Wednesday, January 10, 2007

நான் உணர்ந்த கடவுளும், என்னுள் விளைந்த காதலும்

ஐந்து காலண்டர்களை மாற்றிவிட்டேன்.. இன்னும் இதயத்தில் இருக்கும் அவளை மாற்ற மனதால் முடியவில்லை. எப்போது முயற்சித்தாலும், சுவற்றில் ஒட்டிய போஸ்டரை கிழிக்கும் போது, சுவரும் சின்னதாக பெயர்வதை போலவே என்னை பாதிக்கிறாள்.. ஆனாலும் என்னை விட்ட பாடில்லை.. சூரியனின் வட்டபாதையை சுற்றியே பழக்கப்பட்ட பூமி பந்து போல, அவளையே சுற்றுகிறது என் காற்றாடி மனம்.. அதிலும் ஒரு அதிசயம். பூமி இங்கே சூரியனை சுற்ற மறந்து நிலவைத் தான் சுற்றுகிறது.. அப்படி சுற்றி சுற்றியே தலை சுற்றி மயக்கப்பட்டாலும், மறுபடியும் கனவாக விரிகிறது அவள் பற்றிய எனது நினைவுகள்..

நீண்ட அந்த நெடுஞ்சாலையிலே, மரங்கள் வரவேற்பு வளையம் போட்டுக் கவிழ்ந்து கிடந்த சோலையிலே, நடந்து நடந்து அந்த தார் ரோடு பழுதடைந்துபோனது.. ஆனால் இத்தனை காலமும் அவளை நினைத்து நினைத்து என் இதயம் என்னவோ மெருகேறியே கிடக்கிறது, தேய்த்து போட்ட தங்கம் போல.. ஒவ்வொரு முறையும் இலை உதிரும் போதெல்லாம் சின்ன சின்ன காயம்பட்ட அவ்வழி மரங்கள், நான் தனியே, அவள் இல்லாமல், அந்த சாலையிலே நடந்து செல்வதை பார்த்து தன் கிளைகளை ஒடித்துக் கொண்டது..

கண்ணாடி முன்னால், தனியாக, அன்று மலர்ந்த மலர்களின் காதுகளில், பூஞ்சோலை கிளிகளின் இசைக்கு பாட்டாய், அவளிடம் பேசுவதற்காக எத்தனை முறை, நான் பயின்றிருப்பேன். எல்லாம் அவள் வந்து இதழால் சிரித்து, செவியோர முடிகற்றைகளை ஒதுக்கியவாறே, வளைந்து என்னருகே அமர்ந்த போது, அந்த பயிற்சி பெற்ற வார்த்தைகள் சொல்லாமல் கொள்ளாமல் என்னை விட்டு நடக்க ஆரம்பித்தன. அமர்ந்த பின், மெல்ல வில்லிமை தூக்கி, செவ்விதழ் சுழித்து, புருவத்தால் அவள் செய்த சைகையில் இதயம் தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்தது. என் இதயத்தில் நடந்த அதிர்ச்சியில், ஏதோ பிரளயம் நடந்ததாய் நினைத்துக்கொண்டு மரத்து பறவையெல்லாம் அடித்து பிடித்து அங்கிருந்து பறந்து சென்றன..

அவளருகில் அமர்ந்து மௌனங்களை மட்டுமே நான் பரிமாற, அவள் வார்த்தை விருந்தே வைக்கிறாள் எனக்கு.. இடைவிடாத அந்த பரிமாறல்களின் முடிவில், எழுகையில் எனக்கு இன்னும் பசிக்கிறது, அவளுக்கோ விருந்தே கொண்டது போல் நிம்மதி இருக்கிறது.. இப்படித்தான் இருக்குமோ காதல்.. ஊரே என்னைச் சுற்றி இயங்கி கொண்டிருக்க, நானோ அவளை சுற்றி ஊர்வலம் போகிறேன். அப்படியொரு ஓய்யார பயணத்திலே, ஓரிடத்தில் ஓய்வுக்காய் நான் அமரும் வேளை கவனிக்கிறேன், அவள் என்னில் ஊர்வலம் போன பாத சுவடுகளை..

இன்னும் என் காலக்குறிப்பேடின் காகிதப் பக்கங்களில், அவள் கூந்தல் வாழ்ந்து விழுந்த மலர்களின் வாசமும், அவள் சிந்திவிட்டு போன சிவப்புதட்டின் சின்னத் தடங்களும், நேரான பக்கக்கோடுகளில் வளைந்து வளைந்து அவள் என்னில் விளையாடிய தடங்களுமே நிரப்பப்பட்டிருக்கின்றன.. என் நான்கு இதய அறைகளிலும் தாறுமாறாய் கிடக்கிற சின்ன பெரிய புத்தகங்களில் எல்லாம் அவளை பற்றிய குறிப்புகளே அதிகமாய் விளைந்து கிடக்கின்றன.. அதனையெல்லாம் எத்தனை முறை படித்ததோ, சிவந்து போய் கிடக்கிறது என்னிதயம்.

