Monday, February 26, 2007

ஜல்லிக்கட்டு

எங்கள் ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டு கொஞ்சம் பிரபலமானது. ஆனால் அலங்காநல்லூர் அளவுக்கு அல்ல. பொங்கலன்று நடக்கும் ஜல்லிகட்டு மிகவும் சிறிய அளவில் தான் இருக்கும். அது எங்கள் ஊரில் வளர்க்கப்படுகின்ற மாடுகளை வைத்து மட்டுமே நடத்தப்படும். எங்கள் ஊரில் கிறித்துவ மக்களின் ஜனத் தொகை அதிகம் என்பதால், ஒவ்வொரு வீதியில் ஒரு சில குடும்பங்களால் நிர்வகிக்கப்படும் கோயில்களின் (சர்ச்) திருவிழாவும் வருடத்திற்கு ஒரு முறை நடக்கும். பெரும்பாலும் வருடத்திற்கு ஒரு முறையே ஜல்லிகட்டு நடக்கும். ஆனால் எங்கள் ஊரில் கள்ளச்சாராயம் கொடிகட்டி பறந்த காலங்களில் மூன்று ஜல்லிகட்டுகள் கூட ஒரே வருடத்தில் நடந்ததுண்டு.

ஜல்லிக்கட்டு நடத்துவது என்பது ஒரு பெரிய வேலை. காளைகள் இருக்கின்ற ஒவ்வொரு ஊருக்கும் சென்று அந்த காளை வைத்திருப்போரை முறையாக அழைக்க வேண்டும். ஜல்லிக்கட்டு அன்று இப்படி அழைக்கப்பட்டு வருகின்ற எல்லோருக்கும் அவர்கள் காளையும் அவர்களும் தங்குவதற்கு இடங்களும், சுவையான அசைவ சாப்பாடுகளும் வழங்கப்படும். அன்று எங்கள் ஊரின் எல்லா வீதிகளிலும் இந்த காளைகள் உலா வரும். ஜலங் ஜலங்கென்று கழுத்துமணி ஒலிக்க இவைகள் நடந்து வருவதை பார்ப்பதே அழகாய் இருக்கும். கிட்டதட்ட ஒவ்வொரு காளையுடன் மூன்று பேர் வருவார்கள். உங்களுகெல்லாம் தெரிந்திருக்கும், பெரும்பாலும் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு தான் போட்டிருப்பார்கள். அன்று மட்டும் கழுத்துக்கும் கயிறு போட்டு அழைத்து வருவார்கள். காளைகளின் கொம்புகள் கூர்மையாக சீவப்பட்டிருக்கும்.

சில காளைகள் அப்படி அழைத்து வரப்படும் போது முன்னங்கால்களை முன்னே தூக்கி குதித்து பார்ப்போர் வயிற்றில் புளியையும் கரைக்கும். அந்த காளையை அழைத்து வருவோரையே கீழே தள்ளி விளையாடியும் பார்க்கும். ஒரு காளையுடன் மூன்று பேர் அனுமதி, சாப்பாட்டுக்கு. அவர்களுக்கு தனியாக டோக்கன் கொடுத்திருப்பார்கள். இந்த காளைகளை வேனில் ஏற்றி தான் அழைத்து வருவார்கள். அதோடு இந்த ஜல்லிகட்டை பார்ப்பதற்கு அந்த ஊரில் இருந்தும் இருபது முப்பது பேர் இந்த வேனில் வருவார்கள். இந்த மாதிரி ஜல்லிக்கட்டுகளில் எங்கிருந்து தான் வருமோ, சாராயம் கரைபுரண்டு ஓடும்.

ஜல்லிக்கட்டு நடக்கும் இடம் அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நடக்கும் இடத்தை விட கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு குடுவை போல இருக்கும், இந்த ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தின் வடிவமைப்பு. சுற்றிலும் பனை மற்றும் தென்னை மரங்களை வைத்து கிட்டதட்ட ஒரு ஏழடி உயரத்தில் மேடைகள் அமைக்கப்படிருக்கும். அதிலிருந்து தான் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் ஜல்லிகட்டை பார்ப்பார்கள். இந்த மாதிரி மேடைகள் கிட்டதட்ட ஒரு இருநூறு, முந்நூறு பேர்களை தாங்குவதாக இருக்கும். மற்ற எல்லா இளைஞர்களும் கீழே நின்று தான் பார்ப்பார்கள். மொத்தத்தில் காளையை பிடிப்பவர்கள் என்று பார்த்தால் மிகவும் சில பேர் தான். அவர்களும் துறுதுறு என்று தான் இருப்பார்கள்.

