கனவே கலையாதே...
இரண்டு மூன்று நாட்களாக சரியான அலுப்பு.. வீட்டிற்கு வந்தால் தலையணை தேடி, படிக்கச் சொல்லுது மனசு.. அந்த அளவுக்கு அலுப்பாக இருக்கிறது.. எல்லோருடைய பதிவுகளுக்கும் செல்ல முடியாமலும் இருக்கிறேன்..
நண்பர்களே, பொறுத்தருங்கள்.
போன வாரமெல்லாம் இரவு 1 மணி வரை முழித்திக் கிடந்தேன்.. இந்த வாரம் 10 மணிகெல்லாம் கண்கள் சொருகுகின்றன.. எனக்கு வருகின்ற கனவுகள் பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியும். நேற்று காலை ஒரு ஐந்து மணி அளவில், பயங்கரமான ஒரு கெட்ட கனவு. அதற்கு பிறகு தூங்கவே முடியாத ஒரு கொடூர கனவு.
என் ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு காலி இடத்தில் ஒதுங்க முடியா கூட்டம். என்னவென்று பார்த்தால் வரிசையாக பூமியில் இருந்து பிணங்கள் தோண்டி எடுக்கப் படுகின்றன.. அவை எல்லாம் எனக்கு தெரிந்த ஏதோ சில முகங்கள்.. அதன் பிறகு தூங்கவே பிடிக்கவில்லை.. என் அறையின் ஜன்னலுக்கு வெளியே காற்றில் இரண்டு மனைதர்கள் காலில்லாமல் நடப்பது போல ஒரு பிம்ப உணர்வு.
எப்பவோ பார்த்த, நினைத்த சங்கதிகள் தான் ஆழ்மனசில் இருந்து ஒரு நாள் கனவுகளாக வரும் என்று சொல்வார்கள்.. எப்படி இந்த கனவு வந்தது என்று யோசித்துப் பார்த்ததில், முன்னுக்கு முந்திகொண்டு வந்தது கமலின் வேட்டையாடு விளையாடு திரைப்படம். அதில் வரிசையாக பிணங்களை தோண்டி எடுப்பார்களே, அது தான் நினைவுக்கு வந்தது. அந்த படம் பார்த்துவிட்டு வந்த பின், கிட்டதட்ட இரண்டு நாட்களுக்கு அந்த பாதிப்பு இருந்தது.. அதில் காட்டப்பட்ட கொலைகளும், அதை செய்த விதமும் அந்த அளவுக்கு மனதை பாதித்தது. அது இப்போதுதான் மனதில் இருந்து வடிந்து ஓடியிருக்கிறது போலும்..
அதே போல், இன்று காலை ஒரு கனவு. முற்றிலும் மாறானா கனவு. நான் ஒரு திரைப்படத்தின் அறிமுகப்பாடலில் நடிக்கிறேன்.. இரு கைகளையும் மேலே தூக்கி ஆடுகிறேன் பாடுகிறேன்.. மழை பெய்கிறது.. வானம் நோக்கி கைகளை உயர்த்தி ஏதோ பாடுகிறேன்.. கேமரா வேறு என்னை புதுப்புது கோணங்களில் என்னை பதிவு செய்கிறது.. நான் உயரப் பறக்கிறேன்.. கீழே என் பாட்டியும், தங்கை மற்றும் தங்கையின் தோழி கூட சேர்ந்து ஆடுகிறார்கள்.. இந்த கனவு வந்ததால் என் கண்களை திறக்காமல் தூங்கியதில், அலுவலகத்துக்கு இன்று கொஞ்சம் தாமதமாகத் தான் சென்றேன்.
இந்த கனவு எப்படி வந்தது.. ஏன் வந்தது.. இன்று முழுவதும் மனசில் சொல்ல முடியாத ஒரு சந்தோசம்.. ஏனிப்படி? என்னுள் சின்ன வயசுல இருந்து இருக்கும் சினிமா ஆசைகளா.. தெரியவில்லை. ஆனால் இன்றைய பொழுது நன்றாகவே போனது..
