Tuesday, August 29, 2006

அமெரிக்க அனுபவம் 2

இந்த அமெரிக்க ஆளுங்க இருக்காங்களே, அவங்களுக்கு குடும்ப பாசம், மனைவி, பிள்ளை பாசம் எதுவுமே இருக்காது.. பத்து பன்னிரென்டு வயசு ஆனா பிள்ளைகள் தனியா போயிடுவாங்க.. இப்படி நான் இங்கே வருவதற்கு முன்னே பல கதைகள் கேட்டதுண்டு.. ஆனால் இதுவரை அது போல யாரையும் பார்த்ததில்லை.. என் கூட வேலை செய்றவங்க எல்லோரும் அவங்க குடும்ப புகைப்படம், அதாவது அவங்க அப்பா அம்மாவோட இருந்தது, பிள்ளைகளோடது, மனைவியோடது ன்னு அவங்க உட்காருர இடமெல்லாம் வச்சு இருக்காங்க. நான் பாரிஸ் வழியா அமெரிக்கா வர்றபோ, பாரிஸ் விமான நிலையத்துல, ஒரு சின்ன பொண்ணிற்கும் அவளோட அப்பாவிற்கும் இருக்கிற அன்னியோனத்தையும் பாசத்தையும் பார்த்து கலங்கினேன்.. அதிசயப்பட்டேன்.. சந்தோசப்பட்டேன்.. அந்த பொண்ணோட அப்பா, அழகா அவளோட செந்நிற தலை முடி கோதி, வாயில் வைத்து பெரிய அளவு ரப்பர் பேண்டை இழுத்து, சடை பின்னிகொன்டிருந்தார்.. என்னே ஒரு காட்சி அது...

அதுவும் இல்லாம வளர்ப்பு பிராணிகளிடம் பாசம் காட்டுரவங்களுக்கு எப்படி பிள்ளை, குடும்ப பாசம் இல்லாம போகும். எப்படி சினிமாவுல, உலக பொது உணர்வுன்னு காதலை சொல்றாங்களோ, அதைவிட பொதுவானது, காதலுக்கும் அடிப்படையானது பாசம்.

ஆனா ஒண்ணு மட்டும் புரியல.. இவங்களோட ஆடைகள். நம்ம நாட்டுல அவ்ளோ வெப்பம் மிகுந்த பூமிலயே நாம உடம்பு முழுக்க சுத்திகிட்டு இருக்கோம்.. ஆனா இங்கே இவ்ளோ குளிர்ச்சியா இருகிறப்போ ஏன் இப்படி குறைந்த ஆடைகள்.. மற்றபடி கடைகளுக்கு போனால், அவங்க உபசரிப்பு பக்காவா இருக்கும்.. முதல் வார்த்தை அவங்க பேசுரதே, எப்படி இருக்கீங்கனு ஒரு கேள்வியோட தான்.. எப்பவுமே அவங்க உதட்டுல, லிப்ஸ்டிக்கோட சிரிப்பு இருக்கும்.. நம்மகிட்ட பேசுரப்போ, முகம் சுழிக்காம, எரிஞ்சு விழாம, அக்கறையா, அனுசரனையா அவங்க நடந்துகிறது நல்லா இருக்கும். இந்தியர்களான நாம நிச்சயமா இந்த அணுகுமுறையை கத்துக்கணும். இதை நான் ஒப்பிட்டு பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது. ஏன்னா, ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு இதுல.. நம்ம நாட்டு மக்கள் தொகை.. சின்ன வயசுல இருந்து நாம உருவான விதம் அப்படின்னு.. அவ்வளவு சின்ன கடைல,சரவணா ஸ்டோர்ஸ்ல, எத்தனை பேருக்குத்தான் அவங்க பணியாற்ற முடியும் சிரிச்சுகிட்டே.. இருந்தாலும், அந்த கூட்டதுல நீந்தி போய், திருப்தி ஆகாம, திரும்பி வந்ததும் உண்டு. எடுத்து வந்த துண்டு கைக்குட்டை ஆன கதையும் உண்டு.

24 பின்னூட்டங்கள்:

said...

hi karthiksir,
cool experiences in the US :-) How are you.. Do drop by my blod some time..Take care of your health and eat well and sleep well.
love
sis

said...

very good observation or nalla site adichu irukka!nu thamizhla sollalaam. :)

anga ellam customer is the king! pa. ingaum konja konjamaa appadi aagitu varuthu! paarkalaam.

said...

I am feeling like that I am in US when I read your experience.
A good experiences to share.

said...

oh Thanks Sister. I will reach you @ your blog

said...

ama ambi naanum sila kadaila chennaiyil parththen.. parpOm..

said...