அவள் இதழ் சொல்லித்தான் என் பெயரின் சுவை தெரிந்தது. அவளின் அருகாமை சொல்லித்தான் என்னின் காந்தம் புரிந்தது. அவள் புன்னகை எழுதிய குறிப்பில் தான் என் அருமை எனக்கே புரிந்தது.அவள் தலைசாய்த்து பார்க்கும் பார்வையில் என் மீதான கர்வம் தலை நிமிர்ந்து நிற்கிறது.

இன்னமும் இருக்கிறது.. அதே அளவு காதல்.. கிரிஷ்ணனுக்கு மட்டுமா அட்சய பாத்திரம் சொந்தம். இதோ என் இதயமும் ஒரு அட்சய பாத்திரம் தான்.. எடுக்க எடுக்க குறையாமல் வருகிறது அவளைப்பற்றிய எல்லா நினைவுகளும்.. அவள் கேர்பின் குத்தியதிலிருந்து கைகுட்டை ஒற்றிய அந்த தருணங்கள் வரை அப்படியே இருக்கிறது என்னுள் மழையில் நனைத்த மரத்தின் பச்சை இலைகளை போல.. என் மூளையில் முளைத்து கிடக்கும் கோடிக்கணக்கான நியுரான்களெல்லாம் அவளின் நினைவுகளை அடைத்து வைத்தே நிம்மதி அடைகின்றன.. அதெல்லாம் பற்றாமல் போய், உடம்பு ரத்தங்கள் ஆக்சிஜனை கடத்த மறந்து இவளின் நினைவுகளை, உச்சிக்கும் உள்ளங்காலுக்கும் தூக்கி கொண்டு ஒடுகின்றன.. வெட்ட வெட்ட முளைக்குமாம் மரம்..அட.. இவளின் நினைவுகள் கூட எனக்குள்ளே வளர்ந்தது அவ்வாறு தான்.

இன்றும் நான் நடந்து செல்கையில் அவள் என்னுடன் நடப்பதாய் நினைக்கிறேன்.. தனிமையில் தனித்துக் கிடந்த காலங்களில் அவள் என் தோளில் கை போட்டு என் தாவாங்கட்டையை, அவளின் குவித்த விரல்களால் பிடித்து கொஞ்சுவதாய் நினைக்கிறேன்.. தலையணை எல்லாம் அவள் மடியாய் எனக்கு உருவகம் ஆகிறது..

என்ன சொல்லி என்ன புண்ணியம்.. இப்படி காற்றில் மட்டுமே கவிதை பாட, வெறுங்கையால் மட்டுமே முழம் போட, எனக்கு பழகிவிட்டது. இதிலும் ஒரு சுகம்.. உணர்ந்த கடவுளை, பார்க்க முடியவில்லை என்பதால் பாடாமல் இருக்க முடியுமா?

78 பின்னூட்டங்கள்:

Anonymous said...

இன்னைக்கு நான்தான் ஃப்ர்ஸ்ட்.. :-D

said...

Maams....enna idhellam ippadi oru soga kadhal kadhaya ungalukulla......bayangara ezhudhi irukeenga..

said...

edho oru padathula..."koyila saami kumbadurom...saami namala thirumbi kumbadunumnu edhir parkarooma enna....adhu pola ennoda kadhalum" oru dialog varum....athoda extended version dhaan unga post....

said...

//அவள் இதழ் சொல்லித்தான் என் பெயரின் சுவை தெரிந்தது. அவளின் அருகாமை சொல்லித்தான் என்னின் காந்தம் புரிந்தது. அவள் புன்னகை எழுதிய குறிப்பில் தான் என் அருமை எனக்கே புரிந்தது.அவள் தலைசாய்த்து பார்க்கும் பார்வையில் என் மீதான கர்வம் தலை நிமிர்ந்து நிற்கிறது.
//....ennanu solradhu....no words...

neenga sollunga....yaar andha ponnu????

Anonymous said...

//பூமி இங்கே சூரியனை சுற்ற மறந்து நிலவைத் தான் சுற்றுகிறது..//
wowwwwww..........enna oru line...superapu..
//இதோ என் இதயமும் ஒரு அட்சய பாத்திரம் தான்.. எடுக்க எடுக்க குறையாமல் வருகிறது அவளைப்பற்றிய எல்லா நினைவுகளும்//

idhu ulti...

