச நேரம் எடுத்துச்சு (ஹிஹி)//
ஏதோ திடீர்னு தோணுச்சு அரசி..அது தான்..

//நம்மால் இது முடியாதபோது இங்கே தான் recycling மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.//

கரெக்டா சொன்னீங்க அரசி

said...

//ada...pinnottam number ellam oru matter e இல்ல! //

athuvum correct than dreamzz

said...

//நான் இங்கே ஆறே வரிகளை குறீப்பிட்டிருந்தாலும், நீங்கள் எழுதிய ஒவ்வொன்றும் முத்துக்களே! இன்னும் நிறைய விஷயங்களை இதே போல் அழகாக எழுத என் வாழ்த்துக்கள் கார்த்திக்.//

பதிவை பற்றி நீங்க ஒரு சின்ன பதிவே போட்டுடீங்க மை பிரண்ட்.. நன்றி உங்க பாராட்டுக்களுக்கு மை பிரண்ட்

said...

//எல்லை தாண்டிப் போய் கேரளத்துலயும் நம்ம கட்சி கொடியை நாட்டிட்டோம்ல:)முல்லை பெரியார் அணை ப்ரச்னை பத்தி தலைவரின் பரிந்துரையை கூட அங்க எடுத்து சொல்லிட்டு வந்தாச்சு,//

சும்மாவா சொன்னோம்.. கொ.ப.சென்னு பட்டைய கிளப்புறீங்க..

said...

//Maams....enna idhu ippadi oru sentiment padhivu.....bayangara sentiya poyidichi...

//

mapla, senti ellaam illapa..thideernnu ennanamo thonuchchupa .. athu thaan..

said...

////நாம் நடந்ததை எழுதுகிறோம். அவன் நடக்க போவதை எழுதுகிறான்.//....super lines...//

Thanks da Mapla

//Ungalukum indha aandu ellam valagalayum koduka ennuduya vaazthukal....//

unakkumda Mapla

Anonymous said...

//நாம் நடந்ததை எழுதுகிறோம். அவன் நடக்க போவதை எழுதுகிறான்.//

yeppa yeppadi ippadi ellam! chancey illa! suuperu!

//பதவிகளை ஏற்கும் போதும் கொள்ளப்படும் பிரமாணங்களை போல வாழும் ஒவ்வொருவரும் ஒன்றை மனதில் இருத்தி கொள்ள வேண்டும்.//

aana solradhu easyngo seiradhu??? :)

aamanga indha siriya paruvathoda ninaivugala ninaichu paatha alugai alugaiya varum. Neratha mattum konjam "rewind" panna yevalo nalla irukkum. Nerya vishayatha innum konjam nalla senjirukka mudiyum!

said...

தலைவா வந்துட்டேன்....இனிமே ஆட்டத்த ஆரம்பிக்க வேண்டியது தான்...எப்படி போச்சு உங்க புது வருட கொண்டாட்டங்கள் :-)

said...

சூப்பரா இருந்ததுங்க நாட்டாமை..

வாஷிங்டன் ல புஷ் தந்த விருந்துல தான் நம்ம புது வருஷமே ஆரம்பம் :-)

உங்களுக்கு எப்படி இருந்தது..நீங்க எப்படி கொண்டாடினீங்க ஷ்யாம்

said...

//aana solradhu easyngo seiradhu??? //

athuvum sari than karthik..

deepaka ponathukkaaka kavalaipadathEppa :-)

said...

//
முல்லை பெரியார் அணை ப்ரச்னை பத்தி தலைவரின் பரிந்துரையை கூட அங்க எடுத்து சொல்லிட்டு வந்தாச்சு, பார்த்து செய்றேன்னு சொல்லியிருக்காங்க:)
//

தலைவர் இதப்பத்தி Bush கிட்டயே பேசிட்டாரு... Bush இந்தியா வர வேண்டியதுதான், கலைஞர சந்திக்க வேண்டியதுதான் பாக்கி...

இதுவல்லவோ அரசு..

தலைவர் வாழ்க !!
தலைவர் வாழ்க !!

said...

கார்த்திக்
அருமையான பதிவு,
ரசித்து படித்தேன்.

மனதை தொடும் வார்த்தைகள்
நல்ல சிந்தனைகள்
அருமையான உவமைகள்
கவிதை வரிகள்

மொத்தத்துல கலக்குறிங்க..கலக்கிட்டிங்க....

இவை எல்லாம் உங்களுக்கும் நாம் நண்பர்கள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டுகிறேன்.

வாழ்த்துக்கள்

said...

//இதுவல்லவோ அரசு..

தலைவர் வாழ்க !!
தலைவர் வாழ்க !!
//


அருண், உனக்கு ஒரு பெரிய அமைச்சர் போஸ்டே காத்திருக்கு இதுக்காக

said...

//மனதை தொடும் வார்த்தைகள்
நல்ல சிந்தனைகள்
அருமையான உவமைகள்
கவிதை வரிகள்

மொத்தத்துல கலக்குறிங்க..கலக்கிட்டிங்க....//

நன்றிங்க கோபி.. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கணும்னு நினைக்கிற அந்த எண்ணமே எல்லோருக்கும் எல்லாமே கிடைக்கும் எண்ணும் ஏற்பட்டுள்ளது..

Anonymous said...

//அருண், உனக்கு ஒரு பெரிய அமைச்சர் போஸ்டே காத்திருக்கு இதுக்காக //

அப்ப எனக்கு அந்த பெரிய அமைச்சர் போஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்??

Anonymous said...

//அருண், உனக்கு ஒரு பெரிய அமைச்சர் போஸ்டே காத்திருக்கு இதுக்காக //

அப்ப எனக்கு அந்த பெரிய அமைச்சர் போஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்??

said...

//அப்ப எனக்கு அந்த பெரிய அமைச்சர் போஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்?? //

உனக்கும் உண்டு அந்த பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய போஸ்ட் மணி

said...

பரவாயில்லை நியூ இயர்க்கு எழுதினது மை ப்ரெண்ட் புன்னியத்துல இயர் முடியறதுக்குள்ள படிச்சிட்ட்டேன்.