Sunday, February 18, 2007

சாராயம் காய்ச்சுவதை கற்றுக்கொண்ட கதை

என் நண்பனின் அக்கா கல்யாணத்திற்காக எனது நண்பர்கள் எல்லோரும் திண்டுக்கல்லிற்கு வந்திருந்தனர். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் கல்யாணம் முடிந்த பிறகு அதற்கு அருகில் இருந்த கல்யாண மண்டபத்தில் மணக்க மணக்க கல்யாண சாப்பாடு சாப்பிட்டு முடித்தோம். அங்கிருந்து எங்கள் ஊர், பக்கம் என்பதால் என் நண்பர்களை என் வீட்டிற்கு அழைத்திருந்தேன். நான் விடுதியில் தங்கியே இளநிலை எல்லாம் முடித்திருந்ததால், நான் எல்லா நண்பர்கள் வீட்டிற்கும் பல தடவை சென்றிருக்கிறேன். ஆனால் அவர்கள் என் வீட்டிற்கு வருதுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவே.

எல்லோரும் திண்டுக்கலிலிருந்து எங்கள் ஊருக்கு பஸ் ஏறினோம். என் நண்பர்களில் இருவர் எப்போதாவது புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால், இது போன்று பயணங்களின் போது மட்டும் பிடித்து வந்தார்கள். அதுவும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையான பிராண்டுகளை பிடிக்கும் வழக்கம் கொண்டிருந்தனர். அதைப் பிடித்துவிட்டு மற்ற பிராண்டோடு விமர்சனமும் செய்வார்கள். அதனால் திண்டுக்கல்லில் ஏறும் போதே இரண்டு பாக்கெட்டுகளை வாங்கி வைத்துக்கொண்டனர்.

ஏற்கனவே தொலைப்பேசியில் நண்பர்கள் வருவது பற்றி சொல்லிருந்ததால் வீட்டில் தடபுடலாக சமையல் ரெடி ஆகி இருந்தது. போய் சேர்ந்தவுடன் என் ஊர் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் மோட்டர் பைக்குகள் வாங்கிகொண்டு சிறுமலைக்கு போவதாக பிளான் இருந்தது. நாங்கள் வீடு சேர்ந்த போது வண்டியெல்லாம் ரெடியாக இருந்ததால் வண்டிகள் ரெடியாக இருந்ததால், என் அப்பாவிடம் எல்லோரையும் அறிமுகம் செய்துவிட்டு கிளம்பினோம். என் அம்மா பக்கத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணி புரிவதால் அப்போது அவர்கள் வீட்டில் இல்லை. எங்களுக்கான சாப்பாடு என் அம்மாச்சி வீட்டில் தான் ரெடியாகி கொண்டிருந்தது.

எங்கள் ஊரில் இருந்து சிறுமலை அடிவாரம் கிட்டதட்ட நான்கு கிலோமீட்டர் இருந்தது. வண்டியில் நாங்கள் அடிவாரத்தை நோக்கிச் செல்ல செல்ல சில்லென்று காற்று, எங்களை வரவேற்றது. சிறுமலை அடிவாரத்தில் ஒரு கிறிஸ்த்துவ பாதிரியார் குடியிருந்து வந்தார். அவர் பங்களாவில் தான் எங்களது வண்டிகளை பத்திரமாக நிறுத்திவிட்டு மலையேறக் கிளம்பினோம்.

நான் ஏற்கனவே சாராயக்கதைகள்னு எங்கள் ஊரில் காய்ச்சப்படுகின்ற சாராயம் பற்றி நிறைய சொல்லி இருக்கிறேன். இந்த மலையில் தான் சாராயம் காய்ச்சுவார்கள். கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர் நடந்து சென்றால் ராமர் கல் என்னும் இடம் வரும். அங்கே பெரிய பாறையில் நீர் தேங்கி கிடக்கும். அங்கே இருக்கும் ஒரு வழுக்குப் பாறையில் மூன்று கோடுகள் இருப்பதால் அதை ராமர் கல் என்று சொல்லுவார்கள். நாங்கள் அந்த இடத்தை நோக்கி நடக்க நடக்க சாரயாம் காய்ச்சப்படுவதற்கான வாசனைகள் வர ஆரம்பித்தன.

நாங்கள் அந்த இடத்தை அடையவும் அங்கே சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த எங்கள் ஊர் ஆட்கள் அலறி அடித்து ஓடவும் சரியாக இருந்தது. எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதும் காட்டு மிருகங்கள் வந்துவிட்டதா என எங்களுக்குள் பயம் வேற. அப்படி ஓடிக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் பின்னாடி திரும்பி பார்த்தார். கூட்டத்தில் என்னைக் கண்டவுடன் "அட! கடக்கார முத்துராசு மவன்!" என்று கத்த ஓடிய எல்லோரும் திரும்ப வந்தார்கள். என் நண்பர்கள் கொஞ்சம் ஆஜானுபாகுவாக இருந்ததால் போலீஸ் தான் மப்டியில் வந்துவிட்டார்கள் என தலைதெறிக்க ஓடியுள்ளனர். என்னைக் கண்டவுடன் தான் அவர்களுக்கு உயிர் வந்துள்ளது.

அதன் பிறகு என் நண்பர்களுடன் அவர்கள் இரண்டறக் கலந்துவிட்டார்கள். சாராயம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை செயல் முறையில் காட்டினார்கள். என் நண்பர்கள் கல்லூரி கெமிஸ்டரி லேபை விட இது பரவாயில்லை என்று குஷியாகிவிட்டனர். மூன்று பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, அதிலிருந்து வரும் நீராவியை இன்னொரு பானையில் ஒரு சிறிய குழாய் மூலம் சேமிக்கின்றனர். கீழிருக்கும் பானையில் தான் ஒரு வாரமாக வெல்லம், பட்டை முதலிய பொருள் எல்லாம் போட்டு ஊறவைத்த திரவம் இருக்கும். அதை காய்ச்சும் போது வரும் நீராவி தான் சாராயமாக வெளிவருகிறது.

அப்படி காய்ச்சுகின்ர சாரயம் நம் உடலை அரிப்பதற்கான காரணத்தையும் ஒருவர் செயல் முறையில் காட்டினார். ஒரு குவளையில் சாரயத்தை எடுத்து வானத்தை நோக்கி ஊற்றினார். அந்த சாரயம் கீழ் நோக்கி வரும் போது ஒரு தீப்பந்தத்தை அதில் காட்ட, அப்படியே அது பற்றி எரிந்தது. ஒரு பெட்ரோலை குடிப்பதைப் போலத்தன் இந்த சாரயத்தை குடிப்பது என்று சொன்னார்கள். அப்படி பிடிக்கப்பட்ட சாராயத்தை ஒரு பெரிய டியூபில் போட்டு அடைத்து அந்த இடத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள்.

நேரம் ஆனதாலும் எல்லோருக்கும் பசியெடுக்க ஆரம்பித்ததாலும் அங்கிருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டு நாங்கள் கிளம்பினோம். என் நண்பர்கள் எல்லோரும் இந்த சிறுமலை ட்ரிப் வித்தியாசமானது என்று சந்தோசப்பட்டார்கள். விட்ட இடத்தில் வண்டிகளை எடுத்துகொண்டு, வீடு வந்து சேர்ந்தோம். எங்களுக்கான விருந்து சுடச்சுட ரெடியாகி இருந்ததால் களைப்பினால் சாப்பாடி டபுளாக உள்ளே இறங்கியது. சாப்பிட்டுக் கொண்டிருந்த போது நடந்த கதையை என் அப்பாவிடம் கூறிக் கொண்டிருந்தேன். என் அப்பா சற்று பயந்து போய்விட்டார். சாராயம் காய்ச்சுபவர்கள் சில சமயம் போலீஸை தாக்கிய சம்பவத்தை எல்லாம் சொன்னார். இப்போது அப்படி ஏதும் நடக்கவில்லை என்று சந்தோசப்பட்டார். எங்களுக்கு உள்ளே ஒரு சின்ன பயம் வந்து சென்றது. சாப்பிட்ட கோழி வயிற்றுக்குள் கொக்கரக்கோ என்று கூவியது எங்களுக்கு மட்டும் மெல்லக் கேட்டது.

