Tuesday, August 07, 2007

நான் கடவுளுக்காக நிஜமாவே பிச்சை எடுத்த நடிகை

நான் கடவுள் படத்துல நடிக்கிற நடிகை, படத்துல பிச்சைக்காரியா நடிக்கனும்ங்கிறதுக்காக அந்த பொண்ணை பிச்சைக்காரி மாதிரி வேசம் போட்டு பெரியகுளம் தெருவுல ஒரு நாள் முழுக்க அலையவிட்டாராம் டைரக்டர் பாலா.. அந்த பொண்ணும் ஒரு நாள் முழுக்க பிச்சைக்காரி மாதிரி சுத்தி வந்ததாம்.. இப்படி சுத்தி வந்ததுல அந்த நடிகையை யாருக்குமே அடையாளம் தெரியலையாம்.. அந்த நடிகை வேற யாருமில்லை.. தூத்துக்குடி படத்துல கருவாப்பையான்னு பாடி ஆடிய நடிகை கார்த்திகா தான்.. சும்மா பார்த்தலே அந்த நடிகையை யாருக்கும் அடையாளம் தெரியாது.. டைரக்டர் பாலா அவர்களே, இதென்ன கொடுமை? பிதாமகன்ல விக்ரம் கழுத்தை கடிப்பார்ல, அதுக்கு எப்படி டிரெய்னிங் கொடுத்தீங்க பாலா.. என்னமோ போங்க.. ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.. (இப்படி பிச்சை எடுத்ததுல வசூலான தொகை 47.50)

6 பின்னூட்டங்கள்:

மாசிலா said...

கலி முத்திப் போச்சப்பா. வேறொன்னுமில்லை. பாவம் சினிமாக்காரர்கள்.

CVR said...

என்னக்கொடுமை சார் இது!!!! :-P

Dreamzz said...

oru nalaiku 47.50 na, oru maasathukku 25(weekends vittutu)*47.50 = 1187.50 ...

hehe chumma oru calculation.

கோபிநாத் said...

படம் வந்த பிறகு தயாரிப்பளார் பிச்சை எடுக்கமால் இருந்தால் சரிதான் ;-))

மாசிலா said...

கோபிநாத் : //படம் வந்த பிறகு தயாரிப்பளார் பிச்சை எடுக்கமால் இருந்தால் சரிதான் ;-))//

அருமை கோபிநாத். சரியா சொன்னீங்க.
;-D

Subramanian said...

அடடே!நம்ப வெள்ளோட்டுக்காரரா!நல்லா இருக்கீகளா தம்பி!ஒங்க பதிவுகளெல்லாம் இன்னிக்கித்தான் கொஞ்சம் படிச்சு முடிச்சேன்.புல்லரிச்சிருச்சி.யம்மாடியோவ்!யம்ம்புட்டு நல்லா எளுதியிருக்கீக!சீக்கிரமே பூராதையும் படிச்சு முடிச்சுட்றேன்.வெள்ளோட்டுக் குசும்பு வெளிநாட்டுக்குப் போயுங் கொறையல்லே.அப்பிடித்தான் இருக்கோணும்.நல்லா இருங்க தம்பி.