Wednesday, February 07, 2007

இதயம் கொண்ட அடையாளங்கள்

வெள்ளை தொப்பியும் கறுப்புக்கண்ணாடியும் எம்ஜியாருக்கு அடையாளம். தாடியும் கைத்தடியும் பெரியாரின் அடையாளம். நான்கு கோபுரத்தை மட்டுமே போட்டால் மதுரை என்பதற்கான அடையாளம். திருப்பி போட்ட சிவப்பு முக்கோணம் குடும்பக் கட்டுப்பாடுக்கு அடையாளம். இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் அடையாளம் ரொம்ப முக்கியம். ஆனால் அந்த அடையாளத்தை பெறுவது அவ்வளவு சுலபமல்ல. எங்காவது உதயசூரியன் என்றால் நினைவில் முந்திகொண்டு வருவது அரசியல் தான். எம்ஜியார் அடையாளப்படுத்திவிட்ட இரட்டை இலைதான் இன்னும் அதிமுக என்ற கட்சியை தாங்கிப்பிடிக்கிறது.

இதெல்லாம் தலைவர்களுக்கும் நாடறிந்த விஷயங்களுக்கும் உண்டான அடையாளங்கள். ஆனால் நம்மை சுற்றி வாழும், வாழ்ந்த எத்தனையோ பேரை, நம் நினைவுக்கு சடுதியில் கொண்டு வர ஏதோ ஒரு அடையாளங்கள் தேவைப்படுகின்றன. நயன்தாரா மாதிரி ஒரு பொண்ணு சேர்ந்திருக்காடா நம்ம முதல் வருஷத்துல என்று ஒரு பெண்ணை ஒருத்தன் அவன் நண்பர்களுக்குச் சொல்லிவிட்டால், அதன் பிறகு அவள் அந்த கூட்டத்தில் அப்படியே குறிப்பிடப்படுகிறாள். பத்து வருடம் கழித்து இவர்கள் சந்தித்துக்கொண்டால் கூட அந்த பேரே அவளை இவர்களுக்கு நினைவுப்படுத்தும்.

நேற்று முன்தினம் என் பள்ளி வயது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது தான் தெரிந்தது. என் பள்ளிவயது தோழர் தோழிகள் பல பெயரின் பேர்களைவிட அவர்களின் அடையாளப் பெயரே மனதில் கல்வெட்டு போல பதிந்துகிடக்கிறது என்று. என் வீட்டுப் பக்கத்தில் குடியிருந்த ஒருவனை சிறுவயதிலிருந்தே ஊளமூக்கா என்று கூப்பிட்டு இன்று வளர்ந்து பெரியவனாகி பார்க்கும் போதும் அதே பெயரே நிலைத்து கிடக்கிறது. அது எல்லோர் மனதிலும் ஆலமரமாய் வேரும் விழுதும் விட்டு தனது கிளைகளை பரப்பிக் கிடக்கிறது. நம்ம ஷ்யாமை எல்லோரும் நாட்டாமை என்று தான் அழைக்கிறார்கள். சில நாள் கழித்து அதுவே அவருக்கு நிலைத்துவிடும். பல நாட்கள் கழித்து, நம்ம ஷ்யாம் எப்படி இருக்கிறார் என்று யாராவது கேட்டால், ஷ்யாமா யாருப்பா அது என்று தான் கேட்கத் தூண்டும். அது தான் அவருக்கு அடையாளம். இவர் ஒரு பேண்ட் சட்டை போட்ட நவயுக நாட்டாமை. ஷ்யாமை, மேல் சட்டை போடாமல், நெற்றியிலும் உடம்பிலும் சந்தனம் பூசி, தலையில் குடுமியும் காதில் கடுக்கனும் வாயில் வெற்றிலையும், வெள்ளை வேட்டி கட்டியவராக, கிராமத்து அக்மார்க் நாட்டாமையாக நினைத்துப் பார்த்தால் நன்றாகத் தான் இருக்கிறது.

