Monday, August 28, 2006

சென்னையில் ஒரு மழைக்காலம்

இன்று காலை கொலம்பஸில் எழுந்ததிலிருந்து ஒரே மழை.. இப்படியொரு மழை சென்னையில் பெய்தால் எப்படி இருக்கும்.

ரோடுகள் எல்லாம் சரிசமமாக இருக்கும். எல்லா பள்ளங்களிலும் நீர் நிரம்பி தரை ஒரே மாதிரி இருக்கும். இந்த சமயத்தில் நடந்து செல்வதும் சரி, வாகனத்தில் செல்வதும் சரி, ஒரு தில்லான விசயம்.. இப்படித்தான் இந்த ஆகஸ்டு மாதம் தொடங்கிய சமயத்தில், ஒரு மழைகால முன்னிரவில், டைடல் பார்க் விட்டு நான் என்னுடைய வாகனத்தில் வந்து கொன்டிருந்தேன். போக முடியாத அளவு மழை பெய்து கொண்டு இருந்ததால், ஓரமாய் ஒரு நிழற்குடையின் கீழ் ஒதுங்கினேன். மழை விட்ட பிறகு, வண்டியை துடைத்து விட்டு கிளம்பினேன். அந்த ரோட்டில், வேகமாய் வந்த ஒருவன் என் மேல், ரோட்டில் கிடந்த மழை நீரை வாரி இறைத்து விட்டு சென்றான்.உனக்கு இது தேவையா என்று வடிவேல் மாதிரி சொல்லிகொண்டாலும், அவன் மேல், பயங்கர கோபம். நானும் வண்டியை வேகப்படுத்தி அதே போல் அவன் மேல் தண்ணீர் அடிக்க முயற்சித்தேன். ஆனால் அந்த படவா ராஸ்கோல் மறுபடியும் என் மேல் தண்ணீரை வாரி அடித்தான்.. இப்போது சுர்ரென்று கோபம் ஏறியது. இன்னும் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினேன். ஆனாலும் உள்ளூர ஒரு பயம்..எங்கே தார் சாலையில் வழுக்கி விழுந்திடுவேனோ என்று..இருந்தாலும் அவன் பக்கத்தில் சென்ற போது....சொய்ங்ங்ங்ங்.. மறுபடியும் தண்ணீரபிஷேகம்.. ஆஹா இப்படியே போனால் வீட்டிற்கு போறதுக்கு முன்னாடி குளித்து விடுவேன் போல என்று அவனை விட்டு விட்டேன்..வேறென்ன செய்ய... அவன் என்மீது தண்ணீர் அடிச்சது பத்தாதுன்னு அடுத்த ஆளை பிடிக்க வேகமா போயிகிட்டு இருந்தான். ஆனா இப்படி ஒருத்தன் நடு ரோட்டில் குளிச்சது என்னை குளிப்பாட்டிய அவனுக்கு தெரியவே தெரியாது.

அதே மழை இங்கேயும் பெய்தது. ஆனால் ரோட்டில் தண்ணீர் நிற்கவில்லை. அலுவலகம் செல்லும் போது, எங்கேயும் இந்த மழையினால் வாகன நெரிசல் ஏற்பட்டதில்லை. எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்கிறார்கள்.

இதை எல்லாம் பார்த்து ஏங்கினாலும், நம்மூரை நினைத்து ஏங்காத நாளில்லை, ஒரு கணவனின் வியர்வையின் வாசம் ஒரு மனைவிக்கு என்றும் பிடிப்பதை போல..

22 பின்னூட்டங்கள்:

Anonymous said...

// ஒரு கணவனின் வியர்வையின் வாசம் ஒரு மனைவிக்கு என்றும் பிடிப்பதை போல..//

it doesnt happen the other way around???

just a doubt buddy.

said...

he hee, "Athiram arivukku sathru!"
avan thaan apdi panninaan endraal if we also started doing the same, then wat's the diff between him and us? no offense. urimaiyaa oru annan maathiri ketten, avloo thaan! kochukaatha pa!

enna kadisila kavithuvamaa mudichu irukka? ippa ellam rexona deo vaangi kuduthruvaanga karthi! :)

said...

