Wednesday, March 21, 2007

கிரிக்கெட் ஆடிய வசந்த காலங்கள்

கிரிக்கெட் காய்ச்சல் இப்போ மருத்துவருக்கும் அடிக்கிற மாதம் இது. தோனி தும்முறது முதல் கும்ளே கும்மி அடிக்கிறவரை எல்லாமே இப்போ தலைப்பு செய்திகள். ஆனா இந்த கிரிக்கெட் எங்க ஊருக்குள் நுழையாத காலம் நான் ஆறாவது, ஏழாவது படித்த வருஷங்கள். எங்கள் ஊரிலும் லகான் படத்தை போன்ற அணி ஒன்று இருந்தது.

கிரிக்கெட் விளையாடுவதற்கு உபகரணங்கள் எல்லாமே எங்கள் ஊரில் கிடைக்கும் பொருள்கள் தான்.. ஆரம்ப காலங்களில், தென்னை மட்டை.. பிறகு, எங்கள் ஊர் தச்சரிடம் செய்து வாங்கிய மட்டை.. இந்த மட்டை செய்வதற்கு அந்த தச்சரிடம் பல நாள் தவங்கிடப்போம். அவரும் ஏதாவது வீட்டிற்கு கதவையோ ஜன்னலையோ செய்துகொண்டிருப்பார், நாங்கள் போகும் போதெல்லாம். அவருக்கு வெற்றிலை பாக்கு, அவருக்கு பிடித்த நிறுவனத்தின் மூக்குப்பொடி, புகையிலை, மலபார் பீடி என்று கேட்பதை எல்லாம் வாங்கித் தருவோம். ஆனால் அப்படி வேப்பமரத்தினால் செய்யப்படும் அந்த மட்டை ரொம்பவும் எடை அதிகமாக இருக்கும். வருகிற பாலை தூக்கி அடித்தால் மட்டையின் பளு காரணமாக அது சுலபமாக நான்கு மற்றும் ஆறு ஓட்டங்களை தந்துவிடும். இதே வகையில் தான், நாங்கள் ஸ்டெம்புகளையும் செய்வோம்.

அப்போது கிரிக்கெட் என்பது படித்த மக்கள் மட்டுமே பார்க்கக்கூடியதாக எங்கள் ஊரில் கருதப்பட்டது. அதனால் நாங்கள் விளையாண்டால் அதை சுற்றி நின்று பார்ப்பதற்கு, ஒவ்வொரு விஷயத்தை பற்றியும் நூறு கேள்விகள் கேட்பதற்கு ஏகப்பட்ட ஆட்கள் இருப்பார்கள். அதுவும், நாங்கள் பெரும்பாலும் பள்ளி சென்று வந்த சாயங்கால வேளைகளிலும் வார இறுதிகளிலும் விளையாடுவதால், எங்கள் ஆட்டத்தை காணவே பெரும் கூட்டம் இருக்கும். அடிக்கின்ற பந்தை பொறுக்குப் போடுவதென்பது நின்று பார்க்கும் ஒவ்வொரு சின்ன வயசுபசங்களுக்கும் பிடித்தமான காரியம்.

