மாயக்கண்ணாடி - இசை தொகுப்பு பற்றிய பார்வை
சேரன், கடந்த பத்து வருடங்களில் ஏழு படங்கள் தான் இயக்கி இருந்தாலும், அவரின் எல்லாப் படங்களும் தியேட்டர்களில் வசூலை குவிக்கவில்லை என்றாலும், தன்னுடைய பாணி இயக்கத்தில் (கமர்ஷியல் என்னும் வட்டத்துக்குள் இருந்தாலும் ஆபாசம் என்பதை கொஞ்சம் கூட கலக்காதவர்), கருத்துக்கள் சொல்லி சமுதாயத்துக்கும் இந்த மனித சமுதாயத்தின் உறவுகளை புரிந்து கொள்ளும் திறனையும் கொண்ட அருமையான படங்களை தந்துள்ளார். தேசிய கீதம் என்ற படத்திற்கு பிறகு இளையராஜா இசை இயக்கத்தில் மாயக்கண்ணாடி என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார், சேரன். படத்தின் இதர இறுதி வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில், பாடல்கள் கடந்தவாரம் வெளியிடப்பட்டிருக்கிறது. இளையராஜா இசையை விமர்சனம் பண்ணும் அளவுக்கு நமக்கு இசையில் ஞானம் கிடையாது. ஆனால் இளையராஜா என்னும் இசை ஊற்றில் தான் இத்தனை காலங்கள் நம் வாழ்க்கை வளர்ந்தது என்பதும் அதை தேடி நாம் மேற்கொண்ட பயணங்கள் பற்றியும் உங்களுக்கெல்லாம் ஏற்கனவே தெரியும். இது மயிலின் அழகை பார்த்து விக்கித்து நின்ற ஒரு காக்கை மயிலின் அழகை சொல்வதை போலத் தான்.
இன்ட்ரோடக்க்ஷன் (அறிமுகம்) - இளையராஜா
இது முழுக்க முழுக்க படத்தை பற்றியும் சேரன் பற்றியும் இளையராஜா தனது சொந்த கருத்துகளை கூறுகிறார்.. படத்தின் இசை அமைக்கப்படும் போது நடந்த சுவையான விஷயங்கள் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். முதன் முதலாக இப்படி ஒரு படத்தை பற்றி, தொலைக்காட்சிகளில் படத்தை பற்றி விளம்பரம் மற்ற நடிகர்கள் அந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர் பேட்டி கொடுப்பது போல, இதில் இளையராஜா பேசியிருக்கிறார். இது இந்த படத்தை பொறுத்தவரை மட்டுமல்ல இளையராஜாவை பொறுத்தவரை புதுமையான விஷயம்.
காதல் இன்று - இளையராஜா
இன்றைய காதலை பற்றிய பாடல்.. அழகான வரிகள்.. இளையராஜாவின் குரலில் இது போன்று பாடல்கள் கேட்டு நீண்ட நெடு நாட்களாகிவிட்டது. இசையும் பாடலுடன் அருமையாக ஒத்துப் போகிறது. இசையை விட பாடுபவரின் குரல் வலிமையாக இருக்கும் ஒரு சில பாடல்களில். அது இளையராஜா பாடும்போது நன்றாக தெரியும், ஒரு வேளை அவர் இசை என்பதாலா என்று தெரியவில்லை. ஐஸ்கிரீம் பார்லர்களிலும் ஏசி தியேட்டர்களிலும் முடிந்துவிடுகின்ற இன்றைய காதலையும் கல்லில் செதுக்கியதாய் இருக்கும் அன்றைய காதலையும் பற்றி சொல்கிறது இந்தப் பாடல்.
காசு கையில் - இளையராஜா
முதல் பாடலான "காதல் இன்று"வின் அதே இசை படிவத்தில் இந்த பாடல் அமைந்துள்ளது. அது காதலை பற்றிச் சொன்னால், இந்த பாடல் காசு இல்லை என்றால் இந்த உலகில் ஒன்றும் இல்லை என்று சொல்லும் பாடல். இதையும் இசைஞானியே பாடியுள்ளார். இசைஞானிக்கு இத்தனை ரசிகர்கள் இருப்பது ஆச்சரியமில்லை என்று நமக்கு புரிய வைக்கும் பாடல். அப்படி ஒரு தனி ஆவர்த்தனம் செய்கிறார் பாடலில்.
