Saturday, January 20, 2007

அஜித்துக்கு மட்டும் ஏனிப்படி?

இப்போதெல்லாம் தமிழ் சினிமா படத்துக்காக இல்லாமல், அந்த படத்தில் நடித்த நடிகருக்காகவும், அதற்கு தரப்படுகிற விளம்பரத்துக்காகவும் தான் ஓடுகிறது.. அந்த படத்திற்காக செலவு செய்த, உழைக்கின்ற பலபேரை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. முதலில் நான் இப்படி சொல்வதற்கு சில எடுத்துக்காட்டுகள்..



தீபாவளிக்கு அஜித்தின் வரலாறு வெளிவந்தது. அதற்கு உலக தொலைக்கட்சியில் முதன் முறையாக என்று மார்தட்டி நிகழ்ச்சிகள் நடத்தும் சன் தொலைக்கட்சி கடைசி வரை வல்லவனை முதலிடத்திலும் வரலாறை இரண்டாம் இடத்திலும் வைத்தது. போன வருடம் 2006-இன் அதிக வசூலை குவித்தது என்று இந்தியா டுடே நாளிதழும் விநியோகஸ்தர்களும் சொன்ன ஒரு படம், சன் தொலைக்காட்சியில் இரண்டாம் இடத்தில் வைக்கப்படுகிறது.. இது நியாயமா.. இதே, சன் டிவியை தூக்கி வைத்து கொண்டாடும் நடிகர்கள் விநியோகஸ்தர்கள் தொடர்பு கொண்ட படமாய் இருந்தால், அது எப்பேர்ப்பட்ட படமாய் இருந்தாலும் முதலிடம் தான்.. அது தெலுங்கு படத்தை அப்படியே அச்சு அசலாக நகலெடுத்த இளையதளபதி விஜயின் படமாக இருந்தாலும் சரி, ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் படமாக இருந்தாலும் சரி, சர் சரென்று கைகளால் கபடி விளையாடி நடிக்கும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் படமாக இருந்தாலும் சரி.. முதலிடம் தான்.. ஏகபோக பாராட்டுக்கள் தான்.. இது தான் நடுநிலைமை தவறாமல் நடத்தப்படும் நிகழ்ச்சியா..

இது மட்டுமல்ல, மாதம் இரண்டு முறை படித்துவிட்டீர்களா குங்குமம் புத்தகத்தில் தும்மினால் கூட போட்டு விளம்பரங்கள் செய்வதுவும் நடக்கிறது. இதெல்லாம் செய்வது தவறில்லை. ஆனால் இவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வராத நடிகர்கள், இயக்குநர்கள் பற்றி அவர்கள் எழுதியது தன் செய்திகள், அவர்களின் செய்தி தரும் ஊடகங்களில்..

இதற்கு அடுத்து நெட்டில் புகழ் பரப்பும் நம்ம சிஃபி இணையதளம். வரலாறை வெற்றி என்று அறிவிக்க அவர்களுக்கு மூன்று வாரங்கள் தேவைப்பட்டது. ஆனால் போக்கிரியை மூன்று நாட்களில் வெற்றி என்று பறைசாற்றி இருக்கிறார்கள். வரலாறைவிட குறைந்த லாபமே ஈட்டிய வேட்டையாடு விளையாடு கடைசியில் பிளாக்பஸ்டர் என்று சொல்லப்பட்டது. ஆனால் கடைசி வரை வரலாறு சூப்பர் ஹிட்டாகவே இருந்தது.

இப்போது தான் ஆழ்வார் படம் பார்த்தேன். இ-மெயில்களிலும் வார்த்தை வழிகளிலும் சொல்லப்படுகின்ற மாதிரி..இல்லை இல்லை.. பரப்பப்படுகின்ற அளவு படம் மோசம் இல்லை. முதல் முறை இயக்குவதால் இயக்குநர் செல்லா சில தவுறுகளை செய்திருக்கிறார். ஆனால் எல்லோரும் சொல்வது போல் இல்லை. அஜித் இது போன்று புது இயக்குநர்களுக்கு ஆதரவு தந்தது போன்று வேறு யாராவது தந்திருக்கிறார்களா என்று சொல்லுங்கள்.. கிட்டதட்ட பதினெட்டு படங்கள் அஜித்திற்கு புது இயக்குநர்கள் இயக்கியது தான். சும்மா அடுத்தவர் ஜெயித்ததிலே, அவர்களை நகலெடுத்து நடிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. தன்னை போன்றே வெற்றி பெற துடிக்கும் பல பேருக்கு வாய்ப்பு தந்தவர் அஜித். எஸ்.ஜே.சூர்யா முதல் ஏ.ஆர்.முருகதாஸ் வரை புதுமுகங்கள் தான், அவர்கள் முதல் படங்களை எடுக்கும் போது. இவர்களை எல்லாம் நம்பிக்கையோடு அரவணைத்திருக்காவிட்டால் இவர்கள் இன்று முகம் காட்டியிருக்க முடியுமா? அப்படி கொடுத்தது தான் செல்லாவுக்கும் வாய்ப்பு. அந்த வாய்ப்பையும் அவர் சரியாகத் தான் பயன்படுத்தி இருக்கிறார். (படத்தின் விமர்சனம் தனியாக)

