Sunday, January 21, 2007

புது வெள்ளை மழை இங்கு பொழிகிறது

டேய் கார்த்தி.. எழுந்திரு.. என்ஜாய் பண்ணனும்னா வெளிய பாரு.. சரியான உறக்கத்தில் இருந்தேன். நண்பனின் குரல் என்னை எழுப்பியது. சோம்பலுடன் எழுந்து பார்த்தால் ஜன்னலுக்கு வெளியே பனி மழை.. அதுவும் ஏற்கனவே தரையெல்லாம் மூடி மரத்தில் வெள்ளைப்பூ பூக்க ஆரம்பித்தது. இத்துணை நாட்களாய் வெளியேறாத பனிக் குருவி கீச் கீச்சென்று மரத்துக்கு மரம் பறந்து கொண்டிருந்தது.. தானாகவே கண்கள் அந்த முதல் விழிப்பிலேயே பிரகாசமானது. அவசர அவசரமாய் குளித்து விட்டு வழக்கம் போல போட்டோ செசனுக்கு கிளம்பினோம்.



எப்பவும் டிசம்பர் மாதம் 15 முதலே பனி பெய்ய ஆரம்பித்துவிடும். இங்கிருக்கும் மக்கள் ஒவ்வொரு கிறிஸ்துமஸையும் வெள்ளை கிறிஸ்துமஸ்னு பனியோடு கொண்டாடுவார்கள். இந்த தடவை அப்படி கொண்டாட முடியவில்லை என்று எல்லோருக்கும் ஒரு வருத்தம். ஜனவரி ஆகியும் பனி பெய்ற மாதிரி தெரிவதில்லை. சரி.. அடுத்த வருசம் இங்கே இருப்போமான்னு தெரில.. இந்த தடவை பனியை பார்க்காமலே இந்திய போற மாதிரி ஆகிடுமோன்னு பார்த்தா, இப்படி நல்லா தூங்குற காலை நேரத்துல சட்டுன்னு வானத்தை பொத்துக்கொண்டு பனி மழை.. அந்த பனி மழையை பார்க்கவே சிறு குழந்தையாகி பனியோடி விளையாட வேண்டும் என்ற ஆசை மனசுக்குள் பரவியது..



குடியிருக்கும் அபார்ட்மன்ட்டை விட்டு வெளியே வந்தால், கிட்டதட்ட நாலு, அஞ்சு இஞ்ச் உயரத்துக்கு பனி பெய்திருந்தது. இன்னமும் இறகு போல பனி மழை பெய்து காற்றில் அசைந்தாடி கொண்டிருந்தது.. அந்த பனியில் இறங்கியது தான் தாமதம்.. மனசுக்குள் அப்படி ஒரு உற்சாக ஊற்று ஓடியது.



கிட்டதட்ட ஒரு மணி நேரம் பனியில் பந்து விளையாடினோம். பனியையே எறிந்தும் விளையாடினோம். பார்க்கும் சின்ன சின்ன இடங்களில் எல்லாம் பனி அப்படி அப்பிகிடந்தது. ரொம்ப நாள் ஏக்கம் மனசுக்குள் தீர்ந்த ஒரு திருப்தி இருந்தது.

அந்த என் உற்சாக போட்டோக்களை இங்கே உங்கள் மனசுக்குள் கண் வழியே ஏற்றுகிறேன் நண்பர்களே.

39 பின்னூட்டங்கள்:

said...

hehe.. angayum vandaachaa...

inga neraya peyyudunnu naan thaan konjam anuppi vachen :)
ensoooi pannunga thala :)

said...

இந்தத் தலைப்பை மனசுக்குள் வைத்துக்கொண்டு நானும் காத்திருந்தேன். வானிலை அறிக்கைப் படி நாளைக்கு முதல் நானொரு நல்ல தலைப்பு தேடியெடுக்க வேண்டும்.

Anonymous said...

enga areala mazhai peiyudhu ma....n as usual kaathala partha ellam velai mazhaiyave irukudhu..

snaps ellam sooper karthi....adhenna netriyil thiruneera, apdina nan kandippa appreciate panren, ippadi parthu romba naalachu namma aalungala paarthu...apdi illanalum sooberappu..

Anonymous said...

Innum enga pakkam (paris) varallai ;)

said...

I'm going J brother.. looking like a kid playing with all that snow!!
Enjoy

said...

கார்த்திகேயன் , எங்க ஊரிலேயும் இதே கதைதான்.
குளிரில்லாத பனிமழையில் நடப்பது சுகமாக இருந்தது.
படங்கள் நல்லா வந்து இருக்கு.
எங்கே இருக்கீங்க நீங்க?

Anonymous said...

ha naan thaan 6th!

Anonymous said...

angayum vandhuducha! good! inga ore frozen rain.. atha 3 naal kalichu drive way clean panna try panni, back udanjathu thaan micham :(

said...

முதல் வருசமில்ல... அப்படித்தான் இருக்கும். அப்புறமெல்லாம்... ஹூம்ம் (பெருமூச்சு! :-)) நான் இங்கே வந்த முதல் வருசம் 30" ஸ்னோ. நொந்துபோயிட்டேன்.

