Monday, February 19, 2007

இயக்குனர் கௌதம் - ஒரு பார்வை

தமிழ் திரையுலகிற்கு கிடைத்த சில நல்ல இயக்குநர்கள் வரிசையில் காக்க காக்கவிற்கு பிறகு நான் கௌதமையும் சேர்த்துவிட்டேன். அடுத்தடுத்து, ஒரே மாதிரி மசாலா படங்களை தந்துவிட்டு, இதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள், இதை தான் ரசிக்கிறார்கள், தயாரிப்பாளருக்கு போட்ட பணத்தை விட அதிகம் சம்பாரித்து தருகிறதே எங்கள் படங்கள் என்று வெற்றுச் சப்பை கட்டு செய்யும் இயக்குநர்களுக்கு மத்தியில் எதையும் புதியதாக செய்யும் அருமையான இயக்குநர் கௌதமன். இவரின் படங்கள் மற்ற மசால இயாகுநர் படங்கள் விட அதிகமாகவே வசூல் செய்துள்ளது நாம் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டியது.

முதல் படமான மின்னலேவில், கதை சாதாரணமானது தான் என்றாலும் அதையும் புதுமையாக இளமையாக படைத்திருந்தார் கௌதம். அந்தப் படத்தில் இவருக்கு ஹாரிஸ் ஜெயராஜின் இசை யானை பலமாக இருந்தது. படத்தில் எல்லாமே சரியாக இருந்தது, விவேக்கின் நகைச்சுவையையும் சேர்த்து. அடுத்த படமான, காக்க காக்க பற்றி சொல்லவே வேண்டாம். முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, அழகிய காதலையும், துடிப்பான ஒரு காவல்துறையையும் கண்ணுக்கு முன்னே நிறுத்தினார். இந்த படம், டெக்னிக்கல் விஷயங்களில் ஒரு மைல்கல்லாகவும், சூர்யா மற்றும் ஜோதிகா இருவரின் திரையுலக வளர்ச்சிக்கு பெரிய ஏணிப்படியாகவும் இருந்தது. ஆங்கில படங்களுக்கு இணையான மிரட்டலான காட்சிகள் படமாக்கப் பட்டிருந்தன. படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த போது, பார்க்கின்ற எல்லா போலீஸ்காரர்களையும் கண்டு மனசுக்குள்ளே ஒரு சல்யூட் போட வைத்தது.

கமலோடு இவர் கைகோர்த்த வேட்டையாடு விளையாடுவும் காவல்துறை கதை தான் என்றாலும் அதிலும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருந்தது. நீண்ட தேக்கத்திற்கு பிறகு வந்தாலும், படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. இதுவரை தமிழில் தொடர் கொலைகாரனை பற்றிய எந்த படமும் வந்ததில்லை என்ற வெற்றிடத்தை இந்தப் படம் நிரப்பியது. எல்லாப் படங்களிலும் ஹாரிஸ் இவருக்கு, இவரின் ஆக்கத்திற்கு மிகவும் பக்க பலமாக இருந்திருக்கிறார். இதுமட்டுமல்லாது, இவர் தாமரை என்னும் பெண் கவிதையாளருக்கு பாடல்கள் எழுதுவதற்கு வழி ஏற்படுத்தி தந்து, பாடல் வரிகள் புது கருத்துகளையும் உணர்ச்சி குவியலாகவும் படைக்க காரணமாக இருந்தார். ஒரு பக்கம் பெரிய பெரிய டெக்னிக்கல் விஷயங்களை படத்தில் கொடுத்திருந்தாலும், இவர் படத்தின் பாடல்கள் (மின்னலே படத்தில் வரும் ஓரிரு பாடல்களைத் தவிர) எல்லாம் சுத்த தமிழில் அமையும்படி பார்த்துக்கொண்டிருக்கிறார். இதெல்லாம் ஒரு இயக்குநர் எப்படி தனது படத்தின் எல்லாத் துறையிலும் செம்மையை எதிர்பார்க்க வேண்டும், படைக்க வேண்டும் என்று சொல்லுவதாகவே இருக்கிறது.