நான் படிக்கிற காலத்தில் இருந்த ஒரு பேராசிரியர், பாடம் நடத்தும் போதும் எதற்கெடுத்தாலும் வாட் வாட் என்று தான் சொல்வார். சில நேரம் அவர் வகுப்பு போரடிக்கும் போது, நோட்டில் கோடுகள் போட்டு அவர் எத்தனை வாட் சொல்கிறார் என்று கணக்கெடுப்பது உண்டு. பல முறை அவர் சதமெல்லாம் அடித்ததுண்டு. அவரை இன்றும் 'வாட்' ராமனாதன் என்று தான் அழைக்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு அடையாளம் என்றால் உடம்பில் ஏற்படும் அடையாளங்கள் அடுத்த வகை. கிரிக்கெட் காய்ச்சல் அப்போது பரவாத காலம். மட்டை எடுத்தால் சிலம்பை சுற்றுவதை மாதிரி தான் எனக்கு விளையாடத் தெரியும். பந்து என் கிட்ட வருகிறதோ இல்லையோ, மட்டையை சுற்றுவேன். ஒரு முறை என்னைவிட மூன்றடி தள்ளிப் போன பந்தை நான் அடிக்க நினைத்து,மட்டையை சுழற்றுகையில், என் நண்பனின் தாவங்கட்டையில் ஏற்படுத்திய காயம் அவனுக்கு இன்னும் என்னை ஞாபகப்படுத்தும் அடையாளம்.

ஒரு முறை கபடி விளையாடும் போது, வலது பக்க மேலுதட்டில், மூக்கிற்கு கீழே உண்டான காயம் இன்னும் எனக்கு அந்த நாளை ஞாபகப் படுத்தும் ஒரு அடையாளம். எதிரணி ஆளை நான் பிடிக்கையில் அவர் வாய்ப் பற்களின் ஒன்று பதிந்த தடம் தான் அது.

இப்படியாக, ஆயிரம் அடையாளங்கள் இருந்தாலும் மனசில் உண்டான அடையாளங்கள் தான் என்றும் மறக்கமுடியாதது. இறந்து போன நண்பன் கூட வண்டியில் ஒன்றாகப் போனதும், என் ஐயாவின் கைபிடித்து நடந்தவாறு அவரின் கதைகளை கேட்டதும், அதில் ஐநூறு கேள்விகள் கேட்டதையும் என்றும் மறக்க முடியாது. வகுப்பில் அமர்ந்து பாடம் கவனிக்கும் போது, மெல்ல என் பக்கம் திரும்பி, ஒரு பக்கம் தலை சாய்த்து, பட படவென்று பட்டாம்பூச்சி மாதிரி இமைகள் அடித்து 'என் முத்தாம்' என்று உதடு சுழித்து அவள் சொன்னதில், என் இதயம் தாறுமாறாய் துடித்து விலா எலும்பில் மோதிக்கொண்ட அடையாளமும் அதிலொன்று.

[நாளையிலிருந்து ஒரு வாரத்திற்கு எல்லாப் பதிவுகளும் காதலர் தின ஸ்பெஷல்.. கதை, காதல், சம்பவங்கள் என்று காதலர் தினத்தை பூச்செண்டு கொடுத்து வரவேற்க தயாராகுங்கள்..]

ஒவ்வொருக்கு ஆணிற்கு பின்னாலும், அவனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண்ணிருக்கிறாள் என்று கேள்விப்பட்டிருக்கேன்.. ஆனா இப்போ தான் நேர்ல இப்போ தான் பாக்குறேன்.. கிட்டு மாமாவின் இந்த வெற்றிக்கு மாமியும் ஒரு காரணம். மாமிக்கு ஒரு ரஜினி சல்யூட்.. "வண்டி உருண்டோட அச்சாணி தேவை.. என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை" என்னும் பாடலக்கேற்ப ஓருயிராய் வாழும் கிட்டு மாமா மாமி தம்பதிக்கு வாழ்த்துக்கள் (மாமி.. அந்த ஸ்ட்ராங்க டீ நமக்கும் ஒரு கப்)

52 பின்னூட்டங்கள்:

said...

