Saturday, December 29, 2007

கண்ணதாசனும் இளையராஜாவும் படைப்பதால் இறைவர்கள்

கண்ணதாசன்.. எளிய வரிகளில், இசையோடு தனது கருத்தை, தேனோடு பாலாக, கலந்து தமிழ் நெஞ்சங்களுக்கு விருந்து படைத்தவர்.. வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள்.. இன்னமும் ஒவ்வொரு நீள் ஒலி குழாய்களிலும் ஒலித்துகொண்டிருக்கும் உன்னத வார்த்தைகளுக்கு வடிவம் தந்தவர்.. இன்னமும் இவரைப் போல, வாழ்க்கைக்கு, வாழ்க்கையோடு ஒன்றிய பாடல்களை தந்தவர் யாரும் இல்லை..

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது

பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்

இந்த பாடலை, நினைப்பதெல்லம் நடந்துவிட்டால் என்று நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் வரும் இந்த பாடலை, கேட்டால், யாருக்குத் தான் தெளிவு பிறக்காது.. எந்த மனதிற்குத் தான் ஆறுதல் கிடைக்காது.. இது தான் கண்ணதாசனின் பாடல்களில் இருக்கும் அடிக்கருத்தே..

ஒவ்வொரு பாடலும் ஒரு தனி ரகம்.. கேட்க கேட்க படத்தின் நாயகனுக்கு எழுதிய பாட்டில் சிறிது நேரத்தில் நாம் நாயகனாக குதிரை சவாரி செய்வோம்.. வருத்தமென்றாலும், காதல் சொட்டும் வரிகள் என்றாலும், வீரம் என்றாலும், விவேகம் தரும் வேகம் என்றாலும், கண்ணதாசனின் வரிகளுக்கும், அந்த தத்துவதிற்கும் நிகர், அவரின் படைப்புகளே..

எங்கள் ஊர் மைக்-செட்டுகளில் இன்னமும் புதிய பாடல்களை விட அதிகமாய் ஒலித்துக்கொண்டிருப்பது பழைய பாடல்களே.. அதுவும் கண்ணதாசனின் காதல் பாடல்கள் பிரசித்தம்.. கவியரசுவின் காதல் பாடல்களின் கேசட்டுகள் பகுதி பகுதியாய் அடுக்கி வைத்திருப்பார்கள். இங்கே வந்த பிறகு கஷ்டப்பட்டு அதில் பாதியை தான் வலையில் இருந்து இறக்குமதி செய்ய முடிந்தது.

சிவாஜி நடித்த ரத்தத் திலகம் படத்தில் கண்ணதாசனே திரைப்பாத்தில் தோன்றி பாடும் பாடல் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.. தன்னை பற்றை அவரே பாடுவது போன்ற ஒரு பாடல்.. வரிகள் எல்லாம் கண்ணாடி போல அவரது நிறைகுறை கொண்ட குணங்களை சொல்லும்..

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைப்பாடலிலே என் உயிர்துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

காவிய தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனிமனிதன்
நான் படைப்பதனால் என் பெயர் இறைவன்

இடையில், இப்படி பாடல்கள் படைப்பதால் தன்னை இறைவன் என்று சொல்கிறார் கண்ணதாசன்.. உண்மை தானே

இளையராஜா - அன்னக்கிளியில் தமிழ் நாட்டு மக்களை, அந்த படத்தின் பாடல்கள் இசைக்கும் ரேடியோ பெட்டியின் முன்னே, கட்டிப் போட்டவர்.. இசையில் எல்லா பரிமாணத்தை, உருவி எடுத்தி, தமிழ் மக்களின் வாழ்க்கையில் இசைத் தேன் மழை பொழிந்தவர். இவரின் ஒவ்வொரு பாடல்களும் ஆராய்ச்சி செய்கின்ற அளவுக்கு ஒரு பெரிய கடல் என்பது ஒவ்வொரு பாடலாக கேட்டவர்களுக்கு நிச்சயமாய் புரிந்திருக்கும்.

