Friday, January 12, 2007

கிராமத்துப் பொங்கல்

இப்போது இந்த நேரம் எனது ஊரில் இருந்திருந்தால், காணும் பொங்கலுக்கு வருடாவருடம் நடத்தும் விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு பண்ணிகொண்டிருப்பேன் என் நண்பர்கள் கூட சேர்ந்து.. காலை பத்து மணி முதல் இரவு பதினொரு மணி வரை போட்டிகள் நடக்கும். ஐந்து வயது குழந்தைகள் முதல் எழுபது வயது குமரன் வரை எல்லோருக்கும் போட்டிகள் உண்டு.. இதில் மாலை நான்கு மணிக்கு மேல நடக்கும் போட்டிகள் தான் சுவராஸ்யமானவை. கண்ணை கட்டிக்கொண்டு கயிற்றில் தொங்கும் மஞ்சள் தண்ணீர் நிரம்பிய பானையை உடைத்தல் போட்டி ரொம்ப ரசிக்க வைப்பதாய் இருக்கும். சில பேர், கண்ணை கட்டி விட்ட பிறகு பானையை நோக்கி நடக்காமல் கூட்டத்தை நோக்கி தடியோடு நடப்பதை பார்த்தால் ரொம்ப சிரிப்பாய் இருக்கும்.. நாங்கள் என் சென்னை டைடல் அலுவலகத்தில் இதே மாதிரி போட்டியை, பானைக்கு பதிலாக பலூனை வைத்து விளையாடினோம்.. அதை தொடர்ந்து கபடி போட்டி நடக்கும்.. இது மெல்ல சூரியன் அடிவனத்தில் தஞ்சமடையும் நேரம் நடக்கும்.. வேலைக்கு போய் திரும்பிய மக்கள் எல்லோரும் இதில் பார்க்கும் கூட்டதில் இருப்பதால் கூட்டம் இதற்கு மட்டும் அதிகமாக இருக்கும். கபடி போட்டியை பத்தி ஏற்கனவே கதைத்து விட்டதால் அதற்கு பிறகு வரும் மாறுவேடப் போட்டி பற்றி பார்ப்போம்..

எனக்கு இந்த மாறுவேட போட்டிகள் மிகவும் பிடிக்கும்.. இதற்கு வயது வரம்பு கிடையாது.. எல்லோருடைய திறமைகளையும் காட்ட கிடைக்கும் அற்புதமான களம். அதுவும் கிராமத்தில் வளரும் குழந்தைகளுக்கு இது போன்ற போட்டிகள் தான் தங்களை கூராக்கி கொள்ள உதவும். இதில் போட்டி போட்டுக்கொண்டு குழந்தைகள் நிறைய பேர் கலந்துகொள்வார்கள்.. அவர்கள் கண்ணனாக, ராணுவ வீரனாக, கட்டபொம்மனாக வேடமிட்டு செய்யும் குறும்புகள் நம்மை பூமி விட்டு தனி உலகத்துக்கு அழைத்துச் செல்லும்.. இந்த மாதிரி போட்டிகளிலும் சில பிரச்சினைகள், வம்புகள் உண்டு.. சில பசங்க சினிமாவில் வரும் ஐயிட்டம் நம்பர் பாடல்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஆபாசமாக வேற ஆட முயற்சிப்பார்கள்.. அவர்களையும் முகம் கோணாமல் சமாளிக்க வேண்டும்.. இல்லையெனில் அவ்வளவு தான். அதுவும் இந்த மாதிரி போட்டிகளை காண குறைந்தபட்சம் ஊர் ஜனமே கூடி இருக்கும் அங்கே. அப்பொழுது இது போல முகம் சுழிக்க வைக்கும் செய்கைகளை அனுமதிக்கக்கூடாது..