Right Karthik...Whatever be the difficulties, US cant even come nearer to chennai...There is a blank empty expressions on the face of ppl here...namma oorla road-la pona ovovruthauku ovovru expressions..santhosam, kavalai, bayam....kasu thavira veredhuvum illa US-la

said...

மேடு பள்ளம் உள்ள ரோட்டில் நடந்து போனாலும் சென்னையில் நம் வீட்டுக்கு போகிறோம் என்ற சந்தோஷம் மனதில் இருக்குமே.அது இருக்குமா அந்த அழகான ரோட்டில் நடக்கும்போது.

said...

Anon, :-))

said...

Ambi, enna thaan rexona deo nalum oru thani manam irukkum..

urimaiyaa solratha kettukuven, Ambi.. ana, nee en annan mattum illia..

eppa..enna villaththanam..eppadiyavathu annan aki, asinai sakothari aakka pakkuriyeppa..

karthi, ushaaru

said...

well said bharani..

said...

TRC sir, anubavasthar sonna kettukka vendiyathu thaan

said...

அண்ணே கொலம்பஸ்ல இருந்துகிட்டு அமெரிக்காவ புகழ்ந்து தள்ளீட்டு இருக்கீக...இங்க DC பக்கம் வந்து பாருங்க...மழை பேஞ்சா கிட்ட தட்ட சென்னை மாதிரியே தான் இருக்கும்... :-)

said...

//ஆஹா இப்படியே போனால் வீட்டிற்கு போறதுக்கு முன்னாடி குளித்து விடுவேன் போல என்று அவனை விட்டு விட்டேன்//

இது வீரனுக்கு அழகு :-)

said...

மாசத்துக்கு ஒரு போட்டா டிசீன் டிசீனா போட்டு கலக்குறீங்க :-)

said...

ஏதோ இருக்கிற இடத்துல நடக்குறதை தானே ஷ்யாம் எழுத முடியும்.. ஓ..DC நம்ம சென்னை மாதிரி தானா..

said...

ஷ்யாம், இப்படி அசிங்கபடுத்துறதுக்கு அவனே பரவாயில்ல..

said...

அப்பாடா.. போட்டோ மாத்தினதுக்கு யாருமே ஒண்ணும் சொல்லலியேன்னு பாத்தேன்.. நன்றி ஷ்யாம்

said...

Exactly what I think when it rains here. Namma buthi eppavum namma oorai dhan ninaikkum. Chennai la mazhai vandha, office kku late a pogalam, pogama irukkalam. We don't have that facility here. Naan US vandha pudhusula, there was a Tornodo warning while at work and I asked everyone whether we could go home :) I was disappointed when they said that we could only go to the shelter (under the stairs) in the office. Life is full of spice only in india. Here its blunt, just like their food..

said...

Ama priya, enna aanalum azhukku padincha namma oor thaan nammakku sorkapuri..

sorkamE enRalum athu nammoorai pola varuma...

said...

//eppa..enna villaththanam..eppadiyavathu annan aki, asinai sakothari aakka pakkuriyeppa..//

cha! nallathuke kaalam illa, naan evloo anbaa unnai thambi!nu koopdaren. :)
(he hee, villathanatha kandupichitiyaa?)

said...

nice way to end a blog,poetic!!

said...

ambi, nammakitta unga pappu vEkaathu..hehe

said...

Thanks Sis

Anonymous said...

I remember a rainy day in chennai, 7 years back, in Triplicane ,too much rain, blocked drainage , I was walking in the street just to see a corporation labor appeared out of the manhole..shocking....
couple of days later I was going travelling in pallavan to Parrys ,i see 4 guys carrying a "Paadai" with some dead body with a young guy with sangu walking in the front.. around 10 guys altogether..
man.... I w

Anonymous said...

I wept.. even now.. when i think of it..