Monday, August 06, 2007

எல்லாம் சோம்பேறித் தனம்

காலைல கண்ணை முழிச்சாலே மடிக்கணினில ஒரு ஆங்கில படத்துல தான் முழிக்கிறது இப்போ எல்லாம். இங்க வந்த புதுசுல மாசத்துக்கு ஒரு படம்னு இருந்தது.. இடைல அது கூட இல்லாம இருந்தது.. இப்போ நாளைக்கு ஒண்ணு.. வரிசையா இந்தூரு நூலகத்துல முன்பதிவு செய்து எல்லாத்தையும் வாங்கி வச்சு வரிசை கட்டி படம் பாக்குறது. இது இல்லாம சின்சினாட்டிக்கு அருண் கூட போனப்ப அருண் நெட்ஃப்லிக்ஸ் பத்தி சொன்னவுடனே அதுலையும் சேர்ந்து தமிழ், ஆங்கிலம்னு விட்ட தொட்ட படத்தை எல்லாம் பார்க்க ஆரம்பிச்சாசு.. நான் பாத்த படத்தை லிஸ்ட் கொடுத்தாலே வாரம் ஒரு பதிவு போட்ட மாதிரி ஆகிடும் போல அத்தனை படம்.. ஏற்கனவே பார்த்த படம்னாலும் மறுபடியும் பார்க்க ஆரம்பிச்சாசு..

இதோ கடந்த வாரம் பார்த்த படத்தோட பட்டியல்
(அடைப்புகுறிக்குள்ள நம்மளோட ரேட்டிங்)

தியேட்டரில் பார்த்தது

டிஸ்டர்பியா (7/10)
ஃபென்டாஸ்டிக் ஃபோர் (5.5/10)
ஷ்ரெக் மூன்று (7.2/10)
டிரான்ஃபார்மர் (6.8/10)
ஹாரி பார்ட்டர் (6.5/10)

டிவிடியில் பார்த்தது

மிஷன் இம்பாஸிபிள் 1
லார்ட் ஆப் தி ரிங்ஸ் - முதல் பாகம்
ஆலீஸ் இன் தி வொன்டர்வேர்ல்ட்
சிக்கன் லிட்டில்
போன் பூத்
கார்ஸ்

இது இல்லாம பிரண்ட்ஸ் நாடகத்தோட ஒன்பதாம் பாக டிவிடியில் சில எபிசோடுகள்.. இப்படி பொழப்பு போகுது நமக்கு.. நண்பர்கள் காறித் துப்பாத கதை தான். என்னடா நொய் நொய்னு முதல்ல எல்லாம் போன் பண்ணுவ.. இப்போ பண்றதில்லியேன்னு.. ஏற்கனவே சொன்னது மாதிரி, நாம மதுரையில இளநிலை படிச்சுகிட்டு இருந்தப்போ கிட்டதட்ட மாசத்துக்கு முப்பது படம் தியேட்டர்லயே பார்த்ததுண்டு.. இப்போ டிவிடியில் பார்த்ததை எல்லாம் சேர்த்தா அந்த நம்பரை தாண்டிடுவேன் போல..

நம்ம நண்பர் மணி தனது திருமணத்திற்காக இந்தியா கிளம்பிட்டார்.. அவரை பிரிய மனசில்லாம அருண் எழுதுன பாட்டை படிச்சா, எனக்கும் அழுவாச்சி அழுவாச்சியா வருது.. அருண், பட்டையை கிளப்பிட்டேல.. மணி, வாழ்துக்கள் பா

போன தடவை பில்டப் கொடுத்து அப்படி எழுதப்போறேன் இப்படி எழுதப்போறேன்னு பதிவு போட்ட பிறகு ஒண்ணும் எழுத முடியல.. இந்த தடவை நோ பில்டப்..பார்ப்போம் எழுத முடியுதான்னு.. இப்போதைக்கு இந்த பதிவு மூலமா உங்க எல்லோருக்கும் ஒரு வணக்கம் போட்டுக்குறேன் மக்களே.

9 பின்னூட்டங்கள்:

said...

//எனக்கும் அழுவாச்சி அழுவாச்சியா வருது.. //
வருத்தப்படாதீர்கள், இறைருளால் விரைவில் உங்கள் இலைக்கும் பாயசம் பரிமாறப்படும்.
:-)

said...

உங்க வணக்கத்துக்கு ஒரு எதிர் வணக்கம் போட்டுக்கறேன் அண்ணாச்சி!! :-)

said...

எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் எங்கே நான் கல்யாணத்துக்கு வந்துடுவேனோன்னு பயந்து இல்லை, ஓடறாங்க? நீங்களுமாஆஆஆஆஆஆ? என்னோட ஆதர்சத் தொண்டர், முதல் தொண்டர், எனக்காகத் தோரணம் எல்லாம் கட்டி வரவேற்புக் கொடுத்த முதல் ஆள், நீங்களாவது சொல்லிக்காமல் கல்யாணம் செய்துக்காதீங்க! :P

said...

////இதோ கடந்த வாரம் பார்த்த படத்தோட பட்டியல்இதோ கடந்த வாரம் பார்த்த படத்தோட பட்டியல்////kandippa kodikku potti thaan!

said...

//போன தடவை பில்டப் கொடுத்து அப்படி எழுதப்போறேன் இப்படி எழுதப்போறேன்னு பதிவு போட்ட பிறகு ஒண்ணும் எழுத முடியல.. இந்த தடவை நோ பில்டப்..பார்ப்போம் எழுத முடியுதான்னு..//
no probs! we waitees!

said...

aththanai padam paarkkureengga.. aana post ezhutha neram illainnu solreenggale thalai.. :-(

said...

தலைவரே நானும் ஒரு வணக்கம் போட்டுக்கறேன் இனிமேலாவது ஒழுங்கா பதிவு எழுதுவீங்கன்னு ஒரு நம்பிக்கையுடன் :)

said...

Adada.. kodikku pottiya neengalum lista poda aarambichiteengala :))

said...

//
எனக்கும் அழுவாச்சி அழுவாச்சியா வருது
//
ada
idhukkellama aluvaanga..
"set aayirchu"nu rendu vaarthe sollunga.. ungalukkum oru paata poturren :P