Anonymous said...

Yup,this time yella idathula yum late snow. Enjoy.Very nice photos MK.

Anonymous said...

Aaha.. Kalakkala enjoi pandreengala pani mazhaiyai :)) Aanalum ungalukku stamina konjam jaasthi pola.. Jerkin kooda podaama pose kuduthirukkeenga :)) Eppavum pola neenga mattum ensoi pannaama adha photo pudichu engalukkum kaamcheenga paarunga.. anga dhaan neenga nikkareenga :))

Anonymous said...

Pani kku waiting in my place :-)

said...

What happened? No reply in any respect? Too busy? or enjoying too much? OK enjjjjjjjjjooooooooooy! Anyhow do not forget my blog.

Anonymous said...

ungalukkum vanthuducha.... naan than ungalukkum arun'kum anupi vechan :) ensoi pannunga :)
Skiing poi paarunga innum super'a irukkum :)

Anonymous said...

title paathu madhubaala kooda dhaan gujaal nu nenachu bayandhuttaen..sari sari..

new jersey la irundhu pani varakoodaadhunnu vaendi irundha oruthar pandhu vilayaadaraa..ennatha solla ..hehe ellam indha maadhi bachelor life la dhaan doi...kalyaanam aagattum vera pandhu kabalatha nooki varum lol

photos ellam gummm maams...

said...

ஆகா snow நல்லா என்சாய் பண்ணறீங்க போல...எங்களுக்கும் லேட் தான் ஆனா முதல் நாள் நாற அடிச்சிடுச்சு..ரோடு எல்லாம் clean பண்ணாம ஏகப்பட்ட accidents...

said...

snow nalla enjoy panreenga pola...first snow have fun :-)

said...

engalukum late snow thaan last sunday...roads ellam clean pannama lot of accidents...myself witnessed 7 on the road...so pathetic here...

said...

@சேதுக்கரசி,

//நான் இங்கே வந்த முதல் வருசம் 30" ஸ்னோ. நொந்துபோயிட்டேன்//

Denver ல இருக்கீங்களா... :-)

said...

/inga neraya peyyudunnu naan thaan konjam anuppi vachen :)
ensoooi pannunga thala //

ஓ.. நீங்க தான் அனுப்பி வச்சியா அருண்.. ரொம்ப நன்றிப்பா.. இதை பாக்கவே முடியாதான்னு ரொம்பத்தான் ஏங்கி போயிருந்தேன்

said...

/இந்தத் தலைப்பை மனசுக்குள் வைத்துக்கொண்டு நானும் காத்திருந்தேன். வானிலை அறிக்கைப் படி நாளைக்கு முதல் நானொரு நல்ல தலைப்பு தேடியெடுக்க வேண்டும்//

சயந்தன், புதுசா நிறைய தலைப்புகள் கிடைக்குமுங்க கவலைப்படாதீங்க

said...

/snaps ellam sooper karthi....adhenna netriyil thiruneera, apdina nan kandippa appreciate panren, ippadi parthu romba naalachu namma aalungala paarthu...apdi illanalum sooberappu.. //

நாம திருநீறு இல்லாம இருந்ததே இல்லை ரம்யா

said...

//Innum enga pakkam (paris) varallai //

சொல்லி அனுப்பி இருக்கேன்.. சீக்கிரம் வந்திடும் ஹனிஃப்

said...

/I'm going J brother.. looking like a kid playing with all that snow!!
Enjoy//

ஆமா தங்கச்சி.. நம்மளை பொறுத்தவரை எல்லாத்தையும் நல்லா என்ஜாய் பண்ணனும்

said...

/கார்த்திகேயன் , எங்க ஊரிலேயும் இதே கதைதான்.
குளிரில்லாத பனிமழையில் நடப்பது சுகமாக இருந்தது.
படங்கள் நல்லா வந்து இருக்கு.
எங்கே இருக்கீங்க நீங்க? //

அப்படி சொல்லுங்க வல்லி.. நான் இப்படி பட்ட ஒரு தருணத்திற்காக தான் காத்துகிடந்தேன்..

நான் ஒஹாயோவின் தலைநகர் கொலம்பஸில் இருக்கிறேன் வல்லி

said...

//angayum vandhuducha! good! inga ore frozen rain.. atha 3 naal kalichu drive way clean panna try panni, back udanjathu thaan micham//

ஓ.. நீங்களும் நல்லா என்ஜாய் பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன் ட்ரீம்ஸ்.. பாத்து செய்யுங்க எதுனாலும் ட்ரீம்ஸ்

said...

//முதல் வருசமில்ல... அப்படித்தான் இருக்கும். அப்புறமெல்லாம்... ஹூம்ம் (பெருமூச்சு! :-)) நான் இங்கே வந்த முதல் வருசம் 30" ஸ்னோ. நொந்துபோயிட்டேன்.

//

ஓ.. அப்படியா.. 30" ரொம்ப ஓவர் தான் அரசி.. தினமும் மழை பெய்தாலும் ரசிப்பவன் நான் அதிலே.. அதனால் தெரில பனியையும் அப்படி ரசிப்பேனா என்று..

said...

