Sunday, January 07, 2007

மடை திறந்து பாயும் நதியலை நான் - ரவுசான புதுசு

சில சமயம் காலத்திற்கு ஏற்ப சில பழைய விஷயங்கள் மாற்றப்படும் போது, அதுவும் ரசிக்க வைக்கும் வகையில் பரிமாறப்படும் போது, நமக்கு ஏனோ அந்த புது விஷயங்கள் பிடித்துவிடுகின்றன.இது இட்லியை வைத்து கொண்டு சுடச்சுட இட்லி உப்புமாவாய் தருவதை போல சில சமயங்களில் இருக்கிறது. ரீமேக் பற்றி பல கருத்துகள் இருந்தாலும், சில சமயம் அந்த முரண்பாடான கருத்துக்களை முதுகுக்கு பின்னால் அனுப்பிவிட்டு, இதை எல்லாம் ரசிக்கவே மனம் விரும்புகிறது.

நிழல்கள் படத்தின் மடை திறந்து பாயும் நதியலை நான் பாட்டின் காட்சிநிழல்கள் படத்தில் பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்று வண்ணக் கனவுகளுடன் வாழும் சந்திரசேகருக்கு, ஒரு தயாரிப்பாளருக்கு மெட்டுக்கள் போட்டு காட்டும் வாய்ப்பு தரப்படுகிறது. அப்போது மடை திறந்த வெள்ளம் போல மனதில் பிரவாகமெடுத்து, வருகிறது மடை திறந்து பாயும் நதியலை நான் என்னும் பாடல். அப்போது புழக்கத்தில் இருந்த கருவிகளை வைத்தே அருமையாக தந்திருப்பார் இசைஞானி. உற்சாக பிரவாகம் எடுக்கும், துள்ளல் இசை பாடல். இப்போது கேட்டாலும் நமது இதயம் அந்த இசையினால் துள்ளுவதென்னவோ உண்மை. இளையராஜா அவர்களின் இசைக்கு இது போன்ற பாடல்கள் மிகப் பெரும் எடுத்துக்காட்டு. அதுவும் அந்த பாடலில் புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே என்னும் வரிகளுக்கு இளையராஜாவே முகம் காட்டுவது இன்னும் சிறப்பாய் இருக்கும். இந்த பாடலை கேட்கும் போது, அந்த மடை திறந்த வெள்ளத்தில் நானும் அடித்து செல்வதை போல் உணர்வேன். மேல உள்ள அந்த படத்தின் பாடல் காட்சியை பார்க்கும் போது, நானே அந்த பாடலில் குதிப்பதாய், பறப்பதாய் கனவில் வாழ்கிறேன்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த பாடலை அமெரிக்காவில் வாழும் சில நண்பர்கள் (அவர்களை பற்றி முழுமையான தகவல் எதுவும் தெரியது) மேற்கத்திய இசை வடிவத்தில் அருமையாக மாற்றி இருந்தனர். மிகவும் ரசிக்க வைத்த அந்த வீடியோ தான் கீழே உள்ளது. இங்கே இருக்கும் மக்கள் போல நடனம், செய்கைகள் கொண்டு அருமையாக எடுத்துள்ளனர். அவர்கள் இதற்காக எவ்வளவு சிரமப் பட்டிருப்பார்கள் என்பது இதை பார்த்தலே புரியும்.

புது வடிவ பாட்டும் அதன் காட்சியும்
இது போன்ற இளங்கலைஞர்களுக்கு, இன்னும் சிறப்பாய் தனித்துவ இசைகள் தந்து, புது இசை வடிவங்களை தந்து வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

மேல உள்ள பாடல் மலேசியாவைச் சேர்ந்த யோகி.B மற்றும் நட்சத்திரா வெளியிட்ட 'வல்லவன்' என்ற ஆல்பத்தில் உள்ளது - இதை பற்றிய தகவல் தந்த பெத்தராயுடுவிற்கு நன்றி.

76 பின்னூட்டங்கள்:

said...

பசங்க பட்டய கிளப்பி இருக்காங்க :-)

said...

ஆல்ரெடி பாத்துருக்கேன்.. இருந்தாலும் தூள் கிளப்பி இருக்காங்க

இன்னைக்கு நாட்டாமை எல்லா இடத்துலயும் பர்ஸ்ட் போல...

said...

