Tuesday, January 09, 2007

பளபளக்கும் பழைய மஹாபலிபுர சாலை - படங்களுடன்

அய்யோ.. பக்கத்து வீடு பார்வதிக்கு திடீர்னு இடுப்புவலி வந்திடுச்சே.. பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போகணும்..ஒரு ஆட்டோ புடிங்கப்பா என்று கத்தியவாறே வந்தாள் சரோஜா.. அப்படி அவசர அவசரமாக நாவலூரில் இருந்து ஆட்டோ பிடித்து ராயப்பேட்டை போவதற்குள் ஆட்டோகுள்ளேயே குழந்தை பிறந்து விடும்.. ஒரு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன், பழைய மஹாபலிபுரம் சாலையில் மருத்துவமனை சென்ற பல கர்ப்பிணி பெண்களின் நிலைமை இது தான். அதற்கு பிறகு மழைகாலத்து புற்றீசல் போல கணினி நிறுவனங்கள் வந்த பிறகு அதற்கு செல்லும் ஒவ்வொரு நிறுவன பேருந்துகளில் பயணித்தே முதுகெலும்பு வளைந்து போனது எத்தனையே மக்களுக்கு.. ஆனால் அவர்கள் கனவெல்லாம் நனவாக போகிறது. மத்திய கைலாசத்தில் ஏறினால் எவ்வித பிரச்சனையும் இன்றி நாவலூர் போகலாம்..

டைடல் பார்க்கின் புதிய முகப்பு



இனிமேல் அவர்கள் முதுகெலும்பெல்லாம் அப்பாடா..என்று பெருமூச்சு விட்டுக்கொள்ளும்.. ஆமாம்.. பளபளக்கும் ரோடுகள்.. இருபுறமும் கண்ணை கவரும் கருதுச் செறிந்த, பார்த்தால் மனதை இறகு போல் லேசாக்கும் வகையிலான விஷயங்கள்.. சிலை உருவாக்கங்கள்.. சுவற்றுசித்திரங்கள் என்று பக்காவா ஒரு நவீன சாலை உருவாகி வருகிறது..

அழகிய பேருந்து நிறுத்தம்




முதலில் இந்த சாலை போட ஆரம்பிக்கும் போது..அட போடவைப்பது போல மாதிரி படங்கள் வைத்திருப்பார்கள்.. ஆச்சரியமாய் இருக்கும்.. இப்படி எல்லாம் இருக்குமா என்று அதிசயப்பட்டதுண்டு.. ஆனால் இன்று அங்குள்ள பேருந்து நிறுத்தங்களை காணுகையில்..எல்லாம் நனவாகும் தூரம் எட்டும் பக்கத்தில் தான் இருக்கிறது. அதிலும் இந்த மாதிரி சிலை மற்றும் கலை வடிவங்கள் எல்லாம், எப்படி இப்படி எல்லாம் என்று கண்களை அகல வைக்கிறது.

சாலையின் பக்கவாட்டுகளில் நடனமாடும் சிலைகள்




வருக.. எங்கள் புதிய கனவுச் சாலையே.. அதிலே பயணிக்கபோறவன் என்ற வகையில் அதனை வரவேற்க கையில் மாலையுடன் முதல் வரிசையில் நிற்கிறேன்.. ஆனால் இவ்வளவு அருமையான சாலையை தந்த பின், அதை ஒழுங்காக பராமரிப்பார்களா என்ற எண்ணம் கொஞ்சம் மனதை அழுத்தவே செய்கிறது.. ரோடு போட அரசாங்கத்தை நாம் எப்படி வற்புறுத்துகிறோமோ அவ்வாறே அதை பரமரிக்கவும் பாதுகாக்கவும் நாம் முயல வேண்டும்.. அரசுக்கு உதவ வேண்டும்.. சும்மா சிகரெட் துண்டுகளையும், தின்பண்ட பெட்டி மற்றும் காகிதங்களையும் சாலையிலே விட்டெறிந்து செல்வதை தவிர்க்க வேண்டும். அந்த சாலையின் ஒரு அடி உங்களுக்கு சொந்தம் என்று நினையுங்கள். அமெரிக்கா போன்ற அயல்நாடுகளுக்கு சென்றால் மட்டும் சலையிலே குப்பை போடாமல் தவிர்க்கும் நீங்கள், சரியான வேகத்தில் வண்டியை ஓட்டும் நீங்கள், இந்தியா போனவுடன் 'பழைய குருடி கதவை திறடி' என்று மாறும் மாற்றத்தை ஒழியுங்கள்..