ஒரு மாயலோகம் - திப்பு மற்றும் மஞ்சரி
ஆழ்மனசை கொள்ளையடிக்கும் கிதாரின் ஒலியில், மேற்கத்திய இசையின் வடிவத்தில் இந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்த படத்தின் ஏனைய பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, பட்டினத்து வாடை அதிகம் கலந்ததாய் இருக்கிறது. திப்புவும் மஞ்சரியும் அருமையாய் பாடியிருக்கிறார்கள்.
கொஞ்சம் கொஞ்சம் - கார்த்திக் மற்றும் ஷ்ரேயா கோஷல்
மெலடி என்றால் மேஸ்ட்ரோ தான்.. அவரை அடித்துகொள்ள ஆளே கிடையாது. இந்த கூற்றை மறுபடியும் நிரூபிக்கும் பாடல் இது. கார்த்திக்கின் குரலும் ஷ்ரேயாவின் குரலும் ஒரு புல்லாங்குழலில் வழிந்தோடும் காற்றை போல நமது காதுகளில் வழிகிறது, இந்த புத்தம் புதிய இசை. தாளங்கள் சரியான அளவில் அமைக்கப்பட்டு இன்றைய தலைமுறையையும் ஈர்க்கும் வகை இசை அமைந்துள்ளது. இந்த பாடல் முழுக்க அழகன் படத்தில் மம்மூட்டி, பானுப்பிரியா மாதிரி செல்போனை பேசிக்கொண்டே இருப்பதை போல இருக்கும் என்பது என் சின்ன கூற்று, இளையராஜா பேசியதிலிருந்து.
உலகிலே அழகி - விஜய் யேசுதாஸ் மற்றும் நந்திதா
காதுகளுக்கு வலிக்காமல், மெல்ல அப்படியே தேன் வழிந்து ஓடி இதயம் தொடுவது போல் இருக்கிறது விஜய் யேசுதாஸின் குரல். அவர் கூட, இணைந்து பாடியிருக்கிறார் குயில் நந்திதா. மெல்ல மெல்ல படர்ந்து காலை நேரத்தை பனியது மூடுவது போல், நம்மை மூழ்கடிக்கிறது இந்தப் பாடல். இந்த பாடலில், தபேலாவும் வீணையும் நம் மனசை மகுடியாய் ஆட வைக்கிறது. முந்திகாலத்தில் KJ யேசுதாசுக்கு இருக்கும் வலிமை இப்போது விஜய்க்கும் மெல்ல தொற்றிக்கொண்டது. இன்னும் சில காலங்களுக்கும எல்லோர் மனதையும் வருடும் இந்த இசை மயிலிறகு.
ஏலே எங்க வந்த - இளையராஜா மற்றும் குழுவினர்
நடிகனாகி உலகை ஆள வேண்டும் என்ற கனவில் சென்னைக்கு வந்திறங்கும் ஆயிரமாயிரம் இளைஞர்களுக்கான பாடல். வேகத்திலான இசையுடன் கால்களை நடனமாட விடும் இந்த பாடல் இந்த இசை ஆல்பத்தில் முதலில் இருக்கிறது. இந்த பாடலையும் இசைஞானியே பாடியுள்ளார். இந்த மாதிரி பாடல்களை மேஸ்ட்ரோ பாடி மாமாங்கம் ஆகிவிட்டது. முதன் முதலாய் இந்த பாடலை கேட்ட போது, சிவாஜி, சத்யராஜ் நடித்த ஜல்லிக்கட்டு படத்தில் வரும் ஹே ராஜ ஒன்றானோம் இன்று என்ற பாடல் தான் ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் கேட்க கேட்க மனது முழுவதும் மெல்ல ஒருவித துள்ளலை நிரப்புகிறது இந்த பாடல்.
மாயக்கண்ணாடி ஆரம்பித்த நாளில் இருந்தே எனக்குள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. இந்த இசை ஆல்பம் அதில் இன்னும் நிறைய எண்ணெய் ஊற்றியுள்ளது. இந்த தொகுப்பு நிச்சயமாய் இளையராஜாவுக்கு உள்ளுக்குள் ஒரு புதிய தெம்பைத் தரும். இதில் அவர் தன்னை இன்னும் புதுப்பித்துக் கொண்டுள்ளார். இந்த படத்தின் பாடல் வரிகள் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். இசைஞானி சொல்வதை போல சில இடங்களில் வெற்று வார்த்தைகள் வைத்து கவிஞர்கள் நிரப்புவது போல, இதில் ஒன்றும் இல்லை.. அதை சேரனும் அனுமதிக்கவில்லை. (உதாரணம் : பாட்ஷா படத்தின் ஆரம்ப பாட்டில் வரும் ஜுமுக்குயின்னா ஜுமுக்குத் தான்) ஒவ்வொரு வரியும் ஆழமான கருத்துக்களை கொண்டுள்ளது. இதே வீரியத்தை படத்திலும் நாம் பார்க்கலாம் என்ற நம்பிக்கை கிடைத்திருக்கிறது.
