Saturday, January 06, 2007

வாஷிங்டன் - ஒரு நகர்வலம் (முதல் பகுதி)

இன்னும் சொட்டுச் சொட்டாய் தான் மழை பெய்து கொண்டிருக்கிறது. வெளியில் அல்ல.. என் மனதுக்குள்.. வெளியில் சற்று முன் பெய்த மழை இன்னும் உள்ளே அந்த பாதிப்பை தந்து கொண்டுதான் இருந்தது. காலையில் புது வருஷத்தில் வாஷிங்டன் நகரமே அந்த மழையினால் கழுவப்பட்டிருந்தது.. வானம், ஆரெம்கேவியின் எந்த கலரில் பட்டுவில் ஜோதிகா கேட்பது போல் அருபத்தி ஐந்தாயிரம் வண்ணங்களில், லேசான கறுப்பும், சாம்பல் வண்ணமும் சேர்ந்த நிறத்தில் புடவை கட்டி இருந்தது.. எனக்கு இந்த மாதிரி மழைக்கு முன்னோ பின்னோ ஒரு வித இளங்குளிரில் உலகம் இருக்கும் அந்த நேரங்கள் ரொம்ப பிடித்தவை..ரம்மியமானவை.. இந்த மாதிரி பருவ நேரத்தை அவ்வளவு எளிதாக தரிசிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.. ஒவ்வொரு துளியாக மரங்கள் பூமிக்கு அனுப்பும் அந்த பொழுது வைரமுத்து பொன்மாலை பொழுது என்று எழுதிய அந்த பாட்டின் தருணத்தை விட ரசிக்க வைப்பது. ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு, ஊர் சுத்த கிளம்ப ஆரம்பித்த சமயமே வானம் மழை சாரல் மலர்களோடு எங்களை வறவேற்க தயாராய் இருந்தது. முதலில் ஒயிட் ஹவுஸை பார்க்க வேண்டும் என்று கூகிளில் எடுத்த மேப்பை கையில் வைத்துகொண்டு ஆரம்பித்தோம்..


(பிரதிபலிப்பு குளத்தில் தெரியும் வாஷிங்டன் நினைவுச் சின்னம்)

நீண்ட தூர நெடுஞ்சாலைகளில் வண்டி ஓட்டுவதை விட இது மாதிரி நகரச் சாலைகளில் ஓட்டுவது சற்று சிரமம். ஒரு இடத்தில் திரும்ப மறந்தாலும் அந்த வீதியின் பெயரை கவனிக்காமல் விட்டாலும், மறுபடியும் அந்த இடத்துக்கு வருவதற்கு, நமது கார் பல சாகசங்கள் செய்ய வேண்டி இருக்கும். வழக்கம் போல எப்படியோ எங்கேயோ வழியை தொலைத்துவிட்டோம். ஆனால் ஹோட்டலில் எடுத்த சிட்டி மேப் கைகொடுத்தது. எப்போதும் இது மாதிரி புதிய நகரத்துக்கு சென்றால் அங்கு ஓட்டலின் வரவேற்பறையில் இருக்கும் எல்லாவிதமாத கையேடுகளையும் எடுத்துக்கொள்ளுதல் இந்த மாதிரி நேரங்களில் மிகவும் உதவியாக இருக்கும்.. அதை வைத்து ஓயிட் ஹவுஸ் சென்று சேர்ந்தோம். அங்கே புஷ் நம்மை வறவேற்க தயாராய் காலை மழை போலவே காத்து கிடந்தார் என்று சொல்லி உங்களை கடுப்பேத்த விரும்பவில்லை. என்ன என்ன இடங்களை பார்க்க வேண்டும் என்று நினைத்தோமோ அதெல்லாம் நடக்கும் தூரத்திலே இருந்ததால் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு கிளம்பினோம்.


(இரண்டாம் உலகப் போர் நினைவிடத்திலிருந்து தெரியும் லிங்கன் நினைவு மண்டபம்)

முதலில் வாஷிங்டன் நினைவுச் சின்னம். தனது முதல் ஜனாதிபதிக்காக அமெரிக்கா எழுப்பிய அழகான, அமெரிக்காவின் பழைய கட்டிட கலைக்கு சான்றாக விண்ணை துளைக்குமாறு வானளாவ நிற்கிறது, இந்த வெள்ளைவண்ண நினைவுச் சின்னம். உள்ளே செல்லும் முன் எல்லாவகையிலான பாதுகாப்பு சோதனைகளுக்கும் நம்மை உட்படுத்துகின்றனர். இது கிட்ட தட்ட 160 மீட்டர் உயரம் கொண்டது. உள்ளே உச்சிவரை செல்லுமாறு லிப்ட் வசதியும் உண்டு. இதன் உச்சியில் இருந்து வாஷிங்டன் நகரத்தின் எல்லா பழம் பெரும் சின்னங்களையும் காணலாம். இந்த உயரிய நினைவு சின்னத்தை வெறும் கற்களை அடுக்கியே கட்டி உள்ளனர். முழுப் பூச்செல்லாம் கிடையாது. ஒரு தொழிற்சாலை புகைகூண்டு வடிவத்தை ஒத்து இது இருக்கிறது. உள்ளே, உச்சியிலே பார்ப்பதற்காக நான்கு திசைகளிலும் பாதுகாப்பான கண்ணாடி ஜன்னல்கள் உள்ளன. அதுவும் நாங்கள் போயிருந்த போது அப்போதிருந்த வானிலை காரணம நன்றாக எதனையும் அவ்வளவு உயரத்தில் இருந்து பார்க்க முடியவில்லை. ஆனால் கண்களை உரசியவாறு சென்றது மேக மூட்டங்கள். இந்த உயர்ந்த சின்னத்தின் பக்கவாட்டில் செயற்கை முறையிலும் வெண்புகைகளை உருவாக்குகின்றனர். உள்ளே லிப்ட் மூலம் இறங்கும் போதும் பக்கவாட்டு சுவர்களில் சில நினைவு சின்னங்களையும் சில கற் ஓவியங்களையும் பதித்திருப்பதை நாம் காணலாம். அதுவும் 150 வருஷதுக்கு முன்னலேயே இப்படி ஒரு அற்புத, வாயை பிளந்து வியக்க வைக்கிற சின்னத்தை உருவாக்கிய, பெயர் மறந்து போன அந்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்..

