Thursday, January 18, 2007

வாஷிங்டன் - ஒரு நகர்வலம் (இரண்டாம் பகுதி)

வாஷிங்டன் - ஒரு நகர்வலம் (முதல் பகுதி)லிங்கன் அவர்களின் நினைவு மண்டபத்தை பார்த்து வியந்தவாறே நாம், வலது பக்கம் நடந்தால் அங்கே கொரியா போரின் நினைவிடம் ஒன்று இருக்கிறது.. அங்கே கைகளில் துப்பாக்கி ஏந்திய, கண்களில் அந்த வீரம் மின்ன, பதினைந்துக்கும் மேற்பட்ட வீரர்களின் சிலைகள் உள்ளன. தினமும் இங்கே கொரியா நாட்டு தூதரகத்தின் சார்பாக மலர்வளையம் வைக்கப்படுகிறது. இந்த நினைவிடத்தின் பக்கவாட்டில் கறுப்புக்கலர் கற்களால் ஒரு சுவர் அமைக்கப்பட்டு அதில் பல வீரர்களில் உருவங்கள் பதிக்கப்பட்டிருகின்றன. இது மட்டுமில்லாமல் "சுதந்திரம் சும்மா கிடைப்பதில்லை" என்னும் வாசகமும் பொறிக்கப்பட்டிருக்கிறது.இதன் மறுபுறத்தில், லிங்கன் மண்டபத்தின் இடது பக்கத்தில் வியட்னாம் போரின் நினைவிடமும் இருக்கிறது. இங்கே போரில் போராடிய பல்லாயிரக்கணக்கான வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தினமும் அன்றைய தேதியில் மறந்து போன வீரர்களுக்கு அவர்களின் குடும்பத்தின் சார்பாக மலர்ச்செண்டு வைக்கிறார்கள். நாட்டின் தலைநகரம் என்பதால் எல்லா இடங்களில் தேசப்பற்று சார்ந்த விஷயங்களே மிகுதியாக தெரிகிறது. இந்த நினைவு இடங்களுக்கு எல்லாம் நாம் சென்று திரும்பும் போது, காதுகளில் துப்பாக்கி ஓசையும் பீரங்கி முழக்கங்களும், கண்களில் போர்க்களத்தின் காட்சிகளும், இதயத்தில் அவர்களின் நாட்டுபற்றும் அதற்கு அவர்கள் தந்த விலையும் இமயமாக எழுந்து நிற்கிறது..

(நம்ம ஊரில் இன்னமும் தலைவர்கள் சிலைக்காக அடித்துக் கொள்வதை கண்ட அந்த கணங்கள் இந்த மாதிரி இடங்களில் ஞாபகம் வர மிகவும் வருந்தினேன்..)இந்த இடத்திலிருந்து அப்படியே நேரா நடந்து போனால், எலிப்ஸ் பூங்கா வரும்.. அதன் மேல்பக்கத்தில் தான் வெள்ளை மாளிகை. உள்ள விட மாட்டாங்கன்னு தெரியும்.. அதனால வெளில இருந்தே பார்த்தோம்.. வெளியில் இருந்து பார்த்ததாலோ என்னவோ அப்படி ஒன்றும் பெரிய விஷயங்கள் இதில் இருப்பதாக தெரியவில்லை.. ஜனாதிபதி இருக்கிறார் என்பதை தவிர. ஆனால் வெள்ளைமாளிகையை நமது ராஷ்ட்ரபதி பவனோடு ஒப்பீடு செய்தால் எனக்கு ராஷ்ட்ரபதி பவன் தான் பிடித்திருக்கிறது.. ஒவ்வொரு முறையும் ராஷ்ட்ரபதி பவனில் உள்ள பூந்தோட்டத்திற்கு சென்று வந்தவர்கள், அதை பற்றிச் சொல்லும் போதும் அவர்களுடன் நாமும் சென்று வந்ததை போல இருக்கும். ஆனால் அதெல்லாம் வெள்ளை மாளிகையில் இருக்கிறதா என்று பக்கத்தில் குடியிருக்கும் நமது நாட்டாமை தான் சொல்ல வேண்டும். ஆனால் நம்ம ஊருக்கு போனால் எல்லோரிடமும் காட்ட வேண்டுமே அதனால்.. வெள்ளை மாளிகை முன்பு சராமாரியாக புகைபடங்கள் எடுத்துக் கொண்டேன். அதை எடுத்துக் கொண்டு ஊரில் காண்பித்தால் தான் நான் அங்கே சென்று வந்ததாக நம்புவார்கள். நான் நியுயார்க் மற்றும் பல இடங்களுக்கு சென்று வந்த புகைப்படங்கள் அடங்கிய டிவிடி எங்கள் ஊரில் வீடு வீடாய் சுத்திக்கொண்டிருக்கிறது. என்னை பாக்கவில்லை என்றாலும் அமெரிக்காவின் பல இடங்களை பார்க்கலாமே என்று தான் அவர்கள் என் முகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.வெள்ளை மாளிகையை தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு, அமெரிக்க பாராளுமன்றத்தை பார்க்க கிளம்பினோம். அதன் போகும் வழிகளில் இருந்த கட்டிடங்கள் எல்லாம் மிரட்டலாய் இருந்தன. அழகாய் வடிவமைக்கப் பட்டு, உயரமாய், நமது மதுரை திருமலை நாயக்கர் மஹால் தூண்களை போல எல்லாக் கட்டிடங்களிலும் தூண்கள் நின்று அந்த கட்டிடங்களை தாங்கி கொண்டிருந்தன. சிவப்பு நிற வண்ணத்தில் சில் கட்டிடங்கள் பார்ப்பதற்கு ரம்மியமாய் இருந்தது. அமெரிக்க பாராளுமன்றத்தின் அருகில் செல்ல சில பாதுகாப்பு காரணங்களால் போக முடியவில்லை என்பதால் தூரத்தில் இருந்தே பார்த்து வழக்கம் போல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். என்னதான் வெயில் காலங்களில் ஊரை சுத்தி பார்த்தாலும் இந்த மாதிரி ஒரு அழகிய ரசிப்பதற்கேற்ப வானம் கருப்பு ஆடை அணிந்து கிடக்கும் இந்த வேலையில் நகரின் தெருக்களில் நடப்பது சுகமானது.அதுவும் வருடத்தின் முதன் நாளில் இப்படியொரு இனிய பயணம் அந்த வருடமெல்லாம் வசந்தமே என்று நெஞ்சுக்கள் ஒரு சந்தோச விதயை தூவின. அந்த சந்தோச விதை இன்று மரமாய் விளைந்து நிற்கின்றன. அப்படியே பரவி இனிய பூக்களை தூவுகின்றன ஒவ்வொரு நாட்களிலும் நடகின்ற பாதையில் பரப்புகின்றன. அந்த சந்தோச வாசனை படிக்கின்ற எல்லோர் மனசிலும் கலந்து வாழ்வு செழிக்க, காற்றில் கலந்து எங்கும் குடியிருக்கும் இறைவனின் அருளால் கிடைக்க எனது வாழ்த்துக்கள்.