காளையை அந்த மாடு பிடிக்கும் மைதானத்திற்குள் அவிழ்த்துவிடும் இடத்திற்கு பெயர் கிட்டி. மைதானதிற்கு வெளிப்புறம் அந்த கிட்டியின் பக்கத்தில் வந்த பிறகு மாடுகளின் கயிறை எல்லாம் அவிழ்த்துவிடுவார்கள். ஏற்கனவே அவிழ்த்துவிடப்பட்ட மாடு மைதானத்தை விட்டு ஓடிய பிறகு தான் அவர்கள் அடுத்த மாடை அவிழ்த்துவிடுவார்கள். அதுவரை கிட்டியின் கதவுகளுக்கு பின்னே மாடு நின்றுகொண்டிருக்கும். புதிய மாடு வரும் போதும் அந்த மாட்டை பற்றியும் அது எந்த ஊரில் இருந்து வருகிறது என்பதனையும் சொல்வார்கள். இதற்கென மைக்கில் எப்போதும் ஒருவர் உச்சஸ்தாயில் வர்ண்ணைகளை சொல்லிக்கொண்டிருப்பார், விருமாண்டி படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தன் செய்வதைப் போல.

அந்த மாடு வெளிவரும் போது அதனை சுற்றி மாடுபிடிப்பவர்கள் நின்றுகொண்டிருப்பார்கள். எந்த மாடைப் பிடித்தாலும் விழாக்குழுவினரின் சார்பாக ஒரு துண்டோ, வேஷ்டியோ தருவார்கள். அது இல்லாமல் பிடிக்கவே முடியாத சில மாடுகளுக்கு பல ஆயிரம் ரூபாயை பந்தயம் வைப்பார்கள். நான் ஒரே ஒரு ஜல்லிக்கட்டை நேரே கீழே நின்று பார்த்திருக்கிறேன். சில மாடுகள் ஆவேசத்துடன் வந்து மெதுவாக சுத்திமுத்தி பார்க்கும். அது அந்த மாடின் தெனாவட்டை காண்பிக்கும். அந்த மாதிரி மாடுகளை லேசில் பிடிக்க முடியாது. சில மாடுகள் கோபத்தில் தனது கொம்புகளை கீழே குத்தி எல்லாப் பக்கமும் வாரி இறைக்கும். சில காளைகள் நேராக கூட்டதிற்குள் நுழையும். அந்த மாதிரி நேரங்களில் காளையை பிடித்து காயப்படுபவரை விட கூட்டத்தில் சிக்கி காயப்படுபவரே அதிகம்.

முதலுதவிக்கென்று ஒரு மருத்துவர் தலைமையில் ஒரு குழு தயாராக இருக்கும். இந்த குழுவை அமைக்காமல் ஜல்லிக்கட்டை யாரும் அவ்வளவு எளிதாக நடத்த முடியாது. காவல்துறையிடமும் முறையாக முன் அனுமதி வாங்கி இருக்க வேண்டும். காளைகளுக்கு மதுபானங்கள் ஏதும் கொடுக்காமலும், அந்த உயிரனங்களுக்கு எதுவும் நேர்ந்துவிடாதபடியும் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

முந்தைய காலத்தில், காளைகளின் இரண்டு கொம்புகளுக்கு மத்தியில் தங்க சங்கிலி மாட்டப்பட்டு, அதை எடுப்பவர்கள் அதை வைத்து கொள்ளலாமென்றும், தனது பெண்களை மணந்து கொள்ளலாமென்றும் பந்தயங்கள் வைப்பதுண்டு. இந்த கதைகளை கட்டபொம்மன் காலத்திலிருந்து நாம் கண்டு வருகிறோம். உயிரைப் பயணம் வைத்து ஒரு பெண்ணை கட்டிக்கொள்வதற்கு எத்தனையோ பேர் இந்த மாதிரி போட்டிகளில் கலந்துகொள்வதுண்டாம். தான் காதலித்த பெண்ணின் தந்தை தனது காதலியை இது போன்று பந்தயம் வைத்துவிட, அந்த பெண்ணை மணக்க காளையை பிடித்து பழக்கமில்லாத ஒருவன், காளை பிடிக்க போய், தன் உயிரை இழந்தது, நான் சின்ன வயதில் பல தடவை கேட்ட கதை. அதிலும் காதலன் இழந்த துக்கத்தில் அந்த மாட்டின் முன்னே விழுந்து அந்த பெண்ணும் உயிர்நீத்தது மனதை உருக்கிய சோகக் கதை.

22 பின்னூட்டங்கள்:

மணிகண்டன் said...

நீங்க எவ்வளவு மாட்டை அடக்கியிருக்கீங்க கார்த்தி? :)))

மு.கார்த்திகேயன் said...

பல காளைகளை பல அடக்கி பார்த்திருக்கிறேன். ஆனால் நான் எதையும் அடக்கியதில்லை மணிகண்டன்

Anonymous said...

present talaivare..kaliyela vanthu matta adakuren..che ..padikeren...

Geetha Sambasivam said...

நல்ல அனுபவம், அலங்கா நல்லூருக்கு நான் போனது இல்லை, ஆனால் என்னோட அப்பா, அண்ணா, தம்பி போவாங்க. போய்ட்டு வந்து சொல்லுவாங்க, ம்ம்ம், மாடுகள் இருக்கும் இடத்தை "வாடிவாசல்"னு இல்லை சொல்லுவாங்க? ஒருவேளை திண்டுக்கல் மதுரையில் இருந்து பிரிஞ்சதும் பேச்சு வழக்கு மாறிடுச்சோ? :D

Arunkumar said...

present talaivare..kaliyela vanthu matta adakuren..che ..padikeren...

