Wednesday, January 24, 2007

சிறுமலை பயணம் - கல்லூரி கால பயணத் தொடர் 1

எனது கல்லூரியில், முதுநிலையான எம்.சி.ஏ படிக்கும் போது இருந்த பிரிய நண்பர்களில் கிரிஷ்ணசாமியும் குமரனும் மிக முக்கியமானவர்கள். கிராமத்தில் இருந்து வந்திருந்த எனக்கு, பல விஷயங்கள் பட்டிக்காட்டான் மிட்டாய் கடை பார்ப்பது போல தான் இருக்கும். அதுவும் அப்போது என் ஊரில் இருந்து தினமும், கிட்டதட்ட ஐம்பத்தைந்து கிலோமீட்டர் வந்து செல்வதால், மனசு, போகும் ரயில்வண்டியின் கால அட்டவணை மேலேயே தான் கவனத்தோடு இருக்கும். அந்த இடைப்பட்ட நேரங்களில் கூட அரட்டைகள், ஆட்டங்கள், கடலை என தான் என் வாழ்க்கை அதிகம் கழிந்திருக்கிறது. இருந்தாலும் இந்த கணினி பற்றி அதிகம் சொல்லி, புதுப் புது விஷயங்கள் எல்லாம் எனக்கு புகட்டியவர்கள் அவர்கள் தான். எங்களுக்குள் அப்படியொரு சொல்லாத இணைப்பு இருந்திருக்கிறது.. இன்னமும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

செமஸ்டருக்கு முன்னால் படிக்க கிடைக்கும் அந்த இருபது நாட்கள் தான், நாங்கள் ஆறு மாசமாய் படிக்காமல் விட்டதை படிக்கும் நாட்கள். குமரனின் வீடு தான் நாங்கள் படிக்கும் இடம். விடிய விடிய படித்து விட்டு விடியற்காலையில் தான் தூங்குவோம். என்னமோ தெரியவில்லை, ஆந்தையை போலவே அந்த காலங்களில் இரவுகளில் தான் முழித்து கிடப்போம் படிப்பதற்காக. இன்னமும் கிரிஷ்ணாபுரம் காலனி பஸ்ஸ்டாண்டு அருகில் இருக்கும் ஹோட்டல் நட்சத்திராவின் முட்டை தோசையும், நன்றாக அடித்து செய்யப்பட்ட கொத்து புரோட்டாவையும் நாங்கள் மறக்க முடியாது. அதுவும் அந்த இரண்டு கரண்டிகளும் அந்த புரோட்டா கல்லின் மீது ஒற்றை கால்கலை தூக்கி போடும் ஆட்டங்களும் விடுகின்ற சத்தங்களும், பாக்காமலும் கேக்காமலும் இருந்ததில்லை.

ஒரு செமஸ்டர் விடுமுறையில், சிறுமலையில் இருக்கும் எனது பெரியப்பா தோட்டத்துக்கு செல்லலாம் என்று எனது நண்பர்களை அழைத்துகொண்டு கிளம்பினோம், நானும், எனது அண்ணன்கள் சிவாவும், குட்டியும், முருகனும். முருகன் எனது அப்பாவின் பங்காளி முறை. அதாவது எனக்கு சித்தப்பா முறை. ஆனால் எனக்கும் அவருக்கும் ஒரு மூன்று வயது தான் வித்தியாசங்கள். அதுவும் அவர் கொஞ்சம் குட்டையாக இருப்பதால் அவரது முருகன் என்ற பெயர் மறந்து பெரியண்ணன் என்ற பெயரே நிலைத்துவிட்டது. அது போல தான் குட்டி அண்ணனும். அவருக்கு சந்திரலால் என்ற பெயர் இருந்தாலும் அவரை குட்டியண்ணன் என்று தான் நாங்கள் அழைப்போம்.

கிராமத்தில் இப்படி முதற் பேர் மறந்து இட்ட பட்ட பெயரே நிலைத்துவிட்ட பலபேர் இருக்கின்றனர். அதுவும் ஒரு வீட்டில் ஆண்பிள்ளை பிறக்க வேண்டும் என்று நினைத்து பெண்பிள்ளையாய் பிறந்தால் கடைசியாக பிறந்த பெண்ணுக்கு போதும்பெண் என்று பெயர் வைப்பார்கள். அப்படி பெயர் வைத்தால் அடுத்து கட்டாயம் ஆண்பிள்ளை தான் பிறக்கும் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் அப்படியே தான் பெரும்பாலும் நடந்து விடுகிறது. எனக்கு தெரிந்தவரை அப்படித் தான் மூன்று நான்கு குடும்பங்களில் ஆண்பிள்ளை பிறந்திருக்கிறது. இது போன்ற நம்பிக்கைகள் அதிகமுண்டு கிராமங்களில்.

பெரும்பாலும் மலைகளில் செல்லும் பேருந்துகள் சின்னதாக தான் இருக்கும். அப்போதான் சுலபமாக வளைவுகளில் திருப்ப முடியும் என்று. அதுவும் இது போன்ற அதிகம் மக்கள் வந்து செல்லாத இடங்களுக்கு பாதையோ மிகவும் சிறியதாகத் தான் இருக்கும். அப்படிபட்ட சிறுமலைக்கு செல்லும் ஒரு சிறி பஸ்ஸில் ஏறி, கஷ்டப்பட்டு இடம் பிடித்து அமர்ந்தோம். இந்த பேருந்தில் தான் காலை வேலைகளில் பலாப்பழம் முதல் மாங்காய் வரை பலவகை பழங்கள் கொண்டு வருவார்கள். இதற்கு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் ஒரு மார்க்கெட்டே இருக்கிறது.

எங்கள் ஊரில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தான் நாங்கள் இருக்கும் இடம் இருக்கிறது. ஆனாலும் அந்த சற்றுக்கல் மலைபாதையில் போகவேண்டாம் என்று எனது பெற்றோர் சொல்லிவிட்டதால் தான் இந்த பேருந்து பயணம். இல்லையெனில் அந்த மலைப் பாதையிலே நடந்தே போய் விடலாம் என்பது தான் எங்களது திட்டம். ஒரு பேருந்தில் இத்தனை பேரைத்தான் ஏற்ற வேண்டும் என்ற ஒரு வரைமுறை இருக்கிறது. ஆனால் இது வரை, அப்படி எந்த பேருந்திலும் கணக்கு வைத்து ஏற்றியதாக நான் பார்த்ததில்லை. பத்து புத்தகங்கள் வைக்கப்படும் பள்ளிச் சிறுவனின் பையிலே இருபது புத்தகங்களை திணிப்பதை போல, அந்த பேருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பியது.

(பயணம் தொடரும்)

31 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Payangal endrum mudivadhillai .

Anonymous said...

Payanangal mudivathillai ;)

said...

அடுத்த பதிவு எப்போ ? இண்ட்ரஸ்டிங்கா இருக்கு...!!!!

Anonymous said...

நல்ல தொடர்.

தொடருங்கள்!

Anonymous said...

அருமையான பதிவு கார்த்தி! எனக்கு என்னோட பழைய நியாபகங்களை கொண்டு வருது!

Anonymous said...

//அதுவும் அவர் கொஞ்சம் குட்டையாக இருப்பதால் அவரது முருகன் என்ற பெயர் மறந்து பெரியண்ணன் என்ற பெயரே நிலைத்துவிட்டது. அது போல தான் குட்டி அண்ணனும். அவருக்கு சந்திரலால் என்ற பெயர் இருந்தாலும் அவரை குட்டியண்ணன் என்று தான் நாங்கள் அழைப்போம்.
//

ஆஹா! எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இப்ப! நீங்க சொல்ற விஷயம் எனக்கு தெரிஞ்சாப்புல இருக்கு! ஒரு கிராமம்.. குட்டி, பெரியண்ணா, போதும்பெண்.. என எல்லாம் அடங்கிய ஒரு இடத்தை நான் அறிவேன்!

Anonymous said...

நீங்க சொல்ற ஊரு பந்தநல்லூர் அல்லது பண்ருட்டி அல்லது மன்னார்க்குடி அல்லது கும்பகோனம் பக்கத்தில் இருக்கும் ஊரா????

Anonymous said...

ஆமான்னு சொன்னீங்கனா, என்னை உங்கள்ளுக்கு கண்ண்டிப்பா தெரிந்து இருக்கும் ... ஆஹா!

சரி.. இது மாதிரி நிறைய ஊரு இருக்கும் என நம்புவோம்!

Anonymous said...

//ஆந்தையை போலவே அந்த காலங்களில் இரவுகளில் தான் முழித்து கிடப்போம் படிப்பதற்காக. //

நாங்களும் முழித்துக்கிடப்போம்..ஆனா படிப்பைவிட பட்டறை தான் ஓடும் :))

நல்ல ஆரம்பம் கார்த்தி!

said...

wrote so many pathivu after that vellai mazhai pathivu. Your Sirumalai Travel is very nice. Continue it. Describe more about the malai and the surroundings.

Anonymous said...

Munnurai nanraaga ulladhu. Waiting for the rest

Cheers
SLN

Anonymous said...

Swarasyamana payanam.adhukulla cinema news pottuteenga.will come back to read your payanam.Read all your DC payanam.nice photos. have fun MK.

Anonymous said...

//ஆனாலும் அந்த சற்றுக்கல் மலைபாதையில் போகவேண்டாம் என்று எனது பெற்றோர் சொல்லிவிட்டதால் தான் இந்த பேருந்து பயணம்.//

அம்மா பேச்சு கேக்குற புள்ளையா? வெரி குட்... வெரி குட்...

நல்லா போகுது கார்த்தி... எல்லாரும் சொன்ன மாதிரி

பயணங்கள் முடியாமல்
மனதில் பயணிக்கிறது...

said...

//
பத்து புத்தகங்கள் வைக்கப்படும் பள்ளிச் சிறுவனின் பையிலே இருபது புத்தகங்களை திணிப்பதை போல, அந்த பேருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பியது.
//
சஸ்பென்ஸா? கலக்குங்க... வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் போஸ்ட் :)

said...

போதும்பெண்?
இப்பிடி நான் கேள்விப்பட்டதே இல்லை.

said...

அடுத்த தொடருக்கு வரவேற்பு!

//ஆண்பிள்ளை பிறக்க வேண்டும் என்று நினைத்து பெண்பிள்ளையாய் பிறந்தால் கடைசியாக பிறந்த பெண்ணுக்கு போதும்பெண் என்று பெயர் வைப்பார்கள். அப்படி பெயர் வைத்தால் அடுத்து கட்டாயம் ஆண்பிள்ளை தான் பிறக்கும் என்று ஒரு நம்பிக்கை.//

எங்க ஊர்ப் பக்கம், நிறைய குழந்தைகள் பிறந்துக்கிட்டேஏஏஏ இருந்தா ஒரு ஸ்டேஜுக்கு(!) மேல என்ன பண்றதுன்னு தெரியாம(:-D) மங்களம் அப்படின்னு பேர் வைப்பாங்க. அதோட குழந்தை பிறக்கிறது நின்னுடும்னு ஒரு நம்பிக்கைல தான்!! ரொம்ப வருசம் முன்னாடி அப்படி ஒரு குடும்பத்தில் நடந்தது எனக்குத் தெரியும்.

said...

//Payangal endrum mudivadhillai . //

ஆமாண்டா மது!!!

said...

/Payanangal mudivathillai ;)

//

Correct Haniff!!!

said...

//அடுத்த பதிவு எப்போ ? இண்ட்ரஸ்டிங்கா இருக்கு...!!!! //

அடுத்த பதிவு வந்துகிட்டே இருக்குங்க ரவி!!

said...

//நல்ல தொடர்.

தொடருங்கள்!//

நன்றி திரு

said...

//அருமையான பதிவு கார்த்தி! எனக்கு என்னோட பழைய நியாபகங்களை கொண்டு வருது//

பழையதாய் உடம்பில் இருக்கும் ஒரு சின்ன காயம் கூட பத்து பக்கம் எழுதும் அளவுக்கு கதை கொண்டது, ட்ரீம்ஸ்

said...

