Monday, February 05, 2007

பதிவுலக பெண் சூப்பர் ஸ்டாரின் 200வது பதிவிற்கான வாழ்த்து பதிவு

என்னங்க.. என் பெயரையே மாத்திட்டீங்க..காயத்ரின்னு.. இது தான் கீதா மேடம் எனக்கு எழுதிய இரண்டாம் பின்னூட்டம்.. அவர்கள் பெயரை மாற்றியதில் சற்று கோபம் அவர்களுக்கு.. இப்படித்தான் அறிமுகமானார் தலைவி இந்த தொண்டனுக்கு.. ஆங்கில பதிவாக மட்டுமே இட்டு வந்த எனக்கு, சாலையோர கைகாட்டி மாதிரி சரியான தமிழ் வழியை சொன்னவர்களில் கீதா தலைவியும் ஒருவர் (கார்த்திக்கு கைகாட்டிய கருணை பெருங்கோ என்று இவர் இன்றிலிருந்து அழைக்கப்படுவார்) அப்போது இவரது எழுத்தில் படித்த பயண கட்டுரையும், அந்த எழுத்து ஊர்வலத்தின் பின்னே நானும் நடை பயின்று எல்லா ஊரையும் செலவில்லாமல் ஊர் சுற்றி வந்ததையும் மறக்க முடியுமா.. சிவாய நமஹ என்று உள்ளமும் உதடும் அவ்வப்போது உச்சரித்து வந்தாலும், அவரின் பல தலங்களை எனக்கு அறிமுகபடுத்திய இவரின் ஆன்மீக பதிவுகளையும், அதில் வழிந்தோடி இறை பாதம் நான் கண்டதையும் மறக்க முடியுமா..

ஏன் இப்படி ஒரு பில்-டப்? பெங்களூரிலிருந்து அம்பியின் கேள்விகணையும் ரௌத்திர பார்வையும் (அவ்வளவு தொலைபேசி பேச்சுக்கிடையேயும்), எனக்கு புரியாமல் இல்லை. ஆனால், தானை தலைவி, நடமாடும் தங்க தாமரை, பெண்பால் சூரியன், பதிவுப் புயல், பின்னூட்ட பூங்கோதை, முன்ஜாக்கிரதை முத்தக்கா, இடியென முழங்கும் இடி, மின்னலென எதிர்கட்சிகளின் சிம்ம சொப்பனம், பயணப் பருந்து, ஆன்மீகப் பேரொளி எங்கள் பிளாக் உலகின் பழுத்த பிளாக்வாதி கீதா மேடம், தனது 200வது பதிவை இட்டிருக்கிறார். 450 பந்துகளில் (நாட்களில்) 200 ஓட்டங்களை (பதிவுகளை) அடித்த பதிவுலக கவாஸ்கர் இவர். இந்த பிளாக் உலகமே திரண்டு, எழுந்து நின்று, தட்டிய கைகள் சிவக்குமாறு, கைதட்டி இந்த பொன்னான விஷயத்தை கொண்டாடுகிறது.

நேற்று காலை கொலம்பஸ்ஸில் மாபெரும் ஊர்வலமும், வாஷிங்டன் திடலில் அலைகடலென திரண்டிருந்த மக்கள் கடலுக்கு நடுவில் நடந்த பாராட்டுக் கூட்டமும் இவர் அகில உலக சக்திக்கு எடுத்துக்காட்டு (வந்தவர்களுக்கு பிஸா மற்றும் ஒரு டின் கோக் கொடுத்த செலவான 10000 டாலரையும் நானே ஏற்று கொண்டேன் தலைவிக்காக என்று சொல்லவும் வேண்டுமோ). ஆகாயச் சூரியனுக்கு சின்ன தீப்பொறி பாராட்டு உரை வாசிப்பதை போலத் தான் இருக்கிறது என் செயல். சந்தனத்தின் வாசத்தை இந்த சம்பங்கி பூ தான் சொல்லிட முடியுமோ? ஆனாலும் ஏணி ஏறி நிலவுக்கு வர்ணமடிக்கத் தான் ஆசை. அதுவே இந்த பாராட்டுப் பதிவு..

