Saturday, March 24, 2007

ஜில்லென்று மலேசியாவும் கும்மென்று பார்க்க திரைப்படங்களும்

விளம்பரப்படம் எடுக்கிறது மாதிரி ஆகிடுச்சுப்பா.. பதிவுக்கு ஆளை திரட்டி வந்து, பின்னூட்டம் போடவைக்கிறது.. பதிவோட தலைப்பை இது மாதிரி கொடுத்தா தான், பின்னங்கால் பிடறியில் அடிக்க எல்லோரும் ஓடிவர்றாங்க.. சில பேர் அப்படி வந்தும், உள்ளேன் ஐயான்னு ஒரு பின்னூட்டமும் போடுறது இல்லை.. சரி..நீங்க கல்லை தூக்குறதுக்கு முன்னாடி விஷயத்துக்கு வர்றேன்..

மலேசியா பத்தி நிறைய தெரிலைனாலும், அங்க இருக்க பினாங் பத்தி என் ஐயா தினமும் நிறைய கதை சொல்லி இருக்கார். அவர் அவரோட இளவயதில் அங்கு சென்று தான் கிட்டதட்ட ஆறு மாதங்கள் மேஸ்திரி வேலை பார்த்ததாகச் சொல்வார். அப்புறம் உடம்பு சரியில்லாமல் போன காரணத்தால், அப்படியே தாய்நாடு திரும்பி வந்து சொந்த அத்தை பொண்ணை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டார். இந்த அத்தை பொண்ணை பண்ணிக்கமாட்டேன்னு சொல்லித் தான் பினாங் அவர் சென்றது அடுத்த கதை. ம்ம்.. அவர் மட்டும் அப்பவே அங்கேயே செட்டில் ஆகியிருந்தா இந்நேரம் நானும் மலேசியாவை பத்தி நிறைய விஷயங்கள் எழுதுவேன். ஆனா, அப்படி எனக்கு எந்த மனக் குறையும் வராம, மலேசியாவின் கடுகு முதல் காட்டாறு வரை, அதன் நீள அகலத்தை நமக்காக அளந்து சொல்லப்போறாங்கா, நம்ம மை பிரண்டும், துர்காவும்.. ஜில்லென்று ஒரு மலேசியா அப்படின்னு புதுசா ஒரு வலைப்பக்கத்தை ஆரம்பிச்சு, கதைக்க போறாங்க.. வருங்காலத்துல, 2007, மே மாசம் என்னப்பா நடந்தது மலேசியாவில்னு யாராவது கேட்டா, இங்கே போப்பான்னு அவங்களுக்கு இந்தப் பக்கத்தோட சுட்டியை கொடுத்திடலாம்.. இது நிச்சயமாய் ஒரு வரலாற்றுப் பதிவாய் இருக்கும்னு நினைக்கிறேன். இப்படிப்பட்ட உயர்ந்த சிந்தனைக்கு, அவங்க ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள். அவர்கள் முயற்சியில் தளராமல், விக்ரமாத்தித்தன் வேதாளத்தை விடாமல் பிடித்து வந்து கதை சொன்ன மாதிரி, உங்களுக்கு மலேசியாவின் காற்றை சுவாசிக்கத் தரப்போகிறார்கள்.

இது உங்களை சந்தோசப் படுத்தும் ஒரு விஷயம். நிறைய திரைப்படத்தோட சுட்டிகள் இங்கே இருக்கு.. நீங்க இந்த வலைப்பக்கத்திலேயே கூட அந்தப் படங்களைப் பாக்கலாம்.. நான் இப்போத்தான் எம்.ஜி.யாரின் குடியிருந்த கோயில் படத்தை பாத்துட்டு வர்றேன்.. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பஞ்சாபி (அம்பி, இது உனக்காக இல்லை..) எல்லாப் படங்களும் இலவசம் தான்.. எல்லா மொழி திரைப்படங்களும் ஒரு இடத்துல கிடைக்குது.. போங்க.. படங்களை பாருங்க.. நல்ல என்ஜாய் பண்ணுங்க, நண்பர்களே

Update : இதுவும் வீடியோ மற்றும் டிவி சேனல் சுட்டிகள் நிறைய இருக்குங்க www.techsatish.com

படிச்சிட்டு அப்படியே போனா எப்படி.. பின்னூட்ட மொய் எழுதிட்டு போங்கப்பா..

