Saturday, January 27, 2007

தேன்குட்டையில் ஒரு சுள்ளெறும்பு

எனது கிராமத்தை பற்றியும், அங்கு நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் அவர்களின் பழக்க வழக்கங்களையும் எத்தனையோ பதிவுகளில் எழுதப்பட்டு வருவதை நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த பதிவுகளை நான் தமிழ்மணத்தில் ஏற்றம் செய்யும் பொழுது, கவனித்த தமிழ்மணத்தின் பூங்கா ஆசிரியர் குழு, இவனின் எழுத்தின் மீது நம்பிக்கை கொண்டு, குருவியின் தலையில் பனங்காய் வைப்பது போன்றொரு பணியினை தந்தார்கள். தமிழ்மண பூங்காவில் வாரந்தோறும் வெளியிடுமாறு ஒரு தொடர், கிராமத்தை பற்றியும் மக்களின் பழக்க வழக்கங்களை பற்றியும் எழுதி தருமாறு ஒரு வாய்ப்பினை தந்தார்கள்.

எனக்கு இது ஒரு பெரிய வேலை. எப்படி ஆரம்பிப்பது, எதை பற்றி எழுதுவது என்று ஒரே குழப்பம். கணினியில் எழுதியதால் ஆயிரம் தாள்கள் வீணாகவில்லை. அத்தனை முறை அடித்து திருத்தி எழுதினேன். எழுதி முடித்த பிறகு மனசுக்கள் சந்தோசப் பூ இருந்தது. ஆனால் திருப்தி இல்லை. இன்னும் நன்றாக எழுதியிருக்கலாமோ என்று ஒரு தவிப்பு இருந்தது. அப்போது தான் எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. உள்ளத்தில் தேடல் உள்ளவனுக்கு எந்த விஷயத்திலும் எல்லை இல்லை என்று. மனதை சமாதானபடுத்திவிட்டு, எழுதியதை நானே இருபது தடவை படித்துவிட்டு அனுப்பி வைத்தேன் பூங்கா குழுவினருக்கு.

இப்போது அந்த தொடரை இரண்டு வாரத்திற்கு ஒரு முறையென பூங்கா பொங்கல் முதல் வெளியிட்டு வருகிறது. கடவுளையும் காதலையும் கவிதையாக சொன்ன பதிவை அவர்கள் வெளியிட்ட அந்த நாளிலே தான் எனது தொடரும் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அன்று அதனை கவனிக்கவில்லை. இன்று காலையில் தான் பார்த்தே. பார்த்தவுடன், இரை தேடி சுவற்றின் மீதும், நீரைக் கடந்தும் படையெடுக்கும் ஒரு சுள்ளெறும்பை மெதுவாக பிடித்து, ஒரு தேன் குட்டையில் விட்டால் எப்படியொரு மகிழ்வு கொள்ளுமோ, அதன் மனசு எப்படி உவகை கொள்ளுமோ, அந்த ஒரு சந்தோசம் எனது இதயத்திலும் பரவிக்கிடக்கிறது.

இந்த ஜனவரி மாதம் என் உள்ளத்தில் புதுவித சந்தோசங்களையும், எனக்குள் புத்துணர்ச்சியையும் தந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் நான் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து என்னை பாராட்டி, என்னை உற்சாகப்படுத்தியது எல்லாம் எனது நண்பர்களாகிய நீங்கள் தான். இப்படி ஒரு நண்பர் கூட்டம் வாய்த்தவனுக்கு, இமயமும் தொட்டுவிடும் தூரம் தான். நன்றி நண்பர்களே.

கிராமத்தை எழுதிய அந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்க நீங்கள் இங்கே சுட்டுங்கள்.

இந்த தொடரை வெளியிட்ட தமிழ்மண பூங்கா ஆசிரியர் குழுவிற்கு எனது நன்றிகள். பூங்கா இதழ் தொடங்கப்பட்ட நேரத்தில் நமது பதிவுகள் அதில் வரும் காலம் என்னாளோ என்று ஏங்கிய காலம் உண்டு. அந்த ஏக்கத்தை துடைத்துவிட்டதற்கு நன்றி.

64 பின்னூட்டங்கள்:

said...