இவரின் படங்களின் தலைப்புகள் எல்லாமே ஏதோ ஒரு பாடலின் வரிகள் தான் என்பதை நாம் ஏற்கனவே இங்கே சொல்லி இருக்கிறோம். அதை இவரின் அடுத்த படமான வாரணமாயிரும்-மும் அந்த பார்முலாவிலே தான் இருக்கிறது. இப்போது திரைக்கு வந்து எல்லோராலும் பாரட்டப்படும் பச்சைகிளி முத்துச்சரம் பார்க்கவில்லை என்றாலும், இந்த படத்தின் கதையும் புதிய களம் தான் என்பது வரவேற்கத்தக்க விஷயம். சூர்யாவிற்கு இனிய பிரேக் கொடுத்தவர் இப்போது சரத்குமாருக்கும் தந்திருக்கிறார். சரத்குமாரின் நடிப்பை படம் பார்த்த எல்லோரும் பாராட்டுகிறார்கள்.

இந்தப் படம் டிரெயில்டு (DERAILED) என்னும் ஆங்கில நாவலை மையமாக வைத்தே இயக்கியதாக இவர் மன திறந்து சொல்லி இருக்கிறார். ஆனால், மையக் கருத்து மட்டுமே அந்த நாவலில் இருந்து எடுத்துக்கொண்டதாக பேட்டி தந்திருக்கிறார். மணிரத்தினத்திற்கு பிறகு, நிறைய இளம் இயக்குநர்கள் வந்திருந்தாலும், ஒரு சிலரே கௌதமை போல, விறுவிறுப்பான, நல்ல ரசிக்க வைக்கும் பாடல்களும் அதை சரியாக படம் பிடித்து தருவதிலே கில்லாடிகளாய் இருக்கின்றனர்.

கௌதமையும் அவரது டெக்னிக்கல் குழுவையும் வரவேற்போம். இன்னும் வெட்டி நியாயம் பேசும் ஏனைய இயக்குநர்களும் இப்படி தரமான படங்கள் ரசிக்கும் வகையிலே படைக்க முயற்சி செய்யட்டும்.

இப்போதே வாரணமாயிரம் படத்தை கௌதமுக்காக எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

50 பின்னூட்டங்கள்:

said...

கார்த்தி,

சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்!

இரசித்தேன்!

said...

அருமையான அலசல்!

said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...

ஆனா ஒரே மாதிரி வில்லனை காட்டி கொஞ்சம் வெறுப்பேற்றுவது போல் தோன்றுகிறது. அப்பறம் அவர்களுக்கு பின்னனியும் இவரே கொடுப்பதும் கொஞ்சம் பழைய படங்களையே நினைவூட்டுகிறது!!!

said...

//கார்த்தி,

சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்!

இரசித்தேன்!

//

நன்றிங்க சிவபாலன்!

said...

/அருமையான அலசல்//

நன்றிங்க SK.. ரொம்ப நாளுக்கு பிறகு அருள் புரிஞ்சிருக்கீங்க முருகா!

said...

//
ஆனா ஒரே மாதிரி வில்லனை காட்டி கொஞ்சம் வெறுப்பேற்றுவது போல் தோன்றுகிறது. அப்பறம் அவர்களுக்கு பின்னனியும் இவரே கொடுப்பதும் கொஞ்சம் பழைய படங்களையே நினைவூட்டுகிறது!!! //

நானும் இதை கவனித்தேன் வெட்டி! அடுத்த படத்தில் இந்த குறை இருக்காதுன்னு நினைக்கிறேன்!

said...

அருமையான அலசல்!


//இவர் தாமரை என்னும் பெண் கவிதையாளருக்கு பாடல்கள் எழுதுவதற்கு வழி ஏற்படுத்தி தந்து, பாடல் வரிகள் புது கருத்துகளையும் உணர்ச்சி குவியலாகவும் படைக்க காரணமாக இருந்தார்.//
yes, all the songs in KK were written by thamarai who is thousand times better than male writers who writes commercials.

she has prooved that without using vulgar words and non-menaingless words like ajakku, gumukku, jimukku etc a song can rock and be murmured by the pple for a long time.

said...

nalla padhivu.....

//எதையும் புதியதாக செய்யும் அருமையான இயக்குநர் கௌதமன்//
my favourite is ''மின்னலே'' thaan...

kaaka kaaka ( first mattum thaan pudikkum :)) )//சூர்யாவிற்கு இனிய பிரேக் கொடுத்தவர் //

mannikanum....சூர்யாவிற்கு பிரேக் கொடுத்தவர் Mr.Bala director thaaan...
(nandha film)

said...