அடையாளம்னா.. (nickname) பட்டப்பெயரையும் சொல்றீங்களா? எனக்கு சட்டுன்னு நினைவுக்கு வர்ற ஒரு பட்டப்பெயர்: பப்படம் :-) தெரிஞ்சவர் ஒருத்தர், அன்னதானத்தின் போது பந்தியில் பப்படம் பப்படம்னு அப்பளம் பரிமாறிட்டே வருவார், பெரும்பாலும் அப்பளம் தான் பரிமாறுவார். இன்னிக்கும் அவரைப் பப்படம்னு சொன்னா தான் எங்க வீட்டுல எல்லாருக்கும் உடனே ஞாபகம் வரும் :-)

//[நாளையிலிருந்து ஒரு வாரத்திற்கு எல்லாப் பதிவுகளும் காதலர் தின ஸ்பெஷல்.. கதை, காதல், சம்பவங்கள் என்று காதலர் தினத்தை பூச்செண்டு கொடுத்து வரவேற்க தயாராகுங்கள்..]//

யூ டூ கார்த்தி? :-)

said...

Aaha.. asathal post.. nijamaavae neraya peroda unmaiyaana pera vida pet name dhaan namakku takkunnu nyaabagathukku varudhu.. Udharanama namma blog ulaga nambargalae sollalaam.. paadhi peroda original peru therinjaalum adha vida naama blogla endha maadiri koopidaromo adhu dhaan avangala mathi mathavanga kitta sollum bodhum takkunnu varudhu :-)

Adhu seri.. lastla oru ponna pathi sonneengalae.. adhu yaarunu mattum sollama vittuteengalae ;-)

Kaadhalar dhinam spl-a asathunga :-)

said...

அந்தக் காலத்துலே வெறும் கறுப்புக்கண்ணாடின்னா 'தமிழ்வாணன்'தான்.

said...

நல்ல மலரும் நினைவுகள் அரசி.. பட்டப்பெயர் மட்டுமல்ல.. ஒருவரை நினைவுகொள்ள இருக்கும் எல்லாமே அடையாளங்கள் தான்..

said...

//Adhu seri.. lastla oru ponna pathi sonneengalae.. adhu yaarunu mattum sollama vittuteengalae //

அந்த ரகசியங்கள் எல்லாம் காதலர் தின ஸ்பெசல் பதிவுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் G3...

said...

/அந்தக் காலத்துலே வெறும் கறுப்புக்கண்ணாடின்னா 'தமிழ்வாணன்'தான். //

துளசியம்மா, நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் இந்த கருப்பிக் கண்ணாடி ரகசியங்களை

said...

நாளைக்கு படிச்சிட்டு கமெண்டறேன் தல :)

said...

Thanks for visiting my blog karthi.

Every footprint we have known or crossed in our lives teach us what is good/better and a full life. Either as a child or as an adult we all depend on each other and that itself is a footprint of our dreams, realities and involvement.

As a child we value what our grandparents taught and we hold on till we miss him/her.

Calling names is just fantastic. Right from school to college and workplace it goes on everywhere. Isn't that so easy to describe quick rather with their real names.

Peoples personality, styles everything vary on how we call thm.

said...

//ஷ்யாமை, மேல் சட்டை போடாமல், நெற்றியிலும் உடம்பிலும் சந்தனம் பூசி, தலையில் குடுமியும் காதில் கடுக்கனும் வாயில் வெற்றிலையும், வெள்ளை வேட்டி கட்டியவராக, கிராமத்து அக்மார்க் நாட்டாமையாக நினைத்துப் பார்த்தால் நன்றாகத் தான் இருக்கிறது//

ROTFL...தலீவரே ஆச பட்டுட்டீங்க இல்ல...ஊருக்கு போகும் போது பண்ணிட்டா போச்சு :-)

said...

//நான் படிக்கிற காலத்தில் இருந்த ஒரு பேராசிரியர், பாடம் நடத்தும் போதும் எதற்கெடுத்தாலும் வாட் வாட் என்று தான் சொல்வார்//

எங்களுக்கு ஒரு மாஸ்டர் இருந்தார்...அவர் எல்லோரயும் மட்டி னு கூப்பிடுவார்...கடைசில அவரு பேரே மட்டி மாஸ்டர் ஆயிடுச்சு...:-)

said...

மொத்தத்துல இந்த போஸ்ட் நல்ல ஒரு ஆட்டோகிராப்..எனக்கு என்னோட ஸ்கூல் பிரண்ட்ஸ் பேரு எல்லாம் நியாபகம் வந்துச்சு...சில இங்க :-)

வளையல்,சுள்ளான்,ராசுக்குட்டி,பக்கோடா,பல்லி,பல்லவராயன் :-)

said...

nan mudhala vandhu iruppen enna panradhu adupa vittutu comment potta buvaaku enna panradu :(

said...

rotfl :) enga mam oruthar right right nu sollite iruppanga. nangalum idha ukkandhu kanakku eduthurkom! apram avangle thiruthikittaanga naanga panna alambal la!

valentines day spl nu solli indha aatam kudadhu analum :) anyway, enjoy last bachelor valentine! adutha varusham inneram aal irukkumla ;)

said...

காதல் பதிவை படிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன். ;-)

said...

காதல் பதிவை படிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன். ;-)

said...

பழைய நினைவுகளை கிளப்பி விட்டுட்டீங்க:) நண்பர்களை சந்திக்கும்போதெல்லாம் இப்பவும் நாம வச்ச பட்டப்பெயர் தான் முதல்ல நியாபகம் வரும்.

said...

நாட்டமையை அப்டியே சைட் கேப்பு போட்டு தாக்கிட்டிங்க:) ஆனாலும் அந்த கெட் அப்புல நினைச்சு பார்த்தா காமெடியா தானிருக்கு:)

c.m.haniff said...

Ungal pathivu padithu enakum sila nicknames nyabagam vantathu- kayiru, parotta ....;)

said...

/நாளைக்கு படிச்சிட்டு கமெண்டறேன் தல /

வருகையை குறிச்சாச்சு அருண்

said...

//Peoples personality, styles everything vary on how we call thm. //

கரெக்டா சொன்னீங்க பிரியா.. அடையாளங்கள் ஒவ்வொரு ஆளுக்கும் மாறுபடுகிறது, ப்ரியா

said...

//ROTFL...தலீவரே ஆச பட்டுட்டீங்க இல்ல...ஊருக்கு போகும் போது பண்ணிட்டா போச்சு //

அந்த கண்கொள்ளக் காட்சியை பாக்க ஊரே கியூகட்டி நிக்கும்.. நமக்குமட்டும் கொஞ்சம் பிளாக்ல அனுமதி தாங்க நாட்டாமை..

said...

//எங்களுக்கு ஒரு மாஸ்டர் இருந்தார்...அவர் எல்லோரயும் மட்டி னு கூப்பிடுவார்...கடைசில அவரு பேரே மட்டி மாஸ்டர் ஆயிடுச்சு//

வாத்தியாருக்கு வைக்கின்ற பெயர்கள் தான் அலாதியானது நாட்டாமை

said...

//மொத்தத்துல இந்த போஸ்ட் நல்ல ஒரு ஆட்டோகிராப்..எனக்கு என்னோட ஸ்கூல் பிரண்ட்ஸ் பேரு எல்லாம் நியாபகம் வந்துச்சு...சில இங்க :-)

வளையல்,சுள்ளான்,ராசுக்குட்டி,பக்கோடா,பல்லி,பல்லவராயன் :-)

//

எல்லாம் ரவுசான பேரா இருக்கு நாட்டாமை.. நல்ல அனுபவிச்சு இருக்கீங்க பள்ளி வாழ்க்கையைனு நினைக்கிறேன்

said...

//ஒரு பக்கம் தலை சாய்த்து, பட படவென்று பட்டாம்பூச்சி மாதிரி இமைகள் அடித்து 'என் முத்தாம்' என்று உதடு சுழித்து அவள் சொன்னதில், என் இதயம் தாறுமாறாய் துடித்து விலா எலும்பில் மோதிக்கொண்ட அடையாளமும் அதிலொன்று//...chancae illa Maams....adhutha varathu ippave trailer-a??

said...

/nan mudhala vandhu iruppen enna panradhu adupa vittutu comment potta buvaaku enna panradu //

சரி தான் ஏற்கனவே பாயின்டர்ஸை மூடி வச்சாச்சு.. புவாவும் இல்லைனா ரங்கமணி பாவா டென்ஷன் ஆகிடுவாருல கொடி..

said...

Aaga indha varusham rendu peru aayiduveenga...edha irundhaalum munnadiye sollidunga Maams :)

said...

//enjoy last bachelor valentine! adutha varusham inneram aal irukkumla //

எப்படி அமையுதுன்னு பார்ப்போம் பொற்கொடி.. இல்லை அடுத்த வருஷமும் தனிகட்டை தானா?

said...

