Tuesday, February 20, 2007

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 17 [சூடான சினிமா பகுதி மீண்டும்]

நீண்ட இடைவெளிக்கு பிறகு, சிட்டுகுருவியின் சினி பிட்ஸ்..

வானத்தில் இருந்து பனி கொட்டோ கொட்டுன்னு கொட்டுவதால், பறவைகள் இறக்கைகள் சுமையாகி பறக்க சிரமப்படும் காலம்.. நம்ம சிட்டுக்குருவி அந்த சின்ன இறக்கையை வைத்துகொண்டு என்ன செய்யும்.. பாவம்..அது தான் இத்தனை நாட்களாய் வெளில தலை காட்டல.. கிட்ட தட்ட 62 நாட்களுக்கு பிறகு மீண்டும் றெக்கை கட்டி வருதைய்யா.. இதுக்கு இடையில் எத்தனையோ விஷயங்கள் கோடம்பாக்கத்தில் நடந்திருந்தாலும், சிட்டுக்குருவி இல்லாததால் நமக்கென்னவோ எல்லாம் சப்பை மேட்டராத் தான் இருந்தது.. இன்னைக்கு வீட்டுக்கு வர்றேன்னு தொலைபேசியிருந்தது.

போன தடவை நான் பிரசெண்ட் பண்ணின அழகான ஜெர்கினை போட்டுகிட்டு சர்ருன்னு வந்தது சிட்டுக்குருவி. அப்படியொரு சந்தோசம் அது முகத்துல..

என்ன சிட்டுக்குருவி.. இந்த நண்பனை பாத்தவுடன் இவ்வளவு சந்தோசமா உனக்கு.. எப்படிப்பா இருக்க.. அழகாய் சோபாவில் புகுந்து உட்கார்ந்த சிட்டுக்குருவியைப் பார்த்து கேட்டேன்.

[அய்யோ..இல்லைன்னு சொன்னா வாங்கி வச்ச பழத்தை எல்லாம் தரமாட்டான்] ஆமா.. ஆமா.. எவ்வளவு நாளாச்சு நண்பா உன்னைப் பாத்து.. அதைவிட ஒரு சந்தோசமான விஷயம். தலைவர் படம் சிவாஜி ஏப்ரல் 12க்கே ரிலீஸ் ஆகுதுல்ல.. எங்கே தள்ளி போயிடுமோன்னு படபடப்பா இருந்தது.. அன்னிக்கு தமிழ்நாட்டுல திருவிழா தானே.. அது தான் சந்தோசம்பா..

அட.. சூப்பர் மேட்டருப்பா.. உடனே நம்ம கொலம்பஸ் டிரெக்ஸல் தியேட்டர்ல டிக்கட்டுக்கு சொல்லிவைக்கணும்பா.. இந்த தடவை தலைவர் ரஜினிக்கு கொலம்பஸ்ல சூடம் காட்டவேண்டியது தான்.. சிட்டுக்குருவி சொன்ன மேட்டர்ல அதுகிட்ட இருந்த உற்சாகம் நமக்கும் தொத்திகிச்சு..

சரி..உன் தல நியூஸ் ஒண்ணும் சொல்லிடுறேன்..இல்லைனா உனக்கு சோறு உள்ளே இறங்காதே.. பில்லா ரீமேக் படத்தோட சூட்டிங் ஏப்ரல் 15-ல ஆரம்பிக்குது.. நயன்தாரா தான் பில்லி..

பில்லியா..என்னப்பா பனில வந்ததுல உனக்கு நாக்கு குழறுதோ..

நீ, சரியான டியூப் லைட் கார்த்தி..அஜித் பில்லான்னா, அவரோட ஜோடி நயன்தாரா பில்லி தானே.. [சொல்லிவிட்டு பெரிய ஜோக் அடிச்ச மாதிரி என்னை ஒரு லுக் விட்டு தன் ஜெர்கின் காலரை தூக்கி விட்டுக்கொண்டது சிட்டுக்குருவி.. ம்ம்.. எல்லாம் தலையெழுத்து கடவுளே]

அடக்குருவி.. என் காலை வாரலைனா உனக்கு தூக்கமே வராதே.. நாம ரெண்டு பேரும் எவ்வளவு க்ளோஸ் நண்பர்கள்..