60 பின்னூட்டங்கள்:
சேரன் படம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்... இதுல இசைஞானி இசை. சொல்லவே தேவையில்ல.. சூப்பராத்தான் இருக்கும்.
இன்னும் பாட்ட கேக்கல ஆனா நீங்க சொன்னதுக்கு அப்பறம் உடனே கேக்கனும்னு இருக்கு.. இப்பவே தரையிரக்கம் செஞ்சிட்றேன் :)
தல, நல்ல ரசனையோட எழுதியிருக்கீங்க... அதுக்காக ஒரு "ஓ" :)
//
இது மயிலின் அழகை பார்த்து விக்கித்து நின்ற ஒரு காக்கை மயிலின் அழகை சொல்வதை போலத் தான்.
//
அருமை கார்த்தி
படம் எப்போ ரிலீஸ் ?
சொல்ல மறந்துட்டேன் பாருங்க.. ஸ்ரேயா கோஷல் வாய்ஸ் அடிச்சிக்க முடியாது. என்னமா பாடீர்க்கா பொண்ணு :)
ஆஹா! நான் firsta?
appurama vandhu padichu commentaren :)
innum paatu ketkala kaarthi, nalai thaan ketkanum illa weekend thaan! romba aani! :((
// இது மயிலின் அழகை பார்த்து விக்கித்து நின்ற ஒரு காக்கை மயிலின் அழகை சொல்வதை போலத் தான்.
//
adada! :)
//இசையை விட பாடுபவரின் குரல் வலிமையாக இருக்கும் ஒரு சில பாடல்களில். அது இளையராஜா பாடும்போது நன்றாக தெரியும், ஒரு வேளை அவர் //
nalla sonneenga!
//இது இந்த படத்தின் ஏனைய பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, பட்டினத்து வாடை அதிகம் கலந்ததாய் இருக்கிறது.///
mm... interesting!
padamum album hittaga valthukkal!
Where can I download the songs??
நல்ல அலசல்!!
வாழ்த்துக்கள்
பாடல்கள் டவுண்லோட் செய்து 2-3 நாள் ஆகியும் இன்னும் கேட்கவில்லை. உங்க விமர்சனத்தை படித்ததும் இப்போதேY கேட்கணும் போல இருக்கு.. இருங்க போய் கேட்டுட்டு வர்ரேன்.. ;-)
சேரனின் படம் நானும் விரும்பிப் பார்ப்பேண்.. அந்த தேசிய கீதம் என்கிற படம்.. அருமையாஇ இருந்துச்சில்லே?
//தல, நல்ல ரசனையோட எழுதியிருக்கீங்க... அதுக்காக ஒரு "ஓ" :)//
OoooOoooooO...
//இன்னும் பாட்ட கேக்கல ஆனா நீங்க சொன்னதுக்கு அப்பறம் உடனே கேக்கனும்னு இருக்கு.. இப்பவே தரையிரக்கம் செஞ்சிட்றேன் :)
//
ரிப்பீட்டே..
//இது மயிலின் அழகை பார்த்து விக்கித்து நின்ற ஒரு காக்கை மயிலின் அழகை சொல்வதை போலத் தான்.
//
உங்க உவமைகள் எல்லாம் படிச்சா, 'உவமைக் கவிஞர்' சுரதா மாதிரி 'உவமைக் கவிஞர்' மு.கா னு பட்டம் குடுத்துடுவாங்க போலிருக்கு!
"உனக்குத் தெரியாத விஷயங்களில் தலையிடாதே!" ஹிஹிஹி, என்னோட மனசாட்சி சொல்லிட்டு இருக்கு, கிட்டத் தட்ட கூவுது, போங்க! அதனாலே ஒரு உள்ளேன் ஐயா! மட்டும்.
Nalla vimarsanam, cheran + ilayaraja kootu ,periya aavalai koduthullathu ;-)
//இது மயிலின் அழகை பார்த்து விக்கித்து நின்ற ஒரு காக்கை மயிலின் அழகை சொல்வதை போலத் தான்.
//
அருமை கார்த்தி. nice review. i wish the film to be hit like autograph.