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல்.. எங்கள் ஊரில் இருக்கும் எல்லா மாடுகளும் கழுவப்படும். கொம்புகள் மெருகூட்டப்பட்டு வண்ண வண்ண பெயிண்டுகள் அடிக்கப்படும். இதிலும் ஒரு கவனிக்கதக்க விஷயம் உண்டு. அந்த மாடுகளும் தங்கள் கொம்புகளில் முதலாளி கட்சியின் கொடி நிறத்தை சுமந்திருக்கும். ஜல்லிக்கட்டு காளைகள் கிட்டதட்ட ஒரு இருபது எங்கள் ஊரில் உண்டு. அந்த மாடுகளின் கொம்புகள் கூராக சீவப்பட்டிருக்கும். எப்படி பள்ளீயில் படிக்கும் போதும் ஒவ்வொரும் பென்சிலையும் ஆசை ஆசையா, கூரா சீவி வச்சிருப்போமோ அது மாதிரி அந்த கொம்புகளை சீவி வைத்திருப்பார்கள். மாடு வைத்திருக்கும் எல்லோர் வீடுகளிலும் பொங்கல் வச்சு சாமி கும்பிட்ட பின்னாடி, கிறித்தவர்கள் சர்சுக்கும் இந்துக்கள் கோவிலுக்கும் மாடுகளை அழைத்துச் செல்வார்கள். எல்லா சம்பிரதாயங்களும் முடிந்த பின், அன்றைக்கு சிறிய அளவில் எங்க ஊரில் ஜல்லிக்கட்டு நடக்கும்.

எங்க ஊர் மாடுகளும் மற்ற இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு போய் வரும். அப்படி போவதற்கு முன், எங்க ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எழுதாத விதி. ஒரு முறை அப்படி எங்க ஊர் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளாமல் வெளியூருக்கு மாடுகளை அழைத்து சென்றதால் அந்த மாடுகளுக்கு ரத்தம் வருமளவு காயங்கள் உண்டாகின.. ஜல்லிக்கட்டு அன்றைக்கு எங்கள் கையில் ஒரு முழு நீள கரும்பு இருக்கும்.. தோகை சீவப்பட்டு, அடி வேருள்ள கணுக்கள் நீக்கப்பட்ட பெரிய கரும்பு இருக்கும்.. ஜல்லிகட்டு முடியும் முன் எப்படியும் இது மாதிரி மூன்று நான்கு கரும்புகளை தின்று தீர்த்திருப்போம். இவ்வளவு பெரிய கரும்பு வைத்திருப்பதிலும் ஒரு காரணம் உண்டு. ஏதாவது மாடுகள் அப்போது பக்கத்தில் வந்தால் இந்த கரும்பு உதவட்டுமே என்று தான்.

இந்த பொங்கல் விழாவை ஆரம்பித்தவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். வருடம் முழுக்க, மண்ணை பிளந்து, ஏரில் ஏறி, விதைகள் விதைத்து, அது முளை விடும் வரை கண் முழித்து, வாய்க்கால் வரப்புகளில் படுத்துக் கிடந்து இந்த உலகம் உய்ய வாழ்பவன் விவசாயி. எனக்கு தெரிந்து எந்த விவசாயியும் நல்ல சட்டை போட்டதில்லை. பணக்காரன் ஆனதில்லை. (பணக்காரன் ஆனதெல்லாம் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்து விவசயம் செய்யும் மிட்டா மிராசுதார்கள் மட்டுமே) நான் சின்ன வயசுல் எப்படி பார்த்தேனோ அப்படியே இன்னும் இருக்கிறான். வற்றிய குளங்களை போலவே அவன் வயிறு இருக்கிறது.. இன்னும் அதே கூரை வீடுகள் தான் அவன் உறங்க, சமைக்க, அடுத்த தலைமுறையை விதைக்க அவனுக்காய் இருக்கிறது.. ஆனால் எவ்வளவு நடந்தாலும் அவன் விவசாயம் செய்வதை விட்டுவிட வில்லை.