எனது ஊர் நண்பர்களுக்கு போன் செய்து கேட்டபோது, பொங்கலன்று, போக்கிரி சரியில்லை என்றார்கள். ஆழ்வார் நன்றாக இருக்கிறது என்றார்கள்.. மற்ற எல்லா நண்பர்களும் போக்கிரி விமர்சனத்தில் குறியிருப்பது போல், தெலுங்கு போக்கிரி படத்தை மட்டுமல்ல, அதன் நாயகனின் நடை உடை பாவனையையும் அப்படியே காப்பி அடித்திருக்கிறார்களாம்.. நான் மற்றவர்களை குறை சொல்லவில்லை. ஆனால் இப்படி தனியாக எந்த விளம்பரங்களும் இல்லாமல் முன்னேறும் ஒருவருக்கு இப்படியா வதந்திகள் மூலம் படத்தை ஓடவிடாமல் செய்வது.

இதற்கு மேல் வாதம் செய்தால் அது ஏதோ தனிமனித துவேஷம் ஆகிவிடும். விமர்சனம் எழுதும் நண்பர்களே, உண்மையை எழுதுங்கள். உங்கள் நடைக்கேற்ப சுவைபட எழுதுங்கள். ஆனால் உன்மையை எழுதுங்கள்.

நான் அஜித்தின் ரசிகன் என்பது உலககுக்கே தெரியும். அதனால் தான் இப்படியெல்லாம் எழுதுகிறேன் என்று நினைக்காதீர்கள். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லோரையும் கேட்டால் அஜித்தின் தன்னம்பிக்கையும், அவருக்கும் மட்டும் ஏனிப்படி நடக்கிறது என்ற கவலையும் உண்டு. எனக்கும் தான். நிச்சயம் விரைவில் தலை நிமிர்ந்து நிற்பார். அவரை பாக்க எல்லோரும் கழுத்து சுளுக்கி பாக்காணும். இது ஏதோ எப்பவும் பேசும் வசனங்கள் இல்லை. ஒரு நம்பிக்கை.

54 பின்னூட்டங்கள்:

said...

அஜீத் பற்றிய உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன், 'ஆழ்வார்' - இன்னமும் பார்க்கவில்லை, நான் கேட்ட வரையிலும் 'மோசமில்லை' என்றுதான் கேள்வி.

Anonymous said...

After reading all the reviews, I was pleasantly surprised when I saw the movie. The movie is not that bad.

I don't know why Ajith is a hated man in the media.

Vaai konjam jaasthiyo?

Anonymous said...

Well said my friend, I had the same feeling towards ajith, and you spit it out.

Cheers friends.
Tharmam orunaal vellum

Anonymous said...

That was a great writing. ithu kalk kaalam da saamy. nallavangalaa irukirathE periya thollaiyaa irukuthu.

Anonymous said...

Great writing!! nallavan nichayam jeipaan.. God is watching all this.

Anonymous said...

அஜித் நல்ல நடிகர். தன்னம்பிக்கையுள்ளவர் என்று எல்லாருக்கும் தெரியும். புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் தைரியம் அஜித்தைப் போன்ற ஒரு சிலருக்கே இருக்கின்றது.

ஆனால், கதை சொதப்புதே.... ஆழ்வார் படம் போசமாக இல்லைத்தான். ஆனால், நன்றாக இருந்தது என்று சொல்ல முடியவில்லை. ஆழ்வாரைப் பற்றிய என்னுடைய விமர்சனம்

http://veyililmazai.blogspot.com/2007/01/31.html

Anonymous said...

the anandha vikatan praised ajith as 'vilunthaar, elunthaar'

but the same av now telling alwar as not good movie,


av is known for quality review,

if it is +ve you agree, otherwise you blame media.

why like that,

Anonymous said...