கார்த்தி உங்கள் எழுத்துக்கள் மெருகடைந்து வருகிறது.தேன் கூட்டில் விழுந்த சுள்ளெரும்பு நயமான உவமை.
நண்பர்கள் ,வாசிப்பவர்கள் இருக்கும்வரை ஊக்கத்திற்கு பஞ்சமில்லை.கேரியான்

said...

//இரை தேடி சுவற்றின் மீதும், நீரைக் கடந்தும் படையெடுக்கும் ஒரு சுள்ளெறும்பை மெதுவாக பிடித்து, ஒரு தேன் குட்டையில் விட்டால் எப்படியொரு மகிழ்வு கொள்ளுமோ//

அடடா... என்ன ஒரு உவமை! கலக்கறீங்க! இதுக்கு தான்... இதுக்கு தான்! உங்களுக்கு அந்த வாய்ப்பு! You deserve it kaarthi!

said...

//நமது பதிவுகள் அதில் வரும் காலம் என்னாளோ என்று ஏங்கிய காலம் உண்டு. அந்த ஏக்கத்தை துடைத்துவிட்டதற்கு நன்றி. //

sari.. unga aasia niravethiyaachu. namakku ellam eppo party?

said...

aama, naa thaan firsta ? illa namakku munnala potuutaangala! solla mudiyaadhu

said...

ஆகா.. வாழ்த்துக்கள் கார்த்தி!

said...

அன்பு கார்த்தி

கலக்குறிங்க....வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துக்கள் தல.

said...

//sari.. unga aasia niravethiyaachu. namakku ellam eppo party? //

ரிப்பீட்டே...

said...

என்னடா இப்பெல்லாம் கார்த்தி பின்னூட்டம் போட வர்றதில்லையேன்னு நெனச்சேன்.. இப்பத்தான் புரியுது... தலை எவ்வளவு பிஸின்னு... கலக்குங்க தல...

said...

aama Karthik, inna adhu unga profile'la unga age: 250'nu poturku???????????????

naan konja nerathuku aadi poiten! :)

said...

வாழ்த்துக்கள் கார்த்திக்,


உங்களின் இப்பதிவு தலைப்பு அருமை :)

said...

Ur writing realy makes the reader visualise the text :) Great writing..

said...

@kaarthi
//aama Karthik, inna adhu unga profile'la unga age: 250'nu poturku???????????????

naan konja nerathuku aadi poiten! :) //

appadiya? sollave illa! irunga naanum poi parkaren..

enna kaarthi?

said...

கார்த்தி, ம்ம் கலக்கு,

உன் விரல் பட்ட வார்த்தைகள்
பூங்காவில் பூக்க ஆரம்பித்துள்ளன.
மலர் மணம் பரப்பத்தான்.
வானம் வசப்படட்டும் உன் வார்த்தைகளில்...

said...

//கார்த்தி உங்கள் எழுத்துக்கள் மெருகடைந்து வருகிறது.தேன் கூட்டில் விழுந்த சுள்ளெரும்பு நயமான உவமை.
நண்பர்கள் ,வாசிப்பவர்கள் இருக்கும்வரை ஊக்கத்திற்கு பஞ்சமில்லை.கேரியான் //

நன்றிங்க ஏடாகூட்ம். உங்களை போன்றவர்களின் உற்சாகமான பின்னூட்டங்கள் தான் எனக்கு உந்து சக்திகள்

said...

//அடடா... என்ன ஒரு உவமை! கலக்கறீங்க! இதுக்கு தான்... இதுக்கு தான்! உங்களுக்கு அந்த வாய்ப்பு! You deserve it kaarthi!
//

உங்களை போன்ற நண்பர்கள் கூட இருக்கும் போது மாமலையும் எனக்கு கடுகு தான் ட்ரீம்ஸ்

said...

//sari.. unga aasia niravethiyaachu. namakku ellam eppo party? //

ட்ரீம்ஸ், எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க.. விமானம் ஏறி விருந்து கொடுக்க வர்றேன்

said...

//aama, naa thaan firsta ? illa namakku munnala potuutaangala! solla mudiyaadhu//

Late than dreamzz :-)

said...

//ஆகா.. வாழ்த்துக்கள் கார்த்தி//

வாழ்த்துக்கு நன்றிங்க அரசி

said...

//அன்பு கார்த்தி

கலக்குறிங்க....வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கு நன்றி கோபி

said...