இதில் இயற்கை வேறு அவனை பயமுறுத்துவதுண்டு.. ஒரு வருடம் மழையே இல்லாமல், நிலங்கள் வெடிக்க, அடுத்த வருடம் வரும் மழை அவன் பயிரை எல்லாம் குடித்து போனது.. இவ்வளவு கஷ்டப்பட்டு அவன் செவ்வந்தி தோட்டத்தில் சம்பாரித்தால், வாழை தோட்டத்தில் அந்த பணம் எல்லாமே போயிருக்கும், நேற்று அடுத்த காற்றீளோ, வாய்க்குள் நுழையாத பூச்சியின் காரணமாகவோ.. நெல் பயிரிடும் விவசாயி அதை சாப்பிடுவதே இல்லை. சோளமும் கம்பும் தான் அவன் பசியாற்றுகின்றன.. இப்படி அவன் உழைத்து உருகி போகும் வேலையில், அவன் கூடவே வாழ்ந்து, அவை வாழ வைப்பது இந்த மாடுகள் தான்.. அதற்கும் நன்றிகள் சொல்கிறான்.. சூரியனுக்கும் நன்றி சொல்கிறான்.. கிணற்று தண்ணீருக்கு, அந்த வயல்வெளி தோட்டத்துக்கு என்று எல்லாவற்றுக்கும் அவன் நன்றி சொல்கிறான்..

மாறி மாறி வரும் அரசுகள் அவனுக்காய் என்ன செய்கின்றன.. முறையான உதவிகள், ஆலோசனைகள், அவன் கேள்விகளை தீர்த்து வைக்கும் கருத்தரங்குகள்..ஏதேனும் ஒழுங்காய் நடத்துகிறதா.. நான் இதுவரை, எங்கள் ஊரில் இப்படி நிகழ்ச்சிகள் நடந்ததை விரல் விட்டு எண்ணிவிடுவேன்.. ஆனால் எப்போது அடித்துகொண்டாலும் அவனை பற்றி தான் அடித்துகொள்கிறார்கள். விவசாயியின் காவலனாய் காட்டிகொள்வதிலே குறியாய் இருக்கிறார்கள். இவனது வாழ்க்கையை யாருமே பார்ப்பதில்லை, பொங்கல் அன்று வாழ்த்து செய்தி விடவும், தேர்தலின் பொழுது வாக்குகள் பெற வாக்குறுதி தரவும் பயன்படுத்துகின்றன..

ஒரு பக்கம் விவசாய நிலங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு தொழிற்சாலைகள், மற்றும் வெள்ளை காலர் நிறுவனங்கள் எழுகின்றன.. அதை கொண்டு வருவதற்கு செய்யும் முயற்சிகளை, விளம்பரங்களை விவசாயத்திற்கு செய்வதில்லை..

இந்த பொங்கலிலாவது, எல்லோரும் சொல்வது போல, விவசாயிக்கு, தை பிறந்து வழி பிறக்குமா?

நண்பர்கள் அனைவருக்கும்,தமிழகம் மட்டுமல்ல, உலகம் எல்லாம் உழைக்கும் விவசாய மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

55 பின்னூட்டங்கள்:

Anonymous said...

naan firsta?

Anonymous said...

பொங்கல் பற்றிய மிக அருமையான post.. நல்லா இருக்கு!

Anonymous said...

//
எங்க ஊர் மாடுகளும் மற்ற இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு போய் வரும். அப்படி போவதற்கு முன், எங்க ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எழுதாத விதி. ஒரு முறை அப்படி எங்க ஊர் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளாமல் வெளியூருக்கு மாடுகளை அழைத்து சென்றதால் அந்த மாடுகளுக்கு ரத்தம் வருமளவு காயங்கள் உண்டாகின.. ஜல்லிக்கட்டு அன்றைக்கு எங்கள் கையில் ஒரு முழு நீள கரும்பு இருக்கும்.. தோகை சீவப்பட்டு, அடி வேருள்ள கணுக்கள் நீக்கப்பட்ட பெரிய கரும்பு இருக்கும்//

நமக்கும் கிராமம் தான்! அங்கேயும் ஜல்லிகட்டு களைகட்டும்! ஆனால், நான் விவரமா, மாடில இருந்து பார்ப்பென்! போட்டிக்கு முன் மாட்டுக்கு கொடுக்கும் சாராயம் வரை...

