வசீகர குரலோன் விஜய் ஜேசுதாஸ்
கே.ஜே.ஜேசுதாஸின் பாடல்களில் இருக்கும், அந்த குரலில் இருக்கும், வசியத்தில் மயங்கி போகாதவரும் உண்டோ இவ்வுலகத்தில்.. அதுவும் அவரும் இளையராஜாவும் சேர்ந்த பிறகு வெளிவந்த திரைப்பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துக்கள். அழும் குழந்தைக்கு தாயின் நாக்கு சுழல வரும் தாலாட்டு மயக்கம் தந்து தூங்கச் செய்வதை போல, கே.ஜே.ஜேசுதாஸின் பாடல்கள் அழும் மனசுக்கு மயிலிறகு தடவல்கள். குவிக்கப்பட்ட சீட்டுக்கட்டில் பச்சைக்கிளி ஒன்றை மட்டுமே பொறுக்கிப் போடுவதை போல, அவர் பாடியதில் சிலவற்றை மட்டுமே பட்டியலிட்டு நான் அதிர்ஷ்டம் சொல்லும் பச்சைக்கிளியாக விரும்பவில்லை. இரவு நேரத்தில் எத்தனையோ முறை நிலவும் நானும் தனித்துக் கிடந்த காலங்களில் செவிகளில் புகுந்து மனசைத் தொட்டு, மெய் முழுவதும் பரவி, எனக்குள் இன்னொரு உயிரையும் துணையாக தந்திருக்கிறது அவரின் குரல். அவர் பாட்டை கேட்டு காட்டுக்குயிலெல்லாம் சில காலம் மரமேறி பாடுவதில்லை என்று காட்டுக்குள் இருந்து சோகமாய் வந்த தென்றல் என் காதுக்குள் சொன்னதுண்டு.
இப்படி பாடல்களின் மூலம், தன் குரலின் மூலம் நம் மனசை தொட்ட கே.ஜே.ஜேசுதாஸ் இப்போதெல்லாம் பாடாமல் இருப்பது, காற்று சிலகாலம் விடுமுறை எடுத்துச் சென்றதை போல, ஒரு வெற்றிடம் ஏற்பட்டுப் போனது இசையுலகில். ஆனால் 'ராம்' தந்தது இவரின் இன்னொரு பிம்பம். இவரின் குரலின் இளைய பிள்ளை. அதுவும் அடுத்த தலைமுறை இசையில் முளைத்த புதுக் கூட்டணியுடன்.. ஆம்.. யுவனின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் மகன் விஜய் ஜேசுதாஸ் பாடிய ஒவ்வொரு பாடலும் குயிலுக்கு பிறந்தது குயிலே தான் என்று உலகுக்கு சொல்லியது. அதுவும் முதல் பாடலே நிழலினை நிஜமும் பிரிந்திடுமா என்று எல்லோர் காதுகளிலும் புகுந்து மனசை நிறைத்து, முதல் பாடலிலே கேட்ட அவர்களின் புருவத்தை ஆச்சரியத்தால் பாதி நெற்றிவரை உயர்த்தியது.
விழுந்து கிடந்த ஒரு வெற்றிடத்தை இவரின் வருகை நிறைத்து போனது. அதுவும் இவர் யுவன் கூட இணைந்த எல்லாப் பாடலும் மகுடி நாதமாய் நம் மனதை ஆடவிட்டது. தாவணி போட்ட தீபாவளி என்று இவர் பாடியதை கேட்டு அந்த தீபாவளியே, தாவணி போட்ட தீபாவளியே சொக்கிப் போனது. ஜேசுதாஸுக்கு ராஜா ஒரு மேடை போட்டு கொடுத்ததை போல, விஜய்க்கு யுவன் ஒரு சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறார்.
தீபாவளி படத்தில், யுவனின் இசையில் இவர் காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்ததாக பாடியது, காய்ந்து கிடந்த கல் மனசையும் பிளந்து ஒரு ஆற்றை உண்டாக்கி விட்டது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சென்று யார் சொன்னது.. இதோ இப்போதெல்லாம் சக்கரம் போல, இந்த பாடலைத் தான் சுழல விடச் சொல்லி மனசு கேட்கிறது.
இப்படி ஒரு அருமையான, மயக்கும் பாடலை கேட்ட பின்பு, என் மாப்ள பரணி அந்த பாடல் வரிகளையே பதிவாய் போட்டிருந்தார். அதே மயக்கத்துடன் இப்போது நானும். தயவு செய்து யாராவது டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். விஜய் ஜேசுதாஸின் குரலின் போதை அங்கு கிடைக்கும் சரக்கை விட அதிகமாய் இருக்கிறது.
