Sunday, August 27, 2006

அமெரிக்க அனுபவம் 1

எல்லாமே புதுசு.. ரோடுகள் எல்லாம் பள்ளங்கள் இல்லாமல்..ஒரே சீராய்... போகின்ற வாகனமெல்லாம் ஒரு ஒழுங்கை கடைப்பிடிகின்றன.. எல்லாவற்றையும் பார்க்கும்போது ஒரு ஏக்கம் நெஞ்சுக்குள் வரத்தான் செய்கிறது.

கடைகளுக்கு சென்றால் வளர்ப்பு பிராணிகளுக்கு என்றே ஒரு தனியான பகுதி.. அவைகளுக்கு சிறு சிறு வீடுகள்.. முடி சீவ சீப்புகள்.. ஷாம்பூக்கள்.. ஒரு அழுக்கேறிய அலுமினிய தட்டில் எங்கள் வீட்டு நாய் சோறு சாப்பிட்டது மங்கலாய் என் நினைவில்..

வாங்கிய ஒரு பொருளை கொடுக்க வால்மார்ட் சென்றேன். பில் எங்கே என்று கேட்ட ஊழியரிடம் திரு திரு என்று விழித்தேன்..தொலைத்து விட்டேனா.. என்று தேடி கொண்டிருக்கையில், எனக்கு பின்னே இருந்தவர் எல்லாம் முன்னே சென்றனர். சரி..பர்ஸில் தேடலாம் என்று தேடினால் அந்த பில் இருந்தது.. கடவுள் இன்னும் இருக்கார் என்று நான் தமிழில் முனகினேன்.

கடவுள் எப்பவுமே இருக்கார்.. நாம் தான் கண்டுகொள்வதில்லைனு ஒரு குரல் தமிழில்.. அதிர்ச்சியோடும் ஒரு கேள்விகுறியோடு திரும்பினால்.. தமிழ் ஜாடையில் ஒருவர், என்னை பார்த்து சிரித்தபடி.. எந்த ஊர் நீங்க என்று
கேட்டார்..நான் திண்டுக்கல் என்றேன்..ஆஹா நான் தேனிங்க என்றார்.. என்னமோ கடவுளையே நேராய் பார்த்த ஒரு சந்தோசம்..

சரி சரி..பேசிக்கிடே பில்லும் போடுங்க.. மறுபடியும் ஒரு புது குரல்..என்னடா என்றால் கடை ஊழியரும் தமிழன்.. எல்லோர் கூடவும்
சந்தோசமாய் பேசி விட்டு வீடு திரும்பினேன்..எங்கு போனாலும் பார்க்கின்ற நூறு பேரில் முப்பது பேர் இந்தியர்கள்..

அமெரிக்கா வரும் போது ஒரு சின்ன பயம் இருந்தது..அது இப்போது போயேவிட்டது.. இன்று பக்கத்தில் இருந்த ஒரு கோவிலுக்கு சென்றோம், விநாயகர் சதுர்த்திக்காக. என்ன கூட்டம்..

அட போங்க யாருங்க சொன்னது என் தேசம் விட்டு தூரத்தில் நான் இருகேன்னு..நான் இருக்கும் கொலம்பஸில் தமிழ் சங்கம் இருக்கிறது.. எல்லோரையும் சந்திக்க போகிறேன் சீக்கிரம்..

13 பின்னூட்டங்கள்:

Bharani said...

I had the same feeling today when i went to temple

ambi said...

//ஒரு அழுக்கேறிய அலுமினிய தட்டில் எங்கள் வீட்டு நாய் சோறு சாப்பிட்டது மங்கலாய் என் நினைவில்..//
super! kavithai maathiri ezhuthi irukka pa karthik. happy that U r fine. :)

Unknown said...

enjoy pannunga...police-kellam thoppai irukaadhu, adhayum sollidungo..moreover they wont accept bribe :)

Geetha Sambasivam said...

வாழ்த்துக்கள் கார்த்திக். அங்கே போய் எல்லாரையும் பழக்கப் படுத்திக் கொண்டு அந்தச் சூழ்நிலைக்கு உங்களை மாற்றிக் கொண்டு விட்டீர்கள். என் பதிவுக்கு வருவதைத் தான் மறந்து விட்டீர்கள். என்னுடைய பதிவை இப்போவெல்லாம் படிக்கிறது கூட இல்லையா? உங்கள் லிஸ்டில் காணோமே?

மு.கார்த்திகேயன் said...

summa sollakkoodathu Bharani..ethO chennai sowkarpettai vinayakar kovilla sami kumbitta maathiri irunthathu..avlo setji's irunthaanga

மு.கார்த்திகேயன் said...

ama ambi..enakku therinju enga oorla yaarum naaikku nalla thattula sappadu pottathillai.. kulippattiyathillai.. etho maththavanga puthusa vantha kuraikutha..ok..appadingira maathiri avaikalin vazhkai oduthu..

மு.கார்த்திகேயன் said...

Bala.. I didn't see any police still now.. Surprised one..

மு.கார்த்திகேயன் said...

ennathaan kaasu irunthalum, athai intha maathiri use panrathukku yaarukku manasu varum vethaa

மு.கார்த்திகேயன் said...

ayyO geetha madam.. inimel olunga varren..

Priya said...

Well said Karthik. ennathaan kaasu irunthalum, athai intha maathiri use panrathukku yaarukku manasu varum. This is mainly because we are sentimental..think of our generations and want to save for them. These people spend all the money they make.. and as their kids leave home at the age of 18, they see pets as their kids..

மு.கார்த்திகேயன் said...

super-a soneenga priya...

Anonymous said...

I think so too! But is it realy true.

Deekshanya said...

Columbus poi namma Madurai pugala parupunga KarthikSir!