Anonymous said...

//இந்த பொங்கல் விழாவை ஆரம்பித்தவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். வருடம் முழுக்க, மண்ணை பிளந்து, ஏரில் ஏறி, விதைகள் விதைத்து, அது முளை விடும் வரை கண் முழித்து, வாய்க்கால் வரப்புகளில் படுத்துக் கிடந்து இந்த உலகம் உய்ய வாழ்பவன் விவசாயி//

அதை அழகா சொன்ன உங்களுக்கும் தான்!

said...

attendance boss. Reading - tomorrow.

said...

first comment ?

Anonymous said...

//மாடு வைத்திருக்கும் எல்லோர் வீடுகளிலும் பொங்கல் வச்சு சாமி கும்பிட்ட பின்னாடி, கிறித்தவர்கள் சர்சுக்கும் இந்துக்கள் கோவிலுக்கும் மாடுகளை அழைத்துச் செல்வார்கள்.//

Very interesting..

விவசாயிகளின் இன்றைய நிலை குறித்த உங்களின் ஆதங்கம் புரிகிறது. விவசாயிகள் இன்னும் விவசாயத்தை தொழிலாக எண்ணாமல், எங்கப்பன் விவசாயி, என் பாட்டன் விவசாயி, என் மூதாதையர்கள் விவசாயம் செய்தார்கள், எனவே நானும் விவசாயம் செய்கிறேன் என்ற ரீதியில் பாடுபட்டால் ஒரு பிரயோசனமும் இல்லை. குறைந்த செலவில் அதிக விளைச்சலை எடுப்பது எப்படி என்று விவசாயி யோசிப்பதில்லை. படித்து பட்டம் பெற்ற அடுத்த தலைமுறையினர் யாரும் விவசாயத்தில் இறங்க விரும்புவதில்லை. விவசாயிகளின் நிலை ஒரே மாதிரியாக தொடர்கிறது அல்ல்து வீழ்ச்சியடைகிறது. பார்க்கலாம், எதிர்காலம் எப்படி இருக்குமென்று.

'கான்வென்ட்' பள்ளியில் படித்தாலும், இன்றைக்கு அமெரிக்காவில் பணி புரிந்தாலும், வார இறுதியில் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சியதும், காட்டில் மாடு மேய்க்கச் சென்றதும் மறக்க முடியாத இளவயது நினைவுகள்.

உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

- ஒரு முன்னாள் விவசாயியின் மகன்.

Anonymous said...

Again First??

Anonymous said...

என்ன இது விளையாட்டு சீசனா?

எல்லாரும் தன் பங்குக்கு ஒவ்வொரு விளையாட்டுகளாய் அறிமுகப்படுத்திகிட்டு இருகாங்க! நீங்களும் தான் !!!

நல்ல இருக்கு.. பொங்கல் கொண்டாடியிருந்தாலும், இப்படி கணைகட்டி பானை உடைக்கும் விளையாட்டையெல்லாம் படத்தில்தான் பார்த்துள்ளேன். :-(

said...

நல்ல பதிவு கார்த்திகேயன்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

said...

//naan firsta?//

நீங்களே தான் ட்ரீம்ஸ்

said...

//பொங்கல் பற்றிய மிக அருமையான post.. நல்லா இருக்கு! //

நன்றிங்க ட்ரீம்ஸ்

said...

//நமக்கும் கிராமம் தான்! அங்கேயும் ஜல்லிகட்டு களைகட்டும்! ஆனால், நான் விவரமா, மாடில இருந்து பார்ப்பென்! போட்டிக்கு முன் மாட்டுக்கு கொடுக்கும் சாராயம் வரை...
//

அப்படி போடுங்க ட்ரீம்ஸ்.. சராயம் வரைனு நீங்க கொடுத்த அழுத்தம் நீங்க எந்த அளவுக்கு கிராமம்னு சொல்லுது..