நாங்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது எங்கள் ஊர் கிறித்துவ பேராலய வளாகத்தில் தான். பேராலயத்தை ஒட்டி எங்கள் ஊரின் இடைநிலைபள்ளியும் (எட்டாம் வகுப்புவரை தான் இருக்கும்.) இருப்பதால், அந்த மைதானத்தில் தான் எங்களது ஆட்டங்கள் நடக்கும். இந்த நேரத்தில் எங்களது கிரிக்கெட் ஆட்டத்தை ஊக்குவித்து எங்கள் கூட சேர்ந்து விளையாண்ட பாதிரியார் ஜேம்ஸ் மைக்கேல் ராஜை இங்கே நினைவு கூர்ந்தே ஆகவேண்டும். அவருக்கு கிட்டதட்ட நாற்பதை ஓட்டிய வயது. நாங்கள் பல நாட்கள் விளையாடும் பொழுது, அந்த பந்து பள்ளிக்குள் விழுந்துவிடும். அவரிடம் அனுமதி பெற்றுத்தான் அந்த பந்தை எடுத்து வருவோம். அப்படித் தான் எங்களுக்கு அவர் பழக்கமானார். அதன் பிறகு அவர் எங்கள் கூட சேர்ந்து விளையாடுவார். அவரே பந்துகளையும் வாங்கி வந்து தருவார். கிரிக்கெட் ஆட்டத்தின் சில நுணுக்கமான விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வார். மற்ற நாட்டின் ஆட்டங்களை பார்க்கவைத்து எப்படி விளையாடுகிறார்கள் என்பதையும், எதனால் அவர்கள் அவுட் ஆனார்கள் என்பதையும் விளக்குவார். எங்களுக்கும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் பெயரையே அடைமொழியாக வைத்து, (நாங்கள் விளையாடும் பாணியின் அடிப்படையில்) அந்த பேர் சொல்லியே கூப்பிடுவார். அப்படி எனக்கு கிடைத்த பேர், ஆஸ்திரேலியா வீரர் டேவிட் பூன் பெயர். நான் மட்டையை சுழற்றினால் அது அவரை போலவே இருக்கும் என்று அவர் அடிக்கடி சொல்வார். ஆனால் அவருக்கு பின் வந்த பாதிரியார்கள் யாரும் எங்களுடன் ஒட்டவில்லை. நாங்களும் பேராலய வளாகத்தில் விளையாடுவதை விட்டுவிட்டு ஊரின் வெளியே இருக்கும் பயன்படாத புஞ்சை நிலங்களில் விளையாட ஆரம்பித்தோம். அப்படி விளையாட நாங்கள் ஆரம்பித்த போது கிட்டதட்ட மூன்று வருடங்கள் ஓடிவிட்டிருந்தது.

எங்கள் ஊரில் இருந்து திண்டுகல்லிற்கு மற்றும் சின்னாளப்பட்டிக்கு படிக்கச் செல்லும் மாணவர்களே கிரிக்கெட் விளையாடினோம். அப்புறம் நாங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இந்த புஞ்சை நிலங்களில் விளையாட ஆரம்பித்த போது, மற்றவர்களையும் விளையாட ஊக்குவித்தோம். ஆடு மேய்ப்பவர்களுக்கும் இந்த விளையாட்டை சொல்லிக்கொடுத்தோம். முதலில் அவர்கள் கிரிக்கட் மட்டையை கில்லி விளையாட்டிற்கு பிடிப்பதைப் போலத் தான் பிடிப்பார்கள். மெல்ல அவர்களுக்கு இந்த விளையாட்டு பிடித்து போய், கிரிக்கெட்டோடு ஒன்றாக வாழ ஆரம்பித்தார்கள். நஞ்சை வயல்களில் அவ்வப்போது உழுவதால் அது ரம்பத்தை போல மெடு பள்ளமாகத் தான் இருக்கும். அதை சமநிலைப் படுத்துவதற்கு தென்னை மரத்தை, உருளையாக பயன்படுத்தினோம். அதில் குடம் குடமாக பக்கத்து வயலில் இருந்து தண்ணீர் பிடித்து வந்து ஊற்றி சமனநிலை படுத்தினோம். அந்த கிராமத்து பிட்சை நாங்கள் உருவாக்க எங்களுக்கு கிட்டதட்ட இரண்டு வாரகாலங்கள் ஆனது. வார இறுதிகள் மற்றும் பள்ளிவிட்டு வந்த பின் நாங்களும், மற்ற நேரங்களில் ஊரிலே இருக்கும் மற்ற நண்பர்களும் இந்த வேலையை செய்தோம்.

இப்படியாக கஷ்டப்பட்டு தயார் செய்த பிறகு, ஒரு மாதமோ இரண்டு மாதமோ தான் விளையாடி இருப்போம். அதன் பிறகு தென்மேற்கு பருவமழை பெய்தது. ஒரு நாள் பள்ளி விட்டு நாங்கள் அந்த வயல் மைதானத்தை கடக்கும் போது, அந்த வயலின் சொந்தக்காரர் அதில் டிராக்டர் விட்டு உழுதுகொண்டிருந்தார். எங்களின் மைதானம், இத்தனை காலங்கள் வியர்வை சிந்தி தயார் செய்த மைதானம், சில சோள விதைகளையும் அவரை விதைகளை பயிராக்க அழிக்கப்பட்டுகொண்டிருந்தது. அந்த இனம் புரியாத வயசில் எங்களின் எல்லோருடைய நெஞ்சங்களும் சொல்ல முடியாத சோகத்தில் உடைந்துகிடந்தது. அதன் பிறகு விளையாட இடம் சரிவர கிடைக்காமல் வெவ்வெறு இடங்களில் விளையாடினோம். இதனிடையே, பக்கத்து ஊர்களுக்கும் போட்டிகளுக்காக சென்று வருவோம். பிறகு, எல்லோரும் பனிரெண்டாம் வகுப்பு முடித்து வேறு வேறு ஊர்களுக்கு கல்லூரி படிக்கச் சென்றதால், எங்கள் ஊரில் நான் கிரிக்கெட் விளையாடி கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

போன வருடம், எங்கள் ஊரை சேர்ந்த இரண்டு பையன்கள் மாவட்டங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு கோப்பை வாங்கி இருக்கிறார்கள் என்ற செய்தியை கேட்டு என் உள்ளம் மகிழ்ந்து போனது. என்னைப் போலவே, அப்போது எங்களது அணியில் இருந்த மற்றவர்களும் இதை கேட்டு மகிழ்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

[இந்தியாவில் உலககோப்பை நடந்த காலத்தில் தான் எங்கள் ஊரின் மிக அதிகமான நபர்கள் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலம். கிரிக்கெட் பற்ரிய ஆர்வம் அப்போது தான் அதிகமாக பரவியது. இப்போது கிட்டதட்ட முக்கால்வாசி பேர், இந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருப்பதாக என் நண்பர்கள் சொன்னார்கள்]

53 பின்னூட்டங்கள்:

said...

நண்பரே,
எனக்கும் கிட்டத்தட்ட இதே அனுபவம் தான். கிரிக்கெட் கற்றது. மைதானம் உண்டாக்கியது எல்லாமே உங்களைப் போல் தான்.

அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

said...

கார்த்தி! நச்சுன்னு ஒரு பதிவு. நம் அனுபவங்களை அசை போடுவதே ஒரு சுகம். இப்போ ஒரிஜினல் ஸ்டெம்ப், பால், பேட் என்று வாங்க வசதியிருந்தும் அந்த சுகம் இப்போ கிடைக்குமா? ஹூம்...

Anonymous said...

பாப் உல்மர் கிரிக்கெட் புக்கிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு. புக்கிகள், மாப்பியா, விளம்பரதாரர்கள் இவர்களின் கையில் கிரிக்கெட் உள்ளது. பாக்குரவனுங்க தான் கேனயனுங்க.

said...

adada....ore padhivu mazhaiya iruke....two days brk edukaradhukulla....

said...

porumaya eppadi ezhudhareenga maams....vazhakam pola tamizh cricket velayaaduthu.....

said...

naan ellam cric paarkarathoda sari...adhulayum ippa aarvam koranjidichi....

said...

sopper padhivu thalaiva ..nanum criket paththi oru padhivu potrundhane paarka

http://bharathi-kannamma.blogspot.com/2006/11/blog-post_07.html

said...

ada ada..
world cupku thaguntha mathiri nalla thaan tortoise suthi irukkenga

Anonymous said...

Nice flow karthi. felt nostolgic.
r u playing cricket in US..?
inga bnglre vanthu cricket adave mudiyala. cha*

Anonymous said...

Ungal cricket anubavam rasikum padi iruntathu ;-)

said...

முதல்லயா! OK.எங்கதான் கத்துக்கிட்டீங்களோ வாத்தியாரே இப்பிடி எழுத. எதப் பத்தி எழுதுனாலும் படிக்கிறவங்களோட மனச அவுங்க விளையாட்டுப் பருவத்துக்கு கை புடிச்சு கூட்டீட்டுப் போயிரீங்க. :-)

said...