//அஜித் இது போன்று புது இயக்குநர்களுக்கு ஆதரவு தந்தது போன்று வேறு யாராவது தந்திருக்கிறார்களா என்று சொல்லுங்கள்..//

முதன் முதலில் புதுமுக இயக்குனர்களை, திரைப்பட கல்லூரி மாணவர்களை ஊக்குவித்தவர் விஜயகாந்த் தான்.

நீங்கள் அஜித் ரசிகர் என்பது உங்களின் தற்பெருமையில் இருந்தே தெரிகிறது. அதற்காக சன் டிவி பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ளதை நான் மறுக்கவில்லை. நம் மக்களின் தலைவிதி இவர்கள் சொல்வதுதான் செய்தி என்று நம்புவது.

அஜித் தற்பெருமை உடையவர். கூடவே காக்கை கூட்டத்தை எங்கு சென்றாலும் அழைத்துச்செல்பவர். ஏடாகூடமாக எல்லாம் தெரிந்தது போல பேசிவிட்டு ,நான் வெளிப்படையானவன் என்று பந்தா விடுவது என்று அவர் செய்யும் அலும்புகளுக்கு அளவில்லை.
இது பற்றி அவரின் பக்கத்து வீட்டுக்காரர்களே புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

வீட்டை விட்டு கிளம்பும் போதும், வரும்போதும் அரசியல்வாதி மாதிரி அடிப்பொடிகளை வைத்து சவுண்டு விட்டால் பக்கத்துவீட்டுகாரர்கள் புலம்பமாட்டார்களா என்ன?

Anonymous said...

Nanbar Karthi...

What you have said is as limpid as crystal...

I remember when Sarathkumar's Super Flop films like "Manastan & Chatrapathi" were placed 1st in Top Ten Movies...

Sun TV is biased... Its a well-known & an established truth...

Anonymous said...

நான் கடவுள் படத்தில நம்மை விலக்கியது மட்டுமல்லாமல், கூப்பிட்டு வைச்சு மிரட்டி அனுப்பிட்டாங்கலே என்கிற ஆதங்கத்தில் தல இந்த படத்தில் "நான் கடவுள்" என்கிற பஞ்ச்(ரான) டயலாக்கையே திரும்ப திரும்ப சொல்லி பலிவாங்க முயன்றிருக்கிறார்.

இந்த சவலப்பிள்ளை குரலை வைத்துக்கொண்டு ஆக்சன் படமெல்லாம் நடித்தாலும் நமக்கு என்னவோ அஜித்தைப்பார்த்தால் சின்ன பசங்கள் சண்டைபோடும் போது பேசிக்கொள்வது போலத்தான் உள்ளது.

நல்ல மேன்லி வாய்ஸை டப்பிங்கிற்கு அஜித் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Anonymous said...

you hit the nail on its head. Sun Music refuses to play any of Ajith's songs. So many viwer requests are repeatedly shunned. How biased can they get? Ajith has overcome such major obstacles.. hats off to him..

Anonymous said...

வரலாறு பார்த்தேன். ஆழ்வார் இன்னும் பார்க்கவில்லை.
பத்திரிக்கையாளர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்க வேண்டுமோ?

Anonymous said...

Yes Karthik. I have seen both the movies and Telugu Pokkiri also. Aalwar is a OK movie. Neither great nor waste. Pokkiri is also a OK movie. I dont know why media is hyping pokkiri and suppressing aalwar. Media is misusing their rights.

Anonymous said...

தலை தறுதலையான படங்களில் நடிப்பதை தவிர்த்தாலே போதும்.

வரலாறு ஓக்கே..

ஆழ்வார்... சாரி.. தம்ப்ஸ் டவுன்.

Anonymous said...

Hi Blogger,

I appreciate your article. Though it seems that you are so attached with Ajit, I appreciate the truth and good feeling that you have.

For you and other visitors let me post Alwar review.

Flashback part was really a moving one. Vivek's comedy is good (not great but good) and nice to see him back again. Asin has also done well. Good to see Ajit back again in his trim look and without punch dialogues.

The negative is that the movie is using the same old shankar's plot. But the debutant director didnt used his creativity to fit in new surprising and interesting events for audience in first half to back up the stunning flash back. (Ajit's performance was good again). He used the same old events we saw in other films. That police officer character (I didnt mean the actor or the person) was another big minus and didnt go well.

But the movie is nice and watchable entertainer. And its a feel good movie. If you dont have any expectations of a mass heroisms and punch dialogues or with the excitement created by Varalaaru (one of its kind) you will have a good time. I am sure it is not boring or bad as projected.