என்னோட சாராயக்கதைகள் அப்படிங்கிற போஸ்ட் படிச்சிருக்கீங்களா ட்ரீம்ஸ்

said...

//அதை அழகா சொன்ன உங்களுக்கும் தான்! //

இந்த விஷயத்துக்காக என் கிராமத்துக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் ட்ரீம்ஸ்..

நீங்க எந்த ஊரை சேர்ந்தவர் ட்ரீம்ஸ்

said...

//attendance boss. Reading - tomorrow.//

குறித்துக் கொண்டேன் ப்ரியா

said...

//first comment ?

//


ட்ரீம்ஸ் முந்திக்கிட்டாரு ப்ரியா

said...

//'கான்வென்ட்' பள்ளியில் படித்தாலும், இன்றைக்கு அமெரிக்காவில் பணி புரிந்தாலும், வார இறுதியில் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சியதும், காட்டில் மாடு மேய்க்கச் சென்றதும் மறக்க முடியாத இளவயது நினைவுகள்.

உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

- ஒரு முன்னாள் விவசாயியின் மகன்.
//

இந்த பொங்கல் நன்னாளில் உங்களை சந்திக்க நேர்ந்ததுக்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் நன்பரே..

உங்கள் பெயரை சொல்லி இருக்கலாமே அனான்

said...

//Again First?? //

இல்லைங்க தோழியே.. நம்ம ட்ரீம்ஸ் முந்திக்கிட்டாரு

said...

//நல்ல இருக்கு.. பொங்கல் கொண்டாடியிருந்தாலும், இப்படி கணைகட்டி பானை உடைக்கும் விளையாட்டையெல்லாம் படத்தில்தான் பார்த்துள்ளேன்//

ஓ.. படத்தில் தான் பார்த்ததுண்டா மை பிரண்ட்.. எங்கள் ஊரில் வருடம் ஒருமுறையாவது இந்த விளையாட்டு நடக்கும் மை பிரண்ட்

said...

/நல்ல பதிவு கார்த்திகேயன்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.//

நன்றிங்க அரைபிளேடு...

உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Anonymous said...

Ungalukku engal iniya pongal vaashthukkal ;)

Anonymous said...

நமது அம்மா வழி ஊரு.. தர்மபுரி பக்கம் காவேரிபட்டினம் என்னும் அழகான ..சற்றே பெரிய கிராமம்..

சுத்தி உள்ள கிரமத்தில் இருந்து எல்லாம் இங்க வந்து தான் ஜல்லிகட்டு..

அப்பா வழி ஊரு நம்ம கட்டபொம்மனை விதைத்த மண்..
உங்களது?

Anonymous said...

Aaaha.. Inga varathukulla oru post pottu next post'um potachu :O

Nice post..

Very informative :)
Tamil'a podrathu is really nice..Keep writing :)

said...

நல்ல பதிவு கார்த்தி. எங்க பாட்டி வீட்டுல, எங்க வீட்டுலயெல்லாம் ரொம்ப காலத்துக்கு மாடு இருந்ததால இதையெல்லாம் கொஞ்சமாவது அனுபவிச்சு மகிழ்ந்திருக்கேன்னு ஒரு திருப்தி இருக்கு. பொங்கலைப் போலவே மாட்டுப்பொங்கலும் பெரிய விசேசமா இருக்கும். அந்த வீதியில் இருக்கவங்கல்லாம் ஒரொரு வாழையிலை நிறைய உணவை எங்க வீட்டு மாட்டுக்குக் கொண்டுவந்து கொடுப்பாங்க :-)

said...

//Ungalukku engal iniya pongal vaashthukkal //

நன்றிங்க ஹனிஃப்.. பிரான்ஸில் எப்படி பொங்கல் கொண்டாட போறீங்க

said...