(இரண்டாம் உலகப் போர் நினைவிடத்தில்.. பின்னே பசிபிக் கடல் தூண்.. அதனை சுற்றிய மாநிலத் தூண்கள்)

இந்த நினைவு சின்னத்தின் வடக்கு பக்கம் ஓயிட் ஹவுஸும், கிழக்கு பக்கம் அமெரிக்க பாராளுமன்றமும், தெற்கு பக்கம் ஜெப்பர்சன் நினைவு கட்டிடமும், மேற்கு பக்கம் லிங்கன் நினைவு மண்டபமும் இருக்கிறது. இந்த நான்கு திசைகளையும் உயரத்தில் இருந்து, வாஷிங்டன் நினைவு சின்னத்திலிருந்து நீங்கள் பார்க்கலாம். நாங்கள் வழக்கம் போல இந்த சின்னத்தை சுற்றி ஒரு நடை வந்து, எங்களது போட்டோ செஷன்களை முடித்தோம். ஒரு இருபது முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நாம் சென்று வந்ததற்கு அடையாளங்கள் இந்த புகைபடங்கள் தானே. அங்கிருந்து மெதுவாக மேற்கு நோக்கி நடந்தால் அழகிய நீரூறுக்களுடன் இரண்டாம் உலகப் போருக்கான நினைவிடம் இருக்கிறது. இது வாஷிங்டன் நினைவு சின்னத்திலிருந்து ஒரு இருநூறு அடி தூரத்திலும், லிங்கன் நினைவு மண்டபத்திற்கு இருநூறு அடி முன்னாலும் உள்ளது. இந்த இடத்தை சுற்றி அமெரிக்காவின் எல்லா மாநிலத்துக்கும் தனித் தனியான தூண்கள் ஒரு அரை வட்ட வடிவத்தில் எழுப்பப்பட்டுள்ளது. எல்லா தூண்களிலும் அந்த மாநீலத்தின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு தூண்களையும் முறுக்கேறிய மாதிரி கற்கயிறுகளாலேயே இணைத்தும் உள்ளனர். இந்த அரை வட்டத்தின் கிழக்கு முடிவில் பசிபிக் என ஒரு பெரிய தூணும் கிழக்கில் அட்லாண்டிக் என்னும் தூணும் கட்டப்பட்டு ஒரு முழுமையான அமெரிக்காவை நினைவுபடுத்துகிறது. ஒவ்வொரு நீரூறிலும் நீர் கீழிலிருந்து மேல் சென்று மறுபடியும் கீழ் விழுவதை காணுகையில், இரண்டாம் உலகப் போரில் போரிட்ட ஒவ்வொரு போர் வீரனின் வேகத்தையும், அவனது துடிப்பையும் அவனது எழுச்சியையும் பறைசாற்றுவதாகவே உள்ளது.

(அந்த அழகான நடைபாதையில்)

இரண்டாம் உலகப்போரின் நினைவிடத்தை கடந்து, லிங்கன் நினைவு மண்டபத்துக்கு செல்ல ஒரு நீளமான பாதை ஒன்று வளைந்து வளர்ந்த மரங்களால் சூழப்பட்டு, இரு பக்கமும் உயர வெள்ளை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இப்போது அந்த மரங்கள் இலைகளை பூமிக்கு அனுப்பிவிட்டு குளிர்காலத்துக்காக மொட்டை அடித்துவிட்டு வேண்டுதலுடன் நிற்பது போல் இருந்தாலும், நாங்கள் சென்றிருந்த அந்த நேரத்தில் அழகாய் தெரிந்தது. அந்த நடைபாதையில் நடந்து போகையில் அப்ப கைபிடித்து குழந்தை வயதில் நடந்த அந்த காலத்தை நினைவூட்டியது எனக்கு.

(இரண்டாம் உலகப் போர் நினைவிடத்திலிருந்து தண்ணீரில் லிங்கன் மண்டபம் மிதப்பது போல் எடுத்த ஒரு புகைப்படம்)

இந்த நினைவிடத்தில் இருந்து, வளர்ந்து விரிந்த மரங்களிடையே அமைந்த நடைபாதையில் நடந்தால் லிங்கன் நினைவிடத்தை அடையலாம். இந்த இரண்டு நினைவிடத்தையும் இணைப்பது ஒரு பெரிய செவ்வகக் குளம். லிங்கன் நினைவிடம், இந்த குளம், வாஷிங்டன் நினைவுச் சின்னம் மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தை பிரதிபலிப்பு குளம் அதாவது ரிப்லெக்டிங் பூல் என்று பெயரிட்டுள்ளார்கள். போசாக்கான யானையின் கால்களை விட கிட்டதட்ட பதினைந்து மடந்கு பெரிதான பத்திற்கும் மேற்பட்ட தூண்களால் கட்டபட்டுள்ள இந்த லிங்கன் நினைவு மண்டபத்திலிருந்து பார்த்தால் வாஷிங்டன் நினைவுச் சின்னம் இந்த குளத்தில் படுத்துகிடப்பது போல் பிரதிபலிக்கும். லிங்கன் நினைவு மண்டபத்தில் அவர் அமர்ந்த நிலையில் உள்ள சிலையும் அவரது மற்றும் அவரை பற்றிய வாசகங்களும் உட்கட்டிட சுவர்களில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு இடமும் அமெரிக்க கட்டிட கலையை இறுமாப்பு கொண்ட கர்வம் கொண்ட ஒரு துறையாகவே நினைக்கத் தோன்றுகிறது.

படங்கள் எதுவும் சரியாக தெரியவில்லை என்றால் அதன் தலையில் ஒரு தட்டு தட்டுங்கள்

(தொடரும்)

92 பின்னூட்டங்கள்:

said...

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு மாப்பு, ஆனால் படத்தை நீங்க ஏதும் அல்டர் செய்தீங்களா, இழுத்து சுருக்குன மாதிரி தெரியுது சில படங்கள்.

said...

பயணக் கட்டுரை தூள் தலைவரே...
படங்களும் தான் :)

இந்தாப்பா தரகர்... இதுதான் தலைவரோட போட்டோ... பாத்தேல, வெள்ளை மாழிகை எல்லாம் போயி அமெரிக்கா ஜனாதிபதி கிட்ட எல்லாம் பேசிட்டு வந்துர்க்காரு... நல்ல அசின் மாதிரி பொண்ணு பாரு !!!