48 பின்னூட்டங்கள்:

said...

thala, mudhalla attendence pottukaren.. appala vanthu padikaren

said...

என்னவோ ஏதோனு அடிச்சு புடிச்சு வந்தா, இங்க இல்ல, அங்க போன்னு விரட்டி விடரீங்க..சரி நான் அங்கேயே போய் புளியோதரைய வாங்கிக்கிறேன்.. சை... ப்ளாக வாசிக்கிறேன்.. :))

said...

me firstuu??

said...

இங்கேயும் இன்னைக்கு விளம்பரம்தானா?

அதுவும் எனக்கே விளம்பரம் கொடுத்திருக்கீங்க.

[அப்பாடா! செலவே இல்லாம விளம்பரம் கொடுத்தாச்சு! ஹீஹீ]

said...

'Duniya" என்று அந்த வலைப்பக்கம் தலைப்பு இருக்கே! அது எந்த மொழியில்ன்னு யாருக்காவது தெரியுமா? ஹிந்தியா?

ஏன்னா, மலாயில் "Dunia"ன்னா உலகம்ன்னு அர்த்தம். மமலாயிலதான் பேர் வச்சிருக்காங்களோன்னு thinking...

said...

வந்தேன், படித்தேன்.நன்றாக எழுதிவருகிறீர்கள் , பாராட்டுக்கள் !

தகவல்களுக்கு நன்றி.

said...

பின்னூட்டம் வந்திருக்கும்னு நினைக்கிறேன். நீங்க சொல்ற வலைப்பக்கத்திலே படங்கள் வருது, சரி, அது இலவசமா? புதுப்படங்கள் எல்லாம் பார்க்கலாமா? அதைப் பத்தி ஒண்ணும் சொல்லலியே?

Anonymous said...

Romba nanringana karthik, useful site ;-)

said...

பின்னூட்ட்டம் போட்டாதான் படிக்கராங்கன்னு அர்த்தம் இல்ல.

என்ன மாதிரி உங்க ஓவ்வொரு பதிவையும் விரும்பி படிக்கற நிறைய பேர் இருப்பாங்க,ஆனா உங்க நட்பு வட்டதுல எல்லாரும் பின்னூட்டங்களில் கும்மி அடக்கறத பாத்துட்டு, நாம எதுக்கு இவங்கள தொந்தரவு பண்ணன்னும்னு நினைச்சிக்கிட்டு போய்டுவாங்க! :-)

Anonymous said...

பின்னூட்ட மொய்
( he he...)

- Sekar, SG

said...

கார்த்தி,

நீங்களே, அந்த ஆறு நடிகையோட இந்த கடல் நடிகருக்கு.....அப்படீன்னு ஆரம்பிச்சு ஒரு கிசுகிசுவை கெளப்பிவிடுங்க. நெறைய பேர் பிச்சுகிட்டு வருவாங்க.

அந்த ஆறு நடிகை யாரு, கடல் நடிகர் யாரு அப்படீன்னு கண்டுபிடிக்கமுடியாமல் அவங்களே பின்னூட்டம் மூலமா கேட்பாங்க.

வேலை லேசா முடிஞ்சிரும்.

said...

enga pochu en pinnutam??! :(

said...

//
படிச்சிட்டு அப்படியே போனா எப்படி.. பின்னூட்ட மொய் எழுதிட்டு போங்கப்பா..//

மாப்பிளை விட்டார்க்கு பெங்களூரூ இராம் ரூபாய் 101.... :)

said...

ஆஹா! மெலேசியா பத்தி எழுதறாங்களா! போய் பார்த்திடறேன்!

said...

தகவலுக்கு நன்றி கார்த்தி!

said...

