செவ்வந்தி தோட்டத்தில இன்னைக்கு சூட்டிங்காம்
வி.எம்..நம்ம ஊர் கலிக்கம்பட்டியாரோட செவ்வந்தி தோட்டத்தில இன்னைக்கு சூட்டிங்காம்.. ஊரே அங்க தான் போயிகிட்டு இருக்கு.. நீ மட்டும் என்ன பண்ற.. வா வி.எம் போகலாம்.. சைக்கிள்ல வந்து கூப்பிட்டான் நண்பன் வில்ஸன். அப்புறம் பள்ளிக்கு நேரமானதால அப்படியே நேரா ஸ்கூல்லுக்கு கிளம்பியாச்சு.. ஸ்கூல்ல இருந்து வர்றப்போ அப்படியே போகலாம்னு ஒரு பிளான்.
அட.. எனக்கு ஏன் வி.எம் னு பேர் வந்ததுன்னு சொல்லவே இல்லியே.. ஏற்கனவே அதபத்தி சொல்றேன்னு சொல்லியும் சொல்லவே இல்ல.. அந்த காரணத்தையும் இப்பவே சொல்லிடுறேன்.. நான் ஓன்பதாவது தம்பித்தோட்டத்தில படிச்சுகிட்டு இருந்தப்போ, எம். கார்த்தின்னு ஒருத்தன் வந்து சேர்ந்தான். ரெண்டு பேருக்கும் ஒரே இனிஷியல்..ஒரே பேர்.. டீச்சர், ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் இன்னொரு இனிஷியலை முன்னாடி வச்சிக்கோங்க..அதுக்கு அவங்க அவங்க அப்பாக்கிட்ட கேட்டுட்டு வாங்க.. அப்படின்னு டீச்சர் சொன்னாங்க.. சரின்னு போயி அப்பாகிட்ட கேட்டா, அப்பா வி.ன்னு சேர்த்துக்க அப்படின்னு சொன்னாங்க.. கிராமத்துல ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வீட்டு பேர் இருக்கும். அது மாதிரி எங்களுக்கு வேம்ப வீடுன்னு பேர்.. எங்க குல தெய்வம் வேம்ப கருப்பண்ணசாமி.. அதனால அந்த பேர். அதனால தான் அந்த எக்ஸ்ட்ரா இனிஷியல் வி.. என் ஊரு பேரும் வெள்ளோடுங்குறதால அதுக்கும் பொதுவா அந்த இனிஷியல் அமைஞ்சு போச்சு.. அதுக்கு பிறகு எங்க ஸ்கூல்ல எல்லோருக்கும் வி.எம் னாத் தான் தெரியும்..
சரி, விஷயத்துக்கு வருவோம். அன்னிக்கு ஸ்கூல் முழுவதும் யாரப் பாத்தாலும் இதே பேச்சு தான்.. ஏய்.. சரத்குமார் நடிக்கிற மகுடிக்காரன் சூட்டிங் எங்க ஊர்ல நடக்குதே.. சூப்பரா ஒரு பொண்ணு வேற வந்திருக்காம் செகண்ட் ஹீரோயினான்னு ஒரே தம்பட்டம் தான்.. அன்னிக்கு கடைசி பீரியடு எனக்கு பி.டி பிரீயட்.. வில்சனுக்கும் விவசாய பிரீயட். என்னது விவசாய பிரீயடா ன்னு யோசிக்காதீங்க.. என் ஸ்கூல்லே ஒரு தென்னந்தோப்புக்கு நடுவுல தான் இருக்கும். அது தான் பள்ளிக்கு தம்பித்தோட்டம்னு பேரு.. அதுக்கு நடுவுல பெரிய சதுர வடிவ தொட்டி ஒண்ணு மூடி இருக்கும்.. நாங்க சாப்பிடறது, பி.டி பிரீயட் போயிட்டு வந்தா முகம் கை கால் கழுவுறதுன்னு எல்லாம் அங்கே தான். அங்கே இருந்து வாளில தண்ணிய பிடிச்சுட்டு போய், ஸ்கூல சுத்தி இருக்க எல்லா செடிக்கும் ஊத்தணும்.. ஒரு ஆள் பத்து வாளி தண்ணி சுமக்கனும்..