இளையராஜா பாடல்களின் தேடல் வேட்டையில் கிட்டதட்ட எண்பது சதவிகிதத்தை நெருங்கிவிட்டேன்.. இனிமேல் மிச்சமுள்ள இருபது சதவிகிதம் தான் கஷ்டமான விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. முயற்சி திருவினையாக்கும் என்று முயல்கிறேன்.. கடலில் குதித்து முத்தெடுப்பது என்பது சுலபமில்லை தானே

பாடல்கள் தவிர, இளையராஜவின் படங்களில் பெரிய பலம் பின்ணனி இசை.. அந்த கதாபாத்திரத்தின் துடிதுடிப்பை, உணர்ச்சியை அப்படியே நமக்குள் ஏற்றி, அந்த காட்சியில் நம்மை வைத்து நாம் பதறும் அளவுக்கு, அதற்கு இசை உயிரூட்டியவர் இசைஞானி.

பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் மடை திறந்து என்று ஒரு பாடல் வரும். அது கிராமத்திலிருந்து இசையப்பாளனாக வந்த ஒருவன், வாய்ப்பு கிடைத்த பிறகு தன்னை நினைத்து பாடும் பாடல். கிட்டதட்ட இசைஞானியின் கதை.. அதனால் அதன் பாடல்வரிகளும் அதை ஒத்தே தான் இருக்கும்..

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே

இங்கே இளையராஜா பற்றிய வரிகளை அழகாக வாலி தந்திருப்பார்.. அதுவும் இந்த வரிகளுக்கு கனகச்சிதமாக பொருந்துமாறு மேஸ்ட்ரோவே பாடலில் வந்திருப்பார்.. மிகவும் உயிரோட்டமான பாடல்..

இவ்வாறாக, ஒரு இறைவன் பாடல் வரிகளை தந்திருக்க, ஒரு இறைவன் அதற்கு இசை உயிர் தந்திருக்க ஆழ்ந்த அமைதியில் நமக்குள் தெய்வத்தை காண வைக்கும் பாடல், மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே பாடல்.. இந்த பாடல், தான் இறக்கும் முன்பு, சென்னை விமான நிலையத்தில் வைத்து கண்ணதாசன் எழுதி கடைசிப் பாடல்.

13 பின்னூட்டங்கள்:

Dreamzz said...

evergreen lyrics, melodies and memories thaan!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இளையராஜா - அன்னக்கிளியில் தமிழ் நாட்டு மக்களை, அந்த படத்தின் பாடல்கள் இசைக்கும் ரேடியோ பெட்டியின் முன்னே, கட்டிப் போட்டவர்//

கார்த்திக்!
தமிழ் நாட்டு ரசிகர்கள் சிலவேளை அன்னக்கிளிக்குப் பின் வானொலிப் பெட்டி முன் கட்டுண்டவர்களாக இருக்கலாம்.ஆனால்
முழு இலங்கை ரசிகர்களுமே
எம்.எஸ்.விஸ்வநாதன் -ராமமூர்த்தி
என்ற கலைஞர்களால் வானொலி முன்
கட்டுண்டவர்கள்...
இதனால் நான் இளையராஜாவின் திறமையையோ,சாதனையையோ குறைவாக மதிப்பிடுவதாகக் கருதக் கூடாது.நானும் அவர் ரசிகன்..

,கல்லும் கனியாகும்' எனும் ரி.எம்.எஸ் நடித்துத் தயாரித்த படத்தில் 'கை விரலில் பிறந்தது நாதம்,என் குரலில் வளர்ந்தது கீதம்'
எனும் பாடல் ரி.எம்.எஸ் க்காகவும் எம்.எஸ்.வி க்காகவும் கண்ணதாசனால் எழுதப்பட்டது.
பாம்பின் காலைப் பாம்பறிந்ததால்.