//எப்படி தனது படத்தின் எல்லாத் துறையிலும் செம்மையை எதிர்பார்க்க வேண்டும், படைக்க வேண்டும் என்று சொல்லுவதாகவே இருக்கிறது.//

correct'a soneeenga..

adhey maadhiri ellam padathulaium atleast oru scene'ku vandhuduvaar.. :))

said...

good post keep goin ..

c.m.haniff said...

Nalla pathivu, engay cinema sittu vai kaanom ;-)

said...

கௌதமை பற்றி சூப்பரா கமெண்ட்ச் அடிச்சிருக்கீங்க..

உண்மையிலேயே தொடர்ந்து 4 ஹிட் கொடுக்கிறதும்.. அதுவும் ஒவ்வொன்றிலும் வித்தியாசமான கதைகளத்தை உபயோக்கிக்கும் இவர் திறன் ரொம்பவும் வரவேற்க வேண்டிய ஒரு விஷயம்.

வாரணம் ஆயிரம் மற்றும் இவருடைய அடுத்தடுத்த படங்களும் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்! :-)

said...

என்னதான் கெளதம் வித்தியாசமான கதைக்களங்களில் படம் எடுத்தாலும் அவரது படங்களின் வன்முறை சகிக்கமுடியாமல் இருக்கிறது அவர் எப்படியெல்லாம் கொலை செய்யலாம் என்று ஐடியா கொடுக்கிறார் போல இருக்கிறது. அவர் கதாநாயகன்களிலும் வில்லன்களில் தான் அதிகம் சிரத்தை காட்டுகிறார் அவரது படங்களின் பின்னால் வில்லன்கள் பெயர் பெற்று விடுகிறார்கள் இப்போது வந்திருக்கும் பச்சைக்கிளி முத்துச்சரம் வன்முறை சினிமாவின் மற்றொரு வரவு.

said...

நல்லா எழுதியிருக்கீங்க தல...

ஆனால் எனக்கு இந்த மின்னலே தவிற மற்ற படங்கள் ஒகே...
காக்க காக்கவுக்கும், வேட்டையாடு விளையாடுவுக்கும் சில வித்தியாசங்கள் தான் இருந்தது...வசனங்கள் நல்லா இருக்கும்...

said...

Thala, naanum Gautham fan. Recentaana directorsla Gautham has definitely got a distinct style amongst the total boaring masala pattern directors.

If you see Gauthams movies, there is some good resemblances of english movie tones. Kakka Kaakka, VV making was simply superb.

Naanum pacha kili paarka aasai padaraen...Thamiz padangalukku oru periya madhippu thedith tharum Gautham ku oru periya "O".

said...

சரியாக சொல்லியிருக்கீங்க.அரைத்த மாவையே அரைக்காமல் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியசம் காட்டுவது பாராட்டுக்குறியது

said...

கெளதம் ஒரு சாடிஸ்ட்..இதை உறுதிபடுத்திய சினிமாதான் பச்சைக்கிளி..முத்துச்சரம்..

ஒரே இலை வாங்கி வைத்துக்கொண்டு, அதை தினமும் கழுவி,கழுவி சாப்பிடுவது போல ஒரே கதையை வேறு,வேறு பெயிண்ட் அடித்து எடுப்பதில் கௌதம்ஜி வல்லவர்...

said...

பச்சைகிளி முத்துச்சரம்...இந்த பேரே எனக்கு ரொம்ப புடிச்சு இருந்தது...அந்த படத்தோட விமர்சனத்த எதிர்பார்த்தேன்...:-)

said...

nalla ezhudhirkeenga annatha...

gowtham indha padathula adhavadhu PKMC'la "pudhumaiya" avaroda pona rendu padam "maadhiriye" kuduthurkaaru :))

tustu'laam irukku...but kinda slow moving...n andha twist'ellam yours truly golmaal correct'ah guess pannitaan.... :)

said...

and thala i saw u online on im....but ungalukku night so thought dat u might not've logged off properly...

me 198363...mail anuppunga :))

said...

