Friday, January 18, 2008

சாலை நெரிசலை தவிர்க்க.. ஒரு எளிய வழி

சென்னை மட்டுமல்ல, எந்த ஊரை எடுத்துக்கொண்டாலும் எட்டரையிலிருந்து ஒன்பதரை மணிக்குள் ஏகப்பட்ட நெரிசல் இருக்கும் சாலையில்.. அண்ணா சாலையில் ஒவ்வொரு சிக்னலையும் கடப்பதே பெரிய வேலையாக இருக்கும்.. பஸ்ஸில் கழைக்கூத்தாடி போல் படியில் பயணம், மின்சார ரெயிலில் வாசல் கம்பியை சுற்றி இருபது பேர் பிரயாணம்..இது தின நிகழ்வு..இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அலுவலகத்திற்கு சீக்கிரமாக செல்ல வேண்டும்.. ஆனால் நமது அலுவலகத்தில் சீக்கிரம் வந்தாலும் ஆறு மணிவரை கட்டாயம் இருக்குவேண்டும் என்ற எழுதாத சட்டம் இருக்கிறது.. நேரத் தளர்வு கிடையாது. அதனால் சீக்கிரம் வந்து, இந்த கூட்ட நெரிசலில் சிக்காமல் சீக்கிரம் சென்றுவிடலாம் என்று நினைப்பதற்கும் தோன்றாது. எட்டு மணி நேரம் இருந்தால் போதும், கொடுத்த வேலையை முடித்தால் போதும் என்ற கொள்கை இருந்தாலும் நன்றாக தான் இருக்கும்.. ஆனால் அதற்கும் வழி இல்லை.. வீட்டிலிருந்து வேலை பார்க்கும் அமெரிக்க வசதியும் கிடையாது.. அலுவலகத்தில் விட்டாலும் இன்னும் அந்த அளவுக்கு நமது ஊரில் நெட் வசதிகளும் பெருகவில்லை.. (நெட் கனெக்க்ஷன் புலம்பல்களை தனியாக கீதா மேடம் பதிவில் படிக்கலாம்)

மேல சொன்ன வழிகளை நிறைவேற்ற பல நாட்களும், பல விஷயங்களும் தேவைப்படும். அப்புறம் இந்தக் கதை தெரிந்தால் ஷன்கர் அவர்களுக்கு புது படத்திற்கான கதை கிடைத்துவிடும். அதெல்லாம் விட, அரசாங்கம்
நினைத்தால் நடக்கக் கூடிய இன்னொரு எளிய வழி இருக்கிறது. ஒவ்வொரு சாலைகளிலும் ஐநூறுக்கும் மேற்பட்டவர் பணிபுரியும் நிறுவனங்களுக்கு உரிமம் தரும் போதும் அந்த நிறுவனம் எந்த நேரத்தில் இயங்க வேண்டும் என்பதை சொல்ல வேண்டும். எல்லா நிறுவனங்களின் இயங்கும் நேரமும், 8-5, 9-6, 10-7 என்னும் மூன்று நேரங்களில் ஏதாவது ஒன்றில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். அதுவும் ஒரே சாலையில் இருக்கும் நிறுவனங்கள் மேற்சொன்ன நேரங்களில் சமமாக பிரிக்கப்பட்டு இயங்க வேண்டும். இப்படி ஒரு ஊரில் இருக்கும் எல்லா நிறுவனங்களும் மாற்றப்பட்டால் சாலைகளில் போக்குவரத்தும் பிரிக்கப்பட்டு, நெரிசல் குறைந்து விடும். இதன் முதல் வெள்ளோட்டமாக எல்லா அரசாங்க அலுவலகத்தின் நேரங்களும் இது போல் மாற்றலாம்.