Anonymous said...

aaha.. Superaana nagarvalam.. Unga punniyathula naangalum americava suthi paakarom :)

thodarattum ungal ezhuthukkal :)

Anonymous said...

வாஷிங்டனில் நானே நகர்வலமிட்டதுபோல் இருந்தது கார்த்திக். அடுத்த தொடர்ச்சி எப்போது?

said...

Nice narration karthi. i felt as if i travelled all these places.
waiting for the nestu partu! :)

Anonymous said...

கொஞ்சம் ப்ரீயா இருந்ததனாலேயும்.. உங்களுடய இந்தப் பதிவை இரண்டாவது முறை படிக்கிறதாலேயும் இன்னொரு "உள்ளேன் ஐய்யா:.. ஹீ ஹீ ஹீ

said...

//படங்கள் எல்லாம் நல்லா இருக்கு மாப்பு, ஆனால் படத்தை நீங்க ஏதும் அல்டர் செய்தீங்களா, இழுத்து சுருக்குன மாதிரி தெரியுது சில படங்கள்.

//

நன்றி மாம்ஸ்.. நானும் ஏதும் அல்டர் செய்யவில்லை. படங்கள் சரியாத் தெரிலைனா அதன் மேல் கிளுக்குங்கள் மாம்ஸ்

said...

//பயணக் கட்டுரை தூள் தலைவரே...
படங்களும் தான் :)//

நன்றி அருண்...


//இந்தாப்பா தரகர்... இதுதான் தலைவரோட போட்டோ... பாத்தேல, வெள்ளை மாழிகை எல்லாம் போயி அமெரிக்கா ஜனாதிபதி கிட்ட எல்லாம் பேசிட்டு வந்துர்க்காரு... நல்ல அசின் மாதிரி பொண்ணு பாரு !!! //

ஆஹா அருண்.. என்ன இது கொஞ்ச நாள் தலைவர் நிம்மதிய நாட்டுல இருக்குறது புடிக்கலையாப்பா.. வேணும்னா சொல்லு நான் கூட வந்து ஆணி புடுங்குறேன் உன்கூட..

அருண்.. நான் அசினே வேணும்னு சொன்னா, நீ அசின் மாதிரின்னு சொல்றா. ஹிம்.. நான் மாட்டேன் பா

said...

//aaha.. Superaana nagarvalam.. Unga punniyathula naangalum americava suthi paakarom :)

thodarattum ungal ezhuthukkal :) //

O.. Thanks G3..

said...

//வாஷிங்டனில் நானே நகர்வலமிட்டதுபோல் இருந்தது கார்த்திக். அடுத்த தொடர்ச்சி எப்போது?

//

நன்றி மை பிரண்ட்.. என் நண்பர்கள் எல்லோரும் என் கூட இருந்தது மாதிரி நினைச்சுகிட்டு நான் ஊர் சுத்தினதுனால தான் நீங்கள் இதை படிச்சவுடன் நகர்வலம் வந்தது மாதிரி ஒரு எண்ணம் :-)

Anonymous said...

அட அடா! அருமையான Travellers guide மாதிரி ரசித்து எழுதி இருக்கீங்க!

said...

//Nice narration karthi. i felt as if i travelled all these places.
waiting for the nestu partu! :) //

Thanks ambi. சரி இதெல்லாம் இருக்கட்டும் பா.. கல்யாண பேச்சு ஆரம்பிச்ச்வுடனே ஆளை இந்த பக்கம் பாக்கவே முடியலே.. போனும் கையுமாத் தான் இருக்கிறதா பேச்சு.. உண்மையா?

Anonymous said...

// ஆரெம்கேவியின் எந்த கலரில் பட்டுவில் ஜோதிகா கேட்பது போல் அருபத்தி ஐந்தாயிரம் வண்ணங்களில், லேசான கறுப்பும், சாம்பல் வண்ணமும் சேர்ந்த நிறத்தில் புடவை கட்டி இருந்தது.. //


/ ஒவ்வொரு துளியாக மரங்கள் பூமிக்கு அனுப்பும் அந்த பொழுது வைரமுத்து பொன்மாலை பொழுது என்று எழுதிய அந்த பாட்டின் தருணத்தை விட ரசிக்க வைப்பது//

அழகான ரசனை உங்களுக்கு! உவமைகள் super!

Anonymous said...

All the pics are beautiful too! washington a naangale suthanathu mathiri oru feeling!

said...

//கொஞ்சம் ப்ரீயா இருந்ததனாலேயும்.. உங்களுடய இந்தப் பதிவை இரண்டாவது முறை படிக்கிறதாலேயும் இன்னொரு "உள்ளேன் ஐய்யா:.. ஹீ ஹீ ஹீ //

ஹிஹிஹி..ரொம்ப நன்றி பிரண்ட்.. ரெண்டாவது தடவை படிக்கிற மாதிரி ஓரளவுக்காவது இருக்கா கட்டுரை..?

said...

//எனக்கு இந்த மாதிரி மழைக்கு முன்னோ பின்னோ ஒரு வித இளங்குளிரில் உலகம் இருக்கும் அந்த நேரங்கள் ரொம்ப பிடித்தவை..ரம்மியமானவை//

ரொம்ப ரசிப்பீங்களோ!!
எனக்கும் ரொம்ப பிடிக்கும்!

ஓசிலயே சுத்தி பாத்தமாதிரி ஒரு அனுபவம். புலி சொல்ற மாதிரி இழுத்து புடிச்ச மாதிரிதான் இருக்கு புகைப்படங்கள்.

said...

//அட அடா! அருமையான Travellers guide மாதிரி ரசித்து எழுதி இருக்கீங்க!//

நன்றிங்க ட்ரீம்ஸ்..

said...

/அழகான ரசனை உங்களுக்கு! உவமைகள் super!

All the pics are beautiful too! washington a naangale suthanathu mathiri oru feeling!

//

எனக்கும் உங்க எல்லோர் கூடவும் ஊர் சுத்தின ஒரு உள்ளுணர்வு ஏற்பட்டது ட்ரீம்ஸ்..

said...

//ரொம்ப ரசிப்பீங்களோ!!
எனக்கும் ரொம்ப பிடிக்கும்!

ஓசிலயே சுத்தி பாத்தமாதிரி ஒரு அனுபவம். புலி சொல்ற மாதிரி இழுத்து புடிச்ச மாதிரிதான் இருக்கு புகைப்படங்கள்.
//

நன்றிங்க தம்பி.. என்ன பண்ணினாலும் இப்படி தான் இருப்பேன் என்று அடம் பிடிக்கின்றன படங்கள்.. அதன் தலையில் உங்க எலியால் ஒரு தட்டு தட்டிவிட்டு பார்த்தால், நல்ல தெரியும்னு நினைக்கிறேன்..

said...

மு.கா,
படங்கள் மிகவும் அருமை.

said...

Unga LA, Vegas payanam pathi katturai poduvinganu edhir patha, dhideernu DC potrukkinga!

said...

//இன்னும் சொட்டுச் சொட்டாய் தான் மழை பெய்து கொண்டிருக்கிறது. வெளியில் அல்ல.. என் மனதுக்குள்..//
inga arambicha kavidhai nadai katturai fulla thodardhirukku. Kalakkala ezhudhi irukkinga Karthik.

Erkanave patha idangalnalum unga alavu ennala details nyabagam vachikka mudiyadhu. Oru guide kooda thiruppi pona madhiri irukku :)

Ellarum solli irukkara madhiri pics clear a illa (thalaila thattinalum dhan). Mazhaila lens kongam nanaichidichunu ninaikkaren.

said...

White house kku poyirukkinga.. pakkathu veedu dhane nattamai. avarayum poi pathiruppingale..
sari, adhutha part nattamai sandhippu pathi dhane.

said...

//அழகான ரசனை உங்களுக்கு! உவமைகள் super!//

நான் சொல்லவர்றதையெல்லாம் யாராவது சொல்லிடறாங்கப்பா! சரி, எந்த சீசன்ல போனீங்க கார்த்தி?

said...

//மு.கா,
படங்கள் மிகவும் அருமை.

//


நன்றிங்க வெற்றி.. முதல் வருகைக்கும் ஒரு நன்றி

said...

//Unga LA, Vegas payanam pathi katturai poduvinganu edhir patha, dhideernu DC potrukkinga!

//

ஆறிப்போன விஷயம் பற்றி பேசுவதை விட சூடான இந்த பயணம் பற்றி எழுதுவதே சரி என்று தோன்றியது ப்ரியா அது தான்.

said...

//inga arambicha kavidhai nadai katturai fulla thodardhirukku. Kalakkala ezhudhi irukkinga Karthik.//
ஹிஹி..ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நன்றி ப்ரியா

//Erkanave patha idangalnalum unga alavu ennala details nyabagam vachikka mudiyadhu. Oru guide kooda thiruppi pona madhiri irukku :)

Ellarum solli irukkara madhiri pics clear a illa (thalaila thattinalum dhan). Mazhaila lens kongam nanaichidichunu ninaikkaren.
//


எழுதுவதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டலாம்னு நினச்சு, நான் என்ன பார்த்தேனோ, பார்த்த போது எனக்கு என்ன தோன்றியதோ அதையே எழுதி இருக்கேன் ப்ரியா


இந்த படங்களோட பிரச்சனையை என்னான்னு பாக்குறேன் ப்ரியா

said...

//White house kku poyirukkinga.. pakkathu veedu dhane nattamai. avarayum poi pathiruppingale..
sari, adhutha part nattamai sandhippu pathi dhane. //

அந்த நேரத்தில் நாட்டாமை மற்ற ஒரு ஊரில் நகர்வலத்தில் இருந்ததால் அவருக்கு சொல்லவே இல்லை ப்ரியா.. அவர் தொந்தரவு செய்ய வேண்டாம்னு..

ஆனா அங்கே போனவுடன் நினச்சேன்.. நாட்டாமை காதுலயாவது விஷயத்தை போட்டிருக்கலாமேன்னு..

said...

//
நான் சொல்லவர்றதையெல்லாம் யாராவது சொல்லிடறாங்கப்பா! சரி, எந்த சீசன்ல போனீங்க கார்த்தி? //

கடந்த வாரம் தான் போய் வந்தேன் அரசி

said...

கார்த்திக்,
அருமையான பதிவு
பல ஆங்கிலப் படங்களில் இந்த இடங்களை பார்த்து, என்ன, ஏதுன்னு ஒரு விபரமும் தெரியாது. உங்க புண்ணியத்துல தெரியிது.

உங்கள் எழுத்துக்கள் நல்ல ரசிக்கும் படி உள்ளது.

Anonymous said...

adada...ippadi neenga post poduveenganu therinjirundha enakku therinjavanga ellam new york porom for new yearnu sonnapove, nan stop panni vachiruppene...migavum arumaiyana idangal, arumaiyana kaalai pozhuthu, fine fotos.

Anonymous said...

bush kitta nanga ellam vandhirukomnu solra madiri edhachum namma ooru vedi onna koluthi potutu odida vendiyadhu thane...neenga than edhukum asara mu.ka vache...:)

Anonymous said...

நானேல்லாம் ஒழுங்கா வீட்டுல உக்காந்து உங்க பதிவு படிச்சுட்டு இருக்கும்போது நீங்கள்ளாம் ஜாலியா வாஷிங்டன் சுத்தீட்டு வந்திருக்கீங்க.
(வெள்ளை மாளிகைல அசின் போட்டொ ஏதாச்சும் புஷ் மாமா ரகசியமா வைச்சுருக்காரா?)

Anonymous said...

//ரெண்டாவது தடவை படிக்கிற மாதிரி ஓரளவுக்காவது இருக்கா கட்டுரை..?//

இருக்குங்க.. அதனாலதானே ரெண்டாவது தடவை படித்திருக்கிறேன். ;-)

said...

//கார்த்திக்,
அருமையான பதிவு
பல ஆங்கிலப் படங்களில் இந்த இடங்களை பார்த்து, என்ன, ஏதுன்னு ஒரு விபரமும் தெரியாது. உங்க புண்ணியத்துல தெரியிது.

