Wednesday, February 28, 2007

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 1

முன்னுரை :இது எனது பார்வையில் நான் சென்னையில் வாழ்ந்த வாழ்க்கையை பற்றிய ஒரு தொடர் பதிவு. வயல்காட்டையும் மதுரை (பெரிய கிராமம்) வீதிகளையுமே பார்த்தவன், டி.நகர் தெருக்களையும் ஸ்பென்சர் பிளாசாவில் பெண்களையும் கடற்கரை வரம்பு மீறல்களையும் கண்ணார கண்ட போது என்ன தோன்றியதோ அதை அப்படியே எழுதுகிறேன்.. சில விஷயங்கள் என் கண்களை பெரியதாகவும் பல விஷயங்கள் கண்களை மூடவும் செய்த ஒரு அனுபவ தொடராய் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் நான் டைரியில் எழுதுவதைப் போல இங்கே எழுதுகிறேன். எப்பவும் தரும் உங்கள் ஆதரவையும் உயர் கருத்துகளையும் பின்னூட்டத்தில் இடவும் நண்பர்களே..

நான் எனது எம்.சி.ஏ கடைசி செமஸ்டர் புராஜெக்டுக்காக 2001 டிசம்பர் ஆறாம் தேதி சென்னை வந்து இறங்கினேன். அது எனது இரண்டாவது சென்னை பயணம். அந்த இரண்டிலும் நான் எல்.ஐ.சி பார்த்திருக்கவில்லை. மதுரையில் இருந்து நான் எனது நண்பன் குமரனும், அண்ணா சாலையில் சாந்தி தியேட்டரை தாண்டி வெயிலில் நின்றிருக்கும் அண்ணா சிலை அருகே எங்களை இறக்க்விட்டு சென்றது நாங்கள் வந்த பேருந்து. எனது நண்பரின் அப்பா, மதுரை திருமங்கலம் தொகுதியின் முன்னால் எம்.எல்.ஏ.. சென்னையில் எங்களுக்கு யாரும் தெரியாததால் நாங்கள் எனது நண்பர் தங்கியிருந்த பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டலில் தங்குவதென ஏற்பாடு ஆகியது. அறை எண் 16. அது பனிரெண்டுக்கு பத்து (குத்து பதிப்பாக) வகையிலான அறை. எதிர் மூலையில் கட்டில் இருக்கும். பேன் வசதியும் போன் வசதியும் உண்டு. அதனால் வீட்டில் இருந்து அழைப்பதற்கு வசதியாகவும் போயிற்று. மொசைக் தரையிலான குளியறை. ஹீட்டர் வசதி உண்டு.

அப்போது அந்த அறைக்கு வாடகை மாதம் ஆயிரத்து எண்ணூறு. முதன் முதலாக சென்னையில் வாசம். சுற்றிலும் ஒவ்வொரு தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏக்கள். நடப்பு எம்.எல்.ஏக்களுக்கு என தனி விடுதியும் உண்டு. அதுவும் கலைஞர் 96-இல் பதவி ஏற்றபோது அவர்களுக்கென தனியாக குவாட்டர்ஸ், மூன்று படுக்கை வசதி கொண்டது ஒன்றை கட்டினார். அது தான் டி.ஆரின் காதல் அழிவதில்லை படத்தில் விவேகானந்தா கல்லூரி என்று காட்டப்பட்டது.

