தாலி கட்டா தாரம்
எனக்காய்
எப்போது காத்து
கிடப்பாள்...
நான்
வந்து
கை வைத்தால்
பாடுவாள்
ஆடுவாள்
எனக்காய்
எல்லாம் செய்வாள்...
அலுவலகம் சென்று
வீடு
திரும்பும் வரை
தூங்கி கிடப்பாள்...
வந்தவுடன்
ரஜினி முதல்
ராஜேந்தர் வரை
செய்திகள்
சொல்வாள்...
கிரிக்கெட் முதல்
கில்லி வரை
அரட்டை அடிப்பாள்...
அவளைச் சுமந்து
அப்படியே
ஷோபாவில்
வைத்து மடியில்
தாங்குவேன்...
இவள்
மேனியில்
என்
விரல்கள்
விளையாண்டால்
அது தான்
புதுக்கவிதை!
எல்லாம்
சொல்லிவிட்டேன்
யாரது
என்று
உங்கள் மனம்
தெரிந்திட
துடிக்கிறதா..
அவள்,
HP பெற்றெடுத்த
பெவிலியன் 6000..
அக்டோபர்
இறுதியில் தான்
தாலி கட்டாத
தாரமானாள்..
எல்லோரும்
சொன்னார்கள்
லேப்டாப் என்று..
இப்போதெல்லாம்
இது
இல்லையென்றால்
இதயம்
அடிக்கவில்லை
லப்-டப்..
ஆணி அடித்து அடித்து கைகளும் மனசும் காய்ந்து விட்டது. வேறு வழியில்லாமல் இப்படி ஒரு மொக்க கவிதை. மாப்ள பரணி சொல்ற மாதிரி இதை படிப்பதெல்லாம் உங்கள் தலைவிதி.. ரெண்டு வார்த்தை திட்டிட்டு போங்க மக்கா..
எப்போதும் போல இன்னைக்கும் ஒரு கேள்வி.. தலைப்பில் இருக்கிற இலக்கண விஷயம் என்ன, சொல்லுங்கள்...
50 பின்னூட்டங்கள்:
நான் firsta?
hihi கவித பாதியிலயே லேப்டாப் என்று கண்டுபிடிச்சிட்டேன்!
//வந்தவுடன்
ரஜினி முதல்
ராஜேந்தர் வரை
செய்திகள்
சொல்வாள்...//
;)
//எப்போதும் போல இன்னைக்கும் ஒரு கேள்வி.. தலைப்பில் இருக்கிற இலக்கண விஷயம் என்ன, சொல்லுங்கள்... //
என்னாது? இலக்கணமா? எனக்கு அதெல்லாம் 12தோட மறந்திடுச்சு!
சரி... பாப்போம்.. தாலி கட்டினா தான் தாரம்.. தாலு கட்டா தாராம் என்பது எதிர்மறையா இருக்கா?
ஹி ஹி.. சும்ம அடிச்சு விடறது தான்!
கார்த்தி, நம்ம அடுத்த பதிவு இப்ப தான் போட்டேன்.. கடப்பாறை பக்கம் போக்கும் முன் வந்தூ பார்த்திடுங்க ;)
அது ஷோபா இல்ல..சோஃபா!
ஈறு கெட்ட எதிர் மறைப் பெயரெச்சம் - சரியாகப் படிக்கவும் - பெயரச்சமில்லை ;-)))
பாலராஜன்கீதா, உங்கள் பதில் சரியானது. அதனால் இப்போதைக்கு அந்த பின்னூட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறேன் :-)
தல
லேப்டாப் கவிதை கலக்கல் ;)))
\\இவள்
மேனியில்
என்
விரல்கள்
விளையாண்டால்
அது தான்
புதுக்கவிதை!\\
தூள்கிளப்புரிங்க தல
தாலி கட்டா/த்/ தாரம் - சந்திப் பிழை.