25 பின்னூட்டங்கள்:

said...

அட.. அதுக்குள்ள இன்னொன்னு...
I m the 1st one here too...

said...

எனக்கு சரியாக ஞாபகமில்லை. ஆனால் இந்த கொரியப் போர் நினைவிடம் என்றுதான் நினைக்கிறேன். அல்லது வியட்நாம் போர் நினைவிடமா என மறந்துவிட்டேன்.

இங்கு இருக்கும் ஒவ்வொரு வீரரும், அப்போரில் பங்கேற்ற நாட்டினைக் குறிப்பதாகவே நிறுவப்பட்டுள்ளது. அச்சிலைகளின் கீழ் அந்த நாடுகளின் தகவல்களும் இருக்கும். அதிலொன்று இந்தியா!!

Anonymous said...

thalaivaa...eppadi ungalaala ivlo matter solla mudiyudhu...chancae illa ponga.

washington dc poi konja naal aagudhu. aana unga post paatha appuram enakku DC kitta vaazndha naatkal dhaan ninaivukku varudhu. I was in maryland for 5 months. adhaan. super post maamu

C.M.HANIFF said...

Nalla pathivu, payanangal mudivathillai ;)

Anonymous said...

payana katturayin irandavathu pagamum super :)

//சுதந்திரம் சும்மா கிடைப்பதில்லை//...arthamulla vasagam...makkaluku ithoda arumai puriyaradhu illa

Anonymous said...

//அமெரிக்காவின் பல இடங்களை பார்க்கலாமே என்று தான் அவர்கள் என் முகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்///...enna maams varungala hero neenga...ippa eppadi mgr thottam iruko..pinnaalil sevvandhi thotamum appadi oru pugazh uchiki poga pogudhu :)

said...

தலீவரே...அந்த வெள்ளை மாளிகைக்கு வெளியே நின்னு இப்போ போட்டோ எடுத்து இருக்கீங்க...உள்ள இருந்து ஆட்சி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்து...பேச வாய்பளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்... :-)

said...

யாராவது வந்து உனக்கு எல்லாம் யாரு பேச வாய்ப்பு அளிச்சா அப்படினு எல்லாம் அசிங்கமா திட்டபடாது... :-)

said...

இன்னொன்னு....அது என்ன விடை மற்றும் பெறுகிறேன் கேள்வி யாரு பெறுவாங்கனும் கேக்கபடாது...அப்புறம் அழுதுறுவேன் :-)

said...

சூப்பர் தலைவரே!