ரொம்ப கஷ்டப் பட்டுருக்காங்க.. நல்லா வந்துருக்கு... ரசிக்கும்படியா தான் இருக்கு :)

அப்பறம் பாட்டு start ஆன உடனே "Ram and Kili KK"னு வருது...

KK, இவளோ திறமையா உங்களுக்கு?? :P

said...

//
பசங்க பட்டய கிளப்பி இருக்காங்க :-) //

ஆமா நாட்டாமை..பசங்க சூப்பரா பண்ணி இருக்காங்க

said...

//இன்னைக்கு நாட்டாமை எல்லா இடத்துலயும் பர்ஸ்ட் போல...
//

அப்படித் தான் தெரியுது அருண்.. இவர் ஒரு பக்கம் தனி ஆவர்த்தனம் நடத்துறார் போல

said...

//இன்னைக்கு நாட்டாமை எல்லா இடத்துலயும் பர்ஸ்ட் போல... //

@அருண்,

திரும்பி வந்தா புது S.I. ஸ்டேசன்க்கு வந்த மாதிரி அப்படியே ஒரு சலம்பு சலம்புனா தான் எல்லோருக்கும் தெரியும் :-)

said...

//KK, இவளோ திறமையா உங்களுக்கு?? //நானும் இதைத் தான் கேக்கணும்னே நினச்சுகிட்டு இருந்தேன் அருண்

said...

//திரும்பி வந்தா புது S.I. ஸ்டேசன்க்கு வந்த மாதிரி அப்படியே ஒரு சலம்பு சலம்புனா தான் எல்லோருக்கும் தெரியும் //


அட! நல்ல பாலிசியா இருக்கே நாட்டாமை

Anonymous said...

எங்க ஊரிலேயும் இப்படி பட்ட கலஞர்கள் இருக்கின்றார்கள் என்று சற்று மகிழ்ச்சியாக இருக்கின்றது.பாட்டு உண்மையில் சூப்பர்.

said...

//
திரும்பி வந்தா புது S.I. ஸ்டேசன்க்கு வந்த மாதிரி அப்படியே ஒரு சலம்பு சலம்புனா தான் எல்லோருக்கும் தெரியும் :-)
//

அட அடா... எப்டி நாட்டாம எப்டி..
அது சரி, நம்ம சகா KK இவளோ திறமைய வச்சிக்கிட்டு silentaa இருந்துர்க்காரு.. ஒரு பகார்டி ட்ரீட் வாங்கீறனும் அவரு கிட்ட இருந்து !!!

said...

Arumaya panni irukkanga..

Anonymous said...

idha youtubela paarthen konja naal munaadi, guys r doing a gud job...

nandraga irundhadhu, matroru programla padina paatu marandhu vittadhu, adhuvum arumaiyaga irundhadhu.

chaa, ennoda comment first ilaya indha dhadavaiyum :-(

said...

நான் ஏதோ சுமாரா இருக்கும்னு நினைச்சேன், ஆனா ரொம்ப நல்லா இருந்தது, அதுவும் அவர்களின் குரல்களும் நல்லா இருந்தது, மொத்தத்துல பழையன கழிதலும்,புதியன புகுதலும் சில சமயங்களில் நல்லா தான் இருக்கும்னு தோணுது:)

said...

videos parka mudiyavillai maams.....browsing center-la parthuth commentren :)

said...

Neenga sonna nalla irukaama poyiduma enna :)

Even i like the original song very much...illayarajo-voda superb music...and SPB-oda voice....enna oru magic...thakunu jolly mooduku vara vaikira paathu idhu...

said...

ogey....naan oosai-la poi ippa andha patta ketkaren....appla vandhu video parkaren :)

said...

கார்த்திக்.. மன்னிக்கவும். இது அமேரிக்கரின் ஏல்பம் அல்ல. இவர்கள் மலேசிய கலைஞர்கள்.

இப்போது இங்கு தாப்பில் உள்ள இந்த குழுவின் பெயர் யோகி பி & நட்சத்திரா. குண்டாக இருப்பவர்தான் யோகி பி. இவர் இதற்கு முன் மலேசியாவில் போயத்திக் அம்மோ என்ற பெயரில் ஆங்கில ஏல்பங்கள் வெளியிட்டவர்.

