காதல் உளறல்கள் - காதலர் தின ஸ்பெஷல் 2
தையல் இயந்திரமாய் அவளுக்கான கனவுகளை என் இதயம் நெய்கிறது... தண்டவாளம் அருகே நடந்து சென்றாலும் என் இதயத்தின் ஓசை தான் ஊரையே எழுப்புகிறது... அது அவளை வரவேற்க வெடிக்கப்படுகிற இதயத்தின் வாணவேடிக்கை என்று காதுகளை திறந்து வைக்கிறேன்... நான் சொல்வது உண்மை.. உண்மையை தவிர வேறொன்றும் இல்லை என்று நான் வளர்த்த காதலின் தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன்.. அவளை முதன் முதலாக பார்த்தவுடன் என் இதயமும் ஈரலும் இடம் மாறி, ஈரல் இப்போது ரத்தத்தை சுத்திகரிக்கப் பழகி விட்டது.
அவள் நடக்கும் பாதையில் எல்லாம் அனைவரின் பார்வைகளும் அவள் பின்னே ஊர்வலம் போகின்றன. அந்த ஊர்வலத்தில் சிக்கிய குழந்தையாய் என் பார்வை மிதிபட்டு போகிறது. கருப்பு விழுதென தலையிலிருந்து கீழிறங்கும் அவள் கூந்தல் பிடித்து, மெல்ல மேலேறி, அவள் செவிகளில் சொல்லிவரத் துடிக்கிறது மிதிபட்ட எனது பார்வைகள், நான் அவளை காதலிக்கிறேன் என..
ஊரையே எழுப்பிய எனது இதயத்தின் ஓசை அவளையும் திரும்பி பார்க்க வைத்தது. நான் நினைத்துகொண்டேன், சூரியகாந்தி இப்போது தான் பரிதியின் பக்கம் பார்வையிட ஆரம்பிக்கிறது என்று. அவள் என்னை தேடித் தேடி பார்வை துழாவல்களை துவங்கும் போது, நத்தை தன் கூட்டுக்குள் முடங்குவது போல, நான் என்னை மறைத்து கொள்கிறேன். அவள் பார்க்காதவாறு நான் அவளை பார்த்து, அவள் மனசுக்குள் மெல்ல என்னை பற்றிய நினைவுச் செடியை ஊன்றி வைக்கிறேன். அது இப்போது பூக்க ஆரம்பித்து ஊருக்கே சொல்லிவிட்டது அது வெளிவிடும் வாசத்தில், அவள் காதல் செடியை சுமக்கிறாள் என்று.
ஒரு நாள், மழை.. மழையில் நனையவே விருப்பம் கொண்ட நான், குடை இருந்தும் நனைந்து வந்தேன். நான் நனைவதை பார்த்து, அச்சத்தில் மழையே என்னைவிட்டு சற்று தள்ளியே பொழிந்தது. தூரத்தில், தெருவிளக்கின் வெளிச்சங்கள் நிலவுக்கு ஓளி தர, குடை பிடித்து அவள் வந்தாள். நானும் அவளும் ஒரு புள்ளியில் சேர்ந்தோம். குடையில்லாமல் நான் வருவதை பார்த்து, என்னை குடைந்து விடும் வகையில் பார்த்தாள். குடைக்குள் வருமாறு அவள் என்னை விழியால் வரவேற்க, குடைபட்ட நான் குடைக்குள் ஒதுங்கினேன். கரைக்க மட்டுமே பழகிய மழையின் கைகளுக்கு ஒரு தாஜ்மஹாலை கட்டவும் தெரிந்திருக்கிறது. பூமியை தைத்து மட்டுமே பெய்து வந்த மழை ஊசிக்கு இரு இதயத்தை ஒட்டவும் தெரிந்திருக்கிறது.
அந்த ஈரமான மழை நாளில் தான், எங்களுக்குள் காதல் தீ பற்றிகொண்டது. விஞ்ஞானமே வியந்து போகும் அளவுக்கு செய்கூலி சேதாரம் இல்லாமல் எங்கள் இதயங்கள் இடம் மாறின. இந்த ஆச்சர்ய நிகழ்ச்சிக்கு அவள் பிடித்து வந்த குடையே கூடாரம், வான்மழையே ஆதாரம். அங்கே எங்கள் பார்வைகள் சந்திந்து கொண்டதில் பிறந்த மின்சாரக் கீற்றில், தரை விழுந்ததோ மின்னல், என ஊர் போர்வைக்குள் புகுந்துகொண்டது. வானம் கிழிபட்டு பொத்துக்கொண்டது.