டைடல் போன்ற பெரிய வளாகத்தில் இருக்கும் நிறுவனங்கள் இது போல நேர பிரிவுகளில் உள்ளடக்கினால் அந்த வளாகத்துள் வண்டிகள் நிறுத்தும் இடங்களிலும், முக்கிய சாலையிலிருந்து அந்த வளாகத்துள் பிரியும் இடங்களும் நெரிசல் தவிர்க்கப் படும். ஏற்கனவே நிறைய பள்ளிகளின் நேரங்கள் மாற்றியமைக்கப் பட்டுவிட்டன (அரசாங்க பள்ளிகள் தவிர்த்து) இதெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் நெரிசல் 30 முதல் 50 சவிகிதம் குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

எந்த அளவுக்கு இந்த உத்தி ஒத்துவரும், வெற்றிபெறும் என்று தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு முயற்சியில் சற்றே சாலை நெரிசல் குறையும் என்பது எண்ணம்.. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இது மாதிரி வேற ஏதும் கருத்துகள் உங்களிடம் இருக்கிறதா? இருக்கவே இருக்கு பின்னூட்டம்.. பகிர்ந்துகொள்ளுங்களேன்

28 பின்னூட்டங்கள்:

said...

ஏற்கனவே பெங்களூரில் சோதனை பண்ணிட்டாங்க. மக்களின் வேகத்துக்கு என்னும் கட்டுப்பட ஆவலை..

said...

நல்ல ஐடியா..

said...

கார்த்தி,

அருமையான எளிய யோசனை. ரொம்ப நாட்களாக நான் நினைத்துக் கொள்வதும், மற்றவர்களிடம் சொல்வதும்!

இதே மாதிரி, சாலைகளில் சர்க்கஸ் குறைவதற்கு இன்னொரு எளிய(நமக்கு!) யோசனை:

போக்குவரத்து விளக்குகள் பக்கத்தில் வைக்கப் படும் ஊர்/தெருப் பெயர்களை கொஞ்சம் முன்னரே வைத்தால், ஓட்டிகள் கொஞ்ச நேரத்துக்கு முன்பே அவர்கள் செல்லவேண்டிய தடத்தை மாற்றிக் கொள்ள வசதியாக இருக்கும்! சரியாக, விளக்குகளின் மேல் வைப்பதால், புது ஓட்டிகள் விளக்கு இருக்கும் இடம் வரை எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் திணற வேண்டிய நிலை! கடைசி நேரத்தில் அடித்துப் பிடித்துகோன்டு தடம் மாறுவதால் நிறைய விபத்துக்கள் நடக்கின்றன.

Anonymous said...

well done, i like your sugesstion.

said...

அருமையான் ஆலோசனை. ஏற்கனவே சில பள்ளிகளில் நடைமுறைப் படுத்தி உள்ளனர். அரசு அலுவலகங்கள் முதலில் ஆரம்பிக்கலாம். தற்போது வாகன வசதி பெருகி விட்டது. வாகனங்கள் இல்லாதவர்களே கிடையாது. ஆகவே உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும்.

said...

நல்ல ஆலோசனை!

said...

கார்த்தி,
தினம் திருநெல்வேலி நகரில் என் மாருதி800 ஓட்டிச்செல்வதே மிகக் கஷ்டமாக இருக்கிறது. ஒரே மெயின் சாலை வழியாகத்தான் எல்லா போக்குவரத்தும். வேலை நேரங்களை மாற்றி அமைத்தால் மட்டும் நடக்குமா. மக்களுக்கு சீக்கிரம் புறப்பட்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும்.

பள்ளிக்கூடங்களிலும் 2 கிமீ சுற்றளவில் வசிக்கும் மாணவர்களையே சேர்க்க வேண்டும். அரசு பள்ளிகளிலும் கூட மானில ராங்க் வாங்கும் குழந்தைகள் படிக்கிறார்கள். "கல்வி வாகனம்" என்று எழுதிக்கொண்டு பள்ளி வேன், பஸ்களே சாலை நெரிசலால் பறந்து செல்கின்றன.

சாலை விதிகளைக் கடைப்பிடித்து எல்லோரும் ஓட்ட வேண்டும். சட்டங்கள் மட்டும் பத்தாது.

சகாதேவன்

said...