Latest technology kavithai ;-)
laptop
mokka kavidhaye pirichi menji irukeenga....
edhai pathinaalum ore aruvi maadhiri kotudhu kavidhai...kalakunga maams :)
namaku illakanam ellam theriyaadhu...so me escape :)
சரிதான், நீங்களும் புதிர் எல்லாம் போட ஆரம்பிச்சாச்சா? அப்புறமா வரேன். ரொம்பவே ஆணி வீட்டிலே! கால், கை எல்லாம் குத்திடுச்சு. அதனாலே ஒண்ணும் முடியலை! விடை தெரிஞ்சது. அப்புறம் நிதானமா வந்து சரியான்னு பார்த்துக்கறேன். ஏதோ ஒரு 10,000$னு கொடுத்தா இப்போவே சொல்லி இருப்பேன். :P
நீங்க நம்ப கேங் போல இருக்கே ;-)
கார்த்தி,
கவுஜ சூப்பரப்பு :)
எனக்கு சோனி தான் :)
சூப்பர் கவிதை!! லிமரிக்ஸ் முயற்சி பண்ணி பாருங்களென்
//இவள்
மேனியில்
என்
விரல்கள்
விளையாண்டால்
அது தான்
புதுக்கவிதை//
மொக்கை பதிவிலேயே இந்த அளவு கலக்கறீங்க.. அருமையான வரிகள் :)
இலக்கணத்தை சீக்கிரமா சொல்லுங்கப்பா.. யோசிச்சு யோசிச்சு முடி எல்லாம் போயிடும் போலிருக்கு..:))
பாலராஜன்கீதா சொன்ன மாதிரி ஈறு கெட்ட எதிர் மறைப் பெயரெச்சம் என்பது தான் சரியான விடை..
கட்டிய என்ற வார்த்தையின் எதிர்மறைச் சொல் கட்டாத.
அதன் ஈறு - கடைசி எழுத்து த..
எதிற்மறை சொல்லில் ஈறு கெட்டுவிட்டதால் இது ஈறு கெட்ட எதிர் மறைப் பெயரெச்சம்.
சந்தேகம் இருந்தால் கேளுங்கப்பா
//hihi கவித பாதியிலயே லேப்டாப் என்று கண்டுபிடிச்சிட்டேன்! //
அறிவாளிப் புள்ள நீங்க ட்ரீம்ஸ்
//என்னாது? இலக்கணமா? எனக்கு அதெல்லாம் 12தோட மறந்திடுச்சு! //
என்னங்க எப்படி சொல்லிட்டீங்க ட்ரீம்ஸ்
//சரி... பாப்போம்.. தாலி கட்டினா தான் தாரம்.. தாலு கட்டா தாராம் என்பது எதிர்மறையா இருக்கா?
ஹி ஹி.. சும்ம அடிச்சு விடறது தான்! //
அட! விடைக்கு பக்கத்துல வந்துட்டீங்க எதிர்மறைன்னு சொல்லி
//கார்த்தி, நம்ம அடுத்த பதிவு இப்ப தான் போட்டேன்.. கடப்பாறை பக்கம் போக்கும் முன் வந்தூ பார்த்திடுங்க ;) //
ட்ரீம்ஸ், நல்ல வேளை சொன்னீங்க..
//அது ஷோபா இல்ல..சோஃபா!//
அனான், உங்களுக்கு நன்றிங்க.. நமக்கு இந்த பிள்ளைக பேரு தாங்க வருது எப்பவுமே
//தூள்கிளப்புரிங்க தல //
ஹிஹிஹி.. நன்றிப்பா கோபி
/தாலி கட்டா/த்/ தாரம் - சந்திப் பிழை. //
சாரிங்க அனான்.. அது தப்பு
/Latest technology kavithai ;-) //
Thanks pa hanif
//mokka kavidhaye pirichi menji irukeenga.... //
பரணி.. உன் அளவுக்கு வரமுடியலைனாலும் ஏதோ என்னால முடிஞ்சதுப்பா மாப்ள
/edhai pathinaalum ore aruvi maadhiri kotudhu kavidhai...kalakunga maams //
நன்றிப்பா மாப்ள
/namaku illakanam ellam theriyaadhu//
5 mark questionpaa Maapla
// ஏதோ ஒரு 10,000$னு கொடுத்தா இப்போவே சொல்லி இருப்பேன்.//
ஆஹா.. என் கிட்ட இருந்த அந்த 10,000 டாலரை வாங்காம விட மாட்டீங்க போல மேடம்
/நீங்க நம்ப கேங் போல இருக்கே //
அப்படியா துர்கா.. ஆமா.. எந்த கேங்?
