சிறுமலை பயணம் - கல்லூரி கால பயணத் தொடர் 3
சிறுமலை பயணம் - கல்லூரி கால பயணத் தொடர் 2
எனது சிறு வயதில், எங்கள் சிறுமலை பற்றியும் அதன் வளத்தை பற்றியும் ஏகப்பட்ட கதைகளை கேட்டுருக்கிறேன். அந்த அளவுக்கு வளங்கள் இப்போ அங்க இருக்கா, மனிதர்கள் காட்டை அழிக்க ஆரம்பித்த இந்த காலத்துலன்னு தெரியல. இப்பவே அந்த கதைகளைச் சொல்லாம என் நண்பர்களுக்கு நான் எப்போ அந்த கதைகளை இந்த பயணத்துல சொன்னேனோ அப்பவே உங்களுக்கும் சொல்றேன்.
மெல்ல சூரியன் கீழ் வானத்தில் தலையை சாய்க்க ஆரம்பித்து இருந்தான். எங்கள் பேருந்து ஆடி அசைந்து சிறுமலைபுதூர்ங்கிற ஊருக்கு வந்தது. அது தான் பஸ் போற கடைசி இடம். அங்க இருந்து மறுபடியும் திண்டுக்கல் நோக்கி கிளம்பிடும். வரும் வழியில் களைப்பில் எனது நண்பர்கள் சின்ன தூக்கத்தை போட்டிருந்தனர். நாங்கள் பஸ்ஸை விட்டு இறங்கி பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்குள் நுழைந்தோம். மக்கள் இங்கே சீக்கிரம் கூட்டுக்குள் பறவைகள் மாதிரி போய்விடுவார்களோ என்னவோ, வீதியில் ஆள் நடமாட்டமே இல்லை.
எங்களுக்கான சில நொறுக்கு தீனிகளையும் சுடச் சுட போட்டு வைக்கப்பட்டிருந்த வெங்காய பக்கோடாவையும் வாங்கிகொண்டோம். என் அண்ணன் இரண்டு பாக்கெட் ஊறுகாயை வாங்கி வைத்துகொண்டார். ஊரை விட்டு போகும் ஒரு ஒற்றையடி பாதையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். அது அமாவாசையை ஒட்டிய இரவு என்று நினைக்கிறேன். அப்படியே கருப்பு வண்ணத்தை இறைத்தது போல எங்களுக்கு முன்னே இருட்டு கவிழ்ந்து கிடந்தது. நாங்கள் வைத்திருந்த டார்ச் லைட்டை பயன்படுத்தி நடக்க ஆரம்பித்தோம். ஒரு பத்து நிமிடம் நடந்திருப்போம். அருகில் நீர் ஓடும் சிறிய வாய்க்கால் தெரிந்தது. உடனே எங்களுக்கு முன்னே சென்றுகொண்டிருந்த என் அண்ணன் அதனருகே நின்று, தனது இடுப்பில் சொருகி வைத்திருந்த குவாட்டர் பாட்டலை எடுத்தார்.
அவர் ஊறுகாய் வாங்கும் போதே நினைத்தேன். இப்படி ஏதாவது 'நாட்டாமை' மேட்டர் வைத்திருப்பார் என்று. எங்கள் பையில் இருந்த பிளாஸ்டிக் டம்ளரில் குளிர்ந்த தண்ணீரை பிடித்து அதனோடு குவாட்டரை கலந்து, என் இரு அண்ணன்கள் குடிக்க ஆரம்பித்தனர். நானும் எனது நண்பர்கள் அந்த இருட்டில் வெங்காய பக்கோடாவை கொறிக்க ஆரம்பித்தோம்.