41 பின்னூட்டங்கள்:

said...

me the fist-uu!!! :-)

Anonymous said...

one question.What is the colour of the sarayam?Well I saw in tamil movies it is like water.Is it true?

said...

சாராயம் காய்ச்சின அனுபவம் நல்லா இருக்கே! ;-)

said...

a

said...

அப்போ தண்ணி போட ஆரம்பிச்சது இன்னும் தொடருது தானெ.

said...

Enna Dindigul kaarare.. indha postukku ellaam policela pudichu poda maataangala...
USla irukkura dhairiyama..
Congrats for 4th century..
I think i wished u at 3rd century..
Romba fastu sir neenga.

As usual, wishes to rock at ur blog
Edhukkum india varumbodhe oru mun jaameenukku apply pannittu vaanga.

c.m.haniff said...

Nalla nadai, ungal pathivu paditha pothu oru "kick" iruntathu ;-)

said...

me the secondu!!!!
athukaaga kaachinatha ellam thara vendaam. :p

post title konjam nerudala irukke karthi!

said...

நான் தான் முதல்னு நினைச்சேன்.

said...

atata! ssarayam kaaichum viththai engalukku ellam padam pidithi pathivu pottamaikku nanri!

said...

nalla pathivu kaarthi!

said...

//இப்போது அப்படி ஏதும் நடக்கவில்லை என்று சந்தோசப்பட்டார். எங்களுக்கு உள்ளே ஒரு சின்ன பயம் வந்து சென்றது. சாப்பிட்ட கோழி வயிற்றுக்குள் கொக்கரக்கோ என்று கூவியது எங்களுக்கு மட்டும் மெல்லக் கேட்டது. /

lol! sari vidunga! ithu ellam oru mattera!

said...

ethachum prichanai vandha namma pera sollunga! nammalaiyum pidichu ulla podattum :P

said...

Hi Karthik, First time here. Came here thru' your comments on Ambi and Veda's blogs. Ungal padhivugalai padikka romba nalla irukku. Appadiye gramathu manam. Being in US, u must surely be missing all this. Ungalukku home sick-a irukko illaiyo, unga posts padichittu enakku romba home sick aayiduchu. I will definitel book mark your blog and keep visiting often.

said...

நல்ல அனுபவப் பதிவு....

ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்திதான்.. இப்படி சாராயம் காச்சினதெல்லாத்தையுமா பதிவுல போடுறது???

said...

//என் நண்பர்கள் கல்லூரி கெமிஸ்டரி லேபை விட இது பரவாயில்லை என்று குஷியாகிவிட்டனர்.
//
LOL :)

nalla anubavam thala :)

said...

தல...ஆளுக்கு எத்தனை மில்லி அடிச்சிட்டு வந்தீங்கனு சொல்லவே இல்ல :-)

said...

@துர்கா,

traditional sarayam (with all the original ingredients) will be in metro water color(I mean very very light brown color)....:-)

said...

//me the fist-uu//

NeenGka thaan first My friend :-)

said...

//one question.What is the colour of the sarayam?Well I saw in tamil movies it is like water.Is it true?

//

நம்ம நாட்டாமை சூப்பரா பதில் சொல்லி இருக்கார்னு நினைக்கிறேன்.. அப்படியே கீழ ஸ்க்ரோல் பண்ணி பாருங்க

said...

/சாராயம் காய்ச்சின அனுபவம் நல்லா இருக்கே//

நாங்க அங்க இருந்தப்பொ நிஜ போலீஸ் வந்திருந்தா, எப்படி இருந்திருக்கும், மை பிரண்ட்?

said...

//அப்போ தண்ணி போட ஆரம்பிச்சது இன்னும் தொடருது தானெ.

//


சாராய ஊற்றிலே பிறந்திருந்தாலும் நமக்கு அதெல்லாம் கண்காட்சி பொருள் தான் அம்மிணி

said...

//Enna Dindigul kaarare.. indha postukku ellaam policela pudichu poda maataangala...
USla irukkura dhairiyama..
Congrats for 4th century..
I think i wished u at 3rd century..
Romba fastu sir neenga.

As usual, wishes to rock at ur blog
Edhukkum india varumbodhe oru mun jaameenukku apply pannittu vaanga. //

அட சசி! எவ்வளவு நாளாச்சு இந்தப் பக்கம் பார்த்து.ம்..

