Thursday, January 25, 2007

என் பள்ளியில் நடந்த குடியரசு தின விழா

'நீராருங் கடலெடுத்த' என்று மொத்த கூட்டமும் பாட ஆரம்பிக்க அந்த பாடலின் கீதத்தை தவிர வேற எதுவும் கேக்கவில்லை. ராணுவ வீரர்கள் மொத்தமாக நடந்தால் எப்படி ஒரே ஒலி வருமோ அவர்களின் காலடி தடத்திலே, அது போல, இந்த பாடலை எல்லோரும் பாடி, அன்றைய நாளை ஆரம்பித்தனர். மற்ற நாளாக இருந்தால், இந்த பாட்டு பாடி முடிக்கும் போது தான் நான் பள்ளியின் சுற்றுபுறச் சுவரை தாண்டி பள்ளிக்குள் குதித்திருப்பேன். ஆனால் இன்று குடியரசு தினம். எப்போதும் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் காலை வழிபாடு அன்று எட்டு மணிக்கே. என் மொத்த பள்ளிக்கூடமும் பளீர் வெள்ளை சட்டையிலும், நீலநிற டிரவுசர்களிலும் இருந்தனர். அந்த வெள்ளை நிறத்தில் பட்டுத் தெறித்த சூரிய ஓளி அங்கே ஏதோ ஒளித் திருவிழா நடக்கிறது என்று ஊருக்கு சொல்லிகொண்டிருந்தது.

முதல் நாளே சொல்லிவிடுவார்கள் அடுத்த நாள் கட்டாயம் காலை குடியரசு நாள் விழாவுக்கு வந்துவிடவேண்டுமென்று.. வரவில்லை என்றால் அவர்கள் தனியாக கவனிக்கப் படுவார்கள் என்று ஒரு மறைமுக மிரட்டல் வேறு இருக்கும். இல்லையென்றால் யாரும் வரமாட்டார்கள். ஆனால் இப்படி எல்லாம் சொல்லித்தான் இப்படிபட்ட தேசப் பற்று விழாக்களை நடத்தவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டு விட்டோம். அதுவும் தொலைக்காட்சிகள் பெருகிய இந்த நாட்களில் அதில் காண்பிக்கப்படும் படங்களும் திரை நாயக நாயகியரின் நேர்முக பேட்டியும் தான் குடியரசு விழாக்களை பெருமைப்படுத்துகின்றன. தேசிய தனியார் தொலைக்காட்சிகள் தங்களின் தேசியப் பற்றினை தனியாக குறும் படங்களையோ, இந்தியாவின் பெருமைகளையோ வைத்து சொல்லுகின்றன. ஆனால் எனக்கு தெரிந்து, அறிந்து, அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை எந்த தமிழ் நாட்டு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் நடத்துவதில்லை. தேர்தலின் போது மாற்றி மாற்றி தூற்றிகொள்ள மட்டுமே உபயோகப்படுத்தப் படுகின்றன.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பின்னர், எங்கள் தலைமையாசிரியரின் உரை இருக்கும். அவர் போன வருடம் என்ன பேசினாரோ அதையே மறுபடியும் பேசுவதாக இருக்கும். தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்தவுடன் எல்லோரையும் அமரச் சொல்லிவிடுவார்கள். காலை வெயிலில் அவரின் பேச்சு எங்களுக்குள் உற்சாகம் கிளப்புவதை விடுத்து, கொஞ்சம் சோர்வையே எழுப்பும். அதற்கு அடுத்து வரும் எங்கள் தமிழய்யா உரை தான் எங்கள் ரத்தங்களை சூடேற்றும். அவரின் சொல் விளையாடல் எங்களுக்கு ஒரு மந்திரம் போலவே இருக்கும். எங்கள் தலைகள் அந்த மந்திரத்துக்கு தலையாட்டிக் கொண்டிருக்கும்.

ஆனால் எத்தனை பேர் உரையாற்றினாலும் குடியரசு தினம் என்றால் என்ன என்பதை யாரும் சொல்லமாட்டார்கள். சில மாணவர்களுக்கு குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் வித்தியாசம் தெரியாது. ரெண்டும் நாம் 1947-இல் பெற்றதாகத் தான் நினைத்துகொள்வார்கள். எங்கள் தமிழய்யாவின் உரைக்கு பிறகு, அருகில் இருக்கும் காந்திகிராம பல்கலைகழகத்தில், இன்னும் கதராடையையே உடுத்திகொண்டு இருக்கும் பெரியவர் யாராவது வந்து தேசியக் கொடியை உயர்த்துவார். அந்த மூவர்ண கொடியை பறக்கையில் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சுக்குள் கொடி காத்த குமரனின் பிம்பமும், அவரது தேசபக்தியும் தான் தெரியும். அந்த மூவர்ண கொடியின் பின்னே எத்தனை எத்தனை பேர்களின் சுதந்திர மூச்சும், ரத்தமாய் உறைந்து போய்விட்ட தேச பக்தியும் பதுங்கி கிடக்கிறது.