//காதல் பதிவை படிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன்//

எழுத நான் படு ஆர்வமா இருக்கேன், மை பிரண்ட்

said...

//நண்பர்களை சந்திக்கும்போதெல்லாம் இப்பவும் நாம வச்ச பட்டப்பெயர் தான் முதல்ல நியாபகம் வரும்/

அந்த பெயர கேட்டு அப்போ சண்டை போட்டவங்க எல்லாம் இப்போ சந்தோசப் படுவாங்க, வேதா

said...

//அந்த கெட் அப்புல நினைச்சு பார்த்தா காமெடியா தானிருக்கு//

எழுதுறப்போ பயங்கரமா சிரிச்சுட்டேன் வேதா

said...

/Ungal pathivu padithu enakum sila nicknames nyabagam vantathu- kayiru, parotta //

அப்படிப் போடுங்க ஹனிஃப்.. எல்லோரும் ஒரு தடவை பின்னால போயிட்டு வந்திட்டீங்க போல

said...

nalla post..

// நம்ம ஷ்யாமை எல்லோரும் நாட்டாமை என்று தான் அழைக்கிறார்கள்//
lol...
syam brother, neenga ivanga katchi'a? illa unga katchi verai'a?

enga english professor'um ippadi thaana.., ok fine'ngra word'a oraai'ram thaba kooruvaaaru...
one hr class'la avarutu average 100times a thaadhum...

//நாளையிலிருந்து ஒரு வாரத்திற்கு எல்லாப் பதிவுகளும் காதலர் தின ஸ்பெஷல்.. கதை, காதல், சம்பவங்கள் என்று காதலர் தினத்தை பூச்செண்டு கொடுத்து வரவேற்க தயாராகுங்கள்..]//
neeenga vera katchi naaalum, naan thayaar aaagiten...

vazhga engal katchi, valarga engal kolgaigal.....


ps:- first oru comment eludhinen., bt adhu save aanucha illai'anu theriala....so, please rendu edhaichum onnaa publish pannidunga....
cheers.

ambi said...

ROTFL on syam getup.

kalakkal post

said...

THALA - FANTASTIC POST. enna solla...2 pagedown buttonil adangiya indha varigaL en vaazvin nyaabagangaLaik kindi vittana. ovvoru nyaabangagalaiyum
migavum rasithuch cholli irukkireergal.
Life is always about the PAST. enakku naanae sollikollum varigal idhu :-)

//என் பள்ளிவயது தோழர் தோழிகள் பல பெயரின் பேர்களைவிட அவர்களின் அடையாளப் பெயரே மனதில் கல்வெட்டு போல பதிந்துகிடக்கிறது என்ற//

very very true. sonna nimidaththil yosiththup paarthaen..sila paer ennanae therila..

//'வாட்' ராமனாதன் //

haaaa semma paeru.. this is a typical naming :-)

Cricket mattai nyaabagangal - Arumai. I had a similar experience wherein i hit a straight shot onto the bowlers(my friend) and his eyes became like a ball :-). Nadungittaen...Appuram hospitol poi...aah semma nyaabagam adhu

//உதடு சுழித்து அவள் சொன்னதில், என் இதயம் தாறுமாறாய் துடித்து விலா எலும்பில் மோதிக்கொண்ட அடையாளமும் அதிலொன்று
//

idhellam eppadi thala marakka mudiyum :-)

said...

nadakkum nadakkum yen mu.kaa virakthi? :)

said...

கார்த்திக்,

அருமையான பதிவுங்க..... பழைய ஞாபகத்தையெல்லாம் கிளறிவிட்டிங்க.....

எனக்கு கூட கைப்பு ஒரு தடவை கூப்பிட ரைமிங்கா இருக்குன்னு ராயல் ராம்'னு சொன்னாரு.... இப்போ அதுவே நிலைச்சு போச்சு :))


//[நாளையிலிருந்து ஒரு வாரத்திற்கு எல்லாப் பதிவுகளும் காதலர் தின ஸ்பெஷல்.. கதை, காதல், சம்பவங்கள் என்று காதலர் தினத்தை பூச்செண்டு கொடுத்து வரவேற்க தயாராகுங்கள்..]//

ஆஹா சங்கத்திலே ஒரு அ.வா மிஸ் பண்ணிட்டோமோ???

said...