//சொல்ல மறந்துட்டேன் பாருங்க.. ஸ்ரேயா கோஷல் வாய்ஸ் அடிச்சிக்க முடியாது. என்னமா பாடீர்க்கா பொண்ணு :) //
@Arun, makka, athu KK aalu! venaam kannaa! avan pongiduvaan! :)
ஆஹா.....என்ன பொருத்தம்...இப்ப தான் பாட்டை கேட்டு கொண்டுயிருந்தேன் அதுக்குள்ள பதிவை போட்டு கலக்கிட்டீங்க..
\\இந்த மனித சமுதாயத்தின் உறவுகளை புரிந்து கொள்ளும் திறனையும் கொண்ட அருமையான படங்களை தந்துள்ளார்.\\
அருமையான இயக்குனர். அவர் படங்கள் என்றால் கண்டிப்பா பார்த்துடுவேன்...
இளையராஜாவின் இசை பற்றி என்ன சொல்வது !!!!
ராசா பின்னியிருக்காரு.....எனக்கு எல்லா பாட்டும் பிடிச்சுருக்கு.
\\ஏலே எங்க வந்த - இளையராஜா மற்றும் குழுவினர்
இந்த மாதிரி பாடல்களை மேஸ்ட்ரோ பாடி மாமாங்கம் ஆகிவிட்டது\\
உண்மை தான் தல...கலக்கியிருக்காரு ராசா.
ம்ம்ம்ம்ம், காலையிலே வந்து இதுக்குப் பின்னூட்டம் போட்டேனே? எங்கே காணோம்? போகலியோ என்னவோ? ம்ம்ம்ம் ப்ளாகர் சதியா? எதிர்க்கட்சி சதியா?
இவ்வளவு சொன்ன நீங்கள் பாடல்களை எழுதியவர்[கள்] யார் எனக் குறிப்பிடவில்லையே!
உடனே கேட்க வேண்டும் போல ஆவலைத் தூண்டும் விமரிசனம்.
வாழ்த்துகள்!
அருமையான விமர்சனம். படிச்ச உடனே கேக்கனும் போல தோணுது.
innum pattulam kekkala.. nalla vimarsanam panni irukkinga. thanks.
cheran padam enakkum romba pidikkum. Ana enna padathula irukkara matha nalla vishayangalukkaga avar 20 vayasu payyana, college studenta nadiakkaradhellam pakkanum..
avar padathula vera heroes nadikka mattengarangalam. Paravalla, his movies are worth the kodumai.
தல கடப்பாறை...அதுனால அட்டெண்டன்ஸ் :-)
naan innum paatu ketkala maams...ketutu solren :)
evlo aanigal irundaalum asaraamal post podum engal thaanai thalaivan maams mu.ka ku rendu petti serthu anupungappa :)
kalaipa irupeenga maams...kaal pudichi vida akka asin-a vara solren :)
/இப்பவே தரையிரக்கம் செஞ்சிட்றேன்//
தரையிறக்கம் செஞ்சு கேளுங்க அருண்.. கேட்டுட்டு சொல்லுங்க எப்படி இருக்குன்னு
//தல, நல்ல ரசனையோட எழுதியிருக்கீங்க... அதுக்காக ஒரு "ஓ"//
நன்றி அருண்..
//படம் எப்போ ரிலீஸ் ? //
தெரில அருண்.. நானும் ரொம்ப எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்
/சொல்ல மறந்துட்டேன் பாருங்க.. ஸ்ரேயா கோஷல் வாய்ஸ் அடிச்சிக்க முடியாது. என்னமா பாடீர்க்கா பொண்ணு//
ஷ்ரேயா குரல், என்னிக்கும் இனிமை தான் அருண்
/innum paatu ketkala kaarthi, nalai thaan ketkanum illa weekend thaan! romba aani!//
அடடே! எல்லோருக்கும் ஆணியா! மெதுவா கேட்டுட்டு சொல்லுங்க ட்ரீம்ஸ்
/padamum album hittaga valthukkal! //
வாழ்த்துக்கு நன்றிங்க ட்ரீம்ஸ்.. படம் நிச்சயம் ஹிட் தான்
/Where can I download the songs??
//
tamilmp3world.com ponga ammini.. All new songs are available here
/நல்ல அலசல்!!//
நன்றிங்க சிவபாலன்!