I think Ajit movies like Red, Anjaneya etc created a bad image when people say Ajit movie is not good.

But it seems he learned from his mistakes and this movie is really good.

My Honest Review Summary:
1. Worthy, Descent and Good Entertainer.
2. Director has nothing new to say in his script.
3. Ajit's presence and his acting takes away these negatives.
4. Not a must see kind, but it is good to see.

Good Luck,

said...

தலைப்பைப் பார்த்ததும் ஆழ்வார் பார்த்து நீங்களே ஃபீல் பண்ணிட்டீங்களோன்னு நினைச்சேன் ;))

சரியா சொல்லியிருக்கீங்க...இ.த. மாதிரி சேஃப்பா ரீமேக்ல நடிச்சு படத்தை ஓட வைக்காம அஜீத் தொடர்ந்து புது இயக்குநர்களை ஆதரிக்கறது கண்டிப்பா பாராட்ட வேண்டிய விஷயம் தான்..

நானும் இன்னும் பார்க்கல...மோசமில்லைன்னு தான் சொல்றாங்க...பார்ப்போம்..

உங்க விமர்சனத்தை சீக்கிரம் போடுங்க..

Anonymous said...

Great writing.. Wat u say is really true!

Anonymous said...

/////////////நீங்கள் அஜித் ரசிகர் என்பது உங்களின் தற்பெருமையில் இருந்தே தெரிகிறது. அதற்காக சன் டிவி பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ளதை நான் மறுக்கவில்லை. நம் மக்களின் தலைவிதி இவர்கள் சொல்வதுதான் செய்தி என்று நம்புவது.

அஜித் தற்பெருமை உடையவர். கூடவே காக்கை கூட்டத்தை எங்கு சென்றாலும் அழைத்துச்செல்பவர். ஏடாகூடமாக எல்லாம் தெரிந்தது போல பேசிவிட்டு ,நான் வெளிப்படையானவன் என்று பந்தா விடுவது என்று அவர் செய்யும் அலும்புகளுக்கு அளவில்லை.
இது பற்றி அவரின் பக்கத்து வீட்டுக்காரர்களே புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

வீட்டை விட்டு கிளம்பும் போதும், வரும்போதும் அரசியல்வாதி மாதிரி அடிப்பொடிகளை வைத்து சவுண்டு விட்டால் பக்கத்துவீட்டுகாரர்கள் புலம்பமாட்டார்களா என்ன?
//////////////

I think you are another suntv type of person.. My akka's husband is a close friend to Ajith after once he repaired internet connection in his home.. The thing he said about Ajith was great.. He said he couldn't believe that the media is criticizing and framing him as a bad guy..

Now where did he talk nonsense? Eda kuudama onnum pEsala sir. He wanted to become numero uno, is this a wrong ambition to have?
That was enough for the media which already have hatred on him to write nonsense about him. There are people who trust those media.

You talk about 'thaRperumai'. you have any proof to back your statement? because you are another suntv, you talk nonsense man. has he ever come on suntv and said he IS Rajini or Kamal or anything over the top? Vikram is doing all sort of things in other states but he is projected as a humble good man..

Ajith is not a JAALRA to anyone, so they write nonsense about him..

there are other JAALRAs who act well in real life so they seem good to everyone..

said...

ஒரு நடிகனுக்கு ரசிகனா இருந்தாவே இதாங்க கார்த்தி பிரச்சினை!

நான் பார்த்தேன் படத்தை. இதே கதையில் ஏற்கனவே பல படங்கள் வந்துவிட்டது. புதுசாக இந்த படத்தில என்ன சொல்ல வராங்கன்னு புரியல. கதை கேட்டுதான் நடிச்சாரா? இல்ல ஒரு புதுமுக இயக்குனருக்கு வாய்ப்பு குடுக்கணுமேன்னு குடுத்துட்டாரா?

நல்ல படத்தை யாருமே தடுத்து நிறுத்த முடியாது. மீடியா சொல்றது எல்லாம் இப்ப யாருங்க கேக்குறது?

said...

படம் உக்கார்ந்து பார்க்கிற மாதிரிதான் இருக்கு. நானே முழுசா உக்காந்து ஆழ்வாரைப் பார்த்தேன்.

மத்தபடி சொல்லாத கதைன்னு தமிழில் என்ன இருக்கு?

