Thursday, February 01, 2007

சிறுமலை பயணம் - கல்லூரி கால பயணத் தொடர் 2

இந்த பயணத்தின் முதல் பகுதி

எங்கள் ஊர்ப் பக்கமெல்லாம் (பெரும்பாலும் எந்த கிராமத்துக்கு போகும் பேருந்துகளும்) பேருந்துகள் நிற்பதற்கென்று ஒரு இடம் இருந்தாலும் எங்கே யார் குறுக்கே கையை நீட்டினாலும் பேருந்து நிற்கும். சிறிய ஊரான எங்கள் ஊரிலேயே, ஊரை விட்டு வெளியேறுவதற்குள் ஐந்து நிறுத்தங்கள் இருக்கும். எங்களை சுமந்து கொண்டு சென்ற அந்த சிறுமலைக்கு போகும் வண்டியும், கைகாட்டி நிற்போருக்கெல்லாம் நின்று அவர்களை உள்ளே திணித்துகொண்டு சென்றது. ஆசை உள்ளவன் கல்யாணப் பந்திக்கு சென்றால் மூக்கில் எட்டிப் பார்க்கும் அளவுக்கு சாப்பிடுவது போல வெளியில் நாலும் பேர்,இரண்டு பக்க படிகளில் தொங்கி வர, ஆடி ஆடி குலுங்கி குலுங்கி மலை ஏற ஆரம்பித்தது பேருந்து.

ஜன்னல் ஓர இருக்கைகள் தான், இந்த மாதிரி பயணங்களில் நன்று. எனக்கும் அது தான் ரொம்ப பிடிக்கும். மெல்ல மலயேற ஆரம்பித்த போது சில்லென்று சுகந்தமான தென்றல் மூஞ்சியில் அடித்தது. என் தலை முடியெல்லாம் அந்த காற்றோடு போக ஆசை பட்டு எல்லாப் புறமும் கலைந்தது. கடந்து சென்ற பாறைகளும் அதில் எழுதப்பட்ட ஜோடிப் பெயர்களும், காதலை இன்னும் உலகுக்கு சொல்லிகொண்டிருந்தன. தூரத்தில் திண்டுக்கல் மலைக்கோட்டை சின்ன தலையணை போல தெரிய ஆரம்பித்தது. அட! சொல்ல மறந்துவிட்டேனே. திண்டுக்கல் என்பதற்கு கல்லினாலானா தலையணை என்று பொருள். திண்டு என்றால் தலையணை. திப்பு சுல்தான் மன்னர்கள் இங்கிருந்து தான் ஆட்சி செய்தனர். இந்த மலைக்கோட்டையில் இருந்து திருச்சிக்கும் சிவகங்கைக்கும், நாமக்கல் மலைக்கோட்டைக்கும் சுரங்கப் பாதைகள் இருந்ததாக சொல்வதுண்டு. அந்த சுரங்கத்தின் வாசல் வரை நான் சென்று வந்ததுண்டு, எனது சிறிய வயதில். மருது சகோதரர்கள் உதவி கேட்டு திப்புசுல்தானை தேடி அப்படித் தான் வந்ததாக கவிஞர் கண்ணதாசன் எழுதிய சிவகங்கை சீமை படத்தில் பார்த்த ஞாபகம் இன்னமும் உண்டு.