சாலையோர சுவர் ஓவியங்கள்


நாட்டை காப்போம்.. சாலையை காப்போம்.. எல்லாவித சக்திகளை சரியாக உபயோகிப்போம்.. என்று எதிர்காலத்தை நினைத்து வாழுங்கள்.. இல்லையெனில் அடுத்து வரும் எதிர்கால சந்ததியினர், நமது பேரக்குழந்தைகள் தான் அல்லாடுவார்கள்.


படங்கள் அனைத்தும் சென்னையை காதலிக்கும் அவியுக்தா கீர்த்திவாசனின் பொக்கிஷத்திலிருந்து... நன்றி கீர்த்தி

இது அவர் உருவாக்கிய அடையாளம்

63 பின்னூட்டங்கள்:

Anonymous said...

first-aa?

said...

//ஆனால் இவ்வளவு அருமையான சாலையை தந்த பின், அதை ஒழுங்காக பராமரிப்பார்களா என்ற எண்ணம் கொஞ்சம் மனதை அழுத்தவே செய்கிறது.//

கார்த்தி கவலையே படாதீங்க. கண்டிப்பா இந்த ரோடு இதே போல் பல ஆண்டுகளுக்கு ஒழுங்காக பராமரிக்கப்படும்.
அமெரிக்க, ஐரோப்பாவில் இருந்து வரும் முதலாளிகள் பயணிக்க வேண்டுமே. அதற்காக கண்டிப்பாக பராமரிக்கப்படும்.

கொஞ்சம் left, right திரும்பி local roads ஐ பாருங்கள். தலை கீழ் நிலமை மற்ற சாலைகளில்.
தோண்டியதை மூடாமல், மூடியதை முழுவதும் மூடாமல் ஏனோ-தானோ வேலை செய்திருப்பது தெரியும்.

சரி ஆயிடும், ஸ்லோவா.

Anonymous said...

இந்த ரோடுகளை பார்க்கும்போது எங்க நாட்டு ஞாபகம்தான் வருது. இங்குள்ள ரோடுகள் / பேருந்து நிறுத்தங்கள் போலவே இருக்கு.

இந்தியாவிலும் இப்படி இருப்பது மகிழ்ச்சி. நீங்க சொனன்துபோல், இது தொடரனும்ன்னா, இதை பாதுக்காகவேண்டியது மக்கள்தான்..

Anonymous said...

இந்த ரோடுகளை பார்க்கும்போது எங்க நாட்டு ஞாபகம்தான் வருது. இங்குள்ள ரோடுகள் / பேருந்து நிறுத்தங்கள் போலவே இருக்கு.

இந்தியாவிலும் இப்படி இருப்பது மகிழ்ச்சி. நீங்க சொனன்துபோல், இது தொடரனும்ன்னா, இதை பாதுக்காகவேண்டியது மக்கள்தான்..

Anonymous said...

This is till Tidel Park, Show some photos beyond Tidel Park (like Thuraipakkam, Sholinganallur etc). The project is being dragged for years!!

said...

//ரோடு போட அரசாங்கத்தை நாம் எப்படி வற்புறுத்துகிறோமோ அவ்வாறே அதை பரமரிக்கவும் பாதுகாக்கவும் நாம் முயல வேண்டும்.. அரசுக்கு உதவ வேண்டும்.. சும்மா சிகரெட் துண்டுகளையும், தின்பண்ட பெட்டி மற்றும் காகிதங்களையும் சாலையிலே விட்டெறிந்து செல்வதை தவிர்க்க வேண்டும். அந்த சாலையின் ஒரு அடி உங்களுக்கு சொந்தம் என்று நினையுங்கள்.//

உங்களுக்கு ஒரு ஓ!!!!

said...

wow.. looking forward for the new infrastructure!

Anonymous said...

Hi Karthi

Only a small part of the road is fully ready yet (Madhya Kailash to SRP tools) and not upto Navalur. Even this is already well behind schedule.

Ungal kanavu meyppada, maadhangal / varudangal aagum :(

Cheers
SLN

said...