/ இருங்க போய் கேட்டுட்டு வர்ரேன்//
கேளுங்க கேளுங்க கேட்டுட்டு வாங்க மை பிரண்ட்
/அருமையாஇ இருந்துச்சில்லே?//
நல்ல கருத்துள்ள படம்.. ஆனா ஓடல படம், மை பிரண்ட்
//உங்க உவமைகள் எல்லாம் படிச்சா, 'உவமைக் கவிஞர்' சுரதா மாதிரி 'உவமைக் கவிஞர்' மு.கா னு பட்டம் குடுத்துடுவாங்க போலிருக்கு! //
மணி, உங்க பாராட்டுக்கு நன்றி.. ஆனா இது ஒரு இமயத்தையும் மணல் குன்றையும் ஒப்புமை படுத்தற மாதிரி இருக்குங்க
//அதனாலே ஒரு உள்ளேன் ஐயா! மட்டும்.//
குறிச்சுகிட்டேன் தலைவியே
//Nalla vimarsanam, cheran + ilayaraja kootu ,periya aavalai koduthullathu//
athe athe enakkum haniff
/ i wish the film to be hit like autograph.
//
me too, ambi
உங்க கட்சியில ரிலே கவிதையெல்லாம் எழுதி கலக்கறீங்க.. நானும் "உளறுதல் என் உள்ளத்தின் வேலை" தலைப்புல (கட்சியின் அடிம(ப)ட்ட தொண்டனாய்) உளறியிருக்கேன். நேரமிருந்து ஆட்சேபணை இல்லைனா ஒரு முறை எட்டி பாருங்க.. நன்றி..
Very nice review!!!Though I have not heard the songs yet..The review was nice and interesting to read..Good Work..
Very nice review!!!Though I have not heard the songs yet..The review was nice and interesting to read..Good Work..
/அருமையான இயக்குனர். அவர் படங்கள் என்றால் கண்டிப்பா பார்த்துடுவேன்... //
கண்ட படங்களை எடுத்துவிட்டு மக்கள் பார்க்கிறார்கள் அதனால் தான் என்று சொல்வதெல்லாம் மூடர்கள்..
சேரன் அதிலிருந்து மிற்றிலும் வித்தியாசமானவர் கோபிநாத்
//இளையராஜாவின் இசை பற்றி என்ன சொல்வது !!!!
ராசா பின்னியிருக்காரு.....எனக்கு எல்லா பாட்டும் பிடிச்சுருக்கு.//
இசைஞானி குதுகலமாய் இசையமைத்திருக்கிறார் கோபிநாத்
//போகலியோ என்னவோ? ம்ம்ம்ம் ப்ளாகர் சதியா? எதிர்க்கட்சி சதியா? //
அதெல்லாம் மட்டுறுத்தல் செய்வதற்கு கொஞ்ச நேரம் ஆகிவிட்டது மேடம்.. அது தான்
//இவ்வளவு சொன்ன நீங்கள் பாடல்களை எழுதியவர்[கள்] யார் எனக் குறிப்பிடவில்லையே!//
வலையில் தான் பாடல்கள் தரையிறக்கம் செய்து கேட்பதெல்லாம் அதெல்லாம் தெரிவதில்லை SK.. முயற்சி செய்கிறேன்.. கிடைத்தால் போடுகிறேன்
//அருமையான விமர்சனம். படிச்ச உடனே கேக்கனும் போல தோணுது. //
நன்றிங்க ACE...
//matha nalla vishayangalukkaga avar 20 vayasu payyana, college studenta nadiakkaradhellam pakkanum.. //
நீங்க சொல்றதும் கரெக்ட் தான் ப்ரியா.. என்ன பண்றது.. ஆட்டோ கிராப் படத்துல வேற யாரும் நடிக்க வரமாட்டேன்னு சொல்லிட்டீங்களே
/தல கடப்பாறை...அதுனால அட்டெண்டன்ஸ் //
உங்களுக்குமா நாட்டாமை?
/naan innum paatu ketkala maams...ketutu solren//
கேட்டுட்டு சொல்லுப்பா மாப்ள
/evlo aanigal irundaalum asaraamal post podum engal thaanai thalaivan maams mu.ka ku rendu petti serthu anupungappa//
நீங்க எல்லாம் எப்படி எல்லாம் சொல்லி சொல்லியே இப்போ எல்லாம் என்னால ஒழுங்கா பதிவைப் போடமுடியல மாப்ள :-(
//kalaipa irupeenga maams...kaal pudichi vida akka asin-a vara solren//
உனக்குத் தான் என் மேல எவ்வளவு பாசம் மாப்ள..அவ்வ்வ்வ்வ்வ்வ்
/ நேரமிருந்து ஆட்சேபணை இல்லைனா ஒரு முறை எட்டி பாருங்க.. //
கட்டாயம் வர்றேங்க ACE
/Very nice review!!!Though I have not heard the songs yet..The review was nice and interesting to read..Good Work.. //
நன்றிங்க Fantasy :-)
Post a Comment