/yes, all the songs in KK were written by thamarai who is thousand times better than male writers who writes commercials.

she has prooved that without using vulgar words and non-menaingless words like ajakku, gumukku, jimukku etc a song can rock and be murmured by the pple for a long time. //


அம்பி, நான் தாமரையின் வரிகளின் ரசிகன். அதுவும் சின்ன சின்ன உணர்வுகளைக் கூட தெள்ளு தமிழில் அழகாக சொல்லி இருஒப்பார்.. அம்பி, குறிப்பா பார்த்த முதல் நாளே பாட்டில் வேலைக்கு செல்லும் கணவன் மற்றும் கதவோரத்தில் நின்று விடை கொடுக்கும் மனைவி இருவரின் உணர்வுகளையும் அழகாக சொல்லியிருப்பார் தாமரை.

said...

//mannikanum....சூர்யாவிற்கு பிரேக் கொடுத்தவர் Mr.Bala director thaaan...
(nandha film) //

hehehe.. athu first break.. this is the best, i can say, gops

said...

/adhey maadhiri ellam padathulaium atleast oru scene'ku vandhuduvaar.. :)) //

appadiya.. Naan kavanichchathe illiye, gops.. can you tell any one scene, pls

said...

//good post keep goin .. //

நன்றி கார்த்திக்

said...

derailed padame irukke, adhe kadhai thaan. maiya karuvellam illai :) irundalum parva illai, edukradha nalla edutha seri thaan! :)

tamil la thodar kolaikaaran padam varaliya?! sigappu rojakkal kamal padam thaane? isnt it in this genre?! :-/

said...

enna mu.kaa, adhan kk la oru senior officera varuvaru, vv la manjal veyil paatula varuvaru. minnale la vandhara nu i dont rem :)

said...

Appurama vanthu padikuren :D
Ippotheeku attendance :)

said...

appa, ivlo posta?

idhu varaikkum gautam padangala rasichen. Pachaikili muthucharam is about extra mariral affair. Derailed lendhu copy adicha, namma culture la accept panna mudiyadha, indha sensitive subject a eppadi handle panni irukkarnu patha dhan theriyum.

said...

matha post lam appuram padikkaren thalaivare :)

said...

//Nalla pathivu, engay cinema sittu vai kaanom //

long leavela poyirukkunGka, haniff :-)

said...

//உண்மையிலேயே தொடர்ந்து 4 ஹிட் கொடுக்கிறதும்.. அதுவும் ஒவ்வொன்றிலும் வித்தியாசமான கதைகளத்தை உபயோக்கிக்கும் இவர் திறன் ரொம்பவும் வரவேற்க வேண்டிய ஒரு விஷயம்.
//

கரெக்டா சொன்னீங்க மை பிரண்ட்.. குறைகள் இல்லாம யாரும் இருந்ததில்லை.. இருந்தாலும் இவரோட படங்கள் வித்தியாசமான களத்தையே சுமக்கின்றன

said...

//என்னதான் கெளதம் வித்தியாசமான கதைக்களங்களில் படம் எடுத்தாலும் அவரது படங்களின் வன்முறை சகிக்கமுடியாமல் இருக்கிறது அவர் எப்படியெல்லாம் கொலை செய்யலாம் என்று ஐடியா கொடுக்கிறார் போல இருக்கிறது.//


சார்வாகன், உங்கள் கருத்துகள் உண்மையே.. ஒத்துக்கொள்கிறேன்.. அடுத்த படமாவது உங்களின் இந்த கருத்தை மாற்றுமா என்று பார்க்கலாம்

said...

//வசனங்கள் நல்லா இருக்கும்... //

ஆமாங்க.. இவர் படத்தின் வசனங்கள் கொஞ்சம் வித்தியாசம் தான்

said...

//Naanum pacha kili paarka aasai padaraen...Thamiz padangalukku oru periya madhippu thedith tharum Gautham ku oru periya "O".
//

படத்தை பாத்துட்டு சூடா ஒரு விமர்ச்னத்தை போடுங்க மாமு

said...

//narmadha said...
சரியாக சொல்லியிருக்கீங்க.அரைத்த மாவையே அரைக்காமல் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியசம் காட்டுவது பாராட்டுக்குறியது

//

நன்றிங்க நர்மதா முதல் வருகைக்கு..

said...