56 பின்னூட்டங்கள்:
இதெல்லாம் ஓவர் (மதுபான கடையை மூட சொன்னது)
மத்தபடி...விஜயை பற்றி சொன்னது மறுக்க முடியாத விடயமே :)
நான் முதலா?
//அவ்வப்போது என்னுடன்
சிறு சிறு
சண்டைகள் போடும் போது
என் சகோதரியானாய்//
மறைமுக விளையாடல் ரசிக்கத்தக்கது!
oops! copy panni paste pannathu.. sariya varala.. pona commentku naan quote panna ninaichathu ithu! maathi, ithukku munnala g3 ya commentiyathu vandhiduchu LOL
//அவர் பாடியதில் சிலவற்றை மட்டுமே பட்டியலிட்டு நான் அதிர்ஷ்டம் சொல்லும் பச்சைக்கிளியாக விரும்பவில்லை//
//அதே மயக்கத்துடன் இப்போது நானும். தயவு செய்து யாராவது டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். விஜய் ஜேசுதாஸின் குரலின் போதை அங்கு கிடைக்கும் சரக்கை விட அதிகமாய் இருக்கிறது./
அடடா! அருமையா சொல்றீங்க! சூப்பர்!
AAVP
unnmai..unmai..'Deepavali' padaththil kuda oru song..ketka ketka inimai.. KJ Sir-n paithiyam nan.. eppo neenda idai vellikku bin manathai mayakkiyathu vijay. yuvan kuda nalla padurar.'Deepavali' -l 'pogathe' padal. padal varikal koda arumai.
Nakkeeran (nan first..)
Hi
romba nalla yaravathu 'Deepavali' padab padalai elluthuvarkkal endru ethirparthu kathu irruthen. ella padal kalum arumai.romba nalaikku piraku arumaiyana isai.padal varikal. ennomo theriyalai entha padab padalkal ennai rombave irrthathu. padalkal parkka eppadi irrukumo endra kavalai than ippothu.
samepathil thirumanam seithu konda 'Vijay Jesudos' -kku valththukkal.
Nakkeeran
அட, பதிவு ஒரு பக்கம் இருக்கட்டும்....
ஏன் ஏன் ஏன் இப்பிடி ஒரு போட்டோ? என்ன மாதிரி சின்னப்பசங்க வந்துட்டு போற எடத்துல இப்பிடி பயமுறுத்துறீங்களே?
(பாட்ஷா ஸ்டைல்ல...)
திண்டுக்கல்ல நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க?
சொல்லுங்க...
சொல்லுங்க...
சொல்லுங்க...
:)
yaaroda padam idhu??? :O
innoru news enana vijay darshana nu oru ponna kalyanam panni irukaaru :)
அதெப்படி தலைவரே? திடீர்ன்னு இன்னைக்கு ராம் பாடல் கேட்கலாம்ன்னு என் வின்-அம்ப்பில் ப்லே பண்ணி கொண்டிருக்கும்போது நீங்களும் அதே பாடலை விமர்சித்திருக்கிறீர்கள்??
கார்த்திக்,
புரோப்பைல் போட்டோ பயங்கரம் :)
பாட்டு நல்லாத் தான் இருக்கு. ஆனால் புகழறதுதான் கொஞ்சம் ஓவரா இல்லை? ம்ம்ம்ம்ம், நம்ம பதிவை இப்படி யாராவது புகழறாங்களா பாருங்க! இத்தனைக்கும் நான் "தலைவி"ன்னு பட்டத்தைச் சுமக்க முடியாமச் சுமந்துட்டு இருக்கேன். :D
இங்கே இருந்தும் ச்யாம் வீடு போக முடியலை. ம்ம்ம்ம், மூடிட்டாரோ?
Maams...correct-a sonnega....Vijay Yesudass rocks in that song...and his voice is good in all those songs he has sung :)
Even in illayaraja's music, his song "Unnaku piditha padal" is an excellent melody...and he sings faster songs equally good....ex is dei andha thalam adida from pattiyal..
as u said, Yuvan is giving him enough chance to make him famous...wish he reachse heights soon :)
romba karikttu thala....vijay yesudas koral'la slight'ah K.J.Yesudas'oda saayal irukkum...slight dhaan...en na Y sr. oda koral'a adichukka aale illa.... romba deep'ah irundhaalum vaarthaigal romba theliva spashtama ucharippaar...ippo dhaan recent'ah Y sr. oda peti'ya mallu channel onnuthula pottaan...
IR-Y sr. kootani...wow..