மற்ற இருவர்களின் பெயர்கள்: டாக்டர் பேர்ன் மற்றும் எம்.சி ஜேஸ்

மடை திறந்து என்று இளயராஜாவின் பாடலை படுபவர் குணா. இவர் லோக் அப் என்ற குழுவை சேர்ந்தவர். இந்த குழு இந்தியாவிலும் போபுலர். அதனால் இவரை பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன்.

said...

அடடா.. அதுக்குள்ள கீழே சிவப்பெழுத்தில் நீங்கள் எடிட் பண்ணிட்டீங்க.. ஹீ ஹீ..

said...

அடடா.. அதுக்குள்ள கீழே சிவப்பெழுத்தில் நீங்கள் எடிட் பண்ணிட்டீங்க.. ஹீ ஹீ..

said...

நீங்கள் புதிய மெட்டு பாடலை விரும்புவதுபோல்.. நான் பழைய மெட்டு பாடலைத்தான் விரும்புகிறேன். இளையராஜா இசையில் அமைந்த அந்த பாடலைதான் ரொம்ப நாளாகவே தேடிக்கொண்டிருந்தேன்.

கார்த்திக், அந்த பாடலை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறீறா? நன்றி..

said...

//ramya said...
chaa, ennoda comment first ilaya indha dhadavaiyum :-( //

yenna kavalai ithu.. Neengga late-aa vaNthaalum latest-aathaanAE varuveenggaa??

said...

ஆபிஸ்ல ரொம்ப பிஸியா இருந்தேன்.. நீங்க இந்த பதிவை போட்டு என் கவனத்தை திருப்பீட்டீங்களே! சரி சரி.. நான் என் வேலையை தொடர்கிறேன்.

said...

இன்னும் பாட்டுப் போட்டுக் கேக்கலை. சும்மா ஒரு உள்ளேன் ஐயா மட்டும். அப்புறம் வந்து விமரிசனம்.

said...

@my friend
நல்ல தகவல். நன்றி :)

Anonymous said...

mm vallavan- CD spllly this remix a song already created some waves.

nice blend of remix and i guessh next
Yuvan;s chennai 6XXXXX0 ( some pin code ) movie they are gonna sign a opening song..

Anonymous said...

Erkanavae namma gils youtubela andha linka kuduthu paaka sonnapo.. aacharyama irundhudhu.. paravaa illayae.. namma oor thamizha kola pannama correctavae pronounce pandraangalaennu :-)

Good to see it again now :)

Anonymous said...

அட... super aa இருக்கு!

Anonymous said...

//இவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த பாடலை அமெரிக்காவில் வாழும் சில நண்பர்கள் (அவர்களை பற்றி முழுமையான தகவல் எதுவும் தெரியது) மேற்கத்திய இசை வடிவத்தில் அருமையாக மாற்றி இருந்தனர்//

இதுவும் super!

Anonymous said...

//மேல உள்ள பாடல் மலேசியாவைச் சேர்ந்த யோகி.B மற்றும் நட்சத்திரா வெளியிட்ட 'வல்லவன்' என்ற ஆல்பத்தில் உள்ளது - இதை பற்றிய தகவல் தந்த பெத்தராயுடுவிற்கு நன்றி.
//

இதை என்களுக்கு எல்லாம் சொன்ன உங்களுக்கும் ஒரு நன்றி!

Anonymous said...

//.:: MyFriend ::. said...
கார்த்திக்.. மன்னிக்கவும். இது அமேரிக்கரின் ஏல்பம் அல்ல. இவர்கள் மலேசிய கலைஞர்கள்.//

ரிப்பீட்டு...

இதத்தான் நீங்க இந்தப் பதிவ போட்டவுடனேயே சொல்லலாம்னு இருந்தேன். உங்க பின்னூட்டப் பெட்டி வேல செய்யல...

Anonymous said...

ennanga project busya?? aalaye kaanom...

said...

//எங்க ஊரிலேயும் இப்படி பட்ட கலஞர்கள் இருக்கின்றார்கள் என்று சற்று மகிழ்ச்சியாக இருக்கின்றது.பாட்டு உண்மையில் சூப்பர். //

ஆமாங்க துர்கா.. நல்லா ரசிகும்படி போட்டு இருக்காங்க..

said...

//அட அடா... எப்டி நாட்டாம எப்டி..
அது சரி, நம்ம சகா KK இவளோ திறமைய வச்சிக்கிட்டு silentaa இருந்துர்க்காரு.. ஒரு பகார்டி ட்ரீட் வாங்கீறனும் அவரு கிட்ட இருந்து !!! //


என்ன அருண், நாட்டாமை பத்தி இப்படி கேட்டுட்ட..

