Sunday, January 14, 2007

ஒரு பிச்சைக்காரன் என் நண்பன் ஆகிறான்

(சற்றே பெரிய பதிவு)

தினமும் நான் அவ்வழியே தான் அலுவலகம் செல்வேன்.. புகை கக்கிய பேருந்துகளும் முகமூடி அணிந்த மனிதர்களும் இருபுறமும் சென்றுகொண்டிருப்பார்கள். நானும் அப்போது பேருந்து பயணி தான். எப்போதும் என் பையில் சில சில்லறை காசுகள் இருக்கும். ஒரு முறை அப்படி புளிமூட்டைக்குள், நசுங்கிய புளியாக நான் நின்றுகொண்டிருந்த போது, சில்லறை இல்லை என்பதால் அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிடப்பட்டேன். அப்படி, தேய்த்த சட்டை கசங்கி நான் வெளியே துப்பப்பட்ட போது தான் எனக்கு அவன் அறிமுகமானான். சில சமயம், படிகளிலும், சில சமயம் ஜன்னலோரமும் பயணிக்கையில் நான் அவனை பார்த்திருக்கிறேன்.. அவனது சடை முடியும் தாடியும் பார்த்து காவி அணியாத சாமியார் என்று நினைத்தேன், முதல் முறை கவனித்த போது.. மனதை கவ்வுகிற ஆளாக இல்லையென்றாலும், அவனை விட்டு என் மனம் அகலவே இல்லை. என் வயது தான் இருக்கும். அவ்வளவு சிறிய வயதில் ஏனிந்த கோலம் என்று நான் நினைத்து வியந்ததுண்டு.. வருத்தப்பட்டதுண்டு.

வாழ்க்கையில் கஷ்டங்கள் வராமல் ஒரு மனிதன் வாழ முடியுமா.. அப்படி கஷ்டங்கள் வந்தவர்கள் எல்லாம் இவனைப் போல இருந்தால் நாடே இப்படி பட்டவர்களின் முதுகில் தான் எழுந்து நிற்கும்.. ஒரு வேளை, கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்து மதத்தில் சொன்னது போல, ரயில் பெட்டிகள் போல அடுத்தடுத்து இடர்கள் இவனுக்கு மாலை போட்டு ஆட்டி எடுத்திருக்குமோ.. அதில் கண்ணதாசன் சொல்லியிருப்பார்.. ஒருவனுக்கு அடுத்தடுத்து துன்பங்கள் நடக்கிறது.. அடாது பெய்த மழையில் அவனது மாடுகள் இறந்து போகின்றன.. பரந்து விரிந்த வயல்வெளியெல்லாம் தண்ணீரில் மூழ்கி போகின்றன.. வீட்டில் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. விளையாடிய மகனை பாம்பு கடித்து விட்டது.. வாசலிலே கடன் கொடுத்தவர்கள் கொடுத்த காசுக்காக கழுத்தை நெருக்க காத்திருக்கிறார்கள்.. இப்படி ஒரு மனிதனுக்கு ஏற்பட்டால், ஒரே நாளில் ஏற்பட்டால் இப்படித்தான் ஆகியிருப்போனோ.. இளவயதில் சாமியாராக ஆகுபவர்கள் எவரும் உண்மையான பற்றற்வர்களாக பெரும்பாலும் இருப்பதில்லை. அவர்கள் மனசு அந்த லௌகீக வாழ்க்கையை மட்டுமே சுற்றி சுழலும். அதனால் தான் பிரேமானந்தா போன்ற சாமியர்கள் உருவாகிறார்கள். கௌதம புத்தரும் கல்யாணம் பண்ணிய பிறகு, வாழ்வை அனுபவித்த பிறகு தான், ஆசையை விடு என்றார். இல்லையென்றால் அவருக்கும் அந்த ஏக்கங்கள் இருக்கத்தான் செய்திருக்குமோ..