//கெளதம் ஒரு சாடிஸ்ட்..இதை உறுதிபடுத்திய சினிமாதான் பச்சைக்கிளி..முத்துச்சரம்..

ஒரே இலை வாங்கி வைத்துக்கொண்டு, அதை தினமும் கழுவி,கழுவி சாப்பிடுவது போல ஒரே கதையை வேறு,வேறு பெயிண்ட் அடித்து எடுப்பதில் கௌதம்ஜி வல்லவர்...

//


கலாபாரதி, உங்களுக்கு கௌதம் மேல் என்ன கோபமோ, இந்த அளவுக்கு குற்றம் சுமத்த..

said...

//அந்த படத்தோட விமர்சனத்த எதிர்பார்த்தேன்...:-) //

நாட்டாமை.. படத்தை பாத்தவுடன் போட்டுடுறேன்

said...

//tustu'laam irukku...but kinda slow moving...n andha twist'ellam yours truly golmaal correct'ah guess pannitaan.... //

கோல்மால், பாத்துட்டு சொல்றேன்பா

said...

//me 198363...mail anuppunga//

Sure colleague :-)

said...

//tamil la thodar kolaikaaran padam varaliya?! sigappu rojakkal kamal padam thaane? isnt it in this genre?! //

அட! ஆமா பொற்கொடி எப்படி மறந்தேன் இதை!

said...

//enna mu.kaa, adhan kk la oru senior officera varuvaru, vv la manjal veyil paatula varuvaru. minnale la vandhara nu i dont rem//

அட கலக்குறீங்க பொற்கொடி! நான் கவனித்தது இல்லை..

said...

//Appurama vanthu padikuren :D
Ippotheeku attendance //

attendance ticked, KK :-)

said...

//Derailed lendhu copy adicha, namma culture la accept panna mudiyadha, indha sensitive subject a eppadi handle panni irukkarnu patha dhan theriyum. //

பாத்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க ப்ரியா மறக்காம

said...

//matha post lam appuram padikkaren thalaivare//

சரிங்க ப்ரியா.. சிங்குலர்காரவங்க அழ ஆரம்பிச்சுட்டாங்ளா :-)

said...

naanum Gautham fan. unga first para very very true.. matha directors ellam just sappakattu...

unga post nalla review. super thala.kalakkureenga

said...

hehehe.. Thanks Cleveland mannar ArunE!

said...

கார்த்திக்,

இதே மாதிரி இன்னொரு புதிய பதிவரும் அலசியிருக்கிறார்,

பார்க்க:

http://vadapalani.blogspot.com/2007/02/blog-post_18.html

said...

ம்ம்ம்ம், அப்போ "பச்சைக்கிளி, முத்துச்சரம்" derailed படத்தோட காப்பியா? தெரியாது. இன்னும் விமரிசனம் கூடச் சரியாப்படிக்கலை. அப்புறம் கெளதமைப் பத்தி இத்தனை பேர் பாராட்டி இருக்கிறாங்க. நான் சொல்றது சரியா இருக்குமா தெரியலை. வே.வி. படத்தில் அவருக்குக் கொஞ்சம் கெட்ட பேர் தான், காப்பி அடிச்சது மட்டும் இல்லை, அரவாணிகளைத் தாக்கியோ கேலி செய்திருந்தோ எடுத்திருக்கார்னு. நான் படம் பார்க்கலை, அதனால் என்னால் சொல்ல முடியாது. மற்ற படங்கள் பார்த்திருக்கேன்.

said...

//இதே மாதிரி இன்னொரு புதிய பதிவரும் அலசியிருக்கிறார்,//

சுட்டிக்கு நன்றிங்க சோத்துக்கட்சி

said...

// வே.வி. படத்தில் அவருக்குக் கொஞ்சம் கெட்ட பேர் தான், காப்பி அடிச்சது மட்டும் இல்லை, அரவாணிகளைத் தாக்கியோ கேலி செய்திருந்தோ எடுத்திருக்கார்னு.//

சர்ச்சைகள் ஒவ்வொரு படத்துலையும் சில இருக்கத்தான் செய்கின்றன மேடம்.. அதைத் தவிர்த்துவிட்டு தான் இந்த கட்டுரை :-)