ஆமா..KK கிட்டயிருந்து ட்ரீட் வாங்காம விடக்கூடாது அருண்

said...

//Arumaya panni irukkanga.. //

Yes priya..differenta panni irukkaanga

Anonymous said...

இதுவும் indian girls-உம் தான் நான் இப்ப அடிக்கடி கேக்கர பாட்டு..ரொம்ப நல்லாயிருக்கு இல்ல!!

said...

//chaa, ennoda comment first ilaya indha dhadavaiyum //

ellaam blogger sathi, ramya :-(

said...

//அதுவும் அவர்களின் குரல்களும் நல்லா இருந்தது, மொத்தத்துல பழையன கழிதலும்,புதியன புகுதலும் சில சமயங்களில் நல்லா தான் இருக்கும்னு தோணுது//

சரியாச் சொன்னீங்க வேதா.. இன்றைய இசையமைப்பாளர்களை விட இது நன்றாக இருப்பதாகவே தெரிகிறது

said...

//videos parka mudiyavillai maams.....browsing center-la parthuth commentren //

paththuttu sollu mapla

said...

//Neenga sonna nalla irukaama poyiduma enna :)//

un pasathukku alave illa mapla

//Even i like the original song very much...illayarajo-voda superb music...and SPB-oda voice....enna oru magic...thakunu jolly mooduku vara vaikira paathu idhu... //

I accept that the original song is good mapla.. Ana intha pattu differenta panni irunthaangkapa

said...

//naan oosai-la poi ippa andha patta ketkaren....appla vandhu video parkaren //

ok mapla.. paththuttu comments solluppaa

said...

//கார்த்திக்.. மன்னிக்கவும். இது அமேரிக்கரின் ஏல்பம் அல்ல. இவர்கள் மலேசிய கலைஞர்கள்.
//

உங்க விரிவான தகவலுக்கு நன்றிங்க மை பிரண்ட்..

said...

//அதுக்குள்ள கீழே சிவப்பெழுத்தில் நீங்கள் எடிட் பண்ணிட்டீங்க.. ஹீ ஹீ..//

:-)

said...

//கார்த்திக், அந்த பாடலை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறீறா? நன்றி.. //

நான் அந்த பாடலை அனுப்பி நீங்க இப்போ கேட்டுகிட்டு இருக்கீங்க தானே மை பிரண்ட்

said...

//yenna kavalai ithu.. Neengga late-aa vaNthaalum latest-aathaanAE varuveenggaa?? //

அப்படி சொல்லுங்க மை பிரண்ட்..

ரம்யா உங்க புகழ் தான் ஊரெல்லாம் பரவி கிடக்கே

said...

//ஆபிஸ்ல ரொம்ப பிஸியா இருந்தேன்.. நீங்க இந்த பதிவை போட்டு என் கவனத்தை திருப்பீட்டீங்களே! சரி சரி.. நான் என் வேலையை தொடர்கிறேன்//

ஹிஹி..ஆபீசுல வேலை எல்லாம் செய்றீங்களா மை பிரண்ட்

said...

//இன்னும் பாட்டுப் போட்டுக் கேக்கலை. சும்மா ஒரு உள்ளேன் ஐயா மட்டும். அப்புறம் வந்து விமரிசனம்//

கீதா மேடம், கேட்டுவிட்டு சொல்லுங்க மேடம்..

said...

//nice blend of remix and i guessh next
Yuvan;s chennai 6XXXXX0 ( some pin code ) movie they are gonna sign a opening song.. //

ஓ. புது விஷயமா இருக்கே அடியா..

said...

//Good to see it again now //

O..appadiya G3

said...

//அட... super aa இருக்கு//

ஆமாங்க ட்ரீம்ஸ், முதல் முறை கேட்டபோது உள்ளம் கவர்ந்ததுபா

said...

//இதத்தான் நீங்க இந்தப் பதிவ போட்டவுடனேயே சொல்லலாம்னு இருந்தேன். உங்க பின்னூட்டப் பெட்டி வேல செய்யல...
//

ஓ..ஜி.. எல்லோரும் இதையே சொல்ரீங்களே.. பிளாகரப்பா காப்பாத்துப்பா

said...