//எனக்கு சோனி தான் //
அப்ப, சோனி பெற்றெடுத்த வயோன்னு சொல்லிக்கலாம் ராம்
//சூப்பர் கவிதை!! லிமரிக்ஸ் முயற்சி பண்ணி பாருங்களென் //
நன்றிங்க.. அப்படின்னா என்னங்க அம்மிணி
/மொக்கை பதிவிலேயே இந்த அளவு கலக்கறீங்க.. அருமையான வரிகள்//
நன்றிங்க ACE!
தல நயன் ல இருந்து லேப்டாப் வரைக்கும் உங்களால மட்டும் தான் கவித எழுத முடியும் :-)
//தலைப்பில் இருக்கிற இலக்கண விஷயம் என்ன, சொல்லுங்கள்...
//
அப்படின்னா? :-)
ரெண்டு வார்த்தை.
(நீங்க தானே ரெண்டு வார்த்தை திட்டச் சொன்னீங்க? :-))
//தல நயன் ல இருந்து லேப்டாப் வரைக்கும் உங்களால மட்டும் தான் கவித எழுத முடியும்//
ஹிஹிஹி. நன்றிங்க நாட்டாமை
//நீங்க தானே ரெண்டு வார்த்தை திட்டச் சொன்னீங்க? :-)) //
எங்கேயோ போயிட்டீங்க அரசி
ரெண்டு மூனு நாளா இங்கெ வரலை.. அதுக்குள்ளே பதிவு மடமடவென்று நிறைஞ்சிருச்சு!!! ;-)
//அவள்,
HP பெற்றெடுத்த
பெவிலியன் 6000..//
ஏன் உங்க ஆபிஸ் கம்ப்யூட்டர் உங்களுக்கு இந்த விஷயங்களைப் பற்றி சொல்லாதோ?
//அக்டோபர்
இறுதியில் தான்
தாலி கட்டாத
தாரமானாள்..//
நீங்க உங்க "மனைவி"யை பணம் கொடுத்து வாங்கிய கதையையும் உங்க வலையில் படித்ததை நான் இன்னும் மறக்கலை தலைவரே! ;-)
//எல்லோரும்
சொன்னார்கள்
லேப்டாப் என்று..
இப்போதெல்லாம்
இது
இல்லையென்றால்
இதயம்
அடிக்கவில்லை
லப்-டப்..//
இது சூப்பர். எனக்கு கணிணி இல்லயென்றாலே இதய லப்-டப்ன்னு அடிக்காமல் நின்னு போயிடும்.. :-)
//எப்போதும் போல இன்னைக்கும் ஒரு கேள்வி.. தலைப்பில் இருக்கிற இலக்கண விஷயம் என்ன, சொல்லுங்கள்...//
என் கிட்ட இதுல இலக்கணம் எதுன்னு எல்லாம் கேட்டீங்கன்னா, நான் என்னனு சொல்லுவேன். தெரிஞ்ச கேள்வியா கேளுங்க.. இல்லைன்னா, அன்ச்சர் லீக் அவுட் பண்ணிடுங்க (எனக்கு மட்டும்.. ஹிஹிஹி).. ;-)
மொக்க கவிதைனு சொல்லி தன்னடக்கத்தோட Laptop ஐ வைத்து ஒரு புதுக்கவிதய அசால்ட்டா அடிச்சு விட்டு அதுலயெ ஒரு இலக்கணம் சம்பந்தமா ஒரு கேள்வியும் வச்சு, கலக்குறே கார்த்தினு வேர comment னுமா!! :-)
Post a Comment