Monday, February 12, 2007

குங்குமத்தால் ஒரு புள்ளி - காதலர் தின ஸ்பெஷல் 3

எலுமிச்சை நிற
சுடிதாரில்
குட்டை டாப்ஸில்
அவள் வந்தாள்..

அப்படி அவள் வந்ததில்
அப்படியே
நான் வியந்து நின்றதில்
சிலையென நினைத்து
சில காக்கைகள்
என் மீது
எச்சிமிட்டு சென்றன..

காலேஜ் நோட்டை
மார்போடு
அவள் அணைத்து
வருகையில்,
எனக்கு கிடைக்காத
இடமென,
அந்த தவமென,
அந்த ஏட்டை
எரிக்க
தீக்குச்சி தேடுகிறேன்..

தேசிங்கு ராஜா போல
எனது
இயந்திரக் குதிரையில்
அவளை
கடத்திச் செல்கிறேன்..

சின்ன சின்ன
வேகத் தடைகளை
மெதுவாக
கடக்கையில்
உண்டான பயத்தில்
என் இடுப்பை
அவள்
பற்றுங் கணத்தில்
அதன் பின்னே
வந்த
வேகத் தடைகள்
எங்கள் வேகத்தை
தடை செய்யவில்லை..

வண்டியின்
வேகம் காட்டும்
ஸ்பீடோமீட்டர்
எங்கள்
இதய துடிப்பை
அளக்க நினைத்து
வழியிலே
அதன் முட்களை
பறிகொடுத்திருந்தது..

முதன் முறையாய்
என் தேவதையுடன்
நகர்வலம்
செல்கிறேன்..

எப்படித் தான்
இந்த
பறவைகளுக்குத் தெரிந்ததோ..
பறந்து வந்து
போகும் பாதையில்
பூக்களைத் தூவுகின்றன..

முதலில்
என்னை விட்டு
எட்டியே அமர்ந்திருந்தாள்..

என்னோடு
அந்த
வேகத் தடையில்
முட்டியவள்
அதன்பிறகு
காற்றைக்கூட
எங்கள்
இருவரிடையே
இருக்கவிடவில்லை..

பூக்களினாலான
தலையணையில்
தலை வைத்திருக்கிறேன்..
அவள்
மடி,
மலர் என்பதை
அண்ணா சாலையில்
ஹோர்டிங் வைத்தா
சொல்ல வேண்டும்...

அப்படி
படித்திருக்கும்
காலங்களில்,
அவள்
முகம் காட்டாது
சில
என் பார்வைகளுக்கு
திரைச்சீலை
இழுத்து விட்டிருந்தது..

மெல்ல குனிந்து,
அவள்
இதழால்
என் இதழை
தைக்கிறாள்,
முத்தம் என்னும்
முத்தான பெயரால்..

அப்படி
முத்தங்களை
அவிழ்த்துகொண்டிருந்த
அந்த
இதழ்கள்
என்ன
சக்கரை ஆலையா?

சட்டென்று
உடலின்
சக்கரை அளவு
அறுநூறை
தாண்டியது..

கொஞ்ச
நேரம்
அவள்
உதடுகள்
ஒட்டியதற்கே
தனது
காலனி மக்களை
கூட்டிக்கொண்டு
கட்டெறும்பு கூட்டம்
என் இதழை
மொய்க்க ஆரம்பித்தது..

அவளை
கொஞ்சம்
நினைத்துப் பார்த்தேன்..
உலக
தேன்களுக்கு
அவள் தான்
மொத்த ஊற்றோ!
ஹோல்சேல் டீலரோ!

அந்தப் பக்கம்
அலைந்த
வண்டு கூட
தேன் கிடைக்குமா
என்று
விசாரித்துப் போனதாம்
அவள்
இதழ் குவியலிடம்..

அப்படிக் கேட்கும்
கணத்தில்
பக்கத்தில்
இருந்த
கண்களை பார்த்தவுடன்,
கருப்பு நிறத்தில்
பூக்களா என்று
தங்கள் கூட்டத்தோடு
மாநாடு போட
கிளம்பிவிட்டதாம்...

இந்த
சந்தேகத்தை
தீர்த்து வைத்து
எந்த தருமி
பொற்காசுகளை
அள்ளப் போகிறானோ
வண்டு மஹாராஜாவிடம்..

அட!
ஒரு பானை
சோற்றுக்கு
ஒரு சோறு பதம்
என்பார்கள்..
அவளின்
ஒரு பாகத்தை
சொல்வதற்குள்
என்
தமிழுக்கு
தன் உதடு
சுளுக்கி விட்டதாம்..

மீதியை
சொன்னால்
மாண்டு போகுமோ!
என் தமிழை
வாழ வைக்க
இத்தோடு
இதற்கு
வைக்கிறேன் முற்றுப்புள்ளி!

அவள்
நெற்றியில்
நாளை வைக்கிறேன்
குங்குமத்தால் ஒரு புள்ளி!

[நாளை அனைவரும் வருக! இந்த காதல் ஜோடிகளை அன்பு இதயத்தால் வாழ்த்துங்கள்!]

27 பின்னூட்டங்கள்:

MyFriend said...

//நான் வியந்து நின்றதில்
சிலையென நினைத்து
சில காக்கைகள்
என் மீது
எச்சிமிட்டு சென்றன..//

நாற்றம் மலேசியா வரை வந்துவிட்டது தலைவரே! இப்படியெல்லாம் நடந்தால் முதலில் குளிச்சிட்டு, பிறகு பதிவு போடுங்கள்.. :-P

MyFriend said...