உங்கள் எழுத்துக்கள் நல்ல ரசிக்கும் படி உள்ளது. //

நன்றி கோபி.. நானும் பல தடவை படங்களில் பார்த்து வியந்த இடங்கள் நேரில் பார்க்கும் போது, அதிசயமாக இருந்தது..

said...

//adada...ippadi neenga post poduveenganu therinjirundha enakku therinjavanga ellam new york porom for new yearnu sonnapove, nan stop panni vachiruppene...migavum arumaiyana idangal, arumaiyana kaalai pozhuthu, fine fotos.//

அந்த தட்பவெட்பம் நாங்கள் போனபோது மிகவும் அருமையாக இருந்தது.. உங்க பாராட்டுக்கு நன்றி தோழியே..

said...

/bush kitta nanga ellam vandhirukomnu solra madiri edhachum namma ooru vedi onna koluthi potutu odida vendiyadhu thane...neenga than edhukum asara mu.ka vache...:) //

வெடியா.. வெள்ளை மாளிகை முன்பா.. அப்படி ஏதாவது செய்திருந்தால் உங்க கிட்ட நான் இப்படி பேசகிட்டு இருக்க மாட்டேன் ரம்யா.. ஏதாவது ஒரு சிறையிலே வெறும் பிரட் (இங்கயும் கலி கொடுப்பாங்களா என்னா
) மட்டும் சாப்பிட்டு கம்பி எண்ணிகிட்டு இருப்பேன், புதுவருஷம் தொடங்குறப்போ..

நான் உங்களுக்கு நண்பன்..ஹிஹிஹி..எதிரி இல்லை..

said...

//வெள்ளை மாளிகைல அசின் போட்டொ ஏதாச்சும் புஷ் மாமா ரகசியமா வைச்சுருக்காரா?) //

மகள் போட்டோவை அவர் வச்சுக்காமலா, சின்ன அம்மினி

said...

//இருக்குங்க.. அதனாலதானே ரெண்டாவது தடவை படித்திருக்கிறேன்//


ஓ நன்றிங்க மை பிரண்ட். நெஞ்சுல பாலை வார்த்தீங்க

Anonymous said...

Mu.ka , Washington varaikkkum vandhuttu NewJersey etti paakama poiteengalle ! Photos ellam superb ! bandhava pose koduthirukeenga ? ponnu paaka anuppardha udhesama :) LOL
Bloglaye washington suthi kattiteenga mams

said...

//ஒரு சிறையிலே வெறும் பிரட் (இங்கயும் கலி கொடுப்பாங்களா என்னா)//

கலிகாலத்தில் கொடுக்கப்படுவது களி :-)

said...

Washington-ku oru free tour kootitu poi vandhuteenga Maams :)

said...

Kadhai, kavidhai ellam mudichi ippa payana katturai vera...kalakareenga :)

said...

Adhuvum andha intro iruke adhu super-a super.....eppavachum washington ponena....appa ellam edamum namma maams sonna maadhiriye irukenu yosichikite paarpen :)

said...

Appuram foto ellam akka asin-ku anupiyiteegala....avagalayum kootitu poi irundha....hayyo..hayyo..un kangal hayyayonu...oru duet paditu vandhu irukalam :)

Anonymous said...

nanban appdingaradhala than ungala vediya mattum poda sonnen...

enemya irundha, osama enga irukkanu theriyum apdinu summa avanga aalunga kitta sollitu takkunu escape aayirukanum neenga...

jus kidding..eppadiya irundhalum namma karthik ivlo namaku suthi kamikaradhala paravalla idha ipadiye vidaren. nalla lakshanamana sirripu ungalukku, solla marandhutten nanba.

said...

//Mu.ka , Washington varaikkkum vandhuttu NewJersey etti paakama poiteengalle !//

கிட்டு மாமா, நான் நியூஜெர்சி கடந்த செப்டம்பர் மாதமே வந்து சென்றேன். மறு முறை வந்தால் கட்டாயம் உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன்.

// Photos ellam superb ! bandhava pose koduthirukeenga ? ponnu paaka anuppardha udhesama :) LOL
Bloglaye washington suthi kattiteenga mams//


கிட்டு மாமா, போஸ் கொடுப்பத் என்பது கேமரா முன்னடி நின்னாலே வந்துவிடுகிறது.. என்னுடைய பழைய படங்களை பார்த்திருந்தால் இந்த சந்தேகமே உங்களுக்கு வந்திருக்காது மாமா

said...

//கலிகாலத்தில் கொடுக்கப்படுவது களி//

எழுத்துபிழையை திருத்தியதற்கு நன்றிங்க அரசி

said...

//Washington-ku oru free tour kootitu poi vandhuteenga Maams //

நன்றி மாப்ள.. நீ இங்க இருக்கப்போ போகலையா வாஷிங்டன்

said...

//Kadhai, kavidhai ellam mudichi ippa payana katturai vera...kalakareenga :)//
எல்லாம் ஆண்டவன் அருள் மாப்ள..
அப்புறம் நண்பர்கள் இருக்காங்க.. எதையும் படிச்சிட்டு நல்ல விமர்சனம் கொடுக்கங்கிற காரணம் வேற.

//Adhuvum andha intro iruke adhu super-a super.....eppavachum washington ponena....appa ellam edamum namma maams sonna maadhiriye irukenu yosichikite paarpen
//

ஹாஹாஹா..நன்றி மாப்ள

said...

//Appuram foto ellam akka asin-ku anupiyiteegala....avagalayum kootitu poi irundha.... hayyo.. hayyo.. un kangal hayyayonu...oru duet paditu vandhu irukalam//

நான் அனுப்புற போட்டோ கொஞ்சம் தான் மாப்ள.. ஆனா உன் அக்கா தசவதார பட போட்டோக்களை அனுப்பி இருக்கா.. அதை பாக்கவே.. அதுல டூயட் பாடவே நேரம் பத்த மாட்டேங்குதுபா..

said...