//உணர்ந்த கடவுளை, பார்க்க முடியவில்லை என்பதால் பாடாமல் இருக்க முடியுமா?
//

idhu toppu...wow...romba anubavichi ezhuthirukeenga :D

said...

mappi, tamil font illa :-(

//இப்படி காற்றில் மட்டுமே கவிதை பாட, வெறுங்கையால் மட்டுமே முழம் போட, எனக்கு பழகிவிட்டது. இதிலும் ஒரு சுகம்.. உணர்ந்த கடவுளை, பார்க்க முடியவில்லை என்பதால் பாடாமல் இருக்க முடியுமா? //

nachunu irruku mappu.

Anonymous said...

Ada foto ellam maatri jammunnu irukkar karthik,ungal kaathalukku best of luck ;)

said...

//இன்னைக்கு நான்தான் ஃப்ர்ஸ்ட்.. :-D
//

மை பிரண்ட், நொங்கெடுக்கிற வேலைக்கு நடுவிலையும் முதல் பின்னூட்டமா? இந்தா பிடிங்க சைவ பிரியாணி

said...

//Maams....enna idhellam ippadi oru soga kadhal kadhaya ungalukulla......bayangara ezhudhi irukeenga.. //


மாப்ள.. இந்த உணர்வெல்லாம் என்னுடயதே இல்லை.. உன் கவிதை படித்தேன்.. ரொம்ப கஷ்டப்பட்டிருக்க போல.. அது தான் மாப்ள உணர்வை அப்படியே உள்ள இழுத்தி எழுதுன கவிதைப்பா.. ஹிஹிஹி

said...

//....athoda extended version dhaan unga post.... //

சரியா சொன்னா, உன்னோட கவிதையின் நாயகனின் நினைவுகள் தான் இந்த கவிதை கட்டுரை மாப்ள

said...

//idhu toppu...wow...romba anubavichi ezhuthirukeenga //

நன்றிங்க gils

said...

//neenga sollunga....yaar andha ponnu???? //

மாப்ள நான் கேட்ட கேள்விக்கு நீ என்ன பதில் சொல்லியிருப்பியோ அதே தான் இதுக்கும்.. ஹிஹிஹி.. நல்ல எஸ்கேப்ல

said...

//nachunu irruku mappu. //

Thanks Mams

said...

//Ada foto ellam maatri jammunnu irukkar karthik,ungal kaathalukku best of luck //

ஹனிஃப், அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க.. இது அடுத்தவர்களின் உணர்ச்சிகளை உள்வாங்கி எழுதியது..

said...

// ரொம்ப கஷ்டப்பட்டிருக்க போல.. அது தான் மாப்ள உணர்வை அப்படியே உள்ள இழுத்தி எழுதுன கவிதைப்பா.. //....Unga paasa mazhayila nananji oru azhuvaachi azhuvaachiya varudhu maams...

//உன்னோட கவிதையின் நாயகனின் நினைவுகள் தான் இந்த கவிதை கட்டுரை//...eppadi irundalum...indha kavikaturai super-o super :)

said...

//Unga paasa mazhayila nananji oru azhuvaachi azhuvaachiya varudhu maams...//

மாப்ள.. உனக்கில்லாத மழையா.. இது கோடையில் உனக்காக பொத்துகொண்டு ஊற்றும்

//...eppadi irundalum...indha kavikaturai super-o super :)

நன்றி மாப்ள

said...

தலீவரே...same ஆணி here...attendance pls :-)

Anonymous said...

enna ithu...

verum cinema mattumthaan ezhuthurennu varuthapatta aalaappa ithu...

suma polanthu kattirikeenga... pala kavithaihala serthu oru katturaiyaa potturikeenga...

evvalavu periya ezhuthaalaraa neenga?

kanvulaka karthi illai
kanavulaka kamban...

summaa atitchi aadunga...

Anonymous said...

// உணர்ந்த கடவுளை, பார்க்க முடியவில்லை என்பதால் பாடாமல் இருக்க முடியுமா?//

அழகான முடிவு வரிகள் .... romba feel panni eludhi irukeenga.... enna aachu?

(நான் எப்பொவுமே கடசி படிச்சிட்டு திரும்ப முதல்ல இருந்து படிப்பென்!)

Anonymous said...

/இலை உதிரும் போதெல்லாம் சின்ன சின்ன காயம்பட்ட அவ்வழி மரங்கள்//

என்ன அழ்கான கருத்து!!... பாருங்கப்பா.. இலை உதிர்வது மரத்துக்கு சின்ன சின்னா காயமாம்!
super!