தமிழ்ப்பட ஃபார்முலாப்படி பாசமான ஃபேமிலின்னா மருதாணிவைக்கிர சீன் தாண்டி வர டைரக்டர் யோசிப்பதில்லை. (ஆழ்வாரிலும்)

ஓடுறதும் ஓடாததும் டைரக்டரோட ஜாதகம் எவ்வளவுக்கு அஜீத்தோட பொருந்துதுன்றதை வைச்சித்தான். (இப்பெல்லாம் சூப்பர் பொருத்தம் இதுதானே? கதை கெடக்கு களுதை)

உடன்பிறப்புக்களின் டிவி ரேட்டிங் வைச்சு வீராச்சாமியை வெள்ளிவிழாப் படமாக மாற்ற முயல்வார்கள்!

அவ்வளவுக்கு வாத்துமடையர்கள் ரசிகர்கள் இல்லை என நம்புவோம் :-))

Anonymous said...

I fully accept your appraisal about AJITH. In fact he deserve to it. Self confidence is another name of Ajith.But he has to learn how to survive in the film industry like his co-artists vijay. Though Vijay is giving only stereo type of action movies, he is surviving, because of background.Ajith should learn the cinema politics too, so that he can win in the game.

said...

பொதுவா வெளிப்படையாப் பேசினாலே தப்பா ஆயிடும். அஜித் வெளிப்படையாப் பேசறவர். மற்றபடி படம் நல்லா இருந்தா அதுவே ஓடும். விமரிசனங்களையும் மீறி. ஏன் கவலைப்படறீங்க?

Anonymous said...

what u told is absolutely correct.....but these reviews and all cannot stop our THALA'S suceess....so dont worry im 200% sure that kireedom and billa will make ajith as a remarkable shining star of tamil filmdom....alwar is good guys......please watch it atleat 3 to 5 times to make it a hit....

Anonymous said...

Check this out.

Aazhwar is No.1 while Pokiri has already begun sliding.

http://boxoffice.blogs.friendster.com

:-)

Anonymous said...

Most of the media is hostile to Ajith bcoz he talks straight. He did not give exclusive cover stories to any journalist ever (to push their circulation). Instead he gives generic press meets since 2003.

Media will support a celebrity only if they are useful to them.

Thala is a one man army. His fans look at him with awe and respect as the reincarnation of MGR.

Anonymous said...

There are several reasons for media and film fraternity not to be pleased with Ajith:

1) He is frank to the point of being called an eccentric. For the media, film world and anyone in general, sugar-coating and lies is preferred then the truth.

2) He has distanced himself from the media. They only build up films of actors that feed them. Example, Vijay and Surya.

-kajan

Anonymous said...

A bit unrelated to this post. But why do Ajith fans brand anyone criticizing Ajith as a Vijay fan? Can't some one neutral criticize Ajith?

And it is Vijayakanth who has given maximum opportunities to new comers. Compared to the way Vijayakanth is sidelined and made fun of, this is nothing!

And a sincere advice. Dont use media like Sun TV/Kungumam/Sify etc as a benchmark for reviews/opinion etc! They are the most biased/idiotic people on earth!

Anonymous said...

anantha vikatan is giving poor reviews ...

examples :
chandramuki 40
mumbai xpress 41
SACHIN 42 (very nice rating ...)


Azhagai irukkirai bayamai irukkirathu got 42/100 but ran only 2 weeks during April 14th release(very poor by AV once again)

pl reply kanna ... is this the quality of AV

Anonymous said...

Anantha Vikatan poor ratings - a few examples ...

Sachin 42
Mumbai xpress 41
But Chandramuki 40 only (great comedy)

Azagai irukkirai bayamai irukkirathu got 42/100 but ran for 14 days during April 14th itself (very poor by AV)

No one can support these ratings as QUALITY ones .... ok ....

Anonymous said...

அஜித்! ஒரு ஆச்சர்யமாண வரலாறுதான்.வாழ்க்கையில் போராடியவர்கள் ஏராளம்.ஆணால் போராட்டத்தையே வழ்க்கையாக ஏற்பதற்கு எத்தனைபேருக்கு தைரியம் வரும்! அஜித் போராட்டத்தையே வாழ்க்கையாக கொண்டிருப்பவர்.

அடுத்தவன் பணத்தில்,அடுத்தவன் திறமையில், "வடுமாங்கா ஊறுதுங்கோ"ன்னு சதை மாங்கா விற்கும் பெண்னை காட்டி பெற்ற வெற்றியை அனுபவிப்பதற்கு பெரிய
திறமை தேவையில்லை.ஆனால் புதிய முயற்சியின் விழைவாய் வரும் தோல்வியை தாங்க தைரியம் ரொம்ப வேனும்.அது அஜித்திடம் நிறையவே இருக்கு.