சில சமயங்களில் வாழ்க்கையில் நடக்காத பல விஷயங்கள் இப்படி கனவிலே நடந்து மனசை சாந்தப்படுத்துகின்றன.
என் கனவுகளுக்கு நன்றி.. அது தான் என் கற்பனையையும் திறன்களையும் வளர்த்து விடுகிறது என்பது என்னுள் விதைக்கப்பட்ட ஒன்று.
எனது ஏனைய கனவுகள்
30 பின்னூட்டங்கள்:
மு.கார்த்திகேயன்,
நல்ல பதிவு. அதுசரி, அமெரிக்காவில் நீங்கள் தனியாக வசிக்கிறீர்களா? சில வேளைகளில் தனிமைதான் காரணமோ?!
சரி, கனவு பற்றித் திருமுருக கிருபானந்த வாரியார் சொன்ன சில தகவல்கள்:
"நமக்கு விழிப்பு நிலை, கனவு நிலை, உறக்க நிலை என்று மூன்று நிலைகள் உண்டு.
கனவு என்பது மிகவும் சிந்தனைக்கு உரிய ஒன்று. கனா சாஸ்திரம் என்று வியாழ பகவான் எழுதியிருக்கிறார். கனாவதிகாரம் என்று பாம்பன் அடிகளாரும் எழுதியிருக்கிறார்கள்.
கனவிலே மூன்று வகை உண்டு. ஒன்று, பகலிலே கண்டவை விட்டும் தொட்டும் வரும். ஒன்று, பித்த மயக்கத்தில் வருவது. ஒன்று, எதிர்காலத்தில் விளையக்கூடிய நிகழ்ச்சிகளை விளக்குவது."
சரி, கார்த்திகேயன், நீங்கள் கண்ட கனவு எந்த வகை?
kanava pathi pesinaale ennaku kalavaram dhaan :(
unga kavanu maadhiri santhosamana kanavu vandha maadhriri ennaku no history, no geography :)
//பூமியில் இருந்து பிணங்கள் தோண்டி எடுக்கப் படுகின்றன.. அவை எல்லாம் எனக்கு தெரிந்த ஏதோ சில முகங்கள்.. //
inna karthik indha madhri bayangaramana kanavu varudhu ungalukku! :(
//இன்று காலை ஒரு கனவு. முற்றிலும் மாறானா கனவு. நான் ஒரு திரைப்படத்தின் அறிமுகப்பாடலில் நடிக்கிறேன்//
dho da! :P
அந்த தோண்டி எடுக்கற கனவு பயங்கரம். அதுக்கு தான் சினிமாலாம் ரொம்ப involve ஆகி பாக்க கூடாது.
//எப்பவோ பார்த்த, நினைத்த சங்கதிகள் தான் ஆழ்மனசில் இருந்து ஒரு நாள் கனவுகளாக வரும் என்று சொல்வார்கள்.. //
அது மட்டும் இல்ல, இது வரைக்கும் நிறைவேறாத நம்ம ஆசைகளும் தான் கனவா வரும். அது தான் உங்க அடுத்த கனவு :)
//கீழே என் பாட்டியும், தங்கை மற்றும் தங்கையின் தோழி கூட சேர்ந்து ஆடுகிறார்கள்.//
அது என்ன தங்கையின் தோழி??
first a?
கனவு பத்தி அழகா எழுதி இருக்கீங்க!
/என் அறையின் ஜன்னலுக்கு வெளியே காற்றில் இரண்டு மனைதர்கள் காலில்லாமல் நடப்பது போல ஒரு பிம்ப உணர்வு.