Anonymous said...

Aaha oru jallikattukku poi vantathu maathiri iruntathu ungal pathivu ;-)

golmaalgopal said...

wow....nalla describe pannirkeenga thala...nerla paakaraa maadhiriye irundhudhu...

indha maadhiri scene'laam padathula dhaan paathurkom...

ahem...neenga any kaalai adakkings??? :))

golmaalgopal said...

thala endra blog pakkam vaanga...u'll be shocked as well as kadupps... :))

SLN said...

டி.வியிலும் சினிமாவிலும் மட்டுமே பார்த்த ஜல்லிக்கட்டு பற்றி நன்றாக விவரித்திருக்கிறீர்கள்.

இதை தடை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் கருத்து?

Cheers
SLN

Syam said...

ஜல்லிகட்டு பத்தி சூப்பரா சொல்லி இருக்கீங்க தலீவரா..இந்த மாதிரி பதிவு படிக்க படிக்க ஊருக்கு போகனும்னு ஆசை அதிகமாயிட்டே போகுது :-)

Syam said...

//காளையை பிடிப்பவர்கள் என்று பார்த்தால் மிகவும் சில பேர் தான்//

பின்ன என்னைய மாதிரி ஒரு நல்ல வீரனுக்கு அழகு...எல்லாத்துக்கும் டாப்புல உக்காந்து சேஃப் ஆ ஜல்லிக்கட்டு பாக்கறது.... :-)

கோபிநாத் said...

அருமையான பதிவு...

உங்களின் ஒவ்வொரு அனுபவமும் கலக்கலா இருக்கு....

கோபிநாத் said...

நான் கூட நீங்க ராமராஜன் ஸ்டையிலுல காளைகளை அடக்கி இருப்பிங்கன்னு ஆசை ஆசையா வந்தா இப்படி என் ஆசையில
மண்ண அள்ளிபோட்டுட்டீங்களே தலைவா :((

மு.கார்த்திகேயன் said...

//present talaivare..kaliyela vanthu matta adakuren..che ..padikeren... //

ok mani, kaalaila vanthe maata adakkunGka..che padinGka

மு.கார்த்திகேயன் said...

//மாடுகள் இருக்கும் இடத்தை "வாடிவாசல்"னு இல்லை சொல்லுவாங்க? ஒருவேளை திண்டுக்கல் மதுரையில் இருந்து பிரிஞ்சதும் பேச்சு வழக்கு மாறிடுச்சோ?//

எங்கள் ஊர்ப்பக்கம் இதை கிட்டி என்று தான் சொல்வாங்க மேடம்

மு.கார்த்திகேயன் said...

/present talaivare..kaliyela vanthu matta adakuren..che ..padikeren... //

உள்ளட்சியாரே.. நீங்களும் காலையில வந்தே படிங்க..

மு.கார்த்திகேயன் said...

//Aaha oru jallikattukku poi vantathu maathiri iruntathu ungal pathivu //

நன்றிங்க ஹனிஃப் ..

மு.கார்த்திகேயன் said...

//wow....nalla describe pannirkeenga thala...nerla paakaraa maadhiriye irundhudhu...

indha maadhiri scene'laam padathula dhaan paathurkom...

ahem... neenga any kaalai adakkings???//

காளையை அடக்குறதா.. நம்ம பக்கம் வர்றது தெரிஞ்சாலே ஒரே ஓட்டம் தான் கோபால்

மு.கார்த்திகேயன் said...

//இதை தடை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் கருத்து?
//

முழுதாக தடை செய்ய வேண்டும் SLN

மு.கார்த்திகேயன் said...

/பின்ன என்னைய மாதிரி ஒரு நல்ல வீரனுக்கு அழகு...எல்லாத்துக்கும் டாப்புல உக்காந்து சேஃப் ஆ ஜல்லிக்கட்டு பாக்கறது.... //

முதல்வர்னா அங்கே இருந்து தானே பாக்கணும் நாட்டாமை

மு.கார்த்திகேயன் said...

//நான் கூட நீங்க ராமராஜன் ஸ்டையிலுல காளைகளை அடக்கி இருப்பிங்கன்னு ஆசை ஆசையா வந்தா இப்படி என் ஆசையில
மண்ண அள்ளிபோட்டுட்டீங்களே தலைவா //

நானும் ராமராஜன் மாதிரி பாடலாம்னு தான் நினச்சேன் கோபி.. ஆனா அதுக்காக மாடு நம்மளை தனியா வந்து முட்டுச்சுனா, என்ன பண்றதுபா

மு.கார்த்திகேயன் said...

//உங்களின் ஒவ்வொரு அனுபவமும் கலக்கலா இருக்கு.... //

நன்றி கோபி