அடப்போப்பா.. ஒண்ணுக்குள் ஒண்ணா இருந்தா சிம்பு-நயன்தாராவே பிரிஞ்சு போயிட்டாங்க.. அதுவும் இல்லாமே அவங்க ரெண்டு பேரும் டேட்டிங் போனப்ப எடுத்த போட்டவையெல்லாம், பிரிஞ்ச கோபத்துல நெட்ல போட்டுட்டதா நயன்தாரா, சிம்பு மேல பயங்கர கோபத்துல இருக்காங்க.. [அந்தப் படங்கள் வேண்டாமே என்று தான் இங்கே போடவில்லை]..

அட! அப்புறம் என்னப்பா ஆச்சு!

மறுபடியும் சேரணும்னு சிம்பு விட்ட தூதையெல்லாம் நயன் கண்டுக்கவே இல்லையாம் [நயன் மனசுல நாட்டமை இருக்காரோ.. ஆனா என்ன பண்ண இவ்வளவு நாளா நாட்டாமை வெயிட் பண்ணி இப்போ நமீதாவுக்கு மாறிட்டரே..]

அட! சிம்புவை விடுப்பா.. இந்த ஜெயம் ரவிக்கு எப்படித்தான் இப்படி எல்லாம் லக் அடிக்கிறதோ.. படத்துக்கு படம் புது ஹீரோயின் தான்.. இப்போ ஜீவா இயக்குற தாம் தூம் படத்துல அவருக்கு ஜோடி மும்பை இறக்குமதி கங்கானா ரானட் என்னும் நடிகையாம்.. இவர் ஹிந்தி கேங்க்ஸ்டர் படத்துல நடிப்புல(?) வெளுத்து வாங்கி இருக்காராம்..

உனக்கு தான் உன் ஆள் இருக்குல.. அப்புறம் என்ன ஜெயம் ரவியை பார்த்து பொறாமை, சிட்டுக்குருவி

அட..ஆமா கார்த்தி.. உலகத்துல இந்த விஷயத்துல பொறமை படுற உரிமையை நீ தான் மொத்த கான்ராக்ட் எடுத்திருக்கியே..

ஆஹா.. வேற மேட்டர இருந்தா சொல்லு நீ.. என்னை கலாய்க்கிறதுன்ன உனக்கு நேரம் போறதே தெரியாதே..

அட..ஆமா நேரம் ஆயிடுச்சு கார்த்தி.. வர்றேன்.. என்று அதுக்காக வாங்கி வைத்திருந்த கருப்பு திராச்சைகளை கொத்திக்கொண்டது..

கார்த்தி.. இந்த பச்சைகிளி முத்துச்சரத்துல கருப்பா அழகா சரத்துக்கு ஜோடியா வருதுல ஆன்ட்ரியா பொண்ணு.. அது யாருன்னு தெரியுதா..

இல்லையேப்பா சிட்டுக்குருவி..

வேற யாருமில்லை.. வேட்டையாடு விளையாடுல கற்க கற்கன்னு பாடுச்சே அந்தப் பொண்ணுதாம்பா.. முதல்ல சோபனா நடிக்கிறதா இருந்து, தபுக்கு மாறி கடைசில இந்த பொண்ணுக்கு அந்த வாய்ப்பு கிடச்சதாம்.. சொல்லிவிட்டு இறக்கைகளை படபடன்னு அடிச்சுகிட்டு கிளம்பியது சிட்டுக்குருவி

46 பின்னூட்டங்கள்:

said...

சிட்டுக்குருவி,
அடிக்கடி வந்து இந்த மாதிரி நியூஸ் கொடுத்துட்டு போகனும். புரியுதா???

said...

சரிங்க வெட்டி.. நீங்க சொல்லிட்டீங்கள்ல இனிமே மறக்காம அட்டென்டன்ஸ் போடுட்டுடுறேன்

said...

