Friday, February 16, 2007

தர்மபுரி எரிப்பு சாம்பலில் தர்மம் வென்றது

தர்மபுரியில் மாணவிகள் எரிக்கப்பட்ட வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, நீதித் துறையின் காலர்களை உயரவைத்துள்ளது. எந்த கட்சியினர் என்றும் பார்க்காமல், கழுத்தை சுற்றிய அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் இந்த வழக்கில் சரியானதொரு தீர்ப்பு கிடைக்க வழிவகைகள் செய்த காவல்துறையினருக்கு கட்டாயம் நன்றி சொல்லவேண்டும். (அந்த காவல்துறையினருக்கு பதவி உயர்வு கொடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது)

இந்த வழக்கில் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த கொடுமைகள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இருபதுக்கு மேற்பட்ட சாட்சிகள் பயமுறுத்தலால் பல்டி அடித்ததும், குற்றம் சாட்டப்பட்ட எல்லோரும் தண்டனையில் இருந்து தப்பிக்க அப்போதைய அரசும் உடந்தையாய் இருந்தது என்பதும் நாடறிந்த விஷயம். இந்த சமயத்திலே, இறந்து போன மாணவிகளின் தந்தை ஒருவர் வழக்கை இடமாற்றம் செய்ய சொல்லி கொடுத்த மனு வழக்கையே திசை மாற்றி, இப்போது மூன்று பேருக்கு தூக்குத் தண்டனையும், 25 பேருக்கும் ஏழு ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது வரவேற்கப்படக்கூஒடியதே. இனிமேல், அரசியல் என்னும் பெயரால் வன்முறைகள் நடக்காது இதன் மூலம் என்று நம்புவோமாக.

ஒரு காலத்தில் எதற்கெடுத்தாலும் பஸ்ஸை எரிப்பது, கடைகளை உடைப்பது என்பது சாதாரண ஒரு நிகழ்சியாக இருந்தது. கடந்த மூன்று வருடங்களாக அப்படி ஒரு பெரிய சம்பவங்களும் நடக்காமல் தமிழகம் இருப்பது வரவேற்கத்தக்கதே. முதலீட்டாளர்களை இது மகிழ்வித்து தொழில் வாய்ப்புகள் பெருக இது வழிவகுக்கும், நல்ல விஷயமே.

ஆனால் இவ்வளவு பெரிய சம்பவத்தை பற்றி இந்த சம்பவங்களுக்கு மறைமுக காரணமாக இருந்த அதிமுக தலைவி ஜெயலலிதா (இவருக்கு கொடைக்கானல் பிளசன்ட் டே ஹோட்டல் விவகாரத்தில் தண்டனை கிடைத்ததற்காக நடந்த கோர சம்பவமே இது) இதைப் பற்றி ஒரு மன்னிப்புகூட கேட்காமல் (குறைந்த பட்சம் அந்த கட்சியின் தலைவி என்பதால் கூட) இருப்பது எந்த அளவுக்கு அவர் அரசியல் நடத்துகிறார் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இதையெல்லாம் விட, இந்த கோர சம்பவம் நடந்த போது, மேடைக்கு மேடை புயலென பொருமித் தள்ளிய திருவாளர் வைகோ இதைப் பற்றி இப்போது மூச்சுக் கூடவிட முடியாமல் மயான அமைதியில் இருப்பது அவர் அரசியலில் இரண்டறக் கலந்து நிறம் மாறிவிட்டர் என்பதையே தமிழக மக்களுக்கு எடுத்துக்காட்டுகிறது.

இந்த துயர சம்பவத்தில் உயிர் நீத்த மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்திரி ஆகியோரின் ஆன்மா, ஏழு ஆண்டுகளுக்கும் பின் இப்போதாவது சாந்தி அடைந்திருக்கும் என்று நம்புவோமாக.

25 பின்னூட்டங்கள்:

said...

ellam sethukitu vara namma naatula innum konjam uyiroda irukaradhu needhi thurai onnu dhaan...

Anonymous said...

இந்தக் கொடூரம் ஈழத்தில் நடந்திருந்தால் தீர்ப்பு ஒரு சில வாரங்களில்
உரிய முறையில் கிடைத்திருக்கும். ஏனையோருக்கு வழங்கப்பட்ட 7 ஆண்டுகள் போதாது.

Anonymous said...

death sentence is too much man.many people against death sentence in afsal and sadam issue.but,now all are you shameless.
i always against death sentence.
i won't see DMK,ADMK,HINDU,
MUSLIM,CHRISTIAN.
ALL ARE EQUAL.

Anonymous said...

sariyana theerpu.

said...

தல ரொம்ப சரியா சொன்னீங்க...அரசியலுக்கு அப்பால் தவறு யார் செஞ்சாலும் தண்டனை அனுபவிக்கனும்னு நெத்தில அடிச்ச மாதிரி தீர்ப்பு...எந்த ஆட்சியாக இருந்தாலும் இது மாதிரி காட்டுமிராண்டி தனம் நடக்காம அரசு பார்த்துக்கனும்...இத பார்த்தாவது நம்ம மக்கள் திருந்தனும்...

said...

எங்கப்பா கேப்டன்??