எனக்கு எல்லாமே கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. பேருந்து எண்கள், வெள்ளை, மஞ்சள், எம் போர்ட் என பல வகைகள் என்று எல்லாமே என்னை வெகுவாக குழப்பியது. மதுரையில் ஏ சர்வீஸ், பி சர்வீஸ் என்று இருந்ததால் இதை விரைவாகவே புரிந்துகொண்டோம். நிஜமாகவே பட்டிக்காட்டான் மிட்டாய் கடை பார்த்த நிலை தான் எனக்கு. நுங்கம்பாக்கம் ரோட்டில் இருக்கும் பொட்டிபட்டி பிளாசாவில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் புராஜெக்டுக்காக தேர்வு இருந்தது. அதற்காக பஸ் (எப்படியோ) பிடித்து அங்கே போய் சேர்ந்தோம். பொட்டிபட்டி பிளாசா நுங்கம்பாக்கம் முடிவில் இருந்தது. நாங்கள் தி பார்க் ஹோட்டல் அருகிலேயே இறங்கினோம். இறங்கியவுடன், அங்கே இருந்தவர்களிடம் விசாரித்தோம். ஏதோ ரெண்டு நிமிசம் நடந்தால் வந்துவிடும் என்று சொன்னார்கள். நடக்கிறோம் நடக்கிறோம் நானும் எனது நண்பனும், இடம் வந்த பாடில்லை. மறுபடியும் விசாரித்தோம். இவரும் அதே மாதிரி தான் சொன்னார். கிட்டதட்ட நீண்ட நடைக்கு பிறகு அந்த பிளாசாவை கண்டுபிடித்தோம். இங்கே தான் எங்களின் முதல் பாடம். சென்னையில் யாரிடம் கேட்டாலும் எல்லா இடத்தையும் இந்த அப்படிக்கா போன வந்துவிடும் என்ற ரீதியில் தான் சொல்கிறார்கள். நடந்தால் தான் தெரிகிறது அது எவ்வளவு நீண்ட தொலைவு என்று. அதானல இனி கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டொம்.

எனது காலணி பத்தியும் அது தன்னை தொலைத்துவிட்டு எனக்கான புது வாழ்க்கை தந்ததையும் நான் இங்கே சொல்லியாக வேண்டும். நான் கொஞ்சம் உயரம் குறைவு என்பதால் சற்று உயரம் கொண்ட செருப்புகளையே அணிவது வழக்கம். அதனால் சென்னைக்கு வருவதற்கு முன்னால் அப்படியொரு தோல் காலணியை தைத்து வாங்கி வந்திருந்தேன். நான் கல்லூரியில் படிக்கும் காலம் வரை ஷூ சொந்தமாக வாங்கி அணிந்ததில்லை. அது தேவையில்லா ஒன்று எனவும் குடும்ப நிலமைக்கு அறுநூறு ரூபாய் ஷூ பெரிய விஷயம் என்பதாலும் நான் இந்த இன்டர்வியூ வரை ஷூ வாங்கியதே இல்லை. எனது சிறு வயதில் ஆசை காரணமாக என் தந்தை வாங்கி தந்த ஷூ மட்டுமே அதுவரை எனக்காக வாங்கப்பட்ட ஒன்று. இந்த இன்டர்வியூ போவதற்கு இடம் கண்டுபிடித்தவுடன், பக்கத்தில் ஏதாவது ஷூ கடை இருக்க என்று தேடினோம். பாட்டா ஷோரூம் கண்ணில் அகப்பட்டது. உள்ளே சென்று புதியதாய் வாங்கி அப்படியே அந்த நிறுவனத்துக்குள் நுழைந்தோம். எல்லோரும் என் ஷூவில் தான் முகம் பார்த்துகொள்கின்றனரோ என்பது போல், எனது இடது இதய ஆரிக்கிள் கூச்சத்திலும், வலது ஆரிக்கிள் பெருமிதத்திலும் நிரம்பி தள்ளாடியது. நானே எனது ஷூவை பலமுறை பார்த்துக்கொண்டேன். எல்லோரும் எனது முகம் பார்த்து பேசாமல் என் ஷூ பார்த்துதான் பேசுகின்றனரோ என்று எனக்குள் பல குழப்பங்கள். இதோடு நுழைவுத் தேர்வு படபடப்பு வேற என்னைத் தொற்றிக்கொண்டது. (இன்று அணியும் நாற்பது டாலர் பதிப்பு ஷூ எப்போதும் எனது செருப்புக்காலை நினைவுபடுத்த தவறியதே இல்லை)