போகும் வழியில் முட்களும், கண்ணாடி சில்களும் பரப்பிக் கிடந்தாலும் உங்கள் சிம்ம நடையை சும்மா என்று சொல்லுதல் முடியுமோ.. நடந்து வந்த பாதை சொல்லும் நீங்கள் பட்ட பாடுகளை.. எத்தனை பதிவுகளுக்கு போய் பின்னூட்டம் போட்டு எனக்கும் போடுங்கோ என்று அழைத்திருப்பீர்கள்.. நான் ஒரு முறை உங்கள் பதிவுக்கு வரவில்லை என்றாலும் கூட அட தினமும் வரும் சூரியனை காணவில்லையே என்று பதறி இருக்கிறீர்கள்.. அந்த தாயுள்ளத்தை என்னே சொல்வேன் தலைவியே..

200 என்ன.. நீங்கள் பதிவுலக சூப்பர் ஸ்டார் என்ற வகையில், ஒரு பதிவு நூறு பதிவுக்கு சமம் என்றால், இத்தோடு நீங்கள் இட்டது 20000 பதிவுகளாயிற்றே.. யார் செய்தது இந்த அரும்பணி.. எவருக்கு வரும் இந்த திறமை.. எங்கள் பதிவுலக அம்மாவே..நீங்கள் வாழ வேண்டும்.. உங்களால் இந்த பதிவுலகம் வாழவேண்டும்.

வாழ்க! வளர்க!!

ஜூலை மாதம் பெங்களூருக்கு அரசு முறை பயணமாக தலைவி சென்ற போது, அசின் ஜொள்ளர்கள் சார்பில் அடித்த மாபெரும் போஸ்டர்.. சென்னை அண்ணா சாலையிலும், எம்.ஜி ரோட்டிலும் அப்போது நீங்கள் இந்த பெரிய போஸ்டரை பார்க்காமல் விட்டிருந்தால் இங்கே பாருங்கள்..

இது தலைவியின் 200வது பதிவிற்காக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் வேதா எழுதிய பாராட்டுப் பதிவும், காலெண்டர் கவிஞர் எந்தன் மண்ணின் மைந்தன் மணியின் பதிவும், உங்கள் பார்வைக்கு..

தானைத் தலைவி வாழ்க! வாழ்க!

38 பின்னூட்டங்கள்:

said...

ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
எல்லாம் நல்லா இருக்கு, அந்தப் பழுத்தங்கற வார்த்தை தான் கொஞ்சம் உறுத்துது,ஏன்னா நான் =:-)ன்னு உங்களுக்குத் தெரியும் தானே? :D

said...

அதனால தான் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி இருக்கேன் தலைவியே..

நான் கலைஞர் என்றால் நீங்கள் அண்ணா தானே..

said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அது சரி, மணிப்ரகாஷுக்கு நேர்ந்த கதி உங்களுக்கும் நேரப் போகுது, என்னைப் பாராட்டிட்டு, கடைக்கு ஆளே வராம உட்கார்ந்திருக்கார் பாருங்க, அவர் கதி உங்களுக்கும் வந்துடும், பார்த்து. :D

said...

நம்மளோட வாழ்த்துக்களையும் தெரியப் படுத்திடுங்க கார்த்தி...

பதிவுகள்
பல கண்டு - அதில்
புதுமைகள் பல
புகுத்தி...
புலமையும்
பகுத்தறிவும்
பயன்படுத்தி...
பாமரர்களையும்
பயில வைத்த
புன்னியவதி கீதாமாவிற்கு.... - இந்த
புதியவனின் வாழ்த்துக்கள்...

said...

200 'கண்ட' தலைவி வாழ்க.


கார்த்தி,

இந்த 200ன்றது இப்ப ஒரு டேஞ்சரான நம்பரா இருக்குப்பா( ஹூம்...என்னோட
200ஐ யாரும் கண்டுக்கலை(-:ஹூம்....)
அங்கென்னான்னா ஒருத்தர் 200ன்னு சொல்லிக்கிட்டே அதுலேயே ஒரு நூறு
அடிச்சுருவார்போல இருக்கு. பேசாம 500க்குத்தான் விழா எடுக்கணுமுன்னு
ஒரு அறிக்கை வுட்டுறலாமா? ( இதுலேயும் ஒரு விஷயம் இருக்கு!)

:-)))))))))))

said...

தங்கதலைவியின் பொன்னான 200க்கு 200 இலவச திருமணங்களும், 200 பொறம்போக்கு வீட்டு மனைப்பட்டாக்களும் அல்சூர் பேரவை சார்பாக வழங்கப்பட்டதென்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...

said...