//nanban appdingaradhala than ungala vediya mattum poda sonnen...

enemya irundha, osama enga irukkanu theriyum apdinu summa avanga aalunga kitta sollitu takkunu escape aayirukanum neenga...//

நல்ல வேளை ரம்யா, நம்மளை வச்சு காமெடி கீமடி பண்றீங்களோன்னு ஒரு பயம் வந்திடுச்சு :-)

//jus kidding..eppadiya irundhalum namma karthik ivlo namaku suthi kamikaradhala paravalla idha ipadiye vidaren. //
ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நன்றிங்க தோழியே

//nalla lakshanamana sirripu ungalukku, solla marandhutten nanba.
//

நன்றி ரம்யா.. நான் கல்லூரியில் படித்து வெளியில் வரும் போது, எனது லெக்சரர் எல்லோரிடமும் ஆட்டோகிராப் கேட்ட போது, எல்லோரும் ஒரே மாதிரி எழுதிய வாசகங்கள் என் நினைவுக்கு வருகிறது, உங்களின் இந்த பின்னூட்டதின் மூலம்.. அது "இந்த அழகு சிரிப்பு என்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்' தான் அவர்கள் எழுதி தந்தது.. ஒரு சின்ன மலரும் நினைவுக்கு வழியிட்ட உங்க பின்னூட்டதுக்கு நன்றி தோழியே..

Anonymous said...

thozhinu sonnadhuku apram enna nandrigal...

nandriyaiyum mannipayum edhirparadhadhu natpu ondre.

Anonymous said...

ada ennanga...ippo potta commenta kaanom...

seri adhu kooda ok, neenga potta pudhu post, madai thirandhu enga, aasai aasaiyai mudhal comment poduvadharkul en aasaiya kavuthuteegaley...

Anonymous said...

அங்கிட்டு பின்னூட்டம் போட முடியாததால இங்கிட்டு போடுறன்.
'தாவும் நதியலை' ரீமிக்ஸ் பாடல் மலேசியாவைச் சேர்ந்த யோகி.B மற்றும் நட்சத்திரா வெளியிட்ட 'வல்லவன்' என்ற ஆல்பத்தில் உள்ளது.

said...

என்னா தலீவா...வாஷிங்டன் வந்துருக்கீங்க...சொல்லவே இல்ல...இது நியாயமா, தருமமா,அடுக்குமா, இங்க நான் எல்லாம் கைடு வேல பார்த்திட்டு இருக்கறது எல்லாம் எதுக்கு...இப்படி அநியாயமா ஒரு பிஸினெஸ் மிஸ் பண்ணிட்டனே.... :-)

said...

ஆனா ஒன்னும் மட்டும் உண்மை...இங்கயே இருக்கேன் ஆன அத பத்தி இவ்வளவு அழகா எழுதமுடியுமானு நினைச்சு கூட பார்க்க முடியாது :-)

said...

ஒரு வார்த்த சொல்லி இருந்தீங்கனா உங்க பேர சொல்லி ஒரு ரெண்டு மூனு நாள் பார்ட்டி பண்ணி இருக்கலாமே :-)

said...

//thozhinu sonnadhuku apram enna nandrigal...

nandriyaiyum mannipayum edhirparadhadhu natpu ondre.//

ஓகே ரம்யா.. இனி அந்த சொற்களை பயன்படுத்த வில்லை :-)

said...

//ada ennanga...ippo potta commenta kaanom...

seri adhu kooda ok, neenga potta pudhu post, madai thirandhu enga, aasai aasaiyai mudhal comment poduvadharkul en aasaiya kavuthuteegaley...//

அய்யோ ரம்யா.. பிளாக்கரில் ஏதோ பிரச்சனை..சுத்தம அந்த போஸ்டவே காணோம்.. மறுபடியும் சேமித்து வைத்த கோப்பில் இருந்து எடுத்து அந்த பதிவை போட்டேன்..

சே..நீங்க போட்ட முதல் கமெண்ட் இப்படி ஆயிடுச்சே ரம்யா

said...

/என்னா தலீவா...வாஷிங்டன் வந்துருக்கீங்க...சொல்லவே இல்ல...இது நியாயமா, தருமமா,அடுக்குமா, இங்க நான் எல்லாம் கைடு வேல பார்த்திட்டு இருக்கறது எல்லாம் எதுக்கு...இப்படி அநியாயமா ஒரு பிஸினெஸ் மிஸ் பண்ணிட்டனே....//

இல்லைங்க நாட்டாமை உங்களை உங்களின் சுற்றுலா அப்போ தொந்தரவு செய்ய வேண்டாம்னு தான் :-)

said...

//ஆனா ஒன்னும் மட்டும் உண்மை...இங்கயே இருக்கேன் ஆன அத பத்தி இவ்வளவு அழகா எழுதமுடியுமானு நினைச்சு கூட பார்க்க முடியாது :-) //

நாட்டாமை உங்க கூட எல்லாம் போட்டி போடமுடியுமா என்ன.. இதெல்லாம் சும்மா எறும்பு சிதறிய இனிப்பு துண்டுகள்.. நீங்கள் இந்த விஷயத்தில் யானை மாதிரி அல்லவா..
//ஒரு வார்த்த சொல்லி இருந்தீங்கனா உங்க பேர சொல்லி ஒரு ரெண்டு மூனு நாள் பார்ட்டி பண்ணி இருக்கலாமே
//

ஆஹா.. கடைசில உங்க தங்கமணி கிட்ட நம்ம பேரை போட்டுகொடுத்துடுவீங்களே..

said...

//அங்கிட்டு பின்னூட்டம் போட முடியாததால இங்கிட்டு போடுறன்.
'தாவும் நதியலை' ரீமிக்ஸ் பாடல் மலேசியாவைச் சேர்ந்த யோகி.B மற்றும் நட்சத்திரா வெளியிட்ட 'வல்லவன்' என்ற ஆல்பத்தில் உள்ளது. //

தகவலுக்கு நன்றி பெத்தராயுடு

said...

//இல்லைங்க நாட்டாமை உங்களை உங்களின் சுற்றுலா அப்போ தொந்தரவு செய்ய வேண்டாம்னு தான்//

நீங்களா அப்படி கற்பனை பண்ணிட்டீங்களா...நான் 29th திரும்பி வந்துட்டேன்...வேற ஒன்னும் புரோக்கிராம் இல்லனு சும்மா New York போய்ட்டு வந்தேன்...நீங்க வரீங்கனு சொல்லி இருந்தா இங்கயே சூப்பரா நீயூ இயர் கொண்டாடி இருக்கலாம்... :-)

Anonymous said...

நல்ல படங்கள்..கட்டுரையும்!

said...