தேர்வு எழுதிவிட்டு மறுபடியும் வண்டி பிடித்து ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம். எனது ஆரம்ப காலங்களில் நான் காலை உணவு உட்கொண்டதே இல்லை. அப்பா கொடுத்தனுப்பி விட்ட பணத்தை கொண்டு எந்த அளவுக்கு சிக்கனமாக இருக்க வேண்டுமோ அப்படியொரு வாழ்க்கை வாழ்ந்தோம். இந்த மூன்று நேர உணவுகளை தவிர்த்து வேறேதுவும் நாங்கள் சாப்பிட்டோமா என்றால் அந்த நேரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இரண்டு ரூபாய் காபியோ டீயோ எங்களது வயிற்றை நிரப்பியது. அதனால் மதிய உணவு அன்லிமிடட் மீல்ஸ் தான். தேர்வு முடிந்து வந்தவுடன், எம்.எல்.ஏ (இதற்கு தமிழகத்தின் முதல் முதலமைச்சர் ஓமந்தூரார் பெயர் வைக்கப்பட்டிருந்ததாக எனக்கு ஞாபகம்) விடுதியில் இருக்கும் உணவகத்தில் தான் உணவு உட்கொள்வோம். அன்லிமிடட் மீல்ஸ் பதினாறு ரூபாய், கூடவே கோழி குழம்பும் மீன் குழம்பு உண்டு. இது தான் நாங்கள் தினமும் சாப்பிடும் சாப்பாடு. சில சமயம் அந்த குழம்புகளோடு வந்து விழும் சில கறித் துண்டுகள் இப்போது கைகளில் வாங்கும் லட்சம் ரூபாயை விட அதிகம் மதிப்பு கொண்டது, அன்றைய நாட்களில்.இரவு உணவு கையேந்தி பவன்களில் இரண்டு புரோட்டாக்களோ, இல்லை மூன்று வாழைப்பழங்களோ தான் தினமும் எங்களின் வாக்கைக்கு ஆதாரம்.. எங்கள் ஆகாரம்.

(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)

60 பின்னூட்டங்கள்:

said...

அருமையான உள்மன வெளிப்பாடு. நல்லா எழுதி இருக்கீங்க, உங்களோட அனுபவங்களை. நாமும் சென்று வந்தாற்போல் உள்ளது, (மீன் குழம்பைத் தவிர):D

said...

me thaan pashtuuuuuu!

said...

//எங்களின் வாக்கைக்கு ஆதாரம்.. எங்கள் ஆகாரம்.
//
sema punch! nice flow. waiting for the next part!

said...

shoes are always special for a boy esp from rural background illaya? me also same pinch! felt nostolgic.
thanks. :)

said...

ம்ம்ம், தூங்கிட்டீங்க போல் இருக்கு, என்னோட கமெண்ட் வந்ததா வரலையா தெரியலை!

said...

சென்னை ஒரு அருமையான ஊர். வந்தோரை வாழவைக்கும் ஊர், அதை உங்கள் பார்வையில் பார்க்க ஆவலாக உள்ளது.. நடத்துங்க!

said...

கடல் கணேசனின் கற்றது கடலளவு போல் உங்களது ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை ஒளி வீச வாழ்த்துக்கள்..

அதற்க்கு நாங்கள் எப்போதுமே சப்போர்ட்டா இருப்போம்.. ;-)

said...

Karthik, enna dhaan ippo nalla velaila irundhaalum, pazhasa marakkama irukkararadhu periya vishayam. Neenga ippadiye irukkanum-nu en vendukoL.

Anonymous said...

En iniya giramathu karthikey ungal patinathu anubavathai sollungal , padikka suvaiyaaga irukku ;-)

said...

Nadandhu vandha paadhaiyai thirumbi paarkiravan dhan vaazhkaiyil nedhundooram sella mudiyum enbadarku neenga oru edhutukaatu.

said...

//கடல் கணேசனின் கற்றது கடலளவு போல் உங்களது ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை ஒளி வீச வாழ்த்துக்கள்..//

வழிமொழிகிறேன்.

முதல் பகுதிலய மனச பிழியறிங்க.அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.

said...

லாஸ்வேகஸ், L.A பயணக்கட்டுரை அப்படின்னு 2 மாசம் முன்னால ட்ரெயிலர் குடுத்தீங்க. அது எப்பொ தொடங்கப்போறிங்க?

said...

//ஸ்பென்சர் பிளாசாவில் பெண்களையும்//

ஆரம்பமே களை கட்டுது தல :-)

said...