அஜித்! அடுத்தவர் பணத்தில்,அப்பன் புகழில்,நடிகைகளின் சதையை "கதை"யாய்
பயன்படுத்தி குடும்பமே சேர்ந்து
குட்டிகர்ணம் போட்டு முண்ணேறி
வந்தவரல்ல,

ஏற்றுக்கொண்ட தொழிலில் எட்டாத உயரத்தை அடையவேண்டும் என்ற தீராத தாகம்,முயற்சி, தமிழக திரை ரசிகர்களின் எடைதராசுக்கு
ஏற்றதாய் இல்லாமல் சில தோல்விகளை தந்திருக்கலாம்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி,மூண்று படங்கள் ஊத்திக்கொண்டாலே மூக்கால் அழும் முச்சந்திபேர்வழி அல்ல!
பீனிக்ஷ் பறவையாய்,பேரலையாய்
புறப்படும் போர்க்குணம் உடையவர் அஜித். அவர் படம் எப்படி போகிறது (ஆழ்வார் உட்பட) என்பது முக்கியம் அல்ல.ஆனால் அவர் வழ்க்கை நிச்சயம் முயற்சியாளர்களுக்கு,போராட்டவாதிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு "தல வரலாறு" வாக அமையும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இங்கே அவரின் படங்களை மற்ற படங்களுடன் ஒப்பிடாதீர்.ஏனெனில்,இங்கே "Ghandi"திரைபட்டத்தையும்,வல்லவன் "த"ரைப்படத்தையும் அடுத்தடுத்த திரைஅரங்குகளில் திரையிட்டால், பாவம் "Ghandi" காத்துவாங்கிகொண்டிருப்பார்.

said...

Hai Karthik,
About Ajit i also agree with u,and about suntv is also 100% biased. its a welknown factor. Why do u worry abt it?Cos it is one of the most viewed channel all over the world,so it is like that.

Anonymous said...

I agree with your view of media on ajit. the reason for this attitude of the media, i think, is due to the media shyness of ajit. Vikram, Vijay are promoting their film in a good way. I wish to recall that vikram appered in almost in all the TV channels (even in All india radio) to promote his film pithamagan.
Vijay also appeared in SUN tv, even though he is a shy person.
After being in an Entertainment industry one cann't say that he is media shy. The reluctance shown by ajit towards TV or other media, makes the media to avoid or in the sense to show less importance to Ajit.
he should change his ways.

Anonymous said...

the one who posted this article shld read dinkaran review abt aalwar..whos paper s dinakaran..??
if the film s gud it ll run against all odds lik many ajith films did..
and its u who r so much biased than sun tv talking abt remakes of his co-star..if ajith will do only original movies and encourage new directors then wat will you call kreedom and billa as??...this clearly shows your stomach burn after aalwar flop..

Anonymous said...

neer solwathu sarithan nan ninaikkiren ajith medai vukku sapot mannathathalathan adhavathu peetikal kudukkathdhalthan avargal ippadi pannugirargal ena ninakkiren varalau parthen unmayil athu nalla padam innum alvar parkavillai .pokiri tamil,telugu irendilum parthen entha viththiyasamum illai sila vadiveluvin nakaichuvai katchikalai thavira matrapadi athe padaththai kopi panniyirukkirarkal

Anonymous said...

neer solwathu sarithan nan ninaikkiren ajith medai vukku sapot mannathathalathan adhavathu peetikal kudukkathdhalthan avargal ippadi pannugirargal ena ninakkiren varalau parthen unmayil athu nalla padam innum alvar parkavillai .pokiri tamil,telugu irendilum parthen entha viththiyasamum illai sila vadiveluvin nakaichuvai katchikalai thavira matrapadi athe padaththai kopi panniyirukkirarkal

Anonymous said...

somebody is talking about Kireedom and Billa as remakes. you are funny dude. Kireedom is not a remake as the Director has declared. So case over. Regarding Billa, it is not a typical remake. It is harder to remak than remaking a Pokiri. You remake Pokiri, no pressure at you. You're sure of its success because nobody is coming hard at you. Billa will invite criticism for sure. The reason is simple, it is a Rajini movie and to remake it will have criticism flowing from all directions.. This is why Vijay who is known for remaking didn't want to remake it.. he is afraid.

Anonymous said...