//அதைவிட ஒரு சந்தோசமான விஷயம். தலைவர் படம் சிவாஜி ஏப்ரல் 12க்கே ரிலீஸ் ஆகுதுல்ல.. எங்கே தள்ளி போயிடுமோன்னு படபடப்பா இருந்தது.. //

உலகக்கோப்பை கிரிக்கெட் காரணமா சிவாஜி மே மாசம் ரிலீசாகறதா எங்கேயோ படிச்ச ஞாபகம்.

குருவி சொன்னா சரியாதான் இருக்கும் :)

said...

இது கடைசியா வந்த தகவல் படி, மணிகண்டன்.. இதுல ஏதும் மாற்றம் இருக்காதுன்னு குருவி சொல்லுது... பார்ப்போம்

said...

kuruvi lateaa vandaalum latestaa thaan karthi vandurku...

aprom enna innaiku my friend innum varaliya? already 3,4 peru comment potturkada paatha tension aayiduvaangale :P

said...

//kuruvi lateaa vandaalum latestaa thaan karthi vandurku...//
தேங்கூ அருண்..

//aprom enna innaiku my friend innum varaliya? already 3,4 peru comment potturkada paatha tension aayiduvaangale//

இதுக்கு மை பிரண்டே பதில் சொல்வாங்கான்னு நினைக்கிறேன்

அவங்களே பிரிண்டர் வேலை செய்யலைன்னு கவலையா இருக்காங்க!

said...

padithen...rasithen :)

jo-va vida andrea super....PKMC padathula :)

said...

சிட்டுக் கூருவிய பிடிச்சு வச்சிக்கோங்க கார்த்தி.. அப்பத்தான் அடிக்கடி நியூஸ் போடலாம்.. ;)

said...

yappa, ippadi kisukisu padichu evloo naalu aachu!

sombu is a stupid who never knows how to value friendship/Love. summa padathula vajanam pesa thaan theriyum.
ellam intha nayan kuttiya sollanum!
sari, ozhinjadhu sani!nu ippavathu buthi vanthuche!
(udane syam application poda vendaam! katchi saarbaaga mugil ammavuku poorikattaigal parcel anupuvum with free home delivery from katchi nidhi)

c.m.haniff said...

Appada sittu news kaettu romba naal aachu, tnx sittu ;-)

said...

தலைவர் படம் ஏப்ரல் 12 கே வருதா.....அட சூப்பர் மச்சி.

Thanks

said...

வேற யாருமில்லை.. வேட்டையாடு விளையாடுல கற்க கற்கன்னு பாடுச்சே அந்தப் பொண்ணுதாம்பா.. முதல்ல சோபனா நடிக்கிறதா இருந்து, தபுக்கு மாறி கடைசில இந்த பொண்ணுக்கு அந்த வாய்ப்பு கிடச்சதாம்.. சொல்லிவிட்டு இறக்கைகளை படபடன்னு அடிச்சுகிட்டு கிளம்பியது சிட்டுக்குருவி//


ஷோபான்னா யாரு நம்ம தளபதி ஷோபனாவா????????

said...

சிட்டுக்குருவியின் வருகை ரொம்பவே யதார்த்தமா அமைந்துள்ளது, அடிக்கடி வந்து கொத்திட்டுப் போகச் சொல்லுங்க!

said...

wow.. interesting cine bits news.. indiaglitz site pogaradha vida inga news adhigam kedaikum pola iruku.. well done..

said...

//jo-va vida andrea super....//

மாப்ள, இப்படியெல்லாம் ரசிச்சு பாவனாவுக்கு துரோகம் பண்ணக்கூடாது

said...

/சிட்டுக் கூருவிய பிடிச்சு வச்சிக்கோங்க கார்த்தி.. அப்பத்தான் அடிக்கடி நியூஸ் போடலாம்.. //

சிட்டுக்குருவி இனிமே மறக்காம அட்டென்டன்ஸ் போடுறேன்னு சொல்லியிருக்கு மை பிரண்ட்

said...

/yappa, ippadi kisukisu padichu evloo naalu aachu!//

hehe..thanks ambi..