கலக்கலா சென்னைய பத்தி எழுதி இருக்கீங்க தல...எனக்கு சின்ன வயசுல இருந்தே அப்பா கூட சென்னை போய் வந்த பழக்கம் இருந்தாலும்...முதல் டைம் தனியா போய் இறங்கின அப்புறம் தான் தெரிஞ்சது கஷ்டம்...எந்த பஸ் புடிச்சு எங்க போறதுனு தெரியாம... :-)

said...

உங்க பார்வைல இருந்து சென்னைய பார்க்க ஆவலுடன் வெய்டிங் :-)

said...

//கடல் கணேசனின் கற்றது கடலளவு போல் உங்களது ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை ஒளி வீச வாழ்த்துக்கள்..//

வழிமொழிகிறேன்.//

நானும் :-)

said...

//பேருந்து எண்கள், வெள்ளை, மஞ்சள், எம் போர்ட் என பல வகைகள் என்று எல்லாமே என்னை வெகுவாக குழப்பியது. மதுரையில் ஏ சர்வீஸ், பி சர்வீஸ் என்று இருந்ததால் இதை விரைவாகவே புரிந்துகொண்டோம். //

பெங்களுரில இன்னம் கஷ்டங்க. பேருந்து எண்கள், செல்லுமிடம்னு எல்லாமே கன்னடம் தான். இப்போ எப்படின்னு தெரியலை?

said...

Aaha.. Ippo dhaan M series buslaan vandha maadiri irukku.. adhukkulla 5 varushathukku mela odiducha??

Modhal episode-ae super.. Konjam time machine-la poittu vandha effect :-)

Ungal paarvayil ungal ezhuthu nadayil chennai vaazhkaiyai padikka swarsayamai waiting. Ezhudhi asathunga :D

said...

ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. சென்னை அனுபவம் என்பதால் கூடுதல் ஆர்வத்துடன் படிக்கிறேன்.

Cheers
SLN

said...

kalakkal thalaivare.. chennai vandha vudane MLA hostel a? appave unga arasiyal payanam arambamayiducha?

//எல்லோரும் என் ஷூவில் தான் முகம் பார்த்துகொள்கின்றனரோ என்பது போல், எனது இடது இதய ஆரிக்கிள் கூச்சத்திலும், வலது ஆரிக்கிள் பெருமிதத்திலும் நிரம்பி தள்ளாடியது. நானே எனது ஷூவை பலமுறை பார்த்துக்கொண்டேன். எல்லோரும் எனது முகம் பார்த்து பேசாமல் என் ஷூ பார்த்துதான் பேசுகின்றனரோ என்று எனக்குள் பல குழப்பங்கள்.//
pudhu shoe pathi ezhudhi irukkaradhu romba arumai..

said...

என்ன கார்த்தி, பதில் கமெண்ட் ஒன்னையும் காணோம். 40க்க்காக வெயிடிங்கா ?? :D

said...

So true about few food shops where you get tasty food. Thou you have lots of restaurants to eat on the way, nothing comes what we ahve back home.

Ippo nenacha nakku oordhunga:)

said...

//அருமையான உள்மன வெளிப்பாடு. நல்லா எழுதி இருக்கீங்க, உங்களோட அனுபவங்களை. நாமும் சென்று வந்தாற்போல் உள்ளது, (மீன் குழம்பைத் தவிர):
//

மீன் குழம்பு வாசமாவது வந்ததா, மேடம்

said...

//me thaan pashtuuuuuu//

justla missu, ambi!

said...

//sema punch! nice flow. waiting for the next part//

Oh Thanks Ambi!

said...

//shoes are always special for a boy esp from rural background illaya? me also same pinch! felt nostolgic.
thanks. //

கரெக்டா சொன்னப்பா அம்பி!

said...

//வருகையை பதிவு செஞ்சுக்கோங்க:) நாளைக்கு வந்து கமெண்டரேன்//

வருகையை பதிஞ்சாச்சு வேதா.. மெதுவா வாங்க

said...

//ம்ம்ம், தூங்கிட்டீங்க போல் இருக்கு, என்னோட கமெண்ட் வந்ததா வரலையா தெரியலை!//

முதல்ல வந்துடுச்சு மேடம்!

said...