பெங்களூரில் ஏற்கனவே இதை பரிச்சித்து பார்த்தார்களா, ஓ.. அது தெரியாதே இளா.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க இளா

said...

வரவேற்புக்கு நன்றிங்க சிறில், அனானி, சீனா, டெல்பின்

said...

தஞ்சாவூரான் உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்..

சகா, நீங்கள் சொல்வது உண்மை.. சட்டங்கள் இருந்தாலும் அதை மக்கள் ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும்.. பள்ளியிலிருந்தே குழந்தைகள் முதலே இதை நாம் அவர்கள் மனதில் ஊட்ட வேண்டும்

said...

சாலை நெரிசல் பற்றி சொல்லியுள்ளீர்கள் இங்கு சிங்கையில் மதிய சாப்பாட்டுக்கு கூட்ட நெரிசலை குறைக்க நீங்கள் சொன்ன வழிமுறையை மதியம் கடைபிடிக்கிறார்கள்.
இங்கு பொது போக்குவரத்து அருமையாக இருப்பதால் அந்த பிரச்சனை எனக்கு அவ்வளவாக தெரியவில்லை.

said...

//அலுவலகத்தில் விட்டாலும் இன்னும் அந்த அளவுக்கு நமது ஊரில் நெட் வசதிகளும் பெருகவில்லை.. (நெட் கனெக்க்ஷன் புலம்பல்களை தனியாக கீதா மேடம் பதிவில் படிக்கலாம்)//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,, ஆனா ஒண்ணு, நீங்களாவது ஒத்துக்கிறீங்களே? :P

said...

மீண்டும் ஆரம்பிச்சதுக்கு நன்றி. வாழ்த்துக்களும். சீக்கிரம் பழைய வேகம் வரவும் வாழ்த்துகிறேன்.

said...

கார்த்திகேயன்,

ஓரளவுக்கு பயன் தரும் ஆனால்

பெரிய மாற்றம் இராது..

குறிப்பாக இன்று பல IT நிறுவனங்கள், 9 - 6.30 என்று இயங்கவில்லை. FLEXIBLE TIMING CONCEPT இருக்கிறது. 10.30 மனிக்கு வந்து 8.30 மனிக்கு போவோர் அதிகம். ஷிப்ட் முறையும் உள்ளது.

மேலும் 9 மனிக்கு வரும் பலரும் 8 வரை அலுவலகத்தில் தான் உள்ளனர்..

அதனால் தான் சொன்னேன், மாற்றம் நிச்சயம் இருக்கும், பெரிய அளவில் இருக்காது.

இப்போதெல்லாம், விடுமுறை நாட்களில் கூட கூட்ட நெரிசல் உள்ளது.. காரணம், சென்னையில் வெளி மாநில , மாவட்ட மக்கள் அதிகம்..

ஒரு வழி .. மதுரை, திருச்சி, போன்ற மற்ற மாவட்டங்களில் தொழில் நுட்ப பூங்கா அமைத்து, அங்கெல்லாம், உள்கட்டமைப்பு, சாலை வசதி செய்து கொடுத்தால், மாநிலம் முழுதும் தொழில்சாலைகள், தொழில் பூங்காக்கள் பரவலாக்கப்பட்டால், பிரச்சனை தீரலாம்..

said...

ஐடியா நல்லாதான் இருக்கு :)

said...

நல்ல ஆலோசனை தான் தலைவரே ஆனா இதை எங்க சொன்னா நடக்க வாய்ப்பு இருக்கு?

தலைவி புகழ் பாடலேன்னா நமக்கு பதிவே எழுத வராது போலிருக்கு :)

said...

கருத்துக்கு நன்றிங்க வடுவூர் குமார்.. சிங்கை நன்றான உள்கட்டமைப்பு ஆரம்பத்திலேயே கொண்டது.. மக்கள் அங்கே தங்களின் பங்களிப்பு அறிந்து நடந்து கொள்கிறார்கள்.. ஆனால் அதே மக்கள் நமதூரில் அதை கண்டுகொள்வதே இல்லை

said...

//மீண்டும் ஆரம்பிச்சதுக்கு நன்றி. வாழ்த்துக்களும். சீக்கிரம் பழைய வேகம் வரவும் வாழ்த்துகிறேன்.//

மறுபடியும் நான் எழுத ஆரம்பிப்பதற்கு உங்களின் இடைவிடாத உந்துதல் ஒரு காரணம் மேடம்.. நன்றிங்க மேடம்

said...

//ஒரு வழி .. மதுரை, திருச்சி, போன்ற மற்ற மாவட்டங்களில் தொழில் நுட்ப பூங்கா அமைத்து, அங்கெல்லாம், உள்கட்டமைப்பு, சாலை வசதி செய்து கொடுத்தால், மாநிலம் முழுதும் தொழில்சாலைகள், தொழில் பூங்காக்கள் பரவலாக்கப்பட்டால், பிரச்சனை தீரலாம்..//

கருத்துக்கு நன்றிங்க வீ.எம். நீங்கள் சொன்னதை செய்தாலும் சென்னையை விட்டு அவ்வளவு எளிதாக இந்த நெரிசலை பிரிக்க முடியுமா என்பது கடினம் தான்.. ஆனல் அரசு இதை பற்றி யோசிப்பதே இல்லியோ என்று தோன்றும்

said...

//ஐடியா நல்லாதான் இருக்கு :)//

நன்றிங்க ட்ரீம்ஸ்..

said...

//
வீ. எம் said...

ஒரு வழி .. மதுரை, திருச்சி, போன்ற மற்ற மாவட்டங்களில் தொழில் நுட்ப பூங்கா அமைத்து, அங்கெல்லாம், உள்கட்டமைப்பு, சாலை வசதி செய்து கொடுத்தால், மாநிலம் முழுதும் தொழில்சாலைகள், தொழில் பூங்காக்கள் பரவலாக்கப்பட்டால், பிரச்சனை தீரலாம்..
//
மிக சரியான யோசனை.

டைமிங்க்ஸ் மாற்றுவதால் அவ்வளவாக ஒன்றும் ட்ராபிக் குறையாது என எண்ணுகிறேன்.

said...

//நெட் கனெக்க்ஷன் புலம்பல்களை தனியாக கீதா மேடம் பதிவில் படிக்கலாம்)
//

ஹஹா! ஒரு வாசகம்னாலும் திருவாசகமா சொன்னப்பா! :))

ஹஹா! ஒரு வாசகம்னாலும் திருவாசகமா சொன்னப்பா!

நல்ல யோசனை தான்! 8 மணி நேர வேலை எல்லாம் நமக்கு ஒத்து வராதே! பெங்களுர்லயும் இதே கதி தான். இவ்வளவுக்கும் எல்லா ஆபிஸ்லயும் 11 மணிக்கு தான் வருவாங்க. ஆன்ன நைட் அமெரிக்கா காரன் கூட அளவளாவனும் இல்ல (டெலிகான்பிரஸை சொன்னேன், நீ தப்பா எடுத்துக்காத என்ன?) :))

said...

வந்துட்டேன் தல. :-)

said...

நல்ல ஒரு சமூதாய பார்வை. உங்களை மினிஸ்டர் ஆக்கி விட்டால் எல்லாம் சரீயா நடக்கும் போல இருக்கே.. அப்போ சீக்கிரம் தாயகம் போங்க தல. :-)

said...

nalla sinthanai annan. apapo intha mathiri postum podunga. Seekrama Indiavuku ethavathu seyvinganu ethir parkarom. Comeback soon!
- Anbu thangai

said...

நீங்கள் எழுதியதில் உங்களுக்குப் பிடித்ததை ஊருக்குச் சொல்ல ஒரு அழைப்பு வைக்கிறேன் வாங்க..

Anonymous said...

all jobs that can be done remote should be done at home. work from home. traffic will go down

Anonymous said...

work from home saves petrol and realestate rent