அவனை பார்க்கும் போதெல்லாம் எனக்கு இப்படித்தான் பல நினைவுகள் மனச் சுவர்களில் அலையாய் மோதி செல்லும். இவனை பார்க்கவே சில சமயம் நான் தூரமாய் இருந்தாலும் அந்த பேருந்து நிறுத்ததிற்கு வருவது உண்டு.. இப்போதெல்லாம் என்னை பார்த்து அவன் மீசைக்குள் புன்னகைப் பூ பூப்பதுண்டு.. தாடி புதர் சில சமயம் பூங்காவாய் மாறுவதுண்டு.. கிழிந்த ஆடை.. அது அவனது ஏழ்மையை காட்டுகிறதா... இல்லை உள்ளத்தின் கதவுகளா தெரியவில்லை.. எத்தனையோ பிச்சைக்காரர்கள், நான் அவர்களுக்கு கால் ரூபாயை போட்ட போதெல்லாம் என்னை செல்லாகாசை பார்ப்பதுப் போல் பார்ப்பார்கள். இவனோ என்ன போட்டாலும் சிரித்து கொண்டே ஏற்றுக்கொள்கிறான்.. அதோடு ஒரு சின்ன புன்னகையையும் நன்றியாக செலுத்துகிறான்.

எப்படி அவன் மீது எனக்கு அப்படி ஒரு பாசம் ஏற்பட்டது என்று தெரியவில்லை.. ஆனால் ஒரு பூர்வ ஜென்மத்து பந்தம் போல அது இருந்தது.. பக்கத்தில் வைத்திருக்கும் அந்த அழுக்கு மூட்டைக்குள் என்ன வைத்திருப்பான் என்னும் கேள்வி என்னை குடைந்துகொண்டே இருக்கும். அவனை பற்றிய ஏதேனும் உண்மைகள் அதற்குள் இருக்குமா என்று தெரியவில்லை.. ஆனால் ஏனோ அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டும் மனதுக்குள் அதிகமாகி கொண்டே போனது.. அவனை அந்த பிச்சைக்கார உலகில் இருந்து மீட்டு வர மனம் எண்ணியது.. எனது நண்பர்களிடம் கேட்ட போது அவர்கள் சிரித்தார்கள்.. எனக்கு ஏனிந்த விபரீத ஆசை என்று கிண்டல் செய்தார்கள்.. ஆனால் எனக்கு மனதுக்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்துகொண்டே இருந்தது..

ஒரு நாள் சனிக்கிழமை அவனிருக்கும் அந்த பேருந்து நிறுத்ததற்கு சென்றேன்.. எப்பவும் போல போய்வரும் மக்களையே அண்ணாக்க பார்த்து அவனுக்குள் பேசிக்கொண்டிருந்தான்.. அந்த பேருந்து நிறுத்ததில் ஆட்கள் குறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன்.. அவனும் என்னை பார்த்து வழக்கம் போல சிரித்து விட்டு, மற்றவர்கள் கவனிக்க ஆரம்பித்திருந்தான்.. யாராவது மனைவி, குழந்தைகளோடு வந்தால் அவர்களை மட்டும் அவர்களை இவன் பார்த்துக்கொண்டே இருந்தான். ஒரு அரைமணி நேரம் நான் பொறுமையாக காத்திருந்தது வீண் போகவில்லை. அந்த பேருந்து நிறுத்தம் வெறிச்சோடி கிடந்தது.. அவன் பக்கத்தில் இருந்த தூணில் சாய்ந்துகொண்டு கண்களை மூடி இருந்தான். நான் அவன் அருகில் சென்று மெதுவாக, எச்சில் விழுங்கி மெல்ல ஹாய் என்றேன்.. அவன் சின்ன அதிர்ச்சியோடு கண் விழித்தான். நான் தான் கூப்பிட்டேன் என்று தெரிந்ததும் ஸ்னேகமாய் சிரித்தான். உங்க கூட பேசணும்.. வாங்க அப்படியே நடந்து பேசலாம்.. மதிய உணவையும் முடிக்கலாம் என்று அழைத்தவுடன் என்ன நினைத்தானோ தெரியவில்லை.. அப்படியே எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அமர்ந்திருந்தான்..