/அப்பா வழி ஊரு நம்ம கட்டபொம்மனை விதைத்த மண்..
உங்களது? //

ட்ரீம்ஸ், எனது ஊர் திண்டுக்கலில் பக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். பெயர் அ.வெள்ளோடு.. எனது பதிவில் எல்லாம் எனது ஊர் பெயர் அடிக்கடி சொல்லி இருப்பேனே

said...

//
Very informative :)
Tamil'a podrathu is really nice..Keep writing ///


நன்றிங்க பொன்னா

said...

//நல்ல பதிவு கார்த்தி. எங்க பாட்டி வீட்டுல, எங்க வீட்டுலயெல்லாம் ரொம்ப காலத்துக்கு மாடு இருந்ததால இதையெல்லாம் கொஞ்சமாவது அனுபவிச்சு மகிழ்ந்திருக்கேன்னு ஒரு திருப்தி இருக்கு. பொங்கலைப் போலவே மாட்டுப்பொங்கலும் பெரிய விசேசமா இருக்கும். அந்த வீதியில் இருக்கவங்கல்லாம் ஒரொரு வாழையிலை நிறைய உணவை எங்க வீட்டு மாட்டுக்குக் கொண்டுவந்து கொடுப்பாங்க//

அருமை அருமை அரசி.. இது இங்கே சொல்லாமல் விட்ட சேதிகள்.. அருமையான நினைவுகள்..

said...

கானா பிரபு, உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.. உங்கள் பதிவை கட்டாயம் படிக்கிறேங்க..

தவறுதலாக உங்கள் பின்னூட்டத்தை நிராகரித்துவிட்டேன்.. மனிக்கவும்

said...

சின்ன அம்மிணி, பொங்கல் அன்னிக்கு அசின தர்ற எதுமே சுவை தாங்கோ..

உங்கள் பின்னூட்டத்தையும் தவறுதலாக நிராகரித்துவிட்டேன்.. மன்னிக்கவும்

said...

அருண், சூப்பரா சொன்ன போ.. உரியடின்னு.. அதை எல்லாம் நினச்சாலே பொங்கல் கொண்டாடின ஒரு சந்தோசம் இருக்கு இல்ல

said...

அருண், உன்னுடைய பின்னூட்டத்தையும் தவறுதலாக நிராகரித்துவிட்டேன்..
மன்னிச்சிடுப்பா

Anonymous said...

superb a ezhudhi irukkeenga.
Pongal Vazhththukkal MK.

said...

Pongal kondaduratha gramthula dhaan maams paarkalam...chennai-la ellam adhu oru saadarana naal....pongal maadhirye irukaadhu

said...

enga gramthula ivlo ellam nadakaadhu...maatu pongal konjam visheshama irukum....

said...

vivashayinga pathi neenga solli irkaradhu ellam 100% nizam....yar vandaalum avanga vaazhkai mattum maradhe illa...

said...

ungalukum pongal vaazthukal..US-la pongal vachi kondadunga...

Anonymous said...

கார்த்தி செங்கரும்பின் சுவையாய் வாழ்வு இனிக்க வாழ்த்துகள்..

மிஸ்ஸிங்க்.. கரும்பு..


//இந்த பொங்கலிலாவது, எல்லோரும் சொல்வது போல, விவசாயிக்கு, தை பிறந்து வழி பிறக்குமா//


வழிபிறக்கும்.. வாடிய பயிரெல்லாம் நிமிரட்டும் தழையட்டும் பசுமை எங்கும்...

Anonymous said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நீங்கள் சொன்னதை வழிமொழிகிறேன்

இன்னும் விவசாயத்தை உயிர் முச்சாய் செய்யும்

விவசாயி "இளா"

said...

/superb a ezhudhi irukkeenga.
Pongal Vazhththukkal MK.//

நன்றிங்க SKM.. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

said...

//Pongal kondaduratha gramthula dhaan maams paarkalam...chennai-la ellam adhu oru saadarana naal....pongal maadhirye irukaadhu
//


ஆமா மாப்ள.. நானும் ஒரு வருடம் சென்னையில் பொங்கலின் போது இருந்திருக்கிறேன்.. சென்னையில் இது சாதாரண பொங்கல் தான்பா

said...