//தலைவரே முதல்ல ரொம்ப நாளா வராததுக்கு ஒரு ஜாரி கேட்டுக்கறேன்//

வேதா, என்ன இது சாரி எல்லாம் கேட்டுகிட்டு.. அரசு நிதில இருந்து என் மாப்ள கிட்ட எவ்ளோ பணம் வேணும்னாலும் வாங்கிட்டு தி.நகர் போயிட்டு வாங்க

said...

//தேனை போன்ற சுவையுடன் நீங்கள் எழுதும் கட்டுரைக்கு நாங்கள் தான் அடிமை,அதனால பூங்காவில் வெளி வந்தது ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை நண்பரே//

எல்லாம் தேனீக்கள் போல நீங்கள் கட்டிய தேன்கூடு தான் இது, வேதா

said...

//தலைவரின் இந்த தொடர் வெற்றிக்கு ஒரு விழா எடுத்து விடலாமா?:) //

பூங்காவில் வந்த புதுமை நாயகன்னு ஒரு புது பட்டம் கொடுத்து சிறப்பு விழாவா கொண்டாடிடலாம் வேதா

said...

/ட்ரீம்ஸ் கேட்ட மாதிரி எங்களுக்கெல்லாம் ட்ரீட் எப்ப//

நான் ரெடிங்க வேதா

said...

/ஹிஹி பொழுதுபோகல, அதான் இத்தனை நாளா வராததுக்கும் சேர்த்து இந்த பின்னூட்டங்கள்//

குடை பிடிச்சுகிட்டு தான் படிச்சேன், உங்களோட எல்லா பின்னூட்ட மழைகளையும் வேதா :-)

said...

//வாழ்த்துக்கள் தல.

//


நன்றி அருண்

said...

//என்னடா இப்பெல்லாம் கார்த்தி பின்னூட்டம் போட வர்றதில்லையேன்னு நெனச்சேன்.. இப்பத்தான் புரியுது... தலை எவ்வளவு பிஸின்னு... கலக்குங்க தல...

//

வாழ்த்துகளுக்கு நன்றி ஜி..

ஹிஹி.. கட்டாயம் உங்க பதிவுக்கு வர்றேன் ஜி

said...

//aama Karthik, inna adhu unga profile'la unga age: 250'nu poturku???????????????

naan konja nerathuku aadi poiten//

புதிய வெர்ஷனுக்கு மாறுற போது அதுவா என் அறிவை (ஹிஹிஹி) பாத்துட்டு அவ்ளோ வயசை போட்டுகிச்சுன்னு நினைக்கிறேன் கார்த்திக்..

இப்போ மாத்திட்டேன் கார்த்தி

said...

//வாழ்த்துக்கள் கார்த்திக்,


உங்களின் இப்பதிவு தலைப்பு அருமை //

நன்றிங்க ராம்

said...

//Ur writing realy makes the reader visualise the text :) Great writing..

//

Thanksga ponna

said...

//appadiya? sollave illa! irunga naanum poi parkaren..

enna kaarthi?
//

ஹிஹி.. அது புது பிளாக்கர் செய்த தவறுங்க ட்ரீம்ஸ்..


அவ்ளோ வயசா இருந்தா கட்டபொம்மனையும், நம்ம பாரதியாரையும், பத்தி இந்நேரம் ஒரு நாலஞ்சு பதிவை போட்டிருக்க மாட்டேனா என்ன

said...

// உள்ளத்தில் தேடல் உள்ளவனுக்கு எந்த விஷயத்திலும் எல்லை இல்லை என்று. மனதை சமாதானபடுத்திவிட்டு, //
correct dhaan inga.

super sir.. all the best.

said...

//உன் விரல் பட்ட வார்த்தைகள்
பூங்காவில் பூக்க ஆரம்பித்துள்ளன.
மலர் மணம் பரப்பத்தான்.
வானம் வசப்படட்டும் உன் வார்த்தைகளில்... //

மணி, உன்னை போன்ற நண்பர்கள் தான் எனக்கு விலாசம் தந்தீர்கள்.. உங்கள் கைகள் பற்றிக்கொண்டால் வானத்தின் நீள அகலத்தை அளக்கலாம்

said...

நன்றிங்க அடியா...

said...

இது அத்தனைக்கும் சேர்த்து ஒத்தைவரியிலே "நன்றி" என்றிருந்தால், மிகவும் இரத்தினச்சுருக்கமாகவும் எளிமையாகவும் கவனம் சிதறாமலும் இருந்திருக்குமோ?

said...