//சென்னை ஒரு அருமையான ஊர். வந்தோரை வாழவைக்கும் ஊர், அதை உங்கள் பார்வையில் பார்க்க ஆவலாக உள்ளது.. நடத்துங்க! //

என்னையும் வாழத்தான் வைத்தது தீக்க்ஷன்யா

said...

//கடல் கணேசனின் கற்றது கடலளவு போல் உங்களது ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை ஒளி வீச வாழ்த்துக்கள்..
//

வாவ்.. வாழ்த்துகளுக்கு நன்றி மை பிரண்ட்

said...

//Karthik, enna dhaan ippo nalla velaila irundhaalum, pazhasa marakkama irukkararadhu periya vishayam. Neenga ippadiye irukkanum-nu en vendukoL.

//

Oh.. Thanks ravi!

said...

//En iniya giramathu karthikey ungal patinathu anubavathai sollungal , padikka suvaiyaaga irukku//

Thanks Haniff

said...

//Nadandhu vandha paadhaiyai thirumbi paarkiravan dhan vaazhkaiyil nedhundooram sella mudiyum enbadarku neenga oru edhutukaatu.//

Thanks Mahesh

said...

//பகுதிலய மனச பிழியறிங்க//

நடந்து வந்த பாதை மணி.. அப்போது வலித்தாலும் இப்போது இனிக்கிறது நெல்லிக்காய் போல

said...

//லாஸ்வேகஸ், L.A பயணக்கட்டுரை அப்படின்னு 2 மாசம் முன்னால ட்ரெயிலர் குடுத்தீங்க. அது எப்பொ தொடங்கப்போறிங்க?//

ஓ.. நானே மறந்துட்டேன் மணி..ஞாபகப்படுதியதற்கு நன்றி.. சீக்கிரம் அந்த பதிவைப் போடுகிறேன்

said...

//கலக்கலா சென்னைய பத்தி எழுதி இருக்கீங்க தல//

நன்றி நாட்டாமை

said...

//Ungal paarvayil ungal ezhuthu nadayil chennai vaazhkaiyai padikka swarsayamai waiting. Ezhudhi asathunga//

innum niraiya irukku G3..

said...

//ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. சென்னை அனுபவம் என்பதால் கூடுதல் ஆர்வத்துடன் படிக்கிறேன்.//

எழுத நான் ஆசையுடன் இருக்கிறேன் SLN

said...

//pudhu shoe pathi ezhudhi irukkaradhu romba arumai..//

Thanks Priyaa

said...

/என்ன கார்த்தி, பதில் கமெண்ட் ஒன்னையும் காணோம். 40க்க்காக வெயிடிங்கா//

முப்பதுக்காக வெயிட்டிங்

said...

//Ippo nenacha nakku oordhunga//

me too, priya :-)

said...

கார்த்தி! நான் இதுவரை உங்களின் பதிவைப் படித்ததில்லை! அதற்க்காக வருந்துகிறேன்,பாசாங்கில்லாத எளிமையான எழுத்துநடை !

நல்ல ஒருதொடரின் ஆரம்பம்,
நடந்து வந்த பாதையை மறக்ககூடாது என்பார்கள் நீங்களோ நடக்க உதவிய காலணிகளையும் மறக்க வில்லை நல்லது!

உங்களின் அனுபவம் போன்றதே எனது சென்னை அனுபவமும்( ஒரு ஆறு மாசம் அழைக்கழிக்கப்படும் அப்ரசெண்டா அங்கயும் குப்பை கொட்டினேன்) எனவே படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.

MLA ஹாஸ்டல் கேண்டீன் பெயர் "அண்ணா உணவகம்" சரியா?(வேலை செய்ரமோ இல்லையோ எல்லா ஹோட்டலயும் சாப்பிடிருக்கோம்ல...)

உங்களின் இந்தத் தொடர் வெற்றிகரமாக எழுத வாத்துக்கள்! ஒரு விசயத்தையும் விடாதீங்க! நல்லா நினைவுப்படுத்தி சுவாரஸ்யத்துடன் எழுதுங்கள் நண்பரே!