என் நண்பர்களுக்கு இந்த மாதிரி பயணமெல்லாம் கொஞ்சம் புதுசு. சுற்றியுள்ள மனிதர்களும் அவர்களின் மண் வாசனையும் ரொம்ப புதுசு. தோளில் துண்டு போட்டு கொண்டு வெறும் வேட்டி மட்டுமே கட்டிக் கொண்டு பெரும்பாலான ஆண்கள் பயணம் செய்வார்கள். அவர்களுக்கு இதுவெல்லாம் ரொம்ப சாதாரணம். பஸ்ஸில் ஏறினாலோ பக்கத்து தெரு பாமா முதல் பக்கத்து ஊரு பரிமளா வரை, ஆலை இயந்திரங்கள் போல சத்தமாக பேசிக்கொண்டே வருவது பெண்கள் இயல்பு. நடத்துநர்களை பற்றிச் சொல்லவே வேண்டாம். இளவயது நடத்துநர்கள் பாதி பேர் காதலித்து, குறிப்பாக பேருந்தில் வந்த பெண்களையே, கல்யாணம் செய்து கொள்வார்கள். நான் ஒன்பதாவது படிக்கும் போது, என் கல்யாணமாகாத சித்தியோடு பேருந்தில் ஏறினேன். அதுவரை பழைய தத்துவ பாட்டு பாடிக்கொண்டிருந்த பேருந்தில், நடத்துநர் வேகமாக கேசட்டை மாற்றி, கோபுர வாசலிலே படத்தில் தேவதை போலொரு பெண்ணிங்கே வந்தது தம்பி என்ற பாட்டை போட்டார். இப்படித்தான் பேருந்தில் பள்ளிக்கு பயணம் செய்த காலங்களில் பல பாடல்களில் உள்ளர்த்தத்தை தெரிந்துகொண்டேன். குறிப்பாக சிறையில் பூத்த சின்ன மலர் படத்தில் வரும் வாசக் கருவேப்பிலையே, அடிக்கடி பேருந்துகளில் கேட்ட பாடல்.

எனக்கு தெரிந்தவரை, ஊட்டி மலைப் பாதையை விட, எங்கள் சிறுமலை பேருந்து பாதை கொஞ்சம் அபாயகரமானது. அதிகமான இடங்களில் கொண்டை ஊசி வளைவுகளும் உண்டு இங்கே. அதிகமான போக்குவரத்து இல்லாததால் ஒரு வழி பாதை மட்டுமே. எதிர் பேருந்தோ மற்ற வேன் போன்ற வாகனமோ வந்து விட்டால் இரண்டும் கடந்து கொள்வது சற்று சிரமமான விஷயம். ஏதாவது ஒரு வண்டி மற்ற வண்டிக்காக கொஞ்சம் அகலமான இடத்தில் காத்திருந்து அப்புறம் தான் கடந்து போகும். வெளிப்புற மலைகளை கடந்து மெல்ல மலைக்கூட்டத்துள் பேருந்து புகுந்தது. அதுவரை கொஞ்சம் பொட்டல் காடாய் இருந்த மலைத் தொடர் கொஞ்சம் கொஞ்சமாக அடர் காடாய் மாறியது. வானத்தை தாங்கள் தான் தாங்கி பிடிப்பதாய் கர்வம் கொண்டு தலை நிமிர்ந்த மரங்கள். அதில் அதனை சுற்றி படர்ந்து கிடந்த மிளகு கொடிகள். அந்த இலைகளின் வாசனையே சொன்னது தாங்கள் மிளகு கொடியின் பிள்ளைகள் என்று.

முக்கனி என்று சொல்லப்படுகின்ற மா, பலா, வாழையெல்லாம் இங்கே தான் வழியெல்லாம் விளைந்து கிடந்தது. தனது குலைகளை தாங்க முடியாமல், அதிக அறிவு இருந்தாலும் செருக்கு கொள்ளக்கூடாது தங்களை மாதிரி என்று ஊருக்கு தத்துவம் சொல்லிகொண்டிருந்தன பணிந்து கிடந்த வாழை மரங்கள். சிறுமலை வாழைப்பழத்தின் சுவையினை நாக்கினால் தெரிந்து கொள்ளவில்லை என்றாலும், காதுகள் வழி கேட்டீர்ப்பீர்கள். அந்த சுவை தந்தது இந்த மண் தான். இது மட்டுமல்லாமல், கொய்யா, மாதுளை போன்ற பழங்களும் சங்க காலத்தில் மட்டுமே படித்த கேட்ட பழங்களான அத்திப்பழம் போன்ற வகைகளும் இங்கே ரொம்ப பிரசித்தி.