[நாளை அனைவரும் வருக! இந்த காதல் ஜோடிகளை அன்பு இதயத்தால் வாழ்த்துங்கள்!]

நாளையும் ஒரு சஸ்பென்ஸா?? காத்திருக்கிறோம்.. :-)

Swamy Srinivasan aka Kittu Mama said...

adaengappa...kaadhal ooRedukka semma ezuththukkal thala.

vittu straw poattu urunji irukeenga lol

kaadhali udhadu inimae tincher poattu dhaan aara vaikkanum :). idhula erumbu, vandu vera moiththu irukkum...

குங்குமத்தால் ஒரு புள்ளி - seekiram vaiyunga thala...Kaadhal nadhiyila midhandhu pattaya kilappiteenga..

Anonymous said...

Continue karthik, superna ;-)

My days(Gops) said...

kavidhai super'nga....

//எலுமிச்சை நிற
சுடிதாரில்
குட்டை டாப்ஸில்
அவள் வந்தாள்..//
fashion idikudhey.....

//என்
தமிழுக்கு
தன் உதடு
சுளுக்கி விட்டதாம்..//
aiyo, appuram eppadi adutha post'a poda poreeenga?

sir orey oru doubt.
experience jpeaking'a?

kavidhai sema top......

Bharani said...

Ennathanu solradhu...totally superb Maams:)

Ovovoru Variyayum Rasithen...All dipped in honey :)

Bharani said...

Nalaki varen...neenga kunguma pottu vaikaradha paarka..vaazhtha :)

Arunkumar said...

unga karpanai kudhiraiku irundhaalum aniyaayathukku horse_power karthik :)

Porkodi (பொற்கொடி) said...

ennamo nadakkudhu marmamaai irukkudhu :-/ yaarukachum edhavadhu purinja sollungappa!

Anonymous said...

kaarthi..supper pa..padichen.. rasithen..

Priya said...

Just awesome. All your feelings of your /dream girl has come out very well.

I wonder how long you took to write this poem.

The emotions and feelings in your heart and the love as a mist is well written.

மு.கார்த்திகேயன் said...

/நாற்றம் மலேசியா வரை வந்துவிட்டது தலைவரே! இப்படியெல்லாம் நடந்தால் முதலில் குளிச்சிட்டு, பிறகு பதிவு போடுங்கள்.. //

மை பிரண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்...!!

மு.கார்த்திகேயன் said...

//நாளையும் ஒரு சஸ்பென்ஸா?? காத்திருக்கிறோம்.. //

நாட்டமையோட தினமும் என்னை கவனிங்கிற மாதிரி தினமும் ஒரு சஸ்பென்ஸ், மை பிரண்ட்..

மு.கார்த்திகேயன் said...

//seekiram vaiyunga thala...Kaadhal nadhiyila midhandhu pattaya kilappiteenga..
//

hehehe thaanks maamu :-)

மு.கார்த்திகேயன் said...

//Continue karthik, superna //

thanks hanif :-)

மு.கார்த்திகேயன் said...

//aiyo, appuram eppadi adutha post'a poda poreeenga//

அவளே அந்த சுளுக்கையும் எடுத்துவிட்டாள்.. தமிழ் என்று அதன் பெயரை சொல்லி கோப்ஸ்

மு.கார்த்திகேயன் said...

//Ovovoru Variyayum Rasithen...All dipped in honey //

hehehe.. Thanks mapla

மு.கார்த்திகேயன் said...

//Nalaki varen...neenga kunguma pottu vaikaradha paarka..vaazhtha //

welcome mapla :-)

மு.கார்த்திகேயன் said...

//unga karpanai kudhiraiku irundhaalum aniyaayathukku horse_power karthik //

என்கிட்ட அதே பவரோட இன்னொரு குதிரை இருக்கு, வேணுமா அருண்

மு.கார்த்திகேயன் said...

/ennamo nadakkudhu marmamaai irukkudhu :-/ yaarukachum edhavadhu purinja sollungappa//

மர்மமெல்லாம் இல்ல பொற்கொடி..

மு.கார்த்திகேயன் said...

/kaarthi..supper pa..padichen.. rasithen.. //

thanks pa manNi :-)

மு.கார்த்திகேயன் said...

//The emotions and feelings in your heart and the love as a mist is well written.
//

காதல் பத்தி எழுத உட்கார்ந்தாலே சும்மா அருவி மாதிரி கொட்டுதுங்க பிரியா

Dreamzz said...

//பக்கத்தில்
இருந்த
கண்களை பார்த்தவுடன்,
கருப்பு நிறத்தில்
பூக்களா என்று
தங்கள் கூட்டத்தோடு
மாநாடு போட
கிளம்பிவிட்டதாம்...//

அருமையான கவிதை! உணர்ச்சி குவியல்!

Dreamzz said...

காதல் ஜோடிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Unknown said...

இதை இப்போதுதான் வாசித்தேன்...

உங்கள் வருணனை வரிகள் ரசிக்க வைக்கின்றன!

வாழ்த்துக்கள்...

மு.கார்த்திகேயன் said...

//அருமையான கவிதை! உணர்ச்சி குவியல்!

காதல் ஜோடிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
//

ரொம்ப நன்றி ட்ரீம்ஸ்.. உங்க நல்ல மனசு யாருக்கு வரும்!

மு.கார்த்திகேயன் said...

//இதை இப்போதுதான் வாசித்தேன்...

உங்கள் வருணனை வரிகள் ரசிக்க வைக்கின்றன!

வாழ்த்துக்கள்... //

பொறுமையாக எனது பழைய பதிவுகளை புரட்டி பார்த்ததற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி அருட்பெருங்கோ