அட என்னப்பா திரும்பவும் ஒற்றுமையா,. ம்ம் என் பல இரவுகள் கண் விழித்து தூங்கியிருக்கின்றன யேசுதாஸின் குரலில்..
பூவே செம்பூவே .... எனை மயக்கும் ,இன்னமும் மயங்கி ,எப்போதும் மயங்கி போகும் எனது விருப்ப பாடல்...
விஜய் யேசுதாஸ் , இப்போதுதான் கேட்க ஆரம்பித்துள்ளேன்...
romba too much thalaiva, tasmac ellam mooda solradhu - but jesudoss junior is really awesome!
//இதெல்லாம் ஓவர் (மதுபான கடையை மூட சொன்னது)
//
அதுவா.. கொஞ்சம் உயர்த்தி சொல்ல, அவரின் குரல் வளத்தை சொல்ல, இப்படி எல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறதே தூயா
//நான் முதலா?//
மூணே நிமிஷத்துல போயிடுச்சுங்க ட்ரீம்ஸ்
////அவ்வப்போது என்னுடன்
சிறு சிறு
சண்டைகள் போடும் போது
என் சகோதரியானாய்//
மறைமுக விளையாடல் ரசிக்கத்தக்கது! //
இது G3க்கு போக வேண்டிய பின்னூட்டமல்லவா, ட்ரீம்ஸ்..
நான் அனுப்பி வைத்து விடுகிறேன் ட்ரீம்ஸ்
/oops! copy panni paste pannathu.. sariya varala.. pona commentku naan quote panna ninaichathu ithu! maathi, ithukku munnala g3 ya commentiyathu vandhiduchu LOL//
G3kku chollitten Dreamz
//அடடா! அருமையா சொல்றீங்க! சூப்பர்! //
அவர் குரலின் போதையை சொல்ல நினைத்தேன் ட்ரீம்ஸ்..
/AAVP/
OK Arun
/unnmai..unmai..'Deepavali' padaththil kuda oru song..ketka ketka inimai.. KJ Sir-n paithiyam nan.. eppo neenda idai vellikku bin manathai mayakkiyathu vijay. yuvan kuda nalla padurar.'Deepavali' -l 'pogathe' padal. padal varikal koda arumai.///
ஆமாங்க நக்கீரன், வளரும் பாடகர்களில் தளரும் மனசை துள்ள விடுகிறார், விஜய், அவர் இனிய குரலிலே
Vijay Yesudas ku Jan 21st kalyanam ayiruchnga.Adhaiyum potrungo.
/padalkal parkka eppadi irrukumo endra kavalai than ippothu.
//
படத்தின் டைரக்டர் எழில்.. நன்றாக எடுத்திருப்பார் என்று நம்புவோம் நக்கீரன்
//ஏன் ஏன் ஏன் இப்பிடி ஒரு போட்டோ? என்ன மாதிரி சின்னப்பசங்க வந்துட்டு போற எடத்துல இப்பிடி பயமுறுத்துறீங்களே?//
திரைப் பட ஸ்டில் மாதிரி எடுக்கவேண்டும் என்று நினைத்து எடுத்தது. ஒரு டார்ச் லைட்டும், ஒரு மொபைல் கேமராஅவும் தான் இதற்கு உதவிய பொருட்கள்..
கொஞ்சம் திருஷ்டி கழியட்டுமே, அருண்
//yaaroda padam idhu??? //
ஹிஹிஹி.. என்னோடது தான் பொற்கொடி
/innoru news enana vijay darshana nu oru ponna kalyanam panni irukaaru /
Nalla update porkodi.. chittu kuruvi velaiyai nee pakkura maathiri irukku
//ஜேசுதாஸின் குரலை ரசிக்காதவரும் உண்டோ:) அதே போல் தான் விஜய் ஜேசுதாஸும் ஆனா இன்னும் கொஞ்சம் தமிழ் உச்சரிப்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து//
சரியாச் சொன்னீங்க வேதா.. விரைவில் இளையவர் கற்றுக்கொள்வார் என்று நம்புவோம்
ஆரம்பத்தில் இந்த பிரச்சினை ஜேசுதாஸுக்கும் இருந்தது.. திருக்கோயிலே என்பதை தெருக்கோயிலே என்று பாடியதாக சர்ச்சை எல்லாம் நடந்தது..