என்ன யோசிக்கிறீங்க.. வாங்க போகலாம் என்று கொஞ்சம் மனசுல தைரியத்தை வளர்த்து கொண்டு கூப்பிட்டேன்.. இப்போ மெல்ல ஆச்சர்யமும், கொஞ்சம் கேள்விக்குறியோடும் பார்த்தான். எழுவதா, என் அழைப்பை மறுப்பதா என்று அவனுக்கு தெரியவில்லை.. கண்களில் சின்ன பயமும் தொற்றிக்கொண்டது. கொஞ்ச நேர குழப்பத்திற்கு பிறகு, தனது அழுக்கான அந்த பையை எடுத்துகொண்டு கிளம்பினான்.. எனக்கு மனசுக்குள் சின்ன சந்தோசம் எழுந்தது.. அவனை அப்படியே பக்கத்தில் இருந்த கட்டண குளியலறைக்கு அழைத்து சென்று அவனுக்கு குளிக்க சோப்பும், கையோடு எடுத்து வந்த புதிய உடைகளையும் கொடுத்தேன்.. என்ன நினைத்தான் என்று தெரியவில்லை.. கொடுத்ததெல்லாம் வாங்கி கொண்டான். பேருந்து நிறுத்ததில் இருந்து இந்த குளியலறை வரை அவன் என் கூட ஒரு மாதிரி கூச்சப்பட்டே நடந்து வந்தான். எதுவும் பேசவில்லை.. என்னை விட்டு கொஞ்சம் பின்னாலும், ஒதுங்கியும் தான் நடந்து வந்தான். யாரை பற்றியும் கவலை படாமல் நான் நடந்து வர, அவன் சுற்றி முற்றி எல்லோரையும் பார்த்த வாறே நடந்து வந்தான்.. இந்த சின்ன விசயத்தில் தான் அவனை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது..

அரை மணி நேரம் அவன் வரும் வரை காத்திருந்தேன்.. என் நண்பர்களிடம் மொபைலில் பேசி விஷயத்தை சொன்னேன்.. கூப்பிட்ட ஆறு பேரில் நான்கு பேர் என் கூட அந்த ஹோட்டலில் வந்து சேர்ந்து கொள்வதாக சொன்னார்கள். அவர்களுக்கு சொல்லமுடியாத ஆச்சர்யம். குளித்து விட்டு அவன் வந்து எனக்காக காத்துக்கொண்டிருந்தான்.. நன்றாக குளித்துவிட்டு அழகாக இருந்தான்.. நான் எடுத்திருந்த சட்டை அவனுக்கு கொஞ்சம் தொளதொள என்று தான் இருந்தது.. ஆனால் அவன் அதை ரசித்தான்.. கைகூப்பி நன்றி சொன்னான்.. அவனது கண்களில் இப்போது கண்ணீர் கசிந்தது.. நான் வைத்து இருந்த சென்னை சில்க்ஸ் பையில் அவனது அழுக்கு மூட்டையை வைத்துகொள்ளச் சொன்னேன்.. அப்படியே வைத்துகொண்டான்.. இப்போது நான் எதை சொன்னாலும் செய்கின்ற நிலைக்கு வந்திருந்தான்.. நண்பனிடம் ஓசி வாங்கி வந்திருந்த டூ-வீலரில் அவனை ஏற்றிக்கொண்டு பக்கத்தில் இருந்த மெரினா கடற்கரைக்கு அழைத்து சென்றேன்..

அவனை பற்றிக் கேட்டேன்.. எந்த கேள்விக்கும் அவன் வாயை திறக்கவில்லை.. கடலையே பார்த்துக்கொண்டிருந்தான்.. நீண்ட நேரம் கழித்து அவனது அழுக்கு மூட்டையில் இருந்து ஒரு கசங்கிய லேமினேட் செய்த ஒன்றை வெளியில் எடுத்து என்னிடம் கொடுத்தான்.. அதில் அவன் பொருளாதாரத்தில் இளநிலை படித்திருக்கிறான் எனவும் அவனது பெயர் ரஞ்சித் எனவும் இருந்தது.. ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.. அதற்கு மேல் எதுவும் அவன் சொல்லவில்லை.. எனக்கும் முதல் நாளிலே அவனிடம் எல்லாம் கேட்டுபெறுவது சரியல்ல என்று நினைத்து விட்டுவிட்டேன்.. என் நண்பர்களுடன் மதிய உணவு முடித்துவிட்டு, அவனுக்கு எப்படியும் நல்ல வேலைக்கு முயற்சி செய்வதாக கூறினோம்.. முதலில் கிண்டலடித்த நண்பர்களும் இப்போ அவனை பற்றி தெரிந்து கொள்ள, நல்ல வேலையில் அமர்த்த என் கூட உறுதுணையாய் இருப்பதாக கூறினார்கள்.. அவனை எவ்வளவோ வற்புறுத்தி கூப்பிட்டும் எங்கள் அறைக்கு மட்டும் வரமுடியாது என்று சொல்லிவிட்டான்.. அவனை மறுபடியும், விட மனமில்லாமல் அந்த பேருந்து நிறுத்ததில் இறக்கிவிட்டு கிளம்பினோம்.