//sombu is a stupid who never knows how to value friendship/Love. summa padathula vajanam pesa thaan theriyum.
ellam intha nayan kuttiya sollanum!
sari, ozhinjadhu sani!nu ippavathu buthi vanthuche!//

பாவம் நயன் பொண்ணு, அம்பி! நாட்டாமையை ஒவர்லுக் பண்ணி நானே ஆதரவு கரம் நீட்டலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்!

//(udane syam application poda vendaam! katchi saarbaaga mugil ammavuku poorikattaigal parcel anupuvum with free home delivery from katchi nidhi) //

நமீதா ஜொள்ளுக்கே முகில் அம்மா ஸ்பெஷலா ஆர்டர் பண்ணிட்டாங்க அம்பி!

said...

/Appada sittu news kaettu romba naal aachu, tnx sittu //

chittukitta solliduren, haniff

said...

//தலைவர் படம் ஏப்ரல் 12 கே வருதா.....அட சூப்பர் மச்சி.

Thanks //

இப்பவே வெடிக்கலாமா வெடி, அமர்

said...

//ஷோபான்னா யாரு நம்ம தளபதி ஷோபனாவா???????? //

அதே அதே கார்த்திக்!

said...

/சிட்டுக்குருவியின் வருகை ரொம்பவே யதார்த்தமா அமைந்துள்ளது, அடிக்கடி வந்து கொத்திட்டுப் போகச் சொல்லுங்க!//

சரிங்க மேடம்! உங்களை வந்து கொத்திட்டு போகச் சொல்லுறேன் மேடம்!

said...

//wow.. interesting cine bits news.. indiaglitz site pogaradha vida inga news adhigam kedaikum pola iruku.. well done.. //

இந்த நம்பிக்கைக்கு நன்றி டெல்லி தமிழன்!

said...

உள்ளேன் அய்யா

said...

தல அப்போ பில்லா சூப்பர் ஹிட்டுனு சொல்லுங்க...உங்க தலயும் எங்க தலைவியும் நடிக்கறாங்களே :-)

said...

//ஆனா என்ன பண்ண இவ்வளவு நாளா நாட்டாமை வெயிட் பண்ணி இப்போ நமீதாவுக்கு மாறிட்டரே..//

ஏங்க நயன்னோட சின்னூண்டு இதயத்துல அனுகுண்டு போடுறீங்களே...நான் நமீதாவ பார்த்தது எல்லாம் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா :-)

said...

இந்த போஸ்ட் பாருங்க கன்யா பச்சைகிளி முத்துச்சரம் விமர்சனம் போட்டு இருக்காங்க...

http://thamizhoosai.blogspot.com/2007/02/blog-post_20.html

said...

//udane syam application poda vendaam! katchi saarbaaga mugil ammavuku poorikattaigal parcel anupuvum with free home delivery from katchi nidhi//

@அம்பி,

சாப்பிடறயோ இல்லயோ...எனக்கு ஆப்பு வெக்கறதுல கரெக்ட்டா இருப்பியே :-)

said...

soodaana bits thala...kuruvikku sittu kuruvi legyam thareengala??

ennadhu, sivaji apr 12th varudhaa...adraa sakkai. adraa sakkai. adraa sakkai

naan india la dhaan iruppaen appo. local la namba makkalooda thalaivar padam paarthu oru jenmam irukkum...GODHAA la erangida vaendiyadhu dhaan...super news thala

said...

yenna'nga, naaan potta comment kidaikalai'a? illa thapppa edhuvum eludhitenaa?

said...

/உள்ளேன் அய்யா//

Marked the Attendance, Gopi!

said...

/தல அப்போ பில்லா சூப்பர் ஹிட்டுனு சொல்லுங்க...உங்க தலயும் எங்க தலைவியும் நடிக்கறாங்களே ///

ஆமா நாட்டாமை! அதுல சந்தேகமே கிடையாது

said...

//ஏங்க நயன்னோட சின்னூண்டு இதயத்துல அனுகுண்டு போடுறீங்களே...நான் நமீதாவ பார்த்தது எல்லாம் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா //


நாட்டாமை, வீட்ல கிடச்ச அடி போதாதுன்னு நமீதாகிட்ட மிதி வேற கிடைக்க போகுது உங்களுக்கு

said...