அப்பால , நம்ம மேல பெரிய மனசு பன்னி web site எல்லாம் கொடுத்து இருக்கீங்க... thaanks thalai!

said...

\\சில பேர் அப்படி வந்தும், உள்ளேன் ஐயான்னு ஒரு பின்னூட்டமும் போடுறது இல்லை.. \\

உள்ளேன் ஐயா.....ஒன்னு

said...

உள்ளே தான் இருக்கிறேன் ஐயா.....ரெண்டு

said...

இனி உள்ளேயே தான் இருப்பேன் ஐயா.....மூணு.....
போதுமா தல..

said...

\\இது நிச்சயமாய் ஒரு வரலாற்றுப் பதிவாய் இருக்கும்னு நினைக்கிறேன். \\

உண்மை தான் தல......இங்கையும் அவுங்க ரெண்டு பேத்துக்கும் மறுபடியும் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன் ;-))

தல சுட்டிகளுக்கு ரொம்ப நன்றி ;-))))

Anonymous said...

பிரசண்ட் தல..

பின்னுட்டம் போட்டுட்டேன்

//அளந்து சொல்லப்போறாங்கா, நம்ம மை பிரண்டும், துர்காவும்.. ஜில்லென்று ஒரு மலேசியா அப்படின்னு புதுசா ஒரு வலைப்பக்கத்தை ஆரம்பிச்சு, கதைக்க போறாங்க.. //

வாழ்த்துகள். இப்படியாவது நான் மலேசியவா பார்த்துக்கரேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

said...

present sir!!

said...

//
thala, mudhalla attendence pottukaren.. appala vanthu padikaren

//

அட்டென்டன்ஸ் குறிச்சுட்டேன் ACE!

said...

//நான் அங்கேயே போய் புளியோதரைய வாங்கிக்கிறேன்.. //

எல்லோரும் அதுலயே குறியா இருக்கீங்களே ACE.. நான் முதல்ல போய் புளியோதரை வாங்கி ரெண்டாவது தடவை லைன்ல நின்னாச்சு ACE

said...

/me firstuu?? //

மிஸ் பண்ணிட்டீங்க மை பிரண்ட்

said...

//அப்பாடா! செலவே இல்லாம விளம்பரம் கொடுத்தாச்சு! ஹீஹீ//

யார் சொன்னாங்க மை பிரண்ட், கட்சி பணிக்குன்னு ஒரு $10000 அனுப்பி வைங்க :-)

said...

//ஏன்னா, மலாயில் "Dunia"ன்னா உலகம்ன்னு அர்த்தம். மமலாயிலதான் பேர் வச்சிருக்காங்களோன்னு thinking... //

அட.. புதுசா ஒண்ணு மலாய்ல கத்துகிட்டேன்.. தாங்கியூ டீச்சர் :-)

said...

//வந்தேன், படித்தேன்.நன்றாக எழுதிவருகிறீர்கள் , பாராட்டுக்கள் !
//

நன்றிங்க மணியன்

said...

//Romba nanringana karthik, useful site //

இதுக்கெல்லாம் எதுகுங்க நன்றி, ஹனிஃப்.. இது நம்ம கடமை

said...

//என்ன மாதிரி உங்க ஓவ்வொரு பதிவையும் விரும்பி படிக்கற நிறைய பேர் இருப்பாங்க,ஆனா உங்க நட்பு வட்டதுல எல்லாரும் பின்னூட்டங்களில் கும்மி அடக்கறத பாத்துட்டு, நாம எதுக்கு இவங்கள தொந்தரவு பண்ணன்னும்னு நினைச்சிக்கிட்டு போய்டுவாங்க!//

பாத்தீங்களா.. இதெல்லாம் அப்பப்போ நீங்க இப்படி ஒரு பின்னூட்டம் போட்டாத் தானே தெரியுதுங்க CVR

said...

//பின்னூட்ட மொய்
( he he...)
//

மொய் போட்ட சேகர் அண்ணனுக்கு தலவாழை போட்டு பந்தில உக்கார வைங்கப்பா

said...