//
அடுத்து UFO வராம இருந்தா சரி! ;)
//இந்த கனவு எப்படி வந்தது.. ஏன் வந்தது.. இன்று முழுவதும் மனசில் சொல்ல முடியாத ஒரு சந்தோசம்.. ஏனிப்படி? என்னுள் சின்ன வயசுல இருந்து இருக்கும் சினிமா ஆசைகளா.. தெரியவில்லை. ஆனால் இன்றைய பொழுது நன்றாகவே போனது..
//
ம்ம்ம்.... எது அப்படியோ... கனவு எதுக்கு ஏன் என்று தெரியலை னாலும், நல்லா இருக்கு!! சில சமயம்!
//இரு கைகளையும் மேலே தூக்கி ஆடுகிறேன் பாடுகிறேன்.. மழை பெய்கிறது.. வானம் நோக்கி கைகளை உயர்த்தி ஏதோ பாடுகிறேன்.. கேமரா வேறு என்னை புதுப்புது கோணங்களில் என்னை பதிவு செய்கிறது//
chancey illanga...nijama oru mgr rangeku irukku neenga solradha nan karpanai panni parkrachave...
nsoy than pola with kanavuuu...pannunga pannunga nalla velai panitu kuraindhadhu 8 hours marakama thoongidunga..
take care of ur health too mu.ka sir.
ம்ம்ம் உங்கள் முதல் பகுதி எனக்கும் வருகிறது .. :(
இரண்டாம் பகுதி ஹி ஹி ஹி .. ஆசினா உங்கள் தங்கை friend :)
Dance நல்லா இருக்கு ..
VV padam paathadukke ungalukku ippidi kanavu varudaa? Citizen padam paathurunda? venaam paakaadinga !!!
2nd kanavu super.. naan kekka nenacha kelviya already priya kettutaanga? adhu enna sisteroda friend? ;)
அண்ணா தூங்குறதுக்கு முன்னாடி சாமியை கும்பிட்டு, திருநீறு இட்டுட்டு தூங்குங்க. தூங்குறதுக்கு 10 நிமிஷம் முன்னால பால் - வெது வெதுப்பா குடிங்க, நல்லா தூக்கம் வரும்.கனவு ஏதும் வந்து தொந்தரவு தராது.
Dear Karthi,
Ungalin padhivai ippodhu dhan mudhal mudhalaga parka vandhen.
Idhu dhan KARTHIKIN KANAVULAGAMA? He He He....
Cinema padalin peyar - andha padathin paadalil varuvadhu pol,
Unga blog in peyar - padhivil vandhacha?
Unga kanavai padithal,enaku thoniya ennam - Vijaykanth - ungaloda inspired Actoro?
With Love,
Usha Sankar.
VV padam paarthu naanum konja naal paadipudanum tensionudan dhaan irundhaen..padathai paarthu alla..collection varaamal poi vidumo enru :-) yes, andha padathai new jersiyil distribute pannavan adiyaenae.
hero va ellam kanava..asathunga maams. aayirathil naan oruvan iruvar paatu dhaan ninaivukku varugiradhu. adhu sari , neenga dhaan en oru paatayum kaetadhu illayae :-(
//சரி, கார்த்திகேயன், நீங்கள் கண்ட கனவு எந்த வகை? //
வெற்றி, தெரியாத பல விஷயங்கள் சொல்லி, வாரியர் விளக்கமும் தந்திருக்கிறீர்கள்.. நன்றிங்க..
எனது கனவுகள் இந்த மூன்று வகையிலும் இல்லையோ என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
/unga kavanu maadhiri santhosamana kanavu vandha maadhriri ennaku no history, no geography //
மாப்ள, எனக்கு கனவு இல்லாம தூக்கமே இருந்ததில்லைபா
/inna karthik indha madhri bayangaramana kanavu varudhu ungalukku//
ஏன்னு தெரிலியேப்பா.. கார்த்தி..