Indha road ellam madhya kailash to tidel varaikum dhaan potu irukaanga....adhu poduradhuke kitta titta 4 yrs edukitaanga.....idhula fulla podumbothu neenga iruka mateenga..unga perandhaan irupan

said...

tidel park-ku appuram ulla road-la poravangaluku innum adhe nelamadhaan....adhuvum mazhai peidhaal..kundu kuzhi ellam enga irukune theriyala.....andga ula man hole-a vizhundu palla udachikirana niraya peru.......dentist selavu micham....

said...

indha arasiyal vaadhinga panra thamashla indha maadhiri oru chinna visayathukooda naama perusa santhosa pathuka vendiyadhu.......

ada arasaangam dhaan ippadine...namma makka adhukulla andha bust stop pakkathula echi thuppi vachitaanga...

said...

ippa echi thupparadhuku edhuku pudhu salai ellam....pazhaya maadhiri irundha kooda manna potu moditu poyite irukalam.....

Anonymous said...

Thagaval thantatarku mikka nanri karhik ;)

said...

மத்திய கைலாஷைத் தாண்டி அந்தப்பக்கம் எப்போதாவதுதான் போவொம்.
இளைய தலைமுறைக்குக் கிடைத்த இன்பப் பயணம் எல்லாப்பாதையிலும் தொடரட்டும்.
நன்றி கார்த்திகேயன்.
கீர்த்திவாசன் பதிவுக்கும் போகிறேன்.

Anonymous said...

Aaaha..Nice pics :) and nice post :)
Gud 2 c ppl noticing al thse minute things in life :)

Anonymous said...

/
நாட்டை காப்போம்.. சாலையை காப்போம்.. எல்லாவித சக்திகளை சரியாக உபயோகிப்போம்.. என்று எதிர்காலத்தை நினைத்து வாழுங்கள்.. //

அடடா... நல்ல கருத்துள்ள postஆ இருக்கு!!

Anonymous said...

//இனிமேல் அவர்கள் முதுகெலும்பெல்லாம் அப்பாடா..என்று பெருமூச்சு விட்டுக்கொள்ளும்..//

இது கொஞசம் late...நான் இருக்கும் மொதே பண்ணி இருக்கலாம்.. சரி எதோ இப்போவவது பண்ணாங்களே!

Anonymous said...

//அந்த சாலையின் ஒரு அடி உங்களுக்கு சொந்தம் என்று நினையுங்கள். அமெரிக்கா போன்ற அயல்நாடுகளுக்கு சென்றால் மட்டும் சலையிலே குப்பை போடாமல் தவிர்க்கும் நீங்கள், சரியான வேகத்தில் வண்டியை ஓட்டும் நீங்கள், இந்தியா போனவுடன் 'பழைய குருடி கதவை திறடி' என்று மாறும் மாற்றத்தை ஒழியுங்கள்//

நல்லா சொன்னீங்க! முதல்ல மாற்ற்ம் நம்ம கிட்ட இருந்து ஆரம்பிக்கனும்!

said...

I agree with bharani...summa oru 4 or 5 KM ku indha maathiri super road potutu...matha roads ellam innum palaya nilamaila irukarathu bad...

said...

and I agree with you too...naamum govt ku help pannanum...enna thaan govt muyarchi senjaalum pothu janathu kitta irundhu help illana ellam waste aaidum :-)

Anonymous said...

yeay.. innaikku Naanthaan first.. appappa.. unGkala mathiri busy blogger sitela muthal comments podurathe oru pathivu ezhuthurathukku samam.. :-D

Anonymous said...

hmmmm me put up in tidel dhaan...all these grandeur are jus near to those it parks....adhukkapparam kuzhikku nadula lighta,konjama road irukkum avalo dhaan... :))

said...

//இவ்வளவு அருமையான சாலையை தந்த பின், அதை ஒழுங்காக பராமரிப்பார்களா என்ற எண்ணம் கொஞ்சம் மனதை அழுத்தவே செய்கிறது.. //
படிக்கும் போது எனக்கும் இது தான் தோணிச்சு.

//Indha road ellam madhya kailash to tidel varaikum dhaan potu irukaanga....adhu poduradhuke kitta titta 4 yrs edukitaanga.....idhula fulla podumbothu neenga iruka mateenga..unga perandhaan irupan //
LOL.. சரியா சொன்னிங்க பரணி.