//க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அது சரி, மணிப்ரகாஷுக்கு நேர்ந்த கதி உங்களுக்கும் நேரப் போகுது, என்னைப் பாராட்டிட்டு, கடைக்கு ஆளே வராம உட்கார்ந்திருக்கார் பாருங்க, அவர் கதி உங்களுக்கும் வந்துடும், பார்த்து.//

மேடம், உங்க பேரையல்லவா போட்டிருக்கிறேன்.. பின்னூட்ட மழை பெய்யப்போகுது பாருங்க

said...

/நம்மளோட வாழ்த்துக்களையும் தெரியப் படுத்திடுங்க கார்த்தி...
//

கலக்கல் கவிதை ஜி.. நிச்சயம் உங்களோட கவிதை பாராட்டையும் படிச்சிருப்பாங்க தலைவி

said...

/500க்குத்தான் விழா எடுக்கணுமுன்னு
ஒரு அறிக்கை வுட்டுறலாமா? ( இதுலேயும் ஒரு விஷயம் இருக்கு!)
//

துளசியம்மா, புரியுது ஏன் சொல்றீங்கன்னு.. அதுலையும் நான் முன்னாடி நிற்பேன்.. :-)

said...

/தங்கதலைவியின் பொன்னான 200க்கு 200 இலவச திருமணங்களும், 200 பொறம்போக்கு வீட்டு மனைப்பட்டாக்களும் அல்சூர் பேரவை சார்பாக வழங்கப்பட்டதென்பதை தெரிவித்துக்கொள்கிறேன்... //

ஆஹா.. நாங்க அமெரிக்காவுலனா நீங்க அங்கேயா.. மதுரையம்பதி கலக்குங்க..

பேசாம, இதை உலகத் திருவிழான்னு அறிவிச்சிடலாமா

said...

Geetha madam Congrats on your 200 innum niraya run adinga....

Karthik neengalum seekirama intha maathir 200, 30, 400 yellam adichikite ponga :)
Ungalukkum oru Pizza and tin coke party vechudalam

Anonymous said...

வாழ்த்துக்கள் :)

said...

கண்டிப்பாக இதை உலகத் திருவிழான்னு அறிவிக்க வேண்டியதுதான்......

ஆமா அதென்ன 500ல் இருக்கும் விஷயம்?

said...

உலகத் திருவிழான்னு சொல்லி ஏன் இப்டி தலைவி புகழை ஒரு வட்டத்துக்குள்ள வைக்கறீங்க, அண்ட சராசரமும் தலைவியின் புகழ் பரப்ப இதை ஒரு பிரபஞ்ச திருவிழாவா அறிவிச்சிடலாம்:) அப்டியே தலைவியின் வீரதீர செயல்களை பாராட்டி தானைதலைவலி கீதா பேரில ஒரு விண்கலத்தை நம்ம கட்சி சார்புல நிலாவுக்கு அனுப்பி அங்கேயும் தலைவி புகழை பரப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்:)

ambi said...

//எத்தனை பதிவுகளுக்கு போய் பின்னூட்டம் போட்டு எனக்கும் போடுங்கோ என்று அழைத்திருப்பீர்கள்.//

ROTFL :) ithuku peru thaana vanja pugazhchi ani..? :p

Congrats geetha madam! intha thallatha agelayum neenga blogging panratha nenaikkum pothu enakku anatha kanner varuthu! :)

(maatraan thotathu malligaikum manam undu!)

said...

Ingayum vazhthukalai naan vazhi mozhigiren :)

said...

உங்க பதிவை மூலமா இன்னைக்கு புதுசா ஒருவரை தெரிந்துக்கொண்டேன் தலைவரே! இனி அவரையும் ஒரு விசிட் அடித்திடலாம்.. ;-)

said...

//Karthik neengalum seekirama intha maathir 200, 30, 400 yellam adichikite ponga :)
Ungalukkum oru Pizza and tin coke party vechudalam//

கார்த்திக், நமக்கு 300 எல்லாம் முடிஞ்சது.. 400 நோக்கி வெற்றி நடை போகுது..

said...

//வாழ்த்துக்கள் //

கீதா தலைவியின் சார்பில் நன்றிங்க தூயா

said...