//அந்த தோண்டி எடுக்கற கனவு பயங்கரம். அதுக்கு தான் சினிமாலாம் ரொம்ப involve ஆகி பாக்க கூடாது//
பழக்கமாயிடுச்சுங்க ப்ரியா
/இது வரைக்கும் நிறைவேறாத நம்ம ஆசைகளும் தான் கனவா வரும். அது தான் உங்க அடுத்த கனவு//
பல தடவை இப்படி நடந்திருக்குங்க
//அது என்ன தங்கையின் தோழி?? //
தங்கை கூட வந்ததால தங்கையின் தோழின்னு நினச்சேன் ப்ரியா
//கனவு பத்தி அழகா எழுதி இருக்கீங்க!
//
நன்றிங்க ட்ரீம்ஸ்
//அடுத்து UFO வராம இருந்தா சரி//
ஓ.. ரொம்ப பயமுறுத்தாதீங்க ட்ரீம்ஸ்
/ம்ம்ம்.... எது அப்படியோ... கனவு எதுக்கு ஏன் என்று தெரியலை னாலும், நல்லா இருக்கு!! சில சமயம்!
//
இது உண்மைங்க ட்ரீம்ஸ்
/chancey illanga...nijama oru mgr rangeku irukku neenga solradha nan karpanai panni parkrachave...
//
ஒரு வேளை ரெண்டு வாரத்திற்கு முன்னாடி பார்த்த நாடோடி மன்னனா.. இல்லை இருவர் பட பாடலா.. தெரியவில்லை ரம்யா
//ake care of ur health too mu.ka sir.
//
Thanks Ramya
//இரண்டாம் பகுதி ஹி ஹி ஹி .. ஆசினா உங்கள் தங்கை friend //
அப்படி இருந்தா சந்தோச்ம் தான் அடியா
/2nd kanavu super.. naan kekka nenacha kelviya already priya kettutaanga? adhu enna sisteroda friend?//
எல்லோருக்கும் இப்படி ஒரு சந்தேகமா, மக்களே
/அண்ணா தூங்குறதுக்கு முன்னாடி சாமியை கும்பிட்டு, திருநீறு இட்டுட்டு தூங்குங்க. தூங்குறதுக்கு 10 நிமிஷம் முன்னால பால் - வெது வெதுப்பா குடிங்க, நல்லா தூக்கம் வரும்.கனவு ஏதும் வந்து தொந்தரவு தராது.
//
எல்லாம் பண்ணிட்டேன் தங்கச்சி.. ஒண்ணும் என் கனவுகளை தடுக்கல..
/கனவு சரி,பாட்டி சரி, தங்கை சரி, அதென்ன தங்கையோட தோழி?:) தலைவா என்ன இது, சொல்லவேயில்லை//
கொ.ப.செ உங்களுக்கும் இப்படி ஒரு சந்தேகமா.. சரியா போச்சு போங்க
//Unga kanavai padithal,enaku thoniya ennam - Vijaykanth - ungaloda inspired Actoro?
//
தங்களின் கருத்துகளுக்கு நன்றிங்க உஷா சங்கர்.
விஜயகாந்தா. அய்யோ.. நமக்கு ஆகாத நடிகருங்கோ அவர்
/VV padam paarthu naanum konja naal paadipudanum tensionudan dhaan irundhaen..padathai paarthu alla..collection varaamal poi vidumo enru :-) yes, andha padathai new jersiyil distribute pannavan adiyaenae.
//
கிட்டு, இவ்வளவு பெரிய ஆளா நீங்க..
உங்க பாட்டுக்களை கட்டாயம் கேக்குறேங்க மாம்ஸ்
ம்ம்ம்ம்ம், படம் மட்டும் இல்லை, நெட்டில் நோய்டா பத்தியும் செய்தித் தொகுப்புப் பார்த்துப் படிச்சிருப்பீங்க, அதான், தனியா இருக்காதீங்க, துணையுடன் இருங்க. என்ன நான் சொல்றது? வாழ்க்கைத் துணையுடன்.
Post a Comment