காடு ,மலை வெட்டி பாதை வெட்டிக் கல்லுப் போட்ட பாதையில் தாரூற்றி
நடந்து கொண்டு தலை நிமிர்த்து கூவக்
கூடாது.
தமிழ்த் திரையிசையுலகில் இறைவர்கள் என்றால்
பாபநாசம் சிவன்-ஜி.ராமநாதன்-தியாகராஜ பகவதர் பின் கண்ணதாசன்- எம்.எஸ்.வி -ராமமூர்த்தி- ரி.எம்.எஸ்
அதன் பின்னே அனைவரும்.
இதை அனைவரும் ஒத்துக் கொள்வார்கள்...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இளையராஜா பாடல்களின் தேடல் வேட்டையில் கிட்டதட்ட எண்பது சதவிகிதத்தை நெருங்கிவிட்டேன்.. இனிமேல் மிச்சமுள்ள இருபது சதவிகிதம் தான் கஷ்டமான விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன்//

2007இல் துவங்கனீங்க!
மளமளன்னு எண்பது சதம் நெருங்கியாச்சா! சூப்பரு!
அப்போ 2008இல் புத்தாண்டு விருந்து கா(ர்)த்திருக்கு-ன்னு சொல்லுங்க கார்த்தி! வாழ்த்துக்கள்! :-)

சதங்கா (Sathanga) said...

அருமையாய் இரு மேதைகளைப் பற்றி ... மன்னிக்கவும் இறைவர்களை பற்றி பதிந்திருக்கிறீர்கள். நீங்கள் இளையராஜாவின் பின்னனி இசை குறித்து எழுதியதைப் வாசிக்கும் போது, என்னவோ பாரதிராஜாவின் 'புது நெல்லு புத் நாத்து' படத்தில் வரும் 'கருத்த மச்சான்' பாடலின் டுயூன் படம் முழுக்க அங்கு அங்கு போடிருப்பார் ராஜா, அதில் ஒரு கிரக்கம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது ! இந்த மாதிரி ஏராளமான படங்களில் இருந்து இது ஒரு சிறு எடுத்துக்காட்டு.

Anonymous said...

aaga arumai ....kanadasanin "iraaivan" enaku theriyum... aanal Ilayaraja "iraivan" indru thaan paarkurean...Nandri

Double Nandri ...Ponnamurai Potta Commentum Pottathakku

Anonymous said...

Ungal manadil yaarayo neenga Love pannureeenga ......Thayiriyama Propose Pannuga thalaiva ......
(Ithu ungalaku porunthatha comment endral podatheergal)CHECK MATE!

SurveySan said...

beautiful.

80%, 100% ஆனதும், நம்ம வூட்டுக்கு சீ.டி அனுப்பிடுவீங்கல்ல?

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

Ivargalukku naduve K>V>Mahadevanai pparri en yarum kurippiduvadhillai.A.P.Nagarajan padappadalgalai marandhu vitteergala?Devar Films MGR padappadalgal marandhu vitteergala?Idhyakkamalam padalgal marandhu vitteergala?Enna seivadhu?KVM Jaadhagam appadi
T.V.Radhakrishnan

Geetha Sambasivam said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம்? மை ஃப்ரண்டு சொன்னாப்பல உங்க "தல"க்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிற செய்தியைக் கூட போட முடியாத அளவுக்கு பிசியா இருக்கீங்களா?
வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

//இந்தப் பதிவு கார்த்திக்குக்கும், ரசிகனுக்கும் சமர்ப்பணம். கார்த்திக் ரொம்ப நாளா என்னோட பதிவுகளுக்கு வரதே இல்லை. அந்த வருத்தத்திலும், ஒவ்வொரு முறை நான் ஊருக்குப் போகும்போதெல்லாம் கிட்டத்தட்ட போஸ்டர் ஒட்டி, அலங்கார வளைவுகள் வச்சு, மலர் அலங்காரமெல்லாம் செய்து வலை உலகம் முழுக்கத் தெரிவிக்கும் ஒரு அணுக்கத் தொண்டர் இப்போ இப்படி சுறுசுறுப்பே இல்லாமல் உட்கார்ந்திருக்கிறாரே, அவரைத் தட்டி எழுப்பும் விதமாய் எழுதி இருக்கேன்.//

sivamgss.blogspot.com

Unknown said...

kannadhaasan vaazhga!

inna thala neenga blog panradhey illa! :(

Geetha Sambasivam said...

"சாதனை"ப் பதிவு எழுத உங்களை அழைத்துள்ளேன், வந்து பார்த்துவிட்டுப் பின் எழுதவும்.