இங்கே தான் இந்த மலையின் ரகசியத்தை என் நண்பர்களுக்கு நான் சொல்ல ஆரம்பித்தேன். இது கிட்டதட்ட ஒரு அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னால நடந்தது. எங்கள் ஊரில் வாழும் ஒரு தச்சர், ஊர் பண்ணையார் வீட்டுக்கு பெரியதொரு கட்டில் செய்ய வேண்டுமென்று தோதான மரங்கள் பார்ப்பதற்காக சிறுமலை காட்டிற்கு சென்றார். அவர் அப்படி சென்று மரங்கள் பார்த்து வருகின்ற வேளையில் ஏதோ ஒரு கட்டை அவரது முழங்காலை கிழித்துவிட்டது. அந்த காட்டில் அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஊருக்குள் சீக்கிரம் வந்துவிட வேண்டுமென்று, வேகமாக நடக்க ஆரம்பித்தவர், வழியில் ஏதோ ஒரு செடியின் இலையை பறித்து வழிந்த ரத்தத்தை துடைத்து வந்திருக்கிறார். அப்படி துடைத்து வந்தவர், அடிவாரம் வரும்போது பார்த்தால் அவரின் முழங்காலில் இப்போது அடிபட்ட காயத்திற்கு பதில் காயத்தோட தழும்பு தான் இருந்திருக்கிறது. அதன் பிறகு எவ்வளவோ கஷ்டப்பட்டும் அவரால் சரியான அந்த இலைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஏற்கனவே சொன்னது போல, அனுமார் லட்சுமணனுக்காக சஞ்சிவீ மலையை தூக்கி சென்ற போது அதனோட சிறப்பம்சம் வாய்ந்த மூலிகைகள் சில எங்கள் சிறுமலையில் விழுந்ததாக கதைகளுண்டு..
அங்கே அந்த இரவு நேரத்தில் நாங்கள் மறுபடியும் எங்கள் பயணத்தை தொடங்கினோம். நான் வந்து ரொம்ப காலமானதால், எனக்கு வழி ஞாபகம் இல்லை. என் அண்ணனுக்கு மட்டுமே தெரியும். அவரும் இப்போது வழி சொல்லக்கூடிய நிலமையில் இல்லை.
37 பின்னூட்டங்கள்:
Ingayum naan dhaan firsta???
Irunga poi padichittu varen :D
Aaha.. Thriller story rangela pogudhu.. Waiting for the next episode :D
//மக்கள் இங்கே சீக்கிரம் கூட்டுக்குள் பறவைகள் மாதிரி போய்விடுவார்களோ என்னவோ, வீதியில் ஆள் நடமாட்டமே இல்லை.//
Unga post-oda speciality ippadi azhaga uvamaiyoda soldradhu dhaanga :D
Aaha.. Ulaga varalaatril Mudhal murayaaga KM blogla naan 1st comment pottirukken :D
@Syam : Notaamai ingayum unga puliyodharaikku pangukku vandhuttennu thitaadheenga.. Ungalukku thaniya oru parcel anuppa sollidaren :D
ரொம்ப நல்லாயிக்குங்க கார்த்தி..
முன்னெல்லாம் தைப்பூசத்துக்கு காரைக்குடில இருந்து பழநிக்கு பாதயாத்திரை போவோம்.அப்போ திண்டுக்கல் கிட்ட வரும்போது பாலும்,சிறுமலை வாழைப்பழமும் தருவாங்க எல்லாருக்கும். சிறுமலைன்னாலே அந்த வாழைப்பழம் தாங்க ஞாபகத்துக்கு வருது.
கதை குட்டியா இருந்தாலும், படிக்கும் ஆர்வத்தை கூட்டிவிட்டது.. ;-)
//நான் வந்து ரொம்ப காலமானதால், எனக்கு வழி ஞாபகம் இல்லை. என் அண்ணனுக்கு மட்டுமே தெரியும். அவரும் இப்போது வழி சொல்லக்கூடிய நிலமையில் இல்லை.//
வழி தெரியாமல் எங்காவது போய் மாட்டிக்கிட்டீங்களா? இல்லை அந்த செடியை கண்டுபிடித்தீர்களா? waiting for the next episod.. ;-)
நீண்ட இடைவெளிக்கு பின் சமீபத்தில் நானும் சிறுமலை சென்றிருந்தேன். நிறைய கட்டிடங்கள் கட்டப்பட்டு நிறைய மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. ஒரு தனியார் நிலத்தில் செயற்கை ஏரிக்கான முயற்சி தெரிந்தது.ஒரு Residential School ஒன்றுகூட முளைத்துவிட்டது.
பல இடங்களிலும் மரங்கள் வெட்டப்பட்டு பொட்டலாக, வரப்போகும் ஆபத்தை தெரிவித்தது. மரத்தை வெட்டியவர்கள் உண்மையிலேயே அரசிடம் அனுமதி வாங்கியிருப்பார்களா? அப்படியில்லாத பட்சத்தில் அந்த பகுதி மக்கள் அதை எதிர்த்து போராடியிருக்க வேண்டாமா? மனதுக்கு வருத்தமாக இருந்தது.