//enga gramthula ivlo ellam nadakaadhu...maatu pongal konjam visheshama irukum....

//

ஒவ்வொரு கிராமத்துலயும் ஒவ்வொரு மாதிரி கொன்டாடுராங்க மாப்ள

said...

//vivashayinga pathi neenga solli irkaradhu ellam 100% nizam....yar vandaalum avanga vaazhkai mattum maradhe illa...

//

ஆமா மாப்ள.. எத்தனையோ நவீன விஷயங்கள் வந்திருக்கு விவசாயத்துல யாரும் அதை எல்லோருக்கும் சொல்றது இல்லை

said...

//ungalukum pongal vaazthukal..US-la pongal vachi kondadunga /

நாளைக்கு சக்கரை பொங்கல் வைக்கலாம்னு இருக்கேன் மாப்ள.. நிச்சயமா குக்கர் பொங்கல் இல்லை.. ஆனா மண் சட்டியிலேயும் இல்லை

Anonymous said...

பொங்கல் வாழ்த்துக்கள் கார்த்தி.

We city bred celebrate it in a more modest way. அதுவும் இப்ப T.Vக்கு மட்டுமே பூஜை செய்யறோம் :(

Your concerns about the plight of Farmers is understandable and appreciable. However, the fact remains that, many of the farmers are leaving agriculture and migrating to the cities in droves. It is estimated (by the census bureau) that within 20 years, 70% of TN population will be in cities.

Let us hope, at least in future, they can get a better life there, though as of now, I dont think it is any good.

Regards
SLN

said...

//பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நீங்கள் சொன்னதை வழிமொழிகிறேன்

இன்னும் விவசாயத்தை உயிர் முச்சாய் செய்யும்

விவசாயி "இளா" //

பொங்கல் வாழ்த்துக்கள் இளா.. உங்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்வதை பெருமையாய் கருதுகிறேன் இளா..

said...

//கார்த்தி செங்கரும்பின் சுவையாய் வாழ்வு இனிக்க வாழ்த்துகள்..

மிஸ்ஸிங்க்.. கரும்பு..

வழிபிறக்கும்.. வாடிய பயிரெல்லாம் நிமிரட்டும் தழையட்டும் பசுமை எங்கும்... //

மணி.. விவசாய குடும்பங்களில் என்று மகிழ்ச்சி பொங்குகிறதோ அன்றே உண்மையான பொங்கல் பா

said...

//இது ஒரு கசப்பான உண்மை, விவசாயத்தை நவீன முறையில் மேன்மைப்படுத்தவும் அதற்கான வழிமுறைகளையும் சொல்வதற்கு எந்த அரசாங்கமும் முழு முனைப்புடன் செயல்படுவதில்லை.
//

அரசாங்கம் எல்லாம் சாப்ட்டுவேர் நிறுவனங்கள் நிறுவி குக்கர் பொங்கல் வைக்கவே ஆசைப்படுகின்றன

said...

//கிராமத்துப் பொங்கல் கொண்டாடுவது என்பது எனது நீண்ட நாள் ஆசை//

சீக்கிரம் இந்த ஆசையை நிறைவேற்றுங்கள் வேதா

said...

//பொங்கல் வாழ்த்துக்கள் கார்த்தி.//

நன்றிங்க SLN.. தங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

said...

நல்ல பதிவு கார்த்தி!

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

said...

உங்க கிராமத்து பொங்கல் அனுபவங்கள் கலக்கல். நானும் இதெல்லாம் சினிமால தான் பாத்திருக்கேன்.

Anonymous said...

கார்த்திகேயன்!
தமிழக் கிராமியப் பொங்கலை மிக அழகாக விபரித்துள்ளீர்கள்.
பொங்கல் வாழ்த்துக்கள்.
யோகன் பாரிஸ்

Anonymous said...

கார்த்திக்,

அருமையான பதிவு....

said...

pathivu arumai...