Anonymous said...

//அவளருகில் அமர்ந்து மௌனங்களை மட்டுமே நான் பரிமாற, அவள் வார்த்தை விருந்தே வைக்கிறாள் எனக்கு.. இடைவிடாத அந்த பரிமாறல்களின் முடிவில், எழுகையில் எனக்கு இன்னும் பசிக்கிறது, அவளுக்கோ விருந்தே கொண்டது போல் நிம்மதி இருக்கிறது.. இப்படித்தான் இருக்குமோ காதல்.. //

எதை விட.. எதை சொல்ல என்றே சொல்ல முடியாதாளவு அழகான வரிகள் அத்தணையும்!

இப்படிதான் காதல்..வந்தால்!

Anonymous said...

//அதே அளவு காதல்.. கிரிஷ்ணனுக்கு மட்டுமா அட்சய பாத்திரம் சொந்தம். இதோ என் இதயமும் ஒரு அட்சய பாத்திரம் தான்.. எடுக்க எடுக்க குறையாமல் வருகிறது அவளைப்பற்றிய எல்லா நினைவுகளும்//

அழகு! அருமை!

chance a illa kaarthi.. enna achu! yaarantha thevathai?

Anonymous said...

//பூமி இங்கே சூரியனை சுற்ற மறந்து நிலவைத் தான் சுற்றுகிறது//
//மரங்கள் வரவேற்பு....மெருகேறியே கிடக்கிறது//
//ஊரே என்னைச் சுற்றி இயங்கி கொண்டிருக்க, நானோ அவளை சுற்றி ஊர்வலம் போகிறேன்//
Uvamailaan pottu supera describe panni irukkeenga.. azhaga ezhudhareenga.. innum neraya ezhudhi asathunga :)

Anonymous said...

Karpanaiyaa irundhaalum nalla anubavichu rasichu ezhudhi irukkeenga :-)

Naanum neraya karpanailiyae vaazhara aalungaradhaala enjoyed every word of ur post :-)

Anonymous said...

//உணர்ந்த கடவுளை, பார்க்க முடியவில்லை என்பதால் பாடாமல் இருக்க முடியுமா?//

Shajahan padathula mellinamae songsla vara indha lines dhan enakku nyaabagam vandhudhu :)
"bhagavaan pesuvadhillai
ada bakthiyil kurai edhum illai
Kadhaali pesavum illai
en kaadhal kuraivadhum illai" :-)

Anonymous said...

//எல்லாம் அவள் வந்து இதழால் சிரித்து, செவியோர முடிகற்றைகளை ஒதுக்கியவாறே, வளைந்து என்னருகே அமர்ந்த போது, அந்த பயிற்சி பெற்ற வார்த்தைகள் சொல்லாமல் கொள்ளாமல் என்னை விட்டு நடக்க ஆரம்பித்தன.//

enna oru feelings thalai.. kalkuringa.. mm ennaku enna sollurathena theriyala. mm

superb.. kadhalin valeemai kadhalithaal dhaan therium ingara unmai dhaan pola iruku.

said...

அனுபவிக்காம இப்பிடி எல்லாம் எழுத முடியாது கார்த்திக்.

அடுத்தவங்க
மனச உள்வாங்கி
வார்த்தைகள வெளிவிட்டேன்
அப்பிடி எல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகப்படாது கார்த்திக்.

//
அவள் இதழ் சொல்லித்தான் என் பெயரின் சுவை தெரிந்தது
//
இது சூப்பர்...

said...

"உங்க மனசுல யாரு , அவங்களுக்கென்ன பேரு ?"

சொல்லுங்க
சொல்லுங்க
சொல்லுங்க
(பாட்ஷா ஸ்டைல்)

நீங்க வேற 300+ பதிவுகள போட்ருக்கீங்க !!!

said...

//இது அடுத்தவர்களின் உணர்ச்சிகளை உள்வாங்கி எழுதியது..//

காதலை விட காதலை பற்றிய கற்பனைகள் சுகமானது.

அந்த கற்பனைகளால்தான் காதல் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்த கற்பனைகள் கானல் நீர் மட்டுமே.

நதியாய் காதல் பாயும் நாள் நெடுந்தொலைவில் இல்லை...

நதியைத் தேடி நெடும்பயணம் கொள்க.

(இது போன்ற அருமையான காதல் உள்ளத்துக்கு குளம் குட்டைகள் ஏற்றவை அல்ல)

காதல் உள்ளமே...
நீவிர் நீடு வாழ்க...

said...

மறு வாசிப்பிற்கு பிறகு தங்களை காதல் கடலாய் காண்கிறேன்..