//ஆமா அதென்ன 500ல் இருக்கும் விஷயம்? //

வேற ஒண்ணும் இல்ல மதுரையம்பதி.. துளசி அவர்கள் விரைவில் 500வது பதிவை போடப் போறாங்க

said...

//அப்டியே தலைவியின் வீரதீர செயல்களை பாராட்டி தானைதலைவலி கீதா பேரில ஒரு விண்கலத்தை நம்ம கட்சி சார்புல நிலாவுக்கு அனுப்பி அங்கேயும் தலைவி புகழை பரப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்//


கொள்கைப் பரப்பு செயலாளர் என்பதை கரெக்ட்டா காண்பிக்கிறீங்க வேதா

said...

//ROTFL :) ithuku peru thaana vanja pugazhchi ani..? :p//

அம்பி, எப்படி எல்லாம் கேள்விகேட்டு தலைவிகிட்ட போட்டுகொடுக்க கூடாது

said...

//Ingayum vazhthukalai naan vazhi mozhigiren//

மாப்ள, ரொம்ப இடத்துல போய் வழிமொழிஞ்சிருப்ப போல

said...

@அம்பி, போஸ்ட் போட முடியலைன்னா இப்படி எல்லாம் சொன்னா எல்லாரும் நம்பிடுவாங்களா என்ன? உங்களுக்குத் தான் தங்கமணி கிட்டே கும்பிடு போடவே நேரம் பத்தலை. நாங்க எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுப் பதிவும் எழுதறோம். தெரியும் இல்லை?

கார்த்தியின் பதிவில் வந்து வாழ்த்துச் சொன்ன எல்லாருக்கும் என்னோட நன்றிகள்.

said...

adhe dhaan, "pazhutha" nu sonnadhukke indhannga poochendu :)

said...

rotfl :) chance illai, epdi ipdi ellam ezhuda mudiudhu aniyayathukku???

said...

தலைவிக்கு இங்கயும் ஒரு வாழ்த்த தெரிவிச்சு...வாய்ப்பு குடுத்ததுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்... :-)

said...

// நாங்க எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுப் பதிவும் எழுதறோம். தெரியும் இல்லை?
//

அப்படி போடு.. அம்பி உன் பதிலென்ன இதற்கு?

said...

//adhe dhaan, "pazhutha" nu sonnadhukke indhannga poochendu //

பொற்கொடி, இப்படி எல்லாம் சொல்லி நம்மளை போட்டுக் கொடுத்துடாதீங்க

said...

//chance illai, epdi ipdi ellam ezhuda mudiudhu aniyayathukku//

பொற்கொடி, இப்படி எல்லாம் சொல்லி நம்மளை போட்டுக் கொடுத்துடாதீங்க

said...

/தலைவிக்கு இங்கயும் ஒரு வாழ்த்த தெரிவிச்சு...வாய்ப்பு குடுத்ததுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்//

நாட்டாமை, சிற்றுரையை விரைவில் முடித்ததற்கு நன்றி

said...

பதிவுலக பெண் சூப்பர் ஸ்டார்
கீதா அவர்களுக்கு
என் உளமார்ந்த வாழ்த்துக்கள்...வாழ்க வளர்க!!!

தலைவியை பாரட்டிய எங்கள் தலைவருக்கு நன்றிகள்..

said...

\\உங்க பதிவை மூலமா இன்னைக்கு புதுசா ஒருவரை தெரிந்துக்கொண்டேன் தலைவரே! இனி அவரையும் ஒரு விசிட் அடித்திடலாம்.. ;-)\\

ரிப்பீட்டேய்...

said...

வாழ்த்துக்கள் கீதா.
கார்த்திகேயன் உங்க பதிவும் 500 ,1000 என்று உயர வாழ்த்துகள்.

said...

//தலைவியை பாரட்டிய எங்கள் தலைவருக்கு நன்றிகள்..//


ஹிஹிஹி.. நன்றி கோபி

said...

//வாழ்த்துக்கள் கீதா.
கார்த்திகேயன் உங்க பதிவும் 500 ,1000 என்று உயர வாழ்த்துகள்.//


நன்றிங்க வல்லி

said...

appadi! Madam romba impress ayitanga nu theriyudhu.

nalla pathivu MK.Ungaludan nangalum vazhthugirom.

said...

thanks SKM!