Thanks Bala.. epdi irukeenga..life epdi irukku anga.. Chennaiyil mazhai ellam ulunga peyyuthaa

said...

correct karthik...i have als noticed the same...but i happen to see parents who are staying alone and deserted by the children.:(

said...

Hope I have to look further to see such parents without their children.. But that may be similar to our Thanikudiththanam also.. rite?

said...

கார்திகேயன்,

உங்களுடைய அமெரிக்க வாசம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

அமெரிக்கர்களுடன் பழகப்பழக பல நுட்பமான விடயங்களைத் தெரிந்து கொள்வீர்கள் :))

பெத்தராயுடு.

said...

கார்த்திகேயன்,

மனுஷங்க எல்லாரும் அடிப்படையிலே ஒண்ணுதான். நம்மூர்லே இருக்கற கூட்டத்துலேதான் கொஞ்சம்
கடைக்காரங்களுக்கு அலுத்துப்போகுது போல. ஆனாலும் சரவணா ஸ்டோர்ஸ், ஆரெம்கேவி இங்கெல்லாம்
முதலாளிங்ககிட்டே பேசிப்பாருங்க. நல்லா அன்பா இதமாப் பேசுவாங்க. நாமெல்லாம் கஸ்(ஷ்)டமர் இல்லையா?

நல்லா எழுதறீங்க. படிக்க சுகமா இருக்கு. வாழ்த்து(க்)கள்.

Anonymous said...

very true...this is exactly what i felt when i came to US.Americans are so welcoming...

Anonymous said...

கூடிய சீக்கிரம் "தேசி" யாக வாழ்த்துக்கள். தமிழ் பதிவுல ஆங்கிலத்துல எழுதும் போதே தெரியுதே.

said...

அமெரிக்க அனுபவங்கள் என்று ஒரு புத்தகம் போட்டு விடலாம் நீங்க எழுதறத வச்சு:)

நம்ம நாட்டு மக்களுக்கும் பாசம், நேசம் எல்லாம் உண்டு என்ன எல்லாத்தையும் வெளிப்படையாக காமிக்க மாட்டாங்க, ஆனா அமெரிக்கர்கள் ஒன்று ஓவர் வெளிப்படையா இருப்பாங்க (பாசத்திலேயும் சரி, நீங்க சொன்ன ட்ரெஸ் விஷயத்துலேயும் சரி, ஹிஹி)இல்லேன்னா தூக்கி போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க.
வாடிக்கையாளர் திருப்தி என்பது அமெரிக்காவில் மிக முக்கியம், ஏனென்றால் அங்கெல்லாம் முணுக்கென்றால் கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு போட்டுடுவாங்க

said...

US makkaloda kanivu, ubasarippu chance-e illa....in my office almost all the american's whether they knew me or not, they will say "i"...but namma Desi makkalla only very few will say "Hi"...

said...

நன்றி பெத்தராயுடு, தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்..

said...

நன்றி துளசி, வாழ்த்துகளுக்கு.. உண்மை தான் முதலாளிகள் எப்போதுமே கனிவாய் தான் இருப்பார்கள்.. ஆனா அவங்க கனிவு தொழிலாளிகளிடம் மட்டும் இருக்காது..

said...

Thanks Kalpana, for you visit.. Yes, always their speech is somewhat polite and welcoming...

said...

Anon, thanks for dropping here..

"தேசி" அப்படின்னா என்னங்க...

said...

சரியாச் சொன்னீங்க வேதா.. நம்ம நாட்டுல இப்போதான் வாடிக்கையாளர் என்ன, அவங்க எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சு இருக்காங்க..

ஆமா, நான் எழுதுறதை புத்தகம போட்ட இந்த காலத்துல யார் வாங்கி படிக்க போறா, வேதா.. ஸ்பான்ஸ்சர் பன்ற எண்ணம் ஏதும் உண்டா..

said...

You are rite, Bala..

said...

avanga ellam try to be young and attractive all the time, unlike us who think once u r married and get a kid life mudinju pochu=ntu. Hence the dress n makeup

said...

usha, enna irunthalum konjamaavathu ok va iruntha paravaa illaila.. athukkunnu ippadiyaa.. namma oor kalyanamana ponnukale inga vantha avanga maathiri dress podurappO, avanga pottalum thappE illa

said...

Hey Karthi, nice to know that you are in US and doing a sidekick-research on the lifestyle of people in US. Congrats!!

said...

ama kamal, just trying to know liofesyle culture of US makkal fuuly..

romba naal kalichchu intha pakkam.. how are you. how is life kamal..