Hello annonymous. Ajith is may or may not be shy. But that's not the reason he doesn't show up on tvs. What are the actors doing in tvs now? On pongal there was an actor asked Asin, what'd you do should you wake up tomorrow as a male. This is the type of thing that happens now. He is too good gentleman to talk like that. He doesn't want to jalra everyone to taste success. He wants to EARN it.
Thank you

said...

நான் கேள்விப்பட்டவரை ஆழ்வார் நன்றாகத்தான் போகிறது...போக்கிரி நல்லாருக்காம்....நல்லா ஓடும் என்று சொல்கிறார்கள்...

இதைவிட கொடுமை என்னன்னா தாமிரபரணி பிச்சிக்கிச்சாம்...விட்டா அடுத்த சூப்பர் ஸ்டார் விஷால்னு தினத்தந்தி எழுதுவாங்க போலிருக்கு..

Anonymous said...

ம்ம்... நேத்து தான் பார்த்தேன். எனக்கும் அஜீத் பிடிக்கும்.. ஆனால்... ஒரு முறை பார்க்கலாம் என்று தான் சொல்வேன் படட்த்தை பத்தி! ஏற்கனவே ghajini, anniyan என்று எடுத்த subject ல எடுக்கும்போது, அஜீத் தின் உழைப்பை மீறி, அசினின் அதே மாதிரி நடிப்பும், பழைய கதையும் கொஞ்சம் சலிக்க தான் செய்கின்ற்து! ((நம்மள தப்பா நினைக்க ப்டாது!)

அஜீத் மாடிரி இல்லாம், விஜய் style தனி. so i dont know how they both can be compared!

Anonymous said...

The essential line is are we seeing the film for entertaiment or to see good acting! (if both are there well and good.)

Anonymous said...

yeanpa Karthi
yethavathu oru puthumuga iyakunar Patti vadai sutta kathai mathri ponnu pizza sutta katha nnu sonna unga Ajith athilayum nadiparo!!!

Summa Media va kurai solli proyojanam illa. infact yentha oorlayum media is biased than,since its just business for them,no one think that it should take the right thing to public.

Lets keep them away!!!
see here lot of people sharing their view about a film, which will give right review than a guy writing for money in AV,___TV
:)

Anonymous said...

இரண்டுமே நான் பார்க்கவில்லை- ஆனாலும் எனக்கு ஒரு கேள்வி உண்டு. எதனால் ஒரு நடிகனின் தீவிர ரசிகர் ஆகிறார்கள் என்பதுதான் அது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் நடிப்பால் என்றும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்ஸாலும் என்றும் ரசிகர்கள் சேர்க்கும் இரண்டு கேம்ப்கள் இருக்கும். விஜய், அஜீத் இருவரையுமே ஏதாவது ஒரு கேம்ப்பில்தான் சேர்க்க முடியும்.

சொந்தமாய் எழுதப்படுவதென்பதாலேயே சுமார் படத்தை ஆதரிப்பதும் ரீமேக் படம் என்பதாலேயே பிறமொழிப் படத்தை விலக்குவதும் ரசிகன் என்ற அளவில் ஒத்துக்கொள்ள முடியாத விஷயம்.

எனக்கும் சில பிடித்த நடிகர்கள் உண்டு, அந்தக்கால சிவாஜி, சில எம்ஜிஆர் படங்கள் (மலைக்கள்ளன், அன்பே வா போல), சிரிப்பு நடிகர் என்றால் எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, நாகேஷ், ப்ளாக் அண்ட் வைட் கமல், ரஜினி, சத்தியராஜின் அலட்சியம், விஜய்யின் சில படங்கள் (கில்லி), அஜித்தின் சில படங்கள் (காதல் கோட்டை), இப்போது வந்துள்ள ஆட்களில் ஜீவா, பரத் என்ற விதத்தில். ஆனால் எந்த ஒரு நடிகரின் தீவிர ரசிகன் என்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

Anonymous said...

Thalaiva cool.

wheter we agree or good for society or not.

The mass heros are MGR, Rajini and now Vijay.

I don't know how they achived this. but it is true. bitter for us. but true is this.

Most important thing Ajith is not agreed as a mass hero among kids and elder womens (I can't understand why?).

His voice is not suitable for action films.

most importantly he has few demerits.

1. We cann't speak what ever we think in the name of 'nan open aanavan'.(Do you agree?)

2. He made very bad comments about Vijay in press interview and his moives.( I never heard such type of comment from any one, It was 100% jelousy)

3. Just before 2004 parliment election he praised JJ. ( so don't tell he never been a 'Jaalra')

Appuram wait and see after some years all media will give 'mani magudam' to soorya.

Anonymous said...

What u say is 100% correct..