வாழ்த்துகளுக்கு நன்றி சசி!

said...

/Nalla nadai, ungal pathivu paditha pothu oru "kick" iruntathu ;-) //

படையப்பால தலைவர் மாதிரி ஏஹேய் கிக்கு ஏறுதேன்னு பாட வேண்டியது தான் ஹனிஃப்

said...

//me the secondu!!!!
athukaaga kaachinatha ellam thara vendaam. :p

post title konjam nerudala irukke karthi!

//

மக்களை கவரத் தான் இந்த தலைப்பு அம்பி! உள்ள சரக்கு..சே.. விஷயம் இருக்குல்லபா...ஹிஹிஹி

said...

//நான் தான் முதல்னு நினைச்சேன். //

நீங்க தானே கட்சியின் முதல் தலைவியே! ஹிஹிஹி

said...

/atata! ssarayam kaaichum viththai engalukku ellam padam pidithi pathivu pottamaikku nanri! //

hihihi.. thanks dreamzz!

said...

/nalla pathivu kaarthi! //

நன்றி ட்ரீம்ஸ்

said...

//lol! sari vidunga! ithu ellam oru mattera! //

அட அது தானே! அந்த நேரத்துல மட்டும் போலீஸ் வந்திருக்கனும் நம்ம நிலைமை அதோகதி தான்!

said...

//ethachum prichanai vandha namma pera sollunga! nammalaiyum pidichu ulla podattum :P //

:-)

said...

//Ungalukku home sick-a irukko illaiyo, unga posts padichittu enakku romba home sick aayiduchu. I will definitel book mark your blog and keep visiting often. //

Really thanks Ravi. I am so happy on seeing you and your encouraging words!

said...

/நல்ல அனுபவப் பதிவு....

ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்திதான்.. இப்படி சாராயம் காச்சினதெல்லாத்தையுமா பதிவுல போடுறது??? //

ஜி.. மேட்டரையே மாத்துறீங்களே.. நாங்க காய்ச்சலப்பா.. வேடிக்கை தான் பாத்தோம்

said...

/nalla anubavam thala //

thanks arun :-)

said...

//தல...ஆளுக்கு எத்தனை மில்லி அடிச்சிட்டு வந்தீங்கனு சொல்லவே இல்ல//

ஒண்ணுமே இல்லை நாட்டாமை! :-(

said...

//traditional sarayam (with all the original ingredients) will be in metro water color(I mean very very light brown color)....:-)//

வாவ்! எல்லா விஷயத்திலையும் பெரிய ஆளா இருக்கீங்களே நாட்டாமை!

said...

Unga Survey result-kku mathippu koduthu oru (one more) sooper anubhava pathivu potrukkeenga. Interesting.

Kalavum katru mara-nnu sonnaa maathiri, ithayum maranthirupeengannu nambareyn :)

Cheers
SLN

Anonymous said...

thanks syam.eppadi syam ungaluku theriyum.u seen it before is it.What is metro water?Aiyo too many question from me.hehe

Anonymous said...

உங்க சாரயதிற்கு சைடு டிஷ் இங்க இருக்கு பாருங்க.https://beemboy-erode.blogspot.com

said...

Hi,

I am new to this area. Anybody please explain me on how to type and post in tamil.

I had such experience in the same sirumalai when i was studying in dindigul.

Same situation, people who were selling arrack ran away by seeing us. The we convinced them that we are customers. Then we started drinking and our side dish was bit different. Inside the bajji, usually there will be unriped banana. But there it was banana leaf cut in rectangle shape. Eat only the outer part and not the leaf. After having many many rounds of arrack we started our bike and we felt risky. So we went to a nearby coffee estate and started dancing and singing (Gana)

It was a wonderful experience in the year 1990.Hmmm...

Bombcityboy

said...

//
"சாராயம் காய்ச்சுவதை கற்றுக்கொண்ட கதை"
//
So preparation ல எதாவாது டவுட்னா உங்களை கேட்டா போதும் இல்ல??
:-)))))

Anonymous said...

I think the title should be "sarayam kaychuvathai paartha kadhai". You have merely observed the process and you have never had any hands on experience on how to brew and distil sarayam.

D the D