ஆனால் சென்னையின் இறைச்சல், வெயில், தூசி,வாகனங்களின் புகை போன்றவற்றிலிருந்து விடுபட்டு, அந்த அமைதியும்,மிதமான குளுமையும் மனதுக்கு இதமளித்தது.
நான் சமீபத்தில் சென்றிருந்ததால் தங்கள் பதிவு என் ஆர்வத்தை தூண்டியது. தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன்.
//அந்த அளவுக்கு வளங்கள் இப்போ அங்க இருக்கா, மனிதர்கள் காட்டை அழிக்க ஆரம்பித்த இந்த காலத்துலன்னு தெரியல. //
எப்படி மாம்ஸ் இருக்கும். பக்கத்தில் இருக்கும் அருமை தெரியாமல் எங்கோ அலைவது தானே நம் பொழப்பே.
நல்லா எழுதறீங்க, ஆனால் பப்ளிஷ் கொடுக்கறதுக்கு முன்னாலே கொஞ்சம் எடிட் செய்யுங்க கார்த்திக், எழுத்துப்பிழை மட்டும் இல்லாமல், சில இடங்களின் வார்த்தைகளும் விடுபட்டுப் போயிருக்கிறது. இருங்க பார்த்துச் சொல்றேன்.
பார்த்தேன், சொல்ல முடியலை, காப்பி, பேஸ்ட் சரியா வரலை. நீங்களே பார்த்துத் திருத்திக்குங்க. நல்லா எழுதறீங்க, இந்தச் சின்னக் குறையை நிவர்த்தி செய்துட்டால் இன்னும் சிறப்பு. வாழ்த்துக்கள்.
Continue karthik.......:-)
enga ponaalum....periya post...ella edathulayum g3 vandhu first comment potudaraanga....eppadi idellamm...
ingayum oru soda please
vazhakam pola varthayila poondhu velayaadhi irukeenga...
//எங்கள் இருந்த பிளாஸ்டிக் டம்ளரில் அந்த குளிர்ந்த தண்ணீரை பிடித்து அதனோடு குவாட்டரை கலந்து, என் இரு அண்ணன்கள் குடிக்க ஆரம்பித்தனர். நானும் எனது நண்பர்கள் அந்த இருட்டில் வெங்காய பக்கோடாவை கொறிக்க ஆரம்பித்தோம்.
//....neengalum pakoda party dhaana Maams :)
attendance! apram padikkaren, weekend paarunga :)
உங்க அண்ணன்மார் கச்சேரிக்கு உங்கள சேத்துக்கலயா! வெறும் பக்கோடா மட்டும்தான் அன்னிக்கு கிடச்சுதா
(பருத்தி வீரன் பாத்தாச்சா??? விமர்சனம் எப்போ?)
//Ingayum naan dhaan firsta???
Irunga poi padichittu varen
//
எல்லாப் பக்கமும் புளியோதரையை கைபற்றியாச்சு போல, G3
//Unga post-oda speciality ippadi azhaga uvamaiyoda soldradhu dhaanga :D //
ஆனா கொஞ்சம் அவசரமா எழுதுனதால இந்த பதிவுல நீங்க சொல்லும் விஷயம் கொஞ்சம் கம்மின்னு தெரியுதுங்க
//Aaha.. Ulaga varalaatril Mudhal murayaaga KM blogla naan 1st comment pottirukken :D
@Syam : Notaamai ingayum unga puliyodharaikku pangukku vandhuttennu thitaadheenga.. Ungalukku thaniya oru parcel anuppa sollidaren //
Ahaa.. enna oru adjustment..