தர்மபுரின்னு படத்துல மட்டும் நடிச்சா போதுமா? இந்த மாதிரி இடத்துல எல்லாம் வந்து தட்டி கேட்க மாட்டாரா?

கூப்பிடும் கேப்டனை!!!!

said...

hmmmmmmmmm innum andha video en kanla odudhu :(

said...

A welcome judgement but I think a little early to claim victory. There's still some way to go. Only if the leaders such as JJ are taken to task we can truly claim 'Dharmam Vendrathu'.

I also think you are too optimistic about the non-violence in TN's political spectrum in recent years. We have to wait and see what happens after say Kalaignar dies or JJ gets arrested again.

It will be interesting to note that the current DMK govt. removed an act which held the political organisations liable for the violence and damages caused to public property during their processions / protests.

said...

7 varusham kazhichu ru vazhiya nyayamana theerpu koduthirukaanga ! Good !

said...

Very delayed justice..But atleast ithuvathu vanthuchey.. :-/

said...

நல்ல தீர்ப்பு.
அப்பீல்,மேல்முறையீடு அது இதுன்னு சொல்லி தப்பிக்காம இருந்தா நல்லது.

அம்புக்கு தூக்கு கிடைச்சாச்சு. எய்தவங்களுக்கு எப்போ?

said...

இவங்களுக்கு ஆயுள் தண்டனை இல்ல குடுத்துருக்கணும். மூணு பேர் குடும்பத்துக்கும் இது ஆயுள் தண்டனை இல்லியா. போனவங்க திரும்ப வரப்போரதில்லயெ.

கார்த்தி உங்க பதிவுக்கு ப்ளாக்கர் சொதப்பல்னால இவ்வளவு நாளா பின்னூட்டம் போட முடியல. உண்மையாவேதாங்க

said...

//ellam sethukitu vara namma naatula innum konjam uyiroda irukaradhu needhi thurai onnu dhaan...//

correct Mapla

said...

/இந்தக் கொடூரம் ஈழத்தில் நடந்திருந்தால் தீர்ப்பு ஒரு சில வாரங்களில்
உரிய முறையில் கிடைத்திருக்கும். ஏனையோருக்கு வழங்கப்பட்ட 7 ஆண்டுகள் போதாது. //

அனான், தண்டனை என்பது மற்றவருக்கு தண்டனை மட்டுமல்ல, மறுபடியும் அது மாதிரி செய்ய துணிவோருக்கு பாடமாக இருக்க வேண்டும்

said...

//death sentence is too much man.many people against death sentence in afsal and sadam issue.but,now all are you shameless.
i always against death sentence.
i won't see DMK,ADMK,HINDU,
MUSLIM,CHRISTIAN.
ALL ARE EQUAL.

//

ithuvum correct thaan anon, But sometimes we have to do something hard to stop this type of things!

said...

//எந்த ஆட்சியாக இருந்தாலும் இது மாதிரி காட்டுமிராண்டி தனம் நடக்காம அரசு பார்த்துக்கனும்...இத பார்த்தாவது நம்ம மக்கள் திருந்தனும்...
//

ஆமாங்க நாட்டாமை

said...

/தர்மபுரின்னு படத்துல மட்டும் நடிச்சா போதுமா? இந்த மாதிரி இடத்துல எல்லாம் வந்து தட்டி கேட்க மாட்டாரா?
//

அவர் மாநகராட்சி தேர்தல்ல பிசி, மை பிரண்ட்

said...

/hmmmmmmmmm innum andha video en kanla odudhu//

kodumaiyaana video athu porkodi..

said...

/It will be interesting to note that the current DMK govt. removed an act which held the political organisations liable for the violence and damages caused to public property during their processions / protests.
//

அரசில்யல்ல இதெல்லாம் சகஜம்பா.. வேறென்ன சொல்ல SLN

said...

//7 varusham kazhichu ru vazhiya nyayamana theerpu koduthirukaanga ! Good ! //

late thaan maamu.. Anaal better than never!

said...

/அரசியலை காரணமாக கொண்டு இம்மாதிரி அநியாயங்களில் ஈடுபடும் கட்சிகளுக்கு இத்தீர்ப்பு கண்டிப்பாக பயத்தை உண்டாக்கியிருக்கும்.
//

இனிமேல் இது போன்று செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் வேதா

said...

//இதை விட கேவலம் ஜெயலலிதாவிற்கு வேறு எதுவும் இல்லை.//

இதைப் பற்றி என்றாவது யாராவது கேள்வி கேட்டால் அவர் பதில் என்னவாக இருக்கும் என்று பார்ப்போம்!

said...

//Very delayed justice..But atleast ithuvathu vanthuchey.. //

amanga ponna

said...

/அம்புக்கு தூக்கு கிடைச்சாச்சு. எய்தவங்களுக்கு எப்போ? //

பல நேரங்கள் அம்பு மட்டும் தான் உடைபடும் அருண்..

said...

/கார்த்தி உங்க பதிவுக்கு ப்ளாக்கர் சொதப்பல்னால இவ்வளவு நாளா பின்னூட்டம் போட முடியல. உண்மையாவேதாங்க
//

உங்களை நம்புறேங்க சின்ன அம்மணி