திண்டுக்கல் தியேட்டர்கள் - ஒரு பார்வை 2
முதல் பார்வை இங்கே
இப்போது டிவிக்களின் ராஜ்ஜியம் பட்டொளி வீசி பறக்கையில், தியேட்டர்கள் நவீன வசதிகள் கொண்டு எல்லாவித சௌகரியங்களை வைத்திருந்தாலும், லாபத்தில் தான் இருக்கிறதா என்பது கேள்விக்குறி தான். எத்தனையோ நகரங்களில் தியேட்டர்கள் திருமண மஹாலாவது நாம் அடிக்கடி கேள்விப்படுகின்ற விஷயம் தான். அதுவும், சமீபத்தில் மதுரை சிந்தாமணி தியேட்டருக்கும் அப்படியொரு நிலைமை வந்துவிட்டது.. மதுரையில் நான் கல்லூரி படிக்கும் போது இங்கே பார்த்த ஒரே படம், கௌதம் மேனன் இயக்கிய முதல் படம் மின்னலே. ஆனால், திண்டுக்கலில் எந்தவொரு தியேட்டரும் இப்படி ஒரு நிலைமையை சந்தித்ததில்லை. ஒரு வேளை என்ன தான் டிவி பார்த்தாலும் படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை போலும்..
சரி. இனி அடுத்த இரண்டு தியேட்டர்களை பற்றி பார்ப்போம்..
முதன் முதலில் திண்டுக்கல்லில் நவின கட்டிட, ஒலி மற்றும் ஒளி அமைப்புடன் கட்டப்பட்டது நாகா ஏசி மற்றும் லஷ்மி தியேட்டர் வளாகம் தான். இந்த தியேட்டர் வந்த புதிதில் இதில் படம் பார்ப்பதே மக்களுக்கு பெரிய விஷயமாக பட்டது.. கட்டணம் அல்ல.. சௌகரியம் தான்.. திண்டுக்கலில் சிறுவர்கள் விளையாடும் சிறு பூங்காவுடன் இருக்கும் தியேட்டர் இது தான். அந்த சுற்று வட்டாரதில் குடியிருப்பவர்கள் விடுமுறை நாட்களில் படத்திற்கு வரவில்லையென்றாலும் குழந்தைகளை கூட்டிக்கொண்டு இங்கு வருவது உண்டு.. நாகா ஏசி தியேட்டர் மிகவும் சிறியது.. ஐநூறுக்கும் குறைவான பார்வையாளர்களே உட்கார முடியும். லஷ்மி தியேட்டர் கிட்டதட்ட ஆயிரம் பேர் உட்காரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். லஷ்மி, திண்டுகல்லில் இருக்கும் ஒரே 70mm தியேட்டர். இப்போது ராஜேந்திரா, ஆர்த்தி தியேட்டர்களின் வரவினால் இந்த தியேட்டர் கொஞ்சம் ரசிகர்களின் கவனத்தை இழந்திருப்பது நிச்சயம். இதில்விவரம் தெரிய பார்த்தது ரஜினியின் சிவா.. கடைசியாக பார்த்தது புதுகோட்டையிலிருந்து சரவணன்.
திண்டுக்கல் பஸ் நிலையத்தை ஓட்டி, ஆர்த்தி தியேட்டரை விட அருகில் இருப்பது கணேஷ் தியேட்டர். ஆரம்பத்தில், இதற்கு முன் சொன்ன மூன்று தியேட்டர்கள் வருவதற்கு முன் இது தான் சிறந்த தியேட்டராக இருந்தது. இடையில் வசதிகள், தரங்கள் நிறைந்த தியேட்டர்கள் வந்த பின், இது மெல்ல மெல்ல தன் பெயரை இழந்துவிட்டது.. இப்போது இடையில், படங்களை திரையிடுவது நிறுத்தபட்டு, உள்ளே மாற்றங்கள் செய்யப்பட்டு, DTS ஒலி அமைக்கப்பட்டு மறுபடியும் இயங்க ஆரம்பித்துள்ளது. ஆனால், தனது பழைய பெயரை திரும்ப பெற்றதா என்பது கேள்விக்குறி தான். முதன் முதலில் பார்த்த படம் போக்கிரி ராஜா.. எனக்கு விவரம் தெரிய முதலில் பார்த்ததும் இது தான். பள்ளியில் இருந்து இங்கே எங்களையும் வாழவிடுங்கள் என்னும் குரங்குள் பற்றிய படத்திற்கு அழைத்து சென்றார்கள்.