வில்சனும் விவசாய பிரீடியக்கு மட்டத்தை போட்டுட்டு ரெண்டு பேரும் சைக்கிள்ல ஒரே மிதி தான்.. சூட்டிங் நடக்குற இடத்துக்கு பறந்தோம்.. நாங்க போன சமயம் எல்லோரும் ஈவினிங் டிபன் சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க.. சரத்துக்கு 'நல்லெண்ணெய்' சித்ரா தான் ஹிரோயின்.. அவங்க ஒரு தென்னைமரத்துக்கு முன்னாடி உக்கார்ந்து தென்னமட்டையில இருந்து விளக்குமாறு செய்ற மாதிரி ஒரு சீன்.. அப்போ அவங்க மகள் தான் அந்த ரெண்டாவது ஹிரோயின் போல.. அந்த பொண்ணு சித்ரா கிட்ட ஒரு சொம்பு தண்ணிய கொடுத்துட்டு வர்றப்போ, இடையில வில்லன் வந்து ஏதோ மிரட்டனும்.. நாங்க அங்க இருந்த அரைமணி நேரமா இதே சீன் தான் எடுத்தாங்க.. நானும் வில்சனும் கேமராவுக்கு பின்னால நின்னுகிட்டு இருந்தோம்..
அந்த கேமராவை பிடிச்சிகிட்டு இருந்தவர் (ஒளிப்பதிவாளர்னு நினைக்கிறேன்) அந்த செகண்ட் ஹிரோயினை பத்தி எப்பப்பாத்தாலும் காது கூசும் படியான மட்டமான வர்ணணைகள்.. இப்படித்தான் சினிமா உலகம் இருக்குமோன்னு ஒரு இமேஜ் அப்பவே உருவாகிடுச்சு.. மகுடிக்காரன்ங்கிற அந்தப் படம் திண்டுக்கல்லயும் ரிலீஸ் ஆகி ஒரு நாலு நாள் தான் ஓடுச்சுன்னு நினைக்கிறேன்..
அதுக்கப்புறம் நான் ஒரு நாள் எங்க கடையை கவனிச்சுகிட்டு இருந்தப்போ, ஒரு பெரியவர் ஏதோ அரட்டைல சொன்னார்.. ஏற்கனவே சுதாகரன் (கிழக்கே போகும் ரயில் ஹீரோ) நடிச்ச குருவிக்கூடுன்னு ஒரு படமும் எங்க ஊர்ல தான் எடுத்தாங்களாம்.. எங்க ஊர்ல எந்தப் படம் எடுத்தாலும் அது ஓடாதாம்.. அது எங்க ஊர் ராசியாம்.. அதுக்கப்புறம் ரஞ்சித்தை ஹீரோவா போட்டு சிந்து நதிப் பூன்னு ஒரு படம் எடுத்தாங்க..பாட்டெல்லாம் கொஞ்சம் நல்லா இருக்கும்..ஹிம்..அந்த பெரியவர் சொன்ன மாதிரி அதுவும் ஓடல.. எப்பவும் சென்டிமெண்ட் பாக்குற சினிமாக்காரவங்க அதுக்கப்புறம் எங்க ஊருக்கு வந்ததே இல்லை..
(பக்கத்துல சின்னாளப்பட்டியை சுத்தி எடுத்த ஆட்டோகிராப், சண்டகோழி எல்லாம் ஹிட்டானது.. நல்ல வேலை எங்க ஊர்ல எடுக்கலைனு நான் நினைச்சுகிட்டேன்)