நெடும்பயணங்கள் தேவையில்லை...

நதி நிச்சயமாய் நாடி வரும். :)))

Anonymous said...

//ஐந்து காலண்டர்களை மாற்றிவிட்டேன்//

அடுதவங்கள்கிட்ட உள் வாங்கின கருத்து மாதிரி இல்லயே... ம்ம்

//நீண்ட அந்த நெடுஞ்சாலையிலே, மரங்கள் வரவேற்பு வளையம் போட்டுக் கவிழ்ந்து கிடந்த சோலையிலே, நடந்து நடந்து அந்த தார் ரோடு பழுதடைந்துபோனது//

இப்பதான் சென்னை மகாபலிபுரம் சாலைய பத்தி ஒரு பதிவ வேற பார்த்தேன்..

என்னப்பா கார்த்தி ... ஒகே கமிங்கு டூ பாயிண்ட்.

நான் ரசித்த வரிகள்:

//செவியோர முடிகற்றைகளை ஒதுக்கியவாறே, வளைந்து என்னருகே அமர்ந்த போது, அந்த பயிற்சி பெற்ற வார்த்தைகள் சொல்லாமல் கொள்ளாமல் என்னை விட்டு நடக்க ஆரம்பித்தன. அமர்ந்த பின், மெல்ல வில்லிமை தூக்கி, செவ்விதழ் சுழித்து, புருவத்தால் அவள் செய்த சைகையில் இதயம் தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்தது//

//ஊரே என்னைச் சுற்றி இயங்கி கொண்டிருக்க, நானோ அவளை சுற்றி ஊர்வலம் போகிறேன். அப்படியொரு ஓய்யார பயணத்திலே, ஓரிடத்தில் ஓய்வுக்காய் நான் அமரும் வேளை கவனிக்கிறேன், அவள் என்னில் ஊர்வலம் போன பாத சுவடுகளை..
//
//உணர்ந்த கடவுளை, பார்க்க முடியவில்லை என்பதால் பாடாமல் இருக்க முடியுமா//

அவள் பதிந்த சுவடுகள்
உன் பாடலின் வரிகளாயின.

நீ பாடுகின்ற பாடலின்
ராகம் இப்போது தான் புரிகிறது.

பாடி பாடி இசையாகிப் போவாயோ?

said...

//மெல்ல வில்லிமை தூக்கி, செவ்விதழ் சுழித்து//

கவிதை நடையில் இருக்கு இது.

//அவளின் அருகாமை சொல்லித்தான் என்னின் காந்தம் புரிந்தது. அவள் புன்னகை எழுதிய குறிப்பில் தான் என் அருமை எனக்கே புரிந்தது.அவள் தலைசாய்த்து பார்க்கும் பார்வையில் என் மீதான கர்வம் தலை நிமிர்ந்து நிற்கிறது.//

என்னா கருத்து பா. நல்லா எழுதறீங்க.

said...

என் பங்குக்கு நானும் ஒரு பின்னூட்டம் போட்டுக்குறேன்..

வைரர் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது...

"காதல் மங்கை சொன்ன வார்த்தை
கவிதையில் கிடையாது
ஆட காதலிக்கும் ஆட்கள் போலே
கவிஞர்கள் கிடையாது "

கலக்குங்க கவிஞர் கார்த்தி....
நட்புடன்,
ராஜ்.

said...

//தலீவரே...same ஆணி here...attendance pls //

நல்ல ஆணி புடுங்குங்க, நாட்டாமை

said...

//suma polanthu kattirikeenga... pala kavithaihala serthu oru katturaiyaa potturikeenga...

evvalavu periya ezhuthaalaraa neenga?

kanvulaka karthi illai
kanavulaka kamban...
//
உங்கள் வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஜி

said...

//அழகான முடிவு வரிகள் .... romba feel panni eludhi irukeenga.... enna aachu?//

சும்மா தாங்க ட்ரீம்ஸ்.. என்ன கருவில் எழுதலாம்னு நினச்சப்போ இது ஞாபகம் வந்தது.. வேற ஒண்ணும் இல்லை

said...

//என்ன அழ்கான கருத்து!!... பாருங்கப்பா.. இலை உதிர்வது மரத்துக்கு சின்ன சின்னா காயமாம்!
//


ஆமாங்க ட்ரீம்ஸ்.. மரத்தோட கிளைகளில் அந்த இலைகள் விழுந்தவுடன் சின்னதா ஒரு தடம் இருக்கும்ங்க..அது தான்

said...

//எதை விட.. எதை சொல்ல என்றே சொல்ல முடியாதாளவு அழகான வரிகள் அத்தணையும்!

