Wednesday, November 28, 2007

பில்லா பாடலும் தமிழில் அர்ச்சனையும்

நீண்ட நெடு நாட்களாக எனக்கு சந்தேகம். கோயிலில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்கிறார்களே, தமிழிலும் செய்யலாமே என்று. அர்ச்சனை என்னவோ கடவுளுக்குத் தான் செய்கின்றோம், ஆனால் என்ன சொல்லி செய்கிறார்கள் என்று தெரிந்தால், கும்பிட வந்தவர்களுக்கு அதனோடு ஒன்றி, மனசு உருகி சுவாமியை தரிசனம் பண்ணமுடியும். இல்லையென்றால், பூஜை செய்பவர் அவர் பாட்டுக்கு சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்ல, ஒன்றும் புரியாமல் கை குவித்து நாம் அவரையும் சாமியையும் பார்த்து முழித்து கொண்டிருக்க வேண்டும். சமீப காலங்களில், தமிழில் அர்ச்சனை என்பது ஒரளவுக்கு பரவி, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, வேளச்சேரியில் இருக்கும் சிம்ம நரசிம்மர் கோயிலில் தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்கிறார்கள் (நான் அறிந்த வரையில்). ஆண்டாள் திருப்பாவையெல்லாம் அவர்கள் பாடும் போதும் நமக்கும், நமக்குள்ளும் அந்த பரவசம் தொற்றிக்கொள்கிறது என்பது உண்மை தான். அதில் நான் பல நாட்கள் உருகியதும் உண்மைதான்.

சரி, இதில் எங்கே பில்லா படம் வருகிறது என்று கேட்கின்றீர்களா. விஷயத்திற்கு வருகிறேன். படத்தில் முருகனை போற்றிப் பாடி ஒரு பாடல் இருக்கிறது, விஜய் யேசுதாஸ் குரலில். அதில், பாடல் முடியும் போதும் தமிழ் கடவுள் முருகன், அவருக்கு தமிழில் அர்ச்சனை செய்யலாமே என்று அர்த்தம் தரும் பாடல் வரி வருகிறது. கேட்கும் போதும் சட்டென்று கவனத்தை ஈர்த்த வரிகள். பாடலாசிரியர் பா. விஜய், கிடைத்த தருணத்தை அழகாக பயன்படுத்தியிருக்கிறார். இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். நெஞ்சுருக வேண்டி ஆண்டவனை வழிபடும் ஒரு இடத்தில், புரியாமல் நின்று தலையசைப்பது சரியாகுமா என்று கேட்டால் இல்லை.. தமிழில் அர்ச்சனை என்பதை இன்னும் சற்று அதிகமான குரலில் முழக்கமிட வேண்டும். கிறித்துவ மதம் இந்தியாவில் இவ்வளவு விரைவாக பரவியதற்கு ஒரு காரணம், அதன் மொழியாக்கமும் மக்களை சென்று அவர்கள் விஷயங்களை கொண்டு சேர்த்தவிதமும் தான். மக்களுக்கு, பக்தர்களுக்கு புரிந்தால் தான் அந்த வேண்டுதல், பக்தி மனசுக்குள் நிற்கும். இவ்வாறு நிறைய அர்த்தமுள்ள விஷயங்களை பாடலாசிரியர்கள் பாடல்களில் ஏற்றினால், மக்களை சென்று சுலபமாக கருத்துகள் சென்று சேரும்.

கொசுறு : பில்லா பாடல்கள் அடங்கிய கேசட், சிடிக்கள், சிவாஜிக்கு அடுத்து இந்த வருடத்தில் அதிகமாக விற்று இருக்கின்றன.

15 பின்னூட்டங்கள்:

said...

Have a look at the Audio review of BILLA here

said...

நல்ல கருத்துங்க...

(சுடச்சுடப் பின்னூட்டம் :-))

said...

படத்தில் எனக்குப் பிடித்த பாடலையும் பாடலில் எனக்குப் பிடித்த வரியையும் நச்சுன்னு சொல்லி இருக்கீங்க !!

said...

நானும் கேட்டேன். பில்லாவ்ன் தமிழ் அர்ச்சனைக்கு ஆதரவான வரிகளை! நன்றாக உள்ளது பாடலும் கூட!

Anonymous said...

I agree with you. Excellent idea.

Rumya

Anonymous said...

Please visit California Concord Shiva-Murugan Temple for all Tamil archanai's....10-20% Sanskrit.

I love this Temple

said...

அரங்கனுக்கு தமிழில் தான் அர்ச்சனை என்று கேள்விப்பட்டேன் அது சரி தானா?

said...

paatellam nalla irukku! naanum ketten!

tamilil archanai! seekiram vara vendum! aanal athai vida seekiram vara vendiyathu tamilil tholilnutpam!

said...

Billa song kekala, shall hear it soon.


//
இல்லையென்றால், பூஜை செய்பவர் அவர் பாட்டுக்கு சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்ல, ஒன்றும் புரியாமல் கை குவித்து நாம் அவரையும் சாமியையும் பார்த்து முழித்து கொண்டிருக்க வேண்டும்.

tamila archanai seyanumngra thought is good. But acc to me, bakthi does'nt depend on the language of archanai. it's purely from the heart.
language theiryadha song rasikarome, andha maari dhaan, archanai endha mozhila seidhalum bakthi irundha kandippa gavanam sidharadhu. enbadhu ennoda thaazhmaiyana karuthu.
-K mami

said...

மதுரை மீனாட்சி கோயிலில் பல வருஷங்களாகத் தமிழில் தான் அர்ச்சனை நடைபெறுகிறது. அர்ச்சனை இப்போது பல கோயில்களிலும் தமிழில் நடைபெறுகிறது. நீங்க அதிகம் போகலைனு நினைக்கிறேன். மற்றபடி நல்ல பதிவு, நல்லா இரண்டையும் கொண்டு வந்தி இணைச்சிருக்கீங்க! :))))))))

said...

தல
பாட்டெல்லாம் எப்பிடி இருக்கு?

said...

உங்கள் எழுத்துக்கள் சிறப்பாக இருக்கின்றன.

வாழ்த்துக்கள்.

மீண்டும் சந்திப்போம்.

Anonymous said...

Mel gibson is a hollywood actor/director who took a movie called "passion of christ"...he used the original language which jesus spoke that is hebrew language ...why did he use this ..hebrew is not popular now ...but he did that ..because there is nothing like original....
similarly sanskrit is the oldest indian language and prayers/chants should be rendered in that language ...tamil can be rendered for ayanar......please dont support like a typical tamil veiyar!!!!.

Anonymous said...

Mel gibson is a hollywood actor/director who took a movie called "passion of christ"...he used the original language which jesus spoke that is hebrew language ...why did he use this ..hebrew is not popular now ...but he did that ..because there is nothing like original....
similarly sanskrit is the oldest indian language and prayers/chants should be rendered in that language ...tamil can be rendered for ayanar......please dont support like a typical tamil veiyar!!!!.

Anonymous said...

கார்த்தி,
தலயோட கலைஞர் டி.வி பேட்டி பத்தி ஒன்னும் எழுதல !! :(

சீக்கிரம் எழுதுங்க - அஜீத் என்னும் நல்ல மனிதரை மற்றவர்களுக்குப் படம் பிடித்துக் காட்டியது போல் இருக்கும்