அப்புறம் வாத்தியாரே நம்ம பக்கம் வந்து commentணீ ங்க போல. சபரி ஒரு மொக்க கத்தி.இதுக்காக ஒரு பதிவு போட ஆணி விடல.

said...

தல, என்னாதிது.. பதிவு மழையா கொட்டுது.. ஆணியெல்லாம் ஒன்னும் இல்லயா?? நீங்க எழுதற வேகத்துக்கு நம்மாள படிக்க கூட முடியாது போலிருக்கு....கலக்கறீங்க... நச் நச்சுன்னு மலரும் நினைவுகளை எடுத்து விட்டு கடந்த கால இனிய நினைவுகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தறீங்க.. வாழ்த்துக்கள்

said...

தல
கிரிக்கெட்டிலும் கலக்கியிருக்கீங்க போல ;-))

அப்படியே பழை நினைவுகள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது.

நன்றி தல...

said...

அப்பா!!!!! உங்க கமெண்ட் பெட்டியே திறக்கலை! ரொம்ப நேரம் கழிச்சுத் தான் திறந்தது. அப்புறமா வரேன், பின்னூட்டம் கொடுக்க. இப்போ முடியலை!

said...

நல்ல பதிவு டேவிட் பூன் :)

said...

supera ezhudhi irukkinga. Enakku cricket pathadha thavira no experience...

//எங்கள் ஆட்டத்தை காணவே பெரும் கூட்டம் இருக்கும். //
appave kalakki irukkinga..

//அப்படி எனக்கு கிடைத்த பேர், ஆஸ்திரேலியா வீரர் டேவிட் பூன் பெயர்.//
idhellam ungalukke konjam too mucha illaya thalaiva???

//போன வருடம், எங்கள் ஊரை சேர்ந்த இரண்டு பையன்கள் மாவட்டங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு கோப்பை வாங்கி இருக்கிறார்கள் என்ற செய்தியை கேட்டு என் உள்ளம் மகிழ்ந்து போனது. //
selction boardla irukkara politics kuranja indha madhiri pasanga india teamkku vilayadalam..

said...

//இப்போது கிட்டதட்ட முக்கால்வாசி பேர், இந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருப்பதாக என் நண்பர்கள் சொன்னார்கள்//

namma makkal eppa dhan thirundhuvangalo!

said...

Super post Karthik!!!
Bharani sonna maathiri unga thamizh cricket aaduthu... :)

Naanlam, chinna vayasula vazhkaiye cricket'a than irunthuthu... appuram aani pudunga aarambicha appuram koranjuduchu... ippo cricket paakurathe periya vishayama irukku :)
Yeppadi iruntha naan ippadi aagiten :)

said...

எங்க ஊருக்கும் ஒரு லகான் கதை இருக்கு. pitchஅ உழுவுறது எல்லாம் சர்வ சாதாரணம். கூடுதலா எங்க ஊர் அம்மாக்கள், batஅ அடுப்புல வைச்சு எரிச்ச சோகக் கதைகளும் உண்டு

said...

aahaa circket pathi innoru posta! kalakareenga!

said...

நம்ம எல்லாம் கிரிக்கெட் விளையாடிய இந்த காலங்கள் வசந்தகாலம்.. மறக்கமுடியாதவை!

said...

nostalgic memories kaarthi! ippadi neenga kashtapaatu senja maithaanatha uluthu sedi nattutaangala! ..:((

naanga vilayadi jannal udaichapa thittu vaangana kadhaiya vida sogama irukku! :)

said...

நல்லா இருக்கு உங்க அனுபவம்.
உங்கள் சக நண்பர்களுக்கு தமிழில் பின்னூட்டம் இடுவது எப்படி என்று கொஞ்சம் கோடி காட்டக்கூடாதா?
படிக்கவே கஷ்டமாக இருக்கு.

said...

//naan ellam cric paarkarathoda sari...adhulayum ippa aarvam koranjidichi....//

நானும் தான்...ஆனா இன்னும் அதே ஆர்வத்தோட பாக்காம இருக்கேன் :-)

said...

வேகப்பந்துவீச்சாளரே.. நீங்களும் மைதானம் எல்லாம் உருவாக்குனீங்களா.. கேட்கவே சந்தோசமா இருக்குங்க

said...

/இப்போ ஒரிஜினல் ஸ்டெம்ப், பால், பேட் என்று வாங்க வசதியிருந்தும் அந்த சுகம் இப்போ கிடைக்குமா? ஹூம்...//

உண்மையான கருத்துங்க அபி அப்பா

said...

/adada....ore padhivu mazhaiya iruke....two days brk edukaradhukulla....//

சென்னைல மழை இல்லைன்னு சொன்னாங்க.. நல்லா நனைஞ்சுட்டு போப்பா, மாப்ள

said...

//vazhakam pola tamizh cricket velayaaduthu.....//

நன்றிப்பா மாப்ள

said...

/naan ellam cric paarkarathoda sari...adhulayum ippa aarvam koranjidichi.... //

இப்போ நம்ம அணி விளையாடுறதை பாத்தா, எல்லோரும் உன் கட்சிக்கு மாறிடுவாங்கப்பா பரணி

said...

//sopper padhivu thalaiva ..nanum criket paththi oru padhivu potrundhane paarka //

நன்றி கார்த்திக்.. கட்டாயம் வந்து படிக்கிறேன்

said...

/ada ada..
world cupku thaguntha mathiri nalla thaan tortoise suthi irukkenga //

அதையெல்லாம் பாத்து தாங்க கொசு சுத்துதுங்க

said...

//Nice flow karthi. felt nostolgic.
r u playing cricket in US..?
inga bnglre vanthu cricket adave mudiyala. cha*//

நன்றிப்பா அம்பி.. இங்கேயும் அக்டோபர் மாதம் விளையாடினோம்.. மறுபடியும் விளையாட ஆரம்பிக்கணும்..

said...

/Ungal cricket anubavam rasikum padi iruntathu //

நன்றி ஹனிஃப் :-)

said...

//எதப் பத்தி எழுதுனாலும் படிக்கிறவங்களோட மனச அவுங்க விளையாட்டுப் பருவத்துக்கு கை புடிச்சு கூட்டீட்டுப் போயிரீங்க//

நீங்கள் எல்லாம் படிச்சு படிச்சு என்னை இப்படி எழுத தீட்டினீங்க செந்தில்

said...

// நச் நச்சுன்னு மலரும் நினைவுகளை எடுத்து விட்டு கடந்த கால இனிய நினைவுகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தறீங்க.. வாழ்த்துக்கள்
//

ஆணியெல்லாம் இருக்குப்பா ACE.. ஆனாலும் தினமும் குறைஞ்சது அரைமணி நேரம் இதற்கென்று ஒதுக்கிடுறோம்ல ACE

said...

//தல
கிரிக்கெட்டிலும் கலக்கியிருக்கீங்க போல//

எங்க ஊருக்குள்ள கலக்கினதோட சரி, கோபிநாத்

said...

//அப்பா!!!!! உங்க கமெண்ட் பெட்டியே திறக்கலை! ரொம்ப நேரம் கழிச்சுத் தான் திறந்தது. அப்புறமா வரேன், பின்னூட்டம் கொடுக்க. இப்போ முடியலை!

//

உங்களுக்கும் இந்த பிளாக்கருக்கும் என்ன சொத்து சண்டையா, மேடம்

said...

//நல்ல பதிவு டேவிட் பூன் //

நன்றிங்க மணிகண்டன்

said...

/selction boardla irukkara politics kuranja indha madhiri pasanga india teamkku vilayadalam..
//

கரெக்டா சொன்னீங்க ப்ரியா..

////அப்படி எனக்கு கிடைத்த பேர், ஆஸ்திரேலியா வீரர் டேவிட் பூன் பெயர்.//
idhellam ungalukke konjam too mucha illaya thalaiva???
//

ஹிஹிஹி.. தானா வந்த பேர், ப்ரியா

said...

//namma makkal eppa dhan thirundhuvangalo! //

இப்போதைக்கு கிடையாதுங்க ப்ரியா

said...