இப்படிதான் காதல்..வந்தால்!
//

நன்றிங்க ட்ரீம்ஸ்

said...

//அழகு! அருமை!

chance a illa kaarthi.. enna achu! yaarantha thevathai?
//

நானும் தேடிகிட்டு தான் இருக்கேன் ட்ரீம்ஸ்

said...

//Uvamailaan pottu supera describe panni irukkeenga.. azhaga ezhudhareenga.. innum neraya ezhudhi asathunga //

Thanks G3

said...

//Karpanaiyaa irundhaalum nalla anubavichu rasichu ezhudhi irukkeenga :-)

Naanum neraya karpanailiyae vaazhara aalungaradhaala enjoyed every word of ur post//

கற்பனை சக்தி இருந்தால் எதை வேண்டுமென்றாலும் சொல்லலாம் என்பது என் எண்ணம்ங்க G3

said...

//Shajahan padathula mellinamae songsla vara indha lines dhan enakku nyaabagam vandhudhu :)
"bhagavaan pesuvadhillai
ada bakthiyil kurai edhum illai
Kadhaali pesavum illai
en kaadhal kuraivadhum illai"//

அது வைரமுத்துவின் அழகான வரிகள் G3

said...

//enna oru feelings thalai.. kalkuringa.. mm ennaku enna sollurathena theriyala. mm

superb.. kadhalin valeemai kadhalithaal dhaan therium ingara unmai dhaan pola iruku//

நன்றி அடியா.. காதலின் வலியை உணரலைனாலும் ஏதோ நம்மாலும் சொல்ல முடியும்ங்கிற நம்பிக்கை இருக்கு அடியா

said...

//அனுபவிக்காம இப்பிடி எல்லாம் எழுத முடியாது கார்த்திக்.

அடுத்தவங்க
மனச உள்வாங்கி
வார்த்தைகள வெளிவிட்டேன்
அப்பிடி எல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகப்படாது கார்த்திக்.

//


எனக்கு மட்டும் அனுபவிக்கனும் ஆசை இல்லையா என்ன அருண்.. கொடுப்பினை இல்ல... என்ன செய்ய

said...

//"உங்க மனசுல யாரு , அவங்களுக்கென்ன பேரு ?"

சொல்லுங்க
சொல்லுங்க
சொல்லுங்க
(பாட்ஷா ஸ்டைல்)

நீங்க வேற 300+ பதிவுகள போட்ருக்கீங்க !!!

//


அட நீ வேறப்பா.. ஏன் வெந்த புண்ணுல வேலை பாய்ச்சுற

said...

//நதியாய் காதல் பாயும் நாள் நெடுந்தொலைவில் இல்லை...

நதியைத் தேடி நெடும்பயணம் கொள்க.
//

நன்றிங்க அரை பிளேடு

said...

//மறு வாசிப்பிற்கு பிறகு தங்களை காதல் கடலாய் காண்கிறேன்..

நெடும்பயணங்கள் தேவையில்லை...

நதி நிச்சயமாய் நாடி வரும்.//

உங்கள் வார்த்தைகள் ஆண்டவன் அருளால் பலிக்கட்டும் பிளேடு

said...

//அடுதவங்கள்கிட்ட உள் வாங்கின கருத்து மாதிரி இல்லயே... ம்ம்

////

நிஜம் மாதிரி இருக்கட்டுமேன்னு தான் மணி.. ஆனா னிஜம் இல்லை

said...

//அடுதவங்கள்கிட்ட உள் வாங்கின கருத்து மாதிரி இல்லயே... ம்ம்

////


நிஜம் மாதிரி இருக்கட்டுமேன்னு தான் மணி.. ஆனா நிஜம் இல்லை மணி

said...

//பாடி பாடி இசையாகிப் போவாயோ?
//

இசையாகி காற்றாகி கலக்கணும் நண்பா

said...

//என்னா கருத்து பா. நல்லா எழுதறீங்க. //


நன்றிங்க அரசி

said...

//கலக்குங்க கவிஞர் கார்த்தி....
நட்புடன்,
ராஜ்.
//

நன்றிங்க ராஜ்.. முதல் வருகைக்கு நன்றி

said...

//தலைவரே இந்த பதிவுக்கு நான் வந்து விரிவுரை எழுதறேன் இப்போதைக்கு அட்டெண்டன்ஸ் ப்ளீஸ்//

அது என் பாக்கியம் வேதா

Anonymous said...

adra sakka
romba rasithaen karthik. kalakiteenga

//சூரியனின் வட்டபாதையை சுற்றியே பழக்கப்பட்ட பூமி பந்து போல, அவளையே சுற்றுகிறது என் காற்றாடி மனம்.. அதிலும் ஒரு அதிசயம். பூமி இங்கே சூரியனை சுற்ற மறந்து நிலவைத் தான் சுற்றுகிறது.. அப்படி சுற்றி சுற்றியே தலை சுற்றி மயக்கப்பட்டாலும், மறுபடியும் கனவாக விரிகிறது அவள் பற்றிய எனது நினைவுகள்..//
beautiful lines.

appuram ilai udhirum marangaL. dhoool.

idhuvarai neenga poatadhil, best of your post nu solluvaen.

said...

eley! ennaley achu? pattaya kalakki irukka!
nadai summa nachunu irukku!

blog vidu thoothaa? nadakattum, nadakkatum! :p

Anonymous said...

mu.kaa. idhu enna nija kadhaiya?! muzhukka padikradhukulla vendaikkai aacha nu phone varudu cha!

said...

நல்ல வேளை! ஒரு புது போஸ்ட் தான் இருக்கு :)

said...

தலைவா... கலக்கல். நாளுக்கு நாள் உங்க எழுத்து மெருகேறுது. தமிழ்ல பூந்து விளையாடியிருக்கிங்க.

எல்லாமே அசத்தல்னாலும், என் favorites:
//அவளருகில் அமர்ந்து மௌனங்களை மட்டுமே நான் பரிமாற, அவள் வார்த்தை விருந்தே வைக்கிறாள் எனக்கு.. //


//என் நான்கு இதய அறைகளிலும் தாறுமாறாய் கிடக்கிற சின்ன பெரிய புத்தகங்களில் எல்லாம் அவளை பற்றிய குறிப்புகளே அதிகமாய் விளைந்து கிடக்கின்றன.. அதனையெல்லாம் எத்தனை முறை படித்ததோ, சிவந்து போய் கிடக்கிறது என்னிதயம்.//

//என்ன சொல்லி என்ன புண்ணியம்.. இப்படி காற்றில் மட்டுமே கவிதை பாட, வெறுங்கையால் மட்டுமே முழம் போட, எனக்கு பழகிவிட்டது. இதிலும் ஒரு சுகம்.. உணர்ந்த கடவுளை, பார்க்க முடியவில்லை என்பதால் பாடாமல் இருக்க முடியுமா? //

said...

சிட்டுக்குருவி உங்க பழைய ஞாபகத்தலாம் கிளறி விட்டுடுச்சு போல..

said...

//நாளுக்கு நாள் உங்க எழுத்து மெருகேறுது. தமிழ்ல பூந்து விளையாடியிருக்கிங்க.//

பிரியா சொல்றது அப்படியே உண்மை கார்த்தி. தமிழிலேயே முடிஞ்ச அளவு எழுதணும்னு நினைக்கிறதையே பாராட்டணும். இன்னும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு மட்டும் நீங்க செய்யவேண்டியிருக்கு. ஒரு தமிழ்த் தட்டச்சுப் பெட்டி ஒண்ணு போடுங்க உங்க பதிவுல. அவங்கவங்க தங்கிலீஷுல தட்டிட்டுப் போயிடறாங்க, அதெல்லாம் வாசிச்சா சீக்கிரம் கண்ணு கெட்டுப்போயிடும் போலிருக்கு.. அதனால 99% தங்கிலீஷ் பின்னூட்டங்களை நான் வாசிக்கிறதேயில்லைன்னு ஒரு பாலிஸி வச்சிருக்கேன் இப்பல்லாம் (கொள்கைக்கு ஒண்ணும் குறைச்சலில்ல :-D) கார்த்திக் பிரபு என்ற ஒருவரின் வலைப்பூவிலும் இதையே தான் இன்னிக்கு சொன்னேன்.

Anonymous said...

//
மை பிரண்ட், நொங்கெடுக்கிற வேலைக்கு நடுவிலையும் முதல் பின்னூட்டமா? இந்தா பிடிங்க சைவ பிரியாணி //

aahaa.. chaiva briyaani arumai.. ;-)

said...

//சுவரில் ஒட்டிய போஸ்டராக இல்லாமல் உங்கள் மனதில் ஒட்டிய நினைவாய் இருக்க விரும்புகிறாளோ//

அதே அதே வேதா.. ஒட்டுதல்களில் தான் ஓவியங்கள் உருவாகின்றன சுவர்களில்.. பிரிதலிலே தான் பெயர்க்கப்படுகிறது அவைகள்.. நினைவுகள் என்னும் அளவிலே என்னை ஏலம் விட்டவள் அவள்

said...