அடுத்த நாள், எப்பவும் போல அலுவலகம் கிளம்பினேன்.. பேருந்து அந்த நிறுத்தத்தை கடக்கும் போது அவனை தேடினேன்.. எப்போதும் அமரும் இடத்தில் அவனை காணவில்லை.. என்ன ஆனான் என்று குழம்பியவாறே அலுவலகம் சென்றேன்.. திரும்பி வரும் போது, அந்த நிறுத்ததில் இறங்கினேன்.. சுற்றி முற்றி எங்கு தேடியும் அவனை காணவில்லை.. ஒருவித குழப்பத்தில் வீடு வந்து சேர்ந்தேன்.. அதன் பிறகு அந்த இடத்தில் அவனை எப்போதுமே பார்க்கமுடியவில்லை.. அவன் காணாமல் போன நான்கு நாட்களுக்கு பிறகு, என் அலுவலக் முகவரிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது அவனிடம்.. இப்படி ஒரு நண்பன் கிடைப்பான் என்று தான் நினைத்தே பார்க்கவில்லை என்றும், அன்றைய ஒரு நாள் வாழ்க்கைக்கு நன்றி தெரிவித்தும், ஏனோ எனக்கு உங்களுக்கு சிரமமாய் இருக்க தோன்றாததால் எங்கோ கண்காணாத இடத்திற்கு செல்வதாகவும் எழுதி இருந்தான்.. எனது அலுவலக கார்டை அன்று அவனுக்கு கொடுத்தது நினைவுக்கு வந்தது.. நாம் தான் அவனது வாழ்க்கையை மாற்றிவிட்டோமோ என்று நினைத்தேன்.. ஏனோ தெரியவில்லை.. என்னை அறியாமல் ஒரு குன்றை தூக்கி இதயத்தில் வைத்தது போல மனம் சுமையாய் இருந்தது.. மெல்ல கண்ணீர் கன்னங்களை உழ ஆரம்பித்தது..

62 பின்னூட்டங்கள்:

said...

உங்கள் செயல் நெகிழ வைத்தது மட்டுமல்லாமல் என்னை போன்றவர்களுக்கு தூண்டுகோலாகவும் அமைந்துள்ளது.

வாழ்க!வளர்க!

said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

the world goes round cos of people like you. hats off, we are proud of you
navin

Anonymous said...

இது அனுபவமோ கதையோ...
ஆனால் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்!

said...

மூன்று பதிவுகளையும் இன்னிக்குத் தான் படிக்க முடிஞ்சது. 3 நாளா உங்க பதிவு அஜித்-சிம்பு பதிவுக்கு மேல் திறக்கவே வரலை. இன்னிக்கு ஒரு வழியா வந்து சேர்ந்தேன்.

யாரு அந்தப் பொண்ணு? இன்னும் நினைப்பு இருக்கிறதாலே கல்யாணத்துக்கு முயற்சி செய்து பார்க்கலாமே?

பொங்கல் பற்றிக் கிராமங்களின் நிகழ்வுகள் பற்றி நல்லா எழுதி இருக்கீங்க. இந்த மஞ்சள் தண்ணீர் ஊத்தறது நெருங்கிய சொந்தத்துக்கு மட்டும், அதுவும் முறைப் பையன், பெண்ணிடம் மட்டும் இருக்கும்னு சொல்வங்களே? உண்மையா?

ஒரு இனிய நட்புச் சீக்கிரமே முற்றுப் பெற்று விட்டது. நல்ல காரியம் செய்திருக்கீங்க. ஆனால் அவருக்குத் தான் கொடுத்து வைக்கலை. இருந்தாலும் மனதில் உறுத்தல் கட்டாயம் இருக்கும். அதை வெளிப்படுத்தி இருக்கீங்க.

ஊரைப் பத்தி நினைச்சுட்டிருந்தாலும், பொங்கலுக்கு லீவ் எல்லாம் கிடைக்காது இல்லையா?
மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

Anonymous said...

மனதை உருக்குகின்றது..... :(

parthy said...

Good,i realy so happy.

said...

முதலில் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் கார்த்தி, நமக்கு என்ன வந்தது என்றில்லாமல் அந்த பிச்சை எடுப்பவரையும் சக மனிதனாக பாவித்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதே பொதுவாக யாருக்கும் தோன்றாத ஒன்று. அப்படி தோன்றியதுக்காக உங்களுக்கு ஒரு சல்யூட்.

said...

தனக்கு இனி ஒரு வாழ்க்கையே இல்லை என்று நினைத்த ஒருவனுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை நீங்கள் கதிரவனாக இருந்து கொடுத்துள்ளீர்கள். ஒரு வேளை நீங்க காண்பித்த மனிதாபிமானத்தில் அவன் மனம் மாறியிருக்கலாம், உங்கள் வயதை ஒத்தவர் என்று கூறியிருக்கிறீர்கள் எனவே இனி தன் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருப்பார். நீங்கள் செய்த நல்ல முயற்சி கண்டிப்பாக அதற்கான பலனை தந்திருக்கும்:)

said...

karthik, really touching incident..ungaluku nijamave a great heart! Thalaiva...aalala kanda adaluku thagappa vanakamungo! :)

Anonymous said...

கணமான பதிவு மாம்ஸ். உங்கள் நல்ல மனதிற்கு கண்டிப்பாக அவருக்கு ஒரு நல்ல வாழ்வு அமைந்திருக்கும்.

Anonymous said...

வேறு வார்த்தைகள் இல்லை.

Anonymous said...

//அந்த பிச்சை எடுப்பவரையும் சக மனிதனாக பாவித்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதே பொதுவாக யாருக்கும் தோன்றாத ஒன்று. அப்படி தோன்றியதுக்காக உங்களுக்கு ஒரு சல்யூட். //
வேதாவை நானும் வழி மொழிகிறேன்.
மனதை நெகிழ வைத்தது இந்தப்பதிவு. படித்த முடித்தவுடன் மனதில் ஒரு வெறுமை தோன்றியது என்னவோ உண்மைதான்

Anonymous said...

மனதில் படித்து முடித்து வெகு நேரம் ஆகியும் மறைய மறுக்கும் உண்மை...

எத்தணையோ பேர்... என்ன சொல்றது என்றே தெரியல கார்த்தி!

Anonymous said...

உங்கள் உள்ள உயர்வை பாராட்டாமல் இருக்க முடியல!

நிஜ வாழ்க்கையில் தான் இப்படி... நிறைய சோகம்...

Anonymous said...

பிச்சைகாரனை பார்க்கும் போது.. "சீ உன்னால தாண்டா இந்தியாவுக்கே கெட்ட பேரு.. உழைக்க வேண்டியது தான.." என்று சாதாரணமாய் சொல்லி விட்டு போவோம்...

அவன் கதை, சோகம், கஷ்டம், நிலைமை.. என்று எல்லாம் பார்த்தால்... என்ன சொல்றது?

ஆயிரம் மனிதர்கள் இருக்கலாம்.. ஆனால் உங்களைப்போல் நல்லவர்கள் கம்மி...

Anonymous said...

அவன் எங்கு இருந்தாலும், அவனுக்காக ஒருவரி என் அடுத்த பிரார்த்தணையில் உண்டு..

Anonymous said...

I am proud to have friend like u kaarthi :)

said...

நெகிழ்வான நிகழ்ச்சிதான்.

யோசிக்க வைத்துவிட்டீர்கள் அவனை. என்ன யோசித்தான் என்ன முடிவு செய்தான்னு தெரியல.

ஆயிரத்தில் ஒருவருக்குக் கூட இப்படி ஒரு பிச்சைக்காரனை அரவணைத்து உதவி செய்ய தோன்றாது.

லட்சத்தில் ஒருவராகி விட்டீர்கள்.

தொடரட்டும்.

Banyan என்று ஒரு சமூக சேவை அமைப்பை உருவாக்கிய இரண்டு இளம் பெண்களின் தொடக்கமும் இந்த மாதிரி ஒரு செயல் செய்துதான் துடங்கியது.

Anonymous said...

mu.kaa. migavum negizchiyaana padhivu! irundaalum idhu romba too much, ippadi vega vegama padhivugala pottu onu onuthukkum 50 60 commentum vangidaringa, enakum ragasiyatha sollungalen! ungalukku iniya pongal nalvaazthukkal, enga irundalum namma manasu kondattam podume, so ensai!

said...

இது உண்மை சம்பவமா கார்த்திக்? இல்லை உங்கள் கற்பனையில் உருவானதா?

எதுவாக இருந்தாலும், இப்படி நினைப்பதுக்குகூட பரந்த உள்ளம் வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது

said...

//நானும் அப்போது பேருந்து பயணி தான். எப்போதும் என் பையில் சில சில்லறை காசுகள் இருக்கும். ஒரு முறை அப்படி புளிமூட்டைக்குள், நசுங்கிய புளியாக நான் நின்றுகொண்டிருந்த போது,//

இது நான் தினமும் அனுபவிப்பவள். அந்த கூட்டமான பேருந்திலோ, ரயிலிலோதான் என் தினப் பயணம்..

said...

Really your deeds are appreciable. hats off to U!

i'm sure that guy will be fine now!
Good pple always get good things! don't worry!

C.M.HANIFF said...

Really a touching one :)

said...

கார்த்திக்,

நெகிழ்ச்சியான பதிவு, சிறப்பான நடை !

தங்கள் நல்ல உள்ளத்திற்கு என் பாராட்டுக்கள் !

அந்த நண்பர் நலமாக இருக்கிறார் என்று நம்புவோம் !

எ.அ.பாலா

SKM said...

negila vaithadhu MK. yup,sila neram sila manidhrgalai purindhu koLLavum mudiyadhu.vaaznaaL poravum marakka mudiyadhu.adutha post um padithen.Congrats.vazhga.

Anonymous said...

நீங்கள் தானா சினிமாவைப்பற்றி எழுதிக் கொண்டிருந்த கார்த்தி?ஓ மனசு கனத்துப் போனது உங்க பதிவு பார்த்து.
இப்படியொரு உதவுதலில் எத்தனையோ சிக்கல்கள் வரநேரலாம்,எனினும் துணிந்து செயல்பட்ட உங்களை பாராட்டுகிறேன் .ஆனாலும் அதை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளாத அந்த நண்பரை என்னென்பது?எங்கிருந்தாலும் வாழட்டும்.ரியலி கிரேட் நண்பரே...

said...

தலைவா, நீங்க தான் பக்கா அரசியல்வாதி. Just kidding. I'm impressed.. சக மனிதர்கள் எல்லாரையும் நேசிச்சி, அவங்கள care பண்ற குணம் எல்லாருக்கும் வராது. எல்லாருக்குள்ளயும் கருணை இருந்தாலும் இந்த மாதிரி action ல இறங்க மாட்டாங்க. நீங்க ரொம்ம்ம்ப நல்லவர்ங்க...
ரஞ்சித் எங்கயாவது நல்லா இருப்பார்னு நம்புவோம்.

said...

lets hope ranjith lives well somewhere hopefully not as a begger.

touching post karthik. Hats off to you. i dont think anyone wud have done what u did. Great.

Anonymous said...

கார்த்திக்,

சற்றே பெரிய பதிவு... அப்பிடின்னு போட்டதா'லே கொஞ்சம் பயமாதான் படிக்க ஆரம்பிச்சேன்,

ஆனா எந்த இடத்தில்லேயும் படிக்கிறப்போ சோர்வே வரலை.. நல்ல அழகான நடையிலே உங்க அனுபவத்தை பதிவு செஞ்சு இருக்கீங்க..

said...

//உங்கள் செயல் நெகிழ வைத்தது மட்டுமல்லாமல் என்னை போன்றவர்களுக்கு தூண்டுகோலாகவும் அமைந்துள்ளது.

வாழ்க!வளர்க! //


நன்றிங்க.. ஏனோ தெரிலைங்க.. அந்த மனிதன் என்னும் என் மனதுக்குள்

said...

/the world goes round cos of people like you. hats off, we are proud of you
navin /

Thanks Navin

said...

//இது அனுபவமோ கதையோ...
ஆனால் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்!//

நன்றிங்க அருட்பெருங்கோ

said...

//யாரு அந்தப் பொண்ணு? இன்னும் நினைப்பு இருக்கிறதாலே கல்யாணத்துக்கு முயற்சி செய்து பார்க்கலாமே?//

மேடம்.. அது முழுக்க முழுக்க கற்பனை.. அப்படி ஒரு பொண்ணை இப்படி ஒரு கவிதை சொல்லத் தான் தேடிகிட்டு இருக்கேன்..

/இந்த மஞ்சள் தண்ணீர் ஊத்தறது நெருங்கிய சொந்தத்துக்கு மட்டும், அதுவும் முறைப் பையன், பெண்ணிடம் மட்டும் இருக்கும்னு சொல்வங்களே? உண்மையா?
///


இது உண்மை தான்.. எல்லோருக்கும் மஞ்சள் நீர் ஊற்றமாட்டார்கள்..


//இருந்தாலும் மனதில் உறுத்தல் கட்டாயம் இருக்கும். அதை வெளிப்படுத்தி இருக்கீங்க.
///


நன்றிங்க மேடம்..

//ஊரைப் பத்தி நினைச்சுட்டிருந்தாலும், பொங்கலுக்கு லீவ் எல்லாம் கிடைக்காது இல்லையா?
மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள். //

அடுத்த பொங்கலுக்கு கட்டாயம் ஊர்ல இருக்கணும்னு இப்போதிலிருந்தே ஆண்டவனை வேண்டிகிட்டு இருக்கேங்க மேடம்.. பார்ப்போம்..அவன் என்ன செய்கிறான்னு

said...

/மனதை உருக்குகின்றது..... //

இப்போ நினச்சாலும் மனசுக்கு கஷ்டமா இருக்குங்க தூயா

said...

//Good,i realy so happy. //

Thanks parthy

said...

//நமக்கு என்ன வந்தது என்றில்லாமல் அந்த பிச்சை எடுப்பவரையும் சக மனிதனாக பாவித்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதே பொதுவாக யாருக்கும் தோன்றாத ஒன்று. அப்படி தோன்றியதுக்காக உங்களுக்கு ஒரு சல்யூட்//


எல்லோரையும் பார்த்து இப்படி தோன்றுவதில்லைங்க வேதா.. ஏனோ அந்த மனிதனை பார்த்து மட்டும் அப்படி ஒரு எண்ணம் உருவானது.. அவனது இளமையும் கண்களில் தெரிந்த சோகமும் தான் என்னை இப்படி செய்ய உந்துதலாய் இருந்ததுங்க வேதா

said...

/ஒரு வேளை நீங்க காண்பித்த மனிதாபிமானத்தில் அவன் மனம் மாறியிருக்கலாம், உங்கள் வயதை ஒத்தவர் என்று கூறியிருக்கிறீர்கள் எனவே இனி தன் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருப்பார். நீங்கள் செய்த நல்ல முயற்சி கண்டிப்பாக அதற்கான பலனை தந்திருக்கும்//

எனக்கும் அந்த நம்பிக்கை தான் சந்தோசத்தை கொடுக்கிறதுங்க வேதா

said...

/karthik, really touching incident..ungaluku nijamave a great heart! Thalaiva...aalala kanda adaluku thagappa vanakamungo! //

நன்றிங்க உஷா.. என்னங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்

said...

// உங்கள் நல்ல மனதிற்கு கண்டிப்பாக அவருக்கு ஒரு நல்ல வாழ்வு அமைந்திருக்கும்//

நானும் அப்படித்தான் நினைக்கிறேன் மாப்ள

said...

//படித்த முடித்தவுடன் மனதில் ஒரு வெறுமை தோன்றியது என்னவோ உண்மைதான்
//

சில சமயங்களை இப்படி பட்டவர்கள் நமது மனதை கடந்துவிட்டு போவதுண்டு இளா

said...

/அவன் எங்கு இருந்தாலும், அவனுக்காக ஒருவரி என் அடுத்த பிரார்த்தணையில் உண்டு..//

நன்றிங்க ட்ரீம்ஸ்.. எங்க இருந்தாலும் அவன் அந்த கோலம் மாறி சாதாரண மனிதனாய் வாழ்ந்தாலே போதும்.. உங்க பிரார்த்தனை அவனை நல்ல நிலைக்கு கொண்டு வரும் ட்ரீம்ஸ்

said...

//I am proud to have friend like u kaarthi//

Thanks Dreamzz

said...

/Banyan என்று ஒரு சமூக சேவை அமைப்பை உருவாக்கிய இரண்டு இளம் பெண்களின் தொடக்கமும் இந்த மாதிரி ஒரு செயல் செய்துதான் துடங்கியது.//

நன்றிங்க badnewsindia.. ஆனா எல்லோரையும் பார்த்து இப்படி ஒரு எண்ணம் தோன்றியதில்லைங்க badnewsindia

said...