வாழ்த்துக்கள்!

அன்புடன்...
சரவணன்.

said...

/உங்களின் இந்தத் தொடர் வெற்றிகரமாக எழுத வாத்துக்கள்! ஒரு விசயத்தையும் விடாதீங்க! நல்லா நினைவுப்படுத்தி சுவாரஸ்யத்துடன் எழுதுங்கள் நண்பரே!
//

என் தோள் தட்டி உற்சாகப் படுத்தியதற்கு நன்றிங்க சரவணன்!

said...

//MLA ஹாஸ்டல் கேண்டீன் பெயர் "அண்ணா உணவகம்" சரியா?(வேலை செய்ரமோ இல்லையோ எல்லா ஹோட்டலயும் சாப்பிடிருக்கோம்ல...)//

அதே அதே சரவணன் :-)

said...

super-a ezhudhi irukeenga maams....eppadi ella vishayathayum gyabagam vachi irukeenga.....gr8...autobiography super :)

said...

Hi Karthi,
flash back nallaa irukku.. keep writing..
Vaazhha Thamizh!! :)

said...

சிறந்த கதாசிரியரை தமிழ் சினிமா உலகம் இழந்து விட்டது.நன்றாக இருக்கிறது தொடர என் வாழ்த்துக்கள்

செந்தில்

said...

அருமையா எழுதியிருக்கீங்க...

இன்னும் தொடர வாழ்த்துக்கள்...

said...

lateaa vandaalum 50thaa vandurken.
nalla rasichu ezhudi irukkinga. apdiye padam paakure maathiri irukke :)

said...

adada! nammala polave neengalum!

naanum 20 vayasu varaikum ore murai thaan chennai poi irundhen!
and it looked soooooo big and colorfull to me!

said...

alagaana valkai payanam! innum sollunga!

said...

//super-a ezhudhi irukeenga maams....eppadi ella vishayathayum gyabagam vachi irukeenga.....gr8...autobiography super//

நன்றி மாப்ள.. எழுத உட்கார்ந்தா சங்கிலி மாதிரி அப்படியே எல்லாம் ஞாபகத்துக்கு வருதுப்பா, மாப்ள

said...

/Hi Karthi,
flash back nallaa irukku.. keep writing..
Vaazhha Thamizh//

Thanks Devi.. thanks for dropping by..

said...

//சிறந்த கதாசிரியரை தமிழ் சினிமா உலகம் இழந்து விட்டது.நன்றாக இருக்கிறது தொடர என் வாழ்த்துக்கள்//

ஓ.. பாராட்டுக்கு நன்றி செந்தில்

said...

//அருமையா எழுதியிருக்கீங்க...

இன்னும் தொடர வாழ்த்துக்கள்... //

Thanks Z

said...

//lateaa vandaalum 50thaa vandurken.
nalla rasichu ezhudi irukkinga. apdiye padam paakure maathiri irukke //

Thanks arun!

said...

//naanum 20 vayasu varaikum ore murai thaan chennai poi irundhen!
and it looked soooooo big and colorfull to me!
//
me too, dreamzz
//
alagaana valkai payanam! innum sollunga!
//
kattaayam dreamzz!

Anonymous said...

Hi Karthik,
This is my first visit to ur blog. I should say that it is GOOOOD. I like the way you narrate ur experience. Especially, ur 'Shoe Mirror' part.
It is so natural.
Good going

said...

நண்பர் மு. கார்த்திகேயன் அவர்களுக்கு,

தற்செயலாய் உங்கள் பக்கங்களை காண நேர்ந்தது. ஆனாலும் நன்றாக உள்ளது..
மேலும் படிக்க தூண்டுகிறது.
வாழ்த்துக்கள்..

ரவி
http://ravikutty.blogspot.com

said...

ஹை கார்த்திக்

வலைச்சரம்ல இருந்து வரேன். பெரும்பாலான எல்லாருக்குமே ஸ்டார்ட்டிங் இப்படித்தான் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். அருமையாபதிவு செஞ்சிருக்கீங்க.

அடுத்த பாகத்தோட லிங்க் எங்க இருக்கு?