Friday, March 02, 2007

பிச்சைக்காரனின் பிதற்றல்கள்

ஒரு
ஊமையின்
சேகரிக்கப்பட்ட
வார்தைகளாய்
அவன்
தட்டில்
ஓசையுடன்
விழுகின்றன
சில்லறை காசுகள்!

அவன்
நிலை எண்ணி
அந்த
சில்லறைகள் கூட
கைகொட்டி
சிரிக்கின்றனவோ!

அந்த
அழுக்கு உடம்புக்குள்
மூழ்கி போனதோ
அவனின்
வெளிச்ச எதிர்காலங்கள்!

கிழிசல்கள்
எல்லாம்
வாழ்க்கையின்
போர்களங்கள்
இவனுக்கு பதில்
ஆடைக்கு
தந்த
விழுப்புண்களோ!

காலணி தைப்பவன்
தன்னை கடப்போரின்
கால்களையே
பார்ப்பது போல்,
கடக்கும் மனிதர்
கைகள்
சட்டைபைக்குள்
நீளுமோ
என்று
கண்களில்
தேடிகிடக்கிறான்!

வெளியில்
தெரிந்து
இவன்
எடுக்கிறான் பிச்சை..

எத்தனையோ பேர்
சுவர்களுக்குள்
கையூட்டு
கையேந்தல்களில்!

கோயில்களின்
வாசல்களில்
கழற்றி விடப்படும்
செருப்புகளில்
ஆரம்பித்து
கேகிறது
இவனின்
அம்மா! தாயே!
என்னும் ஒரு கூவல்!

இவன்
குரல் கேட்டு
மனிதர்
காசுகள் கடாசினரோ
தெரியாது!

ஆனால்
அந்த தெய்வமும்
கல்லாகி போனதோ
என்றதோர்
எண்ணம் இவனுக்கு!

கஞ்சனின்
கோடியும்
இவனின்
சில்லறைகளும்
வைத்திருப்பவருக்கு
உதவுவதில்லை!

கோயில்
வாசலில்
இவனின்
கையேந்துவது
வழக்கமான
சில்லறையையா?
இல்லை
உள் சென்றோர்
வாங்கி வரும் வரங்களையா?

42 பின்னூட்டங்கள்:

said...

இன்னைக்கு நான் முதலா?

said...

//
காலணி தைப்பவன்
தன்னை கடப்போரின்
கால்களையே
பார்ப்பது போல்,
கடக்கும் மனிதர்
கைகள்
சட்டைபைக்குள்
நீளுமோ
என்று
கண்களில்
தேடிகிடக்கிறான்!
//

அருமை தல..

//
கோயில்
வாசலில்
இவனின்
கையேந்துவது
வழக்கமான
சில்லறையையா?
இல்லை
உள் சென்றோர்
வாங்கி வரும் வரங்களையா?
//
வாவ்.. நல்ல சிந்தனை. கலக்குறீங்க கவிதைல !!

said...

நான் தான் முதலில் வந்திருக்கேனா? நீங்க உடலால் யு.எஸ்ஸிலும், உள்ளத்தால் இந்தியாவிலும் இருக்கிறீர்கள். கவிதை நல்லா இருக்கு. மெதுவா கொஞ்சம் கொஞ்சமா எழுதிப் பழகினா இன்னும் நல்ல கவிதைகள் வர வாழ்த்துக்கள்.

said...

me no.4

said...

அம்மா தாயே பிச்சை போடுங்க..

[உங்க கவிதையை படிச்சதும், பிச்சைகாரியாய் மாறிய ஒரு எஃபெக்டு]

said...

கிழிசல்கள்
எல்லாம்
வாழ்க்கையின்
போர்களங்கள்
இவனுக்கு பதில்
ஆடைக்கு
தந்த
விழுப்புண்களோ

- How true and it reflects your inner self.

எத்தனையோ பேர்
சுவர்களுக்குள்
கையூட்டு
கையேந்தல்களில்!

-Damn true. How many people have lost their lives in the name finance investment or thru' credit where only he/she knows. Its all about wealth a person changes his surrounding and get into debt.

said...

//தெய்வமும்
கல்லாகி போனதோ
என்றதோர்
எண்ணம் இவனுக்கு!//

aazham migundha asathal varigal..so touchyyyy...

eppdi irukareenga karthik??? sila naal gapla engala ellam marandhacha or ninaivil irukiradha??

anyway hv a nice day n njy..

Anonymous said...

Nice 1 karthik ;-)

said...

//ஒரு
ஊமையின்
சேகரிக்கப்பட்ட
வார்தைகளாய்
அவன்
தட்டில்
ஓசையுடன்
விழுகின்றன
சில்லறை காசுகள்!


chance'ey illa.. .asathiteeenga..

said...

//அந்த
அழுக்கு உடம்புக்குள்
மூழ்கி போனதோ
அவனின்
வெளிச்ச எதிர்காலங்கள்!/

:((

said...

//கோயில்
வாசலில்
இவனின்
கையேந்துவது
வழக்கமான
சில்லறையையா?
இல்லை
உள் சென்றோர்
வாங்கி வரும் வரங்களையா?

nalla eludhi irrukeeenga....

said...

//மூழ்கி போனதோ
அவனின்
வெளிச்ச எதிர்காலங்கள்!
//

அடடா!

said...

//கிழிசல்கள்
எல்லாம்
வாழ்க்கையின்
போர்களங்கள்
இவனுக்கு பதில்
ஆடைக்கு
தந்த
விழுப்புண்களோ!/

அழகான கவித கார்த்தி! சூப்பர். touchin!

said...

ஜப்பான்ல ஏதோ பறக்கும் ரயில் இருக்குதாமே...

அத விட வேகமா எப்படி உங்களால மட்டும் போஸ்ட் போட முடியுது????

said...

பிச்சைக்காரனின் அவலநிலையை அழகாகக் காட்டி இருக்குறீர்கள்...

வாழ்த்துக்கள்...

said...

\\காலணி தைப்பவன்
தன்னை கடப்போரின்
கால்களையே
பார்ப்பது போல்,
கடக்கும் மனிதர்
கைகள்
சட்டைபைக்குள்
நீளுமோ
என்று
கண்களில்
தேடிகிடக்கிறான்!\\

கவிதையிலும் உவமையை போட்டு பின்னிட்டிங்க தல

எப்படி தான் கவிதை, கதைன்னு கலக்குறிங்க...
"தல"ன்ன "தல" தான்

Anonymous said...

தல கலக்குறீங்க.எப்படிதான் கதை,கவிதை என்று அசத்துறீங்களோ!

//.:: மை ஃபிரண்ட் ::. said...
அம்மா தாயே பிச்சை போடுங்க..

[உங்க கவிதையை படிச்சதும், பிச்சைகாரியாய் மாறிய ஒரு எஃபெக்டு]//

அனு வேண்டாம்.நல்ல புள்ளையா படிம்மா.இப்படி உணர்சிவேசப்படக்கூடாது :))))

said...

Hi Karthik!

First time here. Arumaiyana kavidhai..

காலணி தைப்பவன்
தன்னை கடப்போரின்
கால்களையே
பார்ப்பது போல்,
கடக்கும் மனிதர்
கைகள்
சட்டைபைக்குள்
நீளுமோ
என்று
கண்களில்
தேடிகிடக்கிறான்!

எத்தனையோ பேர்
சுவர்களுக்குள்
கையூட்டு
கையேந்தல்களில்!


Enaku migavum piditha varigal.. Good work. keep it up.

Cheers

said...

//இன்னைக்கு நான் முதலா?

//

அதே அதே அருண்.. பழைய சோறு பார்செல் :-)

said...

//வாவ்.. நல்ல சிந்தனை. கலக்குறீங்க கவிதைல !! //

நன்றிப்பா அருண்

said...

// கவிதை நல்லா இருக்கு. மெதுவா கொஞ்சம் கொஞ்சமா எழுதிப் பழகினா இன்னும் நல்ல கவிதைகள் வர வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க மேடம்!

said...

//[உங்க கவிதையை படிச்சதும், பிச்சைகாரியாய் மாறிய ஒரு எஃபெக்டு]//

மலேசியாவுல இதையெல்லாம் அனுமதிக்கிறாங்களா மை பிரண்ட்!

said...

//Damn true. How many people have lost their lives in the name finance investment or thru' credit where only he/she knows. Its all about wealth a person changes his surrounding and get into debt. //

Really true words priyaa!

said...

//aazham migundha asathal varigal..so touchyyyy...//
நன்றி ரம்யா..

//eppdi irukareenga karthik??? sila naal gapla engala ellam marandhacha or ninaivil irukiradha??//

என்ன ரம்யா, இப்படி ஒரு கேள்வி!

said...

//Nice 1 karthik //

Thanks Hanif

said...

//chance'ey illa.. .asathiteeenga.. //

//nalla eludhi irrukeeenga.... ///

Thanka G0ps!

said...

/அழகான கவித கார்த்தி! சூப்பர். touchin! //


ஹிஹிஹி! நன்றிங்க ட்ரீம்ஸ்!

said...

//ஜப்பான்ல ஏதோ பறக்கும் ரயில் இருக்குதாமே...

அத விட வேகமா எப்படி உங்களால மட்டும் போஸ்ட் போட முடியுது???? //

ஜி.. என்னங்க இப்படி ஒரு கேள்வி.. சும்மா தினமும் அரை மணி நேரம் இதற்காக.. அவ்வளவு தான்!

said...

//பிச்சைக்காரனின் அவலநிலையை அழகாகக் காட்டி இருக்குறீர்கள்...

வாழ்த்துக்கள்... //


ஓ.. நன்றிங்க ஜி!

said...

//கவிதையிலும் உவமையை போட்டு பின்னிட்டிங்க தல

எப்படி தான் கவிதை, கதைன்னு கலக்குறிங்க...
"தல"ன்ன "தல" தான் //

நன்றி கோபி!

எல்லாம் நீங்க தர்ற சப்போர்ட் தான் கோபிநாத்!

Anonymous said...

தலை

என்னப்பா. நமக்குள்ள ஒரு எண்ண அலை ஒற்றுமை இருக்குனு நினைக்கிறேன்


நானும் இப்பதான் பிச்சைகாரனைப் பற்றி கவித எழுதினேன்.. ஆனா மெதுவா பண்ணலாம்னு வைச்சு இருந்தா இங்க அதே மாதிரி..

இப்படி நிறைய போஸ்ட் நான் டிலே பண்ணினா இங்க அத பார்த்திட்டு அட போப்பா இனி எண்ணத்த எழுதுறதுனு தெரியல...


:(

அப்பா கார்த்தி கொஞ்சம் சில பதிவுகளை எனக்கும் பிச்சை போடுங்க....

Anonymous said...

எனி புது முயற்சி.கவிதையில எதோ வித்தியாசம் தெரியுதே..

?

Anonymous said...

அப்புறம் கார்த்தி

சூரியன் FM கீழ் உள்ள லிங்கலயும் நல்லா வருது..


http://swasamradio.com

said...

//எத்தனையோ பேர்
சுவர்களுக்குள்
கையூட்டு
கையேந்தல்களில்!
//
சமூகத்தை தோலுரித்து காட்டி விட்ட வரிகள். சில சமயங்களில் பல பேர் நாகரீக பிச்சை எடுக்கிறார்கள். சில நேரங்களில் சில மனிதர்கள்!

said...

Arumayana Kavidhai Karthik...

Keep it up:)

said...

//கோயில்
வாசலில்
இவனின்
கையேந்துவது
வழக்கமான
சில்லறையையா?
இல்லை
உள் சென்றோர்
வாங்கி வரும் வரங்களையா?//

Nalla varigal...
Pichai yeduppavargalai pichai kaarar yendru solla koodadhu "Dharma kaarargal" nu sollanum apdi nu en thatha sonnadhu gyabagathukku varudhu Karthik....

said...

கவிதை நல்லாயிருக்கு கார்த்தி

said...

//அப்பா கார்த்தி கொஞ்சம் சில பதிவுகளை எனக்கும் பிச்சை போடுங்க....//

மணி, உளறிய கவிதை பலே.. நீங்கள் உங்கள் திறமையை கொஞ்சம் தர்மம் பண்ண வேண்டும்

said...

//எனி புது முயற்சி.கவிதையில எதோ வித்தியாசம் தெரியுதே..
//

காதல் உதர முடியாத ஒன்று.. அந்த கவிதைகளோடு மற்றதையும் முயற்சி செய்யலாமே என்று தான் மணி

said...

//சமூகத்தை தோலுரித்து காட்டி விட்ட வரிகள். சில சமயங்களில் பல பேர் நாகரீக பிச்சை எடுக்கிறார்கள். சில நேரங்களில் சில மனிதர்கள்! //

கரெக்டா சொன்னப்பா அம்பி!

said...

//Nalla varigal...
Pichai yeduppavargalai pichai kaarar yendru solla koodadhu "Dharma kaarargal" nu sollanum apdi nu en thatha sonnadhu gyabagathukku varudhu Karthik....//

தர்மகாரர்கள்..ம்.. இதுவும் நல்ல சொல்லாகத்தான் இருக்கிறது ராஜி :-)

said...

//கவிதை நல்லாயிருக்கு கார்த்தி//

நன்றி தேவ்