Wednesday, August 30, 2006

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 6

ஜுனியர் விகடனுக்கு ஒரு கழுகு, வாரமலர் சினிமா பகுதிக்கு ஒரு கருப்பு பூனை இருப்பதை போல நமது சினி பகுதிக்கும் ஒரு செய்தி தொகுப்பாளர் இருந்தால் நல்லா இருக்கும் என்று, நேற்று ஒரு சிட்டுகுருவியைப் பிடித்தேன்.. சிட்டுகுருவி சின்ன இடங்களில் கூட நுழைய முடியும் என்பதால் அதையே ஏகமனதாக தேர்வு செய்தேன் (?) கொலம்பஸில் எங்கே சிட்டுக்குருவி என்று யாரும் பின்னூட்டம் இட வேன்டாம்..(குறிப்பா அம்பிக்கு) எப்படியோ கிடைத்தது.. நமக்கு தேவை ஒரு செய்தி தொகுப்பாளர்.. அவ்வளவு தான்.

பரட்டை என்கிற அழகு சுந்தரம்


இது எங்க ஊர்ல,பீடி குடிச்சுகிட்டு, யார் என்ன வேலை சொன்னாலும் செஞ்சுகிட்டு, கிடைக்கிற இடத்துல சாப்பிட்டுகிட்டு, ஊர் கோவிலுல தூங்கி பொழுதை கழிக்கிற ஆள் இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது மருமகன் தனுஷுக்காக, தமிழாக்கம் செய்யச் சொல்லி பரிந்துரை செய்த ஒரு கன்னட மொழி படத்தின் தமிழ் தலைப்பு. இதை நடன இயக்குநர் ராஜு சுந்தரம் இயக்குகிறார்.
சென்னைக்கு வேலை தேடி, கிராமத்தில் இருந்து வரும் தனுஷ் ஒரு தாதா ஆகிறார். அதற்கு, பிறகு அவரை தேடி அவர் அம்மா வருகிறார். அன்பான தாயுக்கும், மகனுக்கும் இடையில் நடக்கும் ஒரு பாச போராட்டமே இந்தக் கதை. தனுஷின் அம்மாவாக அர்ச்சனா நடிக்கிறார்

சிட்டுகுருவி - பரட்டை, எப்போ தாத்தா ஆகப்போறீங்க..

சபரி

புரட்சிகலைஞர் விஜயகாந்தின் அடுத்த படம், கம்பீரம், அரசு படங்களை இயக்கிய சுரேஷின், சபரி. இதில் விஜயகாந்த் ஒரு மருத்துவராக நடிக்கிறார். அவருக்கு இணையாக ஜோதிர்மயி மற்றும் மாளவிகா நடிகிறார்கள். தமிழ்நாட்டில் எத்தனை மருத்துவமனைகள், அதில் எத்தனை மருத்துவர்கள் என்னும் புள்ளி விவரங்களை நீங்கள் இந்த படம் பார்க்கும்போது தெரிந்துகொள்ளலாம். ஆனால் விஜயகாந்தின் பிரதான வசன எழுத்தாளர் லியாகத் அலிகான், கேட்ட பதவி தேமுதிகவில் கிடைக்கவில்லை என்பதால், அதிமுகவில் சேர்ந்த பிறகு, இவருக்கு மறுபடியும் எழுதுவாரா என்பது சந்தேகமே..

சிட்டுக்குருவி - கேப்டன், தமிழ்ல என்ன வேணும்னாலும், பேசுங்க.. இங்கிலீஷ்ல மட்டும் வேண்டாம்..

சூர்யா - ஜோ திருமண வரவேற்பு

சூர்யா - ஜோ திருமண வரவேற்பு, பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டுவிட்டது. வரவேற்பு, செப்-11 ஆம் தேதி கல்யாணதிற்கு பிறகு, பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெறும்.

சிட்டுகுருவி - நமக்கு பிரச்சினை இல்ல.. பறந்து உள்ள போயிடலாம்

பெரியார்

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுவதும், அதற்கு தமிழக அரசு 95 லட்ச ரூபாய் நிதியுதவி செய்ததும், உங்களுக்கெல்லாம் பழைய செய்தி தான். ஆனால் இப்போது பெரியாரின் மனைவியாக நடிக்க நடிகை குஷ்பு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை எதிர்த்து பாமக கட்சி எம் எல் ஏக்கள் காரசாரமாக வாக்குவாதம் செய்து எதிர்த்தனர். இருந்தாலும், குஷ்பு தான் நடிப்பார் என்று நமது சிட்டுகுருவி சத்தியம் செய்கிறது.

சிட்டுக்குருவி உங்களுக்காக கடைசியா ஏதோ சொல்லுது.. "இந்த முறை மட்டும் அல்ல, எப்போதுமே, செய்திகள் எல்லாம் போன்ற தளங்களிலிருந்தும், மற்ற வழியாகவும் தான் கிடைக்கிறது.. ஏன்னா எப்போ எதை எதையோ காப்பி அடிக்கிறாங்கோ.. அதனால உண்மையை உலகத்திற்கு முதல்ல சொல்லனும்ல..அது தான்"

அய்யோ..பயங்கரமா பசிக்கிது.. குளத்துமேட்டு கருவாயன் தோட்டத்துல திராட்சை இருக்கு.. சாப்பிட்டு வர்றேன்..

16 பின்னூட்டங்கள்:

said...

he hee, vazhakkam pola kalakkals. welcome to chittukuruvi. nagai siva kitta sollu photo pudichu poduvaar. :)

said...

கீதாவுக்கு ஒரு வேதாளம் போல உங்களுக்கு சிட்டுக் குருவியா?:)

ஆனாலும் இந்த குஷ்பு விஷயத்தை ரொம்ப அரசியல் பண்றாங்க:(

said...

nalla padhivu ..

said...

Super concept karthik...aana gaptain-oda engleess-la speak panna vendam solratha vanmaya kandikaren...avar engleess pesalama padathula comedy yar panrathu :)

said...

அம்பி, நாகை சிவா கிட்ட சொல்லி, ஒரு சிட்டுக்குருவிய போட்டோ எடுத்து போட்டுடுவோம்..

said...

ஆமா வேதா.. சிட்டுக்குருவியோட அழகே அழகு தான்...

said...

Double thanks Prabhu, for dropping here, first time

said...

Thanks Bharani..and we can't forget captain's english speech esp in Narasimma.. Action Driple starnu avar solrathE oru thani comedy thaan

said...

Chittukuruvi - Super trademark name, Karthik. Good to see Captain still signing new films but what I dont get is why the heck is he having 2 heroines in a movie which is obviously going to serve as his political propoganda vehicle. BTW, welcome to the US. UngalOda ellaa US posts-um romba super-aa irukku. Keep them coming...

said...

Nice concept. Looking forward to more and more hot cine news.

said...

Thanks Filbert. I am seeing you after a long time. After your brother you are off of the bolgsphere, it seems.. Hope you have enjoyed the time with bro.

said...

I am sure, chittukuruvi will give you more things, Priya

said...

kashtam! Rajini ippadilam senjudhan dhanush-ku chance vanganum pola

said...

verenna seirathu usha.. marumakan ayaatchchE..

said...

சிட்டுக்குருவி சூப்பர் அப்படியே கண்டினியூ பன்னுங்க நீங்க அமெரிக்கா வந்தா இந்த நியூஸ் எல்லாம் கிடைக்குமானு சந்தேகமா இருந்தது...இப்போ ஊர்ல இருந்தத விட சூப்பர் :-)

said...

Thanks Shyam.. chittukuruvi ineme super news kodukkumnu naanum namburen :-))