//இந்த போஸ்ட் பாருங்க கன்யா பச்சைகிளி முத்துச்சரம் விமர்சனம் போட்டு இருக்காங்க...///

கட்டாயம் படிக்கிறேங்க நாட்டாமை

said...

//சாப்பிடறயோ இல்லயோ...எனக்கு ஆப்பு வெக்கறதுல கரெக்ட்டா இருப்பியே//


உண்மையை சொன்னா அம்பி மேல பாயுறீங்களே நாட்டாமை.. வீட்ல எலி வெளில புலியா :-)

said...

//ennadhu, sivaji apr 12th varudhaa...adraa sakkai. adraa sakkai. adraa sakkai//

Amanga maamu. Now its confirmed

Anonymous said...

porkodi vanden.

said...

chittu news ellam old Karthik. Newsai vida adhu ungala otradhu interestinga irukku :) adhaye niraya panna sollunga..

said...

@Arunkumar:

//aprom enna innaiku my friend innum varaliya? already 3,4 peru comment potturkada paatha tension aayiduvaangale :P //

அந்த சோகக் கதைய ஏன் கேட்குறீங்க அருண்.. இன்னைக்கு மொத்தம் 3 ஆப்பு அடிச்சிட்டாங்க.. :-(

1- பிண்டர் டமால் டுமீல்.. ஆயுசு முடிஞ்சிடுச்சு!
2- ப்ரிண்ட் பண்ண கடைக்கு போனா, அவன் என் பென் ட்ரைவில வைரஸை சேர்த்து அனுப்பிட்டான்.. என் PC, laptop.. ரெண்டுக்குமே இப்போ 100 degreeல கொதிக்குது..

PC format பண்ணிட்டுதான் இந்த கமேண்ட்ஸ் போட்டிருக்கேன்..
laptop இன்னும் format பண்ணல.. ஓசீல windows vista அடுத்த வாரம் தரேன்னு பில் கேட்ஸ் சொல்லியிருக்காரு! அந்த கப்பிய லபக்குன்னு பிடிங்கிட்டு வந்துதான் format பண்ணனும்.. :-(

said...

//yenna'nga, naaan potta comment kidaikalai'a? illa thapppa edhuvum eludhitenaa? //

varave illai Gops.. :-(

said...

/porkodi vanden. //

என்ன ஆச்சு இப்படி அனானியா வந்திருக்கீங்க

said...

//chittu news ellam old Karthik.//
Oh..

// Newsai vida adhu ungala otradhu interestinga irukku :) adhaye niraya panna sollunga//


ஆஹா.. நீங்களா அவங்க

said...

/இன்னைக்கு மொத்தம் 3 ஆப்பு அடிச்சிட்டாங்க.. //

சோகத்தை விடுங்க அது தான் 50 பின்னூட்டம் வாங்கிட்டீங்கள்ல மை பிரண்ட்

said...

ரொம்ப நாள் கழிச்சு குருவி வந்ததில் சந்தோஷம்!

நல்ல செய்தி சொன்ன குருவிக்கு ஒரு டம்ளர் மோர் கொடுங்கப்பா! (வேற என்ன நம்ம சிவாஜி.. பத்திசொன்னது தான்!)

said...

//
அட! சிம்புவை விடுப்பா.. இந்த ஜெயம் ரவிக்கு எப்படித்தான் இப்படி எல்லாம் லக் அடிக்கிறதோ.. படத்துக்கு படம் புது ஹீரோயின் தான்.. இப்போ ஜீவா இயக்குற தாம் தூம் படத்துல அவருக்கு ஜோடி மும்பை இறக்குமதி கங்கானா ரானட் என்னும் நடிகையாம்.. இவர் ஹிந்தி கேங்க்ஸ்டர் படத்துல நடிப்புல(?) வெளுத்து வாங்கி இருக்காராம்..
/

அப்படியா! நல்ல செய்தி.. நான் போய் பொன்ன பார்க்கின்றேன்!

said...

பொண்ணு சுமார் தான்! :(

said...

சிவாஜி படம் வெளிய வந்த முதல் நாள் தமிழ் நாடே திருவிழா தான் ட்ரீம்ஸ் கலக்கிடுவொம்