//பாவம் அந்த மரங்களுக்கு தெரியவில்லை அவள் நினைவுகள் என்றும் முறியா கிளைகளாய் உங்கள் மனம் என்னும் மரத்தில் இருப்பது//

மனம் தொட்டு செல்லும் அருமையான விரிவுரை வேதா..

said...

//நடந்த வார்த்தைகள் அவள் மனமென்னும் கோயிலுக்குள் கண்டிப்பாக வீற்றிருக்கும், கருவறைக்குள் வீற்றிருக்கும் கடவுளைப் போல//

வேதா.. நான் ஆரம்பித்து முடிவை சொல்ல, நீங்கள் அதிலிருந்து ஆரம்பித்து அருமையான முடிவை தந்திருக்கிறீர்கள்

said...

//ஆம் அது ஒரு கற்பகத்தரு கேட்பதெல்லாம் கொடுக்கும் மரம்//

சொல்லாமல் விட்ட ஒன்றாய் அழகை விரித்து சொல்லி இருக்கிறீர்கள் வேதா

said...

//வாவ், என்ன சொல்றது ஒரே ஒரு உண்மையை தவிர, தலைவரே எனக்கு உங்கள் எழுத்தைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது//

எல்லாம் உங்களை போன்ற நண்பர்களின் உற்சாக வார்த்தைகளும், உங்களின் பதிவுகளின் கற்றுக்கொண்டதும் தான் வேதா

said...

//appuram ilai udhirum marangaL. dhoool.

idhuvarai neenga poatadhil, best of your post nu solluvaen//

நன்றி மாமு..

said...

//eley! ennaley achu? pattaya kalakki irukka!
nadai summa nachunu irukku!

blog vidu thoothaa? nadakattum, nadakkatum!//

நன்றி அம்பி..

அட.. ஏனப்பா.. பிளாக் விடு தூதுன்னு என்னென்னமோ சொல்ற.. ஏதோ நான் மனசு ஆறாம எழுதுறேன்.. அதுல ஏனப்பா இப்படி ஒரு சந்தேகம் உனக்கு அம்பி

said...

//mu.kaa. idhu enna nija kadhaiya?! muzhukka padikradhukulla vendaikkai aacha nu phone varudu cha!//

நிஜம் எல்லாம் இல்லை பொற்கொடி.. முழுமையான கற்பனை..

வெண்டைக்காய் குழம்பா.. மனுஷன் ஆபீசுல கோடு அடிக்கிறாரா இல்லியா..

said...

/நல்ல வேளை! ஒரு புது போஸ்ட் தான் இருக்கு //

பிரியா.. என்ன இது.. நான் ஒரு போஸ்ட்டு தானே இருக்குனு கவலைபடுவீங்கன்னு நினைச்சேன்

said...

//தலைவா... கலக்கல். நாளுக்கு நாள் உங்க எழுத்து மெருகேறுது. தமிழ்ல பூந்து விளையாடியிருக்கிங்க.//

ஹிஹிஹி.. நன்றி ப்ரியா.. எல்லாம் உங்களை போன்ற நண்பர்களின் இடைவிடா வாசிப்பும், உற்சாக பின்னூட்டங்களும் தான்

said...

//சிட்டுக்குருவி உங்க பழைய ஞாபகத்தலாம் கிளறி விட்டுடுச்சு போல.. //

அப்படி எல்லாம் இல்லைங்க பிரியா.. ரொம்ப நாள் கழிச்சு இப்படி எழுதினா, அதுக்கு இப்படி கண்ணு காதெல்லாம் வைக்கிறீங்களேப்பா

said...

//தமிழிலேயே முடிஞ்ச அளவு எழுதணும்னு நினைக்கிறதையே பாராட்டணும்//

உங்க பாராட்டுக்கு நன்றிங்க அரசி..

//ஒரு தமிழ்த் தட்டச்சுப் பெட்டி ஒண்ணு போடுங்க உங்க பதிவுல. //
நீங்கள் ஏற்கனவே சொன்னதையே இன்னும் செய்யலைங்க.. கட்டாயம் செய்றேங்க அரசி..

said...

//aahaa.. chaiva briyaani arumai.. //

அட அப்படி போடுங்க

Anonymous said...

நண்பரே இன்றுதான் வாசித்தேன்...

அழகாய் அருமையாய் இருக்கிறது எழுத்து நடை!!!

வாழ்த்துக்கள்...

said...

//அழகாய் அருமையாய் இருக்கிறது எழுத்து நடை!!!

வாழ்த்துக்கள்... //

நன்றிங்க அருட்பெருங்கோ

said...

romba nalla irukuthunga...sela varthaikal arumai...

Anonymous said...

realy very nice sir !!!

Thank you somuchhhhhhh