வாழ்த்துக்கள் கார்த்தி.
கட்டுரை அருமை.

said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மொத்தம் 10 பின்னூட்டங்கள், கட்சி நிதியில் இருந்து எவ்வளவு கொடுத்தீங்க? வேதாவுக்கு? கணக்குக் கேட்கிறேன் இப்போ உங்களை! சொல்லுங்க கணக்கை முதலில், ஒரு 2 நாள் இல்லாட்டிக் கட்சிப் பணத்தை இப்படியா எடுத்துக் கொடுக்கிறது? :D

கார்த்திக், மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்கள் மேன்மேலும் பிரபலம் அடைந்து நல்ல சிறப்பாக எழுத என் மனப்பூர்வமான ஆசிகள். கொஞ்சம் பிழைகளை மட்டும் திருத்திக் கொள்ளுங்கள். மற்றபடி உவமைகள் எல்லாம் நல்லா இருக்கு, அதுவும் ரொம்பவே தத்ரூபமாக வருது.

Anonymous said...

Ungal eshuthukku kidaitha parisu karthik, thodarattum ungal payanam ;)

said...

hope all ur dreams have cum true karthik....as a friend romba romba sandhoshama irukku...

eppo engaluku ellam treat vaikareenga..

said...

தலீவரே...என் சகோதரி வேதா சொன்ன மாதிரி...நாங்கள்தான் சுள்ளெரும்பு உங்க எழுத்து எங்களுக்கு தேன்கூடு....கலக்குங்க வாழ்த்துக்கள் :-)

said...

நீங்க சொன்னதுக்கு மேல பேசிட்டேன்...அமைச்சரவை விரிவாக்கத்துல மறந்துடாம கவனிச்சுக்குங்க... :-)

said...

//தலைவரின் இந்த தொடர் வெற்றிக்கு ஒரு விழா எடுத்து விடலாமா?:) //

@வேதா,

இது என்ன கேள்வி...உடனே ஒரு டேட் அனவுன்ஸ் பண்ணி...நன்கொடை வசூல்ல இறங்கிடலாம் :-)

said...

ungkal then koottil eththanai ethanai erumbugal iraiyai rusikinrana. kalakareenga thala.

meelum pala erumbugal vandhu moippadhu urudhi. thodarndhu ezhudhunga thala.

said...

hey super, thalaiva, unga perumai eritte pogudhu, dont think I have to explicitly talk abt the uvamanams and uvameyams of your writings :) Engal thalaivar vazhga!!

said...

//
நன்கொடை வசூல்ல இறங்கிடலாம்
:-)
//
நாட்டாம,வேதாவோட கமெண்ட படிச்சிட்டு நான் சொல்ல வந்தேன் "உண்டியல தூக்கிடிவோம்னு",அதுக்குள்ள நீங்க சொல்லிட்டீங்க :)

காரியத்துல கண்ணாயிருக்கீங்க.

எனக்குக்கூட இந்த நிஸ்ஸான் ஓட்டி ஓட்டி போரடிச்சிருச்சு. சீக்கிரம் வசூல் ஸ்டார்ட் பண்ணுங்க :P

said...

//இது அத்தனைக்கும் சேர்த்து ஒத்தைவரியிலே "நன்றி" என்றிருந்தால், மிகவும் இரத்தினச்சுருக்கமாகவும் எளிமையாகவும் கவனம் சிதறாமலும் இருந்திருக்குமோ? //

பெயரிலி, சில சமயங்களில் இது போன்ற பதிவுகள் தேவைப் படுகின்றன

said...

//வாழ்த்துக்கள் கார்த்தி.
கட்டுரை அருமை//

நன்றிங்க சின்னகுட்டி

said...

//சொல்லுங்க கணக்கை முதலில், ஒரு 2 நாள் இல்லாட்டிக் கட்சிப் பணத்தை இப்படியா எடுத்துக் கொடுக்கிறது//

மேடம், என்னையா கணக்கு கேட்குறீர்கள்.. இப்படி கணக்கு கேட்டதால்தான் எம்ஜியார் வெளியேறினார்.. நானும் தனி கட்சி, தனி கொடி, என் மக்கள் என்று வாழப்போகவா.. என்ன மேடம்.. தலைவியான உங்களுக்கு இந்த அளவுக்கு தொண்டனாய் இருக்கிறேனே , என்னை போய் எப்படி யெல்லாம் கேட்கலாமா

உங்க வாழ்த்துகளுக்கு நன்றிங்க மேடம்

said...

//Ungal eshuthukku kidaitha parisu karthik, thodarattum ungal payanam //

ellaam ungkalai ponra nanbarkal thantha urchaakam thaan haniff

Thanks Haniff :-))

said...

//hope all ur dreams have cum true karthik....as a friend romba romba sandhoshama irukku...

eppo engaluku ellam treat vaikareenga.. //


Thanks Ramya.. eppo venumnalum treat tharrenga ramya :-)

said...

/தலீவரே...என் சகோதரி வேதா சொன்ன மாதிரி...நாங்கள்தான் சுள்ளெரும்பு உங்க எழுத்து எங்களுக்கு தேன்கூடு....கலக்குங்க வாழ்த்துக்கள்//

நாட்டாமை தீர்ப்பை நான் மாத்த முடியுமா

said...

//நீங்க சொன்னதுக்கு மேல பேசிட்டேன்...அமைச்சரவை விரிவாக்கத்துல மறந்துடாம கவனிச்சுக்குங்க...//

நாட்டாமை உங்களை மறக்கமுடியுமா..

said...

//@வேதா,

இது என்ன கேள்வி...உடனே ஒரு டேட் அனவுன்ஸ் பண்ணி...நன்கொடை வசூல்ல இறங்கிடலாம்/

நாட்டாமை, நமக்கு ஒரு ஷேர் அனுப்பிடுங்க

said...

//ungkal then koottil eththanai ethanai erumbugal iraiyai rusikinrana. kalakareenga thala.

meelum pala erumbugal vandhu moippadhu urudhi. thodarndhu ezhudhunga thala. //

Thanks kittu maamu

said...

//hey super, thalaiva, unga perumai eritte pogudhu, dont think I have to explicitly talk abt the uvamanams and uvameyams of your writings :) Engal thalaivar vazhga!! //

usha, thanks nga.. ellaam friends unga support thaan ithukellaam kaaranam

said...

//எனக்குக்கூட இந்த நிஸ்ஸான் ஓட்டி ஓட்டி போரடிச்சிருச்சு. சீக்கிரம் வசூல் ஸ்டார்ட் பண்ணுங்க//

அருண், முதல்ல தலைவர் நான் ஒரு கார் வாங்கிக்கிறேன்.. அப்புறம் நிசானை மாத்திகிடலாம்

said...

கலக்குங்க கார்த்தி...!!!!!!!!

Anonymous said...

Sorry thalaivarE!

eppothum pOl konjam busy.. athaan late-aa oru comment..

Anonymous said...

Adade thalaivare!!

Vazhththukkal.. ungkal ezhuthukkal naalukku naal merukErukiRathu enRu naan appothe sonnen.. ithuthaan atharkku oru saandru.. niraiya ezhuthungKal. atharkku angeekaaramum kidaiththu viddathu.

Anonymous said...

thalaivare!

thaipusam vanthuviddathu.. athai patti unge oorle nadanthathaiyum ezhuthalaame??

said...

//கலக்குங்க கார்த்தி//

நன்றிங்க ரவி..

said...

//Sorry thalaivarE!

eppothum pOl konjam busy.. athaan late-aa oru comment..//

இதுக்கெல்லாம் எதுக்கு சாரி மை பிரண்ட்

said...

/Adade thalaivare!!

Vazhththukkal.. ungkal ezhuthukkal naalukku naal merukErukiRathu enRu naan appothe sonnen.. ithuthaan atharkku oru saandru.. niraiya ezhuthungKal. atharkku angeekaaramum kidaiththu viddathu.

//

மை பிரண்ட், எல்லாம் நண்பர்கள் நீங்கள் ஏற்றிய மெருகு தான்.. உங்களின் உற்சாகமான பின்னூட்டங்கள் தான் இயந்திரத்தை ஓட வைக்கிற மின்சாரம் மாதிரி

said...

//thalaivare!

thaipusam vanthuviddathu.. athai patti unge oorle nadanthathaiyum ezhuthalaame?? //

நானும் அப்படியொரு எண்ணத்தில் தான் இருக்கிறேன் மை பிரண்ட்.. யோசனைக்கு நன்றி மை பிரண்ட்