//நாளையிலிருந்து ஒரு வாரத்திற்கு எல்லாப் பதிவுகளும் காதலர் தின ஸ்பெஷல்.. கதை, காதல், சம்பவங்கள் என்று காதலர் தினத்தை பூச்செண்டு கொடுத்து வரவேற்க தயாராகுங்கள்//

கலக்குங்க..எதாவது காதல்வலையில விழுந்துட்டிங்களா??

said...

படித்ததைல் பிடித்தது
//வகுப்பில் அமர்ந்து பாடம் கவனிக்கும் போது, மெல்ல என் பக்கம் திரும்பி, ஒரு பக்கம் தலை சாய்த்து, பட படவென்று பட்டாம்பூச்சி மாதிரி இமைகள் அடித்து 'என் முத்தாம்' என்று உதடு சுழித்து அவள் சொன்னதில், என் இதயம் தாறுமாறாய் துடித்து விலா எலும்பில் மோதிக்கொண்ட அடையாளமும் அதிலொன்று.
//

LOL!

said...

நீங்கசொல்றது ரொம்ப சரி.எங்க classla 4 கார்த்திக்!(உன்க பேரே). எல்லாருக்கும் அட்டை பெயர்.

அதை சொன்னால் ஒழிய அவர்களிலொருவன் phone செய்தால் யாரென்று தெரியாது!

said...

//நாளையிலிருந்து ஒரு வாரத்திற்கு எல்லாப் பதிவுகளும் காதலர் தின ஸ்பெஷல்.. கதை, காதல், சம்பவங்கள் என்று காதலர் தினத்தை பூச்செண்டு கொடுத்து வரவேற்க தயாராகுங்கள்..]////

that is thespirit karthik! naan ready!

said...

அழகாna சிந்தனை.. நல்ல வளமான வரிகள்.. நல்ல post!

said...

/chancae illa Maams....adhutha varathu ippave trailer-a?? //

இதோ இன்றைய பதிவோடு தொடங்கியாச்சு மாப்ள..

said...

/Aaga indha varusham rendu peru aayiduveenga...edha irundhaalum munnadiye sollidunga Maams //

மாப்ள.. என்னப்பா உன்கிட்ட நம்ம நண்பர்களிடம் சொல்லாமலா

said...

/neeenga vera katchi naaalum, naan thayaar aaagiten...
//

கோப்ஸ், இதை படிக்க எல்லோரும் காதல் கட்சியா இருந்தாலே போதும்

said...

/ROTFL on syam getup.

kalakkal post//

வாப்பா அம்பி.. நன்றி அம்பி.. எப்டி போகுது போனில் வாழ்க்கை

said...

//idhellam eppadi thala marakka mudiyum //

எப்படி மறக்க முடியுமா.. யாரந்த பெண் கிட்டு.. மாமிக்கு தெரியுமா இந்தக் கதையெல்லாம்

said...

//nadakkum nadakkum yen mu.kaa virakthi?//

கொடி, விரக்தி எல்லாம் இல்லப்பா

said...

//எனக்கு கூட கைப்பு ஒரு தடவை கூப்பிட ரைமிங்கா இருக்குன்னு ராயல் ராம்'னு சொன்னாரு.... //

அட.. பேர் நல்லா இருக்கே ரா.ரா

said...

/எதாவது காதல்வலையில விழுந்துட்டிங்களா?? //

அட.. அதெல்லாம் இல்ல மணி.. எல்லாம் சுற்றி நடந்தது தான்

said...

/அதை சொன்னால் ஒழிய அவர்களிலொருவன் phone செய்தால் யாரென்று தெரியாது//

ட்ரீம்ஸ், நான் நாலாவது படிக்கும் போது இதே கதை தான்.. என்னோடு மொத்தம் நாலு கார்த்திகள் வகுப்பில்..

அட..எப்படி இந்த ஒற்றுமை.. எந்த ஊர் நீங்கள் ட்ரீம்ஸ்..

said...

/that is thespirit karthik! naan ready!
//

முதல் பதிவைப் போட்டாச்சு ட்ரீம்ஸ், இதுல

said...

/அழகாna சிந்தனை.. நல்ல வளமான வரிகள்.. நல்ல post! //

உற்சாக வார்த்தைகளுக்கு நன்றி ட்ரீம்ஸ்