கார்த்தி,

http://tvpravi.blogspot.com/2007/01/blog-post.html

மகாலட்சுமி பற்றிய இறுதி பதிவு. பாருங்களேன்.

உங்களால் முடிந்தால் ஒரு இலவச விளம்பர பதிவு போடுங்களேன்...

அன்புடன்
ரவி

said...

ஹாய் கார்த்திக்,

உங்க போட்டோவும்,பயணக் கட்டுரையும் தூள்.படிக்க ரொம்ப நல்லாவே இருந்தது.

said...

ஹாய் கார்த்திக்,

உங்க போட்டோவும்,பயணக் கட்டுரையும் தூள்.படிக்க ரொம்ப நல்லாவே இருந்தது.

said...

ஆமாம் அவ்வளவு தூரம் போயிட்டு நம்ம நாட்டாமையை பாக்காமலே வந்துட்டீங்கலே.. இது சரியில்ல....

Anonymous said...

Nalla nadai, padikka aarvamaaga irukku, continue ;)

said...

//நீங்களா அப்படி கற்பனை பண்ணிட்டீங்களா...நான் 29th திரும்பி வந்துட்டேன்...வேற ஒன்னும் புரோக்கிராம் இல்லனு சும்மா New York போய்ட்டு வந்தேன்...நீங்க வரீங்கனு சொல்லி இருந்தா இங்கயே சூப்பரா நீயூ இயர் கொண்டாடி இருக்கலாம்... //


ஓ..நாட்டாமை.. புத்தாண்டில் உங்களை சந்தித்து, உற்சாகமாக கொண்டாடும் நல்ல வாய்ப்பை இழந்துட்டேன்னு நினைக்கிறேன்.. சே

said...

//நல்ல படங்கள்..கட்டுரையும்//

நன்றிங்க சந்தனமுல்லை

said...

//அட அட என்ன ஒரு விரிவுரை, உண்மையாகவே ஒரு டூர் கைட் மாதிரி அருமையா விளக்கியிருக்கீங்க:)//
எல்லாம் உங்களிடமும் நம்ம தலை(வலி)வி கீதா மேடமிடமும் இருந்து கற்றுக் கொண்டது தான் வேதா..


//வைட் ஹவுஸ்ல நம்ம கட்சி கொடியை பறக்க விட்டு அப்டியே புஷ்ஷையும் கண்டுக்கிட்டு ஒரு சால்வையை கொடுத்துட்டு வந்தீங்களா?:)//
பறக்கவிடாமலா.. பச்சை மஞ்சள் கலந்த நம்ம கட்சிக்கொடியை பார்த்தவுடன் அவர் ஆச்சரியப்பட்டு போனார் வேதா.. உங்க கட்சி சேவை பற்றியும் எடுத்து சொல்லி இருக்கேன் வேதா.

//வாஷிங்டன் நினைவு சின்னத்தில் உள்ளே போக முடியுமா? நான் அது வெறும் ஒரு சின்னம் என்று தான் நினைத்திருந்தேன்:)//
நான் கட்டுரையில் சொன்னது போல அது ஒரு புகைகூண்டு மாதிரி.. வெளிபுற சுவர்கள் மட்டுமே.. உட்புறம் லிப்ட் வசதி செய்யப்பட்டு நம்மளை மேலவரை அழைத்து செல்கிறார்கள் வேதா..

//படங்களும் நல்லா இருக்கு, சரி அடுத்து எங்க போக போறோம் திருவாளர் கைட் அவர்களே?:) //

இன்னும் வாஷிங்டன்னே முடியவில்லையே வேதா.. அது முடிந்த பின் பால்டிமோரும், அட்லான்டிக் சிட்டியும் போகப் போறோம் நாம்

said...

//உங்களால் முடிந்தால் ஒரு இலவச விளம்பர பதிவு போடுங்களேன்...//

கட்டாயம் செய்கிறேன் ரவி.

said...

//உங்க போட்டோவும்,பயணக் கட்டுரையும் தூள்.படிக்க ரொம்ப நல்லாவே இருந்தது.//

நன்றிங்க சுமதி.. உங்க உற்சாக வார்த்தைகளுக்கு

said...

//ஆமாம் அவ்வளவு தூரம் போயிட்டு நம்ம நாட்டாமையை பாக்காமலே வந்துட்டீங்கலே.. இது சரியில்ல.... //

ஆமங்க சுமதி.. அதிலே எனக்கு வருத்தம் ரொம்ப.. நல்லதொரு வாய்ப்பை இப்படி இழந்துவிட்டேனே..சே

said...

//Nalla nadai, padikka aarvamaaga irukku, continue//

Thanks Haniff.. enna romba Naala alai kanOm haniff

Anonymous said...

//கிட்டு மாமா, நான் நியூஜெர்சி கடந்த செப்டம்பர் மாதமே வந்து சென்றேன். மறு முறை வந்தால் கட்டாயம் உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன்.// kandippaga therivikkavum. en veetilayae kooda thangalaam

said...

"மடை திறந்து பாயும் நதியலை" பதிவில் பதிலிடப் போனால் பிளாக்கர் என்னவோ சொல்லித் திட்டுகிறது :-)

அழகான பாடல், உன் மனங்கவர் எஸ்.பி.பி குரலில்... அடடா! நிழல்கள் படத்தில் அனைத்துப் பாடல்களுமே அருமையாயிருக்கும். ஆனால் இந்த மேற்கத்திய வகை ரீமிக்ஸ் எல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை...

said...

//ஆரெம்கேவியின் எந்த கலரில் பட்டுவில் ஜோதிகா கேட்பது போல் அருபத்தி ஐந்தாயிரம் வண்ணங்களில், லேசான கறுப்பும், சாம்பல் வண்ணமும் சேர்ந்த நிறத்தில் புடவை கட்டி இருந்தது.. எனக்கு இந்த மாதிரி மழைக்கு முன்னோ பின்னோ ஒரு வித இளங்குளிரில் உலகம் இருக்கும் அந்த நேரங்கள் ரொம்ப பிடித்தவை..ரம்மியமானவை.. //

அருமை. கார்த்திக்குக்கு உள்ளிருக்கும் கவிஞரை வெளிக்காட்டியது இவ்வரிகள்.