//ennanga project busya?? aalaye kaanom...//

ஆமாங்க ரம்யா.. :-(

Anonymous said...

sema remix boss...

said...

ஏதோ எனக்கு தெரிஞ்ச தகவல்.. உங்களோடு பகிர்ந்துகொண்டேன். :-)

said...

// i guessh next
Yuvan;s chennai 6XXXXX0 ( some pin code ) movie they are gonna sign a opening song.. //

ஆமாங்க அதியா. சென்னை 600 028 - வெங்கட் பிரபு - SPB சரண் - யுவன் கூட்டனியில் எடுக்கப்படும் படம். படத்தின் முதல் பாடல் இவர்கள்தான் பாடுகிறார்கள். இப்போதெல்லாம் யுவன் தன் படங்களில் ஒரு ரீமிக்ஸாவது வைத்திருப்பார். அதற்க்கு இவர்களை வைத்தே இவர்களது மடை திறந்து பாடலை பாட வைக்க பேச்சு வார்த்தை நடந்தது. அனேகமாக இந்த பாடலை நாம் திரையில் காண வாய்ப்புக்கள் அதிகம்.

said...

@ Ji
// இதத்தான் நீங்க இந்தப் பதிவ போட்டவுடனேயே சொல்லலாம்னு இருந்தேன். உங்க பின்னூட்டப் பெட்டி வேல செய்யல... //

ஆமாங்க.. நானும் ரொம்ப நேரம் முயற்சி செய்தேன்.

@தலைவரே!
உங்க வலையிலே என்னாலே இன்னும் என் சொந்த அக்கவுண்டில் பின்னூட்டம் இட முடியவில்லை. இன்னும் அனானிமஸ் சோய்ஸில்தான் நான் பின்னூட்டம் இடுகிறேன். :-(

said...

// நான் அந்த பாடலை அனுப்பி நீங்க இப்போ கேட்டுகிட்டு இருக்கீங்க தானே மை பிரண்ட் //

நேற்று வீட்டுலேயும், இன்னைக்கு ஆபிஸ்லேயும் இந்த பாட்டைத்தான் கேட்டுகொண்டிருக்கிறேன்.

இன்னும் தீபாவளி, திருமகன், பெரியார், ஓரம்போ, கண்ணும் கண்ணும், பொறி பாடல்களை டவுண்லோட் செய்யாததால், இப்போது இந்த பாடல் மட்டும்தான் என் வின்-அம்பில் விளையாடிக்கொண்டுள்ளது. :-)

said...

// ஆபீசுல வேலை எல்லாம் செய்றீங்களா மை பிரண்ட் //

ஆமாங்க.. ஆனாலும் என்னுடைய வேலை பீரியட் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. என் சீனியர் இஞ்சீனியர் நேற்று கூட இன்னும் இங்கேயே வேலையை தொடர சொல்லி வற்ப்புறுத்துகிறார். அவரோட ஆசைக்காக இந்த வாரம் கந்தீனியூ பண்ணுகிறேன் என்று நான் சொன்னேன். பதிலுக்கு அவர் என்னை அடுத்த வார இறுதி வரைக்கும் தொடர சொல்கிறார். ரொம்ப பாசக்கார பயலுங்களா இருக்காங்க.. :-P

said...

புதிய பாடலை விட பழைய பாடல் தான் என்னை மிகவும் கவர்ந்தது.
இரண்டையும் தந்ததற்கு நன்றி.

said...

//sema remix boss... //

Ama harish..kalakkalaa panni irukkaangka

said...

//ஏதோ எனக்கு தெரிஞ்ச தகவல்.. உங்களோடு பகிர்ந்துகொண்டேன்.//

என்னங்க மை பிரண்ட் இப்படி சொல்றீங்க.. நீங்க தான் தகவல் சுரங்கம் ஆயிற்றே

said...

//ஆமாங்க அதியா. சென்னை 600 028 - வெங்கட் பிரபு - SPB சரண் - யுவன் கூட்டனியில் எடுக்கப்படும் படம். படத்தின் முதல் பாடல் இவர்கள்தான் பாடுகிறார்கள். இப்போதெல்லாம் யுவன் தன் படங்களில் ஒரு ரீமிக்ஸாவது வைத்திருப்பார். அதற்க்கு இவர்களை வைத்தே இவர்களது மடை திறந்து பாடலை பாட வைக்க பேச்சு வார்த்தை நடந்தது. அனேகமாக இந்த பாடலை நாம் திரையில் காண வாய்ப்புக்கள் அதிகம். //


ஆஹா.. புதுசு புதுசு பல மேட்டருங்க சொல்றீங்க மை பிரண்ட்

said...

//@தலைவரே!
உங்க வலையிலே என்னாலே இன்னும் என் சொந்த அக்கவுண்டில் பின்னூட்டம் இட முடியவில்லை. இன்னும் அனானிமஸ் சோய்ஸில்தான் நான் பின்னூட்டம் இடுகிறேன்//

மை பிரண்ட்,

நானும் தானா சரியாகும்னு நினைக்கிறேன்... இல்லைன்னா புது பிளாக்கருக்கு மாறவேண்டியது தான் மை பிரண்ட்

said...

//இன்னும் தீபாவளி, திருமகன், பெரியார், ஓரம்போ, கண்ணும் கண்ணும், பொறி பாடல்களை டவுண்லோட் செய்யாததால், இப்போது இந்த பாடல் மட்டும்தான் என் வின்-அம்பில் விளையாடிக்கொண்டுள்ளது//

அப்படி போடுங்க.. உங்க வின்-அம்பிலேயும் மடை திறந்து தானா..

said...

// நீங்க தான் தகவல் சுரங்கம் ஆயிற்றே //

என்ன புது பட்டமா? :-P

said...

// ஆஹா.. புதுசு புதுசு பல மேட்டருங்க சொல்றீங்க மை பிரண்ட் //

உங்க சிட்டு குருவியைதான் ஆளையே காணோமே! சிட்டு குருவி உங்களை சந்தித்திருந்தால் இந்த நீயூஸ் எல்லாம் நீங்கதானே எங்களுக்கு கொடுத்திருப்பீங்க!! :-)

said...

// இல்லைன்னா புது பிளாக்கருக்கு மாறவேண்டியது தான் மை பிரண்ட் //

சீக்கிரமா மாறிவிடுங்கள்.

waiting...

said...

// அப்படி போடுங்க.. உங்க வின்-அம்பிலேயும் மடை திறந்து தானா.. //

நீங்களுமா??? ;-)

Good Night தலைவரே! காலையில் சந்திப்போம்..

said...

//// நீங்க தான் தகவல் சுரங்கம் ஆயிற்றே //

என்ன புது பட்டமா?//


உங்களுக்கு பொருத்தமான பட்டம் தானே மை பிரண்ட்

said...

//உங்க சிட்டு குருவியைதான் ஆளையே காணோமே! சிட்டு குருவி உங்களை சந்தித்திருந்தால் இந்த நீயூஸ் எல்லாம் நீங்கதானே எங்களுக்கு கொடுத்திருப்பீங்க//


இன்னைக்கு தான் வந்தது நம்ம சிட்டுக்குருவி மைபிரண்ட்.. லாங் லீவ்ல போயிருந்தது.. இனிமே சினிமா செய்தியெல்லாம் சுடச்சுட தான்

said...

//சீக்கிரமா மாறிவிடுங்கள்.

waiting...
//

ரொம்ப நாள் காக்க வைக்கமாட்டேன் மை பிரண்ட்

said...

//நீங்களுமா??? ;-)
//


ஹிஹிஹி.. ஆமாங்க மை பிரண்ட்

said...

// palikka vechudren , treat vangidren :) //

Romba Santhosham.. :-D

said...

Karthik, comments page maari unGkaLukku vanthuduchchi. aNtha previous comments Arunukku poda venNdiyathu. :-P

said...

// இன்னைக்கு தான் வந்தது நம்ம சிட்டுக்குருவி மைபிரண்ட்.. லாங் லீவ்ல போயிருந்தது.. இனிமே சினிமா செய்தியெல்லாம் சுடச்சுட தான் //

அப்போ, இன்னைக்கு சினிமா நியூஸ் இருக்குன்னு சொல்லுங்க.. ;-)

said...

கார்த்தி,
கூட்டாளிங்க கலக்கியிருக்காங்க.
பதிவுக்கு நன்றி.

Lockup'னு ஒரு பாடல் தொகுப்பு, சில வருசங்களுக்கு முன் வெளிவந்தது,மலேசியாவில் இருந்து.
கேட்டு இருக்கீங்களா?

அன்புடன்
குமரேசன்

said...

arumaiyeaga irunthathu...thanks