அபிராமி, ஷான், NVGB, சென்ட்ரல், சோலைஹால் ஆகிய தியேட்டர்களை பற்றி அடுத்த பதிவில்
12 பின்னூட்டங்கள்:
தொடருங்கள் கார்த்தி , எங்கள் நினைவுகளையும் கலந்து எழுதியது போலுள்ளது.
பை தி வே , அய்யா இன்னைக்கு மாலை திண்டுக்கல்லுக்கு போகிறேன்.
Back to India? sollavee illai?
enna aachu ennoda comment? ninga than varathillaina ennoda commentsum publish pannak kudatha?
virumbi padippavai listle irunthu ennooda perai eduththu masa kanakka akuthu, mmmmm enna aachu? :(
Part 1-m paarthen..
unga memory power super :)
vera ennatha solla..
adra adra! innum thindukallula thiruttu CD paravalaya! good! for the cine field!
//பள்ளியில் இருந்து இங்கே எங்களையும் வாழவிடுங்கள் என்னும் குரங்குள் பற்றிய படத்திற்கு அழைத்து சென்றார்கள்.
//
naan kelvi pattathe illa!
சுதந்திர தின வாழ்த்துக்கள்!
சக்தி தியேட்டர் பற்றி சொல்ல மாட்டீர்களா? இல்லை இப்பொழுது அந்த தியேட்டர் இல்லையா?
Wow, Superb article !!
I would like to recollect the moments i spent at Naga theatre, They maintaint full aircondition from the beginning of the movie to till the end.
Also, very cleanly environment to be appreciated here.
Good one, Can't you write about the theatres in Madurai :-)
கார்த்தி..
நாகா தியேட்டர் துவங்கப்பட்டபோது வந்த கூட்டத்திற்கு முக்கியக் காரணம் ஏஸியும், உள்ளே நுழைந்தவுடன் முகத்தில் அடிப்பதைப் போல் வரும் நறுமணம்.. மிக அழகான வடிவமைப்புடன் செய்திருந்தார்கள். நான் 1 ரூபாய் டிக்கெட்டில் God Must be Crazy-யை முதல் படமாகப் பார்த்தேன்.. பின்பு கோவைத்தம்பியின் படங்கள், நாயகன், புதுமைப்பெண், அமிதாப்பின் மர்த் என்று நினைவுக்கு வருகிறது..
லஷ்மியில் படிக்காதவன், சிவா, மிஸ்டர் பாரத் என்று சில படங்கள் நினைவில் வந்தாலும் சிறப்பு பார்வையாக ஒரு நாள் அன்பே வா படத்தையும்(சில வருடங்கள் கழித்து) பார்த்தேன்.
நுழைவுக் கட்டணங்கள் குறைவு என்பதோடு தியேட்டரின் வசதிகளும் நிறைவாக இருந்ததால் அன்றைக்கெல்லாம் எந்தப் படம் போட்டாலும் கூட்டம் வரும்.. மோகன்லாலின் சித்ரம் 50 நாட்கள் ஓடியதே.. நினைவிருக்கிறதா..?
தொடருங்கள்.. இங்கே உள்ள மண்ணின் மைந்தர்களான நாங்கள் எழுதியிருக்க வேண்டியது.. நீங்கள் முந்திக் கொண்டீர்கள். வாழ்த்துக்கள்..
Thanks Karthi,
Ennudaya Dindigul nyabagangal ungalaal meendum puthuyir petrana.
Dindigul ai vittu vanthu almost 15 varudangal ahivittathu. Rajendra theater naan iruntha pothu illamal irunthathu. Naga Laxmi theaterhal ennudya vazhkaiyil marakka mudiyatha anubavangalil mukkiya pangu kondavai... MSP schoolil irnthu compound eri kuthithu odi padam paartha naatkal marakka mudiyathavai.
Thank you
Gopi
Post a Comment