//அங்கே புஷ் நம்மை வறவேற்க தயாராய் காலை மழை போலவே காத்து கிடந்தார் என்று சொல்லி உங்களை கடுப்பேத்த விரும்பவில்லை.//

என்னது அகில உலக அசின் ரசிகர் மன்றத் தலைவரை வரவேற்க புஷ் வரலியா? உங்களை வரவேற்கறதை விட அப்படியென்ன பெரிய வேலை புதருக்கு?

// (அந்த அழகான நடைபாதையில்)//
இதுக்கு மேல இருக்குற படத்தை மட்டும் அசின் பாத்தாங்கன்னா "இனி எண்டே எல்லா சினிமேக்கள்லயும் கார்த்திக் ஏட்டனோடு தான் ஞான் அபிநயிக்கும்"னு அடம்புடிச்சாலும் அடம்புடிப்பாங்க.
:)

படங்களும் வர்ணனையும் சூப்பர். என்னோட ஃபிரெண்டு ஒருத்தன் வாஷிங்டன் போனப்போ அங்கே செர்ரி மரங்கள் பூத்து குலுங்கறதை படம் எடுத்துட்டு வந்து காட்டுனான். ரொம்ப அழகாயிருந்தது. நீங்க பாத்தீங்களா?

said...

/kandippaga therivikkavum. en veetilayae kooda thangalaam
//


கட்டாயம் சொல்றேங்க கிட்டு மாமா..

said...

//இந்த மேற்கத்திய வகை ரீமிக்ஸ் எல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை...
//

அரசி, எனக்கு அவங்களோட புதுமையான முயற்சியும் எடுத்த விதமும் பிடித்திருந்தது..

said...

/கார்த்திக்குக்கு உள்ளிருக்கும் கவிஞரை வெளிக்காட்டியது இவ்வரிகள்.
//

நன்றி கைப்புள்ள

//என்னது அகில உலக அசின் ரசிகர் மன்றத் தலைவரை வரவேற்க புஷ் வரலியா? உங்களை வரவேற்கறதை விட அப்படியென்ன பெரிய வேலை புதருக்கு?
//

அதென்ன. அப்படி என்ன வெட்டி முறுக்கிற வேலை அவருக்க.. கைப்புள்ள, இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளம் ஆக்கலாம்னு பாக்குறீங்களா..

//படங்களும் வர்ணனையும் சூப்பர். என்னோட ஃபிரெண்டு ஒருத்தன் வாஷிங்டன் போனப்போ அங்கே செர்ரி மரங்கள் பூத்து குலுங்கறதை படம் எடுத்துட்டு வந்து காட்டுனான். ரொம்ப அழகாயிருந்தது. நீங்க பாத்தீங்களா?//

இல்லைங்க கைப்புள்ள.. இப்போது பனிகாலம் என்பதால் இலைகள் எல்லாம் உதிர்ந்து பட்டினியால் வாடும் ஏழை போல அதன் எலும்புகள் வெளித் தெரிய மரங்கள் கிடக்கின்றன

said...

கைப்புள்ள, உங்க நண்பர் ஏப்ரல் மாசத்தில் வாஷிங்டன் போயிருக்கக்கூடும். அப்ப தான் அங்கே Cherry Blossom Festival. ஆனால் நான் அந்தக் காலகட்டத்தில் வாஷிங்டன் போனதில்லை.

said...

கார்த்தி, படங்களும் வர்ணனைகளும் அருமை ...................
உங்க கிட்ட யாருக்கும் கோவமா பேச தோனாது, உங்க சிரிப்புல அவங்க கோவம் காணாம போய்டும்.
அனேகமா நான் DC போகும் போது மத்தவங்களுக்கு கைடு ஆகிடுவேனு நினைக்கிறேன்...

said...

//கைப்புள்ள, உங்க நண்பர் ஏப்ரல் மாசத்தில் வாஷிங்டன் போயிருக்கக்கூடும். அப்ப தான் அங்கே Cherry Blossom Festival//

ஓ.. இது ஒரு புதிய தகவல் சேதுக்கரசி

said...

//கார்த்தி, படங்களும் வர்ணனைகளும் அருமை ...................//
நன்றிங்க சின்னக்குட்டி

//உங்க கிட்ட யாருக்கும் கோவமா பேச தோனாது, உங்க சிரிப்புல அவங்க கோவம் காணாம போய்டும்.//
ஹிஹி..ரொம்ப நன்றிங்க சின்னகுட்டி

//அனேகமா நான் DC போகும் போது மத்தவங்களுக்கு கைடு ஆகிடுவேனு நினைக்கிறேன்... //

ரொம்ப சந்தோசம். நான் வந்தா எனக்கும் எல்லா இடங்களையும் உங்க பாணியில சுத்தி காமிக்கங்க சின்னகுட்டி

said...

http://www.nationalcherryblossomfestival.org

1912-ஆம் ஆண்டில் 3000 செர்ரி மரங்களை (ஜப்பான்) டோக்கியோ நகரம், வாஷிங்டன் டி.சி. மக்களுக்குப் பரிசாகக் கொடுத்ததாம். அதை நினைவு கூர்ந்து வருசா வருசம் இதைக் கொண்டாடுவாங்க. வசந்த காலத்தில் அத்தனை செர்ரி மரங்களும் பூத்துக்குலுங்கும். கண்கொள்ளாக் காட்சியாக இருக்குமாம்.

said...

உங்களின் தகவல் அருமை. நான் மறுபடியும் வாஷிங்டன் செல்ல அந்த் செர்ரி திருவிழா உதவும்னு நினைக்கிறேன் அரசி

said...

Karthik your blogs are very interesting to read. I am very much delighted on seeing posts about our thalaivar. Keep blogging. All the best.

said...

Hi Karthikeyan,

We have no formal introduction so far. I had entered one or two comments after reading your blogs. Anyhow I think this is the right time to get introduce myself.

I am Balakrishnan working as a Software Engineer at Alwarpet, Chennai. I am very much delighted on reading articles on your visit to few of US cities & parks since i am also been to few of places you had mentioned. I will always thinking of writing such blogs and posting it. It never happened. But I never failed to add comments on reading such blogs.

You are blog is interesting. Keep blogging.

Bala

said...

Bala,

I am very deightful on seeing your comments. I think I can get more friends like you thru the blogs.

Thanks Bala. Please write more whenever you have time.

Thanks for your wishes!

All the Best Bala!