Thursday, September 20, 2007

ஸ்பைடர்மேன் விநாயகர்

பார்க்க ரசிக்க


Saturday, September 08, 2007

என்ன கொடுமை சரவணா இது
இந்த படத்திற்கு தனியாக வசனம் தேவையில்லை.

சற்றுமுன் - சினிமா செய்திகள்

நமது சினிமா ஆர்வம் இந்த பக்கத்தை தொடர்ந்து படிக்கும் எல்லோருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். சினிமா பற்றிய நமது செய்திகள், இப்போது சற்றுமுன் பக்கத்தில் வெளிவர ஆரம்பித்திருக்கிறது. திரையுலகம் பற்றிய செய்திகளுக்கு சற்றுமுன்னை படியுங்கள். நமது சொந்த திரையுலக கருத்துகள் வழக்கம் போல இங்கே தொடர்ந்து வெளி வரும்.

சற்றுமுன் பக்கத்தில் எழுத வாய்ப்பளித்த நண்பர் சிறில் அலெக்ஸிற்கு நன்றி. என்னை அவர்களுக்கு அடையாளம் காட்டிய தம்பி நன்றி.

Friday, September 07, 2007

மறுப்பு அறிக்கை

எனக்கு கல்யணம் முடிஞ்சதா ஊரெல்லாம் பேச்சு..எனக்கு தெரியாம எனக்கா.. இதை இப்படியே விட்டா என் குழந்தைக்கு காதுகுத்து விழான்னு பிளாக்கில் போஸ்டர் அடிக்க ஆரம்பிச்சிடுவாங்க நம்ம பாசக்கார நண்பர்கள்..இதற்கு நான் மறுப்பு அறிக்கை விட்டுத் தான் ஆகனும்.

பாசமிக்க அன்பு நண்பர்களே, அருண் மாதிரி, மற்ற கல்யாணமாகாத கன்னிபையங்க மாதிரி நான் இன்னும் பிரமச்சாரி தான்.. ஏற்கனவே எனது சொந்த ஊரில் எனக்கும் ஒரு வெள்ளைகார பெண்ணிற்கும் கல்யாணம் ஆகிவிட்டதா பேச்சு அடிபட்டு என் அப்பா அம்மா லைட்டா ஒரு உதறலோட தான் இருக்காங்க.. நானும் தலைவர் சிவாஜில சொன்ன மாதிரி, தமிழ் கலாசாரத்தோட ஒரு பொண்ண சம்சாரமா ஆக்கிகொள்ள தேடிகிட்டு தான் இருக்கேன்.. உங்களுக்கெல்லாம் சொல்லாம கல்யாண செய்துகொள்ள, நானென்ன நடிகர் ஸ்ரீகாந்தா என்ன? இல்ல இருபது பேரை மட்டும் கூப்பிட்டு கல்யாணம் செய்துகொள்ள அபிஷேக் பாச்சனா (ஹிஹி..சைட்ல ஐஸ் மாதிரி பொண்ணை தேடுறோனோன்னு உங்களுக்கு சந்தேகம் வந்த நான் பொறுபில்லை.) வெள்ளோடு வாழ் குடிமகன்.. அதனால, ஓரத்துல மஞ்சள் வச்ச கல்யாண பத்திரிக்கை வச்சு எல்லோரையும் அழைப்பேன், நண்பர்களே..

ஸ்ஸ்ஸ்.. அறிக்கை விட்டு ரொம்ப நாள் ஆனதால எப்படி விடுறதுங்குறது கூட மறந்து போயிடுச்சுப்பா

Wednesday, September 05, 2007

ஜீரோ ரூபாய் - கொடுக்கமாட்டேன் லஞ்சம்

எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு பாருங்க, லஞ்சம் கொடுக்காமல் இருக்க. சென்னையை சேர்ந்த ஐந்தாவது தூண் என்னும் நிறுவனம் இதற்கான சமூகப்பணிகளை செய்து வருகிறது. இவர்கள் அச்சு அசலாக ஆயிரம் ரூபாயை போன்ற ஒரு காகிதத்தை அச்சடித்துள்ளார்கள். (இதற்கு ரிசர்வ் பேங்க் எப்படி அனுமதி தந்தது என்பது விளங்காத விஷயம்) ஆயிரம் எண்ணிற்கு பதிலாக இதில் பூஜ்ஜியம் இருக்கும். ரிசர்வ் வங்கி பெயருக்கு பதிலாக "எல்லா நிலையிலும் லஞ்சத்தை ஓழிக்க வேண்டும்" என்னும் வாசகம் இருக்கிறது. (கீழிருக்கும் படம் பார்க்க)லஞ்சம் கேட்கும் இடங்களில் இப்படி ஒரு பணத்தை கொடுத்தால் பலனுள்ளது என்று சொல்கிறார் இந்த இயக்கத்தின் நிறுவனர் விஜய் ஆனந்த். மேலும் விவரங்களுக்கு படங்களை பார்க்கஎப்படியோ நல்லது நடந்தால் சரி.. இது போன்று ஒரு லட்சம் நோட்டுகளை அடுத்த வாரம் மும்பையில் வெளியிட முடிவு செய்துள்ளது இந்த நிறுவனம்