எங்கள் ஊரில், ஒரு தொடக்கப்பள்ளியும் ஒரு உயர்நிலைப்பள்ளியும் உள்ளன. இந்த குடியரசு தினத்தன்று பள்ளியில் கொடியேற்றிவிட்ட பிறகு, எல்லோரும் ஊரின் முக்கிய தெருக்கலில் ஊர்வலமாக வருவார்கள். அந்த பிஞ்சுக் கரங்களில் உயர்த்திப் பிடித்த கொடியும், கொஞ்சும் குரலில் தேசியப் பற்றும் எங்கள் ஊரின் ஒட்டுவீட்டையும் ஓட்டையாக்கும் வேகமும் பொங்கும் உணர்ச்சியும் இருக்கும். இந்த ஊர்வலத்தை ஊரே நின்று பார்க்கும். டீக்கடையிலும் வெட்டிபேச்சு திண்ணைகளிலும் மக்கள் எழுந்து நின்று பார்ப்பார்கள். எனக்கு தெரிந்து கிராமங்களில் கொண்டாடுவது போலக் கூட நகரத்து பள்ளிகளில் குடியரசு விழா கொண்டாடப் படுவதில்லை. அதனால் தான் என்னவோ என் ஊரை போன்ற கிராமங்களில் இருந்து தான் நிறைய பேர் ராணுவத்தில் சென்று சேருகிறார்கள். எங்கள் ஊரின் அருகில் இருக்கும் நி.பஞ்சம்பட்டி என்ற கிராமத்திலிருந்து தான் அதிகபேர் ராணுவத்திற்கு சென்றிருக்கிறார்கள் என்று ஒரு முறை ஒரு தொலைக்காட்சியில் தகவல் சொன்னார்கள் அந்த ஊரில் இருக்கும் மக்களிடம் பேட்டியெடுத்து.

என் பள்ளியில் கொடியேற்றியதை தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடக்கும். முக்கியமாக மாறுவேடப் போட்டி. இந்த மாறுவேடப்போட்டியில் மட்டும், ஒரே மாணவன் ஒவ்வொரு வருஷமும் கட்டபொம்மன் மாதிரி வேசம் போட்டுவந்து தொடர்ந்து மூன்று வருடம் பரிசினை தட்டிச் சென்றிருக்கிறான். இதெல்லாம் முடிந்து வீட்டுக்கு சென்றால், தலைநகரில் நடக்கும் அணிவகுப்புக்கு ஜனாதிபதி தலைமை தாங்கி கொண்டிருப்பார். இந்த அணிவகுப்பை பார்க்காதவர் ஒருவர் கூட இருக்க முடியாது. அப்படி ஒரு நேர்த்தி இருக்கும்.

ஒன்றே ஒன்று இந்த நன்னாளில்.. எல்லோரும் சொல்வதை போல, நாடென்ன்ன செய்தது நமக்கு என்னும் கேள்விகளை கேட்பதை விடுத்து, நாமென்ன செய்தோம் அதற்கு என்று நினையுங்கள். இரண்டு தலைமுறைக்கும் முன்னர், எல்லோரும் என்னென்ன கஷ்டங்கள் பட்டோம் என்று கொஞ்சம் சிந்தியுங்கள். இந்த சுதந்திரம் சும்மா வரவில்லை. எத்தனையோ இந்தியர்களின் கல்லறையில் தான் இந்த சுதந்திர பூ பூத்திருக்கிறது என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துகொள்வோம்.

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!!!

ஜெய்ஹிந்த்!!!

20 பின்னூட்டங்கள்:

Anonymous said...

வாழ்க பாரதம்.. வெல்க தாய்திரு நாடு...


குடியரசு தின வாழ்த்துகள்....


ஜெய்ஹிந்த்!!!!

Anonymous said...

குடியரசு தின விழாவை ஒரு சடங்கு மாதிரி செய்கிறார்கள். என்ன செய்ய? நல்ல வழிகாட்டும் தலைவர்கள் இல்லை. பாரத நாடு இன்னமும் இப்படியே இருக்கிறதே என்ற ஆதங்கம்தான் மனச்சோர்வை அளிக்கிறது. ஆனாலும் ஒரு மெல்லிய நூலிழையாக தேசப்பற்று ஒவ்வொரு இந்தியன் நெஞ்சிலும் இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்தியாவை நினைக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

melattur r natarajan

said...

good post karthik

C.M.HANIFF said...

Nalla pathivu, happy republic day ;)

said...

குடியரசு தின வாழ்த்துக்கள் தல... :-)

said...

இப்போ தெரியுது நாட்டு பற்று எல்லாம்...நான் ஸ்கூல்ல படிக்கும் போது எல்லாம் சாக்லேட்க்கு தானே போவோம் :-)

said...