Anonymous said...

you add "vijay tv "in to your table..you know why i"m telling???
they had given "youth icon award" to vikram and next super star award(!!!!!) to vijay in their "vijay tv awards.. i"m asking who voted for those 2 awards...

Anonymous said...

அய்யா கார்த்தி, இந்த விஜய் டிவி மேட்டருக்கு பதில் சொல்லுப்பா

Anonymous said...

Valka Ungal Kolgai. If the movie is worst, dont blame the media. Both Pokkiri and Azhwar are Utterwaste. Waste of Time. U r a good fan of Ajit i guess thats y u r not able to digest what ever review came out. On pongal day Azhwar released in 10 halls on Bangalore. But now in a weeks time it had been reduced to half.

None of these guys are fit to be compare with Rajini-Kamal

Anonymous said...

Thalaiva cool.

wheter we agree or good for society or not.

The mass heros are MGR, Rajini and now Vijay.

I don't know how they achived this. but it is true. bitter for us. but true is this.

Most important thing Ajith is not agreed as a mass hero among kids and elder womens (I can't understand why?).

His voice is not suitable for action films.

most importantly he has few demerits.

1. We cann't speak what ever we think in the name of 'nan open aanavan'.(Do you agree?)

2. He made very bad comments about Vijay in press interview and his moives.( I never heard such type of comment from any one, It was 100% jelousy)

3. Just before 2004 parliment election he praised JJ. ( so don't tell he never been a 'Jaalra')

Appuram wait and see after some years all media will give 'mani magudam' to soorya.
___________________________________________________________
I know you are a Vijay fan.

The mass hero was MGR, now Rajini and next it is Ajith simply because he has the gethu to act in mass movies and has more number of fans; they are not just fans, but die-hard fans. Vijay laggs behind Ajith in this respect.

Ajith's voice is really good. It is better than vaanganna, irunganna, veenganna. Ajith looks like an action hero, not as a malaria patient like Vijay, who looks more sullan than even Dhanush to be honest.

vijay, when his films took beating in Box Office, started to attack Ajith in his movies like Thirumalai, Sachin etc. Vijay was very jealous of Ajith. And then vijay in interviews said he did not mean to do that blah blah. Such practice is called DOUBLE GAMING. Ajith was very frank and gave back in Attagasam and stopped it, but this cheap C grade fellah vijay continued it.

Ajith only once said he likes JJ but he never put JALRA like vijay did. He was JALRA to vikram in many functions, to trisha (LOL), and to Rajini. How many times should he say he is a Rajini fan? eventhout actually he is a Kamal fan.

After Thirupaachi started to slide in the second week, vijay gave interviews in suntv that it has broken records. vijay is not only a jalra but a liar.

Anonymous said...

Thambi vijay fan, vijay copy adichu inga munnuku vara maataaru. ithellam needikaathu. vijay ellam kathoda azhinchu pOra kathai.

nee surya fan aagalaam.

said...

மீ 50?!!!

Anonymous said...

as a thala fan i could just say its mistake of thala himself. we should change ourselves according to the trend. i dont know why thala creates a boundary around him. he should come public. whats wrong in giving interviews in TV and Radio. Atleast we could accept in the magazine and daily interviews they wud ask some controversial questions and put into trouble. whats wrong in coming in TV and Radio. and most importantly in functions.
this spoils his image. he should act for some masala movies. act in sj surya, ar murugadoss, dharani, charan, selvaraghavan, vishnuvardhan movies. THALA SHOULD CHANGE HIMSELF INSTEAD OF EXPECTING OTHERS TO CHANGE AND THINGS TO HAPPEN FAVOURABLY FOR HIM.
Thala is born to win

Anonymous said...

அஜீத் பேட்டி படித்தீர்களா?

Anonymous said...

Hai,
im a regular visiter&commenter to ur blog.But Im surprised that you are not published my comment reg this post.why? Now i know about your attitude and hereafter i'll not comment in ur blog.(My sincere advice is change your attitue and try to accept the reality though you dont like/want it)
Bye,
ur regular(Old) reader.

Anonymous said...

whtever u people say....ajith's charisma is unbeatable....every hero knows that.....including vijay.....it doesnt mean much if he s shy towards media....cos its the media that exaggerated so much false things.....he s got everything that a hero needs....remember he came to the industry without any backing....its 100% hardwork and sincerity....he is the 3rd fastest racer in the country and the only actor in the industry with a commercial pilot licence.....why dont u guys appreciate talents and hardwork....just for the reason he has no backing...well then its funny......