// நான் நியுயார்க் மற்றும் பல இடங்களுக்கு சென்று வந்த புகைப்படங்கள் அடங்கிய டிவிடி எங்கள் ஊரில் வீடு வீடாய் சுத்திக்கொண்டிருக்கிறது.//

கவலைப் படாதிங்க. கொஞ்ச நாள்ல உங்க (திருட்டு) DVT உலகமெல்லாம் சுத்தும்.

said...

உங்களையே உள்ள விடலியா? எவன் அவன்?

வழக்கம்போல பயணக்கட்டுரை சூப்பர் கார்த்திக்

said...

//நமது மதுரை திருமலை நாயக்கர் மஹால் தூண்களை போல எல்லாக் கட்டிடங்களிலும் தூண்கள் நின்று அந்த கட்டிடங்களை தாங்கி கொண்டிருந்தன//

இது கிரேக்க கட்டிட அமைப்பு என்று நினைக்கிறேன் (Greek architecture) அமெரிக்காவில் பல பழம்பெரும்ம் கட்டிடங்களில் இவ்வடிவமைப்பைக் காணமுடியும்.

நான் வெள்ளை மாளிகையைப் பார்த்ததில்லை (வெளிப்புறம் கூட!) ஆனால் பாராளுமன்றத்தை (US Capitol) உள்ளேயும் பார்த்திருக்கிறேன். அந்த dome மற்றும் மொத்தக் கட்டிடமுமே, வெளிப்புறமும் சரி உட்புறமும் சரி, கல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு மண்டபத்தை (Victoria Memorial) நினைவுபடுத்தியது.

Anonymous said...

ம்ம்.. இரண்டாவது நகர்வலம் வந்துடுச்சா! good!

Anonymous said...

// தினமும் இங்கே கொரியா நாட்டு தூதரகத்தின் சார்பாக மலர்வளையம் வைக்கப்படுகிறது//
touching போங்க! நம்ம நாட்டுல எவன் மதிக்கிரான்!! Military காரனுக்கு பொண்ணே கொடுக்க மாட்டேன்கராங்க!

Anonymous said...

//என்னதான் வெயில் காலங்களில் ஊரை சுத்தி பார்த்தாலும் இந்த மாதிரி ஒரு அழகிய ரசிப்பதற்கேற்ப வானம் கருப்பு ஆடை அணிந்து கிடக்கும் இந்த வேலையில் நகரின் தெருக்களில் நடப்பது சுகமானது.
//

என்ன அருமையான் வர்ணனை!

Anonymous said...

நல்லா சொல்லி இருக்கீங்க! Super! போங்க! நானே வாஷிங்டன் நடந்தது மாதிரி ஒரு உணர்வு!

said...

attendance mattum vandhu podum thalai avargale vanakkam ;)

Indha madhiri namma naatla super-a manage panna nalla irukumla

said...

அன்பு கார்த்திக்...
உங்கள் பயண அனுபவங்களை நல்லா சொல்லி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்

said...

//அட.. அதுக்குள்ள இன்னொன்னு...
I m the 1st one here too...
//

இந்த தடவை நீங்க தான் முதல் வீரகுமார்

said...

//இங்கு இருக்கும் ஒவ்வொரு வீரரும், அப்போரில் பங்கேற்ற நாட்டினைக் குறிப்பதாகவே நிறுவப்பட்டுள்ளது. அச்சிலைகளின் கீழ் அந்த நாடுகளின் தகவல்களும் இருக்கும். அதிலொன்று இந்தியா//

இது தெரியாத விஷயங்க இலவசகொத்தனர்.. தகவலுக்கு நன்றிங்க

said...

//Nalla pathivu, payanangal mudivathillai //


Thanks Haniff

said...

//arthamulla vasagam...makkaluku ithoda arumai puriyaradhu illa
//

உண்மை தான் மாப்ள.. சுதந்திரத்தின் அருமை இப்போ இருக்கும் முக்கால்வாசி பேருக்கு தெரிவதில்லை

said...

//enna maams varungala hero neenga...ippa eppadi mgr thottam iruko..pinnaalil sevvandhi thotamum appadi oru pugazh uchiki poga pogudhu //


மாப்ள.. உன் பாசத்துக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நன்றிப்பா.. அப்படி ஒரு தோட்டம் சென்னைல வச்ச பக்கத்துலயே உனக்கும் உண்டுபா

said...

//உள்ள இருந்து ஆட்சி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்து...பேச வாய்பளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்//

நாட்டாமை, ரொம்ப நாள் கழிச்சு மைக் கிடைச்சிருக்கும் போல.. இந்த வாங்கு வாங்குறீங்க..

said...

/யாராவது வந்து உனக்கு எல்லாம் யாரு பேச வாய்ப்பு அளிச்சா அப்படினு எல்லாம் அசிங்கமா திட்டபடாது//

நாட்டாமை உங்களுக்கு இல்லாத உரிமையா