//அந்த ஆறு நடிகை யாரு, கடல் நடிகர் யாரு அப்படீன்னு கண்டுபிடிக்கமுடியாமல் அவங்களே பின்னூட்டம் மூலமா கேட்பாங்க.

வேலை லேசா முடிஞ்சிரும்.
//

அட! இந்த ஐடியா கூட நல்லாத்தான் இருக்குங்க ஆதிபகவன்

said...

/enga pochu en pinnutam??! :( //

பிளாக்கர் சதி பொற்கொடி

said...

//மாப்பிளை விட்டார்க்கு பெங்களூரூ இராம் ரூபாய் 101.... //

மோய் போட்டாச்சுல ராம்.. பந்தி பின்னாடி நடக்குது.. போய் கை நனச்சுட்டு வாங்க

said...

/ஆஹா! மெலேசியா பத்தி எழுதறாங்களா! போய் பார்த்திடறேன்!

//

ஆமாங்க ட்ரீம்ஸ். போய் உங்க முத்திரையை பதிச்சிட்டு வாங்க

said...

//அப்பால , நம்ம மேல பெரிய மனசு பன்னி web site எல்லாம் கொடுத்து இருக்கீங்க... thaanks thalai!

//

இதெல்லாம் நம்ம கடமைப்பா, ட்ரீம்ஸ்

said...

//உள்ளே தான் இருக்கிறேன் ஐயா.....ரெண்டு //

ஆஹா.. இப்படியே பின்னூட்டம் எல்லாம் போட்டுடுவீங்க போல கோபிநாத்

said...

/தல சுட்டிகளுக்கு ரொம்ப நன்றி///

என்ஜாய் பண்ணுப்பா, கோபிநாத்

said...

//இப்படியாவது நான் மலேசியவா பார்த்துக்கரேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
//

நானும் அந்த ஆசையோடு தான் இருக்கேன் மணி

said...

/present sir!! //

ஓகே அம்மிணி.. அட்டென்டன்ஸ் போட்டுட்டு கிளாஸ்ல தூங்குனா எப்படி..

said...

சுட்டிக்கு தான் இந்த விளம்பரமா!!
நன்றி...

said...

super news. congrats my friend and durga :)

andha videoduniya linka oru 4 naala enakkum theriyum.. adhula thaan pancha thanthiram padam paathen :)

said...

நல்ல முயற்ச்சி...வாழ்த்துக்கள் மைபிரண்ட் & துர்கா...:-)

said...

/சுட்டிக்கு தான் இந்த விளம்பரமா!!
//

ஹிஹிஹி.. ஆமாங்க செந்தில்

said...

//andha videoduniya linka oru 4 naala enakkum theriyum.. adhula thaan pancha thanthiram padam paathen //

என்ஜாய் பண்ணுப்பா அருண்

said...

//நல்ல முயற்ச்சி...வாழ்த்துக்கள் மைபிரண்ட் & துர்கா...:-) //

முதல்வரே சொல்லியாச்சு.. அமர்களப்படுத்துங்க

said...

//வாழ்த்துக்கள் கார்த்திக்...//

நன்றிங்க ராம் :-)

said...

//ஜோசியம்னு சொல்றது எல்லாமே பொய். படிச்ச நீங்களே இப்படி ஜோசியத்தை கண்மூடித்தனமா நம்பலாமா?
//

தம்பி, கிளி வைத்து சொல்வதையும் கை ரேகை வைத்து சொல்வதை வேண்டுமானால் பொய்யென நான் ஏற்றுக்கொள்வேன்.. ஆனால் நமது பிறந்த நேரத்தை வைத்து, கணக்கு பண்ணி சொல்லப்படும் ஜாதக கூற்றை நம்புவதில் எந்த தப்பும் எல்லை என்பதே என் தாழ்மையான கருத்து.. அதை எல்லோரும் சரியாக சொல்லிவிட முடியாது என்பதும் நாம் இங்கே கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும்