Thursday, January 17, 2008

கணக்கை மறுபடியும் திறக்கிறேன்

புத்தாண்டும் முடிந்தது, பொங்கலும் போயிடுச்சு.. ஜனவரியின் இரண்டாம் வாரம் தான் ரொம்பவும் மெதுவா, சத்தியமா, ஆமையை விட மெதுவா போச்சு.. எல்லா வருஷம் போலவும் இந்த வருஷம்.. சரியா பனிரெண்டு மணிக்கு வீட்டு சரவுண்டு சிஸ்டத்துல முருகன் பாட்டை போட்டு, புது வருஷத்தை ஆரம்பிச்சோம், நானும் என்
அறையில் இருக்கும் தம்பி மதனும்.. மற்ற நண்பர்கள் வித்தியாசமா கொண்டாடப் போறோம்னு வெளில கிளம்பிட்டாங்க.. முருகன் பாட்டு முடிஞ்சவுடன், எப்பவும் போல, நம்ம ஊர் வானொலி நிலையங்கள் செய்வது போல, சகலகலா வல்லவன் பட இளமை இளமை இதோ பாட்டு.. அவ்வளவு தான்.. எங்களுக்கு இப்படித் தான் புது வருஷம் பிறந்தது.

அப்புறம் ஊரில் இருக்கும் உறவுக்காரர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் தொலைபேசி வாழ்த்துக்கள்.. நலம் விசாரிப்புகள்.. பேசமுடியா நண்பர்களுக்கு மெயில் விடு வாழ்த்துக்கள்.. சில பேருக்கு ஆர்குட் வாழ்த்துக்கள்.. பக்கத்தில் இருப்பவர்கள், நேரில் கைகுலுக்கல்கள்.. இப்படியாக சென்றது புது வருஷத்தின் பகல்..

நான் சென்னையில் இருக்கும் போது, குமுதம் புத்தகத்தை புரட்டும் போது 'கதவை திற காற்று வரட்டும்' என்னும் ஆன்மீகத் தொடரை சுவாமி பரமஹம்ச நித்யானந்தா எழுதியிருப்பதை பார்த்திருக்கிறேன்.. பெரும்பாலும் படித்ததில்லை.. என்றாவது வேற வழியே இல்லை என்றால் படித்ததுண்டு. அவர், கொலம்பஸ்ஸில் அவரது ஆசிரமக் கோயிலை அமைத்திருக்கிறார். சிவன், பார்வதி, விநாயகர், முருகன் இரு துணைவிகளுடன், பார்க்க தமிழ்க் கோயில் போல பரவசம் தருகின்றது என்று நண்பர்கள் சொல்ல வருஷ முதல் நாள் அன்று சென்றிருந்தோம். கிட்டதட்ட இரண்டடியில் வினாயகர் கற்சிலையில் அருள் தருகிறார். சிவன், பார்வதியோடு (லிங்க வடிவில் அல்லாது உருவவடிவில் பார்ப்பது இதுவே எனக்கு முதல் முறை என்று நினைக்கிறேன். சரியாக ஞாபகமில்லை) வீற்றிருக்கிறார். இவரின் வலப்பக்கம் முருகன், தெய்வானை வள்ளியோடு எழுந்தருளிக்கிறார். கோயில் தமிழக கோயில்கள் மாதிரி இல்லாது, வீடு போல கோயில் அமைக்கபட்டிருக்கிறது.. அக்டோபர் 2007-இல் தான் கோயிலை நிர்மாணித்து பிரண பிரதிஸ்டை எல்லாம் செய்திருக்கிறார்கள். ஆண்டவன் அருளை பெறுவது தானே நல்ல ஆரம்பமாயிருக்க வேண்டும்..

ஒவ்வொரு முறையும் எதையாவது பதிவெழுதலாம் என்று நினைக்கும் போது, அட! இது மொக்கை பதிவாகிட்டா என்ன பண்றதுன்னு தோன்றும். ஆனா கீதா மேடத்தை பார்த்த பிறகு..ம்ம்..அதை பத்தியெல்லாம் கவலைப் பட தேவையில்லை என்று நினைக்க தோன்றுகிறது.. அப்படி எழுதியது தான் இந்த பதிவு..

18 பின்னூட்டங்கள்:

said...

///ஒவ்வொரு முறையும் எதையாவது பதிவெழுதலாம் என்று நினைக்கும் போது, அட! இது மொக்கை பதிவாகிட்டா என்ன பண்றதுன்னு தோன்றும்////
அதெல்லாம் பாத்தா நாங்க எல்லாம் எழுதவே முடியாது!!
சும்மா ஜாலியா எழுதி போடுங்க தல!!
உங்கள் கூட ஜிடாக்கில் உரையாடி பல நூற்றாண்டுகள் ஆகி விட்டது!! :-(
திரும்பவும் ஃபார்ம்க்கு வாங்க!!
என்னை போன்ற உங்களின் பல ரசிகர்கள் ஆவலுடன் வெயிட்டிங்! B-)

said...

வாங்க தல! ரொம்ப நாள் கழிச்சு வறீங்க!

முதல்ல பொங்கல் வாழ்த்துக்க்கள் (konjam late :D)

said...

Welcome back, முகா!

said...

ஹிஹி, மொக்கை பத்தி சரியா சொன்ன கார்த்தி. :))

அப்படியே கோவில் படமும் போட்டு இருக்கலாம் இல்ல.

//'கதவை திற காற்று வரட்டும்' என்னும் ஆன்மீகத் தொடரை சுவாமி பரமஹம்ச நித்யானந்தா எழுதியிருப்பதை பார்த்திருக்கிறேன்.. //

ஒரு கிசுகிசு: அந்த தொடரை சுவாமிக்கு எழுதி கொடுத்தவர் மறைந்த வலம்புரி ஜான் தானாம்!

said...

/வாங்க தல! ரொம்ப நாள் கழிச்சு வறீங்க!/
ரிப்பிட்டே....... :)

said...

வாங்க தல வாங்க :))

said...

வாங்க வாங்க இந்த வருசமாவது மறுபடியும் பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம் வருமா? ;-)

said...

புத்தாண்டு முருகன் பாட்டுடன் இளமையாகத் தொடங்கி இருக்கிறது. இனிய புத்தாண்டு வாழ்த்துகள். எண்ணங்கள் எண்ணிய படி ஈடேற இனிய நல் வாழ்த்துகள்.

மொக்கயாவது கும்மியாவது - நல்ல பதிவுகளுக்கும் இவைகளுக்கும் அதிக வேறுபாடுகள் கிடையாது. மொக்கயெ நல்லா எழுதலாம் - நல்ல பதிவே மொக்கயாக்கலாம். கவலைப் படாம எழுதிக் கிட்டே இருங்க

said...

வரவேற்புக்கு நன்றி சிவிஆர், ட்ரீம்ஸ், ஜீவா, அம்பி, வேதா, கோபிநாத், சீனா

said...

அரசி, இனிமேல் பின்னூட்டங்களுக்கு பின்னூட்டங்கள் உண்டு.. கட்டாயம் உண்டு

said...

அப்பாடா.. உங்க குரலைக் கேட்டு எத்தனை நாளாச்சு! :-)))

said...

குரல்னா குரல் இல்ல, குரல் மாதிரி (இணையத்தில் எழுத்து தானே குரல்!)

said...

//ஆனா கீதா மேடத்தை பார்த்த பிறகு..ம்ம்..அதை பத்தியெல்லாம் கவலைப் பட தேவையில்லை என்று நினைக்க தோன்றுகிறது.. அப்படி எழுதியது தான் இந்த பதிவு..//

நறநறநறநறநறநறநற

said...

//ஹிஹி, மொக்கை பத்தி சரியா சொன்ன கார்த்தி. :))//

அம்பி, கணேசன் எழுதிக் கொடுத்து எழுதும்போதே இந்த பில்ட்-அப் தேவையா? நான் மொக்கையானாலும் சுயமா எழுதறேன். ஒத்துக்கவும் செய்யறேன் மொக்கைனு! :P

said...

//அப்பாடா.. உங்க குரலைக் கேட்டு எத்தனை நாளாச்சு! :-)))//

உங்களை போன்ற நண்பர்களின் வார்த்தைகள் தான் மறுபடியும் எழுத வேண்டும் என்னும் ஆர்வத்தை தூண்டியுள்ளதுங்க அரசி.. நன்றிங்க

said...

//அம்பி, கணேசன் எழுதிக் கொடுத்து எழுதும்போதே இந்த பில்ட்-அப் தேவையா? நான் மொக்கையானாலும் சுயமா எழுதறேன். ஒத்துக்கவும் செய்யறேன் மொக்கைனு! :P
//

உங்க பெரிய மனசு வேற யாருக்கும் வராதுங்க மேடம்

said...

//ஒவ்வொரு முறையும் எதையாவது பதிவெழுதலாம் என்று நினைக்கும் போது, அட! இது மொக்கை பதிவாகிட்டா என்ன பண்றதுன்னு தோன்றும். ஆனா கீதா மேடத்தை பார்த்த பிறகு..ம்ம்..அதை பத்தியெல்லாம் கவலைப் பட தேவையில்லை என்று நினைக்க தோன்றுகிறது.. அப்படி எழுதியது தான் இந்த பதிவு..//

ஹீஹீ.. accepted. :-P

said...

puthandu nalvalthukal anna!