//எதுவாக இருந்தாலும், இப்படி நினைப்பதுக்குகூட பரந்த உள்ளம் வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது
//


நம் எல்லோருக்குள் அப்படி ஒரு நல்ல இதயம் இருக்கிறதுங்க மை பிரண்ட்

said...

//இது நான் தினமும் அனுபவிப்பவள். அந்த கூட்டமான பேருந்திலோ, ரயிலிலோதான் என் தினப் பயணம்.. //

அய்யோ.. கொடுமையிலும் கொடுமையான பயணமுங்க அது மை பிரண்ட்

said...

/i'm sure that guy will be fine now!
Good pple always get good things! don't worry! //

thanks da ambi.. athu thaan avanukku venum

said...

//நெகிழ்ச்சியான பதிவு, சிறப்பான நடை !
//

நன்றிங்க பாலா

said...

/நீங்கள் தானா சினிமாவைப்பற்றி எழுதிக் கொண்டிருந்த கார்த்தி?ஓ மனசு கனத்துப் போனது உங்க பதிவு பார்த்து.
இப்படியொரு உதவுதலில் எத்தனையோ சிக்கல்கள் வரநேரலாம்,எனினும் துணிந்து செயல்பட்ட உங்களை பாராட்டுகிறேன் .ஆனாலும் அதை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளாத அந்த நண்பரை என்னென்பது?எங்கிருந்தாலும் வாழட்டும்.ரியலி கிரேட் நண்பரே...

//

ஆமாங்க கௌசி.. என்ன பண்றதுங்க..சினிமா பத்தி எழுதினாலே போதும்னு நினச்சுகிட்டு இருந்தேன்..

உங்கள் நம்பிக்கை தான் எனக்குள்ளும் கௌசி

said...

//நீங்க ரொம்ம்ம்ப நல்லவர்ங்க...
ரஞ்சித் எங்கயாவது நல்லா இருப்பார்னு நம்புவோம்.
//

நம்ம நம்பிக்கை அவரை நல்ல இடத்தில் வைத்திருக்கும்னு நம்புவோம்ங்க ப்ரியா

said...

//ஆனா எந்த இடத்தில்லேயும் படிக்கிறப்போ சோர்வே வரலை.. நல்ல அழகான நடையிலே உங்க அனுபவத்தை பதிவு செஞ்சு இருக்கீங்க.. //

நன்றிங்க இராம்

said...

urukkamana unmai...ennaiyum kalanga cheithathu

said...

புதுசா ஒண்ணும் எழுதலியே? நாளைக்கு மறுபடி வந்து பார்க்கிறேன்.

said...

ரொம்ப டச்சிங்கா போச்சு...இவ்வளோ நல்லவரா நீங்க...

said...

ம்ம்ம்ம்ம், பொங்கலுக்கு அப்புறம் ஒண்ணுமே எழுதலியா? எனக்குத் தெரியலியா?

said...

ம்ம்ம்ம்ம், பொங்கலுக்கு அப்புறம் ஒண்ணுமே எழுதலியா? எனக்குத் தெரியலியா?

said...

ம்ம்ம்ம், எவ்வளவோ ,முயற்சி செய்தும் இதுக்கு அப்புறம் ஒரு பதிவும் தெரியலையே?

said...

ம்ம்ம்ம், எவ்வளவோ ,முயற்சி செய்தும் இதுக்கு அப்புறம் ஒரு பதிவும் தெரியலையே?

said...

நேத்துத் தமிழ் மணம் வழியா வந்தேன். இன்னிக்கு இந்தப் பதிவு தான் வருது எத்தனை முயற்சி செய்தாலும், புதுசா எழுதி இருக்கீங்களா? நான் தினமும் வரேன், நீங்க வந்து பார்க்கறதில்லைன்னு நினைக்கறீங்க! என்ன செய்யலாம்னு புரியலை!

Anonymous said...

Kathik,

I salute you.

said...

//
the world goes round cos of people like you. hats off, we are proud of you
//
ரிப்பீட்டேய்

உங்களின் இந்த நல்ல உள்ளம் உங்களை வாழ்வில் மென்மேலும் உயர்த்தும்.

வாழ்த்துக்கள் கார்த்திக்

said...

Ippadi than irukkanum-nu solli kaattaama, senji kaamichitteenga!! Vaazhthukkal!