//நீங்க சொல்ற ஊரு பந்தநல்லூர் அல்லது பண்ருட்டி அல்லது மன்னார்க்குடி அல்லது கும்பகோனம் பக்கத்தில் இருக்கும் ஊரா???? //

ட்ரீம்ஸ், இந்த கதை எல்லா ஒர்ரிலும் இருக்கும் போல தெரிகிறது.. இது என் ஊரான அ.வெள்ளோடு. திண்டுக்கலுக்கு மிக அருகில் இருக்கிறது, சிறுமலை காற்றில் வாழ்ந்துகொண்டு

said...

//ஆமான்னு சொன்னீங்கனா, என்னை உங்கள்ளுக்கு கண்ண்டிப்பா தெரிந்து இருக்கும் ... ஆஹா!

சரி.. இது மாதிரி நிறைய ஊரு இருக்கும் என நம்புவோம்! //

ஆமாங்க ட்ரீம்ஸ், இது போல அதிக ஊர்கள் இருக்கிறது போலும். ஆனாலும் நீங்கள் சொல்லும் ஊர்களுக்கும் என் ஊருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை, என் ஊர்காரர்களும் அந்தபக்கமிருந்து வந்தவர்கள் தான்.. மற்றும் ஒரே பழக்க வழக்கம் மற்றும் ஜாதியை சார்ந்தவர்கள் என்பதால் இது போன்ற சாத்தியக் கூறுகள் இருக்கலாம்

said...

//நாங்களும் முழித்துக்கிடப்போம்..ஆனா படிப்பைவிட பட்டறை தான் ஓடும் :))

நல்ல ஆரம்பம் கார்த்தி!
//

நாங்களும் அப்படித் தான் கப்பி பயலே.. அரட்டை தான் முதல்ல

said...

/wrote so many pathivu after that vellai mazhai pathivu. Your Sirumalai Travel is very nice. Continue it. Describe more about the malai and the surroundings.

//

இடையில் கொஞ்சம் தொய்வு வந்ததாய் உணர்வு.. அது தான் பழைய வேகம் மேடம்

said...

//Munnurai nanraaga ulladhu. Waiting for the rest
//

On the way, SLN

said...

//Swarasyamana payanam.adhukulla cinema news pottuteenga.will come back to read your payanam.Read all your DC payanam.nice photos. have fun MK.

//

நன்றிங்க SKM

said...

//அம்மா பேச்சு கேக்குற புள்ளையா? வெரி குட்... வெரி குட்...

நல்லா போகுது கார்த்தி... எல்லாரும் சொன்ன மாதிரி //

ஹிஹி.. ஆமாங்க ஜி..

எல்லோரும் சொல்வதை போல நமது பயணங்கள் எப்போதும் முடிவதில்லை.

said...

//சஸ்பென்ஸா? கலக்குங்க... வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் போஸ்ட்//

வந்துகினே இருக்குப்பா அருண்

said...

//போதும்பெண்?
இப்பிடி நான் கேள்விப்பட்டதே இல்லை. //

இப்படி நிறைய விஷயங்கள், பழக்க வழக்கங்கள் ஒவ்வொரு ஊருக்குள்ளும் உறங்கி கிடக்கு அருண்

said...

//எங்க ஊர்ப் பக்கம், நிறைய குழந்தைகள் பிறந்துக்கிட்டேஏஏஏ இருந்தா ஒரு ஸ்டேஜுக்கு(!) மேல என்ன பண்றதுன்னு தெரியாம(:-D) மங்களம் அப்படின்னு பேர் வைப்பாங்க. அதோட குழந்தை பிறக்கிறது நின்னுடும்னு ஒரு நம்பிக்கைல தான்!! ரொம்ப வருசம் முன்னாடி அப்படி ஒரு குடும்பத்தில் நடந்தது எனக்குத் தெரியும்.//

இது நமக்கு புது விஷயம்ங்க அரசி