/முன்னெல்லாம் தைப்பூசத்துக்கு காரைக்குடில இருந்து பழநிக்கு பாதயாத்திரை போவோம்.அப்போ திண்டுக்கல் கிட்ட வரும்போது பாலும்,சிறுமலை வாழைப்பழமும் தருவாங்க எல்லாருக்கும். சிறுமலைன்னாலே அந்த வாழைப்பழம் தாங்க ஞாபகத்துக்கு வருது//
ஓ. கிரிக்கட் புயல் பதிவாளர் நம்ம ஊர் பக்கம் தானா
//நான் சமீபத்தில் சென்றிருந்ததால் தங்கள் பதிவு என் ஆர்வத்தை தூண்டியது. தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன். //
மனோகர் நான் கடைசியாக சென்று கிட்டதட்ட ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன.. நீங்கள் சொல்வது எனக்கு புதிய விஷயங்கள்
//எப்படி மாம்ஸ் இருக்கும். பக்கத்தில் இருக்கும் அருமை தெரியாமல் எங்கோ அலைவது தானே நம் பொழப்பே.
//
சரியாச் சொன்னீங்க மாம்ஸ்
/பார்த்தேன், சொல்ல முடியலை, காப்பி, பேஸ்ட் சரியா வரலை. நீங்களே பார்த்துத் திருத்திக்குங்க. நல்லா எழுதறீங்க, இந்தச் சின்னக் குறையை நிவர்த்தி செய்துட்டால் இன்னும் சிறப்பு. வாழ்த்துக்கள். //
அவசரப் பதிவும், கொஞ்சம் தூக்கத்தில் வேறு இருந்தேன். இப்போது திருத்தி விட்டேன். ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் மேடம்
//Continue karthik.......:-) //
Haniff, ungalukku minister post ellaam koduththu irukkOm.. ennanga padikkalaiyaa?
//enga ponaalum....periya post...ella edathulayum g3 vandhu first comment potudaraanga....eppadi idellamm... //
G3, eppadiththaan intha muthal idaththai pidikkiRaanGkaLO therila, Maapla
//vazhakam pola varthayila poondhu velayaadhi irukeenga... //
hehehehe.. Thanks Mapla
/neengalum pakoda party dhaana Maams//
hehehe.. AmA mapla
//attendance! apram padikkaren, weekend paarunga//
marked your attendace, porkodi!
நல்லா எழுதியிருக்கீங்க...
அருமையான நினைவுகளை அழகான உவமையுடன் எழுதியிருக்கீங்க...
\\எப்படி மாம்ஸ் இருக்கும். பக்கத்தில் இருக்கும் அருமை தெரியாமல் எங்கோ அலைவது தானே நம் பொழப்பே.\\
உண்மை தான் சிவா...
//'நாட்டாமை' மேட்டர் வைத்திருப்பார் என்று.//
idhai naan vanmai'aaaga kandikiren...
naatamai avargal "mudhal amaichar" aaaagivittar...avarai neengal marupadium naaatamai endru koooruvadhu aval pori'aaaga nallaaa illai... endru naaaataamai saarbaaaga sorry engal brother saaarbaaga therichi vidhu kolgiren.. .....
nanri vanakkam...
(brother naan ketta P.A. post ready'ngala?)
//எனது நண்பர்கள் அந்த இருட்டில் வெங்காய பக்கோடாவை கொறிக்க ஆரம்பித்தோம்./
** cough cough**.... namma ellam adikadi வெங்காய பக்கோடாவை கொறிக்க thaaan laaiku'nu velia petchu vandhuda pogudhu... paarthu
@g3:- //Ingayum naan dhaan firsta???//
puliodharai'kaaaga neeenga padum paaadu rembavey nalla keeedhu...
vaazhga engal katchi...
//இப்போது வழி சொல்லக்கூடிய நிலமையில் இல்லை. //
aiyo... quarter speakin?????
//குளிர்ந்த தண்ணீரை பிடித்து அதனோடு குவாட்டரை கலந்து//
தல அந்த பிரஷ் வாட்டர்ல கோட்டர் கல்க்கி குடிக்கிற சுகம் இருக்கே...வார்தைகளால் சொல்ல முடியாது :-)
//இப்போது அடிபட்ட காயத்திற்கு பதில் காயத்தோட தழும்பு தான் இருந்திருக்கிறது//
இதே மாதிரி மூலிகை...நாமக்கல் பக்த்துல கொல்லி மலைலயும் இருக்குனு சொல்லி இருக்காங்க...ஆனா இன்னும் எதுனு கண்டு பிடிக்க முடியல :-)
//Ungalukku thaniya oru parcel anuppa sollidaren ://
@G3,
neengalum nallavanganu appo appo kaamichudareenga :-)
Post a Comment