ரொம்ப நல்ல பதிவு, நீங்க சொல்ற மாதிரித் தனியார் தொலைக்காட்சிகளில் எல்லாம் "இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறை"யாகப் படம் போட்டுத் தான் குடியரசையும் சுதந்திரத்தையும், நமீதாவும்,நயன் தாராவும் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று கேட்டுத்தான் நடக்கிறது. இதைப் பார்க்காமல் இருப்பதே நல்லது. பொதிகையிலும், அகில இந்திய வானொலியிலும் முறையே தேர்ந்தெடுத்த தேச பக்திப் பாடல்களினால் ஆன ஒரு முழுநேரக் கச்சேரி ஒலி, ஒளிபரப்புச் செய்தார்கள். மனதுக்கு நிறைவாய் இருந்தது.

அப்புறம் தினமும் refresh செஞ்சால்தான் உங்களோட புதுப் பதிவு தெரியுது. இல்லாட்டித் தெரியறதில்லை. என்ன காரணம்?

Anonymous said...

Dear Karthick,
NIce post about the Republic Day...

ஆனால் எத்தனை பேர் உரையாற்றினாலும் குடியரசு தினம் என்றால் என்ன என்பதை யாரும் சொல்லமாட்டார்கள். சில மாணவர்களுக்கு குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் வித்தியாசம் தெரியாது. ரெண்டும் நாம் 1947-இல்

Unmaiyana Varthaigal.Indha sandhegam nammudaiya 5th std varai dhan irukum Karthick.High school padathil - Histry il - India patri padikum podhu Idharkana details theiryum.

Nanum Village school il padhtaval dhan.Angae irukum Scout um NCC um ethanai VEERAGALAI indha India viruku thandhu kondu irukiradhu.

City il convent il education il sirudhum Patriotism patri solli tharvadhu illai.Scout um NCC um kedaiyadhu.

Manadhai punn paduthum oru vishayamaga idhai ninaikaren. Adhanal dhan convent padithavargaluku indha patriotism unarvu avvalavaga kedaiyadhu enbadhu en ennam.

Indha nilai maari, Convent lium idhai kondu vara vendum.

Nam Kodiyai parkum podhu, Irandhu pona Freedom fighters ninaivu varuvargal....

Enna unmaiyana varthaigal... True .. Nam AASIRIYARGAL padathai Marks kaga solli thandhadhu illai... I feel.Adhanal padithadhu ellam oru message aga eduthu kondu irukirom.....

Nice post.Thank you Karthick.

With Love,
Usha Sankar.

SKM said...

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!MK

said...

அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துகள்

Anonymous said...

Indian enru solvoom pirandha naataik kaathuk koLvoom.

super post thala. INDIA is the BEST

Anonymous said...

Happy Republic day Karthik...
Neenga yezhuthinathu romba nalla irunthuchu... naan yethum orupudiya pannathu illai ithu varaikkum :)
Syam sonna maathiri chocolate vaanga kooda school'ku republic day anniku ponathu illai...

said...

//குடியரசு தின வாழ்த்துகள்....//

குடியரசு தின வாழ்த்துக்கள் மணி

said...

//ஆனாலும் ஒரு மெல்லிய நூலிழையாக தேசப்பற்று ஒவ்வொரு இந்தியன் நெஞ்சிலும் இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்தியாவை நினைக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.//

எல்லோர் மனசுலையும் கொஞ்சமேனும் இருக்கும் தேசப்ப்பற்று நடராஜ்.. அப்படி இருந்தால் மட்டும் போதுமா, நாடு முன்னேற நாம் ஏதும் செய்யலாமே

said...

/good post karthik//

Thanks Guru

said...

//Nalla pathivu, happy republic day //

Thanks Haniff.. Happy Republic day

said...

//இப்போ தெரியுது நாட்டு பற்று எல்லாம்...நான் ஸ்கூல்ல படிக்கும் போது எல்லாம் சாக்லேட்க்கு தானே போவோம் //

இது முற்றிலும் உண்மை நாட்டாமை

said...

//ரொம்ப நல்ல பதிவு//

வசிஷ்டர் வாயாலே சொன்னது போல இருக்குங்க மேடம்

//அப்புறம் தினமும் refresh செஞ்சால்தான் உங்களோட புதுப் பதிவு தெரியுது. இல்லாட்டித் தெரியறதில்லை. என்ன காரணம்? //

மேடம், உங்க IE ல பழைய நகலே உக்கார்ந்து இருக்கலாம். ஒவ்வொரு முறையும் புதுசான விஷயத்தை எடுத்துவர சொல்லுங்கள் IEயை

said...

//Nice post.Thank you Karthick.//

நன்றிங்க உஷா.. நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. அடிக்கடி வந்து படித்து உற்சாகப்படுத்துவதற்கு நன்றிங்க உஷா

said...

புது ப்ளாகுக்கு மாறிட்டீங்களா? நீங்களும் ஜிலேபி சுத்தி இருக்கீங்க? என்னோட பேரெல்லாம் ஜிலேபி சுத்தி இருக்கே?