//Yup,this time yella idathula yum late snow. Enjoy.Very nice photos MK. //

Thanks SKM.. I am really enjoy. As u said, this time everything is late

said...

//Aaha.. Kalakkala enjoi pandreengala pani mazhaiyai :))//

ஆமாங்க G3.. சிறு குழந்தையாய் மாறி விளையாண்டேன்

// Aanalum ungalukku stamina konjam jaasthi pola.. Jerkin kooda podaama pose kuduthirukkeenga :)) //
ஹிஹி.. ஆமாங்க G3.. அது என்னமோ ஜெர்கின் போடவே எனக்கும் பெரும்பாலும் பிடிக்கிறதில்லை

//Eppavum pola neenga mattum ensoi pannaama adha photo pudichu engalukkum kaamcheenga paarunga.. anga dhaan neenga nikkareenga //
ஹிஹி.. ரொம்ப நன்றிங்க

said...

//Pani kku waiting in my place //
ஓ.. சீக்கிரமா வர வாழ்த்துக்கள்

said...

//What happened? No reply in any respect? Too busy? or enjoying too much? OK enjjjjjjjjjooooooooooy! Anyhow do not forget my blog.//

தலைவியே உங்க பிளாக்கை மறக்க முடியுமா என்ன

said...

//ungalukkum vanthuducha.... naan than ungalukkum arun'kum anupi vechan :) ensoi pannunga :)
Skiing poi paarunga innum super'a irukkum //

அப்படியா.. ரொம்ப நன்றிங்க KK

said...

//title paathu madhubaala kooda dhaan gujaal nu nenachu bayandhuttaen..sari sari..//

கிட்டு.. மதுபாலாவா.. இப்போ அது எத்தனை பேரன் பேத்திக்கு பாட்டியோ

//new jersey la irundhu pani varakoodaadhunnu vaendi irundha oruthar pandhu vilayaadaraa.. ennatha solla ..hehe ellam indha maadhi bachelor life la dhaan doi...kalyaanam aagattum vera pandhu kabalatha nooki varum lol//

மாமு.. என்ன எப்படி பயமுறுத்துறீங்க


//photos ellam gummm maams...
//
ரொம்ப நன்றிங்க மாமு

said...

//ஆகா snow நல்லா என்சாய் பண்ணறீங்க போல...எங்களுக்கும் லேட் தான் ஆனா முதல் நாள் நாற அடிச்சிடுச்சு..ரோடு எல்லாம் clean பண்ணாம ஏகப்பட்ட accidents... //

ஆமாங்க நாட்டாமை.. நானும் இங்கே பல ஆக்சினென்டுகளை பாத்தேன்

said...

//snow nalla enjoy panreenga pola...first snow have fun//

Yes Shyaam

said...

//Denver ல இருக்கீங்களா... :-)//

இல்லை நாட்டாமை (:-)) அப்ப பிலடெல்பியாவில் இருந்தேன், 30" வந்தாதால 2 நாளைக்கு ஊரையே இழுத்து மூடிட்டாங்க :-) அதுவரைக்கும் கார் இல்லாம உருப்படியா தான் இருந்தோம், அந்த வார இறுதி தெரியாம ஒரு கார் வாடகைக்கு எடுக்கப் போக, அதை உக்காந்து கிளீன் பண்ணி.. வேண்டாத வேலையாப் போச்சு.

said...

நான் சென்ற வருடம் எழுதிய கவிதையின் ஒரு பகுதி இதோ:


ஆஆஆ...
என்ன குளிர்! என்ன குளிர்!
கடகடக்கும் பற்களுடன்
கம்பளியைப் போர்த்திக்கொண்டு
தேநீர்க் கோப்பையுடன்
சன்னலோரமாய் அமர்ந்து
கொட்டும் பனியைக் காண்பதும்
பட்டும் படாமலும் அதில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
ஒருதுளி பனியுடன் உரையாடி
உனை நேர்த்தியாய் வடிவமைத்துப்
புல்வெளியை நேசிக்க அனுப்பிய
பொறியாளன் யாரென்று வியப்பதும்
அனைத்தும் ஓய்ந்த நிசப்தத்தில்
அகிலம் முழுதும் உறங்குகையில்
ஒன்றரையடிப் பனிமலையில்
ஓடமுடியாமல் ஓடிவிளையாடுவதும்
வெறுமையாய் நிற்கும் மரங்களின்
வெள்ளிப் பனியுடை காண்பதும்
கட்டாயம் சொல்லவைக்கும்...
கடுமையாய் இருந்தாலும்
குளிர்காலம் தனி அழகு!

said...

இதைப் பாருங்க:
http://sivamgss.blogspot.com/2007/01/193.html

said...

அருமையான கவிதை.. உங்களுக்குள் உறங்கி கிடப்பது இவ்வளவு ஆற்றலா.. தனியாக நீங்கள் பதிவு போடவில்லை என்றாலும் இப்படியாவது படைப்புகள் போடுவதற்கு நன்றிங்க அரசி