அந்த நேரம், நெருங்கி அவளைப் பார்க்கும் போது தான் எனக்குள் கருவுற்றது ஒரு பயம். மீனிற்கு தண்ணீர் என்றால் கொள்ளைப் பிரியம். இந்த மழை நீரை நம்பி எங்கே அவள் கயல்விழிகள் வழுக்கி விழுமோ, நீந்தித் திரிய என்று. அப்புறம் அவள் விழித் தூண்டிலில் என்னைப் பிடித்து, ஊஞ்சலென ஆடவிட்ட போது தான் எனக்கு புரிந்தது. அடடா! இது சிறை படும் மீனல்ல, சிறைபடுத்தும் மீனென்று.
தேவதை அனுப்பிய பிள்ளையாருக்கு தேங்காய்கள் உடைத்தேன். சிதறிய தேங்காய்கள் பார்க்கும் போதெல்லாம், அவள் சிரிக்கும் போது சிதறும் என் இதயம் நினைவுக்கு வருகிறது. அதில் தெரிகிறது அவளது உதட்டின் தடங்கள், சிதறியதை தைத்துவிட்டு போன அடையாளங்கள்.
நிலைக்கண்ணாடி முன் நிலைகொள்ளாமல் ஆயிரம் முறை நான் தலை வாரிக்கொண்டதில், என் தலையும் சீப்பும் இப்போது காதலிக்கின்றன. கழற்றி கழற்றி மாற்றி மாற்றி ஆடைகள் அணிந்து கொண்டதில் என் தேகமும் உடைகளும் காதலிக்கின்றன. எனக்குள் ஊற்றெடுத்த காதல் மெல்ல காற்றில் பரவி எல்லோருக்கும் அதை ஊசியேற்றுகிறது. இப்போது என் தோட்டத்து முருங்கைப் பூவும் முல்லை பூவும் காதலிக்க ஆரம்பித்ததாக, அவள் தலையில் குடியேறிய ரோஜாப் பூ சொல்லிவிட்டு சென்றது..
மது அருந்தினால் உளறுவார்கள் என்று சொல்லக் கேள்வி. அட! அவள் உதட்டுப் பழங்களுக்கு அவ்வளவு சக்தியா என்ன! நேற்று வரை ஒழுங்காய் எழுதி வந்த நான் இப்போது என்ன எழுதுவது என்று திணறுகிறேன். வெறும் காகிதத்தை கையில் வைத்துக்கொண்டு கவிதை எழுதிவிட்டதாய் ஒரு பதிவையும் போடுகிறேன்.
சரி! மறந்து விடுங்கள் இந்த பதிவை! தூரமாய் தெரியும் இடத்திற்கு வாருங்கள், என் இதயத்தை கண்காட்சிக்கு வைத்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் முகவரியை பதித்துவிட்டுப் போங்கள். நாளை அந்த முகவரிகள் எனக்கு உதவலாம்!
27 பின்னூட்டங்கள்:
first??? attendence only..
padichchuddu varen.. ;-)
Nallavey rasikumbadi ulari irukeenga karthik ;-)
உண்மையான உளரல்
தலைவரே!!
ரொம்பவே கனவு காண்கிறீர்..
அப்புறம் வரும் புதன் கிழமை எழுதுவதுக்கு ச்தோக் (Stock) இல்லாமல் போய்விட போது!!!
:-P
//இயந்திரமாய் அவளுக்கான கனவுகளை என் இதயம் நெய்கிறது... தண்டவாளம் அருகே நடந்து சென்றாலும் என் இதயத்தின் ஓசை தான் ஊரையே எழுப்புகிறது... அது அவளை வரவேற்க வெடிக்கப்படுகிற இதயத்தின் வாணவேடிக்கை என்று காதுகளை திறந்து வைக்கிறேன்//....arambame aramkalam Maams :)
//நனையவே விருப்பம் கொண்ட நான், குடை இருந்தும் நனைந்து வந்தேன். நான் நனைவதை பார்த்து, அச்சத்தில் மழையே என்னைவிட்டு சற்று தள்ளியே பொழிந்தது//....super...ennama ezhudharaangappa....idhu maadhiri ellam ennaki ezhudhuradhu...
//அந்த ஈரமான மழை நாளில் தான், எங்களுக்குள் காதல் தீ பற்றிகொண்டது. //...appuram :)
//விஞ்ஞானமே வியந்து போகும் அளவுக்கு செய்கூலி சேதாரம் இல்லாமல் எங்கள் இதயங்கள் இடம் மாறின//....super ularal idhu dhaan maams :)
//சரி! மறந்து விடுங்கள் இந்த பதிவை! தூரமாய் தெரியும் இடத்திற்கு வாருங்கள், என் இதயத்தை கண்காட்சிக்கு வைத்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் முகவரியை பதித்துவிட்டுப் போங்கள். நாளை அந்த முகவரிகள் எனக்கு உதவலாம்//....eduku kalyanaadhu varadhuka :)
vandudaren....vandudaren...unga kalyaanathuku varamaya :)
:)
இரசித்தேன்!