//Yeppadi iruntha naan ippadi aagiten//

எல்லோரும் இப்படித் தான் KK

said...

//கூடுதலா எங்க ஊர் அம்மாக்கள், பட்அ அடுப்புல வைச்சு எரிச்ச சோகக் கதைகளும் உண்டு //

நாங்க அடுப்பு எரிக்க வச்சிருக்க தென்னை மட்டையை வைத்து தான் கிரிக்கெட்டே விளையாடுவோம், ரவி :-)

said...

/aahaa circket pathi innoru posta! kalakareenga//

:-)

said...

//நம்ம எல்லாம் கிரிக்கெட் விளையாடிய இந்த காலங்கள் வசந்தகாலம்.. மறக்கமுடியாதவை! //

இன்னும் பசுமரத்தாணி மாதிரி அப்படியே நெஞ்சுல இருக்குங்க ட்ரீம்ஸ்

said...

//naanga vilayadi jannal udaichapa thittu vaangana kadhaiya vida sogama irukku!//

ஆமாங்க ட்ரீம்ஸ்.. அப்போ எங்களை அறியாம கண்ணுல இருந்து தண்ணீர்!

said...

//நல்லா இருக்கு உங்க அனுபவம்.//

நன்றிங்க குமார்..

//உங்கள் சக நண்பர்களுக்கு தமிழில் பின்னூட்டம் இடுவது எப்படி என்று கொஞ்சம் கோடி காட்டக்கூடாதா?
படிக்கவே கஷ்டமாக இருக்கு. //

பலபேர் அலுவலகத்துல இருந்து தான் பின்னூட்டம் போடுறாங்க.. அதனால அவங்களுக்கு அது கொஞ்சம் கஷ்டம் தான் குமார்

said...

//athu seri neraya aani pudunganumnu sollitu ipdi jet vegathula post potta naanga padika veendama:)//
ஆணிகள் இருக்கத்தான் செய்யுது வேதா.. ஆனா என்ன பண்றது..

//konjam slow panikonga appuram ezhutha matter illama poida poguthu:) //

துணை முதல்வரே நீங்க சொல்லிட்டீங்கள்ல.. இனிமே குறைச்சுக்குறேன் வேதா

said...

//நானும் தான்...ஆனா இன்னும் அதே ஆர்வத்தோட பாக்காம இருக்கேன்//

அப்படியே இருந்துடுங்க நாட்டாமை

said...

http://islamkalvi.com/web/converter.htmt

கார்த்தி- இந்த பக்கத்தை கொடுத்துப்பாருங்க.ஒரு வேளை உதவினாலும் உதவும்.

said...

Enga theruvula cricket enga thambi ga vilayadum poadhu....

Enga maadikku ball vandhuchunaa ball yeduthukittu thiruppi tharamaa naanum en thangaichiyum vambu pannuvoom ...Adhaanga gyabagam varudhu...

Apuram cricket match na,Ellam enga veetukku vandhuduvaanga,Sentiments ellam paarthu,nee anga ukkaru naan inga ukkaruvaen ellam avanga avanga place ukkaruvoom...Apa thaan India win pannumam...Adhu oru azhgiya nila kaalamaachu...

Indha weekend oorukku ponappoo world cup match(Ind Vs Ban) kooda apdi thaan paarthoom...But edam maari ukkarundhoom..Adhu naal dhaan India lose panniduchunu...(Ind Vs Bermuda) adhae position la ukkarundhoom..India win paniduchula...Siru pilla thanamaa irukaa?

Sari sari mokkai niruthiduraen...

Nalla rasikkum padiyavae kosuvathi surul suthureenga Karthik...

said...

//கார்த்தி- இந்த பக்கத்தை கொடுத்துப்பாருங்க.ஒரு வேளை உதவினாலும் உதவும்.
//

நன்றிங்க குமார்.. கட்டாயம் முயற்சித்து பாக்குறேன்

said...

//Sari sari mokkai niruthiduraen...
//
ஒரு போஸ்டே போட்டுட்டீங்க ராஜி..

//
Nalla rasikkum padiyavae kosuvathi surul suthureenga Karthik... //

நன்றிங்க ராஜி