(இன்னும் பல சுவையான தகவலுடன், பயணம் தொடரும்)

56 பின்னூட்டங்கள்:

said...

mudhal?

said...

mudhala illiya nu terialiye :(

said...

adadadada uvamai ellam engerndhu edukareenga saami? sila directors ellam petti kodukrappo ennadhu epdi ipdi pesaranunga nu muzhippen, same muzhi here :)

said...

adra adra adra sakkai mudhal 3 idatha pidikra sugame thani! :) idhellam enna chinnapulla thanama nu rangamani kettalum, kandukka mattenla ;)

said...

//ஜன்னல் ஓர இருக்கைகள் தான், இந்த மாதிரி பயணங்களில் நன்று. //

இந்த வரியை படிக்கும்போது, பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் என்ற கடல் பாடல்தான் நினைவுக்கு வருது. நீங்க யாராவ்து அப்படி பார்த்தனால்தானே உங்களுக்கு ஜன்னல் ஓரம் பிடிச்சிருக்கு? உண்மையை சொல்லுங்க..

அய்யே! வெக்கத்தை பாரு!!!! :-P

said...

//ஜன்னல் ஓர இருக்கைகள் தான், இந்த மாதிரி பயணங்களில் நன்று. //

இந்த வரியை படிக்கும்போது, பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் என்ற கடல் பாடல்தான் நினைவுக்கு வருது. நீங்க யாராவ்து அப்படி பார்த்தனால்தானே உங்களுக்கு ஜன்னல் ஓரம் பிடிச்சிருக்கு? உண்மையை சொல்லுங்க..

அய்யே! வெக்கத்தை பாரு!!!! :-P

said...

//இப்படித்தான் பேருந்தில் பள்ளிக்கு பயணம் செய்த காலங்களில் பல பாடல்களில் உள்ளர்த்தத்தை தெரிந்துகொண்டேன்.//

ஓ!! அதுக்காகத்தான் நீங்க இளையராஜா பாடல்களை சேர்கிறீங்களா? எல்லாம் பழைய நினைவுகளை கவிதையாய் எழுத..

c.m.haniff said...

Ungaludan naanum payanam seyvathu pol irukinrathu, super :)

said...

your post reminds me of my trip to sirumalai with my friends in bike.
:) missing those good old days...

continue writing... Meanwhile I will try writing my kodaikanal bike riding experience in my blog.

said...

mmmm, சிறுமலைப்பழம் ருசியைப் பத்திச்சொல்லணுமா? பழநி பஞ்சாமிர்தமே அந்தப் பழத்தால் தானே பிரசித்தி அடைந்தது? இப்போல்லாம் என்ன பஞ்சாமிர்தம்? ஒண்ணுமே இல்லை.

நல்லா எழுதறீங்க. அதுவும் நல்ல உவமைகள் எல்லாம் கொடுக்கிறீங்க. சிறுமலையில் இன்னும் பயணம் செய்யலை. செய்யும் நாளை எதிர்பார்க்க வைக்குது.

said...

@ச்யாம், என்ன உங்க வீட்டிலே பின்னூட்டம் கொடுக்கவே முடியலை? என்ன ஆச்சு? மூணு நாளாப் பார்க்கிறேன், வரவே முடியலை? தலைவி கிட்டே அவ்வளவு அலட்சியமா? :D
பதிவு வருது, கமெண்ட் போட முடியலையே ஏன்?

said...

vara vara bayangama payana kadhai ezhudhareenga....ivlo porumaya utkardhu eppadi ezhudhareenga.....gr8 maams :)

said...

missing village life :(

said...

eppadi mu.ka ungalaala ivlo ezudha mudiyudhu daily. chanceae illabaa

sirumalai naan paakala. but engayo bus la pora feeling vandhudhu padikkum boodhu. chillunnu kaathu adicha feeling vera...i love those dangerous malai journeys..adhuvum friends kooda ponaa kaekkavaa vaenum :)

//சுகந்தமான தென்றல் மூஞ்சியில் அடித்தது.// haha மூஞ்சியில் enra vaarthai paathadhum venniraadai moorthy solra maari irundadhu :)

said...

thala... konjam biji thala... adhaan indha pakkam vara mudiyala! Sorry ba!

inniki dhaan time kidaichudhu..

aama naan idhukku munnadi kooda vandhu commentu potene unga previous post'ku ellam!!!!

said...

padichu marubadiyum vandhu commentureaen! :)

said...

தல...
உள்ளேன் அய்யா...

said...

வணக்கம் அதே கண்கள்.நீண்ட நெடிய பயணம் போல இருக்கு. ஏதோ முடிவு சரியா இருந்தா சரி.பதிவில் நல்ல மெருகு கூடிக்கொண்டு வருகிறது.மே மாதம் சென்னை வருவீங்க இல்லே?

said...

என்ன ஒரே நாள்ல 2 பதிவு போடற நீங்க அமைதியா இருக்கீங்க? உண்மைய சொல்லுங்க எந்த ஊருக்கு காலிங்? :)

said...

//பேருந்துகள் நிற்பதற்கென்று ஒரு இடம் இருந்தாலும் எங்கே யார் குறுக்கே கையை நீட்டினாலும் பேருந்து நிற்கும்//

இல்லனா வெட்டிருவாய்ங்கல்ல :-)

said...

//பேருந்துகள் நிற்பதற்கென்று ஒரு இடம் இருந்தாலும் எங்கே யார் குறுக்கே கையை நீட்டினாலும் பேருந்து நிற்கும்//

இல்லனா வெட்டிருவாய்ங்கல்ல :-)

said...

சூப்பரா சொல்லி இருக்கீங்க தல...ஊருக்கு போகனும்னு ஏக்கமா போச்சு இத படிச்சு :-)

said...

அருமை
அழகான அனுபவங்கள்
அழகான வரிகள்
நல்லா எழுதறீங்க "தல"

இந்த உவமை விஷயத்துல உங்களை அடிச்சிக்கா யாரும் இல்லை "தல"..
சும்மா..நச் நச்சுன்னு இருக்கு...

said...

graama vaazhkai nyabagam enakku! :)

said...

/muthal //

முதால் தான் பொற்கொடி.. என்ன சந்தேகம்.. விட்ட இடத்தை சூப்பரா புடிச்சுட்ட..

said...

//adadadada uvamai ellam engerndhu edukareenga saami? sila directors ellam petti kodukrappo ennadhu epdi ipdi pesaranunga nu muzhippen, same muzhi here //

எனக்கே தெரில பொற்கொடி.. எல்லாம் தானா வருது பொற்கொடி

said...

//adra adra adra sakkai mudhal 3 idatha pidikra sugame thani! :) idhellam enna chinnapulla thanama nu rangamani kettalum, kandukka mattenla //

இதோ புடி பொற்கொடி, சுடச் சுட சேமியா பாயாசமும், வெங்காய பக்கோடாவும்.. ரங்கமணிக்கும் கொடுப்பா, பொற்கொடி, கண்டுக்க மாட்டாரு..

said...

//அய்யே! வெக்கத்தை பாரு//

பிரண்ட், என்ன இது.. நண்பனை இப்படியா வெட்கப்பட வைப்பது

said...

//அய்யே! வெக்கத்தை பாரு//

மறுபடியும் வெட்கபட வைக்கிறீங்களே, மை பிரண்ட்

said...

//ஓ!! அதுக்காகத்தான் நீங்க இளையராஜா பாடல்களை சேர்கிறீங்களா? எல்லாம் பழைய நினைவுகளை கவிதையாய் எழுத..//


மை பிரண்ட், ஆஹா.. நண்பனை இப்படியா காலை வாருறது

said...

//Ungaludan naanum payanam seyvathu pol irukinrathu, super //

பாத்துங்க, நடத்துனர் டிக்கட் கேக்கப் போறாரு.. போறதுக்கு கட்டணம் நான்கு ரூபாய் ஐம்பது காசுகள் அப்போ

said...

/your post reminds me of my trip to sirumalai with my friends in bike.
:) missing those good old days...

continue writing... Meanwhile I will try writing my kodaikanal bike riding experience in my blog.

//


சீக்கிரம் வர்றேன் கார்த்தி.. கொடைகானலை சுத்திபாக்கலாம்

said...

//நல்லா எழுதறீங்க. அதுவும் நல்ல உவமைகள் எல்லாம் கொடுக்கிறீங்க. சிறுமலையில் இன்னும் பயணம் செய்யலை. செய்யும் நாளை எதிர்பார்க்க வைக்குது.
//

மேடம், சிறுமலை பழத்தை பத்தி ஒரு தனிகதையே சொல்லிட்டீங்க போங்க

said...

/தலைவி கிட்டே அவ்வளவு அலட்சியமா? :D
பதிவு வருது, கமெண்ட் போட முடியலையே ஏன்? //


தலைவியே.. ஷ்யாமை போய் சந்தேகப் படலாமா.. அவர் உங்களுக்காக தீக்குளிக்க கூட ரெடி

said...

/vara vara bayangama payana kadhai ezhudhareenga....ivlo porumaya utkardhu eppadi ezhudhareenga.....gr8 maams //

நான் தான் சொன்னேனே மாப்ள.. போதைன்னு

said...

//missing village life//

எனக்கும் தான் மாப்ள.. மொட்டை அடித்துவிட்டு தலையில் வைக்க பூ வாங்குன கதையாத்தான் இருக்கு

said...

////சுகந்தமான தென்றல் மூஞ்சியில் அடித்தது.// haha மூஞ்சியில் enra vaarthai paathadhum venniraadai moorthy solra maari irundadhu //

மாமு, மொதல்ல முகம்னு தான் போடலாம்னு நினச்சேன்.. ஆனால் முகம் என்பது வடமொழிச் சொல்லுன்னும் மூஞ்சி என்பதே தமிழ் சொல்லுன்னும் எப்போதோ படித்தது ஞாபகத்திற்கு வந்தது..

said...

//naan idhukku munnadi kooda vandhu commentu potene unga previous post'ku ellam//

ஹிஹிஹி.. இதுக்கு போடலையே கார்த்திக்.. அது தான் சும்மா..

said...

//padichu marubadiyum vandhu commentureaen//

மீண்டும் வருக கார்த்தி

said...

/தல...
உள்ளேன் அய்யா... //

வருகையை குறிச்சாச்சு கோபி

said...

//பதிவில் நல்ல மெருகு கூடிக்கொண்டு வருகிறது.மே மாதம் சென்னை வருவீங்க இல்லே//

நன்றி ராமசாமி.. சென்னைக்கு வர இன்னும் பல மாதங்கள் ஆகும்னு நினைக்கிறேன்

said...

//என்ன ஒரே நாள்ல 2 பதிவு போடற நீங்க அமைதியா இருக்கீங்க? உண்மைய சொல்லுங்க எந்த ஊருக்கு காலிங்? //


பொற்கொடி, என்ன இது இப்படியெல்லாம் சந்தேகபட்டுட்டு..

said...

//இல்லனா வெட்டிருவாய்ங்கல்ல //

போட்டுருவாய்ங்கல்ல..

said...

//சூப்பரா சொல்லி இருக்கீங்க தல...ஊருக்கு போகனும்னு ஏக்கமா போச்சு இத படிச்சு//

எழுதினவுடனே எனக்கும் நாட்டாமை :-)

said...

//இந்த உவமை விஷயத்துல உங்களை அடிச்சிக்கா யாரும் இல்லை "தல"..
சும்மா..நச் நச்சுன்னு இருக்கு...
//

நன்றிங்க கோபி..

said...

//graama vaazhkai nyabagam enakku//

me too, karthi

said...

The best part was the cassete change by the conductor ..Anga daan one directoral touch theriyudhu kaarthi,,

said...

//இந்த மலைக்கோட்டையில் இருந்து திருச்சிக்கும் சிவகங்கைக்கும், நாமக்கல் மலைக்கோட்டைக்கும் சுரங்கப் பாதைகள் இருந்ததாக சொல்வதுண்டு. அந்த சுரங்கத்தின் வாசல் வரை நான் சென்று வந்ததுண்டு//

ஆமாங்க! நானும் கேள்விபட்டு இருக்கின்றேன் அந்த சுரங்கம் பத்தி! ஆனா பார்த்ததில்லை!

said...

//இப்படித்தான் பேருந்தில் பள்ளிக்கு பயணம் செய்த காலங்களில் பல பாடல்களில் உள்ளர்த்தத்தை தெரிந்துகொண்டேன். //

அடப்பாவிகளா! இதெல்லாம் வேற நடந்துதா! ம்ம்ம்... ஏதோ உங்களுக்காச்சும் இது மாதிரி முன்னுதாரணங்கள் இருந்தன! நமக்கு ஒன்னும் கிடையாது! ;)

said...

//இது மட்டுமல்லாமல், கொய்யா, மாதுளை போன்ற பழங்களும் சங்க காலத்தில் மட்டுமே படித்த கேட்ட பழங்களான அத்திப்பழம் போன்ற வகைகளும் இங்கே ரொம்ப பிரசித்தி//

அத்திப்பழமா? எனக்கு அத்திக்காய் தான் தெரியும்! நல்ல பாட்டு அது!

said...

/The best part was the cassete change by the conductor ..Anga daan one directoral touch theriyudhu kaarthi,, //

ஹாஹா.. நன்றிடா மது.. டைரக்டர் டச்? ஏதோ இப்போ தான் நமக்கும் அந்த மாதிரி வர ஆரம்பிச்சிருக்கு, பார்ப்போம்..

said...

/ஆமாங்க! நானும் கேள்விபட்டு இருக்கின்றேன் அந்த சுரங்கம் பத்தி! ஆனா பார்த்ததில்லை!//

இந்த சுரங்கத்தை சுத்தி நிறைய கதைகள் இருக்கு ட்ரீம்ஸ்.. எழுதுனா அதுவே இன்னும் பத்து பதிவுகள் போகும் :-)

said...

//அடப்பாவிகளா! இதெல்லாம் வேற நடந்துதா! ம்ம்ம்... ஏதோ உங்களுக்காச்சும் இது மாதிரி முன்னுதாரணங்கள் இருந்தன! நமக்கு ஒன்னும் கிடையாது//

என் வாழ்க்கையில் நிறைய நேரங்கள் பயணங்களில், குறிப்பா பஸ்ஸில் போயிருக்கு ட்ரீம்ஸ்.. நிறைய நாட்கள் மறக்க முடியாதது..

said...

//அத்திப்பழமா? எனக்கு அத்திக்காய் தான் தெரியும்! நல்ல பாட்டு அது! //

ட்ரீம்ஸ், சிவப்பாக.. உள்ளே நிறைய விதைகள் கொண்டு இருக்கும் ட்ரீம்ஸ்.. நல்ல சுவையாக இருக்கும்.. சில மனிதர்களின் குணத்தை பற்றி சொல்லும் போதும் இந்த பழத்தை சொல்லுவார்கள்..

ட்ரீம்ஸ், அத்திக்காய் பாட்டு, பலே பாண்டியா படத்தில் அருமையாக இருக்கும், கண்ணதாசனின் எழுத்து அதில் ஜொலிக்கும்.

Anonymous said...

Dear Karthi,
Unga padhivai padichitu, reply panna vandhen.

Indha UVAMAiGAL = Really VEry NIce.

//missing village life//

எனக்கும் தான் மாப்ள.. மொட்டை அடித்துவிட்டு தலையில் வைக்க பூ வாங்குன கதையாத்தான் இருக்கு

Neenal Varthaigalai Velipaduthum azhaguku - Ungalai Pugazha Varthaigalai thedi kondu irukiren...

With Love,
Usha Sankar.

said...

//Indha UVAMAiGAL = Really VEry NIce.//

Thanks Usha..

//Neenal Varthaigalai Velipaduthum azhaguku - Ungalai Pugazha Varthaigalai thedi kondu irukiren...//

எல்லாம் உங்களை போன்ற நண்பர்கள் தந்த ஆதரவில், ஊற்றிய உற்சாகத்தில் தான் இதுவெல்லாம் முளைத்தது உஷா