கார்த்தி இது தான் காதல் மயக்கம்!
//மழை.. மழையில் நனையவே விருப்பம் கொண்ட நான், குடை இருந்தும் நனைந்து வந்தேன். நான் நனைவதை பார்த்து, அச்சத்தில் மழையே என்னைவிட்டு சற்று தள்ளியே பொழிந்தது. தூரத்தில், தெருவிளக்கின் வெளிச்சங்கள் நிலவுக்கு ஓளி தர, குடை பிடித்து அவள் வந்தாள். நானும் அவளும் ஒரு புள்ளியில் சேர்ந்தோம். குடையில்லாமல் நான் வருவதை பார்த்து, என்னை குடைந்து விடும் வகையில் பார்த்தாள். குடைக்குள் வருமாறு அவள் என்னை விழியால் வரவேற்க, குடைபட்ட நான் குடைக்குள் ஒதுங்கினேன். கரைக்க மட்டுமே பழகிய மழையின் கைகளுக்கு ஒரு தாஜ்மஹாலை கட்டவும் தெரிந்திருக்கிறது. பூமியை தைத்து மட்டுமே பெய்து வந்த மழை ஊசிக்கு இரு இதயத்தை ஒட்டவும் தெரிந்திருக்கிறது//
இந்த பாரா ஒரு கவிதை! படிப்பவர் நெஞ்சை குடைந்து விடுகின்ற குடை கவித! சூப்பர் கார்த்தி!
காதலர் தின special அமோகம்!
/first??? attendence only..
//
கையக் கொடுங்க மை பிரண்ட்.. நீங்க தான் முதல் ஆள்..
//Nallavey rasikumbadi ulari irukeenga karthik //
நன்றி ஹனிஃப்..
//உண்மையான உளரல்//
நன்றிங்க ராசா
/அப்புறம் வரும் புதன் கிழமை எழுதுவதுக்கு ச்தோக் (Stock) இல்லாமல் போய்விட போது!!!
//
மை பிரண்ட், தெரில.. பார்ப்போம்
/arambame aramkalam Maams //
நன்றி மாப்ள...
//super...ennama ezhudharaangappa....idhu maadhiri ellam ennaki ezhudhuradhu...
//
அது தான் நீ எழுத ஆரம்பிச்சாச்சே மாப்ள..
/super ularal idhu dhaan maams //
ஹிஹி..
//eduku kalyanaadhu varadhuka :)
vandudaren....vandudaren...unga kalyaanathuku varamaya :)
//
என்ன கற்பூர புத்தி என் மாப்பிள்ளைக்கு...
//இரசித்தேன்!
//
உங்கள் ரசிப்புக்கு நன்றி சிவா
/கார்த்தி இது தான் காதல் மயக்கம்//
ட்ரீம்ஸ், என்ன இது நீங்களும் இப்படி என்னை சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க..
//காதலர் தின special அமோகம்!//
நன்றிங்க ட்ரீம்ஸ்..
/இயந்திரமாய் அவளுக்கான கனவுகளை என் இதயம் நெய்கிறது... தண்டவாளம் அருகே நடந்து சென்றாலும் என் இதயத்தின் ஓசை தான் ஊரையே எழுப்புகிறது... அது அவளை வரவேற்க வெடிக்கப்படுகிற இதயத்தின் வாணவேடிக்கை என்று காதுகளை திறந்து வைக்கிறேன்//
Semma start Karthik... Chance illai... yenna oru sinthanai...
//மது அருந்தினால் உளறுவார்கள் என்று சொல்லக் கேள்வி. அட! அவள் உதட்டுப் பழங்களுக்கு அவ்வளவு சக்தியா என்ன! நேற்று வரை ஒழுங்காய் எழுதி வந்த நான் இப்போது என்ன எழுதுவது என்று திணறுகிறேன்.//
Yenna yennamo sollureenga... nalla iruntha seri :D Namakku than antha kodupinai illai.. ungalukavanthu irukatum :D
//Semma start Karthik... Chance illai... yenna oru sinthanai... //
hehe thanks, KK
//Yenna yennamo sollureenga... nalla iruntha seri :D Namakku than antha kodupinai illai.. ungalukavanthu irukatum//
yaaru sonna KK, Naan koduththu vachchavannu.. Naanum ungalai maathiri thaan :-)
Post a Comment