//ஐயோ தலைவரே உங்க வலைப்பக்கத்துல வலது ஓரத்துல யார் அது? எனக்கு பயமா இருக்கு:) முதல்ல படத்தை மாத்துங்க:)
//
பயப்படாதீங்க கொ.ப.செ.. அது நானே தான்
//அதெப்படி தலைவரே? திடீர்ன்னு இன்னைக்கு ராம் பாடல் கேட்கலாம்ன்னு என் வின்-அம்ப்பில் ப்லே பண்ணி கொண்டிருக்கும்போது நீங்களும் அதே பாடலை விமர்சித்திருக்கிறீர்கள்?? //
அது தான் டெலிபதிங்கிறது தோழியே
//கார்த்திக்,
புரோப்பைல் போட்டோ பயங்கரம்//
ஹிஹிஹி.. நன்றிங்க ராம்
//இத்தனைக்கும் நான் "தலைவி"ன்னு பட்டத்தைச் சுமக்க முடியாமச் சுமந்துட்டு இருக்கேன்//
இதுக்கு அடுத்த பதிவைப் பாருங்க மேடம்
/இங்கே இருந்தும் ச்யாம் வீடு போக முடியலை. ம்ம்ம்ம், மூடிட்டாரோ?
//
நாங்க எல்லாம் போறோமே தலைவியே
/Maams...correct-a sonnega....Vijay Yesudass rocks in that song...and his voice is good in all those songs he has sung //
ellam un pathivu intro koduththathu thaan
// he sings faster songs equally good....ex is dei andha thalam adida from pattiyal..
//
Very true Mapla
//as u said, Yuvan is giving him enough chance to make him famous...wish he reachse heights soon //
Already he is in lime light Mapla
//romba karikttu thala....vijay yesudas koral'la slight'ah K.J.Yesudas'oda saayal irukkum...slight dhaan...en na Y sr. oda koral'a adichukka aale illa.... romba deep'ah irundhaalum vaarthaigal romba theliva spashtama ucharippaar...ippo dhaan recent'ah Y sr. oda peti'ya mallu channel onnuthula pottaan...
//
KJY is always at top.. Excellent modulation and voice
//பூவே செம்பூவே .... எனை மயக்கும் ,இன்னமும் மயங்கி ,எப்போதும் மயங்கி போகும் எனது விருப்ப பாடல்... //
சொல்லத் துடிக்குது மனசு படப்பாடல் அது மணி.. ரம்மியமான பாடல் அது
/விஜய் யேசுதாஸ் , இப்போதுதான் கேட்க ஆரம்பித்துள்ளேன்... //
ஓ.. இப்போ தான் மயங்க ஆரம்பிச்சிருக்கன்னு சொல்லுப்பா, மணி
//romba too much thalaiva, tasmac ellam mooda solradhu - but jesudoss junior is really awesome//
oru chinna hype thaan ushaa
//Vijay Yesudas ku Jan 21st kalyanam ayiruchnga.Adhaiyum potrungo//
கட்டாயம் ஊருக்கு சொல்லலாம் SKM.. பல பேருக்கும் தெரிஞ்சு இருக்கு
இவரைப் பற்றி சமீபத்திய குமுதத்தில் வந்துள்ள செய்தி
http://www.kumudam.com/magazine/Kumudam/2007-02-07/pg4.php
உங்க பதிவு கருவிப்பட்டை சரியா தான் இருக்கான்னு பாருங்க.. + கொடுக்கமுடியல.
//இவரைப் பற்றி சமீபத்திய குமுதத்தில் வந்துள்ள செய்தி//
சுட்டிக்கு நன்றிங்க மணிகண்டன்
//உங்க பதிவு கருவிப்பட்டை சரியா தான் இருக்கான்னு பாருங்க.. + கொடுக்கமுடியல.
//
கட்டாயம் கவனிக்கிறேன் அரசி
////இவரைப் பற்றி சமீபத்திய குமுதத்தில் வந்துள்ள செய்தி//
சுட்டிக்கு நன்றிங்க மணிகண்டன்//
அப்படியே நம்ம பதிவு பக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்க
http://wcup2007.blogspot.com
"thaavani pooda theepavalli vanthathu en veeduku"( Sandaikoli),pul pesum poo pesum (Puthupedai),amma sonna aariraro (solla marantha kathai)ponra en fav paadalkalai Vijay than paadinavar.
Inoru visayam Vijay ipa irukira hero kal ellaraum vida cute :-) escapeeeeeeeeeeeeeeee.
தல அட்டெண்டன்ஸ் :-)
Hi Karthikeyan
En blog visit panninathukku nandri-nga...
Actually I already came to ur blog to c all "thalai" pathina posts...
But comments sonnadhu illa since i was very new to this bloggin tat time..Aana andha link yen friends-kku yellam fwd pannirukkaenga...
Hmmm...Vijay jesudas pathina unga indha pathivum super...Even me too like his voice...
Post a Comment