இந்த மாதிரி ஒரு 100 அடிக்கு மட்டும் போட்டுட்டு, பந்தா பண்ணிக்கறதுல ஒண்ணும் use இல்ல.

Anonymous said...

inga ulla makkalla yaaru tidel pakkam porathu?

said...

//
நாட்டை காப்போம்.. சாலையை காப்போம்.. எல்லாவித சக்திகளை சரியாக உபயோகிப்போம்.. என்று எதிர்காலத்தை நினைத்து வாழுங்கள்
//
best karthik bestu

said...

//first-aa?//


முதலிடம் வந்திருக்கும் மை பிரண்டுக்கு, வான் வழியா வான்கோழி பிரியாணி அனுப்பி வைக்கிறேன்..

ஆமா..நீங்க அசைவம் தானே மை பிரண்ட்

said...

//கார்த்தி கவலையே படாதீங்க. கண்டிப்பா இந்த ரோடு இதே போல் பல ஆண்டுகளுக்கு ஒழுங்காக பராமரிக்கப்படும்.
அமெரிக்க, ஐரோப்பாவில் இருந்து வரும் முதலாளிகள் பயணிக்க வேண்டுமே. அதற்காக கண்டிப்பாக பராமரிக்கப்படும்.//

இந்த சாலை இவ்வளவு சிறப்பாய் வைக்கப்போவது தொழில் முதலீடு கொண்டு வருவதற்கு என்பதை ஒத்துக் கொள்கிறேன் badnewsindia..

//கொஞ்சம் left, right திரும்பி local roads ஐ பாருங்கள். தலை கீழ் நிலமை மற்ற சாலைகளில்.
தோண்டியதை மூடாமல், மூடியதை முழுவதும் மூடாமல் ஏனோ-தானோ வேலை செய்திருப்பது தெரியும்.
//
ஆனால் மற்ற சாலைகளையும் இது போல செய்தால் நல்லா இருக்கும் இல்லையா badnewsindia

said...

//இந்தியாவிலும் இப்படி இருப்பது மகிழ்ச்சி. நீங்க சொனன்துபோல், இது தொடரனும்ன்னா, இதை பாதுக்காகவேண்டியது மக்கள்தான்..
//

ஓ... மலேசியா ரோடுகள் இது போலத்தான் இருக்குமா மை பிரண்ட். மக்களும் சில பொறுப்புணர்ச்சிகள் உணர்ந்து நடந்துகொள்ளவேண்டும் மைபிரண்ட்

said...

//This is till Tidel Park, Show some photos beyond Tidel Park (like Thuraipakkam, Sholinganallur etc). The project is being dragged for years!! //

Thats right, anon. Like other countries, people are not allowing govt to lay a road, if that affects them.. thats also a reason for the delay

said...

//உங்களுக்கு ஒரு ஓ!!!! //

நன்றிங்க இலவசக்கொத்தனரே

said...

//wow.. looking forward for the new infrastructure! //

me too, Sis!!!

said...

//Ungal kanavu meyppada, maadhangal / varudangal aagum //

oru nambikkai thaan SLN.

said...

//Indha road ellam madhya kailash to tidel varaikum dhaan potu irukaanga....adhu poduradhuke kitta titta 4 yrs edukitaanga.....idhula fulla podumbothu neenga iruka mateenga..unga perandhaan irupan //

சீக்கிரம் வந்திடும்னு நம்புறேன் மாப்ள..

said...

//tidel park-ku appuram ulla road-la poravangaluku innum adhe nelamadhaan....adhuvum mazhai peidhaal..kundu kuzhi ellam enga irukune theriyala.....andga ula man hole-a vizhundu palla udachikirana niraya peru.......dentist selavu micham....

//


இது உண்மையான வருந்துற விஷயம் தான் மாப்ள.. ஆனால் னாமும் சில சமயம் சில பொறுப்பான செயல்களை செய்தால் போதும்.. இது போல் நடக்காமல் காக்கலாம்

said...

//ada arasaangam dhaan ippadine...namma makka adhukulla andha bust stop pakkathula echi thuppi vachitaanga//

அப்படி செய்பவர்களை தண்டித்தால் போதுமே மாப்ள.. நம் கூட இருக்கும் நண்பர்களே ஏதாவது பேப்பர்களை போகிற போக்கில் விட்டெருந்து போவதில்லையா. பட தடவை சொல்லி நான் சலித்து போனதுகூட உண்டு மாப்ள..

said...

//ippa echi thupparadhuku edhuku pudhu salai ellam....pazhaya maadhiri irundha kooda manna potu moditu poyite irukalam..... //

அதுவும் சரி தான் மாப்ள.. ஆனா ஓரளவுக்கு கோயம்பேடு பஸ்நிலையம் சுத்தமா இருக்கிற மாதிரி தானே தெரிகிறது மாப்ள

said...

//Thagaval thantatarku mikka nanri karhik //

NanRi Haniff..

said...

/இளைய தலைமுறைக்குக் கிடைத்த இன்பப் பயணம் எல்லாப்பாதையிலும் தொடரட்டும்.
நன்றி கார்த்திகேயன்.
///


நன்றிங்க வல்லிசிம்ஹன்.. நானும் இதையே தான் நினைத்தேன்.. ஒரு பெரிய கோலம்னா கூட ஒரு சின்ன புள்ளியில் இருந்து தானே ஆரம்பிக்கும்.

said...

//Aaaha..Nice pics :) and nice post :)
Gud 2 c ppl noticing al thse minute things in life //

Thanks ponna :-)

said...

//அடடா... நல்ல கருத்துள்ள postஆ இருக்கு!! //

ஹிஹி.. நன்றிங்கோவ் ட்ரீம்ஸ்

said...

//இது கொஞசம் late...நான் இருக்கும் மொதே பண்ணி இருக்கலாம்.. சரி எதோ இப்போவவது பண்ணாங்களே/

ஆமாங்க ட்ரீம்ஸ்.. இப்போவாவது பண்றாங்களேன்னு சந்தோசப்பட்வேண்டியது தான்

said...

//நல்லா சொன்னீங்க! முதல்ல மாற்ற்ம் நம்ம கிட்ட இருந்து ஆரம்பிக்கனும்!
//

சரியாச் சொன்னீங்க ட்ரீம்ஸ்

said...

/I agree with bharani...summa oru 4 or 5 KM ku indha maathiri super road potutu...matha roads ellam innum palaya nilamaila irukarathu bad...//

சரி தான் ஷ்யாம். ஆனா எல்லா மாற்றங்களும் ஒரு சின்ன புள்ளியில் இருந்து தானே ஆரம்பிக்கனும்

said...

//and I agree with you too...naamum govt ku help pannanum...enna thaan govt muyarchi senjaalum pothu janathu kitta irundhu help illana ellam waste aaidum //

கரெக்ட் ஷ்யாம்.. மக்கள் ஒத்துழைப்பு இல்லாம எதையும் செய்ய முடியாதுங்க ஷ்யாம்

said...

//yeay.. innaikku Naanthaan first.. appappa.. unGkala mathiri busy blogger sitela muthal comments podurathe oru pathivu ezhuthurathukku samam.. //

கரெக்ட் ஷ்யாம்.. மக்கள் ஒத்துழைப்பு இல்லாம எதையும் செய்ய முடியாதுங்க ஷ்யாம்..

said...

//hmmmm me put up in tidel dhaan...all these grandeur are jus near to those it parks....adhukkapparam kuzhikku nadula lighta,konjama road irukkum avalo dhaan... //

கோவாலு, டைடலா.. எந்த புளோருப்பா

said...

//இந்த மாதிரி ஒரு 100 அடிக்கு மட்டும் போட்டுட்டு, பந்தா பண்ணிக்கறதுல ஒண்ணும் use இல்ல//

இல்ல ப்ரியா.. நல்ல வரும்னு தோணுது.. பார்ப்போம்ங்க

said...

//inga ulla makkalla yaaru tidel pakkam porathu//


em Mapla bharani, G3, Gopal ellorum anthap pakkam thaan poraangka

said...

//best karthik bestu//

thanks arun

Anonymous said...

// வான் வழியா வான்கோழி பிரியாணி அனுப்பி வைக்கிறேன்..

ஆமா..நீங்க அசைவம் தானே மை பிரண்ட் //

கோழி வகையில் எது சமைச்சு கொடுத்தாலும் நான் ருசிச்சு சாப்பிடுவேன் தலைவரே!

Anonymous said...

// ஓ... மலேசியா ரோடுகள் இது போலத்தான் இருக்குமா மை பிரண்ட். //

ஆமாங்க. அதுவும் நான் இருக்கும் இடம் சைபர்ஜயா(Cyberjaya). Nucleus of Multimedia Super Corridor என்று பெயர். ரோடுகள் அருமையாய் இருக்கும். சுத்தமாகவும்.. இரண்டு புரங்களிலும் அருமையாய் நடப்பட்ட மரங்களும், வரைப்படங்களும், வண்ண வண்ண விளக்குகளும் இருக்கும்..

Anonymous said...

// மு.கார்த்திகேயன் said...
//yeay.. innaikku Naanthaan first.. appappa.. unGkala mathiri busy blogger sitela muthal comments podurathe oru pathivu ezhuthurathukku samam.. //

கரெக்ட் ஷ்யாம்.. மக்கள் ஒத்துழைப்பு இல்லாம எதையும் செய்ய முடியாதுங்க ஷ்யாம்..//

தலைவரே! இது சரியா?

என்னுடைய மேசேஜை எழுதி, ஷாமுக்கு பதில் எழுதியிருக்கிறீர்கள்?

நாட்டாமை தீர்ப்பை மாற்று!!!:-P

said...

உங்களோட வேண்டுகோள் சம்மந்தப் பட்டவங்க காதிலே விழுந்தால் நல்லது.

Anonymous said...

தலைவரே நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க..நாட்டுக்கு..

குட். இத அப்படியே காப்பத்தினா நல்லா இருக்கும்.......

said...

//தலைவரே நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க..நாட்டுக்கு..
//


நன்றி மணி.. என்ன அப்பப்போ அப்சென்ட் ஆகுறீங்க சபைக்கு

said...

இது மத்திய கைலாசிலிருந்து டைடல் பார்க் வரைக்கும்தான். அதாவது ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மட்டுமே. அதற்குப் பிறகு சாலை மிகவும் மோசம். ஜூன் மாதம் சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் எனக்கு பைக் விபத்து நடந்தது. இன்னமும் அந்தச் சாலை அப்படியேதான் இருக்கிறது. முகத்திற்கு மட்டும் பவுடர் போட்டுக் கொள்வது போலத்தான் இருக்கிறது இந்தச்சாலை. குறைந்த பட்சம் சோளிங்கநல்லூர் வரையிலும் நல்ல சாலையாவது போட்டால் மட்டுமே பாராட்டலாம்.

said...

// மு.கார்த்திகேயன் said...
ஓ... மலேசியா ரோடுகள் இது போலத்தான் இருக்குமா மை பிரண்ட். மக்களும் சில பொறுப்புணர்ச்சிகள் உணர்ந்து நடந்துகொள்ளவேண்டும் மைபிரண்ட் //

கார்த்திகேயன், மலேசியச் சாலைகள் உலகத் தரத்தில் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றன. மிகச் சிறப்பான பராமரிப்பு.

said...

//குறைந்த பட்சம் சோளிங்கநல்லூர் வரையிலும் நல்ல சாலையாவது போட்டால் மட்டுமே பாராட்டலாம்.
//

பொறுத்தது பொறுத்து விட்டீர்கள் ராகவன்.. இன்னும் கொஞ்ச நாட்கள்.. எல்லாம் மாறிவிடும் :-)

said...

//கார்த்திகேயன், மலேசியச் சாலைகள் உலகத் தரத்தில் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றன. மிகச் சிறப்பான பராமரிப்பு.
//

இது தெரியாத விஷயங்கள் ராகவன்

said...

இந்த மாற்றங்களின் முழு பலன் காணப் பல வருடங்கள் ஆகும் என்றாலும்,

ஆனா எல்லா மாற்றங்களும் ஒரு சின்ன புள்ளியில் இருந்து தானே ஆரம்பிக்கனும்//

இது உண்மை.

said...

good news...good to see the pics..

said...

//இது உண்மை.//

ஆமா அரசி.. ஆயுத எழுத்து படத்துல வர்ற வசனம் மாதிரி, சதம் அடிக்கனும்னா கூட ஒரு ரன்ல இருந்து தானே ஆரம்பிக்கனும்

said...

//good news...good to see the pics.. //

Thanks Seenu